போதைப்பொருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போதைப்பொருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 செப்டம்பர், 2026

கோவையில் போதை மாத்திரைகள் & கஞ்சா பறிமுதல்" ; 2 வாலிபர்களைப் பிடித்துப் கைது செய்த போலீசார்!

கோவையில் போதை மாத்திரைகள் & கஞ்சா பறிமுதல்" ; 2 வாலிபர்களைப் பிடித்துப் கைது செய்த போலீசார்!

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற அம்பலம் : 400 'டைடால்' மாத்திரைகள் மற்றும் மொபைல்கள் பறிமுதல்!

 கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே நரசிம்மநாயக்கன்பாளையத்தில் சட்ட விரோதமாகப் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞர்களைப் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் கையும், களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நமச்சிவாயம் போதைப் பொருட்கள் விற்பனை குறித்து ரகசியத் தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில், நரசிம்மநாயக்கன்பாளையம் பகவான் கார்டன் பகுதியில் உள்ள செல்வமாரியம்மன் கோவில் அருகே உள்ள வாட்டர் டேங்க் பகுதியில் போலீசார் தீவிரக் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குச் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று இருந்த இரு வாலிபர்கள், போலீசாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர்.

பிடிபட்ட நபர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், நரசிம்மநாயக்கன்பாளையம், குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தஆனந்தகுமார் (23), புதுப்பாளையம் ரோடு, அங்காளம்மன் நகரைச் சேர்ந்த கௌசிகன் (26) எனத் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களைச் சோதனை செய்த போது, ஆனந்தகுமாரின் பேண்ட் பாக்கெட்டில் ஜிப்லாக் கவரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 400 ஆரஞ்சு நிற 'டைடால்' (Tydol) போதை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. அதேபோல, கௌசிகனின் பாக்கெட்டில் 120 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை வாங்கி வந்து, தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும், அப்பகுதியில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் அதிக விலைக்குச் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது அம்பலமானது.

இதை அடுத்து, 400 டைடால் மாத்திரைகள், 120 கிராம் கஞ்சா மற்றும் அவர்களிடம் இருந்த Vivo Y39, Samsung ஆகிய 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப்பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

"கோவையில் 11 to 11 பாரில் மதுப்பிரியர்கள் பயங்கர மோதல்" ; பீர் பாட்டில்களால் தாக்கி முரட்டு சண்டை: செல்போன் வீடியோ இணையத்தில் வைரல்!

"கோவையில் 11 to 11 பாரில் மதுப்பிரியர்கள் பயங்கர மோதல்" ; பீர் பாட்டில்களால் தாக்கி முரட்டு சண்டை: செல்போன் வீடியோ இணையத்தில் வைரல்!

தண்ணீர் பந்தல் சாலையில் அரங்கேறிய நடுரோட்டு அதிரடி: பொதுமக்கள் அச்சம், சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறி!

​ கோவை, பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் இயங்கி வரும் '11 to 11' பாரில் மதுப்பிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் தகராறு, ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கி கொள்ளும் வன்முறையாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, பீளமேடு பகுதிக்குட்பட்ட தண்ணீர் பந்தல் சாலையில் பிரபல ‘11 to 11’ மதுபானக் கூடம் (Bar) செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு மது அருந்த வந்த சில நபர்களுக்கு இடையே எதிர்பாராத விதமாக வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.

​மது போதை தலைக்கேறிய நிலையில், தகராறு முற்றிப் பாரின் உள்ளேயும், வெளியேயும் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

 ஆத்திரம் அடைந்த நபர்கள் அங்கு இருந்த நாற்காலிகள் மற்றும் பாட்டில்களைக் கொண்டு ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.

பாரில் இருந்த மற்ற வாடிக்கையாளர்களும்,  அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த பயங்கர மோதலை அங்கு இருந்த நபர் ஒருவர் தனது மொபைல் போனில் படம் பிடித்து உள்ளார்.

​தற்போது அந்தச் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

 அந்த வீடியோவில், மதுப்பிரியர்கள் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கும் கொடூரக் காட்சிகள் பதிவாகி உள்ளன.

​ இதுபோன்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட மதுபானக் கூடத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

 கோவை, விமான நிலையம் அருகில் அமோகமாக நடக்கும் 24 மணி நேரத் தடையற்ற மது விற்பனை" ; அரசு மூடிய டாஸ்மாக் முன்பு பெட்டிக்கடையில் ரகசிய அரங்கேற்றம் - அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல்!

கோவை, விமான நிலையம் அருகில் அமோகமாக நடக்கும் 24 மணி நேரத் தடையற்ற மது விற்பனை" ; அரசு மூடிய டாஸ்மாக் முன்பு பெட்டிக்கடையில் ரகசிய அரங்கேற்றம் - அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல்!

குட்கா, கூலி முதல் அனைத்து மதுபானங்களும் தாராளம்!

 கோவையின் முக்கியப் பகுதியான சித்திரா விமான நிலையம் அருகில், அவிநாசி சாலையில் அரசு முத்திரையுடன் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையின் முன்புறம் உள்ள பெட்டிக் கடை ஒன்றில், எந்த நேரக் கட்டுப்பாடும் இல்லாமல் 24 மணி நேரமும் அனைத்து வகையான மதுபானங்களும் சட்ட விரோதமாக விற்கப்பட்டு வருவது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை விமான நிலையப் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் இயங்கி வந்த அரசு டாஸ்மாக் மதுக்கடை முன்பு அரசாங்கத்தால் அதிகாரப் பூர்வமாக மூடப்பட்டது. ஆனால், பொதுமக்கள் மற்றும் காவல்துறை நடமாட்டம் அதிகமுள்ள அவிநாசி சாலை சித்திரா விமான நிலையம் அருகிலேயே, அந்த மூடப்பட்ட கடையின் முன்புறம் அமைந்து உள்ள ஒரு பெட்டிக்கடை சட்டவிரோத மது விற்பனையின் கூடாரமாக மாறிவிட்டது.

பகல், இரவு பாராமல் 24 மணி நேரமும் அங்கு அனைத்து விதமான வெளிமாநில மற்றும் பிராண்டட் மதுபானங்கள் ரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுப் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்து உள்ளன.

மதுபானங்களுடன் நின்று விடாமல், தமிழக அரசால் கடுமையான சட்டங்களின் கீழ் தடை செய்யப்பட்டு உள்ள குட்கா, ஹான்ஸ், சருதா, பான் மசாலா மற்றும் 'கூலி' போன்ற பல்வேறு ஆபத்தான போதை மற்றும் புகையிலைப் பொருட்களும் இந்தப் பெட்டிக் கடையில் தாராளமாக விற்பனை செய்யப்படும் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 பள்ளி, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் இந்தப் பகுதிக்கு வந்து எளிதில் போதைப் பொருட்களை வாங்கிச் செல்வது அப்பகுதி சமூக ஆர்வலர்களைக் கவலை அடையச் செய்து உள்ளது.

