போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

கே.பி.ஆர் நிறுவனம் முறைகேடாகச் சொத்து பறிப்பு!" - கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 76 வயது மூதாட்டி தர்ணா - உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பட்டா ரத்து செய்யப்பட்டதாகக் புகார்!

கே.பி.ஆர் நிறுவனம் முறைகேடாகச் சொத்து பறிப்பு!" - கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 76 வயது மூதாட்டி தர்ணா - உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பட்டா ரத்து செய்யப்பட்டதாகக் புகார்!

 "கே.பி.ஆர் நிறுவனம் முறைகேடாகச் சொத்து பறிப்பு!" - கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 76 வயது மூதாட்டி தர்ணா - உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பட்டா ரத்து செய்யப்பட்டதாகக் புகார்!

 கோவை, கே.பி.ஆர் நிறுவனம் தனது குடும்பத்தின் பூர்வீகச் சொத்தை முறைகேடாக வாங்கியதாகக் குற்றம்சாட்டி, 76 வயதான மூதாட்டி ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பகுதியைச் சேர்ந்த 76 வயது மூதாட்டி ஆர்.மணி என்பவருக்குச் சொந்தமான பூர்வீகச் சொத்து தொடர்பாக, தனியார் கேபிஆர் நிறுவனத்திற்கும் அவருக்கும் இடையே தகராறு நிலவி வருகிறது.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், உயர்நீதிமன்றம் இதுகுறித்து முடிவெடுக்க 8 வார கால அவகாசம் வழங்கி இருந்தது.

நீதிமன்றம் அவகாசம் அளித்து இருந்த நிலையில், தனது தரப்பு ஆவணங்கள் மற்றும் விளக்கங்களைப் பெறாமலேயே, மறுநாளே மணி பெயரில் இருந்த பூர்வீகச் சொத்திற்கான பட்டாவை கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் (RTO) திடீரென ரத்து செய்ததாக மூதாட்டி குற்றம்சாட்டினார்.

கே.பி.ஆர் நிறுவனம் தனது பூர்வீகச் சொத்தை முறைகேடாகக் கைப்பற்றிக் கொண்டதாகவும், அதற்கு அதிகாரிகளும் துணை போயுள்ளதாகவும் அவர் பகிரங்கமாகப் புகாரளித்தார்.

பட்டா ரத்து உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்ட சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் மூதாட்டி தர்ணாவில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து, அங்கு இருந்த போலீஸார் மூதாட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்று நேரில் மனு அளிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

"பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை" ;  கோவையில் தனியார் பேருந்தை வழிமறித்துப் பெற்றோர் போராட்டம்!

"பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை" ; கோவையில் தனியார் பேருந்தை வழிமறித்துப் பெற்றோர் போராட்டம்!

 "பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை" ;  கோவையில் தனியார் பேருந்தை வழிமறித்துப் பெற்றோர் போராட்டம்!

 பள்ளி மாணவிகளிடம் கைவரிசை காட்டிய கிளீனரை மடக்கிப் பிடித்த மக்கள்!

​ கோவை, கருமத்தம்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் பேருந்தின் கிளீனர் ஒருவர், பள்ளிக்குச் செல்லும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து தினசரி நூற்றுக் கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.

​இந்நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி பேருந்தில் தினமும் பயணிக்கும் பள்ளிச் சிறுமி ஒருவரிடம், அந்தப் பேருந்தின் கிளீனர் தொடர்ந்து தவறான எண்ணத்துடன் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்துத் தனது பெற்றோரிடம் அழுது கொண்டே விவரத்தைக் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், இன்று வழக்கம் போல வந்த அந்தத் தனியார் பள்ளி பேருந்தை அரசூர் பகுதியில் திடீரென வழிமறித்து நிறுத்தினர்.

​தொடர்ந்து, பள்ளிச் சிறுமியிடம் அசிங்கமாக நடந்துகொண்ட அந்தப் பேருந்து கிளீனரிடம் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சரமாரியாகக் கேள்விகள் கேட்டுப் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருமத்தம்பட்டி காவல் துறையினர், ஆவேசத்தில் இருந்த பொதுமக்களைச் சமாதானப்படுத்தினர்.

​தொடர்ந்து, பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளி பேருந்து கிளீனரைப் போலீஸார் உடனடியாகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இச்சம்பவம் கருமத்தம்பட்டி பகுதியில் தாய்மார்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வியாழன், 20 ஆகஸ்ட், 2026

 "முதல்வர் விஜய் இதைச் செய்தால் வரலாற்றில் இடம்பிடிப்பார்!" ; கோவையில் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் உருக்கமான வேண்டுகோள்!

"முதல்வர் விஜய் இதைச் செய்தால் வரலாற்றில் இடம்பிடிப்பார்!" ; கோவையில் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் உருக்கமான வேண்டுகோள்!

 "முதல்வர் விஜய் இதைச் செய்தால் வரலாற்றில் இடம்பிடிப்பார்!" ; கோவையில் கருப்பு பேட்ச் அணிந்து செவிலியர்கள் உருக்கமான வேண்டுகோள்!

"இது அரசுக்கு எதிரான போராட்டமல்ல; எங்கள் உரிமைக் குரல்": MRB பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் கோவை GH-ல் 2-வது நாள் போராட்டம் தீவிரம்!

 கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (CMCH) வளாகத்தில் 2-வது நாளாக செவிலியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து, தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி உருக்கமான வேண்டுகோளுடன் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது,

"நாங்கள் முன்னெடுக்கும் இந்த போராட்டம் தமிழக அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல; பல ஆண்டுகளாக நாங்கள் சந்தித்து வரும் கோரிக்கைகளையும் மன வருத்தங்களையும் அரசின் கவனத்திற்கு நேர்மையாகக் கொண்டு செல்லவே இந்த அமைதிப் போராட்டத்தை நடத்துகிறோம்" எனக் குறிப்பிட்டனர்.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய (MRB) மூலம் தேர்வு செய்யப்பட்டுத் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களை உடனடியாகக் காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு நிகராகத் தமிழகத்திலும் செவிலியர்களை 'செவிலியர் அலுவலர்' (Nursing Officer) என அதிகாரப் பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய முறையை முற்றிலும் கைவிட்டு, அரசு மருத்துவமனைகளில் புதிய நிரந்தரப் பணி இடங்களை மட்டுமே உருவாக்க வேண்டும்.

