பாலியல் குற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலியல் குற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – காவல் ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய நபர் மீது துப்பாக்கிச்சூடு...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – காவல் ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய நபர் மீது துப்பாக்கிச்சூடு...

 கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் காவல் ஆய்வாளரை தாக்கி தப்ப முயன்ற போது துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர்.

கோவை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையம் (தெற்கு) எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று 12-ம் தேதி இரவு சிறுமி தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலையம் (தெற்கு) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சந்தோஷ் (24), தவசி (28) ஆகிய இருவரும் சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே, சிறுமியை மிரட்டுவதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் அரிவாளை தவசி மறைத்து வைத்திருந்த இடத்திற்கு, அதை கைப்பற்றுவதற்காக காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான போலீசார் அவரை இன்று மாலை அழைத்துச் சென்றனர்.

அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளை திடீரென எடுத்த தவசி, காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காவல் ஆய்வாளருக்கு காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து அங்கிருந்து தப்பியோட முயன்ற தவசியை, பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். பலமுறை எச்சரித்தும் தவசி மீண்டும் அரிவாளால் தாக்க முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து காவல் அதிகாரிகளின் உயிருக்கு ஏற்பட்ட உடனடி ஆபத்தைத் தவிர்க்கும் வகையில், தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் தவசியின் இடது காலில் காயம் ஏற்பட்டது.

காயமடைந்த தவசிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரிவாள் தாக்குதலில் காயமடைந்த காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கில் சந்தோஷ் மற்றும் தவசி ஆகிய இருவர் மீதும் சட்டப்படி தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்கள் கிடைக்கப்பெற்றவுடன் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதாகவும் கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

 "14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை" ; தலைமறைவான இருவர் கைது - கோவை காவல் ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு!

"14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை" ; தலைமறைவான இருவர் கைது - கோவை காவல் ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு!

கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் : தற்காப்பிற்காகக் காலில் சுட்டுப் பிடித்த காவல்துறை!

 கோவை மாநகரில் 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நபர், மறைத்து வைத்து இருந்த அரிவாளை மீட்க அழைத்துச் சென்ற போது பெண் காவல் ஆய்வாளரைத் தாக்கித் தப்பியோட முயன்றதால், காவல்துறையினர் அவரைத் தற்காப்பிற்காகத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகரம், தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (12.09.2026) இரவு சுமார் 7.30 மணி அளவில் 14 வயது சிறுமி ஒருவர் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகாரளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த தெற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

​விசாரணையில், சந்தோஷ் (24) மற்றும் தவசி (28) ஆகிய இருவர் சேர்ந்து அச்சிறுமியைக் கடத்திச் சென்று, கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

 இதை அடுத்து, தலைமறைவாக இருந்த சந்தோஷ் மற்றும் தவசி ஆகிய இருவரையும் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.

 பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, சிறுமியை மிரட்டுவதற்குப் பயன்படுத்திய அரிவாளை மறைத்து வைத்து இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதாக எதிரி தவசி தெரிவித்து உள்ளார். அதன் பேரில், தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான காவல் குழுவினர், தவசியை குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

​அப்போது, அங்கு மறைத்து வைத்து இருந்த அரிவாளைத் திடீரெனக் கையில் எடுத்த தவசி, காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியைப் பயங்கரமாக வெட்டினார். இதில் ஆய்வாளரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஆய்வாளரை வெட்டிவிட்டுத் தப்பியோட முயன்ற தவசியைப் பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சிலம்பரசன் மற்றும் காவலர்கள் உடனடியாக எச்செரித்தனர். எனினும், எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் மீண்டும் அரிவாளுடன் காவல் அதிகாரிகளைத் தாக்க முயன்றதால், காவல் அதிகாரிகளின் உயிரைப் பாதுகாக்கும் பொருட்டுத் தற்காப்பு நடவடிக்கையாக தவசியின் இடது காலில் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டார்.

​துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குற்றவாளி தவசிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

 அரிவாள் வெட்டில் காயமடைந்த காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

​கைது செய்யப்பட்ட சந்தோஷ் மற்றும் தவசி மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தயவுதாட்சண்யமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி செய்யக் கோவை மாநகரக் காவல்துறை முன்னுரிமை அளித்து வருவதாகவும் காவல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.

வியாழன், 3 செப்டம்பர், 2026

 "நாய்கள் செய்த அதிசயம்" ; நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற போதை இளைஞர் கைதான அதிர்ச்சி சம்பவம் !

"நாய்கள் செய்த அதிசயம்" ; நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற போதை இளைஞர் கைதான அதிர்ச்சி சம்பவம் !

பெட்டிக்கடை தீ வைப்பு வழக்கை விசாரிக்கச் சென்ற போது சிக்கிய சி.சி.டி.வி: துடியலூரில் நள்ளிரவில் பரபரப்பு!

