சட்டம்-ஒழுங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சட்டம்-ஒழுங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 செப்டம்பர், 2026

 "மலேசிய சுற்றுலாப் பயணிகள் மீது அரிவாள் வெட்டு... துப்பாக்கி முனையில் மிரட்டல்" ; கோவையில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்!

"மலேசிய சுற்றுலாப் பயணிகள் மீது அரிவாள் வெட்டு... துப்பாக்கி முனையில் மிரட்டல்" ; கோவையில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்!

5 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி பவன்குமார் தீவிர தேடுதல் வேட்டை: மாவட்ட எல்லைகளில் பலத்த சோதனைகள்!

 கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில், மலேசியாவில் இருந்து வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீது மர்ம நபர்கள் அரிவாளால் வெறித்தனமாகத் தாக்குதல் நடத்தி, துப்பாக்கி முனையில் மிரட்டித் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலேசிய நாட்டில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவிற்குச் சுற்றுப் பயணமாக 10 பேர் கொண்ட பயணிகள் குழுவினர் 'ஃபோர்ஸ் அர்பானியா' (Force Urbania) வாடகை வேன் மூலம் கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

​கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள கே.ஜி. சாவடி அடுத்த நவக்கரை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேனுக்கு எரினாயில் நிரப்ப ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தினார். அப்போது வேனில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் சிலர் அங்கு இருந்த கழிவறைக்குச் சென்ற போது, அங்கு நின்று இருந்த இரு நபர்களுடன் எதிர்பாராத விதமாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

வாக்குவாதம் முற்றவே, இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இரு மர்ம நபர்கள், ஆத்திரம் அடைந்து 10 மலேசியச் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து இருந்த 'ஃபோர்ஸ் அர்பானியா' வாகனத்திற்கு உள்ளேயே அதிரடியாகப் புகுந்து, தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

​இந்தக் கொடூரத் தாக்குதலில் மலேசியச் சுற்றுலாப் பயணியான லோகநாதன் மற்றும் அவரது மகனான யுகேந்திரன் ஆகிய இருவருக்கும் வயிறு மற்றும் தோள்பட்டை பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

தாக்குதல் நடத்திய பின், மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பினர். அஞ்சிய ஓட்டுநர் காயம் அடைந்தவர்களுடன் வேனை மதுக்கரை நோக்கி விரைவாகச் செலுத்தினார். ஆனால், விடாமல் பின்தொடர்ந்து துரத்தி வந்த அந்த மர்ம நபர்கள், மதுக்கரை மார்க்கெட் பகுதியில் வைத்து வேன் ஓட்டுநரைச் சூழ்ந்து கத்தி மற்றும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி உள்ளனர்.

​பதற்றமடைந்த ஓட்டுநர் சாலையோரமாக இருந்த பள்ளத்தில் சிக்கி வாகனத்தை நிறுத்தவே, அப்பகுதி பொதுமக்கள் பெருமளவில் கூடினர்.

 பொதுமக்கள் திரள்வதைக் கண்ட அந்த மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிய லோகநாதன் மற்றும் யுகேந்திரன் ஆகிய இருவரையும் பொதுமக்கள் உடனடியாக மீட்டு, மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுக்கரை காவல்துறையினர் சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளைக் கைப்பற்றி, சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர்.

​சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்ற கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பவன்குமார், கள ஆய்வு மேற்கொண்டு மதுக்கரை காவல் நிலையத்தில் தீவிர விசாரணை நடத்தினார்.

 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீது அரிவாள் தாக்குதல் நடத்தி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டித் தப்பியோடிய அந்த இரு மர்ம நபர்களையும் பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

 கோவை மாவட்ட எல்லைப் பகுதிகள் முழுவதிலும் பலத்த வாகனத் தணிக்கை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

துப்பாக்கியைக் காட்டி மிரட்டல்" - கோவை நவக்கரையில் மலேசியச் சுற்றுலாப் பயணிகளிடம் தகராறு: போலிஸ் தீவிர விசாரணை!

துப்பாக்கியைக் காட்டி மிரட்டல்" - கோவை நவக்கரையில் மலேசியச் சுற்றுலாப் பயணிகளிடம் தகராறு: போலிஸ் தீவிர விசாரணை!

ஆலப்புழாவில் இருந்து சென்னை சென்ற போது சம்பவம்: அப்பாவின் மகன் காயமடைந்ததால் பரப்பரப்பு!

 கோவை, கே.ஜி. சாவடி மற்றும் மதுக்கரை பகுதியில் மலேசிய நாட்டின் சுற்றுலாப் பயணிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தந்தை, மகன் காயம் அடைந்த சம்பவம் தொடர்பாகவும், பின் தொடர்ந்து வந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நபர் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று (02.09.2026) மாலை சுமார் 5.30 மணி அளவில், கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னை நோக்கி 'ஃபோர்ஸ் அர்பானியா' (Force Urbania) வாடகை வாகனத்தில் மலேசியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று பயணித்துக் கொண்டு இருந்தது.

