நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 செப்டம்பர், 2026

கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சாட்சிகளை மிரட்டிய அண்ணன், தம்பி கைது - ஜாமீன் ரத்து !

கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சாட்சிகளை மிரட்டிய அண்ணன், தம்பி கைது - ஜாமீன் ரத்து !

கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சாட்சிகளை மிரட்டிய அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி பகுதியைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம் இவருடைய அண்ணன் ராம்குமார் இவர்கள் மீது 2024 ஆம் ஆண்டு கிணத்துக்கடவு பகுதியில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாரி செல்வம், ராம்குமாரும் ஜாமீனில் உள்ளனர். ஆனாலும் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்கள்.

நேற்று மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. நீதிபதி சுந்தரராஜன் வழக்கை விசாரித்தார். அப்பொழுது அரசம்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீதேவி, கௌஷிக் ஆகியோர் சாட்சி சொல்ல வந்தனர். மாரிசெல்வமும், ராம்குமாரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

அவர்கள் இரண்டு பேரும் திடீரென நீதிபதி முன்னிலையில் சைகை மூலம் சாட்சிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். அதை கவனித்த நீதிபதி சுந்தரராஜ், அவர்கள் இரண்டு பேரின் ஜாமீனை வழக்கு விசாரணை முடியும் வரை ரத்து செய்தார். மேலும் அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க பிடிவாதம் பிறப்பித்து உத்தரவிட்டார். இதனால் மாரிச்செல்வம், ராம்குமார் ஆகியோர் கிணத்துக்கடவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீதிபதி முன்னிலையில் சாட்சிகளை மிரட்டிய இரண்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சனி, 22 ஆகஸ்ட், 2026

உரிய அனுமதியின்றி இயங்கி வரும் 8 தனியார் தங்கும் விடுதிகளை உடனடியாக மூட உத்தரவு !

உரிய அனுமதியின்றி இயங்கி வரும் 8 தனியார் தங்கும் விடுதிகளை உடனடியாக மூட உத்தரவு !

 உரிய அனுமதியின்றி இயங்கி வரும் 8 தனியார் தங்கும் விடுதிகளை உடனடியாக மூட உத்தரவு !

ஆனைகட்டி, வீரபாண்டி கிராமத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் 8 தனியார் தங்கும் விடுதிகளை உடனடியாக மூடும்படி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கோவை மாவட்டம், ஆனைகட்டி வனப்பகுதியில் செயல்பட்டு வரும் சட்டவிரோத தனியார் தங்கும் விடுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அவற்றை அப்புறப்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சுற்றுச்சூழல் வனம், வனவிலங்குகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு, ஆனைக்கட்டி பகுதியில் இயங்கி வரும் சட்ட விரோத தனியார் தங்கும் விடுதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இந்தக் குழுவில், மாவட்ட வனத்துறை அதிகாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த வட்டாட்சியர் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவின் அறிக்கை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று (ஆகஸ்ட் 21) தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஆனைகட்டி பகுதியில் உள்ள வீரபாண்டி கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, மொத்தம் 10 தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருவது தெரிய வந்தது. அவற்றில் 2 விடுதிகள் கடந்த மாதம் முதல் உரிய அனுமதி பெற்று செயல்பட்டு வருவதாகவும், 8 தங்கும் விடுதிகள் எவ்வித அனுமதியும் பெறவில்லை" என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "அனுமதி பெறாமல் ஆனைக்கட்டி, வீரபாண்டி பகுதியில் செயல்பட்டு வரும் 8 தனியார் தங்கும் விடுதிகளை உடனடியாக மூட வேண்டும்" என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

மேலும், அனுமதி பெற்றுள்ள இரு விடுதிகளின் உரிமங்களை ஆய்வு செய்து, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

வெள்ளி, 31 ஜூலை, 2026

கோவை, சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரக் கொலை வழக்கு : கைதிகள் ஆஜர்படுத்துவதில் தாமதம் - விசாரணை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குத் தள்ளிவைப்பு !!!

கோவை, சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரக் கொலை வழக்கு : கைதிகள் ஆஜர்படுத்துவதில் தாமதம் - விசாரணை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குத் தள்ளிவைப்பு !!!

 கோவை, சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரக் கொலை வழக்கு : கைதிகள் ஆஜர்படுத்துவதில் தாமதம் - விசாரணை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குத் தள்ளிவைப்பு !!!

63 பேரின் சாட்சியப் பதிவுகள் நிறைவு: கருமத்தம்பட்டி டி.எஸ்.பி பாரியிடம் மீண்டும் சாட்சியம் !!!

 கோவையை அடுத்த சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் உள்ள எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

​கோவை, சூலூர் பகுதியில் கடந்த மே மாதம் 10 வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

 தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாகக் கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவரைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

​இவ்வழக்கில் சிறுமியின் தந்தை உட்பட இதுவரை 63 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

 மேலும், வழக்கை விசாரித்த அதிகாரியான கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) பாரி ஏற்கனவே நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து உள்ளார்.

 இந்நிலையில், இவ்வழக்கு நேற்று நீதிபதி ஹரிஹரன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

​அப்போது மதுரை மத்தியச் சிறையிலுள்ள கார்த்திக் மற்றும் திருச்சி சிறையிலுள்ள மோகன் ஆகிய இருவரையும் பாதுகாப்புடன் கோவை நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதில் போதிய கால தாமதம் ஏற்பட்டது. 

இதை அடுத்து, வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 அன்றைய தினம் அரசுத் தரப்பு சாட்சியான டி.எஸ்.பி பாரி மீண்டும் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

செவ்வாய், 28 ஜூலை, 2026

பெண் மாவோயிஸ்டு கோவை நீதிமன்றத்தில் ஆஜர் - சாட்சி விசாரணை ஒத்திவைப்பு !!!