சமீபத்தில் தமிழக அரசு அறிவித்து உள்ள 2,500 புதிய செவிலியர் பணி இடங்களை வரவேற்பதாகத் தெரிவித்த செவிலியர்கள், தங்களது இந்த நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

தொடர்ந்து பேசிய செவிலியர்கள், "எங்களது நியாயமான கோரிக்கைகளை முதல்வர் விஜய் நிறைவேற்றித் தந்தால், தமிழகச் செவிலியர்களின் வரலாற்றில் என்றென்றும் நீங்காத இடம் பிடிக்கும் முதல்வராக அவர் திகழ்வார். இதைத் தமிழகச் செவிலியர்களாகிய நாங்கள் உயிருள்ளவரை மறக்க மாட்டோம்" என மிக உருக்கமாக வேண்டுகோள் விடுத்தனர்.

தங்களது நியாயமான தேவைகளுக்கு அரசு விரைவில் நல்ல தீர்வு வழங்கும் என்ற நம்பிக்கையுடன், தொடர்ந்து அமைதி வழியில் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகச் செவிலியர்கள் தெரிவித்தனர்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

உணவில் புழு இருந்ததாக புகார் – கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !!!

உணவில் புழு இருந்ததாக புகார் – கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !!!

உணவில் புழு இருந்ததாக புகார் – கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !!!

கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக கூறி மாணவர்கள் இரவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அதில் புழு இருந்ததாக சில மாணவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிருப்தியடைந்த மாணவர்கள், உணவின் தரம் மற்றும் விடுதி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பி, இரவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து, மாணவர்களின் புகாரைத் தொடர்ந்து உணவின் தரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கல்லூரிக்கு வந்து விடுதி மற்றும் உணவு தயாரிக்கப்படும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவு தயாரிக்கும் முறை, சுகாதார நிலை மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, கல்லூரிக்கு நாளை மதியம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

இரவு உணவில் புழு கிடந்ததாகக் குற்றச்சாட்டு ; கற்பகம் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் - பரபரப்பு !!!

இரவு உணவில் புழு கிடந்ததாகக் குற்றச்சாட்டு ; கற்பகம் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் - பரபரப்பு !!!

 இரவு உணவில் புழு கிடந்ததாகக் குற்றச்சாட்டு ; கற்பகம் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் - பரபரப்பு !!!

உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை: நள்ளிரவில் திரண்ட மாணவர்களால் பதற்றம் !!!

 கோவை, ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழக விடுதி உணவகத்தில் வழங்கப்பட்ட இரவு உணவில் புழுக்கள் கிடந்ததாகக் கூறி, மாணவர்கள் நள்ளிரவில் திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில ஈடுப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை - பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி பகுதியில் இயங்கி வரும் கற்பகம் கல்லூரியில் ஆயிரக் கணக்கான மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கிப் பயின்று வருகின்றனர்.

 இந்நிலையில், நேற்று இரவு விடுதி உணவகத்தில் மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டு உள்ளது. அப்போது, வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் மிதந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், இதுகுறித்து விடுதி காப்பாளர் மற்றும் உணவகப் பொறுப்பாளர்களிடம் உடனடியாகப் புகார் தெரிவித்து உள்ளனர்.

 ஆனால், நிர்வாகத் தரப்பில் உரியப் பதிலோ, நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த நூற்றுக் கணக்கான மாணவர்கள் விடுதி வளாகத்திற்குள் ஒன்று திரண்டு திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 "தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற உணவை வழங்கி மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம்" என முழக்கங்களை எழுப்பியதால் நள்ளிரவில் அங்குப் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

சம்பவ இடத்திற்கு வந்த பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். "உணவின் தரத்தை உயர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

 இருப்பினும், மாணவர்களின் நலன் கருதி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்த உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சனி, 25 ஜூலை, 2026

கோவை நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ரயில் மறியல் முயற்சி – 20"க்கும் மேற்பட்டோர் கைது..

கோவை நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ரயில் மறியல் முயற்சி – 20"க்கும் மேற்பட்டோர் கைது..

கோவை நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ரயில் மறியல் முயற்சி – 20"க்கும் மேற்பட்டோர் கைது...

நீட் விலக்கு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் தனி மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தல்..

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், டெல்லியில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியதாகக் கூறி அதனை கண்டித்தும், திராவிடத் தமிழர் கட்சியினர் கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை எஸ்.பி.ஐ வங்கி பகுதியில் இருந்து ரயில் நிலையத்தை நோக்கி பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள், "நீட்டை ரத்து செய்", "ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்", "டெல்லியில் போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதலை கண்டிக்கிறோம்" உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

ரயில் நிலையத்தை நோக்கி முன்னேறிய போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இருப்பினும், போராட்டக்காரர்கள் தடுப்புகளை தள்ளிவிட்டு ரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றதால், அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய திராவிடத் தமிழர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதி தமிழன் கூறியதாவது ;-

நீட் தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், அதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், 2026-ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு தொடர்பாக தனி மசோதாவை நிறைவேற்றி, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

நீட் விலக்கு தொடர்பாக ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், திராவிடத் தமிழர் கட்சியின் போராட்டங்கள் மேலும் தீவிரமடையும் என்றும், மாநிலம் முழுவதும் அடுத்தகட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் கட்சியினர் எச்சரிக்கை விடுத்தனர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா... கோவையில் மாணவர்கள் பட்டாசு வெடித்து மெகா கொண்டாட்டம்: ஜீவா இல்லத்தில் கம்யூனிஸ்ட் அமைப்பினர் இனிப்பு வழங்கி ஆரவாரம் !!!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா... கோவையில் மாணவர்கள் பட்டாசு வெடித்து மெகா கொண்டாட்டம்: ஜீவா இல்லத்தில் கம்யூனிஸ்ட் அமைப்பினர் இனிப்பு வழங்கி ஆரவாரம் !!!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா... கோவையில் மாணவர்கள் பட்டாசு வெடித்து மெகா கொண்டாட்டம்: ஜீவா இல்லத்தில் கம்யூனிஸ்ட் அமைப்பினர் இனிப்பு வழங்கி ஆரவாரம் !!!

கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ஜீவா இல்லத்தில் CJP கட்சிக்கு ஆதரவாக  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், அமைச்சர் ராஜினாமா செயத்தை தொடர்ந்து பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட்தேர்வு முறைகேடுகளுக்கு காரணமான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. அவர்களுக்கு ஆதரவாக கோவையில் இந்திய கம்யூ கட்சி அலுவலகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் இன்று ராஜினாமா செய்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுட்ட மாணவர்கள்  கொண்டாட்களில் ஈடுபட்டனர். 

பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மாணவர்கள் உற்சாகமாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு வந்த போலீசார் அனுமதி இன்றி இடையூறு ஏற்படுத்தும் விதமாக இப்படி செயல்படக்கூடாது என அறிவுறுத்திய நிலையில் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து இனிப்புகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டனர்.

புதன், 15 ஜூலை, 2026

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலத்தை கையகப்படுத்துவதா ? போர்க்கொடி தூக்கிய கிராம மக்கள் !!!

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலத்தை கையகப்படுத்துவதா ? போர்க்கொடி தூக்கிய கிராம மக்கள் !!!

 மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலத்தை கையகப்படுத்துவதா ? போர்க்கொடி தூக்கிய கிராம மக்கள் !!!

மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், அதிகாரிகளை திரும்பி செல்ல வலியுறுத்தி, மரத்தின் மண்ணெண்ணெய் கேன்களுடன் ஏறி மக்கள் தற்கொலை மிரட்டலும் விடுத்ததால் பதற்றம் உருவானது.

மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 2009-ம் ஆண்டு திட்ட வரைவு உருவாக்கப்பட்டது. அதன்படி, தற்போதைய 7,500 அடி நீளமுள்ள விமான ஓடுதளத்தை 12,500 அடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள 144 பேரின் வீடுகள், நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கான ஆணை, கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, 2022ஆம் ஆண்டு அதற்கான மதிப்பீடு தொகை நிர்ணயிக்கப்பட்டது.

அந்த தொகை அனைவருக்கும் வழங்கப்பட்டதாக தெரிகிறது. அதே சமயத்தில், மறு குடியமர்வு மற்றும் மறுவாழ்வு தொடர்பான எந்தவிதமான முறையான திட்டமும் உருவாக்கப்படவில்லை.

இதனை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் சின்ன உடைப்பு கிராம மக்கள் அண்மையில் மனுத்தாக்கல் செய்து இருந்தனர். அதில், "மறு குடியமர்வு, மறுவாழ்வு வசதிகளை செய்யாமல் நிலம் கையகப்படுத்துதல் செல்லாது என உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர்கள் தங்கள் இடத்தில் இருந்து காலி செய்ய வேண்டும் என்றும், தவறினால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக, வரும் 20 ஆம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்குவதற்காக, மதுரை தெற்கு தாசில்தார் வளர்மதி தலைமையில் அதிகாரிகள் சின்ன உடைப்பு கிராமத்திற்கு சென்றனர்.

இதனை அறிந்த கிராம மககள், அங்கு திரண்டு வந்து அதிகாரிகளை ஊருக்குள் விடாமல் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கிராமத்திற்கு உள்ள செல்லும் பாதைகளில் மரக்கட்டைகளை போட்டு அடைத்து வைத்தனர்.

மேலும், அதிகாரிகளை திரும்பிச் செல்ல வலியுறுத்தி, மண்ணெண்ணெய் கேன்களுடன் மரத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வருவதாக கூறி அங்கு இருந்து திரும்பிச் சென்றனர்.

செவ்வாய், 14 ஜூலை, 2026

"பூச்சி, புழுக்களுடன் சாப்பாடு!" ; கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி விடுதி மாணவிகள் போராட்டம் - 10 நாட்களாகத் தொடரும் அவலம் என ஆவேசம் !!!

"பூச்சி, புழுக்களுடன் சாப்பாடு!" ; கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி விடுதி மாணவிகள் போராட்டம் - 10 நாட்களாகத் தொடரும் அவலம் என ஆவேசம் !!!

 "பூச்சி, புழுக்களுடன் சாப்பாடு!" ; கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி விடுதி மாணவிகள் போராட்டம் - 10 நாட்களாகத் தொடரும் அவலம் என ஆவேசம் !!!

புகார் அளித்தும் கண்டுகொள்ளாத கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியம்; மாணவர்களின் ஆரோக்கியத்தில் விளையாடுவதாகப் பெற்றோர் கொதிப்பு !!!

கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் விடுதியில் வழங்கப்பட்ட உணவில் பூச்சி, புழுக்கள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த மாணவிகள், தரமான உணவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவிகள் கூறுகையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக விடுதியில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதுடன், பலமுறை உணவில் பூச்சி, புழுக்கள் காணப்பட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதனால் சரிவர உணவு உண்ண முடியாமல் அவதிப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்தனர்.

மேலும், விடுதி மாணவிகளுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவு வழங்க கல்லூரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உணவின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திங்கள், 13 ஜூலை, 2026

கலெக்டரேட் வாயிலில் மாற்றுத்திறனாளி பெண் தர்ணா : "மீடியா வந்தாத் தான் சாமானியன் கண்ணுக்குத் தெரிவானா ?" - கோவை அரசு மருத்துவமனை அலட்சியத்திற்கு எதிராகக் கொதிப்பு !!!