சமூக விரோதச் செயல்களுக்கு வழிவகுக்கும் இந்தச் சட்டவிரோத மது மற்றும் போதைப்பொருள் விற்பனை குறித்துப் பொதுமக்கள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து உள்ளன.

எனவே,  காவல்துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உடனடியாகத் சித்திரா விமான நிலையம் அருகிலுள்ள அப்பெட்டிக் கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு, அங்கு நடக்கும் சட்டவிரோத விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

வியாழன், 3 செப்டம்பர், 2026

 "நாய்கள் செய்த அதிசயம்" ; நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற போதை இளைஞர் கைதான அதிர்ச்சி சம்பவம் !

"நாய்கள் செய்த அதிசயம்" ; நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற போதை இளைஞர் கைதான அதிர்ச்சி சம்பவம் !

பெட்டிக்கடை தீ வைப்பு வழக்கை விசாரிக்கச் சென்ற போது சிக்கிய சி.சி.டி.வி: துடியலூரில் நள்ளிரவில் பரபரப்பு!

​ கோவை, அருகே நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற கஞ்சா போதை ஆசாமியிடம் இருந்து, அங்கு இருந்த வளர்ப்பு நாய்கள் சண்டையிட்டுக் கடித்துப் பெண்ணைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான மற்றும் அதிர்ச்சிகரமான சி.சி.டி.வி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, அருகே பெட்டிக்கடை ஒன்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டதாகத் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி (CCTV) கேமரா காட்சிகளைக் கைப்பற்றிக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

​அப்போது சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது, பெட்டிக்கடை தீ வைப்பு சம்பவத்தையும் தாண்டி அதிர்ச்சி அளிக்கும் வேறொரு கொடூரச் சம்பவம் கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

இன்று அதிகாலை 2 மணி அளவில், சாலையோரமாக அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அமர்ந்து இருந்தார். அப்போது, கஞ்சா மற்றும் மது போதையில் அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவரை அங்கு இருந்த 2 நாய்கள் இடை விடாது குரைத்துத் தொடர்ந்து சென்று உள்ளன.

​அப்போது அந்த பெண்ணிடம் அந்த இளைஞர், "இது உங்க நாயா பாரு... பின்னாடியே வந்துட்டு இருக்கு!" எனக் கேட்டு உள்ளார். அதற்கு அந்தப் பெண், "கல்லை எடுத்து அடிங்க... நாய் ஓடிவிடும், இதுகூட தெரியாதா?" எனக் கூறி உள்ளார்.

 இளைஞரும் கல்லை எடுத்து எறியவே நாய்கள் சில அடி தூரம் சென்று மீண்டும் அவரைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே நின்றன.

​அந்தச் சமயத்தில், போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அந்த இளைஞர், சாலையோரம் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை திடீரென மானபங்கம் செய்ய முயன்று உள்ளார்.

ஆபத்தை உணர்ந்த அப்பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சலிடவே, உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட நாய்கள் பாய்ந்து வந்து அந்த இளைஞரைத் தாக்கத் தொடங்கின. குரைத்துக் கொண்டே இளைஞரின் கால்களைக் கடித்து இழுத்துப் பெண்ணை நெருங்க விடாமல் தடுத்தன.

​நாய்களின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்த அந்த இளைஞர், பெண்ணை விட்டு விட்டு அங்கு இருந்து ஓட்டம் பிடித்தார்.

 விடாத நாய்களும் அந்த இளைஞரைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்றன.

மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்ட இளைஞரிடம் இருந்து நன்றி உள்ள நாய்கள் கடித்துப் பெண்ணைக் காப்பாற்றிய இந்த நெகிழ்ச்சி காட்சி சி.சி.டி.வி யில் தெளிவாகப் பதிவாகி இருந்தது.

​சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் உடனடியாக களமிறங்கிய காவல்துறையினர், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட இளைஞரை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 போதை ஆசாமி இடம் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நாய்கள் போராடிக் காப்பாற்றிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

திங்கள், 31 ஆகஸ்ட், 2026

கோவையில் ரூ.10 கோடி மதிப்பிலான 12.80 கிலோ போதைப்பொருள் அதிரடி பறிமுதல்: கேரளாவைச் சேர்ந்த 3 பேர் கைது!

கோவையில் ரூ.10 கோடி மதிப்பிலான 12.80 கிலோ போதைப்பொருள் அதிரடி பறிமுதல்: கேரளாவைச் சேர்ந்த 3 பேர் கைது!

காரின் கதவுகளில் பிரத்யேக ரகசிய அறை அமைத்து கடத்தல்: கேரள போலீசாரின் வரலாற்றுச் சாதனை மெகா வேட்டை

தமிழக எல்லைப் பகுதியான கோவையில் முகாமிட்டு, காரின் கதவுகளுக்குள் ரகசிய அறை அமைத்து கடத்த முயன்ற சுமார் ரூ.10 கோடி சர்வதேச சந்தை மதிப்புடைய 12.80 கிலோ ‘எம்.டி.எம்.ஏ.’  வீரிய ரக போதைப்பொருளைக் கேரள மாநில தனிப்படை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாகக் கேரளாவைச் சேர்ந்த முக்கிய கடத்தல் புள்ளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கேரள காவல் துறையின் வரலாற்றிலேயே ஒரே ஒரு சோதனையில் இவ்வளவு பெரிய அளவில் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் பிடிபட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது 97 கிராம் அளவிலான எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளுடன் சந்தேகத்திற்குரிய நபர்கள் பிடிபட்டனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரிலிருந்து பெரும் அளவில் வீரிய ரக போதைப்பொருள் கடத்தி வரப்பட்டு, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து விநியோகிக்கப்பட்டு வரும் அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து, கடத்தல் நெட்வொர்க்கின் வேர்களை அறுத்தெறிய ‘ஆபரேஷன் டூபான்’  மாநில நோடல் அதிகாரி பூட்டா விமலாதித்யா., திருச்சூர் சரக டி.ஐ.ஜி. டி.நாராயணன் மற்றும் மலப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆர்.விஸ்வநாத், உதவி காவல் கண்காணிப்பாளர் சைத்ரா தெரசா ஜான் ஆகிய உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் பிரிவான ‘டான்சாப்’  மற்றும் மஞ்சேரி காவல் நிலைய தனிப்படையினர் தீவிர ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, இந்த சர்வதேச கடத்தல் கும்பலின் முக்கிய நபர்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்து, அங்கிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கி வருவது உறுதி செய்யப்பட்டது.