பெண் மாவோயிஸ்டு கோவை நீதிமன்றத்தில் ஆஜர் - சாட்சி விசாரணை ஒத்திவைப்பு !!!

 பெண் மாவோயிஸ்டு கோவை நீதிமன்றத்தில் ஆஜர் - சாட்சி விசாரணை ஒத்திவைப்பு !!!

தமிழக - கேரளா எல்லையான ஆனைகட்டி, அட்டப்பாடியில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகளுக்கும், அதிரடி படைக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். காயம் அடைந்த மாவோயிஸ்ட் தீபக் மற்றும் பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி ஆகியோர் தப்பினர்.

ஆனைகட்டி பகுதியில் பதுங்கி இருந்த ஸ்ரீமதி கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஸ்ரீமதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். சாட்சி விசாரணை நடந்தது. அடுத்த விசாரணை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

புதன், 22 ஜூலை, 2026

முதல்வர் விஜய் பெரம்பூர் வெற்றியை எதிர்த்து வழக்கு: தேர்தல் நடத்தும் அதிகாரி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு !!!

முதல்வர் விஜய் பெரம்பூர் வெற்றியை எதிர்த்து வழக்கு: தேர்தல் நடத்தும் அதிகாரி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு !!!

 முதல்வர் விஜய் பெரம்பூர் வெற்றியை எதிர்த்து வழக்கு: தேர்தல் நடத்தும் அதிகாரி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு !!!

சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் நடத்தும் அதிகாரி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டு உள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்த நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, தி.மு.க வேட்பாளர் ஆர்.டி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

அதில், “வாக்காளர்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் மூலமாக த.வெ.க கட்சிக்கு வாக்களிக்க ஒவ்வொரு குழந்தைகளும், அவர்களைத் பெற்றோர்களை வலியுறுத்த வேண்டும் என முதலமைச்சர் விஜய் தேர்தல் பரப்புரையில் பேசி உள்ளார்.

இதன் மூலம் தேர்தல் ஆணைய விதிமுறைக்கு எதிராக குழந்தைகளை மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் த.வெ.க கட்சிக்கு ஆதரவு தர தூண்டி உள்ளார். மேலும், தேர்தல் பிரச்சார செலவுகளை வேண்டுமென்றே விஜய் மறைத்து உள்ளார். பெரம்பூரில் தேர்தல் அலுவலகம் அமைக்க ரூ. 10 லட்சம் செலவு ஆனதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், அனைத்து ஏற்படுகளையும் செய்து முடிக்க குறைந்தது ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு உள்ளது. அதையும் விஜய் திட்டமிட்டே மறைத்து உள்ளார். மேலும் 2011 முதல் 2024 வரை 3 கோடியே 44 லட்சத்து 46 ஆயிரத்து 642 கோடி ரூபாய் அரசுக்கு வருமான வரியாக செலுத்தவில்லை என்பதையும் பிரமாண பத்திரத்தில் மறைத்து உள்ளார்” என குறிப்பிட்டு உள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் இன்று (ஜூலை 21) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.டி சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்டு வில்சன், முதலமைச்சர் விஜய், இந்திய தேர்தல் ஆணையம் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ள யாருக்கு நோட்டீஸ் வழங்கவில்லையோ ? அவர்களுக்கும் நோட்டீஸ் வழங்க வேண்டும். பெரம்பூர் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும் நோட்டீஸ் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.


இதேபோல, திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து தி.மு.க வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தொடர்ந்த மற்றொரு தேர்தல் வழக்கு, நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமியை அடிக்கடி ஆஜராக வற்புறுத்த கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !!!

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமியை அடிக்கடி ஆஜராக வற்புறுத்த கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !!!

 பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமியை அடிக்கடி ஆஜராக வற்புறுத்த கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !!!

போக்சோ வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும், மீண்டும் அழைத்து தனக்கு நேர்ந்தததை சொல்லும்படி வற்புறுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ஆடு மேய்க்க சென்ற 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, ரமேஷ் என்பவருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், சாட்சியம் அளித்த பாதிக்கப்பட்ட சிறுமியை குறுக்கு விசாரணை செய்வதற்காக மீண்டும் ஆஜர்படுத்த கோரி ரமேஷ் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ரமேஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, "பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவே போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கடுமையான தண்டனைகள் விதிக்க வழி வகை செய்யும் இந்த சட்டத்தை அமல்படுத்தும் போது, பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீண்டும் மனஅழுத்தத்திற்கு ஆளாகாமல் இருக்கும் வகையில் அமல்படுத்த வேண்டும்" என அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், "மீண்டும், மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து தனக்கு நேர்ந்தததை சொல்லும்படி குழந்தைகளை வற்புறுத்த முடியாது" என கூறி அந்த மனுவை அவர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து, "தனக்கு நேர்ந்த துயரத்தை பெற்றோர், குழந்தைகள் நல குழு, மருத்துவர்கள், போலீசார் மற்றும் நீதிபதியிடம் தெரிவிப்பதன் மூலம் அவர்கள் மேலும் தாங்க முடியாத மன அழுத்தத்துக்கு ஆளாகுவதாகவும், சிறுமிகளை மீண்டும், மீண்டும் நீதிமன்றத்திற்கு வரவழைப்பதன் மூலம் அந்த சிறுமி இரண்டாவது முறையாகவும் துன்புறுத்தப்படுகிறார்" என்றும் நீதிபதி கருத்து தெரிவித்து இருந்தார்.

அத்துடன், "பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படும் போது, குழந்தைகள் அனுபவிக்கும் மன அழுத்தங்களை, நம் சமூகத்தில் பலர் புரிந்து கொள்ளவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, நியாயமான விசாரணை என்ற பெயரில் குழந்தைகளின் உரிமைகளை மீற அனுமதிக்க முடியாது" எனவும் கூறினார்.