கலெக்டரேட் வாயிலில் மாற்றுத்திறனாளி பெண் தர்ணா : "மீடியா வந்தாத் தான் சாமானியன் கண்ணுக்குத் தெரிவானா ?" - கோவை அரசு மருத்துவமனை அலட்சியத்திற்கு எதிராகக் கொதிப்பு !!!

 கலெக்டரேட் வாயிலில் மாற்றுத்திறனாளி பெண் தர்ணா : "மீடியா வந்தாத் தான் சாமானியன் கண்ணுக்குத் தெரிவானா ?" - கோவை அரசு மருத்துவமனை அலட்சியத்திற்கு எதிராகக் கொதிப்பு !!!

ரயில்வே பாஸ் கையெழுத்துக்காக 2 மாதமாய் அலைக்கழிப்பு; உணவு கூட சாப்பிடாமல் நீதி கேட்டுப் போராடிய தனலட்சுமி!

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. 

ரயில்வே பாஸ் வழங்க கையெழுத்திடாமல் கடந்த 2 மாதங்களாக கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழித்து வருவதாகக் கூறி மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். 

கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த தனலட்சுமி (52) என்ற மாற்றுத்திறனாளி பெண் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வே துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் இலவச பயண அட்டையை பயன்படுத்தி பயணம் செய்து வந்து உள்ளார். 

வாழ்நாள் பாஸ் என வழங்கப்பட்ட ரயில்வே பாஸ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காலாவதியானதாக தெரிகிறது. இதையடுத்து அதனை புதுப்பிக்க அவர் விண்ணப்பித்த நிலையில் அதற்கான ஒப்புதலை பெறுவதற்கு கோவை அரசு மருத்துவமனை மருத்துவரை அணுகுமாறு ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த 2 மாதங்களாக கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்று கையெழுத்து வாங்க அழைந்து வருவதாகவும் இதுவரையும் கையெழுத்து போடாமல் தன்னை அலைக்கழித்து வருவதாக கூறி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார். 

அப்போது திடீரென ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் வரும் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளை மோசமாக நடத்துவதாகக் கூறி கண்ணீர் கலங்கினார். மேலும் தமிழ்நாடு முதல்வர் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோசம் எழுப்பினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அதனிடையே காவலர்களிடம் சாலையில் அமர்ந்து ஊடகம் வந்தால் தான் சாமானிய மக்கள் கண்ணுக்கு தெரிவார்களா என ஆதங்கம் கொண்டார்.

இது குறித்து பேசிய தனலட்சுமி கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக கையெழுத்து வாங்குதற்காம அழைந்து வருகிறேன் என்றும் ஆனால் தன்னை விரட்டுகிறார்கள் என்றார். முதலமைச்சர் என்ன செய்கிறார், மாற்றுதிறனாளிக்கே நியாயம் கிடைக்கில்லை என்றால், ஒன்றும் தெரியாத அப்பாவி மக்கள் என்ன செய்வார்கள் என கேள்வி எழுப்பினார். 

எனது விண்ணப்பத்திற்கு கையெழுத்து வழங்க வேண்டும், முதலில் அரசு மருத்துவமனையில் மக்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அரசு ஊழியர் என்றால் எங்களை மதிக்க கூடாதா? உணவு கூட சாப்பிடாமல் அழைந்துகொண்டிருக்கிறேன் என்றார்.

வியாழன், 9 ஜூலை, 2026

அதிகாரிகளின் ‘அலட்சிய’ 6 ஆண்டு கால மக்கள் போராட்டம்: கோவை அருகே பேரூராட்சியை அதிரடியாக முற்றுகையிட்ட பொதுமக்கள் !!!

அதிகாரிகளின் ‘அலட்சிய’ 6 ஆண்டு கால மக்கள் போராட்டம்: கோவை அருகே பேரூராட்சியை அதிரடியாக முற்றுகையிட்ட பொதுமக்கள் !!!

 அதிகாரிகளின் ‘அலட்சிய’ 6 ஆண்டு கால மக்கள் போராட்டம்: கோவை அருகே பேரூராட்சியை அதிரடியாக முற்றுகையிட்ட பொதுமக்கள் !!!

கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 4 வது வார்டு பகவான் கார்டன் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக போராடியும் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 4 வது வார்டு பகுதியில் 2016ம் ஆண்டு பகவான் கார்டன் உருவாக்கப்பட்டு அங்கு சுமார் 70 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாலை இதுவரை தார் சாலை போடப்படாமல் மண் சாலையாக உள்ளது. இதன் காரணமாக மழை காலங்களில் சேறும் சகதியுமாக மாறி நடந்து கூட செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. மேலும் பள்ளி வாகனங்கள் சேற்றில் சிக்கிக் கொள்வதால் அப்பகுதிக்கு வருவதில்லை.

இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு முதல் பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் தனிப்பிரிவு என அனைத்து இடங்களில் தார் சாலை அமைத்துத் தரக்கோரி மனு அளித்திருந்தனர். கடந்த 6 ஆண்டுகளாக போராடியும் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தனிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் 20 நாட்களுக்கு சாலை அமைப்பதற்கான ஆனை வழங்கப்பட்டு 2 மாதங்களில் தார் சாலை அமைத்துத் தருவதாக செயல் அலுவலர் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து தெரிவித்த பொதுமக்கள் 6 ஆண்டுகள் காத்திருந்து விட்டோம் இன்னும் 2 மாதங்கள் காத்திருப்போம் அப்போதும் சாலை அமைக்காவிட்டால் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.


செவ்வாய், 30 ஜூன், 2026

விடிய, விடிய டாஸ்மாக்... வேலைக்கு போகாத ஆண்கள்” ; கோவையில் கடையை மூடக்கோரி பெண்கள் அதிரடி சாலை மறியல் - குடிமகனுடன் கைகலப்பானதால் பரபரப்பு !!!

