கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 செப்டம்பர், 2026

 "உருவக்கேலி செய்ததால் ஆத்திரம்" ; கோவையில் நேபாள இளைஞர் செங்கல்லால் அடித்துக் கொலை : ஜார்க்கண்ட் வாலிபர் கைது!

"உருவக்கேலி செய்ததால் ஆத்திரம்" ; கோவையில் நேபாள இளைஞர் செங்கல்லால் அடித்துக் கொலை : ஜார்க்கண்ட் வாலிபர் கைது!

ஈ-காமர்ஸ் நிறுவன ஊழியர்கள் இடையே போதையில் மோதல்: தப்பியோடிய முதன்மை குற்றவாளிக்குச் சூலூர் போலீஸ் வலை!

 கோவை அருகே பாப்பம்பட்டி பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த வாலிபர் கொடூரமான முறையில் செங்கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபரைச் சூலூர் காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.

கோவை, பாப்பம்பட்டி நந்தினி நகர் பகுதியில் உள்ள தனியார் நிலத்தின் வெற்றுச் செங்கல் கொட்டகை ஒன்றில், வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடப்பதாகச் சூலூர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 விசாரணையில், இறந்து கிடந்தவர் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள பிரபல ஈ-காமர்ஸ் (E-Commerce) நிறுவனத்தின் கிடங்கில் (Warehouse) பணியாற்றி வந்த நேபாள நாட்டைச் சேர்ந்த ராஜன் எ (எ) ராமேஸ்வர் சா என்பது தெரியவந்தது.

இக்கொலை சம்பவம் குறித்துச் சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, உடன் பணி புரியும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ராஜனின் உடல் தோற்றத்தைக் குறித்து அவருடன் பணி புரியும் சக ஊழியரான ஜெகதீஷ் என்பவர் அடிக்கடி கேலி செய்து வந்ததும், இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்ததும் அம்பலமானது.

கடந்த 5-ஆம் தேதி இரவு, ராஜன் அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார். அப்போது, அவரைத் தங்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஜெகதீஷ் மற்றும் அவரது நண்பரான ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மத்தயாஸ் மல்டோ ஆகியோர் அழைத்துச் சென்று உள்ளனர்.

செங்கல் கொட்டகை அருகே சென்ற போது, உருவக்கேலி தொடர்பாக ராஜனுக்கும், ஜெகதீஷுக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஆத்திரம் அடைந்த ஜெகதீஷ், அங்கு இருந்த செங்கல்லை எடுத்து ராஜனின் தலையில் சரமாரியாகத் தாக்கி உள்ளார். 

இதில் பலத்த காயம் அடைந்த ராஜன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்தத் தாக்குதலுக்கு மத்தயாஸ் மல்டோ முழுமையாக உடந்தையாக இருந்து உள்ளார்.

இதை அடுத்து தலைமறைவாக முயன்ற ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மத்தயாஸ் மல்டோவைச் சூலூர் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கொலையில் தொடர்புடைய முதன்மை குற்றவாளியான ஜெகதீஷைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

திங்கள், 7 செப்டம்பர், 2026

 "பவானி ஆற்றில் மிதந்த சாக்கு மூட்டைகள்" ;  பெண் மற்றும் சிறுமியின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக மீட்பு: அட்டப்பாடியில் கொடூரம்!

"பவானி ஆற்றில் மிதந்த சாக்கு மூட்டைகள்" ; பெண் மற்றும் சிறுமியின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக மீட்பு: அட்டப்பாடியில் கொடூரம்!

திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா? புதூர் போலீசார் தீவிர விசாரணை - கேரளா மற்றும் தமிழகத்தில் பரவும் அதிர்ச்சி!

​ கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே பவானி ஆற்றில் சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் மற்றும் சிறுமியின் உடல் பாகங்கள் துண்டு துண்டாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் எல்லைப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும், ஏற்படுத்தி உள்ளது.

அட்டப்பாடி புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சீரக்கடவு பகுதியில், நேற்று (செப்டம்பர் 6) பவானி ஆற்றில் சில சாக்கு மூட்டைகள் மிதப்பதை அப்பகுதி மக்கள் கவனித்து உள்ளனர். அந்தச் சாக்குகளில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, சந்தேகமடைந்த பொதுமக்கள் உடனடியாகப் புதூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

​சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதூர் போலீசார் சாக்கு மூட்டைகளைக் கைப்பற்றிச் சோதனையிட்டனர். அப்போது, அதில் மனித உடல் பாகங்கள் வெட்டப்பட்டுக் கிடந்தது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

​ஒரு சாக்கு மூட்டையில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண் மற்றும் சுமார் 5 வயது மதிக்கத்தக்கச் சிறுமியின் தலைகள் இருந்தன.

​மற்றொரு சாக்கில் அந்த 5 வயது சிறுமியின் உடற்பகுதி இருந்தது.

​சம்பவ இடத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் மிதந்து வந்த வேறொரு சாக்கில் அந்தப் பெண்ணின் உடற்பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.

​இருவரும் உயிரிழந்து சுமார் 4 முதல் 5 நாட்கள் ஆகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நீரில் நீண்ட நாட்கள் கிடந்ததால் உடல்கள் அழுகிய நிலையில் காணப்படுவதால், உடனடியாக அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

உடல் பாகங்கள் தனித்தனியாக வெட்டப்பட்டு வெவ்வேறு சாக்கு மூட்டைகளில் அடைத்து வீசப்பட்டு உள்ளதால், இது ஏதேனும் ஒரு இடத்தில் வைத்துத் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரக் கொலையாக இருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். வேறு ஏதேனும் பகுதியில் வைத்து இருவரையும் கொடூரமாகக் கொலை செய்து, உடல்களைத் துண்டு துண்டாக வெட்டிச் சாக்கில் அடைத்துப் பவானி ஆற்றில் வீசிச் சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

உயிரிழந்தவர்கள் அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அல்ல என்பது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் சமீபத்தில் காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் எதுவும் பதிவாகவில்லை.

​இதனால், பவானி ஆறு பாயும் தமிழக எல்லைப் பகுதிகளான கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்ட காவல் நிலையங்களில் பதிவான 'காணாமல் போனோர்' (Missing Cases) புகார்களையும், கேரளா முழுவதும் பதிவான புகார்களையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் மற்றும் சிசிடிவி (CCTV) காட்சிகளின் உதவியுடன் புதூர் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட உடல் பாகங்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

​இச்சம்பவம் தொடர்பாகப் புதூர் போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 103(1)-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து,

 உயிரிழந்தவர்கள் யார் ? கொலையாளிகள் யார் ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 "தலையில் கல்லை போட்டு கொடூரக் கொலை" ; சூலூர் அருகே முட்காட்டில் வாலிபர் நிர்வாணச் சடலமாக மீட்பு : கோவையில் பரபரப்பு!

"தலையில் கல்லை போட்டு கொடூரக் கொலை" ; சூலூர் அருகே முட்காட்டில் வாலிபர் நிர்வாணச் சடலமாக மீட்பு : கோவையில் பரபரப்பு!

கோவை சூலூரில் துணிச்சல் சம்பவம் : கொலையாளி யார் ? சூலூர் போலீசார் தீவிர விசாரணை!

 கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில், முட்காட்டிற்குள் உள்ள தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் தலையில் கல்லை போட்டுக் கொடூரமான முறையில் நிர்வாணமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், சூலூர் அடுத்த பாப்பம்பட்டி பகுதியில் 'நந்தினி நகர்' என்ற மனைப் பிரிவு பகுதி அமைந்துள்ளது. நீண்ட நாட்களாக வீட்டுமனைகளாகப் பிரிக்கப்பட்டு இருந்த இந்தப் பகுதியில் எந்தக் கட்டிடங்களும் கட்டப்படாமல், அடர்த்தியான முட்காடாக மாறி உள்ளது.

​இந்தப் பகுதியில் சிங்காநல்லூரைச் சேர்ந்த குருநாதன் என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளது. அவர் அந்த இடத்தில் புதிதாகத் தகரக் கொட்டகை அமைக்கும் பணியைத் தொடங்கி, ஆரம்பக்கட்ட வேலைகளைச் செய்து வருகிறார். 

குருநாதன் வாரம் ஒருமுறை நேரில் வந்து தனது இடத்தை நேரில் பார்வையிட்டுச் செல்வது வழக்கமாகும்.

இந்நிலையில், வழக்கம் போல இன்று (செப்டம்பர் 7) காலை குருநாதன் தனது இடத்தை ஆய்வு செய்வதற்காக வந்து உள்ளார். அப்போது, தான் புதிதாக அமைத்து வரும் தகரக் கொட்டகையின் உள்ளே வாலிபர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, ஆடை ஏதும் இன்றி நிர்வாண நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

​அவரது தலையில் பெரிய கல்லை தூக்கிப் போட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்துக் குருநாதன் உடனடியாக சூலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூலூர் காவல் துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுச் சம்பவ இடத்தில் தீவிரத் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

​கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர், அவர் எதற்காக இந்த ஆள்நடமாட்டமற்ற முட்காட்டுப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டார், தகராறு காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா ? அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா ? என பல்வேறு கோணங்களில் சூலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

​ஆள்நடமாட்டமில்லாத முட்காட்டில் வாலிபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுச் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கோவை சூலூர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

 "40 ஆண்டு நட்பில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு சந்தேகம்" ; நண்பரைக் கத்தியால் வெட்டிக் கொன்ற முதியவர் கைது!

"40 ஆண்டு நட்பில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு சந்தேகம்" ; நண்பரைக் கத்தியால் வெட்டிக் கொன்ற முதியவர் கைது!

 "40 ஆண்டு நட்பில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு சந்தேகம்" ; நண்பரைக் கத்தியால் வெட்டிக் கொன்ற முதியவர் கைது!

கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி ஆடு அறுக்கும் கத்தியால் கொடூரக் கொலை: நரசீபுரத்தில் பெரும் பரபரப்பு!

 கோவை மாவட்டம், நரசீபுரத்தில், மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, 40 ஆண்டுக்கால நண்பரைக் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி ஆடு அறுக்கும் கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொன்ற முதியவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை நரசீபுரம் வெள்ளிமலைப்பட்டினம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த நாகராஜ் (62) என்பவர் பாக்கு மட்டை வியாபாரம் செய்து வந்தார். இவரது வீட்டின் அருகில் வசித்து வந்த கந்தசாமி (65) காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். இருவரும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய நண்பர்களாக பழகி வந்து உள்ளனர்.

இந்நிலையில், மனைவியை இழந்து தனியாக வசித்து வந்த நாகராஜுக்கும், கந்தசாமியின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாகக் கந்தசாமி சந்தேகித்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த ஒரு மாதமாகத் தகராறு நிலவி வந்து உள்ளது.

இன்று காலை நாகராஜ் டீ வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் நரசீபுரம் தெற்கு ரத வீதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த கந்தசாமி, தான் மறைத்து வைத்து இருந்த மிளகாய்ப் பொடியை நாகராஜின் கண்ணில் தூவி உள்ளார்.

கண் எாிச்சலில் அலறிய நாகராஜை, ஆடு அறுக்கும் கத்தியால் கழுத்து, தலை மற்றும் வயிறு உள்ளிட்ட இடங்களில் 6-க்கும் மேற்பட்ட முறை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கு இருந்து தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் மிதந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலந்துறை போலீஸார், நாகராஜின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளியான கந்தசாமியைப் பிடிக்கப் போலீஸார் விரைந்த போது, அவர் தனது வலது கையைக் கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். அவரை மீட்ட போலீஸார் கைது செய்து, சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


 இச்சம்பவம் குறித்து ஆலந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

 "மதுபோதையில் நபரை குத்திக் கொன்றேன்" ;  நீலாம்பூர் போலிஸ் நிலையத்தில் வாலிபர் சரணடைவு - கோவையில் பரபரப்பு!

"மதுபோதையில் நபரை குத்திக் கொன்றேன்" ; நீலாம்பூர் போலிஸ் நிலையத்தில் வாலிபர் சரணடைவு - கோவையில் பரபரப்பு!

 "மதுபோதையில் நபரை குத்திக் கொன்றேன்" ;  நீலாம்பூர் போலிஸ் நிலையத்தில் வாலிபர் சரணடைவு - கோவையில் பரபரப்பு!

தென்னம்பாளையம் சாலையில் அழுகிய நிலையில் வாலிபரின் சடலம் மீட்பு : போலீஸார் தீவிர விசாரணை!

​ கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த வாலிபர், நீலாம்பூர் போலிஸ் நிலையத்தில் நேரில் சென்று சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, நீலாம்பூர் காவல் நிலையத்திற்கு நேற்று காலை வாலிபர் ஒருவர் வந்து உள்ளார். அங்கு இருந்த போலீஸாரிடம் பேசிய அவர், கடந்த 22-ஆம் தேதி இரவில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரைக் கத்தியால் குத்தியதாகவும், இதில் பலத்த காயம் அடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.

​மேலும், கொலையான நபரின் உடலை அவினாசி சாலையில் இருந்து தென்னம்பாளையம் செல்லும் வழியில் உள்ள பள்ளத்தில் வீசி எறிந்துவிட்டதாகவும் அவர் கூறி உள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார், அந்த வாலிபரைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீஸாரின் விசாரணையில் சரணடைந்த வாலிபர், தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தைச் சேர்ந்த சங்கரேஸ்வரன் (29) என்பதும், இவர் கோவை நீலாம்பூர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

​இதனைத் தொடர்ந்து, சங்கரேஸ்வரனைப் போலீஸார் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு தென்னம்பாளையம் செல்லும் பாதையில் இருந்த பள்ளத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. உடம்பில் கத்திக்குத்துக்கான காயங்கள் இருந்ததை உறுதிசெய்த போலீஸார், சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகச் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையான நபர் யார்? 

இச்சம்பவம் குறித்து நீலாம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சங்கரேஸ்வரனைக் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட நபர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

கஞ்சா விற்றதை வெளியே சொன்னதால் தொழிலாளியை கொலை செய்தோம் - கைதான இரண்டு பேர் வாக்குமூலம் !

கஞ்சா விற்றதை வெளியே சொன்னதால் பச்சை குத்தும் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கைதான இரண்டு பேர் போலீசில் வாக்கு மூலம் அளித்து உள்ளனர்.

