விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 செப்டம்பர், 2026

லண்டனில் அஜித் குமாரின் கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய் !

லண்டனில் அஜித் குமாரின் கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய் !

 போட்டி நடக்கும் இடத்திற்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய் அங்கு பந்தயத்திற்கு தயாராக இருந்த அஜித் குமாரை நோக்கி ஓடிச் சென்று கட்டித் தழுவினார். இருவரும் பரஸ்பரம் முத்தமிட்டு தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

இங்கிலாந்தில் நடைபெறும் லீ மான்ஸ் கோப்பை தொடரில், நடிகரும் ரேசருமான அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கொடி அசைத்து இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலகளாவிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், செப்டம்பர் 10-ஆம் தேதி, இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தின் நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள உலகப் புகழ் பெற்ற சில்வர்ஸ்டோன் ஓடுதளத்திற்கு (Silverstone Circuit) சென்ற முதலமைச்சர் விஜய், உலகப்புகழ் பெற்ற லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார். லீ மான்ஸ் கோப்பை நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று இந்த சர்வதேச நிகழ்வில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

போட்டி நடக்கும் இடத்திற்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய் அங்கு பந்தயத்திற்கு தயாராக இருந்த அஜித் குமாரை நோக்கி ஓடிச்சென்று கட்டித் தழுவினார். இருவரும் பரஸ்பரம் முத்தமிட்டு தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர். பின்னர் போட்டியில் பங்கேற்கும் சக வீரர்கள் ஒவ்வொருவரையும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, அஜித் குமார் அறிமுகம் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவருடயை காரில் அமர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் இந்திய நேரப்படி, இரவு 9.40 மணிக்கு லீமான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த லீ மான்ஸ் கோப்பை தொடரில் அஜித் குமார் தவிர்த்து, இந்தியாவின் முன்னணி ஃபார்முலா 1 வீரர்களான நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா பட்டேல் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

மேலும் முன்னதாக சில்வர்ஸ்டோன் மைதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அஜித் குமார், தமது அழைப்பை ஏற்று இங்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ்த் திரைத்துறையில் பல ஆண்டுகளாக தல - தளபதி என்று கொண்டாடப்பட்ட, கோடிக் கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஜோசப் விஜய்யும், அஜித் குமாரும் லண்டனில் சந்தித்துக் கொண்டது, ஒட்டுமொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

 "எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்" ; தடையோட்டப் பயிற்சியுடன் கோவையில் கோலாகலமாகத் தொடங்கியது SSVM 5-வது ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாடு!

"எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்" ; தடையோட்டப் பயிற்சியுடன் கோவையில் கோலாகலமாகத் தொடங்கியது SSVM 5-வது ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாடு!

விண்வெளி வீரர் பிரசாந்த் நாயர், அபினவ் பிந்த்ரா பங்கேற்பு: மாணவர்களுடன் சவால்களை எதிர்கொள்ளும் அனுபவப் பயணம்!

 எதிர்காலத்தின் சவால்களை மாணவர்கள் மன உறுதியுடன் எதிர்கொள்ளும் வகையில், கோவை SSVM கல்வி நிறுவனங்கள் நடத்தும் 3 நாள் 'ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா' (Transforming India) 5-வது மாநாடு மாணவர்களுக்கான 'தடை ஓட்டப் பயிற்சியுடன்' (Obstacle Course) இன்று உற்சாகமாகத் தொடங்கியது.

உற்சாகமான தடையோட்டப் பயிற்சி:

"எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்" (Adapt to the Future) என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டு உள்ள இம்மாநாட்டின் முதல் நாளில், SSVM வேர்ல்ட் ஸ்கூல் மாணவர்கள் பங்கேற்ற 'ஸ்டூடண்ட் பர்ஸ்ட் ஆப்ஸ்டக்கிள் கோர்ஸ்' எனப்படும் சவாலான தடையோட்டப் பயிற்சி நடத்தப்பட்டது.

வெறும் சொற்பொழிவுகளுடன் தொடங்காமல், மாணவர்கள் தங்களது உடல் மற்றும் மன வலிமையைச் சோதிக்கும் வகையில் வளைந்து கொடுத்தும், கம்பிகளைப் பிடித்துத் தொங்கியும் (Monkey bar), தடைகளைத் தாண்டித் தங்களைச் சமன் செய்தும் இந்தப் பயிற்சியில் அசத்தினர்.

 ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொண்டு மாணவர்கள் முன்னேறிய இந்த நிகழ்வு, தைரியம் மற்றும் தன்னம்பிக்கையின் நேரடிப் பாடமாக அமைந்தது.

நிர்வாகக் குழுவினரும் பங்கேற்பு:

SSVM கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர். மணிமேகலை மோகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்த இந்த நிகழ்வில், அறங்காவலர் எஸ். மோகன்தாஸ், இயக்குனர் ஸ்ரீஷா மோகன்தாஸ், இயக்குனர் நிதின் ஜெய் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து தடையோட்டச் சவால்களில் பங்கேற்று ஊக்கமளித்தனர்.

இது குறித்து டாக்டர். மணிமேகலை மோகன் பேசுகையில் :-

 "குழந்தைகள் தங்களின் எல்லைகளைத் தாண்டிச் செயல்படுவதை அனுபவபூர்வமாக உணர வேண்டும் என்பதே இதன் நோக்கம். இன்று சவால்களை எப்படித் தாண்டுவது என்று குழந்தைகள் கற்றுக்கொண்டால், நாளை வாழ்க்கை தரும் சவால்களை அவர்கள் வெற்றிகரமாக எதிர்கொள்வார்கள்" எனத் தெரிவித்தார்.

கல்வி இயக்குனர் ஸ்ரீஷா மோகன்தாஸ் கூறுகையில் :-

"இது வெறும் தலைப்பு அல்ல; கடினமான சூழ்நிலைகளில் மன உறுதியோடு தொடர்ந்து முன்னேறும் தைரியத்தைக் கண்டறியும் வாய்ப்பு" என்றார்.

சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு:

செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் 1,800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ககன்யான் விண்வெளி வீரர் மற்றும் இந்தியப் படைப்பிரிவு அதிகாரி ஏர் கமாண்டோர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர்

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா

இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்

பிரபல பரதநாட்டியக் கலைஞர் மற்றும் நடன இயக்குநர் ருக்மணி விஜயகுமார்

ஆகிய சாதனையாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். விளையாட்டு, உடல் அசைவுகள், ஒழுக்கம் மற்றும் மன உறுதி ஆகியவற்றை மாணவர்கள் நேரடியாக அனுபவபூர்வமாக உணரும் வகையில் இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

 "சீறிப் பாய்ந்த மாணவர்கள்... ஜத்தன் ஹவுஸ் சாம்பியன்" ; கோவை ரத்தினம் பப்ளிக் பள்ளியில் 'ஸ்போர்ட்ஸ் வகான்சா 2026'!