விடிய, விடிய டாஸ்மாக்... வேலைக்கு போகாத ஆண்கள்” ; கோவையில் கடையை மூடக்கோரி பெண்கள் அதிரடி சாலை மறியல் - குடிமகனுடன் கைகலப்பானதால் பரபரப்பு !!!

 விடிய, விடிய டாஸ்மாக்... வேலைக்கு போகாத ஆண்கள்” ; கோவையில் கடையை மூடக்கோரி பெண்கள் அதிரடி சாலை மறியல் - குடிமகனுடன் கைகலப்பானதால் பரபரப்பு !!!

​2 மணி நேரமாகியும் வராத அதிகாரிகள் – தொண்டாமுத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு !!!

​ “விடிய விடிய மது விற்பனை நடப்பதால் ஆண்கள் யாரும் வேலைக்குப் போவதில்லை; பெண்கள், பள்ளி குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை” என ஆவேசம் அடைந்த கோவை புத்தூர் பகுதி பெண்கள், இன்று காலை திடீரெனத் திரண்டு டாஸ்மாக் கடையை மூடக்கோரி சாலை மறியலில் குதித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த புத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே அரசு டாஸ்மாக் கடை (கடை எண்: 2240) இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையால் தங்களுக்கு நிம்மதியே இல்லை என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். இங்கு விடியற்காலை முதலே சட்டவிரோதமாக மது விற்பனை ஜோராக நடப்பதால், ஆண்கள் இரவு பகல் பாராமல் மது குடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். மேலும், இந்த டாஸ்மாக் கடையைக் கடந்து தான் பெண்கள் வேலைக்கும், பள்ளி குழந்தைகள் கல்வி நிறுவனங்களுக்கும் செல்ல வேண்டி உள்ளது. ஆனால், அங்கு எப்போதும் கூட்டமாக நிற்கும் குடிமகன்களின் அநாகரிகத் தொல்லையால் நிம்மதியாகச் சாலையைக் கடக்க முடியாத அவல நிலை நீடிக்கிறது.

​கடந்த சில தினங்களாக இந்த கடையில் இருந்து மதுபானங்களை ஊருக்குள் கடத்தி வந்து சட்டவிரோதமாக விற்பனை செய்வதும் அதிகரித்து உள்ளது. கடந்த ஆட்சியின் போதே இந்த கடையை அகற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டு இருந்தது. தற்போதைய ஆட்சியிலாவது, அகற்றப்படும் கடைகளின் பட்டியலில் இந்த புத்தூர் டாஸ்மாக் கடை இடம்பெறும் எனப் பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியதால் ஆத்திரம் அடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், இன்று காலை தொண்டாமுத்தூர் - போளுவாம்பட்டி செல்லும் முக்கியச் சாலையில் திடீரெனத் திரண்டு மறியலில் குதித்தனர்.

​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பொதுமக்களைக் கலைந்து போகச் சொன்னதால் இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வாக்குவாதம் முற்றி ஒருகட்டத்தில், அந்த வழியாகச் சாலையைக் கடக்க முயன்ற போதை ஆசாமி ஒருவருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையே திடீரெனக் கைகலப்பு ஏற்பட்டது. இருதரப்பும் மோதிக் கொண்டதால் அந்த இடமே ரணகளமாக மாறியது.

​இதனைத் தொடர்ந்து போலீஸார் அதிரடியாகச் செயல்பட்டு, கைகலப்பில் ஈடுபட்டவர்களைப் பலவந்தமாக விலக்கி விட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

போராட்டம் தொடங்கி சுமார் 2 மணி நேரம் கடந்தும், இது குறித்து போலீஸார் மற்றும் பொதுமக்கள் தகவல் கொடுத்தும் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அல்லது வட்டாட்சியர் என எந்தவொரு வருவாய்த்துறை அதிகாரியும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

“டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் ஓயாது!” எனப் பெண்கள் உறுதியாகச் சாலையில் அமர்ந்து இருப்பதால், புத்தூர் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இது வெறும் டிரைலர் தான்...த.வெ.க அரசுக்கு எதிரான போராட்டம் குறித்து தி.மு.க முன்னாள் அமைச்சர் சேகர் பாபு ஆவேசம் !!!

இது வெறும் டிரைலர் தான்...த.வெ.க அரசுக்கு எதிரான போராட்டம் குறித்து தி.மு.க முன்னாள் அமைச்சர் சேகர் பாபு ஆவேசம் !!!

 இது வெறும் டிரைலர் தான்...த.வெ.க அரசுக்கு எதிரான போராட்டம் குறித்து தி.மு.க முன்னாள் அமைச்சர் சேகர் பாபு ஆவேசம் !!!

தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவா தி.மு.க போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது ? என்று கேள்வி எழுப்பிய தி.மு.க முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க வின் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இன்று திட்டமிடப்பட்டு இருந்தது. போராட்டத்திற்காக மேடை அமைத்த போது போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி காவல் துறையினர் அவர்களை குண்டுகட்டாக கைது செய்தனர்.

