சாலை மறியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாலை மறியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 ஜூலை, 2026

டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்... ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யக் கோரி கோவையில் DYFI, SFI போராட்டம் : ஜல்லிக்கட்டு பாணி போராட்டம் வெடிக்கும் என எச்சரித்த மாணவர்கள் - தூக்கிச் சென்று கைது செய்த போலீஸ்!!!

டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்... ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யக் கோரி கோவையில் DYFI, SFI போராட்டம் : ஜல்லிக்கட்டு பாணி போராட்டம் வெடிக்கும் என எச்சரித்த மாணவர்கள் - தூக்கிச் சென்று கைது செய்த போலீஸ்!!!

 டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்... ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யக் கோரி கோவையில் DYFI, SFI போராட்டம் : ஜல்லிக்கட்டு பாணி போராட்டம் வெடிக்கும் என எச்சரித்த மாணவர்கள் - தூக்கிச் சென்று கைது செய்த போலீஸ்!!!

டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்: ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யக் கோரி கோவையில் DYFI, SFI அமைப்பினர் தீவிர போராட்டம்! போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பை சேர்ந்தவர்களை போலிசார் கைது செய்தனர்.

இந்திய நாட்டின் கல்வியைப் பாதுகாக்கவும், மாணவர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் கோவையில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் தீவிரப்படுத்தப்படும்" என எச்சரிக்கை.

கோவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லில் மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டணம் தெரிவித்து DYFI திடீர் ஊர்வலம்.

திடீர் கண்டன ஊர்வலத்தால் கோவைமாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள BSNL அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோசங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்ததனர் அப்போது பேசிய அவர்கள்.

கடந்த ஜூன் 20 முதல் ஒன்றிய கல்வி அமைச்சரின் வீட்டின் முன் உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சோனம் வாசிங்க் உள்ளிட்ட மாணவர்களை டெல்லி காவல்துறை கொடூரமான முறையில் தாக்கி கைது செய்துள்ளதாகக் கூறி, நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, கோவையில் DYFI மற்றும் SFI அமைப்புகள் சார்பில் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் போராட்டத்திற்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

பாராளுமன்றத்தை நோக்கி அமைதியான முறையில் போராடச் சென்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி காவல்துறை மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மருத்துவக் காவலில் வைக்கப்பட்டுள்ள சோனம் வாசிங்க் உள்ளிட்ட மாணவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

மத்திய அரசின் கல்விக் கொள்கையைக் கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் போராட்டக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்திய நாட்டின் கல்வியைப் பாதுகாக்கவும், மாணவர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் கோவையில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் தீவிரப்படுத்தப்படும்" எனப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினர் எச்சரித்துள்ளனர். அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பை சேர்ந்தவர்களை போலிசார் குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்து வாகனத்தில் ஏற்றினார்கள்.

ஞாயிறு, 5 ஜூலை, 2026

குடியிருப்பு பகுதியில் ‘குப்பை தரம் பிரிக்கும் நிலையம்’ அமைக்க மாநகராட்சி திட்டம் ? ; ​“10 கி.மீ பரப்பளவிற்குப் புகை மாசு பரவும் ஆபத்து” - கோவை, விளாங்குறிச்சி மக்கள் போர்க்கொடி !!!

குடியிருப்பு பகுதியில் ‘குப்பை தரம் பிரிக்கும் நிலையம்’ அமைக்க மாநகராட்சி திட்டம் ? ; ​“10 கி.மீ பரப்பளவிற்குப் புகை மாசு பரவும் ஆபத்து” - கோவை, விளாங்குறிச்சி மக்கள் போர்க்கொடி !!!

 குடியிருப்பு பகுதியில் ‘குப்பை தரம் பிரிக்கும் நிலையம்’ அமைக்க மாநகராட்சி திட்டம் ? ; ​“10 கி.மீ பரப்பளவிற்குப் புகை மாசு பரவும் ஆபத்து” - கோவை, விளாங்குறிச்சி மக்கள் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு !!!

 கோவை, சிவானந்தபுரம், விளாங்குறிச்சி, விநாயகபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும், தங்களின் ஆரோக்கியம் மற்றும் எதிர்கால நலன் சார்ந்த மிக முக்கிய அவசர மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று சமூக வலைதளங்கள் வாயிலாகத் தீவிரமாகப் வைரலாகி வருகிறது.