புதன், 15 ஜூலை, 2026

பொது இடங்களில் பசுக்களை பலியிட தடை - உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பு !!!

பொது இடங்களில் பசுக்களை பலியிட தடை - உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பு !!!

 பொது இடங்களில் பசுக்களை பலியிட தடை - உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பு !!!

தமிழ்நாட்டில் பசுக்கள் மற்றும் கன்று குட்டிகளை பொது இடங்களில் பலியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது.

கடந்த மே மாதம் 28-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதற்கு முன்பாக, பக்ரீத் பண்டிகை நாளில், பசுக்களை இறைச்சி கூடங்களை தவிர, பொது இடங்களில் பலியிடுவதற்கு தடை விதிக்க கோரி இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சூர்ய பிரசாந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பக்ரீத் பண்டிகை நாளான மே 28ஆம் தேதி மட்டுமன்றி, வேறு எந்த நாளிலும் பசுக்கள் மற்றும் கன்று குட்டிகளை எந்தவொரு இடத்திலும் பலியிடுவதற்கு தடை விதித்து மே மாதம் 27ஆம் தேதி உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க செய்வதற்காகவும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் பசுக்களை பலியிட தடை விதித்து கடந்த 1976 ஆம் ஆண்டு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில், பசுக்களை பலியிடுவதற்கு தடை விதிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இதை அடுத்து, உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், "பக்ரீத் பண்டிகை நாளில், அனுமதிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில், குறிப்பாக பொது இடங்களில் பசுக்களை பலியிடத் தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்து இருந்தார்.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றமோ, பக்ரீத் பண்டிகை மட்டுமல்ல வேறு எந்த நாளிலும், அனைத்து இடங்களிலும் பலியிடத் தடை விதித்து உள்ளது" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது இடங்களில் மட்டுமே பசுக்களை பலியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்து இருந்த நிலையில், மாநிலம் முழுவதும் உயர் நீதிமன்றம் தடை விதித்து இருப்பது, சட்ட வரம்பை மீறிய செயல் என்று தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் திருத்தம் செய்வதற்கான முகாந்திரம் உள்ளது என்று கூறிய நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இதுகுறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வெள்ளி, 10 ஜூலை, 2026

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு நிபந்தனையின் கீழ் அரசு வேலை வழங்கலாம் - நீதிமன்றம் உத்தரவு !!!

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு நிபந்தனையின் கீழ் அரசு வேலை வழங்கலாம் - நீதிமன்றம் உத்தரவு !!!

 கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு நிபந்தனையின் கீழ் அரசு வேலை வழங்கலாம் - நீதிமன்றம் உத்தரவு !!!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு நிபந்தனையின் கீழ் அரசு வேலை வழங்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு இருக்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தவெக பொது கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இவர்களுடைய குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. இன்று கரூரில் நடைபெறுகிற விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் விஜய், இந்த அரசு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.

இதன் இடையே, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கக் கூடாது என பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீரன் திருமுருகன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகி சீனி அஹமது ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று காலை 10.45 மணி அளவில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, கரூரில் 41 பேர் பலியான சம்பவம் குறித்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதி அரசர் முன்பாக, சி.பி.ஐ விசாரணையில் உள்ளது. இந்த நேரத்தில் இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கக் கூடாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அதில் தற்போதைய அரசு, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு கருணை அடிப்படையில் அரசு பணிகளை வழங்க திட்டமிட்டு உள்ளது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே தொடரப்பட்ட இதுபோன்ற வழக்குகளான கும்பகோணம் மகாமகம் சம்பவம், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு, தருமபுரி பஸ் எரிப்பு சம்பவம் ஆகிய நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவில்லை. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு கருணைப் பணி வழங்குவது விதிகளுக்கு எதிரானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், அரசுப் பணி வழங்குவது குறித்து சட்டசபையில் அறிவித்தீர்களா? என அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அரசுப்பணி வழங்கப்பட்டு உள்ளது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசின் கொள்கை தொடர்பான முடிவில் தலையிட விரும்பவில்லை. இன்று அரசு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறலாம். ஆனால் தற்காலிகமாகவே பணி வழங்கப்பட வேண்டும் (இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இறுதி முடிவெடுக்கும் வரை) என்று கூறி வழக்கின் விசாரணையை வரும் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

மேலும், நீதிமன்றம் தானாக முன்வந்து TNPS-ஐ வழக்கில் சேர்த்து உத்தரவிட்டு உள்ளது.

இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தடை விதிக்க வேண்டும் - தீர்ப்பை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம் !!!

இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தடை விதிக்க வேண்டும் - தீர்ப்பை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம் !!!

 இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தடை விதிக்க வேண்டும் - தீர்ப்பை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம் !!!

குறிப்பிட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திருச்சி (கிழக்கு), மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்ததால் அந்த தொகுதிகள் காலியானதாக சட்டப் பேரவையின் செயலாளர் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடாசலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த மனுவில், "காலியான தொகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிப்புகள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் என்ற நிலையில் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 151- ஏ-வின் கீழ் காலியானது இல்லை என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வரை குறிப்பிட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என்று கோரி இருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 10) விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் இடைத்தேர்தல் அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளது. அதனால், இடைத்தேர்தல் அறிவிப்புகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என வாதிட்டார்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், "ராஜிநாமா செய்யப்பட்ட தொகுதிக்கு எதிரான தேர்தல் வழக்குகளை பொறுத்தவரை அதன் நிலைபாடுகள் நீதிமன்றத்தில் மாறுபடலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர் ராஜிநாமா செய்வதற்கு முன் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தால் அதை கருத்தில் கொள்ள வேண்டியது இல்லை எனவும் நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டு உள்ளது.