இந்த நிலையில் சென்னை புரசைவாக்கத்தில், முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் த.வெ.க அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டு தி.மு.க வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, த.வெ.க அமைச்சர் சரத்குமார் பதவி விலக வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி த.வெ.க அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தி.மு.க மாணவர் அணி செயலாளர் வீரமணி ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாலையில் அமர்ந்தபடி த.வெ.க அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி கோஷமிட்டனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, 

"சென்னையில் தி.மு.க சார்பில் ஒரே இடமாக எழும்பூரில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். இதுகுறித்து முறையாக மனு அளிக்கப்பட்டது. ஆனால் அங்கே போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவா தி.மு.க போராட்ட களத்தில் ஈடுபட்டு வருகிறது? நியாயமான கோரிக்கைகளை வற்புறுத்த, கேளா காதுகளாக இருக்கும் அரசாங்கத்தின் செவிகளுக்கு சென்று சேர்வதற்கு கவனத்தை ஈர்ப்பதற்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இது வெறும் டிரைலர் தான். ஒரு இடத்தில் நடைபெற இருந்த போராட்டத்தை மூன்று இடங்களுக்கு மாற்றப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கைது நடவடிக்கையில் ஈடுபடுவது எங்கள் இயக்கத்திற்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும். அடிக்க அடிக்க எழும் பந்தாக, அறுக்க அறுக்க மணக்கும் சந்தனமாக, தீட்ட தீட்ட ஜொலிக்கும் வைரமாக தி.மு.க இருக்கும். நெருக்கடியையே சிரித்த முகத்துடன் 24 வயதில் சந்தித்தவர் எங்கள் தலைவர் மு.க ஸ்டாலின். அவரது படை சிறைக்கு அஞ்சாது.

கொடும் சிறைச்சாலை என்றாலும் சரி அல்லது காவல்துறையின் தடியடி பிரயோகமாக இருந்தாலும் சரி சிரித்த முகத்துடன் சிறைச்செல்ல தயார். தமிழக அரசு எங்களை எப்படி அணுகுகிறதோ அதேபோலான அணுகுமுறை தான் எங்களிடமும் இருக்கும். இந்தப் போராட்டம் தொடரும் தொடரும் தொடரும்" என்றார்.

திங்கள், 22 ஜூன், 2026

ஜூன் 26-இல் தமிழகம் முழுவதும் மகப்பேறு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் : வெளியானது அறிவிப்பு !!!

ஜூன் 26-இல் தமிழகம் முழுவதும் மகப்பேறு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் : வெளியானது அறிவிப்பு !!!

 ஜூன் 26-இல் தமிழகம் முழுவதும் மகப்பேறு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் : வெளியானது அறிவிப்பு !!!

தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி மகப்பேறு மருத்துவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தமிழக மகளிர் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் அமலாதேவி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், 

"மதுரை மாவட்டம் மேலூரிலும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலும் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்கள் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தனர்.

இந்த இயற்கை மரணங்களை திட்டமிட்ட படுகொலையாக சித்தரித்து, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது அவர்களின் உறவினர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சிவகாசியில் இரண்டாவது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண், அதிக ரத்தம் உறைதல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார். இதனை மருத்துவர்களின் கவனக்குறைவு என்று கூறுவதை ஏற்க முடியாது.

மேலூரில் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி மருத்துவமனை மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்புப் பணியில் போலீஸார் இருந்தும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.

தமிழகத்தில் பெண் மகப்பேறு மருத்துவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். எனவே, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை சொத்துக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அவசர உதவிக்கு போலீஸ், சட்ட நிபுணர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ளச் சிறப்புக்குழு அமைக்கப்பட வேண்டும்.

பிரசவத்தின் போதும், சிகிச்சையின் போதும் நிகழும் மரணங்களை வைத்து பணம் பறிக்கும் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

மரணம் ஏற்படும் பட்சத்தில், வீண் பதற்றத்தைத் தணிக்க உடனடியாக உடற்கூறாய்வு (Post-mortem) செய்ய போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தத் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மகப்பேறு மருத்துவர்கள் வரும் ஜூன் 26-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர்.

அன்றைய தினம் வெளிநோயாளிகள் பிரிவு (OP) சிகிச்சையும் முழுமையாகப் புறக்கணிக்கப்படும். அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு மற்றும் உள்நோயாளிகள் பிரிவு (IP) ஆகியவை வழக்கம் போல் இயங்கும்.

தமிழகம் முழுவதும் சுமார் 4,500 மருத்துவர்கள் இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் பாதுகாப்பு விஷயத்தில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்தப் போராட்டம் அடுத்த கட்டமாக தீவிரமடையும்" என டாக்டர் அமலாதேவி தெரிவித்தார்.

ஞாயிறு, 21 ஜூன், 2026

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி அதிரடி கண்டன ஆர்ப்பாட்டம் !!!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி அதிரடி கண்டன ஆர்ப்பாட்டம் !!!

 திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி அதிரடி கண்டன ஆர்ப்பாட்டம் !!!

கையில் விளக்கேந்தி போராட்டம் ; நூற்றுக் கணக்கானோர் திரண்டு முழக்கம் !!!

 இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கக் கோரியும், தமிழக அரசை வலியுறுத்தியும், மேலும் 10 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்தும் கோவை காந்தி பார்க் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து மக்கள் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் சூர்யா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு அழைப்பாளராக நேரில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

 இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளிலும், ஆன்மீக மரபுகளிலும் தமிழக அரசு தேவையின்றித் தலையிடுவதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் பாரம்பரிய முறைப்படி தீபம் ஏற்றுவதற்கு எவ்விதத் தடையுமின்றி அனுமதி வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மட்டுமன்றி, தமிழகத்தில் நிலவும் பல்வேறு உள்கட்டமைப்பு பிரச்சினைகள், ஆன்மீகக் கோரிக்கைகள் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்துத் தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்தப் போராட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள், மகளிர் அணியைச் சேர்ந்த தாய்மார்கள் என 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

வெள்ளி, 19 ஜூன், 2026

தமிழ்நாடு அரசை கண்டித்து சாட்டையால் அடித்துக் கொண்ட சேலம் விவசாயிகள் !!!

தமிழ்நாடு அரசை கண்டித்து சாட்டையால் அடித்துக் கொண்ட சேலம் விவசாயிகள் !!!

 தமிழ்நாடு அரசை கண்டித்து சாட்டையால் அடித்துக் கொண்ட சேலம் விவசாயிகள் !!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து, விவசாயிகள் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில், இன்று மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது வழக்கம்.