தகவலறிந்த மஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.ஜி.திலீப் தலைமையிலான தனிப்படை போலீசார் கோவைக்கு விரைந்தனர். கோவையில் குறிப்பிட்ட தங்குமிடத்தை ரகசியமாக முற்றுகையிட்ட போலீசார், அங்கிருந்த 3 பேரை அதிரடியாக மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பந்தல்லூர், மாம்பாவளப்பில் பகுதியைச் சேர்ந்த ஜாபிர் அலி (வயது 32) மஞ்சேரி ஆனைக்கயம், கடவத்துவூட்டைச் சேர்ந்த ஷயீம் அக்பர் (வயது 21), வயநாடு மாவட்டம் மேப்பாடி, கரிம்பயில் பகுதியைச் சேர்ந்த முகம்மது சாஹில் (வயது 34) என்பது தெரியவந்தது.

அவர்கள் பயன்படுத்திய சொகுசு காரை போலீசார் மெட்டல் டிடெக்டர் மற்றும் பிரத்யேக கருவிகள் கொண்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது காரின் நான்கு கதவுகளின் உட்புற பேனல்களிலும்  மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட ரகசிய அறைகள் இருப்பது அம்பலமானது.

அந்த அறைகளுக்குள் 100 கிராம் முதல் 500 கிராம் வரை எடையுள்ள காற்றுப்புகாத பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நிலையில் மொத்தம் 12.80 கிலோ கிராம் எடை கொண்ட எம்.டி.எம்.ஏ. படிகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச கள்ளச்சந்தையில் ரூ.10 கோடிக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

நாக்பூரில் இவர்களுக்கு போதைப்பொருளை சப்ளை செய்த முக்கிய ஏஜெண்டுகள் யார்? கோவையிலும் கேரளாவிலும் இதனை வாங்கி விநியோகம் செய்யவிருந்த இடைத்தரகர்கள் மற்றும் நெட்வொர்க் தொடர்புகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேச போதைப் பொருட்களை  கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்யும் கும்பலை கேரள மாநில போலீசார் கோவையில் வந்து கைது செய்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

சரக்கு பாட்டிலை வீட்டில் வைத்து விற்பனை செய்யும் பெண்கள் - அதிர்ச்சி ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் ...

சரக்கு பாட்டிலை வீட்டில் வைத்து விற்பனை செய்யும் பெண்கள் - அதிர்ச்சி ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் ...

 சரக்கு பாட்டிலை வீட்டில் வைத்து விற்பனை செய்யும் பெண்கள் - அதிர்ச்சி ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் ...

திருப்பூர் - வீரபாண்டி, குப்பாண்டம்பாளையம் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ள பெண்கள் தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் நாளிலும், கடைகள் செயல்படாத நேரத்திலும் மதுபான பாட்டில்களை கோட்டர், கட்டிங் அளவுகளில் விற்பனை செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ வருகிறது. இரவு, பகல் என நேரம் காலம் பாராமல் நடைபெறும் இந்த மதுபான விற்பனையால் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக தமிழக அரசு உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் பெண்களே சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்யும் இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 "கிரியேட்டின் டப்பாவில் ரூ.லட்ச மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன்" ;  ஓணம் ஸ்பெஷல் 'ஆபரேஷன் தண்டர்' வேட்டையில் வளைத்துப்பிடித்த கலால் துறை!

"கிரியேட்டின் டப்பாவில் ரூ.லட்ச மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன்" ; ஓணம் ஸ்பெஷல் 'ஆபரேஷன் தண்டர்' வேட்டையில் வளைத்துப்பிடித்த கலால் துறை!

 "கிரியேட்டின் டப்பாவில் ரூ.லட்ச மதிப்பு உள்ள மெத்தம்பெட்டமைன்" ;  ஓணம் ஸ்பெஷல் 'ஆபரேஷன் தண்டர்' வேட்டையில் வளைத்துப்பிடித்த கலால் துறை!

பெங்களூரு-எர்ணாகுளம் ஏர்பஸ் பேருந்தில் அதிரடி சோதனை : திருச்சூர் வாலிபர் கோவை வாளையார் சோதனைச் சாவடியில் கைது!

​ பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட 'ஆபரேஷன் தண்டர்' (Operation Thunder) என்ற சிறப்பு கலால் வரி அதிரடி சோதனையின் போது, தமிழக-கேரள எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில் பல லட்ச ரூபாய் மதிப்பு உள்ள மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடத்தலில் ஈடுபட்ட வாலிபரும் கைது செய்யப்பட்டார்.

 ஓணம் பண்டிகைக் முன்னிட்டு தமிழக - கேரளா எல்லைப் பகுதிகளில் இரு மாநில காவல்துறையினர் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தலைத் தடுப்பதற்காகக் கலால் துறை சார்பில் 'ஆபரேஷன் தண்டர்' எனும் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனை நடத்தப்பட்டது.

​இதன் ஒரு பகுதியாக, கேரள எல்லைப் பகுதியான வாளையார் கலால் சோதனைச் சாவடியில் கலால் ஆய்வாளர் ஜிது கிரண் தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் நோக்கி வந்த ஏர் பஸ் தனியார் சொகுசுப் பேருந்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

 அப்பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவரின் உடமைகளைச் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட போது, அவர் உடற்பயிற்சி செய்பவர்கள் பயன்படுத்தும் 'கிரியேட்டின்' (Creatine) டப்பாவிற்குள் பல லட்ச ரூபாய் மதிப்பு உள்ள போதைப் பொருட்களைப் புத்திசாலித்தனமாக மறைத்து வைத்து இருந்தது அம்பலமானது.

​அவரிடம் இருந்து சுமார் 142 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 1 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

இதை அடுத்து, போதைப்பொருளைப் பார்சலாகக் கடத்தி வந்த திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் கடங்கோடு வெள்ளார்க்காடு அம்பலவட்டம் கரையைச் சேர்ந்த அய்யால கட்டில் தமாலு என்பவரின் மகன் ஜிதின் (35) என்பவரைக் கலால் துறையினர் உடனடியாகக் கைது செய்தனர்.

​கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து இந்த போதைப்பொருளை வாங்கி வந்து கேரளா மற்றும் எல்லை மாவட்டங்களில் விற்பனை செய்யத் திட்டமிட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் உள்ள முக்கிய நெட்வொர்க் குறித்துக் கலால் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

விமான நிலையம் அருகே பதுங்கிய கும்பல் ; மராட்டியத்தில் இருந்து கோவைக்கு போதைப் பொருள்கள் கடத்தியது அம்பலம் - போலீசார் பரபரப்பு தகவல் !