கே.ஜி. சாவடி காவல் எல்லைக்கு உட்பட்ட கொச்சி - சேலம் புறவழிச்சாலையில் உள்ள நவக்கரை பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, அந்த வாகனத்தின் ஓட்டுநருக்கும், அங்கு நின்று கொண்டு இருந்த லோகநாதன் (52) மற்றும் அவரது மகன் உகேந்திரன் (21) ஆகிய இரு நபர்களுக்கும் இடையே திடீரெனக் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

 இந்த மோதலில் லோகநாதன் மற்றும் உகேந்திரன் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மலேசியச் சுற்றுலாப் பயணிகள் பயணித்த அந்த வாகனம் அங்கு இருந்து மதுக்கரை நோக்கித் தப்பிச் சென்றுள்ளது. அப்போது, மதுக்கரை சந்தை அருகே அந்த வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், துப்பாக்கி போன்ற ஒரு பொருளைக் காட்டி வாகனத்தை மிரட்டி நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாகச் சம்பவ இடத்தில் கூட்டமாகத் திரளவே, போலீஸாருக்குத் தகவல் பரவியதை உணர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடினர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பேரூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) மற்றும் மதுக்கரை காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி (CCTV) கேமரா காட்சிகளைக் காவல்துறையினர் முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர்.

 தப்பியோடிய நபர்களை அடையாளம் காணவும், சம்பவத்திற்கான உண்மையான பின்னணி என்ன என்பதைக் கண்டறியவும் தீவிர விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

"முகவரி கேட்பது போல் நடித்து கைவரிசை" ; கோவையில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது!

"முகவரி கேட்பது போல் நடித்து கைவரிசை" ; கோவையில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது!

ஆடம்பர வாழ்க்கை மற்றும் கடனை அடைக்கக் குறுக்கு வழி: TVS ஜூபிட்டர் பைக், 4 பவுன் நகை பறிமுதல்!

 கோவையில் முகமூடி அணிந்து கொண்டு தொடர் நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்த இரு தனியார் கல்லூரி மாணவர்களைப் போத்தனூர் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர்.

கோவை, போத்தனூர் காவல் எல்லைக்கு உட்பட்ட வெள்ளலூர் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி மாலை, சரஸ்வதி என்பவர் தனது உறவினருடன் பேருந்து நிறுத்தம் அருகே பேசிக் கொண்டு இருந்தார்.

​அப்போது,TV S ஜூபிட்டர் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த நபர் ஒருவர், சரஸ்வதியிடம் "முகவரி" கேட்பது போல் நடித்துக் கவனத்தைத் திசை திருப்பி, கண் இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினார்.

​அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி கூச்சலிடவே, அங்கே தயாராக நின்று இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி அந்த நபர் மின்னல் வேகத்தில் தப்பியோடினார்.

இச்சம்பவம் குறித்துச் சரஸ்வதி அளித்த புகாரின் பேரில், கோவை மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின்படி, போத்தனூர் காவல் ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

​சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளைத் தனிப்படை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் குற்றச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட TVS Jupiter இருசக்கர வாகனத்தின் பதிவு எண் (TN 99 AD 4548) துல்லியமாகக் கண்டறியப்பட்டது.

சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் தொடர் விசாரணை நடத்திய போலீசார், சிவகுமார் என்பவரது மகனும் தனியார் கல்லூரி மாணவருமான பரணிதரன் (21) என்பவனைக் கைது செய்தனர். அவனிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

​பரணிதரனும் அவனது கல்லூரித் தோழரான சிந்து என்பவனும் சேர்ந்து, தங்களது ஆடம்பர செலவுகளுக்காகவும், பரணிதரனுக்கு இருந்த கடனை அடைப்பதற்காகவும் வயதான பெண்களை இலக்கு வைத்து (Target) இந்த நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

​இதை அடுத்து, விடுதியில் தங்கியிருந்த மற்றொரு மாணவனான சிந்துவையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

இருவரிடம் இருந்தும் சுமார் 4 பவுன் தங்கச் சங்கிலி, 2 செல்போன்கள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்திய TVS ஜூபிட்டர் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக மாநகரக் காவல் துணை ஆணையாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

 எதிர்காலத்தைத் திட்டமிட வேண்டிய கல்லூரி மாணவர்களே குறுக்கு வழியில் ஆடம்பரமாக வாழ வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்டு கைதாகி உள்ள சம்பவம் கோவை மக்கள் இடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

 "மதுபோதையில் நபரை குத்திக் கொன்றேன்" ;  நீலாம்பூர் போலிஸ் நிலையத்தில் வாலிபர் சரணடைவு - கோவையில் பரபரப்பு!