கோவை மாநகராட்சி நிர்வாகம், சிவானந்தபுரம் பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டி ஆகிய மக்கள் நடமாட்டம் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் நிறைந்த பகுதிக்கு மிக அருகில், மிகப்பெரிய அளவிலான ‘குப்பை சுத்திகரிப்பு மற்றும் எரிப்பு நிலையம்’ ஒன்றை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை ரகசியமாகத் தொடங்கி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 இந்தத் திட்டம் குறித்து அப்பகுதி மக்களுக்கு மாநகராட்சி தரப்பில் இருந்து எவ்வித முன் அறிவிப்போ ? அல்லது கருத்துக் கேட்புக் கூட்டமோ ? நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

​சிவானந்தபுரம், விளாங்குறிச்சி மற்றும் விநாயகபுரம் ஆகிய பகுதிகள் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளாகும். இந்தத் திட்டம் இங்குச் செயல்படுத்தப்பட்டால், இதில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை மற்றும் துர்நாற்றம் காரணமாகச் சுற்றி உள்ள சுமார் 10 கிலோ மீட்டர் பரப்பளவில் வாழும் ஒட்டுமொத்தப் பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.

​குறிப்பாக, அருகில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அப்பகுதியில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் கொடூரமான காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு ஆளாக நேரிடும் எனச் சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். மேலும், மேல்நிலை குடிநீர் தொட்டியின் அருகிலேயே இத்திட்டம் வருவதால், விநியோகிக்கப்படும் குடிநீரின் தூய்மையும் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.

​மாநகராட்சியின் இந்த மக்கள் விரோதத் திட்டத்திற்கு எதிராகத் தங்களது ஜனநாயக உரிமையை அமைதியான முறையில் பதிவு செய்ய அப்பகுதி பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் ஒன்றிணையத் தொடங்கி உள்ளனர்.

​இது குறித்துப் பகிரப்பட்டு வரும் அவசர அழைப்பில் விடுக்கப்பட்டு உள்ளது அதில் கூறி கூறியிருப்பதாவது ;

​“இது எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது மத அமைப்போ நடத்தும் போராட்டம் அல்ல. இது நம் பகுதி மக்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் நம் குழந்தைகளின் எதிர்கால நலனைப் பாதுகாக்கும் உன்னதமான பொதுநல முயற்சி. எனவே, அரசியல், மதம், ஜாதி உள்ளிட்ட அனைத்து வேறுபாடுகளையும் முற்றிலுமாக மறந்து, பொதுமக்களாக, ஒரே சக்தியாக ஒன்றிணைந்து நமது வலுவான எதிர்ப்பை உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும். வாய்ப்பு உள்ள பொதுமக்கள், இளைஞர்கள் அனைவரும் உடனடியாகக் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து வந்து, நம் பகுதியின் நலனுக்காகக் குரல் கொடுப்போம். ஒன்றுபட்ட மக்கள் சக்தியே வெற்றியின் அடித்தளம்!”

​சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் குடியிருப்புப் பகுதியில் அமைய உள்ள குப்பை எரிப்பு நிலையத்திற்கு எதிராக சிவானந்தபுரம் பகுதி மக்கள் போர்க்கொடி தூக்கி உள்ள சம்பவம் கோவையில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கு கூடிய மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

செவ்வாய், 30 ஜூன், 2026

செயலியை மாற்றச் சொன்னால் தலையெழுத்தை மாற்றுகிறார்கள்” ; கோவை ஆவினில் புகுந்த புதிய ஆப் குளறுபடி - கோவையில் சாலையில் பால் முகவர்கள் மறியல் போராட்டம் - பரபரப்பு !!!

செயலியை மாற்றச் சொன்னால் தலையெழுத்தை மாற்றுகிறார்கள்” ; கோவை ஆவினில் புகுந்த புதிய ஆப் குளறுபடி - கோவையில் சாலையில் பால் முகவர்கள் மறியல் போராட்டம் - பரபரப்பு !!!

 செயலியை மாற்றச் சொன்னால் தலையெழுத்தை மாற்றுகிறார்கள்” ; கோவை ஆவினில் புகுந்த புதிய ஆப் குளறுபடி - கோவையில் சாலையில் பால் முகவர்கள் மறியல் போராட்டம் - பரபரப்பு !!!

​“நாங்கள் ஒன்றும் இலவச சேவை செய்ய வரவில்லை”: கமிஷன் தொகையில் முறைகேடு; பொது மேலாளர் சண்முகம் மீது முகவர்கள் அடுக்கடுக்கான புகார்கள் !!!

கோவை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆவின் பால் முகவர்கள் உள்ளனர். அவர்கள் நாள்தோறும் பால்பாக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெறுவதற்கும் பணத்தொகையை செலுத்துவதற்கும் பிரத்தியேகமாக மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. 