விமான நிலையம் அருகே பதுங்கிய கும்பல் ; மராட்டியத்தில் இருந்து கோவைக்கு போதைப் பொருள்கள் கடத்தியது அம்பலம் - போலீசார் பரபரப்பு தகவல் !

 விமான நிலையம் அருகே பதுங்கிய கும்பல் ; மராட்டியத்தில் இருந்து கோவைக்கு போதைப் பொருள்கள் கடத்தியது அம்பலம் - போலீசார் பரபரப்பு தகவல் !

கோவையில் போதைப் பொருள்கள் கடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை மராட்டியத்தில் இருந்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருட்களை தடுக்க போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் பின்புறத்தில் சிலர் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக பீளமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்பொழுது அங்கு 7 பேர் கொண்ட கும்பல் இருந்தது. உடனே போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் கோவை சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த சஞ்சய், மதன் பாலாஜி, ஜெகத் ஹரி, வெள்ளலூரை சேர்ந்த அபுபக்கர் சித்திக், நாகராஜன், செட்டிபாளையத்தைச் சேர்ந்த சூர்யா, பீளமேடைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பது தெரியவந்தது. அத்துடன் அவர்கள் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வரும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சா, 1,708 போதை மாத்திரைகள் மற்றும் ரூபாய் 21,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

இது குறித்து போலீசார் கூறும் போது;

கைதான 7 பேரும் மராட்டிய மாநிலத்துக்குச் சென்று அங்கு போதை மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி கோவைக்கு கடத்தி வந்து உள்ளனர். அதாவது ஒரு மாத்திரை ரூபாய் 30 க்கு வாங்கி இங்கு ரூபாய் 300 க்கு விற்பனை செய்து வந்து உள்ளனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளின் மதிப்பு ரூபாய் 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

புதன், 26 ஆகஸ்ட், 2026

 "ஹோட்டல் சமையல் கூடத்தில் 24 மணி நேரக் கள்ளச் மது விற்பனை" - கோவையில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

"ஹோட்டல் சமையல் கூடத்தில் 24 மணி நேரக் கள்ளச் மது விற்பனை" - கோவையில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

 "ஹோட்டல் சமையல் கூடத்தில் 24 மணி நேரக் கள்ளச் மது விற்பனை" - கோவையில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

தடாகம் சாலையில் சட்டவிரோத மது விற்பனை: நடவடிக்கை எடுக்கக் பொதுமக்கள் வலியுறுத்தல்!

 கோவை, தடாகம் சாலை K.N.G. புதூர் பிரிவு பகுதியில் உள்ள பிரபல உணவகத்தின் சமையல் அறையிலேயே வைத்து 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

கோவை, தடாகம் சாலை K.N.G. புதூர் பிரிவில் 'அபி ஹோட்டல்' என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இதன் பின்புறம் உள்ள சமையல் கூடத்தைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

​அருகிலேயே அரசு டாஸ்மாக் கடை அமைந்து இருந்தாலும், டாஸ்மாக் நேரம் முடிந்த பிறகும் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு இங்கு மதுபானங்கள் தாராளமாக விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்து உள்ளன.

ஹோட்டல் சமையல் அறைக்குள் வைத்து மதுபானங்களைப் பாட்டில்களில் ஊற்றிக் கொடுப்பதும், வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு விற்பனை செய்வதும் தொடர்பான காட்சிகளை உணவகத்திற்கு வந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவிட்டு உள்ளார்.

​அந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தையே சட்டவிரோத மது விற்பனைக் கூடமாக மாற்றி 24 மணி நேரமும் கள்ளச் சந்தையில் மது விற்று வரும் உணவக உரிமையாளர் மீது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

"மலையில் இருந்து நழுவினால் மரணம்!" ; கட்டாஞ்சி மலைப் பாதையில் அத்துமீறும் இளைஞர்கள் - அச்சுறுத்தலில் மனித உயிரும் வனவிலங்குகளும்!

"மலையில் இருந்து நழுவினால் மரணம்!" ; கட்டாஞ்சி மலைப் பாதையில் அத்துமீறும் இளைஞர்கள் - அச்சுறுத்தலில் மனித உயிரும் வனவிலங்குகளும்!

 "மலையில் இருந்து நழுவினால் மரணம்!" ; கட்டாஞ்சி மலைப் பாதையில் அத்துமீறும் இளைஞர்கள் - அச்சுறுத்தலில் மனித உயிரும் வனவிலங்குகளும்!

பெரியநாயக்கன்பாளையம் - காரமடை எல்லைகளில் திறந்தவெளி மதுக்கூடம்: ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தப் பொதுமக்கள் கோரிக்கை! 

​கோவை, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை காவல் எல்லைகளுக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலைப் பாதையில், இளைஞர்கள் சிலர் பொறுப்பின்றி அத்துமீறி ஏறி மது அருந்துவதும், பிளாஸ்டிக் கழிவுகளை வீசிச் செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.

சுற்றுலா என்ற பெயரில் இந்த மலைப் பாதைக்கு வரும் இளைஞர்கள் சிலர், வனப்பகுதியின் ஆபத்தை உணராமல் மலை மீது ஏறி மது அருந்துகின்றனர்.

​மேலும், தாங்கள் கொண்டு வரும் உணவுப் பொட்டலங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கழிவுகளை அங்கேயே வீசிச் சென்று சுற்றப்புறத்தைச் சீரழித்து வருகின்றனர்.

​சமீபத்தில், மது அருந்திய இளைஞர் ஒருவர் மலைப்பாதையின் மிகக் செங்குத்தான, ஆபத்தான விளிம்பில் நினைவிழந்த நிலையில் படுத்துக் கிடக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. 

சற்று நிலைதடுமாறி உருண்டாலும் பல நூறு அடிகள் பள்ளத்தில் விழுந்து உயிர் பிரியும் பேராபத்து அதில் நிலவுகிறது.

 போதையில் பாதை அறியாமல் மலை விளிம்பில் கிடப்பது எந்த நேரத்திலும் பெரும் அசம்பாவிதத்திற்கு வழிவகுக்கும்.

 இளைஞர்கள் வீசிச் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மது பாட்டில்கள் வனவிலங்குகளின் வாழ்விடத்தைப் பாதிப்பதோடு, அவற்றின் உயிருக்கும் ஆபத்தாக முடிகிறது.