திருச்சியை சேர்ந்த தேவதாஸ். இவர் கோவை, திருப்பூர் மாவட்டம் எல்லையான கரணம்பேட்டையில் தங்கி பச்சை குத்தும் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கருமத்தம்பட்டி அருகே ராமாட்சியம்பாளையம் நொய்யல் ஆற்றங்கரையை ஒட்டி இருக்கும் டாஸ்மார்க் மது கடைக்கு சென்றனர்.

அங்கு அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், அசோக் ஆகியோர் அவருக்குள் ஏற்பட்ட தகராறு இரண்டு பேரும் சேர்ந்து தேவதாசை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித், அசோக் ஆகியோரை தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர்கள் இரண்டு பேரும் கருமத்தம்பட்டி காவல்துறையில் சரணடைந்தனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கைதான இரண்டு பேரும் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக காவல்துறையினர் கூறும் போது;

ராமாட்சியம்பாளையம் மதுக்கடைக்கு தேவதாஸ் சென்றார். அங்கு ரஞ்சித், அசோக் ஆகியோர் கஞ்சா விற்று உள்ளனர். அதை தேவதாஸ் கேட்ட போது அவர்கள் கொடுக்காததால், தகராறு ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்கள் கஞ்சா விற்பதை தேவதாஸ் அவருக்கு தெரிந்தவர்களிடம் கூறி உள்ளார். இதை அறிந்த ரஞ்சித், அசோக் நேற்று முன்திடம் ராமாட்சியம்பாளையம் மதுக்கடை அருகே இருந்த தேவதாஸ் இடம் கேட்டு உள்ளனர்.

பின்னர் அவர்கள் நொய்யல் ஆற்றங்கரையோரம் நடந்து சென்ற தேவதாசை வழிமறித்து தடுத்து நிறுத்தினார். மேலும் அவர்கள் கஞ்சா விற்பனை வெளியே சொன்னது குறித்து கேட்டு உள்ளனர். அப்பொழுது அவர் தன்னிடம் தகராறு செய்தால், நீங்கள் கஞ்சா விற்பதை காவல்துறையில் சொல்லி விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் இரண்டு பேரும் கத்தியால் தேவதாஸ் வராமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். பின்னர் காவல் துறையினருக்கு பயந்து சரண் அடைந்து உள்ளனர். என்றும் அவர் வாக்குமூலத்தில் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வாலிபர்கள் தாக்கியதில் விபரீதம்" ; கோவையில் 3 நாட்களாகச் சிகிச்சையில் இருந்த தொழிலாளி பலி - கொலை வழக்காக மாற்றிப் காவல் துறை

வாலிபர்கள் தாக்கியதில் விபரீதம்" ; கோவையில் 3 நாட்களாகச் சிகிச்சையில் இருந்த தொழிலாளி பலி - கொலை வழக்காக மாற்றிப் காவல் துறை

 "வாலிபர்கள் தாக்கியதில் விபரீதம்" ; கோவையில் 3 நாட்களாகச் சிகிச்சையில் இருந்த தொழிலாளி பலி - கொலை வழக்காக மாற்றிப் காவல் துறை!

பெரியநாயக்கன்பாளையம் அருகே சோகம்: முன்விரோதத்தில் கூலித் தொழிலாளியை அடித்து நொறுக்கிய 4 பேர் கும்பல்!

 கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே வாலிபர்கள் கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, வழக்கைக் கொலை வழக்காக மாற்றிப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி கிரிஜா (54). இவர்கள் தற்போது சாமநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர்.

இவர்களது இளைய மகன் பிரதீப் குமார் (34). கூலித் தொழிலாளியான இவர் பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த 17-ஆம் தேதி (திங்கட்கிழமை) இரவு பிரதீப் குமாரை, வெள்ளமடை பூங்கா நகரைச் சேர்ந்த சிலர் சோமநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கார்டன் அருகே உள்ள காலியிடத்திற்கு அழைத்துச் சென்று உள்ளனர்.

அங்கு வைத்து அந்த கும்பல் பிரதீப் குமாரைக் கொடூரமாகத் தாக்கி உள்ளது. இதில் அவர் இரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடினார். தகவல் அறிந்து வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், அவரை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இச்சம்பவம் குறித்து தாய் கிரிஜா அளித்த புகாரின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் பூங்கா நகரைச் சேர்ந்த கார்த்திக் (44), பிரகாஷ் (26), ஹரிகிருஷ்ணன் (23) மற்றும் மதுரையைச் சேர்ந்த சிவா (24) ஆகிய 4 பேர் மீது முதற்கட்டமாகக் கொலை முயற்சி (Attempt to Murder) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனையில் 3 நாட்களாகத் தீவிர சிகிச்சையில் இருந்த பிரதீப் குமார், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

 இதை அடுத்து, பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் இவ்வழக்கை கொலை வழக்காக (Murder Case) மாற்றிப் பதிவு செய்து உள்ளனர்.

புதன், 19 ஆகஸ்ட், 2026

"ஏன் சத்தம் போடுற?" எனக் கேட்ட டிரைவர் அடித்துக் கொலை ; கோவையில் மனநல பாதிப்படைந்த நபரால் கோரச் சம்பவம்!

"ஏன் சத்தம் போடுற?" எனக் கேட்ட டிரைவர் அடித்துக் கொலை ; கோவையில் மனநல பாதிப்படைந்த நபரால் கோரச் சம்பவம்!

"ஏன் சத்தம் போடுற?" எனக் கேட்ட டிரைவர் அடித்துக் கொலை ; கோவையில் மனநல பாதிப்படைந்த நபரால் கோரச் சம்பவம்!

 வீட்டிற்குத் திரும்பிய போது தாக்குதல் -  போலீஸ் தீவிர விசாரணை!

 கோவை, சூலூர் அருகே உள்ள செல்லக்கரச்சல் பகுதியில், "ஏன் சத்தம் போடுகிறாய்?" எனக் கேட்ட சுமை ஊர்தி ஓட்டுநரை, மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கட்டையால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், செல்லக்கரச்சல் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (39). இவர் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.

​இன்று (ஆகஸ்ட் 19) மாலை சுமார் 4.00 மணி அளவில், செந்தில்குமார் செல்லக்கரச்சலில் உள்ள கோல்டன் பேக்கரியில் தனது நண்பர்களுடன் டீ குடித்து விட்டு, சந்தோஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் காந்தி நகரில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பி உள்ளார்.

வீட்டின் முன் இறங்கிய செந்தில்குமார், தனது வீட்டிற்கு அருகாமையில் வசிக்கும் கண்ணன் (35) என்பவர் சத்தமிட்டுக் கொண்டு இருப்பதைப் பார்த்து உள்ளார். கண்ணன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

​அப்போது செந்தில்குமார், "ஏன் சத்தம் போடுகிறாய்?" எனக் கண்ணனிடம் கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன், கட்டையால் செந்தில்குமாரின் இடது பக்கக் காதிற்குப் பின்னால் பலமாக அடித்து உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த செந்தில்குமார் நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்குத் தகவல் அளித்து வரவழைத்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் செந்தில்குமாரைச் பரிசோதித்துப் பார்த்த போது, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

​இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த கருமத்தம்பட்டி காவல் துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை சம்பவம் குறித்துக் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சூட்கேசில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: சந்தேகப்படும் இளைஞர், இளம்பெண் புகைப்படம் வெளியானது!