"மதுபோதையில் நபரை குத்திக் கொன்றேன்" ; நீலாம்பூர் போலிஸ் நிலையத்தில் வாலிபர் சரணடைவு - கோவையில் பரபரப்பு!

 "மதுபோதையில் நபரை குத்திக் கொன்றேன்" ;  நீலாம்பூர் போலிஸ் நிலையத்தில் வாலிபர் சரணடைவு - கோவையில் பரபரப்பு!

தென்னம்பாளையம் சாலையில் அழுகிய நிலையில் வாலிபரின் சடலம் மீட்பு : போலீஸார் தீவிர விசாரணை!

​ கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த வாலிபர், நீலாம்பூர் போலிஸ் நிலையத்தில் நேரில் சென்று சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, நீலாம்பூர் காவல் நிலையத்திற்கு நேற்று காலை வாலிபர் ஒருவர் வந்து உள்ளார். அங்கு இருந்த போலீஸாரிடம் பேசிய அவர், கடந்த 22-ஆம் தேதி இரவில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரைக் கத்தியால் குத்தியதாகவும், இதில் பலத்த காயம் அடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.

​மேலும், கொலையான நபரின் உடலை அவினாசி சாலையில் இருந்து தென்னம்பாளையம் செல்லும் வழியில் உள்ள பள்ளத்தில் வீசி எறிந்துவிட்டதாகவும் அவர் கூறி உள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார், அந்த வாலிபரைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீஸாரின் விசாரணையில் சரணடைந்த வாலிபர், தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தைச் சேர்ந்த சங்கரேஸ்வரன் (29) என்பதும், இவர் கோவை நீலாம்பூர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

​இதனைத் தொடர்ந்து, சங்கரேஸ்வரனைப் போலீஸார் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு தென்னம்பாளையம் செல்லும் பாதையில் இருந்த பள்ளத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. உடம்பில் கத்திக்குத்துக்கான காயங்கள் இருந்ததை உறுதிசெய்த போலீஸார், சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகச் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையான நபர் யார்? 

இச்சம்பவம் குறித்து நீலாம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சங்கரேஸ்வரனைக் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட நபர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

பங்காளி கிட்ட எல்லாம் சொல்லி வச்சுக்கோ..." சுத்தியலால் கொடூரமாகத் தாக்கிச் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட கொலையாளிகள் !!!

பங்காளி கிட்ட எல்லாம் சொல்லி வச்சுக்கோ..." சுத்தியலால் கொடூரமாகத் தாக்கிச் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட கொலையாளிகள் !!!

 பங்காளி கிட்ட எல்லாம் சொல்லி வச்சுக்கோ..." சுத்தியலால் கொடூரமாகத் தாக்கிச் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட கொலையாளிகள் !!!

கிணத்துக்கடவு வாலிபர் படுகொலை சம்பவத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோக்கள் !!!

​ கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே வாலிபரைக் கொடூரமாகக் கொலை செய்த கொலையாளிகள், "பங்காளி கிட்ட எல்லாம் சொல்லி வச்சுக்கோ..." என்று கூறி சுத்தியலால் தாக்கும் அதிர்ச்சி வீடியோவைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், ​பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபர், நேற்று நள்ளிரவு தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்துக் கிணத்துக்கடவு போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

​போலீசாரின் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (22) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரும் மது அருந்தும் பழக்கம் தொடர்பான முன் விரோதத்தில், அஸ்வின் தூங்கிக் கொண்டு இருந்த போது வீட்டிற்குள் புகுந்து அரிவாள் மற்றும் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்தது தெரியவந்தது.

இந்நிலையில், அஸ்வினைத் தாக்கும் போது கொலையாளிகள் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளனர். அதில், அஸ்வினைச் சுத்தியலால் கொடூரமாகத் தாக்கியபடி, "பங்காளி கிட்ட எல்லாம் சொல்லி வச்சுக்கோ..." என்று மிரட்டல் தொனியில் பேசி, அந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.

​இந்தக் கொடூர வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாகப் பரவி வருவதுடன், பொதுமக்கள் இடையே மிகுந்த பீதியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

​சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுப் போலிசாருக்குச் சவால் விடும் வகையில் நடந்து கொண்ட கொலையாளிகளான மாதேஷ் மற்றும் 16 வயது சிறுவனைக் கைது செய்யக் கிணத்துக்கடவு போலிசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

வெள்ளி, 31 ஜூலை, 2026

31 வழக்குகள் கொண்ட ரவுடியின் அடாவடி... வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி 2 மாதங்கள் தலைமறைவு: மீண்டும் கல்லூரி பெண்ணை மிரட்டித் துரத்திய சம்பவம் !!!