​ கோவை, அருகே நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற கஞ்சா போதை ஆசாமியிடம் இருந்து, அங்கு இருந்த வளர்ப்பு நாய்கள் சண்டையிட்டுக் கடித்துப் பெண்ணைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான மற்றும் அதிர்ச்சிகரமான சி.சி.டி.வி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, அருகே பெட்டிக்கடை ஒன்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டதாகத் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி (CCTV) கேமரா காட்சிகளைக் கைப்பற்றிக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

​அப்போது சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது, பெட்டிக்கடை தீ வைப்பு சம்பவத்தையும் தாண்டி அதிர்ச்சி அளிக்கும் வேறொரு கொடூரச் சம்பவம் கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

இன்று அதிகாலை 2 மணி அளவில், சாலையோரமாக அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அமர்ந்து இருந்தார். அப்போது, கஞ்சா மற்றும் மது போதையில் அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவரை அங்கு இருந்த 2 நாய்கள் இடை விடாது குரைத்துத் தொடர்ந்து சென்று உள்ளன.

​அப்போது அந்த பெண்ணிடம் அந்த இளைஞர், "இது உங்க நாயா பாரு... பின்னாடியே வந்துட்டு இருக்கு!" எனக் கேட்டு உள்ளார். அதற்கு அந்தப் பெண், "கல்லை எடுத்து அடிங்க... நாய் ஓடிவிடும், இதுகூட தெரியாதா?" எனக் கூறி உள்ளார்.

 இளைஞரும் கல்லை எடுத்து எறியவே நாய்கள் சில அடி தூரம் சென்று மீண்டும் அவரைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே நின்றன.

​அந்தச் சமயத்தில், போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அந்த இளைஞர், சாலையோரம் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை திடீரென மானபங்கம் செய்ய முயன்று உள்ளார்.

ஆபத்தை உணர்ந்த அப்பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சலிடவே, உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட நாய்கள் பாய்ந்து வந்து அந்த இளைஞரைத் தாக்கத் தொடங்கின. குரைத்துக் கொண்டே இளைஞரின் கால்களைக் கடித்து இழுத்துப் பெண்ணை நெருங்க விடாமல் தடுத்தன.

​நாய்களின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்த அந்த இளைஞர், பெண்ணை விட்டு விட்டு அங்கு இருந்து ஓட்டம் பிடித்தார்.

 விடாத நாய்களும் அந்த இளைஞரைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்றன.

மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்ட இளைஞரிடம் இருந்து நன்றி உள்ள நாய்கள் கடித்துப் பெண்ணைக் காப்பாற்றிய இந்த நெகிழ்ச்சி காட்சி சி.சி.டி.வி யில் தெளிவாகப் பதிவாகி இருந்தது.

​சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் உடனடியாக களமிறங்கிய காவல்துறையினர், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட இளைஞரை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 போதை ஆசாமி இடம் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நாய்கள் போராடிக் காப்பாற்றிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

கஞ்சா விற்றதை வெளியே சொன்னதால் தொழிலாளியை கொலை செய்தோம் - கைதான இரண்டு பேர் வாக்குமூலம் !

கஞ்சா விற்றதை வெளியே சொன்னதால் தொழிலாளியை கொலை செய்தோம் - கைதான இரண்டு பேர் வாக்குமூலம் !

கோவையில் பள்ளி பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை - உதவியாளர் போக்சோவில் கைது!

கோவை, கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு பேருந்து மூலம் மாணவர்களை அழைத்து வருவது வழக்கம், ஒவ்வொரு பேருந்திலும் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் என இரண்டு பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஒரு பேருந்தில் குறிப்பிட்ட வழிதடத்தில் பணியாற்றும் உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக சில மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் பேருந்து உதவியாளர் தங்களிடம் பேட் டச் செய்வதாக தெரிவித்து உள்ளனர். 

இந்நிலையில் நேற்று காலை அரசு அருகே உள்ள ஒரு கிராமத்து பகுதிக்கு வந்த பள்ளி பேருந்து மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பொதுமக்கள் சிறை பிடித்தனர். தகவல் அறிந்து நீலாம்பூர் போலீசார் உதவியாளர் சேவியரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் பள்ளி சார்பில் யாரும் வராததால், மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் காவல்துறையினர் பள்ளிக்கு வந்து பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்பொழுது பேருந்து உதவியாளரால் பள்ளி மாணவிகள் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி பேருந்து உதவியாளர் சேவியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
"பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை" ;  கோவையில் தனியார் பேருந்தை வழிமறித்துப் பெற்றோர் போராட்டம்!

"பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை" ; கோவையில் தனியார் பேருந்தை வழிமறித்துப் பெற்றோர் போராட்டம்!

 "பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை" ;  கோவையில் தனியார் பேருந்தை வழிமறித்துப் பெற்றோர் போராட்டம்!

 பள்ளி மாணவிகளிடம் கைவரிசை காட்டிய கிளீனரை மடக்கிப் பிடித்த மக்கள்!

​ கோவை, கருமத்தம்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் பேருந்தின் கிளீனர் ஒருவர், பள்ளிக்குச் செல்லும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து தினசரி நூற்றுக் கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.

​இந்நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி பேருந்தில் தினமும் பயணிக்கும் பள்ளிச் சிறுமி ஒருவரிடம், அந்தப் பேருந்தின் கிளீனர் தொடர்ந்து தவறான எண்ணத்துடன் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்துத் தனது பெற்றோரிடம் அழுது கொண்டே விவரத்தைக் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், இன்று வழக்கம் போல வந்த அந்தத் தனியார் பள்ளி பேருந்தை அரசூர் பகுதியில் திடீரென வழிமறித்து நிறுத்தினர்.

​தொடர்ந்து, பள்ளிச் சிறுமியிடம் அசிங்கமாக நடந்துகொண்ட அந்தப் பேருந்து கிளீனரிடம் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சரமாரியாகக் கேள்விகள் கேட்டுப் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருமத்தம்பட்டி காவல் துறையினர், ஆவேசத்தில் இருந்த பொதுமக்களைச் சமாதானப்படுத்தினர்.

​தொடர்ந்து, பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளி பேருந்து கிளீனரைப் போலீஸார் உடனடியாகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இச்சம்பவம் கருமத்தம்பட்டி பகுதியில் தாய்மார்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதன், 19 ஆகஸ்ட், 2026

மாங்காய் பறித்து தருவதாக கூறி கோவை அருகே 3 வயது சிறுமியை பாலியல் கொடுமை - 15 வயது சிறுவனிடம் காவல்துறை விசாரணை !!!

மாங்காய் பறித்து தருவதாக கூறி கோவை அருகே 3 வயது சிறுமியை பாலியல் கொடுமை - 15 வயது சிறுவனிடம் காவல்துறை விசாரணை !!!

 மாங்காய் பறித்து தருவதாக கூறி கோவை அருகே 3 வயது சிறுமியை பாலியல் கொடுமை - 15 வயது சிறுவனிடம் காவல்துறை விசாரணை !!!

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள, ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி விவசாய வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 3 வயதில் மகள் உள்ளனர். 

விவசாய தம்பதியின் உறவினர் அப்பகுதியில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு 15 வயதில் சிறுவன் உள்ளான்.

சம்பவத்தன்று அந்த சிறுவன் வீட்டில், விளையாடிக் கொண்டு இருந்த விவசாய தம்பதியின்  3 வயது சிறுமியை மாங்காய் பறித்து தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று உள்ளான். 

அங்கு வீட்டிற்குள் சென்றதும் சிறுவன், சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து உள்ளான். இதனால் சிறுமி கதறி அழுது உள்ளார். 

இந்த சம்பவம் நடந்த போது அந்த வீட்டிற்கு வெளியே சிறுமியின் சகோதரன் மற்ற நண்பர்களுடன் விளையாடிக் கொண்டே இருந்தான். வீட்டுககுள் தனது சகோதரியின் அழுகை சத்தம் கேட்டதால், அதிர்ச்சி அடைந்த அவன் உள்ளே சென்று உள்ளான். 

அதற்குள் , சிறுமியை டி.வி பார்க்க கூறிவிட்டு பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன் ஒன்றும் தெரியாதது போல் படுக்கையில் படுத்தபடி டிவி பார்த்துக் கொண்டு இருந்து உள்ளான். அவனிடம், சிறுமியின்  சகோதரன் எதற்காக தங்கை அழுது கொண்டு இருந்தாள் என்று  கேட்டு உள்ளான். 

அதற்கு அந்த சிறுவன் ஒரு காரணத்தை கூறி சமாளித்து உள்ளான். அதன் பிறகு சிறுமியை அழைத்துக் கொண்டு, சகோதரன் தனது வீட்டிற்கு திரும்பி விட்டான். அப்போது சிறுமி உறவினர் வீட்டில் நடந்த சம்பவத்தை அழுது கொண்டே, தாயாரிடம் கூறினாள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், நடந்த சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோரிடம் நியாயம் கேட்டு உள்ளனர். 

அப்போது அவர்கள் உறவினர்கள் , என்பதாலும் சிறுமியின் எதிர்காலம் கருதியும் வெளியில் தெரிந்தால் அசிங்கம் என்று நினைத்து அமைதியாக இருந்து உள்ளனர். இதற்கு இடையே இந்த சம்பவம் நடந்து 1 மாதம் ஆகிய நிலையில் தகவல் ஊராருக்கு தெரிய வந்து உள்ளது. 

அதன் பிறகு நடந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் வால்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் கஸ்தூரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். 

இந்த சம்பவம் தொடர்பாக மகளிர் போலீசார்  15 வயது சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

ரயில்வே நிலையத்தில் பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு : தைரியமாக எதிர்த்து வாலிபருக்குத் தர்ம அடி கொடுத்த இளம் பெண் - வீடியோ வைரல் !!!

ரயில்வே நிலையத்தில் பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு : தைரியமாக எதிர்த்து வாலிபருக்குத் தர்ம அடி கொடுத்த இளம் பெண் - வீடியோ வைரல் !!!

 ரயில்வே நிலையத்தில் பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு : தைரியமாக எதிர்த்து வாலிபருக்குத் தர்ம அடி கொடுத்த இளம் பெண் - வீடியோ வைரல் !!!

தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணிடம் அத்துமீறல்: கோவையில் பரபரப்பு !!!

 கோவை, ரயில்வே நிலையப் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட வாலிபருக்கு, அந்த இளம் பெண் தைரியமாக எதிர்த்து நின்று தர்ம அடி கொடுத்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, ரயில் நிலையத்தில் தினமும் ஆயிரக் கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ரயில்வே நிலையப் பிளாட்பார்ம் பகுதியில் இளம் பெண் ஒருவர் படுத்து உறங்கிக் கொண்டு இருந்து உள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர், தூங்கிக் கொண்டு இருந்த அந்தப் பெண் அருகில் படுத்துக் கொண்டு அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்று உள்ளார். இதனால் திடுக்கிட்டு எழுந்த அந்த இளம் பெண், சற்றும் அச்சப்படாமல் உடனடியாக அந்த வாலிபரைத் தைரியமாக எதிர்த்துக் கேள்வி கேட்டு உள்ளார்.