சூட்கேசில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: சந்தேகப்படும் இளைஞர், இளம்பெண் புகைப்படம் வெளியானது!

 சூட்கேசில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: சந்தேகப்படும் இளைஞர், இளம்பெண் புகைப்படம் வெளியானது!

புதுடெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் சிவப்பு நிற சூட்கேஸில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், சந்தேகப்படும் இளைஞர் மற்றும் இளம்பெண் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி, சென்னை சென்ட்ரலில் இருந்து ஆக்ரா வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கிடந்தது. அதனை போலீஸார் சோதனையிட்ட போது, அதற்குள் தலை மற்றும் கை,கால்கள் இல்லாத நிலையில் ஆண் சடலம் இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து உத்தரப் பிரதேச ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த சூட்கேஸ், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றப்பட்டது தெரிய வந்தது. இதை அடுத்து உத்தரப்பிரதேச போலீஸார் சென்னை ரயில்வே போலீஸாருடன் இணைந்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பதிவான சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் சூட்கேஸை ரயிலில் கொண்டு வந்து வைத்து விட்டு, இறங்கிச் சென்றது தெரிய வந்து உள்ளது. பின்னர் அவர்கள் சென்னை பூங்கா ரயில் நிலையத்துக்குச் சென்று, அங்கு இருந்து மின்சார ரயிலில் கூடுவாஞ்சேரி சென்றதும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டு உள்ளது.

கூடுவாஞ்சேரியில் இறங்கிய இருவரும் அங்கு இருந்து ஆட்டோவில் மற்றொரு பகுதிக்குச் சென்றதாகத் தெரிய வந்து உள்ளது. இதை அடுத்து அவர்கள் சென்ற ஆட்டோவின் பதிவு எண்ணைக் கண்டறிந்து அதன் மூலம் இருவரும் எங்கு சென்றனர் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும், இந்த கொலை சென்னையிலேயே நடைபெற்று இருக்கலாம் என்றும், கொலை செய்த பிறகு சடலத்தை துண்டு துண்டாக வெட்டி, சூட்கேஸில் வைத்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் அனுப்பி இருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனால் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீஸார் சார்பிலும் தனியாக வழக்குப் பதிவு செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, சி.சி.டி.வி காட்சிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வரும் போலீஸார், சந்தேகத்துக்குரிய இருவரையும் பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டு உள்ளனர்.

கொலைக்கான காரணம் என்ன? உயிரிழந்தவர் யார்? அவருக்கும் சந்தேகிக்கப்படும் இருவருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து 15 நாள்களுக்கும் மேலாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் முகக் கண்ணாடி அணிந்த அந்த இளம்பெண்ணும் இளைஞரும் சிவப்பு நிற சூட்கேஸ் உடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் சி.சி.டி.வி காட்சி, அவர்கள் புறநகரில் சூட்கேசஸ் உடன் பயணம் செய்த சி.சி.டி.வி காட்சி, சூட்கேசை ரயிலில் வைத்து விட்டு வெறும் கையுடன் அவர்கள் திரும்பிச் செல்லும் சி.சி.டி.வி காட்சி ஆகியவை தொடர்பான புகைப்பபடங்கள் வெளியாகி உள்ளன.

இந்த புகைப்படங்களை வைத்து தமிழ்நாடு மற்றும் ஆக்ரா ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக ரயில்வே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த இளம்பெண்ணையும், இளைஞரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கோவையில் முதியவர் கட்டையால் அடித்துக் கொலை... ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 5-வது ரத்தக் களறியால் உறைந்த மாநகரம்!

கோவையில் முதியவர் கட்டையால் அடித்துக் கொலை... ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 5-வது ரத்தக் களறியால் உறைந்த மாநகரம்!

 கோவையில் முதியவர் கட்டையால் அடித்துக் கொலை... ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 5-வது ரத்தக் களறியால் உறைந்த மாநகரம்!

சிங்காநல்லூரில் அழுகிய நிலையில் உடல் மீட்பு; தலைமறைவான பக்கத்து வீட்டுக்காரர் சிவாவை வலைவீசித் தேடும் 3 தனிப்படைகள்!

கோவை, சிங்காநல்லூர் தேவேந்திரகுல வீதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆன நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதே பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்து உள்ளார். இதனிடையே வேலுச்சாமி வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, பலத்த காயங்களுடன் வேலுச்சாமி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்து உள்ளார். தொடர்ந்து சடலத்தை மீட்ட சிங்காநல்லூர் காவல்நிலைய போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். வேலுசாமி கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டு இருந்த நிலையில், இதுகுறித்து மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முன்னதாக வேலுசாமி இரண்டு நாட்களுக்கு முன்பே கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில்,கொலைக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை என கூறப்படுகிறது. போலீசார் நடத்திய முதற்கட்ட  விசாரணையில்  வேலுசாமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிவா என்பவர் மாயமானது தெரியவந்து உள்ளது. இதையடுத்து  போலீசார் தலைமறைவாகியுள்ள அந்த நபரை தேடி வருகின்றனர். கோவையில் ஆகஸ்ட் மாதம் துவங்கியது முதல் பீளமேடு பகுதியில் நவீன் என்பவரும், கிணத்துக்கடவு பகுதியில் அஸ்வின் என்பவரும், பாப்பநாயக்கன்பாளையத்தில் சாந்தி என்ற பெண்ணும் கொலை செய்யப்பட்டு இருந்தனர். மேலும் இந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதனும் சக மாணவர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு இருந்தார். இந்த மாதத்தில் ஐந்தாவது கொலையாக இந்த கொடூர சம்பவம் நடந்திருப்பது கோவை மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.......

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

அமுதன் கொலை வழக்கு பின்னணி : கோவையில் 128 கல்லூரி நிர்வாகிகளுடன் காவல் துறை அதிரடி ஆலோசனைக் கூட்டம் !!!

அமுதன் கொலை வழக்கு பின்னணி : கோவையில் 128 கல்லூரி நிர்வாகிகளுடன் காவல் துறை அதிரடி ஆலோசனைக் கூட்டம் !!!

 அமுதன் கொலை வழக்கு பின்னணி : கோவையில் 128 கல்லூரி நிர்வாகிகளுடன் காவல் துறை அதிரடி ஆலோசனைக் கூட்டம் !!!

போதைப் பொருள் தடுப்பு, சைபர் பிரிவு, சி.சி.டி.வி கண்காணிப்பு: மாணவர் பாதுகாப்பிற்குப் போலீஸார் வழங்கிய கெடுபிடி அறிவுறுத்தல்கள் !!!

 கோவை, இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவன் அமுதன் சக மாணவர்களால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், கோவையில் உள்ள 128 கல்லூரிகளின் நிர்வாகிகளுடன் காவல் துறை உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி உள்ளனர்.

கோவை, பொள்ளாச்சி சாலையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த அமுதன் என்ற மாணவன், தனது நண்பருடன் சென்று கொண்டு இருந்த போது சில மாணவர்களால் வழிமறித்துத் தாக்கப்பட்டு உயிரிழந்தான்.