"சீறிப் பாய்ந்த மாணவர்கள்... ஜத்தன் ஹவுஸ் சாம்பியன்" ; கோவை ரத்தினம் பப்ளிக் பள்ளியில் 'ஸ்போர்ட்ஸ் வகான்சா 2026'!

 "சீறிப் பாய்ந்த மாணவர்கள்... ஜத்தன் ஹவுஸ் சாம்பியன்" ; கோவை ரத்தினம் பப்ளிக் பள்ளியில் 'ஸ்போர்ட்ஸ் வகான்சா 2026'!

ஏரோபிக்ஸ், சிலம்பம், டேக்வாண்டோ என மாஸ் காட்டிய மாணவர்கள்: 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

​ கோவை, ரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் (RIPS) ‘ஸ்போர்ட்ஸ் வகான்சா 2026’ (Sports Vaganza 2026) என்ற மாபெரும் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் ரத்தினம் என்.சி.சி. மைதானத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு 'ஹோஷ் அஜைல்' (Hosh Agile) மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மார்ட்டின் தேவபிச்சை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, விளையாட்டுப் போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உற்சாகமூட்டினார்.

​நிகழ்ச்சியில் ரத்தினம் குழுமத்தின் இயக்குநர் ஷிமா செந்தில், பள்ளி முதல்வர் ஆஷ்மி, தலைமை செயல்பாட்டு அலுவலர் அபிநயா சங்கரி மற்றும் வணிக வளர்ச்சி மேலாளர் கார்த்தி பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்து மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி வாழ்த்தினர்.

காலை 7.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற்ற விளையாட்டு விழாவில், நர்சரி வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

​மாணவர்கள் சிலம்பம், டேக்வாண்டோ, ஏரோபிக்ஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூம்பா நடனம் உள்ளிட்ட பல்வேறு உடற்பயிற்சி சார்ந்த சாகச நிகழ்சிகளையும், பல்வேறு பிரிவுத் தடகளப் போட்டிகளையும் திறம்பட நிகழ்த்திக் காட்டிப் பார்வையாளர்களின் பலத்த கரவொலியைப் பெற்றனர்.

போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்று சிறப்பிடம் பிடித்த மாணவ-மாணவியருக்குத் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

​பள்ளியின் இல்லங்களுக்கு (House System) இடையே நடைபெற்ற கடும் போட்டிகளின் முடிவில், 'ஜத்தன் ஹவுஸ்' (Jathan House) அதிக புள்ளிகளைக் குவித்து ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையைக் தட்டிச் சென்றது.

​இவ்விளையாட்டு விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு போட்டிகளைக் கண்டு ரசித்து மாணவர்களைக் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

"தமிழ்நாட்டுப் பெண்கள் என்றாலே அழகு ; ஆல்கஹால், புகையிலையைக் காட்டிலும் மொபைல் போன்கள் ஆபத்தானவை" - கோவையில் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் எச்சரிக்கை!

"தமிழ்நாட்டுப் பெண்கள் என்றாலே அழகு ; ஆல்கஹால், புகையிலையைக் காட்டிலும் மொபைல் போன்கள் ஆபத்தானவை" - கோவையில் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் எச்சரிக்கை!

"தமிழ்நாட்டுப் பெண்கள் என்றாலே அழகு ; ஆல்கஹால், புகையிலையைக் காட்டிலும் மொபைல் போன்கள் ஆபத்தானவை" - கோவையில் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் எச்சரிக்கை!

18-வது ஈஷா கிராமோத்சவம் மண்டல அளவிலான போட்டிகள் தொடக்கம் : கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் உற்சாகம்!

​ மது மற்றும் புகையிலையைக் காட்டிலும் தற்காலக் குழந்தைகளுக்கு மொபைல் போன்களின் பயன்பாடே மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்து உள்ளது என ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்து கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்து உள்ளார்.

18-வது ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்:

கிராமப்புற மக்கள் மற்றும் இளைஞர்கள் இடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில், ஈஷா சார்பில் 18-வது ஆண்டாக 'ஈஷா கிராமோத்சவம்' விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் 10 மாநிலங்களில் நடைபெறும் இப்போட்டிகளில் ஆண்களுக்கு வாலிபால் மற்றும் பெண்களுக்குத் த்ரோபால் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

​இதன் ஒரு பகுதியாக, மண்டல அளவிலான போட்டிகள் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்து உள்ள கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன.

எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் பேச்சு:

இப்போட்டிகளைக் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் முறைப்படி தொடங்கி வைத்துப் போட்டிகளில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

பெண்களின் பெருமை:

 "தமிழ்நாட்டுப் பெண்கள் என்றாலே பேரழகு மற்றும் திறமைமிக்கவர்கள் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்."

கிராமப்புறத் திறமைகள்:

 கிராமப்புறங்களுக்கு நேரடியாகச் சென்று, அங்குள்ள இளைஞர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை விளையாட்டுத் துறையில் ஊக்குவிப்பதில் அரசு உறுதியாக உள்ளது.

மொபைல் போன் ஆபத்து:

 தொழில்நுட்பமும் அறிவியலும் எந்த அளவிற்கு அதிவேகமாக வளர்ந்து வருகிறதோ, அந்த அளவிற்கு மக்களின் உடல்நலக் குறைபாடுகளும் அதிகரித்து வருகின்றன. தற்போதைய குழந்தைகள் காலையில் எழுந்ததில் இருந்து இரவு வரை மொபைல் போன்களிலேயே மூழ்கி இருக்கின்றனர்.

 ஆல்கஹால் மற்றும் புகையிலையைக் காட்டிலும் இந்த மொபைல் போன் அடிமைத்தனம் மிகவும் ஆபத்தானது.

விளையாட்டின் அவசியம்: 

நவீன உலகில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தைகளுக்கு உடற்பயிற்சியோ விளையாட்டோ கிடைப்பதில்லை. ஈஷா போன்ற அமைப்புகள் இது போன்ற போட்டிகளை ஒருங்கிணைக்கும் போது இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும். பள்ளிகளில் தினமும் கட்டாயம் ஒரு மணி நேரம் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனச் சட்டமன்றத்திலும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

​10 மாநிலங்களில் முதற்கட்டப் போட்டிகள் நிறைவடைந்த பின், இதன் பிரம்மாண்ட இறுதிப் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் ஈஷாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

சனி, 4 ஜூலை, 2026

தேசிய டேக்வாண்டோ போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் : 28 தங்கம் உட்பட 55 பதக்கங்களை பெற்று சாதனை - அடுத்த இலக்கு தென்கொரிய சர்வதேசப் போட்டி !!!

தேசிய டேக்வாண்டோ போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் : 28 தங்கம் உட்பட 55 பதக்கங்களை பெற்று சாதனை - அடுத்த இலக்கு தென்கொரிய சர்வதேசப் போட்டி !!!