இந்த வழக்கை பொறுத்தவரை, வேட்பாளர்களின் ராஜிநாமாவை உரிய ஆய்வுக்கு பின் சபாநாயகர் ஏற்று அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் உத்தரவிட்டால் அது தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்கும். 10 ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்த பழமையான தேர்தல் வழக்கை தற்போது தான் நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது" என்று வாதிட்டார்.

முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமாணி, "காலியானதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க முடியும். தனி நபர்கள் தேர்தலை நடத்தக் கூடாது என வழக்கு தொடர முடியாது. இந்த வழக்கு விசாரணைக்கே உகந்தது இல்லை. இடைத்தேர்தல் நடத்துவதை எதிர்த்து குறிப்பிட்ட தொகுதி வாக்காளர்கள் மட்டுமே வழக்கு தொடர உரிமை உள்ளது. மனுதாரர் எந்த தொடர்பும் இல்லாமல் வழக்கை தொடர்ந்து உள்ளார்" என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என 2018- ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் போதும் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடக் கூடாது எனவும், நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், அது வேறுவொரு பாதிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பிட்ட வேட்பாளருக்கு எதிராக வழக்கு நிலுவையில் இருந்தால், எப்படி தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியும் ? நிலுவையில் வழக்குகள் இல்லாதபோது ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது கட்டாயம் தான். அதே நேரத்தில் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் அங்கே எப்படி தேர்தல் அறிவிப்பு வெளியிட முடியும் ? இடைத்தேர்தலில் புதிய வேறு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்தால் என்ன செய்வது ? அதனால் சற்று பொறுத்து இருந்துப் பார்க்கலாம்" என்று குறிப்பிட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

வியாழன், 9 ஜூலை, 2026

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 அரசு வழக்கறிஞர்கள் நியமனம் !!!

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 அரசு வழக்கறிஞர்கள் நியமனம் !!!

 கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 அரசு வழக்கறிஞர்கள் நியமனம் !!!

கோவை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக தற்காலிகமாக 20 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான அரசாணை தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கோவை சப்-கோர்ட் கூடுதல் ஜி.பி (நிலை எடுப்பு) இளங்கோவன், இ.சி கோர்ட் விஷ்ணு சித்தார்த், சப்-கோர்ட் கூடுதல் அரசு வழக்கறிஞர் கோவிந்தராஜு, சப் - கோர்ட் கூடுதல் ஜி.பி எம் பாண்டீஸ்வரன், மகளிர் கோர்ட் அர்ச்சனா, 4-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் பிரேமலதா, 5-வது கூடுதல் நீதிமன்றம் நிர்மலா, டான்பிட் நீதிமன்றம் பழனிச்சாமி, சிவில் கார்த்திகேயன், கிரிமினல் பிரபு ஸ்ரீகாந்த், கிரிமினல் மற்றும் சிவில் எஸ்.சி /எஸ்.சி கோட் முத்துக்குமார், கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் நீதிமன்றம் பாலமுருகன், முனிசிப் கோர்ட் பிளீடர் அரசுப் பணிகள் தமிழ்வாணன், ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பொள்ளாச்சி சப்-கோர்ட் கூடுதல் ஜி.பி தன்ராஜ், பொள்ளாச்சி முனிசிப் கோர்ட் பிளீடர் அரசு பணிகள் ரங்கராஜன், சூலூர் முனிசிப் கோர்ட் பிளீடர் விஜய ஆனந்த், மதுக்கரை முனிசிப் கோட்ர் ப்ளீடர் விக்னேஷ், மேட்டுப்பாளையம் முனிசிப் கோர்ட் பிளீடர் வினோத், மேட்டுப்பாளையம் சப்- கோர்ட் கூடுதல் ஜிபி நவீன் குமார், அன்னூர் முனிசிப் கோர்டு லதா மங்கேஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் இன்று பொறுபேற்கின்றனர். மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற பப்ளிக் பிராசிகியூட்டர் மற்றும் கவர்மெண்ட் பிளீடர் ஜி பி முதலாவது மற்றும் மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு அரசு வக்கீல்கள் நியமிக்கப்படவில்லை.

உடற்கூராய்வுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய வழக்கு - தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு !!!

உடற்கூராய்வுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய வழக்கு - தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு !!!

 உடற்கூராய்வுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய வழக்கு - தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு !!!

குற்ற வழக்குகளில் தடயவியல் மற்றும் உடற்கூறு ஆய்வுகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மதுரை ஊத்தங்குடியை சேர்ந்த வழக்கறிஞர் அருண் சாமிநாதன் தாக்கல் செய்து உள்ள பொதுநல மனுவில், 'அரசு மருத்துவமனைகளில் தடயவியல் மற்றும் உடற்கூறு ஆய்வுகள் நடத்துவதில் தொடர்ச்சியாக முறைகேடுகள் நடந்து வருவதாகவும், இது குற்ற வழக்கு புலன்விசாரணையிலும், மருத்துவ ஆதாரங்களை பாதுகாப்பதிலும் பிரச்சனையை ஏற்படுத்துவதாகவும்' குறிப்பிட்டு உள்ளார்.

