கள்ளக்காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கள்ளக்காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

 "40 ஆண்டு நட்பில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு சந்தேகம்" ; நண்பரைக் கத்தியால் வெட்டிக் கொன்ற முதியவர் கைது!

"40 ஆண்டு நட்பில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு சந்தேகம்" ; நண்பரைக் கத்தியால் வெட்டிக் கொன்ற முதியவர் கைது!

 "40 ஆண்டு நட்பில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு சந்தேகம்" ; நண்பரைக் கத்தியால் வெட்டிக் கொன்ற முதியவர் கைது!

கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி ஆடு அறுக்கும் கத்தியால் கொடூரக் கொலை: நரசீபுரத்தில் பெரும் பரபரப்பு!

 கோவை மாவட்டம், நரசீபுரத்தில், மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, 40 ஆண்டுக்கால நண்பரைக் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி ஆடு அறுக்கும் கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொன்ற முதியவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை நரசீபுரம் வெள்ளிமலைப்பட்டினம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த நாகராஜ் (62) என்பவர் பாக்கு மட்டை வியாபாரம் செய்து வந்தார். இவரது வீட்டின் அருகில் வசித்து வந்த கந்தசாமி (65) காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். இருவரும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய நண்பர்களாக பழகி வந்து உள்ளனர்.

இந்நிலையில், மனைவியை இழந்து தனியாக வசித்து வந்த நாகராஜுக்கும், கந்தசாமியின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாகக் கந்தசாமி சந்தேகித்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த ஒரு மாதமாகத் தகராறு நிலவி வந்து உள்ளது.

இன்று காலை நாகராஜ் டீ வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் நரசீபுரம் தெற்கு ரத வீதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த கந்தசாமி, தான் மறைத்து வைத்து இருந்த மிளகாய்ப் பொடியை நாகராஜின் கண்ணில் தூவி உள்ளார்.

கண் எாிச்சலில் அலறிய நாகராஜை, ஆடு அறுக்கும் கத்தியால் கழுத்து, தலை மற்றும் வயிறு உள்ளிட்ட இடங்களில் 6-க்கும் மேற்பட்ட முறை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கு இருந்து தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் மிதந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலந்துறை போலீஸார், நாகராஜின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளியான கந்தசாமியைப் பிடிக்கப் போலீஸார் விரைந்த போது, அவர் தனது வலது கையைக் கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். அவரை மீட்ட போலீஸார் கைது செய்து, சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


 இச்சம்பவம் குறித்து ஆலந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கள், 20 ஜூலை, 2026

கள்ளக்காதல் விவகாரத்தில் மிரட்டி லஞ்சம் வாங்கிய காவலர்கள் அதிரடி சஸ்பெண்ட் ; பொள்ளாச்சியில் இளைஞரை அடித்த கொடூரம் - ஆடியோ வெளியானதும் நடவடிக்கை எடுத்த மாவட்ட எஸ்.பி !!!

கள்ளக்காதல் விவகாரத்தில் மிரட்டி லஞ்சம் வாங்கிய காவலர்கள் அதிரடி சஸ்பெண்ட் ; பொள்ளாச்சியில் இளைஞரை அடித்த கொடூரம் - ஆடியோ வெளியானதும் நடவடிக்கை எடுத்த மாவட்ட எஸ்.பி !!!

 கள்ளக் காதல் விவகாரத்தில் மிரட்டி லஞ்சம் வாங்கிய காவலர்கள் அதிரடி சஸ்பெண்ட் ; பொள்ளாச்சியில் இளைஞரை அடித்த கொடூரம் - ஆடியோ வெளியானதும் நடவடிக்கை எடுத்த மாவட்ட எஸ்.பி !!!