இதுபோன்ற சட்டவிரோத மற்றும் ஆபத்தான செயல்கள் அசம்பாவிதத்தில் முடிவதற்குள், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை காவல்துறையினரும் வனத்துறையினரும் இணைந்து கட்டாஞ்சி மலைப்பாதையில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் கூட்டு ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

​அதே நேரத்தில், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இயற்கை வளங்களையும் தங்கள் சொந்த உயிரையும் கருத்தில் கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

கோவையில் "கணவன், மனைவி நடத்திய போதை மாத்திரை நெட்வொர்க்" ; 1400 போதை மாத்திரைகள் பறிமுதல் - காவல்துறை நடவடிக்கை!

கோவையில் "கணவன், மனைவி நடத்திய போதை மாத்திரை நெட்வொர்க்" ; 1400 போதை மாத்திரைகள் பறிமுதல் - காவல்துறை நடவடிக்கை!

 கோவையில் "கணவன், மனைவி நடத்திய போதை மாத்திரை நெட்வொர்க்" ; 1400 போதை மாத்திரைகள் பறிமுதல் - காவல்துறை நடவடிக்கை!

 கோவை, கோவைபுதூர் பகுதியில் கணவன், மனைவி இணைந்து நடத்தி வந்த சட்டவிரோத போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை நெட்வொர்க்கைக் குனியமுத்தூர் போலீஸார் அதிரடியாகக் கண்டுபிடித்து, தம்பதியைக் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் மற்றும் கடத்தலைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல் துறை சார்பில் தீவிர வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தன் தொடர்ச்சியாக, கோவை குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோவைபுதூர் பகுதியில் போலிஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாகச் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த இருவரைப் பிடித்துப் போலீஸார் தீவிர விசாரணை மற்றும் சோதனை நடத்தினர்.

போலீஸார் நடத்திய சோதனையில், அவர்கள் சட்டவிரோதமாகப் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. அவர்களிடம் இருந்து 1,400 போதை மாத்திரைகள் 300 கிராம் கஞ்சா ஆகியவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீஸாரின் விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் கோவைபுதூர் தொற்றாயன் கோவில் வீதியைச் சேர்ந்த சல்மான் கான் (26) மற்றும் அவரது மனைவி பாத்திமா சஹானா (20) என்பது தெரியவந்தது.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களைக் குறிவைத்து இவர்கள் இந்த போதை மாத்திர விற்பனையில் ஈடுபட்டு வந்தனரா ? இவர்களுக்குப் பின்னணியில் இருக்கும் போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் யார் ? என்பது குறித்து குனியமுத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவர் பரிந்துரை இன்றி ஊக்க மருந்து விற்பனை - கோவை ஜிம் பயிற்சியாளர் உட்பட இருவர் கைது!

மருத்துவர் பரிந்துரை இன்றி ஊக்க மருந்து விற்பனை - கோவை ஜிம் பயிற்சியாளர் உட்பட இருவர் கைது!

 மருத்துவர் பரிந்துரை இன்றி ஊக்க மருந்து விற்பனை - கோவை ஜிம் பயிற்சியாளர் உட்பட இருவர் கைது!

சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 1747 ஊக்க மருந்து பாட்டில்கள்,மோட்டார் பைக் பறிமுதல். 


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் மருத்துவர் பரிந்துரை இன்றி மருத்துவ உபயோகத்திற்கான மருந்துகள் கடத்தி வரப்படுவதாக கோவை எஸ்.பி பவன்குமாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி பாஸ்கரன் உத்தரவின் பேரில் விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், எஸ்.ஐ சரத்குமார் ஆகியோர் அடங்கிய போலீசார் மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் அறிவொளி நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த மோட்டார மோட்டார் பைக்கை நிறுத்தி சோதனையிட்டதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் அவர்கள் கோவை ஹோப்ஸ் காலேஜ் பகுதியை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் அருண் பார்த்திபன்(28) என்பதும்,அதே பகுதியை சேர்ந்த டூவீலர் மெக்கானிக் ரத்தின ஹரி(27) என்பதும்,உடற்பயிற்சி செய்தால் சோர்வு ஏற்படாமல் இருக்க பயன்படுத்தப்படும் ஊக்க மருந்து பயன்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.

மேலும், மருத்துவ உபயோகத்திற்காக ஆபரேஷன் தியேட்டரில் ரத்த இழப்பு ஏற்பட்டால் அதனை தடுக்க பயன்படுத்தும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரையின்றி டெல்லியில் இருந்து ஆன்லைன் மூலம் பெற்று கோவை மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உடற்பயிற்சி நிலையங்களுக்கு ஆர்டரின் பேரில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இந்த மருந்துகளை உடற்பயிற்சியின் போது உடல் சோர்வை போக்கும் மருந்துகளாக பயன்படுத்த விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. 

இதனை தொடர்ந்து இருவர் மீதும் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டப்படியும்,பிஎன்எஸ் சட்டப்படியும் வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும்,அவர்களிடம் இருந்து 10 மில்லி அளவுள்ள 1747 ஊக்க மருந்து பாட்டில்களையும்,கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் பைக்கையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஊக்க மருந்துகளின் மதிப்பு தோராயமாக ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

பின்னர்,அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இச்சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் கூறுகையில்

 "உடற்பயிற்சி நிலையம் நடத்துபவர்கள்,உடற்பயிற்சி கூடத்திற்கு செல்பவர்கள் முறையான மருத்துவர் பரிந்துரையின்றி இதுபோன்ற ஊக்க மருந்துகளை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். இச்செயல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவை எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளதோடு, தற்போது பிடிபட்டு உள்ள மருந்துகளின் மருந்து நிறுவனங்கள் குறித்தும், பிடிபட்ட செல்போன்களில் உள்ள தொடர்பு எண்களையும் கைப்பற்றி அதனையும் முழுமையாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்து உள்ளார்.


ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

 "ஒடிசாவில் இருந்து பேருந்தில் வந்த கஞ்சா சாக்லேட்டுகள்" ; கோவையில் வடமாநில ஆசாமிகள் கைது : போலீஸ் அதிரடி!

"ஒடிசாவில் இருந்து பேருந்தில் வந்த கஞ்சா சாக்லேட்டுகள்" ; கோவையில் வடமாநில ஆசாமிகள் கைது : போலீஸ் அதிரடி!

 "ஒடிசாவில் இருந்து பேருந்தில் வந்த கஞ்சா சாக்லேட்டுகள்" ; கோவையில் வடமாநில ஆசாமிகள் கைது : போலீஸ் அதிரடி!

3.170 கிலோ கஞ்சா மற்றும் 1 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்!

 கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்களின் பயன்பாடு மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில், கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளைப் பறிமுதல் செய்த கருமத்தம்பட்டி போலீஸார், ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் உட்பட 3 பேரைக் கைது செய்தனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் K. ரெட்டி, உத்தரவின் பேரில், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

​தன் தொடர்ச்சியாக, கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரிச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா பயன்படுத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது ராகேஷ் (22) என்பவரிடம் நடத்திய சோதனையில் 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ராகேஷிடம் நடத்திய விசாரணையில், கரிச்சிபாளையம் பகுதியில் பாதுகாவலராகப் பணியாற்றிய போது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முன்னா சௌத்ரி என்பவரிடம் கஞ்சா வாங்கியது தெரியவந்தது.

​இதனைத் தொடர்ந்து, முன்னா சௌத்ரியுடன் ஒரே அறையில் தங்கி இருந்த ஒடிசாவைச் சேர்ந்த லிபுன் நாக் (29) என்பவரைப் பிடித்துச் சோதனையிட்டதில், அவரிடம் இருந்து 1.150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சொந்த ஊரான ஒடிசாவிற்குச் சென்று திரும்பிய முன்னா சௌத்ரி, இக்கஞ்சாவைத் தன்னிடம் கொடுத்துச் சென்றதாக லிபுன் நாக் தெரிவித்தார்.

உடனடியாகச் சைபர் கிரைம் தொழில்நுட்ப உதவியுடன் முன்னா சௌத்ரியின் இருப்பிடத்தைக் போலீஸார் கண்காணித்தனர். ஒடிசாவில் இருந்து கோவை வழியாகத் திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டு இருந்த தனியார் பேருந்தை மடக்கிச் சோதனையிட்டனர்.

​அப்போது பேருந்தில் பயணித்த முன்னா சௌத்ரியைப் (27) பிடித்துச் சோதனையிட்ட போது, அவரது பையில் இருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் 1 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் மொத்தம் 3.170 கிலோ கஞ்சா மற்றும் 1 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கில் தொடர்புடைய 3 நபர்களும் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என மாவட்ட காவல்துறை எச்சரித்து உள்ளது.

சனி, 22 ஆகஸ்ட், 2026

 "ஒடிசாவில் இருந்து லாரியில் வந்த 181 கிலோ கஞ்சா" ; கோவை அருகே பதுக்கிய தேனி ஆசாமி கைது - போலீஸ் அதிரடி!

"ஒடிசாவில் இருந்து லாரியில் வந்த 181 கிலோ கஞ்சா" ; கோவை அருகே பதுக்கிய தேனி ஆசாமி கைது - போலீஸ் அதிரடி!

 "ஒடிசாவில் இருந்து லாரியில் வந்த 181 கிலோ கஞ்சா" ; கோவை அருகே பதுக்கிய தேனி ஆசாமி கைது - போலீஸ் அதிரடி!

 கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில், ₹181 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட தேனியைச் சேர்ந்த நபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் K. ரெட்டி, உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கப் போலிஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், கருமத்தம்பட்டி பகுதி தனியார் கல்லூரி சாலை அருகே சட்ட விரோதமாகக் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாகப் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

 சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அங்குச் சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த நபரையும் அவரது உடைமைகளையும் சோதனையிட்டனர்.

சோதனையில், அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 181 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அவர் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி (38) என்பது தெரியவந்தது.

இவர் ஒடிசா மாநிலத்திற்கு நேரில் சென்று கஞ்சாவைக் கொள்முதல் செய்து உள்ளார். அங்கு இருந்து கேரளா நோக்கிச் சென்ற சரக்கு லாரி மூலம் கஞ்சாவைக் கடத்தி வந்து, கருமத்தம்பட்டி பகுதியில் இறக்கி உள்ளார். அங்கிருந்து தேனி, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பி விற்பனை செய்யத் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் அம்பலமானது.


இதை அடுத்துச் சிரஞ்சீவியைக் கைது செய்த போலீஸார், அவர் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் (NDPS Act) கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். 


மேலும், இதில் தொடர்புடைய லாரி மற்றும் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 "போதைப்பொருள் இல்லாத கோவை" - மாணவர் அறைகளில் 400 போலீஸார் அதிரடி வேட்டை: 50 இடங்களில் ஒரே நேரத்தில் தீவிர சோதனை!

"போதைப்பொருள் இல்லாத கோவை" - மாணவர் அறைகளில் 400 போலீஸார் அதிரடி வேட்டை: 50 இடங்களில் ஒரே நேரத்தில் தீவிர சோதனை!

 "போதைப்பொருள் இல்லாத கோவை" - மாணவர் அறைகளில் 400 போலீஸார் அதிரடி வேட்டை: 50 இடங்களில் ஒரே நேரத்தில் தீவிர சோதனை!

கோவில்பாளையம், சூலூர், செட்டிபாளையத்தில் கஞ்சா வழக்குகள் பதிவு - 14 வாகனங்கள் பறிமுதல்!
 கோவை மாவட்டத்தைப் “போதைப்பொருள் இல்லாத கோவை” மண்டலமாக மாற்றும் நோக்கில், கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள தனியார் விடுதிகள் மற்றும் அறைகளில் 400-க்கும் மேற்பட்ட போலீஸார் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் K. ரெட்டி, உத்தரவின் பேரில், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, கோவில்பாளையம், சூலூர் மற்றும் செட்டிபாளையம் ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 30 கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், கல்லூரிகளுக்கு வெளியே தனியாக அறைகள் மற்றும் வீடுகள் எடுத்துத் தங்கி உள்ள 50-க்கும் மேற்பட்ட இடங்களைக் கண்டறிந்து போலீஸார் ஒரே நேரத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையானது 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் (ADSP), பேரூர், கருமத்தம்பட்டி மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் (DSP) தலைமையில் நடைபெற்றது. 10 காவல் ஆய்வாளர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுமார் 400 காவல்துறையினர் இச்சோதனையில் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டனர்.

மாணவர் அறைகளில் நடத்தப்பட்ட இந்த தீவிர சோதனையின் முடிவில்,

கஞ்சா வைத்திருந்ததாக 1 வழக்கும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்து இருந்ததாக 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

மேலும், முறையான ஆவணங்கள் இன்றிப் பயன்படுத்தப்பட்ட 14 வாகனங்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கல்லூரி மாணவர்கள் இடையே போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையைத் தடுக்கும் பொருட்டு, கல்லூரிகளைச் சுற்றி உள்ள பகுதிகள் மற்றும் தனியார் விடுதிகளில் இதுபோன்ற திடீர் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட காவல்துறை எச்சரித்து உள்ளது.