தேசிய டேக்வாண்டோ போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் : 28 தங்கம் உட்பட 55 பதக்கங்களை பெற்று சாதனை - அடுத்த இலக்கு தென்கொரிய சர்வதேசப் போட்டி !!!

பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்ட இதில்,தமிழக அணி சார்பாக கோவையைச் சேர்ந்த ஆண்ட்லீ பிளாக் பெல்ட் அகாடமியில் பயிற்சி பெறும் அரசு மற்றும் தனியார் பள்ளி  மாணவ, மாணவிகள் 18 பேர் பங்கு பெற்றனர்..

சிறுவர்கள் துவங்கி,சப் ஜூனியர்,கேடட்,ஜூனியர்,சீனியர் என பல்வேறு பிரிவுகளில் பூம்சே,கிரோகி என ஆகிய பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில்,கோவையை சேர்ந்த மாணவர்கள்   அபார திறமையை வெளிப்படுத்தி 28 தங்கம், 15 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். 

இந்நிலையில்,தேசிய போட்டியில் பதக்கம் வென்று   கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு   பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் , மலர் மாலை அணிவித்து  மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..

தேசிய போட்டியில் வெற்றி பெற்ற  மாணவர்கள் அடுத்ததாக தென்கொரியாவில் நடைபெற உள்ள சர்வதேச டேக்வாண்டோ போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

இதுகுறித்து பயிற்சியாளர் ஆனந்த்குமார், செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் டேக்வாண்டோ உள்ளிட்ட தற்காப்புக் கலை விளையாட்டுகளில் திறமையான வீரர், வீராங்கனைகள் ஏராளமாக உள்ளனர். 

அவர்களின் திறமையை உலக அரங்கில் வெளிப்படுத்த தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கூறிய அவர், டேக்வாண்டோ விளையாட்டிற்குத் தேவையான சென்சார் உள்ளிட்ட  நவீன உபகரணங்கள், வழங்கி,தரமான பயிற்சி வசதிகள், சிறப்பு பயிற்சி முகாம்கள், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு நிதியுதவி மற்றும் ஊக்கத்தொகை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், இதுபோன்ற ஆதரவுகள் வழங்கப்பட்டால் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தொடர்ந்து பதக்கங்களை வென்று மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வியாழன், 2 ஜூலை, 2026

500 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் களம் காணும் ஹாக்கி ட்ராபி’ மோதல்: இன்று முதல் ஜூலை 5 வரை மாவட்ட அளவிலான போட்டிகள் !!!

500 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் களம் காணும் ஹாக்கி ட்ராபி’ மோதல்: இன்று முதல் ஜூலை 5 வரை மாவட்ட அளவிலான போட்டிகள் !!!

500 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் களம் காணும் ஹாக்கி ட்ராபி’ மோதல்: இன்று முதல் ஜூலை 5 வரை மாவட்ட அளவிலான போட்டிகள் !!!

அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகளின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், கோவை ஆர் எஸ் புரம் பகுதியில், மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் இன்று முதல் வரும் ஜூலை 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பள்ளி மாணவ மாணவிகளிடையே விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் கோவை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பாக, கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் 14வயது, 16வயது மற்றும்  19வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் இன்று துவங்கியது. 30 ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள கோவை மாவட்டத்தில் உள்ள  தனியார், மற்றும் அரசு பள்ளிகளான  16 பள்ளிகளில்  இருந்து சுமார், 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போட்டிகளானது   இந்துஸ்தான் கல்வி குழுமம் ட்ராபி எனும் பெயரில் இரண்டாவது ஆண்டாக நடைபெற்று வருகின்றது. இதில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு வரும் 5ம் தேதி பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு 

மற்றும் கோவை மாவட்ட ஹாக்கி சங்க செயலாளருமான முனைவர்  செந்தில் ராஜ் குமார்,தலைமை தாங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் போட்டிகுழு தலைவர் சோமசுந்தர மூர்த்தி, திருநாவுக்கரசு, மற்றும் கோவை மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் லக்ஷ்மி நாராயணசாமி ஆகியோர் மேற்பார்வையில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 19 ஜூன், 2026

அண்டை மாநிலத்தில் அதிரடி கிளப்பும் 6-ஆம் வகுப்பு சிறுமி: ‘பள்ளிகளில் கட்டாய நீச்சல் பயிற்சி’ – ரனா பாத்திமாவின்  போராட்டம் வெல்லுமா?

அண்டை மாநிலத்தில் அதிரடி கிளப்பும் 6-ஆம் வகுப்பு சிறுமி: ‘பள்ளிகளில் கட்டாய நீச்சல் பயிற்சி’ – ரனா பாத்திமாவின் போராட்டம் வெல்லுமா?

 அண்டை மாநிலத்தில் அதிரடி கிளப்பும் 6-ஆம் வகுப்பு சிறுமி: ‘பள்ளிகளில் கட்டாய நீச்சல் பயிற்சி’ – ரனா பாத்திமாவின்  போராட்டம் வெல்லுமா?

3 வயதில் ஆற்றில் நீந்தி வைரல்; ராகுல் காந்தி முதல் பினராயி விஜயன் வரை திரும்பிப் பார்க்க வைத்த கேரளச் சிறுமியின் !!!

பள்ளிகளில் கட்டாய நீச்சல் பயிற்சி : ரனா பாத்திமாவின் தொடர் முயற்சி வெற்றி பெறுமா?

நீர்நிலைகளில் குழந்தைகள் மூழ்கி உயிரழக்கும் சம்பவங்களை தடுக்கும் வகையில் கேரள மாநில பள்ளிகளில் கட்டாய நீச்சல் பயிற்சி வழங்கவேண்டும் என்ற மாணவி ரனா பாத்திமாவின் கோரிக்கை மீண்டும் கவனம் பெற்றுள்ளது. 

யார் இந்த ரனா பாத்திமா?

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் அருகே தோட்டுமுக்கம் அரசு யு.பி. பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் ரனா ஃபாத்திமா. ரபீக் தோட்டுமுக்கம் மற்றும் ரிபானா ரபீக் தம்பதியின் மகளான இவர் தனது ஐந்து வயது முதலே பள்ளிகளில் கட்டாய நீச்சல் பயிற்சியை வழங்கவேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறார். 

கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய முதல்வர் பின்ராயி விஜயனை சந்தித்து அனைத்து மாணவ, மாணவிகளும் நீச்சல் பயிற்சி பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது தேசிய அளவில் கவனம் ஈர்த்திருந்தது.

தற்போது புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், பள்ளி மாணவர்களின் உயிர் பாதுகாப்பை மையமாகக் கொண்ட இந்த முயற்சி மீண்டும் மாநிலம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

ஐந்து வயதில் தொடங்கிய கோரிக்கை இது ரனாவின் முதல் முயற்சி அல்ல.