31 வழக்குகள் கொண்ட ரவுடியின் அடாவடி... வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி 2 மாதங்கள் தலைமறைவு: மீண்டும் கல்லூரி பெண்ணை மிரட்டித் துரத்திய சம்பவம் !!!

 31 வழக்குகள் கொண்ட ரவுடியின் அடாவடி... வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி 2 மாதங்கள் தலைமறைவு: மீண்டும் கல்லூரி பெண்ணை மிரட்டித் துரத்திய சம்பவம் !!!

தொண்டாமுத்தூர் பகுதியில் மீண்டும் பரபரப்பு; 2 மாதங்களாக ரவுடியைப் பிடிக்க முடியாமல் திணறும் கோவை மாவட்ட காவல் துறை !!!

காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை மிரட்டல் விடுத்து 2 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி, மீண்டும் அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்து மிரட்டிய சம்பவம் கோவையில் கடும் அதிர்ச்சியையும் பொதுமக்கள் இடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

 31 வழக்குகள் நிலுவையில் உள்ள ரவுடியைப் பிடிக்க முடியாமல் காவல் துறை திணறி வருவது அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது.

கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம் சி.பி.சி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (தாளியூர் பேரூராட்சி ஊழியர்). இவருடைய மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அப்போது இவருக்கு சென்னை வீருகம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

ஒரு கட்டத்தில் கார்த்திக் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 31-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை போன்ற வழக்குகள் இருப்பது மாணவிக்குத் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கார்த்திக்குடனான தொடர்பை முற்றிலும் துண்டித்து உள்ளார்.

தன்னைப் புறக்கணித்த ஆத்திரத்தில் இருந்த ரவுடி கார்த்திக், கடந்த மே 25-ஆம் தேதி தனது கூட்டாளிகளுடன் KTM மற்றும் பல்சர் பைக்குகளில் வந்து சுந்தரமூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டார். கொடூரக் கொலை மிரட்டல் விடுத்ததுடன், தாங்கள் கொண்டு வந்த மண்ணெண்ணெய் குண்டுகளை வீட்டின் மீது சரமாரியாக வீசி எறிந்தனர்.

இதில் வீட்டின் போர்டிகோவில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகின. நல்வாய்ப்பாக அசம்பாவிதம் ஏதுமின்றி உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. 

இச்சம்பவம் குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வந்தனர்.

போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி 2 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த ரவுடி கார்த்திக், நேற்று மாலை மீண்டும் தனது கொடூர புத்தியைக் காட்டி உள்ளார். கல்லூரி முடிந்து பேருந்தில் வந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்த மாணவியை, கூட்டாளி ஒருவருடன் ஸ்கூட்டியில் வந்த ரவுடி கார்த்திக் மிரட்டும் நோக்கில் துரத்திச் சென்று உள்ளார்.

பயந்து போன இளம்பெண் அலறியடித்தபடி அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்து தப்பித்தார். பின்னர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் பெற்றோருக்குத் தகவல் தெரிவிப்பதற்குள் ரவுடி கார்த்திக் தப்பிச் சென்று விட்டார். இந்த திடுக்கிடும் காட்சிகள் அங்கு உள்ள சி.சி.டி.வி (CCTV) கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

31 வழக்குகள் நிலுவையில் உள்ள ஒரு ஆபத்தான குற்றவாளியை 2 மாதங்களாகப் பிடிக்கத் தவறியது ஏன் ? எனத் தொண்டாமுத்தூர் பகுதி பொதுமக்கள் காவல் துறை மீது காரசாரமாகக் குற்றம் சாட்டுகின்றனர். 

குற்றவாளி மீண்டும் அதே பகுதிக்கு வந்து பெண்ணைப் பின்தொடரும் அளவுக்குத் தைரியம் வந்து உள்ளது, அப்பகுதி மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி உள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

செவ்வாய், 21 ஜூலை, 2026

டெத் ரேஸ்’ ஓட்டிய ஜென்-ஜி பசங்கள் ;  கார் சாகசக் ஈடுபட்டவர்கள் அதிரடி கைது - எஸ்.பி பவன் கே ரெட்டி ஆக்ஷன் !!!

டெத் ரேஸ்’ ஓட்டிய ஜென்-ஜி பசங்கள் ; கார் சாகசக் ஈடுபட்டவர்கள் அதிரடி கைது - எஸ்.பி பவன் கே ரெட்டி ஆக்ஷன் !!!