அதன்படி இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வருகை தந்தனர். அதனைத்தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், வேளாண் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திடீரென கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், மாநில அளவில் உள்ள விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக ரத்து செய்ய முன்வர வேண்டும், பகுதி பகுதியாக ரத்து என்று அறிவித்து உள்ளது விவசாயிகளுக்கு வேதனை ஏற்படுத்தி உள்ளது என்று கூறி, 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பி வெளியேறினர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், முழங்காலிட்டு சாட்டையால் அடித்துக் கொண்டு தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சேலம் மாவட்ட செயலாளர் வேலன் கூறுகையில், 

"அனைவருக்கும் சோறு போடும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வஞ்சனை செய்கிறது. ரூபாய் 75 ஆயிரம் வரையிலான கடன் மட்டும் முழுமையாக தள்ளுபடி என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பு ஏற்புடையதல்ல.

தேர்தல் காலத்தில் விஜய் கூறியபடி கடன் தள்ளுபடியை முழுமையாக வழங்க வேண்டும். எங்களது இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம், மேலும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்து உள்ளோம். மாற்றம் வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியில் அமர வைத்ததற்கு கிடைத்த பரிசு தான் இந்த விவசாயிகள் புறக்கணிப்பு. எங்களின் நிலையை எண்ணி நாங்களே எங்களை சாட்டையால் அடித்துக் கொள்கிறோம். இதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை” என்று தெரிவித்தார்.

4 மணி நேரம் தொடர் மின்வெட்டு: சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல் !!!

4 மணி நேரம் தொடர் மின்வெட்டு: சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல் !!!

 4 மணி நேரம் தொடர் மின்வெட்டு: சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல் !!!

கிழக்கு கடற்கரை சாலை மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர், நாகூர் மீரான் நகர் பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பகுதியில் தினந்தோறும் 4 மணிநேரம் மட்டுமே மின்சாரம் இருப்பதாகவும், மற்ற நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகவும் மக்கள் வேதனையுடன் குற்றம்சாட்டி வந்தனர். நாகூர் மீரான் நகர் பகுதியில் ஏற்படும் தொடர் மின்வெட்டால் வீட்டில் இருக்கும் கை குழந்தைகள் உறக்கம் இல்லாமலும், குளிர்சாதனை பெட்டியில் வைத்து இருக்கும் உணவுப் பொருட்கள் அனைத்தும் கெட்டுப் போவதாகவும், தொடர் மின்வெட்டால் கடுமையாக அவதிப்படுவதாகவும் கூறினர்.

அதேபோல், மின்வெட்டு ஏற்படும் நேரத்தில் கோவளத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டால், மின்வாரிய ஊழியர்கள் செல்போன் அழைப்பை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சூழலில், நேற்று மாலை 4 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இரவு ஆகியும் மின்சாரம் வராததால் ஆத்திரம் அடைந்த கானத்தூர் நாகூர் மீரான் நகர் பகுதி மக்கள் ஏராளமானோர், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கானத்தூர் ஆய்வாளர் சந்துரு தலைமையிலான போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுனர். போலீசார் மின்சாரம் வருவதற்கு வழிவகை செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

தொடர்ந்து, கானத்தூர் நாகூர் மீரான் நகர் பகுதி மக்களுக்கு தொடர்ந்து ஏற்படும் மின்வெட்டை சரிசெய்ய வேண்டும் எனவும், தங்களுக்கு மின்வெட்டு இல்லாமல் சீரான மின் விநியோகம் நிரந்தரமாக வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தொடர் மின்வெட்டால் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதன் காரணமாக, சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதேபோல், தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம், சாம்ராஜ் நகர், கரகேஸ்வரி நகர், வி.ஜி.பி பொன் நகர், மணவாளன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு தொடர்ந்து 4 மணிநேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும், எந்த விதமான உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அப்பகுதியில் ​மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனால் தாம்பரம், வேளச்சேரி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

மின் வெட்டு குறித்து அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பேசுகையில்,

 ”இந்த பகுதியின் எம்.எல்.ஏவை வரச் சொல்லுங்கள். நாங்கள் 5 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறோம். மின்வாரிய அலுவலத்தை தொடர்பு கொண்டால் முறையாக பதில் இல்லை.

​கடந்த 15 நாட்களாகத் தொடரும் மின்வெட்டுப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். சம்பவ இடத்திற்கு மின்வாரிய அதிகாரிகளும், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நேரில் வந்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.

சாலை மறியல் குறித்து ​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அனுப்பி வைத்தனர்.

பறக்கும் போராட்டம்: 'தமிழகம் அமைதிப் பூங்காவா ? பெண்களுக்கு எதிரான குற்றக் கூடாரமா ?' - கோவையில் ‘தவ்ஹீத் ஜமாஅத்’ போராட்டம் !!!

பறக்கும் போராட்டம்: 'தமிழகம் அமைதிப் பூங்காவா ? பெண்களுக்கு எதிரான குற்றக் கூடாரமா ?' - கோவையில் ‘தவ்ஹீத் ஜமாஅத்’ போராட்டம் !!!

பறக்கும் போராட்டம்: 'தமிழகம் அமைதிப் பூங்காவா ? பெண்களுக்கு எதிரான குற்றக் கூடாரமா ?' - கோவையில் ‘தவ்ஹீத் ஜமாஅத்’ போராட்டம் !!!

தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்து வருவதாகவும் கூறிப்அதனை கண்டிக்கும் விதமாக கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன பதாகைகளை ஏந்தி தமிழக அரசை கண்டித்தும் தமிழகஅரசு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பப்பட்டன.

இது குறித்து பேட்டி அளித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்அத் மாநிலச் செயலாளர் முகமதுஒலி, பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தமிழகம் என்பது ஒரு காலத்தில் அமைதி பூங்காவாக இருந்து வந்ததாகவும் ஆனால் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சிறுவர் சிறுமிகளுக்காக எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாக தெரிவித்தார். 