மேலும், போதைப் பொருள் விற்பனை அல்லது பயன்பாடு குறித்துப் பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரியவந்தால், கோவை மாவட்ட காவல்துறையின் “நிழல்” (NIZHAL) QR Code மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ எண்கள் மூலமாகவோ உடனடியாகத் தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் முற்றிலும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்தி வந்த ரூபாய் 6 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் - இரண்டு பேரை பிடித்து காவல்துறை விசாரணை !

பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்தி வந்த ரூபாய் 6 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் - இரண்டு பேரை பிடித்து காவல்துறை விசாரணை !

பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்தி வந்த ரூபாய் 6 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் - இரண்டு பேரை பிடித்து காவல்துறை விசாரணை !

பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்தி வந்த ரூபாய் 6 லட்சம் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில் போதை பொருட்கள் கோவைக்கு கடத்தப்படுவதை தடுக்க தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு குனியமுத்தூரில் சர்புதீன் என்பவரை செல்வபுரம் போலீசார் கைது செய்தனர். அப்பொழுது அவர் பெங்களூரில் இருந்து கோவைக்கு போதை மாத்திரைகளை கடத்தி வந்ததாக தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து நடத்தி வந்த விசாரணையில் கோவையைச் சேர்ந்த இரண்டு பேர் போதை மாத்திரைகளை வாங்க பெங்களூருக்கு சென்றது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று காலையில் குனியமுத்தூர் பகுதியில் தனிப்படையினர் வாகன தணிக்கை செய்தனர். அந்த வழியாக வந்த இரண்டு பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர்கள் மணிகண்டன், சக்திவேல் என்பதும் பெங்களூரில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வருவதும் தெரியவந்தது.

உடனே அவர்கள் வைத்து இருந்த பையை காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்பொழுது அதற்குள் ஏராளமான போதை மாத்திரைகள் கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனே அவர்களிடம் இருந்து 2,100 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூபாய் 6 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அவர்கள் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து காவல்துறையினர் கூறும் போது;

பெங்களூரில் போதை மாத்திரைகளை விற்க ஒரு கும்பல் உள்ளது. அவர்களுக்கு ஆன்லைனில் பணம் அனுப்பினால், குறிப்பிட்ட இடத்தில் போதை மாத்திரைகளை வைத்து விட்டு பணம் அனுப்பிய நபருக்கு தகவல் தெரிவித்து விடுவார்கள். அந்த நபரும் அங்கு சென்று அதை எடுத்துச் சென்று விடுகிறார். இதற்காக whatsapp, instagramல் பேசிக்கொள்கிறார்கள். அதையும் நாங்கள் கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்றால், போதை மாத்திரைகளை மட்டுமே கைப்பற்ற முடிகிறது. அதில் தொடர்புடைய நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை, விரைவில் அந்த கும்பல் தலைவனை கைது செய்து விடுவோம் என்றும் தெரிவித்தனர்.

சனி, 15 ஆகஸ்ட், 2026

"பாகுபலி பாணியில் பேருந்தை தள்ளிய போதை ஆசாமிகள்" - கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நடந்த வேடிக்கை விபரீதம் !!!

"பாகுபலி பாணியில் பேருந்தை தள்ளிய போதை ஆசாமிகள்" - கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நடந்த வேடிக்கை விபரீதம் !!!

 "பாகுபலி பாணியில் பேருந்தை தள்ளிய போதை ஆசாமிகள்" - கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நடந்த வேடிக்கை விபரீதம் !!!

பின்னோக்கி நகர்ந்த அரசு பேருந்தை தள்ளுவது போல் அட்ராசிட்டி: சமூக வலைதளங்களில் கலக்கி வரும் நகைச்சுவை வீடியோ !!!

 கோவை, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நிறுத்துவதற்காகப் பின்னோக்கி (Reverse) எடுக்கப்பட்ட அரசுப் பேருந்தை, மதுபோதையில் இருந்த நபர்கள் ஓருவர் தள்ளுவது போன்று செய்த வேடிக்கையான செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.

கோவை, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எப்போதும் பயணிகள் மற்றும் பேருந்துகளின் நடமாட்டத்தால் பரபரப்பாகக் காணப்படும் இடமாகும்.

 இந்நிலையில், பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் ஒருவர் பேருந்தை முறைப்படி நிறுத்துவதற்காகப் பின்னோக்கி (Reverse) மெதுவாக இயக்கி உள்ளார்.

​அப்போது அங்கு கடுமையான மதுபோதையில் சுற்றிக் கொண்டு இருந்த நபர், பேருந்து பின்னோக்கி வருவதைக் கண்டு, அவர் அவர் தான் அந்தப் பேருந்தை பின்னோக்கித் தள்ளுவது போலப் பேருந்தின் முன்புறம் கைகளை வைத்துத் தள்ளத் தொடங்கி உள்ளார்.

பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் பின்னோக்கிச் சென்று கொண்டு இருக்க, அதனை மது போதை ஆசாமி தனது முழு பலத்தையும் கொடுத்துப் பேருந்தை தள்ளுவது போல நடித்த காட்சி அங்கு இருந்த பயணி ஒருவருக்குப் வேடிக்கையாகத் தெரிந்து உள்ளது.

 உடனடியாக அவர் தனது செல்போனில் இந்தக் காட்சியை வீடியோவாகப் பதிவு செய்தார்.

​தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவித் தீயாகப் பரவி வருகிறது. 

வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், "சிங்காநல்லூர் பாகுபலி!", "தம்பி தள்ளுனதுனால தான் வண்டியே ரிவர்ஸ்ல போச்சு!", "மது போதையில் வந்த மாஸ் சிந்தனை" எனப் பல்வேறு நகைச் சுவையான கருத்துக்களைப் பதிவிட்டு அந்த நபர்களைக் கலாய்த்து வருகின்றனர்.

​இருப்பினும், நகர்ந்து கொண்டு இருக்கும் கனரக பேருந்தின் முன்புறம் போதையில் இப்படிச் செல்வது ஆபத்தானது என்றும், அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தப்பியது அதிர்ஷ்டமே என்றும் வாகன ஓட்டிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

கோவை அரசு மருத்துவமனை அருகே கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யும் மாற்றுத்திறனாளி... பகலிலேயே அதிக விலைக்கு வாங்கிச் செல்லும் மதுப்பிரியர்கள் - வைரலாகும் வீடியோ!

கோவை அரசு மருத்துவமனை அருகே கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யும் மாற்றுத்திறனாளி... பகலிலேயே அதிக விலைக்கு வாங்கிச் செல்லும் மதுப்பிரியர்கள் - வைரலாகும் வீடியோ!