 டெத் ரேஸ்’ ஓட்டிய ஜென்-ஜி பசங்கள் ;  கார் சாகசக் ஈடுபட்டவர்கள் அதிரடி கைது - எஸ்.பி பவன் கே ரெட்டி ஆக்ஷன் !!!

சி.சி.டி.வி, காட்சிகளை வைத்துத் தூக்கிய போலீஸ் ....

 கோவை – பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரின் மேற்கூரை மீது அமர்ந்து கொண்டு, பொதுமக்களின் உயிரோடு விளையாடும் வகையில் ‘டெத் ரேஸ்’ பாணியில் ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட 4 ‘ஜென்-ஜி’ வாலிபர்களைக் கிணத்துக்கடவு காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

 கிணத்துக்கடவு மேம்பாலம் அருகே அதிவேகமாகச் சென்ற காரின் ஜன்னல் வழியே தொங்கியபடியும், காரின் கூரை மீது மூன்று நபர்கள் பயமின்றி அமர்ந்து கொண்டும் சென்ற பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், இந்தச் சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.

​இந்த அராஜகம் தொடர்பாகச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பவன் K. ரெட்டி உத்தரவின் பேரில், கிணத்துக்கடவு காவல் துறையினர் சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் இணைய வீடியோக்களை தீவிரமாக ஆய்வு செய்து வழக்குப் பதிவு செய்தனர். 

இதில் சாகசத்தில் ஈடுபட்ட பீளமேட்டைச் சேர்ந்த சரவணகுமார் (24), இராமநாதபுரத்தைச் சேர்ந்த சென்றாய பெருமாள் (24), மதுரையைச் சேர்ந்த ராகுல்குமார் (19) மற்றும் பாரதி நகரைச் சேர்ந்த நிர்மல்குமார் (24) ஆகிய 4 பேரையும் போலீசார் கூண்டோடு கைது செய்து, சாகசத்திற்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

​கைதான நபர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் (Cr.No: 211/2026, U/s 281, 125, 292 BNS r/w 184 MV Act) கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 இளைஞர்கள் தங்களின் உயிரையும், பிற பாதசாரிகளின் உயிரையும் பணையம் வைத்துச் செய்யும் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்புகளுக்கே வழிவகுக்கும் எனக் எச்சரித்து உள்ள காவல்துறை இனி பொதுச் சாலைகளில் சாகசம் புரிவோர் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை பாயும் எனத் தெரிவித்து உள்ளார்.

 மேலும் பெற்றோர்கள் தங்களது வாகனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற விதிமீறல்களைப் பொதுமக்கள் உடனடியாகக் காவல் துறைக்குத் தெரிவிக்கலாம் என்றும் மாவட்டக் காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.

ஞாயிறு, 12 ஜூலை, 2026

கோவையில் தனியார் பாரில் குடிகாரர்கள் பயங்கர கேங் வார் : அலறி அடித்து ஓடிய மதுப்பிரியர்கள் – நீலாம்பூர் போலீஸ் அதிரடி நடவடிக்கை !!!

கோவையில் தனியார் பாரில் குடிகாரர்கள் பயங்கர கேங் வார் : அலறி அடித்து ஓடிய மதுப்பிரியர்கள் – நீலாம்பூர் போலீஸ் அதிரடி நடவடிக்கை !!!

 கோவையில் தனியார் பாரில் குடிகாரர்கள் பயங்கர கேங் வார் : அலறி அடித்து ஓடிய மதுப்பிரியர்கள் – நீலாம்பூர் போலீஸ் அதிரடி நடவடிக்கை !!!

 கோவை, வெள்ளானைப்பட்டி பகுதியில் உள்ள பிரபல தனியார் பாரில், இன்று இரவு மது அருந்த வந்த இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பயங்கர அடிதடி மற்றும் கோஷ்டி மோதலாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, வெள்ளானைப்பட்டி பகுதியில் ‘சுவை அமுது’ என்ற பெயரில் ‘11 to 11’ தனியார் மதுக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

 வார இறுதி நாளான இன்று (சனிக்கிழமை) இரவு என்பதால், இந்த பாரில் மது அருந்துவதற்காக நூற்றுக் கணக்கான மதுப்பிரியர்கள் குவிந்து இருந்தனர். அப்போது, அங்கு வெவ்வேறு மேஜைகளில் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்த இரு வேறு கும்பலைச் சேர்ந்த நபர்களுக்கு இடையே திடீரென ஏதோ ஒரு லேசான வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. 

மது போதை உச்சத்தில் இருந்ததால், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டத் தொடங்கினர். பாட்டில்கள், நாற்காலிகள் பறந்தன.

வார்த்தை முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த இரு தரப்பு மதுப்பிரியர்களும் திடீரெனத் தங்களது கைகளாலும், அங்கு இருந்த மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் நாற்காலிகளை எடுத்தும் ஒருவரையொருவர் ஓட ஓட விரட்டிப் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர்.