2023 நவம்பரில் நடைபெற்ற நவகேரள சதஸ் நிகழ்ச்சியின்போது, அப்போதைய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து, "குழந்தைகள் நீந்தக் கற்றுக்கொள்ள முக்கம் பகுதியில் ஒரு நீச்சல் குளம் அமைக்க வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

அந்த நிகழ்வில் பங்கேற்ற மிகவும் இளம் வயது விருந்தினராக ரனா கவனம் பெற்றார். தனது நீச்சல் பயிற்சி குருவும் பாட்டியுமான ரம்லா மனாஃபுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், முதலமைச்சரிடம் மனு அளித்ததோடு மட்டுமல்லாமல், அமைச்சர்களின் சிறப்பு நவகேரள பேருந்தின் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர்களான வி. அப்துரஹ்மான், பி. பிரசாத் மற்றும் வீணா ஜார்ஜ் ஆகியோர் ரனாவை அழைத்துச் சென்று பேருந்தை சுற்றிக்காட்டிய சம்பவம் அப்போது ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.

எனினும், அவரது கோரிக்கையின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குடும்பத்தினர் கூறுகின்றனர்.

மூன்றாவது வயதிலேயே வைரலான நீச்சல் திறமை

தோட்டுமுக்கத்தைச் சேர்ந்த ரனா ஃபாத்திமா, மூன்றாவது வயதிலேயே அப்பகுதியில் உள்ள சிறுபுழா ஆற்றில் நீந்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதன் மூலம் மாநிலம் முழுவதும் அறியப்பட்டார்.

மற்ற குழந்தைகள் நீருக்கருகே செல்லத் தயங்கும் வயதில், ஆற்றைக் கடந்து நீந்திய அவரது திறமை பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அந்தக் காணொளிகள் வெளியான பிறகு, பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் அரசு அதிகாரிகளின் கவனமும் அவர்மீது திரும்பியது.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பாராட்டு

ரனாவின் திறமையைப் பாராட்டியவர்களில் முக்கியமானவர் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி. அவர் நேரில் சந்தித்து ரனாவை வாழ்த்தியதுடன், அவரது தன்னம்பிக்கையையும் திறமையையும் பாராட்டியதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

முக்கம் நகராட்சி, குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுத்தருவதற்காக முன்னெடுத்த "நீந்தி வா குழந்தைகளே" திட்டத்தின் பிராண்ட் அம்பாசிடராக ரனாவை நியமித்தது.

அந்த நேரத்தில் நகராட்சி நிர்வாகமும் பல்வேறு மக்கள் பிரதிநிதிகளும், நீச்சல் திறனை ஒரு உயிர்காக்கும் திறனாக மாற்றிய சிறுமியின் முயற்சியை பாராட்டியிருந்தனர்.

நவகேரள சதஸ் நிகழ்வில் முதலமைச்சர் பினராயி விஜயனும், அமைச்சர்களான வி. அப்துரஹ்மான், பி. பிரசாத் மற்றும் வீணா ஜார்ஜும் ரனாவுடன் உரையாடிய சம்பவம் செய்திகளில் இடம்பிடித்தது.

"ஒவ்வொரு பள்ளியிலும் நீச்சல் பயிற்சி தேவை"

ஆரம்பத்தில் முக்கம் பகுதியில் ஒரு நீச்சல் குளம் வேண்டும் என்பதே ரனாவின் கோரிக்கையாக இருந்தது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் கேரளாவின் பல பகுதிகளில் குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்ததைத் தொடர்ந்து, தனது கோரிக்கையை மாநில அளவிற்கு விரிவுபடுத்தி உள்ளார்.

"ஒவ்வொரு குழந்தைக்கும் நீந்தத் தெரிய வேண்டும். பள்ளிகளில் நீச்சல் பயிற்சி கட்டாயமாக்கப்பட வேண்டும்" என்பதே தற்போது அவர் முன்வைக்கும் முக்கிய கோரிக்கையாகும்.

பள்ளியிலேயே பயிற்சி அளிக்கத் தயாராகும் சிறுமி மனு கொடுத்து விட்டு காத்து இருப்பதில் மட்டும் ரனா நின்று விடவில்லை.

தனது பள்ளியில் நீச்சல் தெரியாத சக மாணவர்களுக்கு நீச்சல் கற்றுத்தருவதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். பள்ளி மாணவர்களிடையே நீச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவரது குடும்பம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

 நீரில் மூழ்கி உயிரிழப்பது அதிகரிக்கிறது

கேரளாவில் ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் கோடை விடுமுறை மற்றும் பருவமழைக் காலங்களில் குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.

பொது சுகாதார மற்றும் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள், நீச்சல் பயிற்சி மற்றும் அடிப்படை நீர் பாதுகாப்பு கல்வி பள்ளி மட்டத்திலேயே வழங்கப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

பல நாடுகளில் பள்ளி மாணவர்களுக்கு கட்டாய நீச்சல் பயிற்சி வழங்கப்படுவது போல, கேரளாவிலும் அதுபோன்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்ற விவாதம் சமீப ஆண்டுகளில் வலுப்பெற்றுள்ளது.

அதேபோல், ரனா பாத்திமா, சிறுவயதிலேயே சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் குழந்தையாக பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஒரு நீச்சல் குளம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடங்கிய அவரது முயற்சி, இன்று பள்ளிகளில் கட்டாய நீச்சல் பயிற்சி வேண்டும் என்ற மாநில அளவிலான விவாதமாக மாறியுள்ளது.

 தற்போதைய முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சரை சந்தித்து, மீண்டும் தனது கோரிக்கை தொடர்பாக பேச முயற்சித்து வருகிறார்.

குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றும் ஒரு கொள்கை மாற்றத்திற்கான விவாதத்தை, எட்டு வயது சிறுமி ஒருவரின் விடாமுயற்சி மீண்டும் முன்னிலைப்படுத்தி உள்ளது.

ஞாயிறு, 31 மே, 2026

கோவையில் பல்வேறு ஆய்வுகள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆய்வு !!!

கோவையில் பல்வேறு ஆய்வுகள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆய்வு !!!

 கோவையில் பல்வேறு ஆய்வுகள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆய்வு !!!

தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் Aadhav Arjuna பல்வேறு ஆய்வுப் பணிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

தொடர்ந்து, கோவை Nehru Indoor Stadium வளாகத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த கபடி வீரர், வீராங்கனைகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு தேவையான டி-ஷர்ட், ஷூ உள்ளிட்ட அடிப்படை விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து தனியார் கல்லூரியில் நடைபெறும் விளையாட்டு மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்கிறார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஆய்வுக் கூட்டம் மேற்கொள்கிறார்.

மேலும், மாலை நடைபெறும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டியிலும் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பங்கேற்க உள்ளார்.

