கோவையில் நில விற்பனை மோசடியில் ஈடுபட்ட கேரளா தம்பதிகள் உட்பட குடும்ப நண்பர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் துறைக்கு நீதிமன்றம் உத்திரவு.
கேரளா மாநிலம் ஒத்தப்பாலம் பகுயியை சேர்ந்த ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான கோவை பீளமேடு டைடல் பார்க் அருகில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார். இதை அறிந்த பீளமேடு பகுதியை சேர்ந்த தேவராஜன் சேகர் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நிலத்தை வாங்குவதாக ஒப்புக்கொண்டு சுமார் 2 கோடியே 83 இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். ஆனால் ஒப்பந்தபடி நிலத்தை பத்திரபதிவு செய்யாமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், வங்கியில் கடன் உள்ளதால் பத்திரத்தை மீட்டு பின்னர் கிரையம் செய்வதாக ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.இதனால் சந்தேகம் அடைந்த தேவராஜன் சேகர், நிலம் குறித்து விசாரித்ததில் 11 ஆண்டுகளுக்கு முன்பே 25 செண்ட் இடத்தை ராதாகிருஷ்ணன் விற்பனை செய்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் நிலம் வேண்டாம் குடுத்த பணத்தை திருப்பி கேட்ட நிலையில் அதுவும் தராமல் இழுத்தடித்ததாக தெரிகிறது. மேலும் தற்பொழுது நிலத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதால் வேறொருவருக்கு விற்பனை செய்து 6.50 கோடி கூஉதலாக தருவதாக ஒப்பந்தம் போட்டுள்ளனர். ஆனால் ராதாகிருஷ்ணன் 54 கோடிக்கு நிலத்தை விற்பனை செய்தும், ஒப்பந்தப்படி தேவராஜன் சேகருக்கு பணத்தை கொடுக்காமல் அலைகழித்ததாக தெரிகிறது. அதை தொடர்ந்து தேவராஜன் சேகர் கோவை மாநகர காவல் நிலையத்தில் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி கீதா மேனன், மகள் ரஜிதாமேனன், மற்றும் குடும்ப நண்பர் அஸ்ரப் ஆகியோர் மீது புகாரளித்துள்ளனர். புகாரின்மீது காவல்துறையின் நடவடிக்கை எடுக்காததால், தேவராஜன் சேகர் நீதி மன்றத்தை நாடியுள்ளார். நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி கீதா மேனன், மகள் ரஜிதாமேனன், மற்றும் குடும்ப நண்பர் அஸ்ரப் ஆகியோர் நில விற்பனை மோசடியில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள்மீது மூன்று நாட்களில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 12-2-26 என்று கோவை மாநகர காவல்துறைக்கு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை காவல்துறை வழக்கு பதிவு செய்யாமல் காலம்தாழ்த்தி மோசடி கும்பல்களுக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

0 கருத்துகள்: