மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

"குழந்தையுடன் அன்பாகச் உரையாடிய அமைச்சர் அருண்ராஜ்" ; கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு!

"குழந்தையுடன் அன்பாகச் உரையாடிய அமைச்சர் அருண்ராஜ்" ; கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு!

குழந்தைகள் வார்டில் நெகிழ்ச்சி சம்பவம்: பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் சம்பத் குமாரும் பங்கேற்பு!

 கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், கோவை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 அப்போது குழந்தைகள் வார்டில் இருந்த சிறுமி ஒருவர் அமைச்சருடன் சுவாரசியமாக உரையாடிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு அரசியல் மற்றும் அரசு தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் கோவைக்கு வருகை தந்து இருந்தனர்.

இந்நிகழ்வுகளின் இடையே, கோவை அரசு தலைமை மருத்துவமனைக்குத் திடீரெனச் சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், அங்கு இருந்த வார்டுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை வசதிகளை நேரில் ஆய்வு செய்தார். அவருடன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் மற்றும் மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

மருத்துவமனையின் குழந்தைகள் நல வார்டை ஆய்வு செய்ய அமைச்சர் சென்ற போது, அங்குச் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிறுமி ஒருவரிடம் நலம் விசாரித்தார். அப்போது அச்சிறுமி எவ்வித தயக்கமுமின்றி, அமைச்சரிடம் மிகவும் மழலை மொழியில் உற்சாகமாகப் பேசினார்.

சிறுமியின் பேச்சைக் கேட்டுப் புன்னகைத்த அமைச்சர், அவருக்கு அளித்துவரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததுடன், அச்சிறுமிக்கு ஆறுதலும் அன்பும் தெரிவித்தார்.

 அமைச்சரும் சிறுமியும் அன்போடு பேசிக்கொண்ட இந்த அழகான தருணம் அங்கு இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் கவனத்தையும் ஈர்த்தது.

திங்கள், 7 செப்டம்பர், 2026

 "காலில் இரும்புக் கம்பியுடன் தவித்த பெண் யானை" - ட்ரோன் மூலம் கண்காணித்து வனத்துறை அதிரடி சிகிச்சை!

"காலில் இரும்புக் கம்பியுடன் தவித்த பெண் யானை" - ட்ரோன் மூலம் கண்காணித்து வனத்துறை அதிரடி சிகிச்சை!

சிறுமுகை காப்பக்காடு பகுதியில் கும்கிகள், 5 மருத்துவர்கள் உதவியுடன் மீட்பு : மயக்க ஊசி செலுத்திப் புதுவாழ்வு!

கோவை மாவட்டம், சிறுமுகை வனப்பகுதியில் காலில் ஆழமாக இரும்புக் கம்பி சிக்கி வலியால் தவித்துக் கொண்டு இருந்த பெண் யானையை, வனத்துறையினர் மற்றும் சிறப்பு மருத்துவக் குழுவினர் ட்ரோன் மூலம் கண்காணித்து வெற்றிகரமாக மயக்க ஊசி செலுத்திச் சிகிச்சை அளித்துக் காப்பாற்றி உள்ளனர். 

கோவை, வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சிறுமுகை வனச்சரகத்தைச் சேர்ந்த பெத்திக்குட்டை, உளியூர் காப்பக்காடு பகுதியில் கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி வனப் பணியாளர்கள் வழக்கம் போல் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அங்கு சுற்றித் திரிந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை ஒன்று நடப்பதற்குச் சிரமப்பட்டு மெதுவாக நடந்து செல்வதைக் கவனித்தனர். உன்னிப்பாகப் பார்த்த போது, அந்த யானையின் இடது முன்னங்காலில் தடிமனான இரும்புக் கம்பி ஒன்று ஆழமாகச் சிக்கி, அது காயத்தை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்தது. இது குறித்து வனப்பணியாளர்கள் உடனடியாகக் கோவை மாவட்ட வன அலுவலருக்கு (DFO) விரிவான தகவல் அளித்தனர்.

காயம் அடைந்த யானைக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க வனத்துறை உயர் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெறப்பட்டது. கோவை மாவட்ட வன அலுவலர் தலைமையில், சிறுமுகை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர்கள், 60-க்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் கொண்ட சிறப்பு மீட்புக் குழு அமைக்கப்பட்டது.

யானைக்குப் பாதுகாப்பாகச் சிகிச்சை அளிப்பதற்காக ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்களைச் சேர்ந்த 5 கால்நடை மருத்துவக் குழுவினரும், யானைப் பாகன்களும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

அடர்ந்த வனப்பகுதிக்குள் காயம் அடைந்த யானை எங்குச் செல்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய நவீன ட்ரோன் (Drone) கேமராக்கள் வான்வழியாகப் பயன்படுத்தப்பட்டன. யானையின் நடமாட்டத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்த குழுவினர், அதற்குச் சிகிச்சை அளிக்கச் சரியான வாய்ப்புக்காகக் காத்து இருந்தனர்.

சரியான சூழல் அமைந்ததும், நேற்று அடர்ந்த வனப்பகுதிக்கு உள்ளேயே வைத்து அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவர்கள் லாவகமாக யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

மயக்க ஊசி செலுத்தப்பட்டு யானை நிலைகுலைந்து சாய்ந்ததும், சுற்றிலும் பாதுகாப்பை ஏற்படுத்திய மருத்துவக் குழுவினர், யானையின் இடது முன்னங்காலில் ஆழமாகப் பதிந்து இருந்த இரும்புக் கம்பியைச் கவனமாக வெளியே எடுத்தனர். பின்னர் காயம் அடைந்த பகுதிக்குக் கிருமிநாசினி மற்றும் தீவிர நிவாரண மருந்துகளை அளித்துச் சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சை முழுமையாக முடிந்த பிறகு, யானைக்கு மயக்கம் தெளிவிப்பதற்கான மாற்று மருந்து செலுத்தப்பட்டது. சில நிமிடங்களிலேயே மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்குத் திரும்பிய அந்தப் பெண் யானை, ஆரோக்கியத்துடன் மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் நடந்து சென்றது.

 வனத்துறையினரின் இந்தச் சமயோசிதமான மற்றும் துரிதமான மீட்பு நடவடிக்கை வன உயிரின ஆர்வலர்கள் இடையே பெரும் பாராட்டைப் பெற்று உள்ளது.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

"ரயிலில் இருந்து கீழே விழுந்து பயணி படுகாயம்" ; கோவையில் தொடரும் விபத்துக்கள்!

"ரயிலில் இருந்து கீழே விழுந்து பயணி படுகாயம்" ; கோவையில் தொடரும் விபத்துக்கள்!

 "ரயிலில் இருந்து கீழே விழுந்து பயணி படுகாயம்" ; கோவையில் தொடரும் விபத்துக்கள்!

படிக்கட்டில் அமர்ந்து பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை!

 கோவை அருகே உள்ள எட்டிமடை பகுதியில் ரயிலில் பயணித்துக் கொண்டு இருந்த நபர் ஒருவர் திடீரென கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் இருந்து திருச்சி நோக்கிச் சென்று கொண்டு இருந்த பயணிகள் ரயிலில் நபர் ஒருவர் பயணித்து உள்ளார். ரயில் கோவை அருகே உள்ள எட்டிமடை பகுதிக்கு வந்த போது, எதிர்பாராத விதமாக அந்த நபர் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து உள்ளார்.

​இதில் அவருக்கு தலை மற்றும் கை, கால்களில் காயம் ஏற்பட்டு இருந்தது. 

ரயில் பாதையின் அருகே நபர் ஒருவர் காயங்களுடன் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் தெரிவித்தனர்.

​தகவல் அறிந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், படுகாயம் அடைந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இதே இருகூர் பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து பயணி ஒருவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

​ரயிலின் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் அமர்ந்து கொண்டு பயணிப்பதே இதுபோன்ற தொடர் விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, ரயில்வே நிர்வாகத்தினரும் ரயில்வே காவல் துறையினரும் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்யும் பயணிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

மூட்டைப் பூச்சிகள் தொல்லை... பணியாளர்கள் பற்றாக்குறை... கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதி !!!

மூட்டைப் பூச்சிகள் தொல்லை... பணியாளர்கள் பற்றாக்குறை... கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதி !!!

 மூட்டைப் பூச்சிகள் தொல்லை... பணியாளர்கள் பற்றாக்குறை... கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதி !!!

சிகிச்சைக்கு வந்து தூக்கமின்றித் தவிக்கும் நோயாளிகள் : நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை !!!

 கோவை அரசுத் தலைமை மருத்துவமனையில் மூட்டைப் பூச்சிகளின் தொந்தரவு மற்றும் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

​கோவை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய பொதுமக்கள் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

 இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள பல்வேறு வார்டுகளில் மூட்டைப் பூச்சிகளின் தொல்லை மிகக் கடுமையாக இருப்பதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

​நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள கட்டில்கள், மெத்தைகள் மற்றும் மரப் பெஞ்சுகளில் மூட்டைப் பூச்சிகள் அதிக அளவில் நிறைந்து காணப்படுவதால், இரவில் தூங்க முடியாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.

 சிகிச்சைக்கு வந்து உள்ள நிலையில், இந்த மூட்டைப் பூச்சி கடியால் மேலும் அலர்ஜி மற்றும் தோல் உபாதைகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டு உள்ளதாக நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

​மற்றொருபுறம், மருத்துவமனையில் போதிய தூய்மைப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் வார்டுகளை அவ்வப் போது கிருமிநாசினி தெளித்துத் தூய்மைப்படுத்துவதிலும், நோயாளிகளைப் பராமரிப்பதிலும் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

​எனவே, கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, அனைத்து வார்டுகளிலும் மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க மருந்து தெளிக்கவும், கூடுதல் பணியாளர்களை நியமித்துச் சுகாதாரத்தைப் பராமரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வெள்ளி, 31 ஜூலை, 2026

கோவை அரசு மருத்துவமனையில் புகுந்த சாக்கடை நீர் ; மருந்துகள் சேதம்? - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ !!!

கோவை அரசு மருத்துவமனையில் புகுந்த சாக்கடை நீர் ; மருந்துகள் சேதம்? - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ !!!

 கோவை அரசு மருத்துவமனையில் புகுந்த சாக்கடை நீர் ; மருந்துகள் சேதம்? - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ !!!

 கோவை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் சாக்கடை நீர் புகுந்து மருந்துப் பொருட்கள் சேதம் அடைந்ததாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 கோவை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் கழிவுநீர் ஓடை அடைப்பு காரணமாகச் சாக்கடை நீர் புகுந்து மருந்து சேமிப்புக் கிடங்கு செல்லத் தொடங்கி உள்ளது.

​அங்குச் சேமித்து வைக்கப்பட்டு இருந்த மருந்துப் பெட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைச் சுற்றிச் சாக்கடை நீர் சூழ்ந்ததால், மருந்துகள் நீரில் மூழ்கி நாசம் அடைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

 இக்காட்சிகளை அங்கு இருந்த நபர் ஒருவர் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து உள்ளனர்.

அதில் தூய்மை பணியாளர்கள் சாக்கடை கழிவு நீரை சுத்தம் செய்து வரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

 நாள்தோறும் ஆயிரக் கணக்கான ஏழை - எளிய மக்கள் சிகிச்சை பெற வரும் கோவை அரசு தலைமை மருத்துவமனையில், சாக்கடை நீர் புகுந்த சம்பவத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகமும் மருத்துவமனை நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு அடைப்புகளைச் சரி செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திங்கள், 27 ஜூலை, 2026

திரைப்படப் படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து : நடிகர் ராம் சரணுக்கு கையில் அறுவை சிகிச்சை கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதி !!!

திரைப்படப் படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து : நடிகர் ராம் சரணுக்கு கையில் அறுவை சிகிச்சை கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதி !!!

 திரைப்படப் படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து : நடிகர் ராம் சரணுக்கு கையில் அறுவை சிகிச்சை கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதி !!!

 பிரபல தெலுங்குத் திரையுலகப் முன்னணி நடிகரான ராம் சரண், தனது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திற்குச் சிகிச்சை பெறுவதற்காகக் கோவையில் உள்ள 'கங்கா மருத்துவமனையில்' அனுமதிக்கப்பட்டு உள்ளார். இன்று அவருக்கு மணிக்கட்டுப் பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில், அவரைக் கவனித்துக் கொள்ளவும் உடன் இருக்கவும் அவரது தந்தையும் நடிகருமான சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினர் கோவைக்கு வருகை தந்து உள்ளனர்.

நடிகர் ராம் சரண் தனது புதிய திரைப்படப் படப்பிடிப்பில் நடித்து வந்த போது, எதிர்பாராத விதமாக அவரது கை மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக மருத்துவ ஆலோசனைகள் பெறப்பட்ட நிலையில், எலும்பு மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைகளுக்கு கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காகக் நேற்று கோவை வந்தடைந்த ராம் சரணைக் கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

 அறுவை சிகிச்சையின் போது உடன் இருப்பதற்காகத் தந்தை சிரஞ்சீவி மற்றும் குடும்பத்தினர் கோவை வந்து உள்ளனர்.

சனி, 25 ஜூலை, 2026

ஒன்றரை கோடி செலவாகும்னு பயந்தோம்... இப்போ டாக்டர் கனவு நனவாகிடுச்சு!’ - கோவை மாணவி காவியஶ்ரீக்கு வானதி சீனிவாசன் நேரில் வாழ்த்து !!!

ஒன்றரை கோடி செலவாகும்னு பயந்தோம்... இப்போ டாக்டர் கனவு நனவாகிடுச்சு!’ - கோவை மாணவி காவியஶ்ரீக்கு வானதி சீனிவாசன் நேரில் வாழ்த்து !!!

 ஒன்றரை கோடி செலவாகும்னு பயந்தோம்... இப்போ டாக்டர் கனவு நனவாகிடுச்சு!’ - கோவை மாணவி காவியஶ்ரீக்கு வானதி சீனிவாசன் நேரில் வாழ்த்து !!!

 எளிமையான தொழிலாளி மகள் நீட் தேர்வில் வெற்றி: தையல் கடைக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த பா.ஜ.க மகளிர் அணித் தலைவி வானதி !!!

 கோவையில் கடந்து நீட் (NEET) தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ள எளிமையான குடும்பத்து மாணவி காவியஶ்ரீயை பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து ஆரத்தழுவி வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளார்.

கோவை, கரடிமடை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஸ்வரி, பேரூர் காளம்பாளையத்தில் ஒரு சிறிய தையல் கடை நடத்தி குடும்பத்தை நடத்தி வருகிறார்.

 இத்தகைய எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த இவர்களது மகள் காவியஶ்ரீ, சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்குத் தகுதி அடைந்து உள்ளார்.

இச்செய்தி அறிந்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், காளம்பாளையத்தில் உள்ள உமா மகேஸ்வரியின் தையல் கடைக்கே நேரில் சென்று, மாணவிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன்.

நீட் தேர்வின் பயன்கள் மற்றும் எதிர்கால மருத்துவக் கல்வி வாய்ப்புகள் குறித்துப் பெற்றோரைக் கேட்டறிந்தார்.

அப்போது வானதி சீனிவாசனிடம் நெகிழ்ச்சியுடன் பேசிய மாணவியின் தாய் உமா மகேஸ்வரி, "எங்க உறவுக்காரப் பெண் ஒருவர் முன்பு டாக்டர் படிக்க ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல செலவு செஞ்சாங்க. ஆனா, இன்னைக்கு நீட் தேர்வு வந்ததால எங்களைப் போன்ற எளிமையான கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகளும் பெரிய தொகை செலவில்லாமல், மதிப்பெண் திறமையின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர முடிகிறது" எனக் கூறினார். மேலும், தான் நடத்தும் தையல் கடையைப் பிரதமரின் ‘முத்ரா கடன் திட்டம்’ மூலமே தொடங்கியதாகக் குறிப்பிட்டு, பெண்களின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசின் திட்டங்கள் பெரும் உறுதுணையாக இருப்பதாக நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

புதன், 8 ஜூலை, 2026

அரசு ஆஸ்பத்திரியா ? எலி வளர்த்தல் மையமா ? கோவை ஜி.ஹெச் எமர்ஜென்சி வார்டில் எகிரி குதிக்கும் எலி !!!

அரசு ஆஸ்பத்திரியா ? எலி வளர்த்தல் மையமா ? கோவை ஜி.ஹெச் எமர்ஜென்சி வார்டில் எகிரி குதிக்கும் எலி !!!

 அரசு ஆஸ்பத்திரியா ? எலி வளர்த்தல் மையமா ? கோவை ஜி.ஹெச் எமர்ஜென்சி வார்டில் எகிரி குதிக்கும் எலி !!!

உயிர்காக்கும் பிரிவிலேயே நடக்கும் எலிகளின் அட்டகாசம்; அலட்சியத்தில் மருத்துவமனை நிர்வாகம் !!!

உயிர்காக்கும் அவசர சிகிச்சை பிரிவிற்கே அவசர சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு கோவை அரசு தலைமை மருத்துவமனை எலிகளின் புகலிடமாக மாறி இருப்பது, நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் இடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

ஏழை, எளிய மக்களின் ஒரே நம்பிக்கையாக விளங்கும் கோவை ஜி.ஹெச் தரம் குறைந்து, ‘ரொம்ப மட்டமான’ நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதாகப் பொதுமக்களே நேரடியாகக் குமுறத் தொடங்கி உள்ளனர். 

விபத்து மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு வரப்படும் நோயாளிகளைப் பராமரிக்கும் எமர்ஜென்சி வார்டுக்குள், தற்போது எலிகள் சுதந்திரமாக எகிரி குதித்து ‘ரேஸ்’ நடத்திக் கொண்டு இருக்கும் வைரல் வீடியோ ...

 மருத்துவமனையின் அவசர சிகிச்சை வார்டுகளில் துப்புரவுப் பணிகள் சரி வரக் கவனிக்கப்படாததே இந்த எலித் தொல்லைக்குக் காரணம் என்ற ‘கசப்பான உண்மை’ வெளிவந்து உள்ளது. 

படுக்கைகளில் படுத்து இருக்கும் நோயாளிகளின் பக்கத்திலேயே எலிகள் கூட்டமாக ஓடிப் பிடித்து விளையாடுவதும், உணவுகளைக் கடித்துக் குதறுவதும் தொடர் கதையாகி வருகிறது. 

"உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவசர வார்டில் வந்து படுத்தால், எலி கடித்து எங்கே ‘எலி காய்ச்சல்’ வந்துவிடுமோ ? என்ற பயத்தில் தான் இரவெல்லாம் கண் விழித்துக் கிடக்கிறோம்; 

இந்த எலிகளிடம் இருந்து தப்பிக்க ஏதாவது வழிகள் இருக்கிறதா?" என நோயாளிகளின் உறவினர்கள் கண்ணீருடன் கேள்வி எழுப்புகின்றனர்.

மாவட்டத்தின் மிக முக்கிய மருத்துவமனையாகக் கருதப்படும் இந்த வளாகத்தில், சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகிப் போனதாகப் புகார்கள் அடுக்கடுக்காக எழுகின்றன.

 இதுகுறித்து வார்டு ஊழியர்களிடம் முறையிட்டால் அவர்கள் அலட்சியமாகப் பதில் அளிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக இந்த ‘எலி சாம்ராஜ்யத்திற்கு’ எண்ட் கார்டு போட வேண்டும் என்றும், அவசர சிகிச்சை வார்டுகளில் போர்க்கால அடிப்படையில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திங்கள், 6 ஜூலை, 2026

மூளைச்சாவு 3 பேருக்கு மறுவாழ்வு ; கோவையில் விபத்தில் சிக்கிய நபரின் உடல் உறுப்புகள் தானம் - அரசு மருத்துவமனை அஞ்சலி செலுத்தி குடும்பத்தினரின் தியாகத்திற்குப் பாராட்டு !!!

மூளைச்சாவு 3 பேருக்கு மறுவாழ்வு ; கோவையில் விபத்தில் சிக்கிய நபரின் உடல் உறுப்புகள் தானம் - அரசு மருத்துவமனை அஞ்சலி செலுத்தி குடும்பத்தினரின் தியாகத்திற்குப் பாராட்டு !!!

 மூளைச்சாவு 3 பேருக்கு மறுவாழ்வு ; கோவையில் விபத்தில் சிக்கிய நபரின் உடல் உறுப்புகள் தானம் - அரசு மருத்துவமனை அஞ்சலி செலுத்தி குடும்பத்தினரின் தியாகத்திற்குப் பாராட்டு !!!

 "கோவையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் உடல் உறுப்புகள், அவரது குடும்பத்தினரின் சம்மதத்தோடு தானம் செய்யப்பட்டு உள்ளன. 

இதன் மூலம் 3 நபர்களுக்குப் புதிய மறுவாழ்வு கிடைத்து உள்ள நெகிழ்ச்சிச் சம்பவம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நெகிழ வைத்து உள்ளது."

கோவை, கவுண்டம்பாளையம் கோ-ஆப்பரேட்டிவ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கடந்த ஜூலை 1-ந் தேதி கவுண்டம்பாளையம் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது பாலகிருஷ்ணன் சாலை விபத்து ஒன்றில் சிக்கி, தலையில் பலத்த காயம் அடைந்தார். விபத்தில் படுகாயமடைந்த அவரை மீட்ட அப்பகுதி மக்கள், மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அனுமதித்தனர். 

அங்கு உள்ள மருத்துவ அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக மூளைச்சாவு அடைந்தார்.

பாலகிருஷ்ணன் மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்த அரசு மருத்துவக் குழுவினர், உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் பிற உயிர்களை எப்படிக் காப்பாற்ற முடியும் என்ற விழிப்புணர்வை அவரது உறவினர்களுக்கு எடுத்துரைத்தனர்:

 பாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் "அவனது உறுப்புகள் பிறருக்குப் பயன்படட்டும்" என பெருந்தன்மையுடன் சம்மதம் தெரிவித்தனர்.

 இதனைத் தொடர்ந்து 'தமிழ்நாடு உறுப்பு தான வழிகாட்டுதல்' நெறிமுறைகளின்படி, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் கீதாஞ்சலி ஆலோசனை மற்றும் நேரடி மேற்பார்வையின் கீழ் மாற்று அறுவைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன.

அதில் அரசு மருத்துவமனையின் அசுர நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ குழுவினர் பாலகிருஷ்ணனின் உடலில் இருந்து உறுப்புகளைப் பிரித்தெடுக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டனர். 

 பாலகிருஷ்ணனின் உடலில் இருந்து ஒரு சிறுநீரகம் மற்றும் இரு கண்களின் கருவிழிகள் வெற்றிகரமாகத் தானமாகப் பெறப்பட்டன. இவை கோவை அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வரும் மாற்று உறுப்புத் தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளன.

 உறுப்பு தான நடைமுறைகள் முடிந்த பின்னர், பாலகிருஷ்ணனின் உடலுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் மலர் தூவி அலாதி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

திங்கள், 22 ஜூன், 2026

ஜூன் 26-இல் தமிழகம் முழுவதும் மகப்பேறு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் : வெளியானது அறிவிப்பு !!!

ஜூன் 26-இல் தமிழகம் முழுவதும் மகப்பேறு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் : வெளியானது அறிவிப்பு !!!

 ஜூன் 26-இல் தமிழகம் முழுவதும் மகப்பேறு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் : வெளியானது அறிவிப்பு !!!

தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி மகப்பேறு மருத்துவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தமிழக மகளிர் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் அமலாதேவி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், 

"மதுரை மாவட்டம் மேலூரிலும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலும் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்கள் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தனர்.

இந்த இயற்கை மரணங்களை திட்டமிட்ட படுகொலையாக சித்தரித்து, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது அவர்களின் உறவினர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சிவகாசியில் இரண்டாவது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண், அதிக ரத்தம் உறைதல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார். இதனை மருத்துவர்களின் கவனக்குறைவு என்று கூறுவதை ஏற்க முடியாது.

மேலூரில் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி மருத்துவமனை மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்புப் பணியில் போலீஸார் இருந்தும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.

தமிழகத்தில் பெண் மகப்பேறு மருத்துவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். எனவே, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை சொத்துக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அவசர உதவிக்கு போலீஸ், சட்ட நிபுணர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ளச் சிறப்புக்குழு அமைக்கப்பட வேண்டும்.

பிரசவத்தின் போதும், சிகிச்சையின் போதும் நிகழும் மரணங்களை வைத்து பணம் பறிக்கும் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

மரணம் ஏற்படும் பட்சத்தில், வீண் பதற்றத்தைத் தணிக்க உடனடியாக உடற்கூறாய்வு (Post-mortem) செய்ய போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தத் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மகப்பேறு மருத்துவர்கள் வரும் ஜூன் 26-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர்.

அன்றைய தினம் வெளிநோயாளிகள் பிரிவு (OP) சிகிச்சையும் முழுமையாகப் புறக்கணிக்கப்படும். அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு மற்றும் உள்நோயாளிகள் பிரிவு (IP) ஆகியவை வழக்கம் போல் இயங்கும்.

தமிழகம் முழுவதும் சுமார் 4,500 மருத்துவர்கள் இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் பாதுகாப்பு விஷயத்தில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்தப் போராட்டம் அடுத்த கட்டமாக தீவிரமடையும்" என டாக்டர் அமலாதேவி தெரிவித்தார்.

செவ்வாய், 16 ஜூன், 2026

கோவை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி ; நெஞ்சுவலிப் பெண் படுக்கையில் ஆண் நோயாளி - எமெர்ஜென்சி வார்டில் தொடரும் படுக்கை பற்றாக்குறை அவலம் !!!

கோவை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி ; நெஞ்சுவலிப் பெண் படுக்கையில் ஆண் நோயாளி - எமெர்ஜென்சி வார்டில் தொடரும் படுக்கை பற்றாக்குறை அவலம் !!!

 கோவை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி ; நெஞ்சுவலிப் பெண் படுக்கையில் ஆண் நோயாளி - எமெர்ஜென்சி வார்டில் தொடரும் படுக்கை பற்றாக்குறை அவலம் !!!

ஒரே பெட்டில் மாற்றி, மாற்றி உட்கார வைக்கப்படும் நோயாளிகள் : தரம் கெட்ட மருத்துவ சேவையால் பொதுமக்கள் கொந்தளிப்பு !!!

கோவை அரசு தலைமை மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை பிரிவில் (Emergency Ward), கடுமையான நெஞ்சுவலி காரணமாக உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த பெண் நோயாளி ஒருவரின் படுக்கையிலேயே, மற்றொரு ஆண் நோயாளியையும் அமர வைத்துச் சிகிச்சை அளித்த அநாகரிகமான மற்றும் அதிர்ச்சியூட்டும் நிர்வாகச் சீர்கேடு வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

 கோவையின் சுற்று வட்டார மாவட்ட மக்கள் அனைவருக்கும் முதன்மை மருத்துவ மையமாக விளங்கும் இந்த அரசு மருத்துவமனையில், அண்மைக் காலமாக அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் முடங்கிக் கிடப்பதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

 இதன் உச்சக்கட்டமாக, நெஞ்சுவலி காரணமாக அவசரக் காலச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் நோயாளி ஒருவருக்கு படுக்கை வசதி செய்து தரப்பட்ட நிலையில், சற்று நேரத்தில் அங்கு வந்த மருத்துவ ஊழியர்கள் அதே படுக்கையில் மற்றொரு ஆண் நோயாளியையும் படுக்க வைத்து உள்ளனர்.

​பின்னர், அந்த ஆணை எழுப்பி அதே பெட்டில் அமர வைத்து விட்டு, மீண்டும் மற்றொருவரை அங்கு அமர வைப்பது என அவசரச் சிகிச்சை பிரிவுக்கே உரிய எந்தவொரு அடிப்படை மருத்துவ விதிகளும் இல்லாமல் அங்கு உள்ள ஊழியர்கள் அலட்சியமாகச் செயல்பட்டு உள்ளனர்.

 உயிருக்கு ஆபத்தான நிலையில், அதிதீவிர சிகிச்சைப் பகுதிக்கு (ICU) நிகரான எமெர்ஜென்சி வார்டுக்குச் சென்றாலும் கூட, நோயாளிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத சூழலே நிலவுகிறது. 

ஆண் - பெண் என்ற பாகுபாடின்றி ஒரே படுக்கையில் நோயாளிகளைத் திணிக்கும் இந்த அவல நிலை தொடர்ந்து அங்கு நீடித்து வருவதாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் தங்களின் வேதனையை முன் வைக்கின்றனர்.

​இந்த விவகாரம் தொடர்பான வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஏழை - எளிய மக்களின் உயிரோடு விளையாடும் இத்தகைய அலட்சியப் போக்கைக் கண்டித்து, மாவட்ட மருத்துவ நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு (Intervention), அவசரச் சிகிச்சை பிரிவில் கூடுதல் படுக்கை வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கொலை வழக்கு கைதி பலி ; ரேஸ்கோர்ஸ் போலீஸார்  விசாரணை !!!

கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கொலை வழக்கு கைதி பலி ; ரேஸ்கோர்ஸ் போலீஸார் விசாரணை !!!

 கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கொலை வழக்கு கைதி பலி ; ரேஸ்கோர்ஸ் போலீஸார்  விசாரணை !!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள வடை காவஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.மணி என்கிற மணிகண்டன் (வயது 55), தந்தை பெயர் சிவசுப்பிரமணியன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஈரோடு பெருந்துறை காவல் நிலைய எல்லையில் நடைபெற்ற ஒரு  கொலை வழக்கில் குற்றவாளி ஆவார். இவ்வழக்கை விசாரித்த ஈரோடு கூடுதல் அமர்வு நீதிமன்றம், மணிக்கு கடந்த 05.10.2016 அன்று 10 ஆண்டுகள் கடுங்காவல் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

இதை அடுத்து மணி கோவை மத்திய சிறையில் கைதி ஆக அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஜூன் 2-ந் தேதி மணிக்கு சிறைக்குள் திடீரென கடுமையான நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. சிறை அதிகாரிகள் அவரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனை  வளாகத்தில் உள்ள கைதிகள் சிறப்பு வார்டில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம்  மதியம் மணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் டி.தாமரைக்கனி அளித்த தகவலின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கள், 15 ஜூன், 2026

கோவை அரசு ஆஸ்பத்திரியில் சரியான சிகிச்சை இல்லை, தகாத வார்த்தைகளால் பேச்சு” ;  கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து முதியவர் திடீர் தர்ணா - பரபரப்பு !!!

கோவை அரசு ஆஸ்பத்திரியில் சரியான சிகிச்சை இல்லை, தகாத வார்த்தைகளால் பேச்சு” ; கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து முதியவர் திடீர் தர்ணா - பரபரப்பு !!!

 கோவை அரசு ஆஸ்பத்திரியில் சரியான சிகிச்சை இல்லை, தகாத வார்த்தைகளால் பேச்சு” ;  கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து முதியவர் திடீர் தர்ணா - பரபரப்பு !!!

கோவை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. ஏராளமான மக்கள் மனுக்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். 

இதையொட்டி கோவை கலெக்டர் அலுவலக வாசலில் வளாகத்தில் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் கோகுலகிருஷ்ணன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. 

அப்போது கலெக்டர் அலுவலக பார்சல் அருகே ஒரு முதியவர் வந்தார். திடீரென்று அங்கு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். 

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் உடனடியாக அந்த முதியவரை சாலையில் அமரக் கூடாது என்று கூறினர். 

அப்போது அந்த முதியவர் தனது பெயர் மணிவாசகம் (வயது 68) என்றும் வட வழியில் சேர்ந்த தனக்கு கை கால் மற்றும் உடல் வலி பாதிப்புக்கு கடந்த 1 ஆம் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அட்மிட் ஆனதாகவும் அங்கு தனக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் ஊழியர்கள் இது குறித்து கேட்ட போது தகாத வார்த்தையால் பேசியதாகவும் கூறினார். 

எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வந்ததாக தெரிவித்தார்.. அதன் பிறகு அவரை சமாதானம் செய்த போலீசார் புகார் மனுவை கலெக்டரிடம் கொண்டு சென்று அளிக்கும்படி கூறி சமாதானம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஞாயிறு, 14 ஜூன், 2026

அரசியலை விட மக்கள் உடல்நலமே தற்போது முக்கியம்” ; நோய் வந்த பின் துடிப்பதை விட வருமுன் காப்பதே சிறந்தது - கோவையில் ‘வி தி லீடர்ஸ்’ அரசியல் இயக்கம் ஆரம்பித்த பின் முதன்முறையாக அண்ணாமலை பேட்டி !

அரசியலை விட மக்கள் உடல்நலமே தற்போது முக்கியம்” ; நோய் வந்த பின் துடிப்பதை விட வருமுன் காப்பதே சிறந்தது - கோவையில் ‘வி தி லீடர்ஸ்’ அரசியல் இயக்கம் ஆரம்பித்த பின் முதன்முறையாக அண்ணாமலை பேட்டி !

அரசியலை விட மக்கள் உடல்நலமே தற்போது முக்கியம்” ; நோய் வந்த பின் துடிப்பதை விட வருமுன் காப்பதே சிறந்தது - கோவையில் ‘வி தி லீடர்ஸ்’ அரசியல் இயக்கம் ஆரம்பித்த பின் முதன்முறையாக அண்ணாமலை பேட்டி !

பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அரசியலை விட மக்கள் உடல்நலமே தற்போது முக்கியம் என வலியுறுத்தி உள்ளார். கோவையில் தனியார் மருத்துவமனையின் புதிய மருத்துவ வளாகத்தை திறந்து வைத்த அவர், நோய் வருவதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

'வி தி லீடர்' அமைப்பை அரசியல் இயக்கமாக மாற்றுவதாக அறிவித்த பிறகு, பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை முதன்முறையாக கோவைக்கு வருகை தந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், தனது பயணத்தின் முதல் நிகழ்வாக சிங்காநல்லூரில் அமைந்துள்ள என்.ஜி. மருத்துவமனையின் புதிய மருத்துவ வசதிகள் கொண்ட வளாகத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்காமல், உடல்நலம் மற்றும் மருத்துவம் தொடர்பான கருத்துகளை மட்டும் பகிர்ந்து கொண்டார்.

உணவுப் பொருட்களின் தரக்கட்டுப்பாடு முழுமையாக மக்களின் கையில் இல்லை என்பதால், ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை பின்பற்றாத சூழலில் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலை உருவாகி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதை விட, வருமுன் காத்துக் கொள்வதே சிறந்த மருத்துவ அணுகுமுறை என்றும், அதனை வலியுறுத்தும் வகையில் நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய இந்த புதிய வளாகத்தை திறந்து வைக்க வந்து உள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.

சனி, 13 ஜூன், 2026

கேரளத்தில் ஷிகெல்லா நோய் பரவல் எதிரொலி ; கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயார் !!!

கேரளத்தில் ஷிகெல்லா நோய் பரவல் எதிரொலி ; கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயார் !!!

 கேரளத்தில் ஷிகெல்லா நோய் பரவல் எதிரொலி ; கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயார் !!!

கேரளத்தில் ஷிகெல்லா நோய் பரவுவதன் எதிரொலியாக கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது.

கேரள மாநிலத்தில் ஷிகெல்லா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் வயநாடு மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 100 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிலும் குறிப்பாக இந்த பாதிப்பு கோழிகோட்டை சேர்ந்த சிறுமி உயிர் இழந்து உள்ளாள். 

தற்பொழுது தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளது. இந்நிலையில் கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு தென்பட்டது. இதனால் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளத்தில் ஷிகெல்லா நோய் பரவல் எதிரொலியாக தமிழகம் - கேரளா எல்லையில் சுகாதாரத் துறையினர் மருத்துவக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீவிர சோதனைக்கு பின்னரே கேரளத்தில் இருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

கேரளத்தில் ஷிகெல்லா நோய் பரவல் எதிரொலியாக கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இங்கு 11 படுக்கைகள் போடப்பட்டு உள்ளன. மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இது குறித்து மருத்துவ அதிகாரிகள் கூறும்போது;

கோவை மாவட்டத்தில் இதுவரை ஷிகெல்லா நோய் பாதிப்பு இல்லை, ஆனாலும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், தீவிர காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சனை இருந்தால் சுயமாக மருந்து உட்கொள்ளாமல். உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டும் என்றனர்.

கோவையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு !!!

கோவையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு !!!

கோவையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு !!!

தமிழ்நாடு அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளிகள், பேருந்து நிலையங்கள் என பல்வேறு பகுதிகளில் திடீர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

அதன்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சம்பத்குமார் கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனை பேருந்து நிலையங்கள் என பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடமும் அங்கு பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள், மருத்துவர்கள், தேவைகள் குறித்து கேட்டறிந்து வருகிறார்.

அதன்படி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மணியக்காரன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆய்வகங்கள், மருந்து வழங்கும் இடம், படுக்கை வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த அவர் அந்த சிகிச்சை பெறுபவர்களிடமும் சிகிச்சை எவ்வாறு உள்ளது என கேட்டறிந்தார். மேலும் அங்கு உள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடமும் சுகாதார நிலையத்திற்கு ஏதேனும் தேவைகள் உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.

புதன், 3 ஜூன், 2026

அரசு மருத்துவமனையில் மருந்து கலக்கும் பணியில் தூய்மை பணியாளர் : அதிர்ச்சி வீடியோ !!!

அரசு மருத்துவமனையில் மருந்து கலக்கும் பணியில் தூய்மை பணியாளர் : அதிர்ச்சி வீடியோ !!!

 அரசு மருத்துவமனையில் மருந்து கலக்கும் பணியில் தூய்மை பணியாளர் : அதிர்ச்சி வீடியோ !!!

செங்கம் அரசு பொது மருத்துவமனையில் தூய்மை பணியாளர் ஒருவர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் மருந்துகளை ஊசி மூலம் கலக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளர்கள் மருத்துவம் சார்ந்த பணிகளில் ஈடுபடக் கூடாது என தமிழக அரசு நேற்று உத்தரவிட்டு இருந்த நிலையில், இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் தாலுகாவில் அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. சுற்று வட்டார கிராமங்கள், மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான மக்களுக்கு முக்கிய சிகிச்சை மையமாக இது விளங்குகிறது. குறிப்பாக, மகப்பேறு சிகிச்சை பிரிவில் தினமும் ஏராளமான கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மருத்துவமனையின் மகப்பேறு நலப் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் பெண் ஒருவர், மகப்பேறு சிகிச்சை அறைக்கு வெளியே அமர்ந்து கொண்டு, கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்படும் ஊசி மருந்துகள் சிலவற்றை ஒன்றோடொன்று கலக்கும் பணியில் ஈடுபட்டார்.

இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய இந்த பணியை தூய்மை பணியாளர் செய்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், செங்கம் அரசு மருத்துவமனையில் போதுமான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் பணியில் உள்ளார்களா என்ற சந்தேகத்தையும் பொதுமக்கள் மத்தியில் இந்த சம்பவம் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி உண்மை நிலையை தெளிவுப்படுத்த வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செங்கம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கம் மற்றும் விசாரணையில் வெளிப்படை தன்மையையும் பொதுமக்கள் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.

முன்னதாக, தமிழக சுகாதாரத்துறை சார்பில் அரசு மருத்துவமனைகளுக்கு நேற்று முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதாவது, அரசு மருத்துவமனைகளில் உள்ள துறை மருத்துவர்கள் மற்றும் புற நோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் தினசரி காலை 7.30 மணிக்கு பணிக்கு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், சரியான மருத்துவப் படிப்போ அல்லது செவிலியர் பயிற்சியோ பெறாத தூய்மைப் பணியாளர்களை எக்காரணம் கொண்டும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 2 ஜூன், 2026

 இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் அதிரடி ‘ஸ்டிரைக்’ ; பணிப் புறக்கணிப்பால் ஸ்தம்பித்த தூய்மை பணிகள் - மாற்று நிறுவன ஊழியர்கள் மோதலால் நோயாளிகள் கடும் அவதி !!!

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் அதிரடி ‘ஸ்டிரைக்’ ; பணிப் புறக்கணிப்பால் ஸ்தம்பித்த தூய்மை பணிகள் - மாற்று நிறுவன ஊழியர்கள் மோதலால் நோயாளிகள் கடும் அவதி !!!

 இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் அதிரடி ‘ஸ்டிரைக்’ ; பணிப் புறக்கணிப்பால் ஸ்தம்பித்த தூய்மை பணிகள் - மாற்று நிறுவன ஊழியர்கள் மோதலால் நோயாளிகள் கடும் அவதி !!!

அதிக பணிச்சுமை, ஆள் பற்றாக்குறை, பி எஃப் நிதி வழங்காமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை சிங்காநல்லூர் பகுதுயிலுள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது

அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த பணி மேற்கொண்டு வரும் கிரிஸ்டல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 10 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் அவர்களுக்கு பணி வழங்கப்பட்ட நிலையில் அவர்களை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மற்றும் செய்வதாகவும் அதே வேளையில் இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து 10 வரை அரசு மருத்துவமனைக்கு மாற்ற இருப்பதாகவும் குற்றச்சாட்டு 

மீண்டும் பணி வழங்கினால் அவர்களை அங்கேயே பணியமர்த்த வேண்டும் எனவும் அரசு மருத்துவமனையில் இருந்து இ எஸ் ஐ மருத்துவமனைக்கு மாற்றம் செய்யக்கூடாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த ஊழியர்கள் வலியுறுத்தல்

மருத்துவமனை நிர்வாகம் சார்பில்  பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியடைந்த நிலையில் ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் நோயாளிகள் பாதிப்பு.

வெள்ளி, 29 மே, 2026

மூளைச்சாவு அடைந்து மரணத்திலும் வாழும் திருப்பூர் சிறுவன் ‘உன்னத’ மனிதநேயம் ; உடல் உறுப்புகளைத் தானம் செய்து 5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த பெற்றோர் - கோவையில் இருந்து சென்னை, வேலூருக்குப் சென்ற உறுப்புகள் !!!

மூளைச்சாவு அடைந்து மரணத்திலும் வாழும் திருப்பூர் சிறுவன் ‘உன்னத’ மனிதநேயம் ; உடல் உறுப்புகளைத் தானம் செய்து 5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த பெற்றோர் - கோவையில் இருந்து சென்னை, வேலூருக்குப் சென்ற உறுப்புகள் !!!

 மூளைச்சாவு அடைந்து மரணத்திலும் வாழும் திருப்பூர் சிறுவன் ‘உன்னத’ மனிதநேயம் ; உடல் உறுப்புகளைத் தானம் செய்து 5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த பெற்றோர் - கோவையில் இருந்து சென்னை, வேலூருக்குப் சென்ற உறுப்புகள் !!!


இருசக்கர வாகன விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனின் உடல் உறுப்புகளை, அவரது பெற்றோர் அசாத்திய நெஞ்சுரத்துடனும், அளப்பரிய மனிதநேயத்துடனும் தானமாக வழங்கிய சம்பவம் நிகழ்ச்சி ஏற்படுத்தி உள்ளதுடன்.  ஐந்து நபர்களின் வாழ்க்கைக்குப் புதிய ‘லைவ்’ மறுவாழ்வையும் தந்து உள்ளது.

​திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சாந்தமூர்த்தி – தமிழரசி தம்பதியினர். இவர்களது அசல் வாரிசான ரித்தீஷ் குமார் என்ற 13 வயது சிறுவன், கடந்த சில நாட்களுக்கு முன்பு மங்களம் நெடுஞ்சாலையில் (Mangalam Highway) தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது, எதிர்பாராதவிதமாகக் விபத்தில் சிக்கிப் பலத்த காயம் அடைந்து உள்ளார். விபத்தின் பற்றி அறிந்து பதறிப்போன குடும்பத்தினர், அவரை மீட்டு உடனடியாகக் கோவையில் உள்ள பிரபல ‘ராயல் கேர்’ (Royal Care) மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

​இருப்பினும், சிகிச்சைகள் பலனின்றி நேற்று மாலை சுமார் 5 மணி அளவில், வாலிபர் ரித்தீஷ் குமார் ‘மூளைச்சாவு’ (Brain Dead) அடைந்து விட்டதாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தங்களின் மகன் இனி மீண்டு வரமாட்டான் என்ற உண்மையை அறிந்து பெற்றோர் நிலைகுலைந்து போயினர். அந்தப் பெருஞ்சோகத்திலும், சற்றும் யோசிக்காமல் அசாத்திய மனிதநேய முடிவை எடுத்த அவரது பெற்றோர், தங்களது மகனின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்தனர்.

​இதை அடுத்து, அரசு விதிகளின்படி மாற்று அறுவை சிகிச்சைக்கான தயார் செய்யப்பட்டு, ராயல் கேர் மருத்துவமனையின் மருத்துவர்கள் ரித்தீஷ் குமாரின் உடல் உறுப்புகளைப் பத்திரமாக எடுத்தனர். அதன்படி:

​அவரது கல்லீரல் (Liver) – கோவை ராயல் கேர் மருத்துவமனைக்கே வழங்கப்பட்டது.

​ஒரு சிறுநீரகம் (Kidney) – கோவையில் உள்ள கே.எம்.சி.எச் (KMCH) மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

​மற்றொரு சிறுநீரகம் – வேலூரில் உள்ள நாராயணி மருத்துவமனைக்கு ‘கிரீன் காரிடார்’ மூலம் அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டது.

​அவரது நுரையீரல் (Lung) – சென்னை குளோபல் கிளினிக் மருத்துவமனைக்கு (Global Clinic) ஏர் ஆம்புலன்ஸ் மூலம் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டது.

​சிறு வயதிலேயே விதியின் சதியால் உயிரிழந்த ரித்தீஷ் குமாரின் இந்த உன்னத உறுப்புத் தானம் மூலம், மரணத்தின் விளிம்பில் இருந்த பல்வேறு நபர்களுக்குப் புதிய மறுவாழ்வு கிடைக்கப் பெற்று உள்ளதாக மருத்துவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர். தங்களின் ஒரே மகனை இழந்த துயரத்திலும், "நம் மகன் மறைந்தாலும் மற்றவர்களின் உடம்பில் அவனது உயிர் வாழட்டும்" என்று முடிவெடுத்த அந்த பெற்றோரின் உன்னதமான தியாகச் செயலைக் அனைத்து பொதுமக்கள் வாழ்த்தி வருகின்றனர்.

திங்கள், 25 மே, 2026

“உடல்நிலை நன்றாக உள்ளது… அனைத்து பணிகளையும் ஆற்ற சென்னை செல்கிறேன்” – கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி !!!

“உடல்நிலை நன்றாக உள்ளது… அனைத்து பணிகளையும் ஆற்ற சென்னை செல்கிறேன்” – கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி !!!

உடல்நிலை நன்றாக உள்ளது… அனைத்து பணிகளையும் ஆற்ற சென்னை செல்கிறேன்” – கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி !!!

கோவை, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், கடந்த ஒரு மாதமாக கடுமையான உழைப்பின் காரணமாக வழக்கம்போல் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதாக தெரிவித்தார். ஆண்டுக்கு இருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்வது தனது வழக்கம் என்றும், இம்முறையும் இரண்டு நாட்கள் தங்கி பரிசோதனை செய்ததாக கூறினார். அனைத்து பரிசோதனை முடிவுகளும் சரியாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளதாகவும், உடல்நிலை நன்றாக உள்ளதால் அனைத்து பணிகளையும் ஆற்ற சென்னை செல்கிறேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என கூறப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தாம் வழக்கமாக சிகிச்சை பெறும் மருத்துவமனை மற்றும் உறவினர் மருத்துவமனை என்பதாலேயே அங்கு பரிசோதனை செய்ததாக விளக்கம் அளித்தார். ஓய்வும் அங்கேயே எடுப்பேன் என்றும், இலவசமாக கிடைக்கும் சலுகை என்பதால் அரசிடம் இருந்து நிதி பெற வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

சூலூர் சிறுமி கொலை வழக்கு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ஐஜி ஏற்கனவே தெளிவான விளக்கம் அளித்துள்ளதாகவும், முதலமைச்சரும் சட்டத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், உடனடியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், பெண்களுக்கான ‘விடியல் பயணம்’ உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பேசிய அவர், திமுக அரசு பல ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய திட்டங்களை வழங்கியிருப்பது அனைவருக்கும் தெரியும் என்றும், அரசின் நிதிநிலைக்கு ஏற்ப ஒவ்வொரு திட்டமும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றும், திட்டங்கள் குறித்து இறுதி முடிவை முதலமைச்சர் எடுப்பார் என்றும் தெரிவித்தார்.