"பணமும் வேண்டாம்... உயிரோடு விடுங்க!" – வாலிபரின் கண்ணீர் கதறல் எதிரொலி: காவலர்கள் பணியிடை நீக்கும் !!!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞரை அடித்துத் துன்புறுத்தியதோடு, பொய் வழக்கு போடுவதாக மிரட்டி ரூ.5,000 லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் (S.I) ஜான்சன் மற்றும் காவலர் நாகராஜ் ஆகியோர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

 கோவை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த முகேஷ் என்ற வாலிபருக்கும் அந்தப் பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் அது கள்ளக் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் பணப் பரிவர்த்தனைப் பிரச்சனையில், உதவி ஆய்வாளர் ஜான்சன் மற்றும் காவலர் நாகராஜ் ஆகியோர் முகேஷை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் “ரூ.5000 கொடுக்கா விட்டால் கொலை முயற்சி பொய் வழக்கு போடுவோம்” என மிரட்டல் விடுத்துப் பலவந்தமாக லஞ்சப் பணத்தைப் பிடுங்கிய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.


இந்த விவகாரம் உயர் அதிகாரிகளுக்கு தெரிந்ததும், பயந்து போன காவலர்கள் லஞ்சப் பணத்தைத் திரும்பத் தருவதாகக் கூறியபோதும், "எனக்கு அந்தப் பணமே வேண்டாம் சாமி, என்னை உயிரோடு மட்டும் விட்டுடுங்க!" என முகேஷ் கண்ணீர் மல்கக் கதறிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவித் தமிழகக் காவல் துறையையே உலுக்கியது.  

இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் தவறு இழைத்த உதவி ஆய்வாளர் ஜான்சனை மற்றும் காவலர் நாகராஜ் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டு உள்ளார்.

திங்கள், 9 மார்ச், 2026

கோவை சூலூர் அருகே தொழிலாளி கொலை வழக்கு ; மனைவி கள்ளக்காதலன் உட்பட நான்கு பேர் சிறையில் அடைப்பு - சிறுவன் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைப்பு !!!

கோவை சூலூர் அருகே தொழிலாளி கொலை வழக்கு ; மனைவி கள்ளக்காதலன் உட்பட நான்கு பேர் சிறையில் அடைப்பு - சிறுவன் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைப்பு !!!

கோவை சூலூர் அருகே தொழிலாளி கொலை வழக்கு ; மனைவி கள்ளக்காதலன் உட்பட நான்கு பேர் சிறையில் அடைப்பு - சிறுவன் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைப்பு !!!

தொழிலாளி கொலை வழக்கில் கைதான மனைவி, கள்ளக்காதலன் உட்பட 4 பேரை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சிறுவன் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பெரிய நெகமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். வயது 40 தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவரது மனைவி சரண்யா காதலித்து திருமணம் செய்த, இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர்.

சரண்யா குழந்தைகளுடன் சுல்தான் பேட்டை அருகே குமாரபாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அப்பொழுது சரண்யாவுக்கும் அவரது உறவினரான சுல்தான்பேட்டை வீ. வடுகபாளையத்தைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி சதீஷ் என்கின்ற முருகனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த சரண்யாவின் கணவர் சதீஷ்குமார் இரண்டு பேரையும் கண்டித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சரண்யா மற்றும் அவரது கள்ளக் காதலன் முருகன் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள சதீஷ்குமாரை கடந்த மூன்றாம் தேதி திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத், சிவலிங்கம் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து காரில் கடத்திச் சென்று கைகளாலும், பீர் பாட்டிலாலும் தாக்கிக் கொன்று உடலை பெரிய வதம்பச்சேரி பி.ஏ.பி வாய்க்காலில் வீசி சென்றனர். இதற்கு இடையே ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடிய சதீஷ்குமார் மாயமாகி விட்டதாக சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் சரண்யா புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பொங்கலூர் அருகே நாதேகவுண்டன் பாளையத்தில் சதீஷ்குமார் இறந்த நிலையில் உடல் காயங்களுடன் போலீசாரால் மீட்கப்பட்டது. தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் சதீஷ்குமார், அவரது மனைவி சரண்யா கள்ளக்காதலன் முருகன் உட்பட நான்கு பேர் சேர்ந்து கொன்றது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் முருகன், கோபிநாத், சிவலிங்கம் ஆகியோரே கைது செய்தனர். தொடர்ந்து சரண்யா 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

இந்நிலையில் போலீசார் கொலை வழக்காக மாற்றி சூலூர் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தி சரண்யா உட்பட நான்கு பேரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சிறுவன் கோவையில் உள்ள சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.