கடந்த சில வருடங்களாகவே அந்த செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் அண்மையில் ஒரு புதிய செயலி அறிமுகப்படுத்தி அதன் மூலம் எத்தனை பால் பாக்கெட்டுகள் தேவைப்படுகிறது அதற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு அந்த புதிய செயலியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. Aavin Coimbatore என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பல்வேறு சிக்கல்கள் நிலவுவதாகவும் குளறுபடிகள் அதில் இருப்பதாகவும் பால் முகவர்கள் பலரும் தெரிவித்து வந்தனர். பால் தேவைக்கான எண்ணிக்கையை பதிவு செய்து பணத்தை செலுத்தினால் அந்த எண்ணிக்கையிலான பால்கள் தங்களுக்கு கிடைக்க பெறுவதில்லை என்றும் கமிஷன் வருவதிலும் பல்வேறு குளறுபடிகளும் சிக்கல்களும் நிலவுவதாக தெரிவித்து வந்தனர். சில தினங்களில் கூடுதலாகவோ குறைவாகவோ பால் பாக்கெட்டுகள் தேவைப்பட்டால் அதனை Edit செய்து கட்டணத்தை மீண்டும் செலுத்த இயலாத நிலை இருப்பதாகவும்  இது குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி தடாகம் சாலை பால் கம்பெனி பகுதியில் உள்ள துணை பதிவாளர் அலுவலகத்தில் கோவை மாவட்ட பால் முகவர்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

அங்கு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஆனால் எந்த ஒரு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன் வராததால் திடீரென தடாகம் பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கலைத்தனர். உடனடியாக ஆவின் பொது மேலாளர் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் தமிழக முதல்வரும் இதில் கவனம் செலுத்தி தங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த சாலை மறியல் போராட்டத்தின் பொழுது கோவை மாவட்ட ஆவின் பொது மேலாளர் சண்முகம் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் அதற்கு ஆவின் முகவர்கள் சங்கத்தை சார்ந்த சிலரும் உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து பேசிய பால் முகவர்கள், தற்பொழுது உள்ள புதிய செயலியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் பால் எண்ணிக்கையை கணக்கிட்டு பணம் செலுத்தும் பட்சத்தில் அதற்கான பால் பாக்கெட்டுகள் தங்களுக்கு கிடைக்க பெறுவதில்லை என்று தெரிவித்தனர். இது குறித்த மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தால் செயலியை மாற்றுவதை விட்டுவிட்டு தங்களது தலையெழுத்தை மாற்றுவதாக ஆதங்கம் தெரிவித்தனர். 

மேலும் இந்த புதிய செயலியில் எண்ணிக்கையை குறிப்பிட்டு பால் பாக்கெட்டுகள் தங்களுக்கு கிடைக்கப்படாத பட்சத்தில் ஆவின் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்வதில் சில சமயங்களில் சங்கடங்கள் நிலவுவதாகவும் பால் பாக்கெட் சேதமடைந்து வந்தால் அதற்குரிய பணமும் தங்களுக்கு கிடைப்பதில்லை என்றும் கூறினர். மேலும் ஆவின் அட்டைதாரர்களுக்கு பால்வினியோகம் செய்யும் பொழுது எந்த ஒரு கமிஷனும் தங்களுக்கு இல்லை என்றும் நாங்கள் இலவசமாக சேவை செய்ய வரவில்லை என்றும் தெரிவித்தனர்.

வெள்ளி, 19 ஜூன், 2026

4 மணி நேரம் தொடர் மின்வெட்டு: சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல் !!!

4 மணி நேரம் தொடர் மின்வெட்டு: சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல் !!!

 4 மணி நேரம் தொடர் மின்வெட்டு: சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல் !!!

கிழக்கு கடற்கரை சாலை மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர், நாகூர் மீரான் நகர் பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பகுதியில் தினந்தோறும் 4 மணிநேரம் மட்டுமே மின்சாரம் இருப்பதாகவும், மற்ற நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகவும் மக்கள் வேதனையுடன் குற்றம்சாட்டி வந்தனர். நாகூர் மீரான் நகர் பகுதியில் ஏற்படும் தொடர் மின்வெட்டால் வீட்டில் இருக்கும் கை குழந்தைகள் உறக்கம் இல்லாமலும், குளிர்சாதனை பெட்டியில் வைத்து இருக்கும் உணவுப் பொருட்கள் அனைத்தும் கெட்டுப் போவதாகவும், தொடர் மின்வெட்டால் கடுமையாக அவதிப்படுவதாகவும் கூறினர்.