இந்தத் திடீர் கேங் வார் மோதலால், பாரில் இருந்த இதரப் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.  

இரு தரப்பினரும் ரத்தக் காயம் ஏற்படும் அளவிற்கு மாறி, மாறித் தாக்கிக் கொண்டதால், சுவை அமுது பார் வளாகமே சில நிமிடங்களில் போர்க்களமாக மாறியது.

இந்தக் கொடூர மோதல் குறித்து அங்கு இருந்தவர்கள் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து, சம்பவ இடத்திற்கு நீலாம்பூர் காவல் நிலைய போலீஸார் சைரன் சத்தத்துடன் அதிரடியாக வாகனங்களில் வந்து இறங்கினர்.

போலீஸார் உள்ளே நுழைவதைக் கண்டதும், அடிதடியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த கும்பல்களும், பயத்தில் பாதியிலேயே மது அருந்திக் கொண்டு இருந்த இதர மதுப்பிரியர்களும் தங்களது வாகனங்களை எடுத்துக் கொண்டு அங்கு இருந்து அவசர, அவசரமாக அலறி அடித்துக் கொண்டு தப்பியோடினர்.

தற்பொழுது சம்பவ இடத்தில் காவல்துறையினர், பாரில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளைப் பறிமுதல் செய்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்து பயங்கர மோதலில் ஈடுபட்ட ரவுடி கும்பல் யார் ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரோடு விளையாட்டு” ; கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்கள் - வைரலாகும் வீடியோ !!!

உயிரோடு விளையாட்டு” ; கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்கள் - வைரலாகும் வீடியோ !!!

 உயிரோடு விளையாட்டு” ; கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்கள் - வைரலாகும் வீடியோ !!!

 கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச் சற்று முன்பாக ஓடும் காரின் ‘சன்ரூஃப்’ (Sunroof) டாப் வழியாக வெளியே வந்து, 4 இளம்பெண்கள் ஆபத்தான முறையில் அமர்ந்து பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகரின் முக்கியப் பிரதான சாலையான அவிநாசி சாலையில், அண்மையில் திறந்து வைக்கப்பட்ட ஜி.டி மேம்பாலத்தில் நாள்தோறும் நள்ளிரவு நேரங்களிலும் வாகனங்கள் அதிவேகத்தில் கடந்து செல்வது வழக்கம்.

 இந்நிலையில், இன்று இரவு சுமார் 10:45 மணி அளவில் அந்த மேம்பாலத்தில் அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் ஒன்றின் மேல்புற ஜன்னல் (Sunroof) முழுமையாகத் திறந்து வைக்கப்பட்டு இருந்தது.

​அப்போது, காரின் உள்ளே இருந்த 4 இளம்பெண்கள், தங்களது உயிரைப் பற்றிக் கவலையின்றி, காரின் மேலே உள்ள டாப் வழியாக வெளியே வந்து அதன் மீது ஆபத்தான முறையில் அமர்ந்து கொண்டு, காற்றில் கைகளை அசைத்தபடி பெரும் கூச்சலிட்டுப் பயணித்து உள்ளனர். 

​கார் மேம்பாலத்தின் வளைவுகளில் வேகத்தில் திரும்பிய போதும், அந்தப் பெண்கள் எவ்விதப் பயமும் இன்றி சன்ரூஃபில் அமர்ந்தபடி சென்று உள்ளனர்.

 எதிர்பாராதவிதமாக ஓட்டுநர் திடீர் பிரேக் அடித்து இருந்தாலோ அல்லது கார் நிலைதடுமாறி இருந்தாலோ, நாலு பேரும் மேம்பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டுப் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் நிலவியது.

​இவர்களின் இந்த விபரீத விளையாட்டைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர், தங்களது மொபைல் போனில் இதனை வீடியோவாகப் பதிவு செய்து,

 “கோவையில் நள்ளிரவில் அரங்கேறும் ஆபத்தான சாகசம்” என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் கோவையின் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வேகத்தில் பரவி, பொதுமக்கள் மத்தியில் கடுமையான கண்டனங்களை எழுப்பி வருகிறது.

வியாழன், 2 ஜூலை, 2026

டார்ச்சர் செய்தது அந்தப் பெண் தான் என ஆதாரங்களுடன் வழுக்கப்பாறை சூர்யா வெளியிட்ட வீடியோ - சமூக வலைதளங்களில் வைரல் !!!

டார்ச்சர் செய்தது அந்தப் பெண் தான் என ஆதாரங்களுடன் வழுக்கப்பாறை சூர்யா வெளியிட்ட வீடியோ - சமூக வலைதளங்களில் வைரல் !!!