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை படுகொலை, கும்மிடிப்பூண்டி மூன்று வயது குழந்தை பாலியல் வனப்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டது ஆகியவற்றை குறிப்பிட்ட அவர் இது போன்ற செய்திகள் தொடர்ந்து வருவதாகவும் சில நேரங்களில் வழிபாட்டுத் தலங்களிலேயே பெண்கள் செல்வதற்கு அச்சப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். 

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு பெண்கள் செல்லும் பொழுது பாலியல் ரீதியாக தொல்லைப்படுத்தப்படுவதாக தெரிவித்தார். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர் நாளுக்கு நாள் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் இப்படியே சென்றால் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்காது என்று தெரிவித்தார் இது குறித்து மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு அரசு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அமைத்தது ஆனால் சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தில் பெண் காவலரே மூன்று பேரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டார் சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படை கொண்டுவரப்பட்டாலும் அதில் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றார் 

நாங்கள் இப்பொழுது தான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம் எங்களுக்கு சில நாட்கள் தேவைப்படும் என்று இந்த விஷயத்தில் கூறினால் இவரே அப்பாவி குழந்தைகள் உயிர் பறிபோவதற்கு வாய்ப்பாக இருப்பார் என்றும் தெரிவித்தார்.

புதன், 17 ஜூன், 2026

கோவை மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க தனி குழு அமைக்க வேண்டும் - கருப்பு சட்டையுடன் அ.தி.மு.க கவுன்சிலர்கள் கோஷம் !!!

கோவை மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க தனி குழு அமைக்க வேண்டும் - கருப்பு சட்டையுடன் அ.தி.மு.க கவுன்சிலர்கள் கோஷம் !!!

 கோவை மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க தனி குழு அமைக்க வேண்டும் - கருப்பு சட்டையுடன் அ.தி.மு.க கவுன்சிலர்கள் கோஷம் !!!

கோவை மாநகராட்சி கூட்டம் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் இன்று காலை நடந்தது 

அப்போது கூட்டத்திற்கு வந்த அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன் ரமேஷ் ஆகியோர் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். 

கூட்டம் நடைபெற்ற இடம் உண்டு மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற வாசகம் அடங்கிய அட்டையுடன் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கவுன்சிலர் பிரபாகரன் கூறும்போது ; 

கோவை மாநகராட்சியில் மேயராக தி.மு.க உள்ளது. மாநகராட்சியில் சாலை அமைக்கும் பணியில் ஊழல் நடந்து உள்ளது. ஏற்கனவே போடப்பட்ட சாலை மீது மீண்டும் மீண்டும் சாலைகளை போட்டு உள்ளனர். 

இதனால் மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று குப்பை அல்லும் பணியிலும் முறைகேடு நடக்கிறது. குப்பைகள் தள்ளப்படாத நிலையில் அதை அள்ளியது போல் காட்டுகிறார்கள். 

குப்பை கிடங்கு பிரச்சனையிலும் முறையீடு நடந்து உள்ளது. எனவே கோவை மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க தனி குழு அமைக்க வேண்டும். இந்த மாநகராட்சியை கலைக்க வேண்டும். என்று அவர் கூறினார். தொடர்ந்து கலைத்திடு கலைத்திடு மாநகராட்சியை கலைத்திடு அமைத்திடு அமைத்திடு விசாரணை குழு அமைத்திடு என்று இருவரும் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு அவர்கள் மாநகராட்சி கூட்டத்திற்கு சென்றனர்.

ஞாயிறு, 7 ஜூன், 2026

இரவில் தொடரும் மின் தடை ; சென்னை ஈ.சி.ஆர் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் ஸ்தம்பித்த போக்குவரத்து !!!

இரவில் தொடரும் மின் தடை ; சென்னை ஈ.சி.ஆர் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் ஸ்தம்பித்த போக்குவரத்து !!!

 இரவில் தொடரும் மின் தடை ; சென்னை ஈ.சி.ஆர் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் ஸ்தம்பித்த போக்குவரத்து !!!

முட்டுக்காடு பகுதியில் இரவில் சுமார் 5 மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஈ.சி.ஆர் சாலையில் அமர்ந்து சென்னைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஈ.சி.ஆர் சாலை முட்டுக்காடு பகுதியில் இரவு 8 மணி அளவில் மின்சாரம் தடைப்பட்ட நிலையில், சுமார் 3 மணி நேரமாகியும் மீண்டும் மின்சாரம் அளிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கொசுக்கடியில் நீண்ட நேரமாக அவதி அடைந்தனர். இதனை அடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, மின்வாரிய அதிகாரிகள் இது எங்களுடைய பிரச்சனை இல்லை என கூறி உள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட அப்பகுதிவாசிகள் இரவு 11 மணி அளவில் ஈ.சி.ஆர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், புதுச்சேரி - சென்னை பிரதான சாலையிலும், சென்னை - புதுச்சேரி பிரதான சாலையிலும் வாகனங்கள் வெகுதூரத்திற்கு அணிவகுத்து நின்றன. சாலையின் இருப்புறமும் கூட்டம் கூட்டமாக மக்கள் நின்ற நிலையில், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தின் காரணமாக, ஈ.சி.ஆர் சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காவல்துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாள்தோறும் இதே நிலை நீடிப்பதாகவும், மின் தடையால் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் என ஒட்டுமொத்த மக்களும் கடுமையாக அவதிப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து கேள்வி கேட்டால், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்து, திருப்போரூர் த.வெ.க எம்.எல்.ஏ விஜயராஜ் சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், மின்வாரிய அதிகாரிகளை செல்ஃபோனில் தொடர்பு கொண்டு பேசினார்.

இதனை அடுத்து, காவல் துறை அதிகாரிகள் மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று அப்பகுதிக்கு மின்சாரம் அளிக்க அறிவுறுத்திய நிலையில், நள்ளிரவு 1 மணி அளவில் மின்சாரம் வழங்கப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 5 மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பான சூழல்நிலை நிலவியது.