சண்டே மார்னிங் ‘ஃபுல் எனர்ஜி’ வைப் ; கோவை ஆர்.எஸ்.புரத்தில் அனல் பறந்த ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ திருவிழா - வீதியில் இறங்கி ஆடிப் பாடி அசத்திய இளைஞர்கள் !!!

சண்டே மார்னிங் ‘ஃபுல் எனர்ஜி’ வைப் ; கோவை ஆர்.எஸ்.புரத்தில் அனல் பறந்த ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ திருவிழா - வீதியில் இறங்கி ஆடிப் பாடி அசத்திய இளைஞர்கள் !!!

 சண்டே மார்னிங் ‘ஃபுல் எனர்ஜி’ வைப் ; கோவை ஆர்.எஸ்.புரத்தில் அனல் பறந்த ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ திருவிழா - வீதியில் இறங்கி ஆடிப் பாடி அசத்திய இளைஞர்கள் !!!


டி.ஜே இசையில் ‘மாஸ்’ குத்தாட்டம் ; செல்போன்களை ஓரம் தள்ளி விட்டுப் பாரம்பரிய விளையாட்டுகளுடன் கொண்டாடிய மக்கள் !!!

 ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதை அசாத்திய உற்சாகத்துடனும், எல்லையற்ற மகிழ்ச்சியடனும் கொண்டாடும் நோக்கில், கோவையின் ஆர்.எஸ்.புரம் (R.S. Puram) டி.பி. ரோட்டில் இன்று காலை ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ (Happy Street) நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக அரங்கேறியது. 

கோவையின் ஒட்டுமொத்த இளசுகளும் ஒரே வீதியில் ஒன்று திரண்டு ஆடிப் பாடி மகிழ்ந்த ‘லைவ்’ காட்சிகள் ஒட்டுமொத்த கோவை மாநகரையும் ‘வைப்’ செய்ய வைத்து உள்ளது.

வாராந்திர வேலைப் பளு, மன அழுத்தம் மற்றும் செல்போன் உலகிற்குள் மூழ்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறையினரை அதில் இருந்து மீட்டெடுத்து, ‘நெருக்கமான நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும், தனியாக வாழாதீர்கள்’ என்ற நடிகர் சிவகுமாரின் சமீபத்திய கோவை மேடை தத்துவத்திற்கு அசல் அச்சான்றாக இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு போடப்பட்டு இருந்தது. 

இதற்காக இன்று அதிகாலை முதலே ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் போக்குவரத்து முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டு, அந்த வீதியே பொதுமக்களின் அசாத்திய விளையாட்டு மைதானமாக மாற்றப்பட்டது.

அதிகாலை 6 மணிக்கே ‘ஃபுல் எனர்ஜி’யோடு புத்தாடை அணிந்து திரண்ட ஆயிரக் கணக்கான இளம் பெண்கள், வாலிபர்கள் மற்றும் பிஞ்சுச் சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரும் இந்த ‘மாஸ்’ கொண்டாட்டத்தில் களம் இறங்கினர். சாலையின் நடுவே அமைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட மேடையில் டி.ஜே (DJ) பாப் இசையின் அதிரடி ‘பீட்ஸ்’ ஒலிக்கத் தொடங்கியதும், கோவையின் துள்ளல் இளைஞர்கள் அனைவரும் கைகளை உயர்த்தி, அனல் பறக்க ஆடிப் பாடித் தங்களது மகிழ்ச்சியை வெளிக் கொணர்ந்தனர்.

 சினிமா பாடல்களுக்குப் போட்டிப் போட்டுக் கொண்டு இளைஞர்கள் போட்ட ‘குத்தாட்டம்’ ஒட்டுமொத்த சாலையையும் அதிரவைத்தது.

ஆடல், பாடல் மட்டுமின்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் வகையில் பல்வேறு யோகா மற்றும் உடற்பயிற்சி (Fitness) நிகழ்வுகளும் வீதியின் மறுபுறம் ‘லைவ்’ ஆக நடத்தப்பட்டன.


  கயிறு இழுத்தல் மற்றும் பாரம்பரியக் கபடி, நொண்டி போன்ற அசல் தெருவோர விளையாட்டுகளில் இளைஞர்கள் தங்களின் நரம்புகளை முறுக்கேற்றி விளையாடினர்.

சனி, 30 மே, 2026

மின்னொளியில் ஜொலிக்கும் வாலிபால் கிரவுண்ட் ; கோவையில் புதுப்பிக்கப்பட்ட கைப்பந்து மைதானம் திறப்பு !!!

மின்னொளியில் ஜொலிக்கும் வாலிபால் கிரவுண்ட் ; கோவையில் புதுப்பிக்கப்பட்ட கைப்பந்து மைதானம் திறப்பு !!!

மின்னொளியில் ஜொலிக்கும் வாலிபால் கிரவுண்ட் ; கோவையில் புதுப்பிக்கப்பட்ட கைப்பந்து மைதானம் திறப்பு !!!

​ரூ.6 லட்சம் மதிப்பில் மெகா மின்விளக்கு வசதி; பரபரப்பான கண்காட்சி போட்டியில் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பள்ளி அணி வெற்றி!

கோவை சோமையம்பாளையம் யமுனா நகரில் அமைந்துள்ள ஆர்.ஜி. ஸ்போர்ட்ஸ் அகாடமியில், புதுப்பிக்கப்பட்ட மின் ஒளி வசதியுடன் கூடிய கைப்பந்து மைதானத்தின் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.

கோவை சோமையம்பாளையம் யமுனா நகரில் அமைந்துள்ளது ஆர்.ஜி. ஸ்போர்ட்ஸ் அகாடமி. இங்கு சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த விரர்கள் கைப்பந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இங்கு மாவட்ட, மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரவிலும் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வகையிலும், போட்டிகள் நடத்தும் வகையிலும் மைதானத்தை சுற்றி சுமார் 6 லட்சம் மதிப்பில் மின் ஒளி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட மின் ஒளி வசதியுடன் கூடிய கைப்பந்து மைதானத்தின் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கிராமப்புற கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனர் எஸ்.ஆர். ஆறுச்சாமி தலைமை தாங்கி நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கோவை வருமான வரித்துறையின் உதவி ஆணையர் ஆர். ஆனந்தி, ஐ.ஆர்.எஸ்., கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட மின் ஒளி வசதியுடன் கூடிய கைப்பந்து மைதானத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். 

மரியாதை விருந்தினராக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஓய்வுபெற்ற துணைப் பொது மேலாளர் ஆர். ராஜமகேந்திரன் பங்கேற்று விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

மேலும், அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஏ. ராஜசேகர், அறங்காவலர்கள் ராமையா சுரேஷ்குமார், ஆர்த்தி ராஜசேகர், ரக்‌ஷிதா ஆகியோர் கலந்து கொண்டனர். வருமான வரித்துறையின் ஓய்வுபெற்ற அதிகாரிகள் நாகராஜ், வெங்கட்ராமன், எஸ்.பி.ஐ. ஒஸ்வான், பேராசிரியர் சாமுவேல் குட்டியப்பன், அகர்வால் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பிரவீன்குமார் வருண் மற்றும் திருப்பூர் மாவட்ட கைப்பந்து கழகத்தின் கௌரவ செயலாளர் தங்கமணி குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

விழாவை முன்னிட்டு நடைபெற்ற கண்காட்சி கைப்பந்து போட்டியில் எம்.எச்.எஸ்.எஸ். அணியும், பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மேல்நிலைப்பள்ளி அணி 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

நிகழ்ச்சியின் முடிவில் ஆர்.ஜி. ஸ்போர்ட்ஸ் அகாடமியின் ஒருங்கிணைப்பாளர் கே. தனலட்சுமி நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விளையாட்டு ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 22 மே, 2026

தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச சிறுவர்களுக்கான ஃபேஷன் ஷோ போட்டிக்கு கோவையை சேர்ந்த சிறுவன் தேர்வு !!!

தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச சிறுவர்களுக்கான ஃபேஷன் ஷோ போட்டிக்கு கோவையை சேர்ந்த சிறுவன் தேர்வு !!!

தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச சிறுவர்களுக்கான ஃபேஷன் ஷோ போட்டிக்கு கோவையை சேர்ந்த சிறுவன் தேர்வு !!!

தேசிய அளவிலான குழந்தைகள் ஃபேஷன் ஷோ போட்டி அண்மையில் பேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நடைபெற்றது..

ஃபேஷன் ரன் வே சார்பாக நடைபெற்ற இதில் தமிழ்நாடு சார்பாக கோவையை சேர்ந்த ரக்‌ஷன் உட்பட திவித்,ஜோனா, ,அட்னான் ஆகியோர் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து உள்ளனர்..

இந்நிலையில் கோவை வந்த சேர்ந்த ரக்‌ஷனுக்கு அவரது பெற்றோர்கள் மற்றும் ராணாவின் மாடலிங் அகாடமி தலைமை நிர்வாக அதிகாரி சிவ குமார் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்...

ஜூனியர் மாடல் இன்டர்நேஷனல் இந்தியா ஃபைனல்ஸ்” போட்டியில் வென்ற சிறுவன் ரக்‌ஷன் அடுத்து தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு தயாராகி வருவதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்...

சர்வதேச அளவில் மிகுந்த புகழ்பெற்ற இந்த குழந்தைகள் ஃபேஷன் ஷோ போட்டியில், அறிவு, நேர்காணல் திறன், பாரம்பரிய உடை, மேடை நடிப்பு மற்றும் பல்வேறு சுற்றுகளாக நடைபெறும் போட்டிக்கு சிறுவன் ரக்‌ஷன் தயாராகி வருகிறார்...

குழந்தைகளின் தன்னம்பிக்கை, ஒழுக்கம், திறமைகள் மற்றும் மேடை ஆற்றலை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த போட்டியில்,.“தமிழக குழந்தைகள் உலக அரங்கில் தங்கள் திறமையை நிரூபித்து வருவது பெருமைக்குரியது எனவும், இவர்களின் முயற்சி மற்றும் பெற்றோரின் ஆதரவு பாராட்டத்தக்கது, என பலர் பாராட்டி வருவது குறிப்பிடதக்கது.....

வெள்ளி, 6 மார்ச், 2026

இறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம் !!!

இறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம் !!!

 இறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம் !!!

டி 20 உலக கோப்பை 2026 தொடரின் இறுதி ஆட்டத்துக்கு இந்திய அணி தகுதி பெற்றது.

ஐ.சி.சி டி 20 உலகக் கோப்பைத் தொடரில் மும்பை வான்கடே டெல்லி நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. அதில், முதலில் பேட்டிங் செய்து இந்திய அணி நிர்ணயித்த 254 எனும் இமாலய இலக்கை இங்கிலாந்து அணியால் எட்ட முடியவில்லை.

இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் அதிரடி காட்டிய போதிலும், கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. எனினும், 19-ஆவது ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டதால் கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில், அந்த அணி 20 ஓவர்களில் 246 ரன்கள் குவித்தது.

இதை அடுத்து, இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜேகோப் பெத்தேல் 48 பந்துகளில் 105 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.

முன்னதாக, இந்திய அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். ஷிவம் துபே 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். ஹார்திக் பாண்டியா 12 பந்துகளில் 27 ரன்களும் திலக் வர்மா 7 பந்துகளில் 21 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் டி 20 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது.

திங்கள், 2 மார்ச், 2026

மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டி - கோவையில் ஆர்வமுடன் பங்கேற்ற பெண்கள் !!!

மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டி - கோவையில் ஆர்வமுடன் பங்கேற்ற பெண்கள் !!!

மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டி - கோவையில் ஆர்வமுடன் பங்கேற்ற பெண்கள் !!!

பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி பெண்கள் ஒருங்கிணைத்த இறகு பந்து போட்டி -மாவட்ட அளவில் நடைபெற்ற இதில் பல்வேறு துறை சார்ந்த பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்பு...

கோவையில் பெண்கள் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் “Her Voice For Her Education” என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.சங்கனூர் பகுதியில் நடைபெற்ற இந்த போட்டியில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் மற்றும் ஆண்கள் இரட்டையர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. 

வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள்மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

பெண்களின் கல்வி உரிமையை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முயற்சி, விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரயிலில் சென்று, விமானத்தில் திரும்பி வந்த அரசு பள்ளி மாணவர்கள் – கோவையில் உற்சாக வரவேற்பு...

ரயிலில் சென்று, விமானத்தில் திரும்பி வந்த அரசு பள்ளி மாணவர்கள் – கோவையில் உற்சாக வரவேற்பு...

ரயிலில் சென்று, விமானத்தில் திரும்பி வந்த அரசு பள்ளி மாணவர்கள் – கோவையில் உற்சாக வரவேற்பு...

கோவை மாவட்டம் பாலத்துறை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் ரோட்டரி கிளப் சார்பில் மூன்று நாள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

கோவையில் இருந்து ரயில் மூலம் பெங்களூருக்கு சென்ற மாணவர்கள் அங்குள்ள அறிவியல் கண்காட்சி மற்றும் பல்வேறு அருங்காட்சியகங்களை பார்வையிட்டனர். பாடப்புத்தகங்களில் பார்த்த அறிவியல் கண்டுபிடிப்புகள், வரலாற்றுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை நேரில் கண்டு ரசித்த மாணவர்கள், இது தங்களின் அறிவுத்திறனை மேலும் மேம்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

சுற்றுலா நிறைவில், பெங்களூரில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு திரும்பிய அவர்கள், விமான நிலையத்தில் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்றனர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில்,

“பாடப்புத்தகத்தில் பார்த்த காட்சிகளை நேரில் சென்று பார்வையிட்டது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. இதுவரை தரையில் இருந்து வானத்தை நோக்கி விமானத்தை பார்த்து ரசித்தோம். இப்போது விமானத்தில் பயணித்தது மறக்க முடியாத அனுபவமாக உள்ளது,” என்று உற்சாகமாக தெரிவித்தனர்.

மலைப்பாதை சர்வதேச சைக்கிள் போட்டி : தங்கம் உட்பட ஆறு பதக்கங்களை வென்று சாதனை - கோவை திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு !!!

மலைப்பாதை சர்வதேச சைக்கிள் போட்டி : தங்கம் உட்பட ஆறு பதக்கங்களை வென்று சாதனை - கோவை திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு !!!

மலைப்பாதை சர்வதேச சைக்கிள் போட்டி : தங்கம் உட்பட ஆறு பதக்கங்களை வென்று சாதனை - கோவை திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு !!!

மலைப்பாதை சைக்கிள் போட்டியில் தேசிய மற்றும் சர்வதேச அளவுகளில் நடைபெற்ற போட்டியில் தங்கம் உட்பட ஆறு பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அண்மையில் அருணாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மலைப்பிரதேச சைக்கிள் போட்டியில் , கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் அபினவ், பிரனேஷ் மற்றும் சச்சின் தேவ் ஆகிய மூன்று மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் அபினவ் இரண்டு தங்கமும், பிரனேஷ் ஒரு தங்கமும்,சச்சின் தேவ் வெண்கலம் பதக்கம் வென்று அசத்தினர்..

இதனை தொடர்ந்து,பிப்ரவரி 26 முதல் 28 ஆம் தேதி வரை ,ஹிமாச்சல் பிரதேசத்தின் பீரில் (Bir) நடைபெற்ற சர்வதேச அளவிலான (Asia Mountain bike Series) ஆசிய மலைப்பாதை சைக்கிள் தொடரில் மூவரும் கலந்து கொண்டனர்..

சர்வதேச மிதிவண்டி சங்கத்தின் அங்கீகாரத்துடன் நடைபெற்ற இதில் ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கு பெற்றனர்..

 இதில்,அபினவ் வெள்ளி பதக்கமும்,இதே போல பிரனேஷ் ஒரு வெள்ளியும்,ஐந்தாவது இடத்தில் சச்சினும் இடம் பிடித்தனர்.

இந்நிலையில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பதக்கங்களுடன் கோவை விமான நிலையம் வந்தடைந்த வீரர்களுக்கு அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு சைக்கிளிங் சங்க நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்..

மாணவர்களுக்கு சால்வைகள் அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

இமாச்சல் பீர் நகரில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் ,இமயமலையின் மிகக் கடினமான மலைப்பாதைகளில் கோவையை சேர்ந்த மாணவர்கள் அபினவ்,பிரனேஷ்,சச்சின் ஆகிய மூவரும் தங்கள் அபாரமான திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை பெற்று தமிழகத்திற்கும் கோவைக்கும் பெருமை சேர்த்துள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

விமானங்கள் ரத்து காரணமாக துபாயில் சிக்கிய நிலையில் நாடு திரும்ப பிரதமரிடம் உதவி கோரும் நடிகை சோனல், சிந்து !!!

விமானங்கள் ரத்து காரணமாக துபாயில் சிக்கிய நிலையில் நாடு திரும்ப பிரதமரிடம் உதவி கோரும் நடிகை சோனல், சிந்து !!!

 விமானங்கள் ரத்து காரணமாக துபாயில் சிக்கிய நிலையில் நாடு திரும்ப பிரதமரிடம் உதவி கோரும் நடிகை சோனல், சிந்து !!!

ஈரான் ஏவு​கணை தாக்குதல் காரண​மாக விமானங்கள் ரத்து செய்யப்​பட்​ட​தால், துபாயில் சிக்​கி​ உள்ள பாலிவுட் நடிகை சோனல் சவு​கான், நாடு திரும்ப பிரதமர் மோடியின் உதவியை நாடி​ உள்​ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் தாக்குதல் நடத்​தி​யதை அடுத்​து, ஈரான் பதிலடி தாக்​குதலில் இறங்கியது. பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்​தார் உட்பட அண்டை நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​கள் மீது ஈரான் ஏவுகணை தாக்​குதல் நடத்தி வரு​கிறது. 

இதனால் பல விமான நிறு​வனங்​கள் மத்​திய கிழக்கு நாடு​களுக்கு செல்​லும் விமானங் களை ரத்து செய்​தன.

அதிக விமானங்​கள் வந்து செல்​லும் துபாய் விமான நிலை​யத்​தில் பயணி​கள் கூட்​டம் கூட்டமாக காத்​துக் கிடக்கின்றனர். ஜனத் இந்தி படத்​தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை சோனல் சவு​கானும், துபாய் சென்று நாடு திரும்ப முடி​யாமல் தவிக்கிறார்.

இந்​நிலை​யில் அவர் இன்ஸ்​டாகி​ராமில் பிரதமர் மோடிக்கு ஒரு வேண்​டு​கோள் விடுத்து உள்​ளார். ”வளை​குடா நாடு​களில் ஏற்பட்டு உள்ள பதற்​றத்​தால், விமானங்​கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. நான் பாது​காப்​பாக நாடு திரும்ப மத்​திய அரசு உதவி செய்து வழி​காட்ட வேண்​டும்” என கூறி​ உள்ளார்.

ஒலிம்​பிக் போட்​டியில் இரு முறை பதக்​கம் வென்ற பாட்மிண்டன் வீராங்​கனை பி.​வி.சிந்துவும், தனது பயிற்​சி​யாள​ருடன் துபாய் விமான நிலையத்தில் சிக்கி உள்ளார்.

அவர் எக்ஸ் தளத்​தில், ”துபாய் விமான நிலையம் பதற்​றத்​துடன் காணப்​படு​கிறது. சில மணி நேரங்​களுக்கு முன்பு துபாய் விமான நிலை​யத்​தில் நாங்​கள் இருந்த இடத்​துக்கு அருகே வெடிச் ​சத்​தம் கேட்​டது. எனது பயிற்சியாளர் அங்கு இருந்து வேக​மாக ஓடி வந்​தார். இங்கு மிக​வும் பதற்​ற​மான சூழல் நிலவுகிறது.

நாங்​கள் பாது​காப்​பான இடத்​தில் உள்​ளோம். எங்களைப் பாதுகாக்​கும் முயற்​சி​யில் ஈடு​பட்​டு உள்ள துபாய் விமான நிலைய ஊழியர்​கள் மற்றும் அதி​காரி​களுக்கு நன்​றி. எங்​களுக்கு உதவும்​ இந்​தி​ய தூதரக அதி​காரி​களுக்​கும்​ நன்றி” என கூறி​ உள்ளார்​.