அதேபோல், மின்வெட்டு ஏற்படும் நேரத்தில் கோவளத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டால், மின்வாரிய ஊழியர்கள் செல்போன் அழைப்பை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சூழலில், நேற்று மாலை 4 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இரவு ஆகியும் மின்சாரம் வராததால் ஆத்திரம் அடைந்த கானத்தூர் நாகூர் மீரான் நகர் பகுதி மக்கள் ஏராளமானோர், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கானத்தூர் ஆய்வாளர் சந்துரு தலைமையிலான போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுனர். போலீசார் மின்சாரம் வருவதற்கு வழிவகை செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

தொடர்ந்து, கானத்தூர் நாகூர் மீரான் நகர் பகுதி மக்களுக்கு தொடர்ந்து ஏற்படும் மின்வெட்டை சரிசெய்ய வேண்டும் எனவும், தங்களுக்கு மின்வெட்டு இல்லாமல் சீரான மின் விநியோகம் நிரந்தரமாக வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தொடர் மின்வெட்டால் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதன் காரணமாக, சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதேபோல், தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம், சாம்ராஜ் நகர், கரகேஸ்வரி நகர், வி.ஜி.பி பொன் நகர், மணவாளன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு தொடர்ந்து 4 மணிநேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும், எந்த விதமான உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அப்பகுதியில் ​மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனால் தாம்பரம், வேளச்சேரி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

மின் வெட்டு குறித்து அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பேசுகையில்,

 ”இந்த பகுதியின் எம்.எல்.ஏவை வரச் சொல்லுங்கள். நாங்கள் 5 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறோம். மின்வாரிய அலுவலத்தை தொடர்பு கொண்டால் முறையாக பதில் இல்லை.

​கடந்த 15 நாட்களாகத் தொடரும் மின்வெட்டுப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். சம்பவ இடத்திற்கு மின்வாரிய அதிகாரிகளும், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நேரில் வந்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.

சாலை மறியல் குறித்து ​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அனுப்பி வைத்தனர்.

புதன், 17 ஜூன், 2026

கொதித்தெழுந்த பொதுமக்கள் : கோவையில் அடிப்படை வசதிகள் கோரி திடீர் சாலை மறியல் - மாநகராட்சிக்கு எதிராகப் போர்க்கொடி !!!

கொதித்தெழுந்த பொதுமக்கள் : கோவையில் அடிப்படை வசதிகள் கோரி திடீர் சாலை மறியல் - மாநகராட்சிக்கு எதிராகப் போர்க்கொடி !!!

 கொதித்தெழுந்த பொதுமக்கள் : கோவையில் அடிப்படை வசதிகள் கோரி திடீர் சாலை மறியல் - மாநகராட்சிக்கு எதிராகப் போர்க்கொடி !!!

​கழிப்பிட வசதி இல்லாமல் அவதிப்படும் மக்கள் ; காவல்துறையுடன் கடுமையான வாக்குவாதம் - பரபரப்பு !!!

 கோவை, புலியகுளம் பகுதியில் உள்ள மீனா எஸ்டேட் அருகே, பாலசுப்ரமணியம் நகர் மக்களுக்குத் தேவையான அடிப்படை மற்றும் பொதுக் கழிப்பிட வசதிகளைச் செய்து தரத் தவறிய கோவை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, நூற்றுக் கணக்கான பொதுமக்கள் திடீரெனச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

கோவை, புலியகுளம் மற்றும் சவுரிபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட நாட்களாகவே போதிய உள்கட்டமைப்பு மற்றும் பொதுக் கழிப்பிட வசதிகள் இன்றி பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையான மனுக்கள் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

​மாநகராட்சி நிர்வாகத்தின் இந்தத் தொடர் அலட்சியப் போக்கால் ஆத்திரம் அடைந்த பாலசுப்ரமணியம் நகர் பகுதி மக்கள், இன்று இரவு திரண்டு வந்து புலியகுளம் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.

 இதனால் அந்தப் பகுதியில் ஒட்டுமொத்தப் போக்குவரத்தும் ஸ்தம்பித்ததுடன், வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்திற்கு அதிவிரைவாக வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திப் போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினர். 

அப்போது, "மாநகராட்சி நிர்வாகம் செய்யத் தவறிய தவறுகளுக்கு எங்களை ஏன் தடுக்கிறீர்கள் ?" என்று கூறி, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினருடன் பொதுமக்கள் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது.