 டார்ச்சர் செய்தது அந்தப் பெண் தான் என ஆதாரங்களுடன் வழுக்கப்பாறை சூர்யா வெளியிட்ட வீடியோ - சமூக வலைதளங்களில் வைரல் !!!

​“செத்துடுவேன்னு பிளாக்மெயில் பண்ண வீடியோ என்கிட்ட இருக்கு”: த.வெ.க பிரமுகர் மகன் மீதான புகாரில் திருப்பம் !!!

 "கோவை வழுக்கப்பாறையில் கல்லூரி மாணவியின் வீட்டைச் சுக்குநூறாக நொறுக்கி அசுரத்தனமான வெறிச்செயலில் ஈடுபட்டதாகத் த.வெ.க பிரமுகர் மகன் சூர்யா மீது நேற்ற புகார் எழுந்த நிலையில், இன்று இச்சம்பவத்திற்கு முற்றிலும் மாறான ஒரு திருப்பமாக, சம்மந்தப்பட்ட வாலிபர் சூர்யா தனது தரப்பு நியாயங்களை உடைத்து வெளியிட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி சலசலப்பைக் கிளப்பி உள்ளது."

​வழுக்கப்பாறையில் பொறியியல் கல்லூரி மாணவியைத் தாக்கி, அவரது ஏழைக் கீரை வியாபாரி தந்தை சிவக்குமாரின் வீட்டை நள்ளிரவில் அடித்து நொறுக்கியதாகத் த.வெ.க புள்ளியின் மகன் சூர்யா மீது அடுக்கடுக்கான புகார்கள் பாய்ந்தன. மேலும், காவல் துறையினர் புகாரை வாங்க மறுப்பதாகப் பலத்த குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்பொழுது சூர்யா தன்னிடம் உள்ள உள்ள ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி, அந்த மாணவியின் தந்தை ஒரு சைக்கோ எனப் கூறி  வீடியோ பதிவு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

​சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பி வரும் அந்த வீடியோவில், வழுக்கப்பாறையைச் சேர்ந்த சூர்யா அதில் கூறும்போது ;

 "எங்கள் வழுக்கப்பாறை கிராமத்தில் இருக்கும் ஒரு பெண்ணை நான் கடந்த ஆறு மாதங்களாக அலாதியாகக் காதலித்து வந்தேன். அந்தப் பெண்ணும் என்னைத் தீவிரமாகக் காதலித்தார். ஆனால், இந்த விபரம் பெண்ணின் தந்தைக்குத் தெரிந்து கடுமையான சண்டையாகிப் பிரச்சனையானதால், ‘வேண்டாம்’ என்று காதலை முறித்துக் கொண்டு நான் ஒதுங்கி விட்டேன்." என்றும், அதன் பின்னர் அந்தப் பெண் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரிக்குச் சென்ற பிறகு, புதுப்புது மொபைல் எண்களில் இருந்து எனக்குத் தொடர்ந்து போன் செய்து காதலிக்குமாறு டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார். ஆனால், நான் அதற்கு எவ்வித ரெஸ்பான்ஸும் செய்யாமல் தவிர்த்து வந்தேன்; இதற்கான அசல் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன."

​இந்நிலையில் சம்பவத்தன்று மாலை கடைக்குச் சென்று இருந்த போது, அந்தப் பெண் பேருந்தில் இருந்து இறங்கி வந்து, ‘என்னை காதலிக்கவில்லையா?’ என்று கேட்டு நடுரோட்டில் அழுது ரகளை செய்தார். அதற்கு நான், ‘நமக்குக் காதல் செட்டாகாது, பின்னால் பெரிய பிரச்சனை வந்து விடும்’ என்று கூறிவிட்டேன். இதனால் அந்தப் பெண் அழுதுகொண்டே அவரது வீட்டிற்குச் சென்றார்."

 "அதன் பின் நான் எனது வீட்டிற்குச் சென்று, கேட்டைத் திறந்து உள்ளே செல்ல முயன்றேன். அப்போது அந்தப் பெண் அழுதுகொண்டே வந்ததைப் பார்த்த அவரது தந்தை சிவக்குமார், நான் ஏதோ தப்பாகச் செய்து விட்டேன் என்று தவறாக நினைத்து, இரும்பு ராடை எடுத்துக்கொண்டு வந்து எனது தலையின் பின்னால் தாக்கினார். இதில் மண்டை உடைந்து இரத்த வெள்ளத்தில் நான் கீழே விழுந்தேன். நான் இறந்து விட்டதாக நினைத்து அவர் அங்கு இருந்து சென்று விட்டார்க. பின்னர் அக்கம், பக்கத்தினர் தான் என்னை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்."