ஏற்கனவே, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் அறிவியல் அலுவலர் நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு 2020 ஆம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்து இருந்தும், அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எதையும் அரசு மேற்கொள்ளவில்லை என மனுவில் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், இந்த மருத்துவ ஆதாரங்கள் சேகரிப்பதில் பல குறைபாடுகள் உள்ளன. உடற்கூராய்வுக்குப் பிறகு தவறான உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த சம்பவங்களும் நடந்து உள்ளன. இன்னும் சில நிகழ்வுகளில் மரணம் அடைந்து விட்டதாக சான்றிதழ் அளிக்கப்பட்ட நபர்கள், பின்னர் உயிருடனும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார்கள் என்றும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி, அரசு மருத்துவமனை பிணவறைகளில் அடையாளம் காணப்படாத உடல்கள் ஆண்டுக் கணக்கில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றும், தற்போது வரை தமிழ்நாட்டில் தடயவியல், உடற்கூராய்வு நடைமுறைகளுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

தடயவியல் ஆதாரங்கள், குற்ற நீதி பரிபாலனத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, மருத்துவ ஆதாரங்களை சேகரிப்பதிலும், பாதுகாப்பதிலும் குறைபாடுகள் எழுந்தால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதால், குற்ற வழக்குகளில் தடயவியல் மற்றும் உடற்கூறு ஆய்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, வழக்கு குறித்து 3 வாரங்களில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

புதன், 8 ஜூலை, 2026

கரூர் பயணத்தில் விஜய் செய்யப் போகும் சம்பவம் - தடை கோரி நாதக நீதிமன்றத்தில் முறையீடு !!!

கரூர் பயணத்தில் விஜய் செய்யப் போகும் சம்பவம் - தடை கோரி நாதக நீதிமன்றத்தில் முறையீடு !!!

 கரூர் பயணத்தில் விஜய் செய்யப் போகும் சம்பவம் - தடை கோரி நாதக நீதிமன்றத்தில் முறையீடு !!!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட உள்ளதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் தீரன் திருமுருகன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையிட்டு உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளரும், வழக்கறிஞருமான தீரன் திருமுருகன், அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்ய, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையிட்டார்.

அப்போது அவர்,"கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் போது, இந்த சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தோர் ருடும்பத்திற்கு அரசு வேலை வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று அவர் முறையிட்டார்.

அவரது இந்த முறையீட்டை ஏற்றுகொண்ட நீதிபதிகள், இதனை மனுவாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் வேலுசாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மாநிில அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இந்தச் சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், த.வெ.க தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், முதல்முறையாக நாளை மறுநாள் (ஜூலை 10) கரூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை தருவகற்கான ஆணை வழங்க உள்ளதாக தகவல்கள் சில தினங்களுக்கு முன் வெளியாகின. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று இவ்வாறு முறையிடப்பட்டு உள்ளது.

குதிரைபேர விவகாரம்.. செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு முன் ஜாமீன்  !!!

குதிரைபேர விவகாரம்.. செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு முன் ஜாமீன் !!!

 குதிரைபேர விவகாரம்.. செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு முன் ஜாமீன்  !!!

தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு, சதித் திட்டம் தீட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜாவிடம் ரூ.35 கோடி தருவதாக பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளையராஜா புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்

அவர்கள் நடத்திய விசாரணைக்கு பின்னர் இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக, ஐ.பி.டி.எஸ். என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள், தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமாரும் கூறிய அறிவுரையின் பேரில் தான் த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.35 கோடி பேரத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் தந்ததாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில், செந்தில்பாலாஜியையும், அவரது சகோதரர் அசோக்குமாரையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பினார்கள். அந்த சம்மனில், ஜூலை 6-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் ஆஜராகவில்லை.. தற்போது தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் அசோக்​கு​மார் முன்ஜாமீன் கோரி, ஏற்​கெனவே உயர்நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்து இருந்தார்.

அதனை தொடர்ந்து தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்​கும் முன்​ஜாமீன் கோரி உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்கல் செய்​து உள்ளார். அந்த மனுவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.. இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் கூட என்னுடைய பெயர் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.. 

இந்த வழக்கில் போலீசார் என்னைக் கைது செய்யக்கூடும் என்பதால், எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" இவ்வாறு கூறி உள்ளார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. காலை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் ஆஜரானார்."கரூர் இடைத்தேர்தலில் பணியாற்றுவதை தடுக்கவே திட்டமிட்டு வழக்குப் பதிவு. யாருக்கும் எந்தவொரு பணமும் வழங்கப்படவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளோம் என செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. இதனை அடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்ற செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமாருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

திங்கள், 6 ஜூலை, 2026

கோவை கோர்ட்டில் பரபரப்பு : அரசு வழக்கறிஞர்கள் இல்லாததால் 300 பிணை வழக்குகள் முடக்கம் - அ.தி.மு.க வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு !!!

கோவை கோர்ட்டில் பரபரப்பு : அரசு வழக்கறிஞர்கள் இல்லாததால் 300 பிணை வழக்குகள் முடக்கம் - அ.தி.மு.க வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு !!!

 கோவை கோர்ட்டில் பரபரப்பு : அரசு வழக்கறிஞர்கள் இல்லாததால் 300 பிணை வழக்குகள் முடக்கம் - அ.தி.மு.க வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு !!!

 த.வெ.க வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமித்தால் வரவேற்கிறோம் என்றும் உடனடியாக அரசாணை வழங்கி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஜூன் 30ம் தேதி உடன் அரசு வழக்கறிஞர்களின் பணிக் காலம் முடிவடைந்தது என்று அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஜூலை மாதம் ஆரம்பித்து தற்பொழுது வரை கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படாததால் பல்வேறு கிழமை நீதிமன்றங்களில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதாகவும் பல்வேறு ஏராளமான வழக்குகள் தேக்கமடைந்து இருப்பதாகவும் கோவை மாவட்ட அதிமுக வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து கோவை நீதிமன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்,

 சட்டமன்றத் தேர்தல் முடிந்து கடந்த 60 நாட்களாக உட்கட்சி பிரச்சனை, கட்சி தாவல், குதிரை பேரம், சோபா மாடல், Blast Blast போன்ற செய்திகள் மட்டுமே அதிகமாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன மக்கள் அதை மட்டுமே ரசித்து கொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம் ஆனால் நீதிமன்றத்தில் மிகப்பெரிய பிரச்சனையை நிலவிக் கொண்டிருப்பதாக கூறினார். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் கடந்த 5 நாட்களாக நியமிக்கப்படாததால் பல்வேறு சிக்கல்கள் நிலவிவருவதாக குறிப்பிட்ட அவர் இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என தெரிவித்தார்.