 இச்சம்பவம் குறித்துச் செட்டிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கல்லூரி மாணவர்களும் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

 கல்லூரியில் போதைப் பொருள் புழக்கம் குறித்துக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்ததால் தான் தனது மகன் அடித்துக் கொல்லப்பட்டதாக அமுதனின் பெற்றோர் குற்றம் சாட்டினர். (இதை கல்லூரி நிர்வாகம் மறுத்து உள்ளது).

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சீனியர் மாணவர்களைத் தாக்கிச் செல்போன் பறித்ததாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட முன்விரோதமே இந்த மோதலுக்கும், தாக்குதலுக்கும் காரணமாக இருக்கலாம் எனப் போலீஸார் தெரிவித்து உள்ளனர்.

மாணவர் அமுதனின் உயிரிழப்பைத் தொடர்ந்து, மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் கல்லூரி வளாகங்களில் குற்றங்களைத் தடுக்கக் கோவை கொடிசியா வளாகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாநகரக் காவல் ஆணையர் கண்ணன், மேற்கு மண்டலக் காவல் துறை தலைவர் (IG) ரம்யா பாரதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், கோவையைச் சேர்ந்த 128 கல்லூரிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 இதில் அனைத்துக் கல்லூரிகளிலும் தனியாகச் சைபர் பிரிவு தொடங்கப்பட வேண்டும். சமூக வலைதளங்களில் மாணவர்கள் இடையே ஏற்படும் மோதல்கள், சைபர் குற்றங்கள் கல்லூரி வளாகத்திற்குள் வன்முறையாக மாறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மாதாந்திர ஆய்வுக் கூட்டம், கல்லூரிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் மற்றும் மாணவர்களின் நடவடிக்கைகள் தொடர்பாகக் கல்லூரி நிர்வாகங்கள் தரும் தகவல்களின் அடிப்படையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அல்லது காவல் ஆணையர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும்.

 கல்லூரி மற்றும் விடுதி வளாகங்கள், நுழைவாயில்களில் போதிய CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுச் சீராக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். கல்லூரி நிர்வாகம் சார்பில் 'பறக்கும் படைகள்' (Flying Squads) அமைத்து, மாணவர்கள் தங்கி உள்ள விடுதிகளில் திடீர் சோதனைகள் நடத்தப்பட வேண்டும்.

 ஒவ்வொரு கல்லூரியிலும் தனியாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட வேண்டும். மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கத் தேவையான நேரங்களில் மனநல ஆலோசகர்களைக் கொண்டு ஆலோசனைகள் வழங்க வேண்டும். சிறிய குழுக்களாக மாணவர்களைப் பிரித்துத் தனி வழிகாட்டிகளை நியமிக்க வேண்டும்.

 மாணவர்கள் ஆன்லைன் சூதாட்டம், போதைப் பொருள் பயன்பாடு அல்லது சைபர் குற்றங்களில் ஈடுபடுவது தெரியவந்தாலோ, அவர்களின் நடவடிக்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டாலோ உடனடியாகப் பெற்றோருக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மாணவன் அமுதன் உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவல் துறை வழங்கி உள்ள இந்த அதிரடி அறிவுறுத்தல்கள் வெறும் காகித அளவிலேயே நிற்காமல் கல்லூரிகளில் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா ? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

மூதாட்டி கொடூரக் கொலை வழக்கு... செல்போனை திருட முயன்ற 17 வயது சிறுவன் கைது: 3 தனிப்படைகள் அமைத்துப் பிடித்த கோவை மாநகர போலீஸ்!

மூதாட்டி கொடூரக் கொலை வழக்கு... செல்போனை திருட முயன்ற 17 வயது சிறுவன் கைது: 3 தனிப்படைகள் அமைத்துப் பிடித்த கோவை மாநகர போலீஸ்!

 மூதாட்டி கொடூரக் கொலை வழக்கு... செல்போனை திருட முயன்ற 17 வயது சிறுவன் கைது: 3 தனிப்படைகள் அமைத்துப் பிடித்த கோவை மாநகர போலீஸ்!

கட்டையால் அடித்துக் கொன்று விட்டுத் தப்பிய மர்மம் விலகியது; கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளால் சிக்கிய கொலையாளி!

கோவை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் தனியாக இருந்த மூதாட்டியை அடித்துக் கொலை செய்த வழக்கின் பின்னணியில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை ரேஸ்கோர்ஸ் போலீஸார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். 

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை:

கோவை, பாப்பநாயக்கன்பாளையம் கருப்பக்கல் தோட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தி (58). இவருக்கு ராஜா (35) என்ற மகனும், பாலக்காட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் அமுதா (30) என்ற மகளும் உள்ளனர். சாந்தி அப்பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவர் வீட்டில் சமையல் வேலை செய்து வந்து உள்ளார்.

இந்நிலையில், கடந்த 11-ந் தேதி இரவில் வீட்டில் சாந்தி தனியாக இருந்த போது, மர்ம நபர் ஒருவரால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

3 தனிப்படைகள் அமைப்பு - சி.சி.டி.வி யில் சிக்கிய காட்சி:

கொலையாளிகளை விரைந்து பிடிக்கக் காவல் துறை சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்தனர்.

அப்போது, நள்ளிரவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு நபர் மட்டும் சாந்தியின் வீட்டிற்குள் சென்று, சில நிமிடங்களில் வெளியேறித் திரும்பி வரும் திடுக்கிடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனடிப்படையில் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், அந்த நபர் அதே பகுதியில் சுற்றித்திரியும் 17 வயது சிறுவன் என்பது அம்பலமானது.

செல்போன் திருட்டு முயற்சியில் கொலை - சிறுவன் கைது:

இதனைத் தொடர்ந்து, அந்தச் சிறுவனைப் பிடித்துத் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சாந்தி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து ரகசியமாக உள்ளே புகுந்த அச்சிறுவன், அங்கு இருந்த செல்போனைத் திருட முயன்று உள்ளான். அதனைச் சாந்தி பார்த்து விட்டதால், மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் அருகில் இருந்த கட்டையால் சாந்தியைப் பலமாக தலையில் அடித்து விட்டுத் தப்பிச் சென்றது தெரியவந்தது.

அடிதாங்க முடியாமல் சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து 17 வயது சிறுவனைக் கைது செய்த ரேஸ்கோர்ஸ் போலீஸார், அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் மூதாட்டியைக் கொலை செய்த வழக்கில் சிறுவன் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் தொடரும் கொடூரம் : 10 நாட்களில் 4-வது கொலையால் மக்கள் பீதி !!!

கோவையில் தொடரும் கொடூரம் : 10 நாட்களில் 4-வது கொலையால் மக்கள் பீதி !!!

 கோவையில் தொடரும் கொடூரம் : 10 நாட்களில் 4-வது கொலையால் மக்கள் பீதி !!!

வீட்டில் தனியாக இருந்த பெண் கட்டையால் அடித்துக் கொலை : குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர தேடுதல் !!!

 கோவை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 10 நாட்களில் கோவையில் நடைபெறும் 4-வது கொலைச் சம்பவம் இது என்பதால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்து உள்ளனர்.

கோவை, பாப்பநாயக்கன்பாளையம், கருப்புக்கால் தோட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தி (58). வீட்டுச் சமையல் வேலை செய்து வந்த இவரது சொந்த ஊர் கேரளா மாநிலம் ஆகும். இவர் தனது மகன் ராஜா என்பவருடன் வசித்து வந்தார். ராஜா வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல ராஜா வேலைக்குச் சென்று விட, சாந்தி வீட்டில் தனியாக இருந்து உள்ளார். இரவு வேலை முடிந்து ராஜா வீட்டிற்குத் திரும்பிய போது, தாய் சாந்தி தலையில் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.

கட்டையால் அடித்துக் கொலை - 3 தனிப்படைகள் அமைப்பு:

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரேஸ்கோர்ஸ் போலீஸார், சாந்தியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து சாந்தியைக் கட்டையால் தலையில் சரமாரியாக அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

 இக்கொலையைச் செய்த மர்ம நபர்களைப் பிடிக்கக் மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. சாந்தியின் சொந்த ஊரான கேரளாவிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10 நாட்களில் 4 கொலையால் கோவை மக்கள் பீதி:

கோவையில் சமீப நாட்களாகத் தொடர் கொலைச் சம்பவங்கள் அரங்கேறி வருவது சட்டம்-ஒழுங்கு குறித்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் கோவையில் 4 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு உள்ளனர்:

ஆகஸ்ட் 3: நவீன் கொலை

ஆகஸ்ட் 6: அஸ்வின் கொலை

ஆகஸ்ட் 10: அமுதன் கொலை

ஆகஸ்ட் 13: சாந்தி (தற்போது) அடித்துக் கொலை

அடுத்தடுத்து அரங்கேறும் இந்தத் தொடர் கொலைச் சம்பவங்களால் கோவை மாநகர மக்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

 போலீஸார் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தி, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

கோவையில் கல்லூரி மாணவர் கொலையில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவர் கைது - சக மாணவர்கள் 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு !!!

கோவையில் கல்லூரி மாணவர் கொலையில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவர் கைது - சக மாணவர்கள் 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு !!!

கோவையில் கல்லூரி மாணவர் கொலையில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவர் கைது - சக மாணவர்கள் 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு !!!

கோவையில் நடந்த கல்லூரி மாணவர் கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மேலும் ஒரு மாணவர் கைது செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள 6 பேரை தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி சேர்ந்தவர் அமுதன். இவர் கோவை, ஈச்சனாரி பகுதியில் உள்ள இந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

 இந்நிலையில் கடந்த 10 ம் தேதி அவர் சக மாணவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் கொலையில் தொடர்புடைய கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த 4 ம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஆரமுதன், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த அரவிந்த், தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலம் சிவா ரோஹித், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்த மணி பாலு மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய ஐந்து பேரை நேற்று கைது செய்தனர். மேலும் தற்பொழுது மதுரையைச் சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவனும் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறும் பொழுது ;

கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர் அமுதன் அடிக்கடி வெளியே சென்று தனது நண்பர்கள் அறையில் தங்குவது வழக்கம். கடந்த ஒன்பதாம் தேதி காலையில் அமுதன் உட்பட ஒன்பது மாணவர்கள் விடுதியில் 4 ம் ஆண்டு மாணவர்கள் தங்கி இருக்கும் அறைக்கு முகமூடி அணிந்து சென்று செல்போன்களை பதித்ததாக கூறப்படுகிறது.

இந்த செல்போன் திருட்டு தொடர்பாக 9 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், செல்போன் பறிப்பு சம்பவத்தில் அமுதனை அடையாளம் கண்டுபிடித்த மாணவர்கள், அவரை சராசரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்து உள்ளார். ஆனால் போதைப் பொருள்கள் தொடர்பாக புகார் செய்ததால், தான் அமுதனை சக மாணவர்கள் அடித்துக் கொன்றதாக தகவல் பரவி வருவதாகவும், தெரிவித்தனர். இந்த கொலை போதைப் பொருள் காரணமாக இல்லை என்றும், இதில் 20 மாணவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்து உள்ளது. அதில் ஐந்து பேரை கைது செய்து தற்போது மேலும் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும், மேலும் 6 மாணவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.


கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண் ரத்த வெள்ளத்தில் மர்மக் கொலை ; ரேஸ்கோர்ஸ் போலிஸார் தீவிர விசாரணை - கொலையாளி யார் ? எனத் தேடுதல் வேட்டை !!!

கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண் ரத்த வெள்ளத்தில் மர்மக் கொலை ; ரேஸ்கோர்ஸ் போலிஸார் தீவிர விசாரணை - கொலையாளி யார் ? எனத் தேடுதல் வேட்டை !!!

 கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண் ரத்த வெள்ளத்தில் மர்மக் கொலை ; ரேஸ்கோர்ஸ் போலிஸார் தீவிர விசாரணை - கொலையாளி யார் ? எனத் தேடுதல் வேட்டை !!!

 கோவை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 58 வயது பெண் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை, பாப்பநாயக்கன்பாளையம், கருப்புக்கால் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (58). இவர் தனது மகனுடன் வீட்டில் வசித்து வந்தார். இவரது மகன் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

வழக்கம் போல நேற்று காலையில் சாந்தியின் மகன் வேலைக்குச் சென்று உள்ளார். பின்னர் இரவு வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய போது, வீட்டின் முன்பக்கக் கதவு பூட்டப்படாமல் சாத்தப்பட்ட நிலையில் இருந்து உள்ளது.

சந்தேகம் அடைந்து கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது, தாய் சாந்தி முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறித் துடித்து உள்ளார்.

இது குறித்து உடனடியாகக் ரேஸ்கோர்ஸ் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சாந்தியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொலைச் சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, முதற்கட்ட விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

 சாந்தியை நகை அல்லது பணத்திற்காக மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்தார்களா ? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா ? என்ற கோணங்களில் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதன், 12 ஆகஸ்ட், 2026

இன்ஸ்டாகிராம் காதலுக்கு தாய்-மகள் கடும் எதிர்ப்பு... இருவரையும் வெட்டிக் கொன்ற காதலன்: ரத்த வெள்ளத்தில் தாய், மகள் பலி – கொலையாளியை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

இன்ஸ்டாகிராம் காதலுக்கு தாய்-மகள் கடும் எதிர்ப்பு... இருவரையும் வெட்டிக் கொன்ற காதலன்: ரத்த வெள்ளத்தில் தாய், மகள் பலி – கொலையாளியை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

 இன்ஸ்டாகிராம் காதலுக்கு தாய்-மகள் கடும் எதிர்ப்பு... இருவரையும் வெட்டிக் கொன்ற காதலன்: ரத்த வெள்ளத்தில் தாய், மகள் பலி – கொலையாளியை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

திண்டுக்கல்லைச் சேர்ந்த அக்ஷய் கைது; திருப்பூர் எஸ்.பி சிருஷ்டி சிங் நேரில் ஆய்வு செய்து அதிரடி விசாரணை!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதல் மற்றும் ரகசியத் திருமணத்திற்குத் தாய் மற்றும் மகள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த காதலன் இருவரையும் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் 'பகீர்' பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் தனது மனைவி தனலட்சுமி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்துத் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மகள் பூவரசியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். பழனிச்சாமியும் தனலட்சுமியும் பனியன் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.

​நேற்று காலை வழக்கம் போல் பழனிச்சாமி வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனலட்சுமியும் பூவரசியும் மட்டும் தனியாக இருந்துள்ளனர். அப்போது திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான அரிவாளால் தாய் தனலட்சுமி மற்றும் மகள் பூவரசி ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தாய் மற்றும் மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குள் இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு உறைந்து போயினர். அதேவேளையில், கொலையை முடித்து விட்டுத் தப்பி ஓட முயன்ற கொலையாளியை அப்பகுதி பொதுமக்கள் சுற்றிய வளைத்துப் பிடித்துத் தர்ம அடி கொடுத்துப் பல்லடம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பல்லடம் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலிஸார் விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகப் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) திருமதி சிருஷ்டி சிங் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுத் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டார். 

​5 ஆண்டு இன்ஸ்டாகிராம் காதல் - 'பகீர்' கொலையின் பின்னணி:

பிடிபட்ட நபரிடம் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷய் என்பது தெரியவந்தது. பூவரசியும் அக்ஷயும் கடந்த 5 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் பழகிக் காதலித்து வந்ததாகவும், சில மாதங்களுக்கு முன்பு ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் பூவரசி தனது தாய் வீட்டிலேயே தங்கி வேலைக்குச் சென்று வந்து உள்ளார்.

​இவர்களது இன்ஸ்டாகிராம் காதல் மற்றும் ரகசியத் திருமணம் குறித்துத் தாய் தனலட்சுமிக்குத் தெரியவரவே, அவர் அக்ஷயுடன் தொடர்பை துண்டிக்குமாறு மகளைக் கடுமையாகக் கண்டித்து உள்ளார். இதனால் பூவரசி, அக்ஷய்யின் போன் அழைப்புகளைத் தவிர்த்து வந்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அக்ஷய், நேற்று காலை அரிவாளுடன் வீட்டிற்குள் புகுந்து தாய், மகள் இருவரையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது அம்பலமானது.

​கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாளைப் பறிமுதல் செய்த பல்லடம் போலீஸார், கைதான அக்ஷய்யை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் தாய் மற்றும் மகளைக் காதலனே அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் பல்லடம் பகுதி முழுவதும் பெரும் உறைச்சலையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சனி, 8 ஆகஸ்ட், 2026

கோவையில் அண்ணனைக் கத்தியால் குத்திக் கொன்று கிணற்றில் வீசிய தம்பி ; உடலை மறைத்து இருசக்கர வாகனத்தில் பயணம் - நண்பருடன் சேர்ந்து கொடூரம் !!!

கோவையில் அண்ணனைக் கத்தியால் குத்திக் கொன்று கிணற்றில் வீசிய தம்பி ; உடலை மறைத்து இருசக்கர வாகனத்தில் பயணம் - நண்பருடன் சேர்ந்து கொடூரம் !!!

 கோவையில் அண்ணனைக் கத்தியால் குத்திக் கொன்று கிணற்றில் வீசிய தம்பி ; உடலை மறைத்து இருசக்கர வாகனத்தில் பயணம் - நண்பருடன் சேர்ந்து கொடூரம் !!!

 கோவை அருகே மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த அண்ணனைக் கத்தியால் குத்திக் கொலை செய்து, சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று பாழடைந்த கிணற்றில் வீசிய தம்பி மற்றும் அவரது நண்பரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அடுத்த வெள்ளமடை, சமநாயக்கன்பாளையம் ஆண்டாள் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (48). இவரது தாய் சரஸ்வதி. செந்தில்குமார் அடிக்கடி மது அருந்தி விட்டு குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி இரவு சுமார் 10.00 மணி அளவில் சரஸ்வதியின் வீட்டில் வைத்துச் செந்தில்குமாருக்கும், அவரது இளைய தம்பியான சம்பத்குமாருக்கும் (42) இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த தம்பி சம்பத்குமார் மற்றும் அவரது நண்பரான வெள்ளமடை விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (24) ஆகிய இருவரும் சேர்ந்து, செந்தில்குமாரைக் கையால் தாக்கியும், கத்தியால் மாறி, மாறிச் சரமாரியாகக் குத்தியும் கொடூரமாகக் கொலை செய்தனர்.

கொலை செய்த பின்னர், செந்தில்குமாரின் உடலை இருசக்கர வாகனத்தில் நடுவே வைத்துச் சுமந்து சென்ற இருவரும், வெள்ளமடை பகுதியில் உள்ள நட்ராஜ் என்பவரது தரிசு நிலத்தில் இருந்த பாழடைந்த கிணற்றில் வீசி விட்டுத் தப்பியோடினர்.

இச்சம்பவத்தைக் கண்டு அலறித் துடித்த தாய் சரஸ்வதி, பயத்தில் தனது மருமகள் மற்றும் பேரனுடன் கீரணத்தத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்று தஞ்சம் புகுந்தார்.

இந்நிலையில், கடந்த 6-ஆம் தேதி ஆண்டாள் நகர் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தைக் கைப்பற்றினர்.

தகவல் அறிந்து வந்த தாய் சரஸ்வதி, இறந்து கிடந்தது தனது மூத்த மகன் செந்தில்குமார் தான் என்பதை அவரது உடைகள் மூலம் உறுதி செய்தார்.

வெள்ளமடை கிராம நிர்வாக அலுவலர் (VAO) கார்த்திகா (49) அளித்த புகாரின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் முதற்கட்டமாக சந்தேக மரணம் (Sec 194 BNSS) எனப் பதிவு செய்யப்பட்டு இருந்த வழக்கு, தற்போது கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

இவ்வழக்கில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், அண்ணனைக் கொன்ற தம்பி சம்பத்குமார் (A1) மற்றும் அவரது நண்பர் ஆனந்தகுமார் (A2) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

வாலிபரைக் கொன்று செல்ஃபி வீடியோ வெளியிட்ட வழக்கில் அதிரடி : சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு - படுகாயம் அடைந்த கூட்டாளிக்கு மருத்துவமனையில் சிகிச்சை !!!

வாலிபரைக் கொன்று செல்ஃபி வீடியோ வெளியிட்ட வழக்கில் அதிரடி : சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு - படுகாயம் அடைந்த கூட்டாளிக்கு மருத்துவமனையில் சிகிச்சை !!!

 வாலிபரைக் கொன்று செல்ஃபி வீடியோ வெளியிட்ட வழக்கில் அதிரடி : சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு - படுகாயம் அடைந்த கூட்டாளிக்கு மருத்துவமனையில் சிகிச்சை !!!

கிணத்துக்கடவு கொலை வழக்கு: பொள்ளாச்சி, ஈரோட்டில் பதுங்கிய கொலையாளிகளைத் துரத்திப் பிடித்த போலீஸ் !!! 
 கோவையில் இளைஞரைக் கொடூரமாகக் கொலை செய்து விட்டு வீடியோ வெளியிட்ட சம்பவத்தில், பிடிபட்ட 17 வயது சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார். போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட கூட்டாளி மாதேஷ், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையம் சக்தி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் அஸ்வின் (22). இவர் கடந்த 6-ஆம் தேதி நள்ளிரவு தனது நண்பரின் அறையில் தங்கி இருந்த போது கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து அஸ்வினின் தாயார் அளித்த புகாரின் பேரில், கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவருமே இந்த கொடூரக் கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது.

சம்பவத்தன்று அஸ்வின், தனது நண்பர்களான மாதேஷ் மற்றும் 17 வயது சிறுவனைத் தனக்கு மது வாங்கி வருமாறு பணித்து உள்ளார். ஆனால், அவர்கள் மது வாங்காமல் திரும்பியதால் ஆத்திரம் அடைந்த அஸ்வின், அவர்களைக் கடுமையாகச் திட்டி தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதில் ஏற்பட்ட கோபத்தில், அஸ்வின் தூங்கிக் கொண்டு இருந்த போது சுத்தியலால் மார்பு மற்றும் தலையில் தாக்கியும், கழுத்தில் கத்தியால் குத்தியும் கொடூரமாகக் கொலை செய்து உள்ளனர். மேலும், இக்கொடூரச் சம்பவத்தைச் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து தங்களது நண்பர்களுக்கும் பரப்பிவிட்டு அங்கு இருந்து தப்பி உள்ளனர்.

தனிப்படை போலிசாரின் தேடுதல் வேட்டையில், குற்றவாளிகள் இருவரும் திருப்பூர், ஈரோடு, பழனி ஆகிய இடங்களில் தலைமறைவாக இருந்து விட்டுப் பொள்ளாச்சிக்குத் திரும்பி வருவது தெரியவந்தது.

உடனடியாகச் செயல்பட்ட போலீசார் அவர்களைத் துரத்தினர். கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபாளையம் ரயில்வே பாலம் பகுதியில் பதுங்கி இருந்த மாதேஷைப் பிடிக்க முயன்றனர். அப்போது, அவர் பாலத்தில் இருந்து கீழே குதித்துத் தப்ப முயன்றார். இதில் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

போலீசார் அவரை மீட்டுப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்த பின், மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு அவருக்குப் போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேவேளையில், இவ்வழக்கில் பிடிபட்ட 17 வயது சிறுவன் கோவை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, போலீசாரின் நடவடிக்கையைத் தொடர்ந்து கோவை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

கேங்வார் கொடூரம் ; நள்ளிரவில் கூலித் தொழிலாளி சுத்தியலால் அடித்துக் கொலை - இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்ட இருவர் கைது !!!

கேங்வார் கொடூரம் ; நள்ளிரவில் கூலித் தொழிலாளி சுத்தியலால் அடித்துக் கொலை - இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்ட இருவர் கைது !!!

 கேங்வார் கொடூரம் ; நள்ளிரவில் கூலித் தொழிலாளி சுத்தியலால் அடித்துக் கொலை - இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்ட இருவர் கைது !!!

தப்பிக்க முயன்ற போது கொலையாளிக்குக் கை முறிவு : கிணத்துக்கடவு போலீஸார் அதிரடி நடவடிக்கை !!!

​ கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளியைக் கொடூரமாகக் கொலை செய்து, அதனை இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பதிவிட்ட 2 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையின் போது தப்பிக்க முயன்ற கொலையாளி ஒருவருக்குக் கை முறிவு ஏற்பட்டது.

​கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் அஸ்வின் (22). கல் உடைக்கும் கூலித் தொழிலாளியான இவருக்கும், அவரது நண்பர்களான மாதேஷ் (22), விஷ்ணு (19) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோருக்கும் இடையே குழுவாக அமர்ந்து மது அருந்தும் பழக்கம் இருந்து உள்ளது.

​இந்தச் சூழலில், 16 வயது சிறுவனைப் பள்ளிக்குச் செல்ல விடாமல் தடுத்து, மது அருந்த வைத்து குறித்து அஸ்வின் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

 இதன் காரணமாகக் குழுவிற்குள் 'கேங்வார்' மோதல் போக்கு உருவாகி உள்ளது.

​சம்பவத்தன்று இரவு மது அருந்தி விட்டு அஸ்வின் தனது நண்பர் விஷ்ணுவின் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்தார். அப்போது மதுபோதையில் அங்கே வந்த மாதேஷ் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரும் சேர்ந்து, தூங்கிக் கொண்டு இருந்த அஸ்வினைச் சுத்தியல் மற்றும் அரிவாளால் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்தனர்.

​மேலும், இந்த கொடூர சம்பவத்தைத் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

​இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த கிணத்துக்கடவு காவல் நிலையப் போலீசார், அஸ்வினின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 15 போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

​இந்நிலையில், இன்று கோடங்கிபாளையம் ரயில்வே பாலம் அருகே மறைந்து இருந்த கொலையாளிகளான மாதேஷ் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரையும் போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்ற மாதேஷ் கீழே விழுந்ததில் அவரது கையில் முறிவு ஏற்பட்டது.

​இதனைத் தொடர்ந்து, மாதேஷைப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கையில் கட்டுப் போட்டு போலீசார் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

பங்காளி கிட்ட எல்லாம் சொல்லி வச்சுக்கோ..." சுத்தியலால் கொடூரமாகத் தாக்கிச் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட கொலையாளிகள் !!!

பங்காளி கிட்ட எல்லாம் சொல்லி வச்சுக்கோ..." சுத்தியலால் கொடூரமாகத் தாக்கிச் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட கொலையாளிகள் !!!

 பங்காளி கிட்ட எல்லாம் சொல்லி வச்சுக்கோ..." சுத்தியலால் கொடூரமாகத் தாக்கிச் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட கொலையாளிகள் !!!

கிணத்துக்கடவு வாலிபர் படுகொலை சம்பவத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோக்கள் !!!

​ கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே வாலிபரைக் கொடூரமாகக் கொலை செய்த கொலையாளிகள், "பங்காளி கிட்ட எல்லாம் சொல்லி வச்சுக்கோ..." என்று கூறி சுத்தியலால் தாக்கும் அதிர்ச்சி வீடியோவைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், ​பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபர், நேற்று நள்ளிரவு தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்துக் கிணத்துக்கடவு போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

​போலீசாரின் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (22) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரும் மது அருந்தும் பழக்கம் தொடர்பான முன் விரோதத்தில், அஸ்வின் தூங்கிக் கொண்டு இருந்த போது வீட்டிற்குள் புகுந்து அரிவாள் மற்றும் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்தது தெரியவந்தது.

இந்நிலையில், அஸ்வினைத் தாக்கும் போது கொலையாளிகள் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளனர். அதில், அஸ்வினைச் சுத்தியலால் கொடூரமாகத் தாக்கியபடி, "பங்காளி கிட்ட எல்லாம் சொல்லி வச்சுக்கோ..." என்று மிரட்டல் தொனியில் பேசி, அந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.

​இந்தக் கொடூர வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாகப் பரவி வருவதுடன், பொதுமக்கள் இடையே மிகுந்த பீதியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

​சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுப் போலிசாருக்குச் சவால் விடும் வகையில் நடந்து கொண்ட கொலையாளிகளான மாதேஷ் மற்றும் 16 வயது சிறுவனைக் கைது செய்யக் கிணத்துக்கடவு போலிசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.