​பொதுமக்களின் இந்தத் திடீர் எழுச்சிப் போராட்டத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானதை அடுத்து, மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்குக் காவல்துறை தரப்பில் இருந்து அவசரத் தகவல் அனுப்பப்பட்டது. உடனே விரைந்து வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாலசுப்ரமணியம் நகர் பகுதியில் போர்க்கால அடிப்படையில் புதிய கழிப்பிட வசதிகள் மற்றும் இதர உள்கட்டமைப்பு பணிகளைத் தொடங்கித் தருவதாகப் பொதுமக்களிடம் உறுதியளித்தனர்.

அதிகாரிகளின் இந்தச் பேச்சுவார்த்தையை ஏற்றுப் பொதுமக்கள் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். 

கோவை மாநகராட்சியின் உள்கட்டமைப்புத் தோல்வியை அம்பலப்படுத்தும் வகையில், மக்கள் திரண்டு வந்து நடத்திய இந்தச் சாலை மறியல் போராட்டம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஞாயிறு, 7 ஜூன், 2026

பாருக்கு வந்த இளைஞர் மீது டாஸ்மாக் ஊழியர்கள் தாக்குதல் - பொதுமக்கள் சாலை மறியல் !!!

பாருக்கு வந்த இளைஞர் மீது டாஸ்மாக் ஊழியர்கள் தாக்குதல் - பொதுமக்கள் சாலை மறியல் !!!

 பாருக்கு வந்த இளைஞர் மீது டாஸ்மாக் ஊழியர்கள் தாக்குதல் - பொதுமக்கள் சாலை மறியல் !!!

டாஸ்மாக் கடைக்கு வெளியில் இருந்து தண்ணீர் பாட்டில் எடுத்து வந்த காரணத்தினால் இளைஞர் தாக்கப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்படட்து.

சென்னை ஈ.சி.ஆர் சாலை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருண் (30). இவர் வாய் பேச முடியாதவர்கள் என தெரிகிறது. நேற்றிரவு 8 மணி அளவில் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று உள்ளார். அங்கு அவர் வெளியில் இருந்து வாங்கிய தண்ணீர் பாட்டியலை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட தனியார் பார் ஊழியர்கள், வெளியில் இருந்து தண்ணீர் எடுத்து வரக்கூடாது என அவரை மார்பில் எட்டி உதைத்து தாக்கி உள்ளனர். பாரில் வேலை செய்பவர்கள் உட்பட சுமார் 10 பேர் அருணை கண் மூடித்தனமாக தாக்கி உள்ளனர். அத்துடன் அவர்கள் அருணின் தலையில் பாட்டிலை கொண்டு கொடூர தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இதில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் இளைஞரை தாக்கி காயப்படுத்திய பார் ஊழியர்களை கண்டித்து, அங்கு சென்று முறையிட்டு உள்ளனர். ஆனால், பார் ஊழியர்கள் உரிய பதில் அளிக்காமல் அலட்சியமாக பேசியதுடன், அப்படித் தான் செய்வோம், உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என பேசி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பார் ஊழியர்களை கண்டித்து ஈ.சி.ஆர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இளைஞரை தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் வலியுறுத்தினர்.

இதனை அடுத்து, இளைஞரை தாக்கிய பார் ஊழியர்கள் சிலரை காவல் துறையினர் பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதன் பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. டாஸ்மாக் கடையில் இளைஞர் மீது ஊழியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதன், 4 மார்ச், 2026

கோவையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட வருவாய் துறையினர் கைது !!!

கோவையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட வருவாய் துறையினர் கைது !!!

கோவையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட வருவாய் துறையினர் கைது !!!

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 8 நாட்களாக ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5% குறைக்கப்பட்டுள்ளது ரத்து செய்து மீண்டும் அதனை 25% நிர்ணயம் செய்ய வேண்டும்,

நில அளவைத் துறையில் வெளி முகமை ஒப்பந்த அடிப்படையில் ஆன பணி நியமனங்களை கைவிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அனைத்து காலிப் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்பதை தளர்த்த வேண்டும் அவர்களின் வட்ட எல்லைக்குள் தங்கி பணிபுரியும் வகையில் விதிகளை திருத்த வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் 200க்கும் மேற்பட்டோர் பந்தல் அமைத்து வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் 9வது நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய அவர்கள் சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தங்களது கோரிக்கைகளை பல மாதங்களாக வலியுறுத்தி வரும் நிலையில் தேர்தல் நெருங்கி வரும் பொழுதாவது அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள அவர்கள் தங்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் அரசு பணிகள் தான் தடைப்பட்டுள்ளதாகவும் மக்களுக்கு தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர்கள் உடனடியாக தங்களை அழைத்து பேச வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.