வரலாற்றில் அரசு வழக்கறிஞர்கள் இல்லாமல் நீதிமன்றங்கள் செயல்பட்டது கிடையாது என்றும் கூறினார். தற்பொழுது வரை அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படாதது அரசு நிர்வாகத்தின் மிகப்பெரிய தவறு என்று சுட்டிக்காட்டிய அவர் இதனால் அரசியலமைப்பு சட்டம் வகுத்து இருக்கக் கூடிய விதிகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். 

கடந்த 2ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் மாவட்ட நீதிபதிக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு குறிப்பிட்டு 24 வழக்கறிஞர்களை  அரசு வழக்கறிஞர்களாக பொறுப்பேற்க சொல்லுங்கள் என்று கூறியதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்த அவர் அதற்கான அரசாணை வெளிவரும் என்று எண்ணியதாகவும் ஆனால் தற்போது வரை அரசாண எதுவும் வரவில்லை என்று தெரிவித்தார். 

அமைச்சர் கீர்த்தனா கூட சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்கும் பொழுது அதற்கான கடிதத்தை அவர் எடுத்து வராததால் கடிதத்தை எடுத்து வந்தால் தான் பொறுப்பேற்க முடியும் என்று சட்டமன்ற செயல்பாட்டாளற் கூறினார் என்று தெரிவித்த அவர் சட்டமன்றத்திலேயே இவ்வாறான நடைமுறைகள் இருக்கும் பொழுது அரசாங்கத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படும் பொழுது போதிய கடிதங்கள் ஆவணங்கள் இல்லாமல் எப்படி பதவி ஏற்க சொன்னார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார். 

இது அரசாங்கத்தின் அறியாமை என்று குறிப்பிட முடியாது என்றும் இது கண்டிப்பாக துறை அதிகாரிகளுக்கு தெரிந்திருக்க வேண்டும் குறிப்பாக முதலமைச்சருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று கூறினார். அரசு வழக்கறிஞர்களை நியமிக்க முடியாமல் அரசாங்கத்திற்கு வேறு என்ன வேலை உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார். அனைத்து இடங்களிலும் அரசியல் உள்ளது என்று கூறிய அவர் நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தார். 

மாவட்ட ஆட்சியர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அரசு வழக்கறிஞர்களாக பதவி ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தால் அவர் அந்த பதவிக்கு தகுதி இல்லாதவர் என்றும் யாருடைய அழுத்தத்தினால் மாவட்ட ஆட்சியர் இவ்வாறு செய்தார் என்றும் கேள்வி எழுப்பினார். தமிழக வெற்றி கழக கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களுக்கு அரசு வழக்கறிஞர்கள் பதவி கொடுத்தால் அவர்கள் அந்த பணியை செய்யட்டும் நான் அதனை வரவேற்கிறேன் ஆனால் அவர்களுக்கு அதற்குரிய அரசாணைகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து  வரக்கூடிய சட்டமன்ற கூட்டத் தொடரில்  பதிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 


இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நீதிபதியை சந்தித்து உடனடியாக மாற்று ஏற்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்து உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தால் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த ஐந்து நாட்களில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பிணை வழக்குகள், எண்ணில் அடங்கா சிவில் வழக்குகள் தேக்கமடைந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

சனி, 4 ஜூலை, 2026

தம்பியை தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சனுக்கு கெடு; இன்று நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு !!!

தம்பியை தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சனுக்கு கெடு; இன்று நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு !!!

 தம்பியை தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சனுக்கு கெடு; இன்று நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு !!!

உடன்பிறந்த தம்பியை தாக்கிய வழக்கில் இன்று கண்டிப்பாக நேரில் ஆஜராக தமிழக அமைச்சர் மரிய வில்சனுக்கு புதுவை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட மரிய வில்சன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.

இவரது உடன்பிறந்த தம்பியான மரிய கிளோத், புதுச்சேரி எழில் நகரில் வசித்து வருகிறார். மரிய வில்சனுக்கும், அவர் தம்பிக்கும் சொத்து மற்றும் தொழில் விவகாரத்தில் நீண்ட நாள்களாகப் பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது.

அதனால் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தந்தை நெஸ்தருடன் புதுச்சேரிக்கு வந்த மரியவில்சன், எழில் நகரில் உள்ள தன்னுடைய தம்பி வீட்டுக்குள் உருட்டுக்கட்டையுடன் நுழைந்து கணவன் மனைவி இருவரையும் கடுமையாக தாக்கி இருக்கிறார்.

இது குறித்த வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக தி.மு.க ஆதரவாளர்கள் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து 'இவர்தான் நாட்டின் நிதியமைச்சர்' என ட்ரோல் செய்தனர். சிலரோ அது மரிய வில்சன் இல்லை என்றெல்லாம் கூறினார்கள்.

அமைச்சர் மரியவில்சனின் தம்பி மனைவி கேர்லின் கிளாட் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் (IPC 448, 427, 324, 294 (b), 506 (i), 34) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

ஆனால் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மரியவில்சன், அந்த விசாரணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், `வழக்கின் குற்றம் சாட்டப்பட்ட சம்பவத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால் அதை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வருவது அவசியம்' என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.குமரப்பா. அதை அடுத்து அந்தத் தாக்குதல் சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகளை சேகரித்து, தேர்தலுக்குப் பிறகு விரிவான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர் லாஸ்பேட்டை போலீஸார்.