கோவை அரசு மருத்துவமனை அருகே கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யும் மாற்றுத்திறனாளி... பகலிலேயே அதிக விலைக்கு வாங்கிச் செல்லும் மதுப்பிரியர்கள் - வைரலாகும் வீடியோ!


ரயில் நிலையம் மற்றும் மருத்துவமனை பகுதியில் டாஸ்மாக் இல்லாததைப் பயன்படுத்திக் கைவரிசை; போலிஸார் அதிரடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

கோவை அரசு மருத்துவமனை மற்றும் ரயில் நிலையம் அருகே பகல் நேரத்திலேயே கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்து வரும் மாற்றுத்திறனாளி ஒருவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை மாநகரில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கோவை ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைப் பகுதிகளில் இயங்கி வந்த அரசு டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.

​இந்நிலையில், இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மாற்றுத்திறனாளி ஒருவர், அப்பகுதியில் ரகசியமாகக் கள்ளச் சந்தையில் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்துப் பகல் நேரத்திலேயே விற்பனை செய்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

வெளியூர்களில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் ரயில் நிலையம் வழியே பயணிக்கும் மதுப்பிரியர்களைக் குறிவைத்து, அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதல் விலைக்கு இவர் மது பாட்டில்களைத் தாராளமாக விற்று வந்து உள்ளார்.

​இதனை அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது செல்போனில் ரகசியமாகப் படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டு உள்ளார். 

அந்த வீடியோவில், மாற்றுத்திறனாளி நபர் மிகத் துணிச்சலாகப் பகல் நேரத்திலேயே கள்ளச் சந்தையில் மது பாட்டில்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும், மதுப்பிரியர்கள் அவரிடம் வாங்கிச் செல்வதும் அப்பட்டமாகப் பதிவாகி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வரும் இந்த  வீடியோ பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அரசு மருத்துவமனை மற்றும் ரயில் நிலையம் போன்ற மிக முக்கியப் பொது இடங்களில் சட்ட விரோதமாகக் கள்ளச் சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது மாநகரக் காவல் துறையினர் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அரசுப் பள்ளியில் அதிர்ச்சி : வகுப்பறையில் மாணவிகள் மது அருந்திய வீடியோ வைரல் - தலைமை ஆசிரியர் அதிரடி இடமாற்றம் !!!

அரசுப் பள்ளியில் அதிர்ச்சி : வகுப்பறையில் மாணவிகள் மது அருந்திய வீடியோ வைரல் - தலைமை ஆசிரியர் அதிரடி இடமாற்றம் !!!

 அரசுப் பள்ளியில் அதிர்ச்சி : வகுப்பறையில் மாணவிகள் மது அருந்திய வீடியோ வைரல் - தலைமை ஆசிரியர் அதிரடி இடமாற்றம் !!!

போதை சாக்லேட் விநியோகிக்கப்படுவதாகவும் புகார்: பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி !!!

​ கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள அரசுப் பள்ளியில், சீருடையில் இருந்த மாணவிகள் வகுப்பறையிலேயே மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

தக்கலை அரசுப் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் இரு மாணவிகள் வகுப்பறையில் வைத்து மது அருந்தியதாகப் புகார் எழுந்தது. ஆனால், அப்போது பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் அளித்த அந்த மாணவிகள், "இந்தச் சம்பவம் பள்ளியில் நடக்கவில்லை, வீட்டில் தான் நடந்தது" என்று கடிதம் எழுதிக் கொடுத்து உள்ளனர். அதனை நம்பி பள்ளி நிர்வாகமும் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் வழக்கை முடித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த மாணவிகள் பள்ளிச் சீருடையுடன் வகுப்பறையிலேயே மது அருந்தும் வீடியோ காட்சிகள் நேற்று இரவு சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாகப் பரவியது. இதன் மூலம் இந்தச் சம்பவம் பள்ளி வளாகத்திற்குள் தான் நடைபெற்றது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டது.

​பள்ளி வளாகத்திற்குள் நடந்த இந்தச் சம்பவத்தை முறையாக விசாரிக்காமல் மறைக்க முயன்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்டக் கல்வி அலுவலர் உடனடி நடவடிக்கை எடுத்து உள்ளார். 

அதன்படி, சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

இதுமட்டுமின்றி, அதே பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவன் சக மாணவர்களுக்குப் 'போதை சாக்லேட்' விநியோகம் செய்து வருவதாகவும் கூடுதல் தகவல்கள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

​பள்ளிப் பருவத்திலேயே மாணவ, மாணவிகள் இதுபோன்று போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதும், வகுப்பறையிலேயே மது அருந்தும் கலாச்சாரம் ஊடுருவி இருப்பதும் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


 போதைப் பொருட்களைப் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்யும் கும்பல் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோவை அருகே தோட்டத்தில் ரகசியமாகக் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது !!!

கோவை அருகே தோட்டத்தில் ரகசியமாகக் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது !!!

 கோவை அருகே தோட்டத்தில் ரகசியமாகக் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது !!!

கோவை மாவட்டம், சிறுமுகை அருகே தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் ரகசியமாகக் கஞ்சா செடிகளைப் பயிரிட்டு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரைச் சிறுமுகை போலீஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடு மற்றும் சட்டவிரோத விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன் K. ரெட்டி உத்தரவின் பேரில் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிறுமுகை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராமபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் கஞ்சா செடிகள் ரகசியமாக வளர்க்கப்பட்டு வருவதாகச் சிறுமுகை காவல் ஆய்வாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் குறிப்பிட்ட தோட்டத்திற்குச் சென்று அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

போலீஸார் நடத்திய தீவிர சோதனையில், அந்தத் தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த சிறுமுகையைச் சேர்ந்த பாபு (63) என்பவர், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் தோட்டத்தில் 2 கஞ்சா செடிகளைப் பயிரிட்டு வளர்த்து வந்தது அப்பட்டமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அங்கிருந்த 2 கஞ்சா செடிகளையும் போலீஸார் வேரோடு பிடுங்கிப் பறிமுதல் செய்தனர்.

மேலும், பாபு மற்றும் அவரது கூட்டாளியான அன்னூர் ஆலாங்குட்டை பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (39) ஆகிய இருவரிடம் இருந்தும் விற்பனைக்காக வைத்து இருந்த மொத்தம் 250 கிராம் கஞ்சாவையும் போலீஸார் கைப்பற்றினர்.

இச்சம்பவம் குறித்துச் சிறுமுகை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், பாபு மற்றும் யுவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாகக் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பயிரிடுதல், வைத்திருத்தல், விற்பனை செய்தல் மற்றும் கடத்துதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் எனக் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன் K. ரெட்டி எச்சரித்து உள்ளார்.