மேலும், பொதுமக்கள் முன்னிலையிலேயே அந்த வாலிபருக்குத் தர்ம அடி கொடுத்துப் பாடம் புகட்டினார். அங்கு இருந்த பயணிகள் சிலர் இந்தச் சம்பவத்தைத் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் அதிவேகமாகப் பரவி வருகிறது.

ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு குறித்துக் கேள்விகளை எழுப்பி உள்ள இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகவும், அவரது தைரியத்தைப் பாராட்டியும் நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

புதன், 5 ஆகஸ்ட், 2026

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை ; கோவையில் போலீஸ் ஓட்டுநர் கைது !!!

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை ; கோவையில் போலீஸ் ஓட்டுநர் கைது !!!

 பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை ; கோவையில் போலீஸ் ஓட்டுநர் கைது !!!

உதவுவது போல் வந்து பாலியல் சீண்டல்: மகளிர் போலீசார் அதிரடி நடவடிக்கை !!!

​கோவை, பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காகப் போத்தனூர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் கைது செய்யப்பட்டு உள்ளார்.

​கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், வழக்கம் போல் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த பேருந்தில் ஏறி உள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த மாணவி பேருந்தின் படியில் நின்றபடி பயணித்து உள்ளார்.

​அப்போது, அதே பேருந்தில் பயணித்த நபர் ஒருவர், மாணவிக்கு உதவுவது போல நடித்து, அவருக்குப் பாலியல் சீண்டல் கொடுத்துத் தொல்லை அளித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, ஈச்சனாரி அருகே உள்ள தனது கல்லூரி நிறுத்தத்தில் இறங்கி, இச்சம்பவம் குறித்துப் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார்.

​மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், பாலியல் தொல்லையில் ஈடுபட்டது போத்தனூர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் என்பது தெரியவந்தது.

​இதனைத் தொடர்ந்து, காவலர் மணிவேந்தன் மீது வழக்குப் பதிவு செய்த பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலிசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 பாதுகாப்பளிக்க வேண்டிய காவலரே பேருந்தில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கைதான சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டல் - கோவையில் போக்சோ சட்டத்தில் பள்ளிக் கூட மாணவர் மீது வழக்கு !!!

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டல் - கோவையில் போக்சோ சட்டத்தில் பள்ளிக் கூட மாணவர் மீது வழக்கு !!!

 கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டல் - கோவையில் போக்சோ சட்டத்தில் பள்ளிக் கூட மாணவர் மீது வழக்கு !!!

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டிய பள்ளிக்கூட மாணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண்கள் அதிரடிப்படையினர் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். சிங்கப்பெண்கள் அதிரடிப்படையிடம் புகார் தெரிவிக்க 1091 என்ற எண்ணம் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கோவையில் ஒரு கல்லூரியில் படித்து வரும் 19 வயது மாணவி ஒருவர், சிங்கப்பெண்கள் அதிரடிப்படை உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.

அப்பொழுது அவர் தான் 16 வயதாக இருக்கும் போது பள்ளிக் கூடத்தில் படித்து வந்ததாகவும், அப்பொழுது அவரை விட இரண்டு வயது குறைவான 14 வயது மாணவர் காதலிப்பதாக கூறியதாகவும், இதனால் அவர் மாணவரிடம் பேசி வந்து உள்ளதாகவும், ஒரு நாள் அந்த மாணவர் அவரை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்து உள்ளார்.

அதை செல்போனில் வீடியோ எடுத்து தற்பொழுது, அந்த மாணவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோவை காண்பித்து மிரட்டி வருவதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இது பற்றி சிங்கப்பெண் அதிரடிப் படையினருக்கு கொடுத்த தகவலின் பெயரில் காவல் துறையினர் அந்த மாணவி புகார் அளித்த தற்பொழுது பிளஸ் டூ படித்து வரும் மாணவரை பிடித்து விசாரித்தனர். அதில் அந்த மாணவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து தற்போது மிரட்டி வருவதும் உறுதியானது.

உடனே கோவை மாநகரப் பகுதியைச் சேர்ந்த மகளிர் காவல் துறையினர் அந்தப் பள்ளிக் கூட மாணவர் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறும் போது;

பாதிக்கப்பட்ட மாணவிக்கு தற்பொழுது 19 வயது ஆகிறது. ஆனால் அவர் பாதிக்கப்பட்ட போது 16 வயது எனவே அந்த மாணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு போடப்பட்டு உள்ளது என்றனர்.

வெள்ளி, 31 ஜூலை, 2026

கோவை, சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரக் கொலை வழக்கு : கைதிகள் ஆஜர்படுத்துவதில் தாமதம் - விசாரணை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குத் தள்ளிவைப்பு !!!

கோவை, சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரக் கொலை வழக்கு : கைதிகள் ஆஜர்படுத்துவதில் தாமதம் - விசாரணை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குத் தள்ளிவைப்பு !!!

 கோவை, சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரக் கொலை வழக்கு : கைதிகள் ஆஜர்படுத்துவதில் தாமதம் - விசாரணை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குத் தள்ளிவைப்பு !!!