இந்நிலையில், குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொள்வதற்காக நாளை கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமைச்சர் மரியவில்சனுக்கு புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. த.வெ.க சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியின் வேட்பாளராக மரியவில்சன் அறிவிக்கப்பட்ட நேரத்தில், உருட்டுக்கட்டையுடன் அவர் தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் அதை முக்கியமான விமர்சனமாக வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இரு பிரிவினர் மோதலை காரணம்காட்டி கோயிலை மூடுவதா? உயர் நீதிமன்றம் அதிருப்தி !!!

இரு பிரிவினர் மோதலை காரணம்காட்டி கோயிலை மூடுவதா? உயர் நீதிமன்றம் அதிருப்தி !!!

 இரு பிரிவினர் மோதலை காரணம்காட்டி கோயிலை மூடுவதா? உயர் நீதிமன்றம் அதிருப்தி !!!

இருபிரிவினர் இடையேயான மோதல் காரணமாக கோயிலை மூடுவது என்பது சூழலை சமாளிக்க முடியாத அரசு அதிகாரிகளின் நிர்வாக திறமையின்மையை பிரதிபலிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தூட்டப்பூவாதி கிராமத்தில் உள்ள கோயில்களை மூடி வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கோவிலின் அறங்காவலரும், பூசாரியுமான செல்வராஜ் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, "மூன்று கிராமங்களை சேர்ந்த மக்கள், பிரச்சனைக்குரிய கோயில் உள்ளிட்ட பன்னிரெண்டு கோயில்களை கட்டியுள்ள நிலையில், அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் புதிய கோயில் கட்டவேண்டும் என பிரச்சனை ஏற்படுத்துகின்றனர். கோயில் தற்போது திறக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்" என்று மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, "பொதுமக்கள் வழிபாட்டுக்காக நிறுவப்படும் கோயில்களில் மக்கள் வழிப்படுவதை அரசின் இந்து சமய அறநிலையத் துறையோ அல்லது தனி நபர்களோ தடுக்க முடியாது. சட்டம் ஒழுங்கை காரணம்காட்டி கோயில் மூடப்படக் கூடாது. பொதுமக்கள் வழிபடுவதற்காக அனைத்து நேரத்திலும் கோயில் திறந்து இருக்க வேண்டும். இரு பிரிவினர் இடையேயான மோதல் காரணமாக கோயிலை மூடுவது என்பது சூழலை சமாளிக்க முடியாத அரசு அதிகாரிகளின் நிர்வாக திறமையின்மையை பிரதிபலிக்கிறது" என்று கருத்து தெரிவித்தார்.

மேலும், "சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம் என கூறி உள்ள நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, காலவரையின்றி பிரச்சனை நீடித்தால் இரு பிரிவினர் இடையே சமாதானம் ஏற்படும் வரை இந்து சமய அறநிலையத்துறையே கோயில் நிர்வாகத்தை கையில் எடுக்கலாம்" எனவும் உத்தரவிட்டார்.
ஆடு திருடிய வழக்கில் கைதானவருக்கு அரசு உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர் பொறுப்பு !!!

ஆடு திருடிய வழக்கில் கைதானவருக்கு அரசு உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர் பொறுப்பு !!!

 ஆடு திருடிய வழக்கில் கைதானவருக்கு அரசு உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர் பொறுப்பு !!!

ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞருக்கு அரசு உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர் பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட புதூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலை (65). இவரது கணவர் சிங்காரவேல். இவர் உடல்நலக்குறைவால் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இதேபோல், இவரது இரண்டு ஆண் பிள்ளைகளும் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

ஆகையால், இப்போது அவருக்கு ஒரே ஒரு பெண் பிள்ளை மட்டுமே உள்ளார். இவரும் திருமணமான நிலையில், தற்போது அவரது கணவருடன் மாமியார் வீட்டில் வசித்து வருகிறார். எனவே, அஞ்சலை தனியாகவே வசித்து வருகிறார். அத்துடன், வருமானத்திற்காக ஆடு வளர்ப்பில் அவர் ஈடுபட்டு வருகிறார். மேலும், தேவைக்கேற்ப வேறு சில சிறுசிறு விவசாயம் சார்ந்த வேலைகளையும் அவர் பார்த்து வந்து உள்ளார்.

அந்த வகையில், 8 ஆடுகளை வளர்த்து வந்த அஞ்சலை, அம்பலால் தெருவில் வசிக்கும் வழக்கறிஞர் ஷேக் சுல்தான் என்பவரது வீட்டில் ஆடு மற்றும் மாடுகளின் கொட்டகையை சுத்தம் செய்யும் வேலையை பார்த்து வந்து உள்ளார். பின்னர் அந்த வேலையை குறிப்பிட்ட சில காரணங்களுக்காக விட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று அஞ்சலை வளர்த்து வந்த ஆடு ஒன்று காணாமல் போய் உள்ளது. இதன் காரணமாக அஞ்சலை வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது, அம்பலால் தெரு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷேக் சுல்தான் (அஞ்சலை வேலை பார்த்த வீட்டின் உரிமையாளர்), திருமலை என்பவருடன் சேர்ந்து, காரில் வந்து அஞ்சலையின் ஆட்டை திருடிச் சென்றது தெரிய வந்தது. ஆகவே, இதுதொடர்பாக வழக்கறிஞர் சுல்தான் மீது, வாணியம்பாடி நகர காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர். இதை அடுத்து, நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற ஷேக் சுல்தான் விரைவிலேயே சிறையில் இருந்து வெளியே வந்து உள்ளார்.

இத்தகைய நபருக்கே தற்போது தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் அரசு உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. திருப்பத்தூர் நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், சிவில் வழக்குகள் தொடர்பாக வழக்காடும் விதமாக இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

ஆடு திருடிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைதானவர் தற்போது அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட சம்பவம், திருப்பத்தூர் மாவட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

 இதன் இடையே, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருப்பத்தூர் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தலைமையில் நேற்று நடைப்பெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் கலந்து கொண்டு, மாவட்டத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனை மேற்க்கொண்டார்.