திங்கள், 23 பிப்ரவரி, 2026

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்; கார் ரேஸ் டிராக்கில் 'மாஸ்' காட்டிய வானதி எம்.எல்.ஏ - மகனுடன் சீறிப்பாய்ந்த வீடியோ !!!

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்; கார் ரேஸ் டிராக்கில் 'மாஸ்' காட்டிய வானதி எம்.எல்.ஏ - மகனுடன் சீறிப்பாய்ந்த வீடியோ !!!

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்; கார் ரேஸ் டிராக்கில் 'மாஸ்' காட்டிய வானதி எம்.எல்.ஏ - மகனுடன் சீறிப்பாய்ந்த வீடியோ

சாகச விளையாட்டுகளில் பெண்களை ஊக்கப்படுத்திய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி எம்.எல்.ஏ !!!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவையில் சாதனைப் பெண்களைக் கௌரவிக்கும் விதமாக 'கியர் அப் பவுண்டேஷன்' (Gear Up Foundation) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கார் மற்றும் மோட்டார் ரேஸ் சாகச நிகழ்ச்சி, கோவையில் நடைபெற்றது. வழக்கமான மேடைப் பேச்சுகள் மற்றும் விருது வழங்கல் போன்ற சம்பிரதாயங்களைத் தாண்டி, ஆபத்தான மற்றும் சவாலான சாகச விளையாட்டுகளில் பெண்களின் பங்களிப்பைத் தாராளமாக ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

பல்வேறு துறைகளில் முத்திரை பதிக்கும் பெண்களைக் கௌரவித்த இந்த விழாவில், அரசியலில் சுழன்று கொண்டு இருக்கும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டார். 


கார் சாகசத்தின் போது தனது மகன் ஆதர்ஷ் உடன் அமர்ந்து தருணங்கள் அங்கு இருந்தோரை மெய்சிலிர்க்க வைத்தது. ஒரு தேர்ந்த ரேஸ் டிரைவர் போலத் தன்னம்பிக்கையுடன் டிராக்கில் கார் ஓட்டிய அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

"பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல; சாகச விளையாட்டுகளிலும் சிகரம் தொடுவார்கள்" என்பதைத் தனது செயல் மூலம் அவர் நிரூபித்ததாக அங்கு இருந்த பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தினார்.

மகளிர் தினத்தை ஒட்டிப் பெண்களின் வீரத்தையும், வேகத்தையும் பறைசாற்றும் வகையில் கியர் அப் பவுண்டேஷன் எடுத்த இந்த முயற்சியை அவர் பாராட்டினார். 

ரேஸ் டிராக்கில் கார் ஓட்டும் போது எடுக்கப்பட்ட எம்.எல்.ஏ வானதியின் அந்த 'ஸ்டைலிஷ்' புகைப்படங்கள், "அரசியல் களம் மட்டுமல்ல, ரேஸ் டிராக்கும் எனக்கு அத்தப்பாடி" எனச் சொல்லாமல் சொல்வது போல் இருந்தது. 

இந்த நிகழ்வில் ஏராளமான பெண் ரேஸ் வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

சனி, 21 பிப்ரவரி, 2026

தேசிய அளவில் மலை நிலப்பரப்பு சைக்கிள் போட்டி : 9 தங்கம் உட்பட 15 பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய வீரர்கள் - ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு...

தேசிய அளவில் மலை நிலப்பரப்பு சைக்கிள் போட்டி : 9 தங்கம் உட்பட 15 பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய வீரர்கள் - ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு...

அருணாசல பிரதேசத்தில் தேசிய அளவில் நடைபெற்ற மலை நிலப்பரப்பு சைக்கிள் போட்டியில் 9 தங்கம் உட்பட 15 பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது...

22-வது தேசிய மலை நிலப்பரப்பு சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 12-ந்தேதி அருணாசல பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது.4 நாட்கள் நடைபெற்ற இதில் இந்தியாவில் சுமார் 29 மாநிலங்களை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் ஆரம்பம் முதலே தமிழக வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி 9 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் ஆக மொத்தம் 15 பதக்கம் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர்…

இதில் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சவுபர்ணிகா 2 தங்கம் வென்று சிறந்த வீராங்கனையாகவும்,கோவையை சேர்ந்த ஆஸ்ரம் பள்ளி மாணவி ஹாசினி 2 தங்கம் வென்றும் கவனம் ஈர்த்துள்ளனர்…
இந்நிலையில் கோவை இரயில் நிலையம் வந்த வீரர்,வீராங்கனைகளுக்கு மாநில மாவட்ட சைக்கிள் சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்..
முன்னதாக வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி மாணவிகள் ரோஜா மலர் வழங்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்..
தொடர்ந்து தமிழ்நாடு மாநில சைக்கிள் சங்க தலைவர் மாணிக்கம் வெற்றி பெற்ற வீர்ர,வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்..
டி20 உலகக் கோப்பைத் : நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 8 சுற்று போட்டி - முதல் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிப்பு !!!

டி20 உலகக் கோப்பைத் : நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 8 சுற்று போட்டி - முதல் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிப்பு !!!

 டி20 உலகக் கோப்பைத் : நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 8 சுற்று போட்டி - முதல் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிப்பு...

ஐ.சி.சி டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிகள் இன்று (பிப்ரவரி 21) முதல் தொடங்குகிறது. கொழும்பில் பிரேமதாசா திடலில் நடைபெறும் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன.

நியூசிலாந்து, பாகிஸ்தான் இரண்டு அணிகளுமே சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிக்காக மிகவும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். நியூசிலாந்து அணியைப் பொருத்த வரையில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தருகின்றனர். ஆனால், மிடில் ஆர்டர் பேட்டர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறுகிறார்கள்.

கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மார்க் சாப்மேன் மற்றும் டேரில் மிட்செல் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவிக்கத் தவறுகின்றனர். கிளன் பிலிப்ஸ் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா ஒரு அரைசதம் அடித்துள்ளனர். அதைத் தவிர்த்து, பேட்டிங்கில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் நன்றாக விளையாடவில்லை.

லீக் சுற்றின் நான்கு போட்டிகளில் விளையாடிய ரச்சின் ரவீந்திரா 72 ரன்கள் எடுத்தார். அதில் 59 ரன்கள் கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் எடுத்தது.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணி முதல் முறையாக கொழும்பில் விளையாட உள்ளது. அந்த அணிக்கான வெற்றி வாய்ப்புக்கு சிக்கலாக அமைந்து உள்ளது. அதே சமயம், பாகிஸ்தான் அணி பிரேமதாசா திடலில் இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளது. அதனால், பிரேமதாசா திடலின் தன்மை குறித்து நியூசிலாந்தைக் காட்டிலும் பாகிஸ்தான் அணிக்கு நன்றாக தெரியும்.