63 பேரின் சாட்சியப் பதிவுகள் நிறைவு: கருமத்தம்பட்டி டி.எஸ்.பி பாரியிடம் மீண்டும் சாட்சியம் !!!

 கோவையை அடுத்த சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் உள்ள எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

​கோவை, சூலூர் பகுதியில் கடந்த மே மாதம் 10 வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

 தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாகக் கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவரைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

​இவ்வழக்கில் சிறுமியின் தந்தை உட்பட இதுவரை 63 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

 மேலும், வழக்கை விசாரித்த அதிகாரியான கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) பாரி ஏற்கனவே நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து உள்ளார்.

 இந்நிலையில், இவ்வழக்கு நேற்று நீதிபதி ஹரிஹரன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

​அப்போது மதுரை மத்தியச் சிறையிலுள்ள கார்த்திக் மற்றும் திருச்சி சிறையிலுள்ள மோகன் ஆகிய இருவரையும் பாதுகாப்புடன் கோவை நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதில் போதிய கால தாமதம் ஏற்பட்டது. 

இதை அடுத்து, வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 அன்றைய தினம் அரசுத் தரப்பு சாட்சியான டி.எஸ்.பி பாரி மீண்டும் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

திங்கள், 20 ஜூலை, 2026

பாலியல் வழக்கில் கைதான காவல் கண்காணிப்பாளர்... வருமானத்திற்கு அதிகமாக ₹1.28 கோடி சொத்து சேர்த்த  ஆப்ரேஷன்: கோவைப்புதூர் முன்னாள் கமாண்டன்ட் செந்தில்குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு !!!

பாலியல் வழக்கில் கைதான காவல் கண்காணிப்பாளர்... வருமானத்திற்கு அதிகமாக ₹1.28 கோடி சொத்து சேர்த்த ஆப்ரேஷன்: கோவைப்புதூர் முன்னாள் கமாண்டன்ட் செந்தில்குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு !!!

பாலியல் வழக்கில் கைதான காவல் கண்காணிப்பாளர்... வருமானத்திற்கு அதிகமாக ₹1.28 கோடி சொத்து சேர்த்த  ஆப்ரேஷன்: கோவைப்புதூர் முன்னாள் கமாண்டன்ட் செந்தில்குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு !!!

பெண் காவலர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் ஏற்கனவே சிறைவாசம்; வீட்டைக் சல்லடை போட்டுச் சோதித்து ஆவணங்களைக் கைப்பற்றிய தனிப்படை !!!

கோவை அடுத்த கோவைபுதூரில் நாலாவது பட்டாலியன் பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் செந்தில்குமார். இவர் பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துதாக கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர். அதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தனது பெயர் மற்றும் மனைவி, உறவினர்கள் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் ஒரு கோடியே 28 இலட்சத்துக்கு சொத்துக்களை சேர்த்தது தெரியவந்தது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வியாழன், 16 ஜூலை, 2026

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமி: சில மணி நேரங்களில் சுற்றி வளைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை  போலீசார் - போக்சோவில் கம்பி எண்ணும் உத்தமன் !!!

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமி: சில மணி நேரங்களில் சுற்றி வளைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் - போக்சோவில் கம்பி எண்ணும் உத்தமன் !!!

 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமி: சில மணி நேரங்களில் சுற்றி வளைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை  போலீசார் - போக்சோவில் கம்பி எண்ணும் உத்தமன் !!!

 கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் 32 வயது நபரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் செயல்பட்டு வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின்பேரில் சிறப்பு அதிரடிப்படையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த உத்தமன் (32) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, அவரை கைது செய்த அதிகாரிகள், கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர், குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் பணியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டியதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார்களில் தொடர்ந்து இதேபோன்ற துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

கோவையில் ஆட்டிடம் பாலியல் வன்கொடுமை: கையும், களவுமாகச் சிக்கிய வடமாநிலத் தொழிலாளி கைது!

கோவையில் ஆட்டிடம் பாலியல் வன்கொடுமை: கையும், களவுமாகச் சிக்கிய வடமாநிலத் தொழிலாளி கைது!

 கோவையில் ஆட்டிடம் பாலியல் வன்கொடுமை: கையும், களவுமாகச் சிக்கிய வடமாநிலத் தொழிலாளி கைது!

சத்தம் கேட்டு ஓடிவந்த உரிமையாளர் மீது கல்வீசி கொலை மிரட்டல்; கவுண்டம்பாளையம் போலீசின் ஆக்ஷனில் கம்பி எண்ணும் வட மாநில நபர் !!!

கோவை, கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மருதாசலம். இவரது மகன் சதீஷ்குமார் (54). இவர் தனது வீட்டின் கீழ் பகுதியில் உள்ள கொட்டகையில் சுமார் 10 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவரது வீட்டின் கீழே உள்ள முட்புதர் பகுதியில் இருந்து ஆடு ஒன்று விசித்திரமான முறையில் சத்தம் போடுவதைக் கேட்டு சதீஷ்குமார் ஓடிச் சென்று பார்த்து உள்ளார்.

அப்போது, அந்த வீதியில் கட்டிட வேலை செய்து வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் தாஸ் மகன் கோபிந்தோ தாஸ் (35) என்பவர், சதீஷ்குமாரின் ஆட்டின் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். சதீஷ்குமார் அதைத் தடுக்க முயன்ற போது, கோபிந்தோ தாஸ் அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, கற்களை எறிந்து கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.