கூட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பொறுப்புகளுக்கு, பணம் வாங்கி கொண்டு, பதவி அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு. 

"மக்களிடம் பணம் வாங்க கூடாது என்று முதலமைச்சர் எங்களிடம் சத்தியம் வாங்கி உள்ளார். என்னுடைய பெயரை தவறாக பயன்படுத்துவர்கள் மீது, ஆதாரபூர்வமாக குற்றச்சாட்டை கூறினால், அவர் த.வெ.க நிர்வாகியாக இருந்தாலும் அவரை ஜெயிலில் போடுவேன்" என்று அமைச்சர் ஆவேசமாக கூறினார்.

திருப்பரங்குன்றம் மலை சர்வே விவகாரம்; தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 4 வாரம் அவகாசம் !!!

திருப்பரங்குன்றம் மலை சர்வே விவகாரம்; தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 4 வாரம் அவகாசம் !!!

 திருப்பரங்குன்றம் மலை சர்வே விவகாரம்; தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 4 வாரம் அவகாசம் !!!

திருப்பரங்குன்றம் மலையை முழுவதும் சர்வே செய்ய 4 வாரம் அவகாசம் அளித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டு உள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனுத் தாக்கல் செய்து இருந்தார்.

அதில், "திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொணரவும், தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்ற பிறகே திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் கோரி வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி புதிதாக மனு அளிக்கவும், அதனை அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

ஆனால் எனது மனுவை பரிசீலித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், "மலையை அளவீடு செய்ததில், சில இடங்களில் முரண்பாடுகள் இருப்பது போல் தோன்றுகின்றது. எனவே அவற்றை மீண்டும் சர்வே செய்ய வேண்டும். ஆகவே அதற்கு 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும்" என கோரப்பட்டது.

அதை அடுத்து நீதிபதிகள், மலை அளவீடு அறிக்கையில் ப்ரைவி கவுன்சிலின் உத்தரவுக்கு பிறகு குறிப்பாக மலை மீது ஏதேனும் விரிவாக்க பணிகள் நடைபெற்று இருந்தால், அதுதொடர்பான விபரங்களையும் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

வழக்கு விவரங்களை தாக்கல் செய்யாத மத்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி !!!

வழக்கு விவரங்களை தாக்கல் செய்யாத மத்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி !!!

 வழக்கு விவரங்களை தாக்கல் செய்யாத மத்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி !!!

வழக்கு ஒன்றில் விபரங்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டு இருந்த நிலையில் அதனை தாக்கல் செய்யாத காரணத்தால் மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை இணைச் செயலாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் 720 கிராம் ஹெராயின் போதைப்பொருளைக் கடத்தியதாக கடந்த 2015- ஆம் ஆண்டு இலங்கையில் கைது செய்யப்பட்டு அந்த நாட்டு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் இந்தியா - இலங்கை இடையிலான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி, கடந்த 2016- ஆம் ஆண்டு ஜாகீர் உசேன் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கபட்டார். ஜாகீர் உசேனை 2022- ஆம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டு இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தனது தந்தையை விடுவிக்காமல் தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளதாகக் கூறி ஜாகீர் உசேனின் மகன் சமீர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்தியாவில் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க முடியும் என்கிற நிலையில் 2022- ஆம் ஆண்டு வரை தண்டனை அனுபவிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது குறித்தும், ஜாகீர் உசேன் நாடு கடத்தப்பட்ட போது, இந்தியா- இலங்கை இடையிலான கடிதப் போக்குவரத்து தொடர்பான விபரங்களைத் தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்த விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத காரணத்தால், மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை இணைச் செயலாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 50,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

மேலும், அந்த அபராதத் தொகையை இரு அதிகாரிகளும் இணைந்து நான்கு வாரங்களுக்குள் உயர்நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு செலுத்தவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஜூலை 9- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வியாழன், 2 ஜூலை, 2026

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த நீதிமன்றம்: சர்ச்சை பேச்சு வழக்கில் அதிரடி உத்தரவு !!!

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த நீதிமன்றம்: சர்ச்சை பேச்சு வழக்கில் அதிரடி உத்தரவு !!!

 முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த நீதிமன்றம்: சர்ச்சை பேச்சு வழக்கில் அதிரடி உத்தரவு !!!

ரத்து செய்யக் கோரிய மனு டிஸ்மிஸ்! ‘அன்பகம்’ வெறுப்பு பேச்சு விவகாரத்தில் திமுக மாஜிக்கு சட்டச் சிக்கல் தீவிரம்!

சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இளைஞர் அணியின் தலைமையகமான அன்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டு உள்ளது.

இந்த புகார் மனு எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமான ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு நடைபெற்றது. அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மூடிய அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பேச்சு தொடர்பாக தனி நபர் புகார் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கை தாக்கல் செய்யும் முன் அரசின் அனுமதியை பெறவில்லை என்பதால், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாது" என வாதிட்டார்.

புகார்தாரரான உமா ஆனந்தன் தரப்பில், தனது பேச்சு ஊடகங்களில் பரவும், பிற மதத்தினர் பார்ப்பார்கள் என்று தெரிந்தே பொன்முடி இந்த வெறுப்பு பேச்சை பேசி உள்ளார். இதே விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, பொன்முடிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டு இருந்த நிலையில், பொன்முடியின் பேச்சால் பொது அமைதிக்கு எந்த குந்தக்கமும் ஏற்படவில்லை என கூறி, புகார்கள் முடித்து வைக்கப்பட்டன. தற்போது பொன்முடிக்கு எதிரான வழக்கை தொடர அரசிடம் அனுமதி கோரி இருப்பதாகவும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், வழக்கை ரத்து செய்ய கோரிய பொன்முடியின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து இருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.