இது குறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில், கவுண்டம்பாளையம் போலீசார் விலங்கு வதை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, வடமாநில வாலிபர் கோபிந்தோ தாஸைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பேருந்து ஓட்டுனர் : போக்ஸோ சட்டத்தில் அதிரடியாகக் கைது - மகளிர் போலீஸ் நடவடிக்கை !!!

கோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பேருந்து ஓட்டுனர் : போக்ஸோ சட்டத்தில் அதிரடியாகக் கைது - மகளிர் போலீஸ் நடவடிக்கை !!!

 கோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பேருந்து ஓட்டுனர் : போக்ஸோ சட்டத்தில் அதிரடியாகக் கைது - மகளிர் போலீஸ் நடவடிக்கை !!!

வீட்டின் வெளியே விளையாடிய குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்; சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் !!!

கோவையில் 4 வயது பச்சிளம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவரைப் பேரூர் மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். 

​கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், வஞ்சியம்மன் நகர், திருமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (36). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுனராகப் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம், சங்கர் பக்கத்து ஊரில் உள்ள தனது நெருங்கிய உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று உள்ளார். 

அப்போது, அந்த உறவினர் வீட்டின் வெளியே அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது பச்சிளம் சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டு இருந்து உள்ளார்.

​சிறுமி தனியாக விளையாடிக் கொண்டு இருப்பதை நோட்டமிட்ட காமவெறி பிடித்த ஓட்டுனர் சங்கர், அக்குழந்தைக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி, ரகசியமாக வீட்டிற்குள் அழைத்துச் சென்று உள்ளார். 

அங்கு அந்த 4 வயது சிறுமிக்குக் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதில் பயந்து போன அந்தச் சிறுமி அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் சென்று, தனக்கு நேர்ந்த கொடூரத்தை கூறி உள்ளார்.

​இதைக் கேட்டு அதிர்ச்சியும் அடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரைப் பெற்றுக்கொண்ட மகளிர் போலீசார், சம்பவத்தின் விபரீதத்தை உணர்ந்து ஓட்டுனர் சங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

​இதனைத் தொடர்ந்து தலைமறைவாக முயன்ற சங்கரை போலீசார் அதிரடியாக மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். 

பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

கோவையில் அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவரே பிஞ்சு குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்துக் கைது செய்யப்பட்ட இந்த விபரீதச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பொதுமக்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சனி, 11 ஜூலை, 2026

கோவை அருகே அதிர்ச்சி சம்பவம் ; சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - இருசக்கர வாகனத்தில் தப்பிய வாலிபர் சிக்கினார் !!!

கோவை அருகே அதிர்ச்சி சம்பவம் ; சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - இருசக்கர வாகனத்தில் தப்பிய வாலிபர் சிக்கினார் !!!

 கோவை அருகே அதிர்ச்சி சம்பவம் ; சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - இருசக்கர வாகனத்தில் தப்பிய வாலிபர் சிக்கினார் !!!

கோவை அருகே சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிய வாலிபர் போலீசில் சிக்கினார்.

கோவை, சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அந்த பெண் வேலை முடித்து தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக சென்ற போது அந்த வழியாக ஒரு வாலிபர் இருசக்கர வாகனத்தில் அவரை கடந்து சென்றார். சிறிது தூரம் சென்ற அந்த வாலிபர் இருசக்கர வாகனத்தை திருப்பி அந்தப் பெண்ணின் அருகில் வந்து வழி கேட்டார். பின்னர் திடீரென அந்த பெண்ணுக்கு, பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை, இருந்த போதிலும் பயந்து போன அந்த வாலிபர் உடனடியாக அங்கு இருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார். இது குறித்து அந்த பெண் சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சுந்தரபுரம் பகுதியில் ரோடு சென்றனர். அப்பொழுது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்கு, பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று கிடக்கும்படி விசாரணை நடத்தினர். அதில் அவர் சுந்தராபுரம் ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த யுவராஜ் என்பது, மேற்கண்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இதை அடுத்து யுவராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே நகை பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 9 ஜூலை, 2026

கோவை, சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம், கொலை செய்த வழக்கு ; வீட்டு உரிமையாளர்கள் உட்பட 8 பேர் சாட்சியம் !!!

கோவை, சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம், கொலை செய்த வழக்கு ; வீட்டு உரிமையாளர்கள் உட்பட 8 பேர் சாட்சியம் !!!

கோவை, சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம், கொலை செய்த வழக்கு ; வீட்டு உரிமையாளர்கள் உட்பட 8 பேர் சாட்சியம் !!!

கோவை, சூலூர் அருகே 10 வயது சிறுமி கடந்த மே மாதம் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சிறுமியின் வீட்டு அருகே குடியிருந்த கார்த்தி, உடந்தையாக இருந்த மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

104 பேர் சாட்சியமாக சேர்க்கப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தற்பொழுது சாட்சிகள் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 16 பேர் சாட்சியம் அளித்து இருந்தனர். குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் தங்கி இருந்த வீட்டு உரிமையாளர்கள் இரண்டு பேர் உட்பட 8 பேர் சாட்சியம் அளித்தனர். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 13-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

திங்கள், 6 ஜூலை, 2026

தகாத உறவால் பறிப்போன 3 வயது குழந்தையின் உயிர் !!!

தகாத உறவால் பறிப்போன 3 வயது குழந்தையின் உயிர் !!!

 தகாத உறவால் பறிப்போன 3 வயது குழந்தையின் உயிர் !!!

தகாத உறவால் 3 வயது குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம், சீர்காழி மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்காவிற்கு உட்பட்ட ஆலவேலி கிராமம், காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கனிவண்ணன் (வயது 31). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2020- ஆம் ஆண்டு அதே தெருவைச் சேர்ந்த கவிப்பிரியாவை (வயது 25) காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு 6 வயது மற்றும் 3 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், அரிவேளூர் கிராமத்தில் தனியார் நுண்கடன் நிதி நிறுவனத்தில் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு பணம் வசூல் செய்யும் பணியில் இருந்த அபினேஷ் (வயது 30) என்பவருடன் திருமணத்திற்கு முன்பே கவிப்பிரியாவுக்கு பழக்கம் இருந்து உள்ளது. 

திருமணத்திற்கு பிறகும் இருவருக்கும் பழக்கம் தொடர்ந்தது. அது நாளடைவில் தகாத உறவாக மாறியது. இதனால் கனிவண்ணனுக்கும், கவிப்பிரியாவிற்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்து உள்ளது.

இதை அடுத்து, கணவனைப் பிரிந்த கவிப்பிரியா, செம்பனார்கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட ஆக்கூர் பாரதி வீதியில் குடியிருப்பு வளாகம் ஒன்றின் முதல் தளத்தில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். கவிப்பிரியாவின் வீட்டிற்கு வந்துச் செல்வதை அபினேஷ் வாடிக்கையாக வைத்து இருந்தார். இந்த நிலையில், கடந்த ஜூன் 25- ஆம் தேதி தனது 3 வயது மகன், பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் தலையில் அடிப்பட்டு பலத்த காயம் அடைந்ததாக மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து உள்ளார். பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

எனினும், சிகிச்சைப் பலனின்றி கடந்த ஜூன் 29- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு கவிப்பிரியாவின் குழந்தை உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்த கனிவண்ணன் தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவுச் செய்த காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, ஜூன் 30- ஆம் தேதி குழந்தையின் உடல் கனிவண்ணன் வீட்டில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குழந்தையைத் தள்ளி விட்டு மோதியதில் தான் உயிரிழந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, கவிப்பிரியா மற்றும் அபினேஷைப் பிடித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, கவிப்பிரியா தண்ணீர் எடுக்க சென்ற போது 3 வயது குழந்தை தொடர்ந்து அழுது அடம் பிடித்ததால் ஆத்திரம் அடைந்த அபினேஷ் குழந்தையைக் கீழே பிடித்து தள்ளி சுவற்றில் மோதியதில் தலையில் அடிபட்டதாகத் தெரிவித்து உள்ளார். இதனை மறைத்து பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக இருவரும் நாடகமாடியது தெரியவந்தது.

இதை அடுத்து காவல் துறையினர் இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து திருச்சம்பள்ளியில் உள்ள தரங்கம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கவிப்பிரியாவை திருச்சி பெண்கள் சிறையிலும், அபினேஷை கடலூர் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

தகாத உறவால் 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம், சீர்காழி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சனி, 4 ஜூலை, 2026

கோவை சூலூரில் மீண்டும் பயங்கரம்: வீடியோ எடிட்டர் இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கூட்டுப் பாலியல் பலாத்காரம்!

கோவை சூலூரில் மீண்டும் பயங்கரம்: வீடியோ எடிட்டர் இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கூட்டுப் பாலியல் பலாத்காரம்!

கோவை சூலூரில் மீண்டும் பயங்கரம்: வீடியோ எடிட்டர் இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கூட்டுப் பாலியல் பலாத்காரம்!

கிளைமாக்ஸ்’ இல் வீடியோ எடுத்து ‘பிளாக்மெயில்’ செய்த கொடூரர்கள்! திருச்சியைச் சேர்ந்த கிரிஷ் சாமுவேல் குமார் அதிரடி கைது - தப்பியோடிய அந்தோணி மரிய ராபினுக்கு போலீஸ் வலைவீச்சு !!!

கோவை மாவட்டம் சூலூர் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் 33 வயது இளம்பெண். வீடியோ எடிட்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே கௌதம் என்பவருடன் 2019 ம் ஆண்டில் திருமணம் ஆகி 2023 ல் கருத்து வேறுபாடு காரணமாக கணவனிடம் இருந்து பிரிந்து வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த பெண் சூலூர் கலையரங்கம் பின்புறம் உள்ள ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து வீடியோ எடிட்டிங் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், அந்த பெண்ணின் பக்கத்து ரூமில் தங்கி இருந்த அந்தோணி மரிய ராபின் என்பவர் அந்த பெண்ணுடன் நட்பு ரீதியில் பழகி வந்து உள்ளார். இளம்பெண்ணின் குடும்ப பின்னணியை தெரிந்து கொண்டு அவரை திருமணம் செய்து கொள்வதாக அந்தோணி மரிய ராபின் ஆசைவார்த்தை கூறி உள்ளார். இதனை நம்பி அந்த பெண் அந்தோணி மரிய ராபினுடன் கடந்த ஒரு வருடமாக தனிமையில் இருந்து உள்ளனர். இந்நிலையில் அந்தோணி மரிய ராபினுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்து உள்ளது. இதனால் இருவரும் கடந்த சில நாட்களாக பேசாமல் இருந்து வந்து உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதியம் அந்தோணி மரிய ராபின் அவரது நண்பர் கிரீஸ் சாமுவேல் குமார் என்பவரை அழைத்துக் கொண்டு வந்து அந்த பெண்ணுடன் சமாதானம் செய்ய பேசிக்கொண்டே இருந்துள்ளனர். அப்போது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஜூஸ் குடித்த பின் மயக்கம் அடைந்த அந்த பெண்ணை இருவரும் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து மயக்கம் தெளிந்து அந்த பெண் கேட்ட போது அந்தோணி மரிய ராபின் மற்றும் கிரீஸ் சாமுவேல் குமார் ஆகியோர் தாங்கள் பாலியல் உறவு கொண்டதை செல்போனில் வீடியோ எடுத்து வைத்து உள்ளதாக கூறி மிரட்டி உள்ளனர்.

மேலும், அந்தோணி மரிய ராபினை திருமணம் செய்ய வேண்டும் என்று டார்ச்சர் செய்தால் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்பி விடுவோம் என்றும், இது தொடர்பாக புகார் தெரிவித்தால் மகனுடன் கொலை செய்து விடுவதாகவும் இருவரும் மிரட்டி உள்ளனர். இது குறித்து கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் நேற்றிரவு புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்டம் நல்லம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த லாரன்ஸ் தேவராஜ் என்பவரின் மகன் அந்தோணி மரிய ராபின் (28), திருச்சியைச் சேர்ந்த கிரிஷ் சாமுவேல் குமார் (30) ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

தொடர்ந்து,  சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நின்று இருந்த கிரிஷ் சாமுவேல் குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், அந்தோணி மரிய ராபினை வலைவீசி தேடி வருகின்றனர். கோவையில் தொடர் கூட்டு பலாத்காரம், கொலை சம்பவங்கள் நடந்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதன், 1 ஜூலை, 2026

கோவையில் மனவளர்ச்சி குன்றிய 8 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்; 50 வயது நபரிடம் காவல்துறையினர் விசாரணை - நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் ஊர் மக்களுக்கு அறிவுரை கூறிய வீடியோ காட்சிகள்....

கோவையில் மனவளர்ச்சி குன்றிய 8 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்; 50 வயது நபரிடம் காவல்துறையினர் விசாரணை - நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் ஊர் மக்களுக்கு அறிவுரை கூறிய வீடியோ காட்சிகள்....

 கோவையில் மனவளர்ச்சி குன்றிய 8 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்; 50 வயது நபரிடம் காவல்துறையினர் விசாரணை - நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் ஊர் மக்களுக்கு அறிவுரை கூறிய வீடியோ காட்சிகள்....

 கோவை மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்த நிலையில் 50 வயது நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் ஊர் மக்களுக்கு அறிவுரை கூறிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. 

கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மனவளர்ச்சி குன்றிய சுமார் எட்டு வயது வட மாநில சிறுமிக்கு அதே பகுதியில் வசிக்கும் சுமார் 50 வயது மதிக்கத்தக்க வட மாநில நபர் பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது. 

இது குறித்து சிறுமியின் உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நேற்று இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் நேற்றிரவு அங்கு சென்ற சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் அந்த ஊர் மக்களிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். 

சிறுமி நன்கு மனவளர்ச்சியுடன் இருந்து இவர்தான் இது போன்ற செயலை செய்தார் என்று கூறியிருந்தால் இந்நேரம் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்றும் ஆனால் இதுபோன்று மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தைகளை பெற்றோர்கள் தான் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் இல்லை எனில் யாரேனும் பொறுப்பில் விட்டு செல்ல வேண்டும் இல்லையெனில் எங்கு சென்றாலும் அழைத்து செல்ல வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி உள்ளனர். மேலும் சட்டப்படி விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த ஊர் மக்கள் காவல்துறையினரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தற்பொழுது சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் அந்த ஊர் மக்களிடம் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. 


திங்கள், 29 ஜூன், 2026

கோவையில் பள்ளி மாணவி பலாத்காரம் - வாலிபர் கைது !!!

கோவையில் பள்ளி மாணவி பலாத்காரம் - வாலிபர் கைது !!!

 கோவையில் பள்ளி மாணவி பலாத்காரம் - வாலிபர் கைது !!!

கோவை, சூலூர் அருகே உள்ள கிராமத்தில் பீகாரைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அருகில் உள்ள கடைக்குச் சென்று விட்டு வருவதாக கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை, பெற்றோர் அக்கம், பக்கம் தேடி பார்த்து விட்டு பள்ளி மாணவியை காணவில்லை என சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சூலூர் காவல் துறையினர் பள்ளி மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாயமான அந்த சிறுமியுடன் பீகாரை சேர்ந்த ஒரு வாலிபர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். விசாரணையில் திருமண ஆசை வார்த்தைகளை கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறினார். இதை அடுத்து பீகாரைச் சேர்ந்த ராம் பிரகாஷ் மகன் புல் பாபு குமாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.