 "அவர் ஒரு சைக்கோ என்பது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரியும். இதற்கு முன்பாகக்கூட ஒருமுறை கையில் பெரிய அருவாளை எடுத்துக் கொண்டு வந்து என் வீட்டிற்கு வெளியே நின்று சத்தமிட்டுக் கொலை செய்ய முயன்றார்" என்றும்,

​“நான் கஞ்சா குடிக்கவில்லை; டெஸ்ட் பண்ணிப் பாருங்க!” - 

​"நான் ஏதோ கஞ்சா அடித்துவிட்டுப் போய் அந்தப் பெண் வீட்டை நொருக்கியதாக ஊடகங்களில் பொய்யான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். 

தாராளமாக என்னை மருத்துவச் சோதனை செய்து பாருங்கள், நான் கஞ்சா குடிக்கிறேனா ?இல்லையா ? என்பது தெரிந்துவிடும். நான் எந்தத் தப்பும் செய்யவில்லை."

 "தவறு என் மீது இல்லை, அந்தப் பெண் தான் என்னை வேண்டும் என்று அழைத்து டார்ச்சர் செய்தார். அவர் அழுதுகொண்டே, ‘நீ இல்லை என்றால் நான் தற்கொலை செய்து செத்துவிடுவேன்’ என்று எனக்கு அனுப்பி பிளாக்மெயில் செய்த வீடியோக்கள், பழைய புகைப்படங்கள் (Photos) மற்றும் கால் ஹிஸ்டரி (Call History) அனைத்தும் என்னிடம் பத்திரமாக உள்ளது. இதையெல்லாம் பார்த்து விட்டு நீங்களே நியாயத்தைச் சொல்லுங்கள்" என வீடியோவை முடித்து உள்ளார்.

 வழுக்கப்பாறை சூர்யா வெளியிட்டு உள்ள இந்த அதிரடித் திருப்ப வீடியோ, சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருகிறது. 

இக்காதல் விவகாரத்தில் இருதரப்பிலும் மாறி, மாறிப் புகார்கள் எழுந்து உள்ளதால் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதன், 1 ஜூலை, 2026

ரோட் ரேஜ்’ அராஜகம் ; கோவையில் நடுரோட்டில் முட்டி மோதி நின்ற தனியார் பேருந்துகள் - ‘கோகுலம் Vs ஸ்ரீதேவி’ ஊழியர்கள் மோதலால் பயணிகள் மரண பயம், ஸ்தம்பித்த போக்குவரத்து !!!

ரோட் ரேஜ்’ அராஜகம் ; கோவையில் நடுரோட்டில் முட்டி மோதி நின்ற தனியார் பேருந்துகள் - ‘கோகுலம் Vs ஸ்ரீதேவி’ ஊழியர்கள் மோதலால் பயணிகள் மரண பயம், ஸ்தம்பித்த போக்குவரத்து !!!

 ரோட் ரேஜ்’ அராஜகம் ; கோவையில் நடுரோட்டில் முட்டி மோதி நின்ற தனியார் பேருந்துகள் - ஊழியர்கள் மோதலால் பயணிகள் அச்சம், ஸ்தம்பித்த போக்குவரத்து !!!

​லாப வெறியால் பயணிகளின் உயிருடன் விளையாடும் ஓட்டுநர்கள் – கோவையில் பரபரப்பு !!!

 கோவையில் தொழில் போட்டி காரணமாக இரண்டு தனியார் பேருந்துகளை நடுரோட்டிலேயே ஒன்றோடொன்று முட்டி மோதி நிறுத்தி, அதன் ஊழியர்கள் பயங்கர தகராறில் ஈடுபட்ட சம்பவம், பேருந்துப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை, காந்திபுரத்தில் இருந்து புலியகுளம், சவுரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான அரசு மற்றும் தனியார் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் இயங்கும் சில தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், அதிக லாபம் ஈட்டும் நோக்கோடும், சக பேருந்துகளின் பயணிகளைத் தாங்களே அள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள சரியான நேரத்தைப் பின்பற்றாமல் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 பேருந்துகளைக் காலம் தாழ்த்தி இயக்குவது அல்லது நேரத்திற்கு முன்னதாகவே அதிவேகமாக இயக்கி ‘ரேஸ்’ போடுவது எனப் பயணிகளின் உயிருடன் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

​இதன் உச்சக்கட்டமாக, உப்பிலிபாளையம் மற்றும் க.க.சாவடி வழியாக இயங்கக் கூடிய ‘கோகுலம்’ என்ற தனியார் பேருந்தும், பேரூர் மற்றும் ராமநாதபுரம் வழியாக இயங்கக் கூடிய ‘ஸ்ரீதேவி’ என்ற தனியார் பேருந்தும் புலியகுளம் - சவுரிப்பாளையம் சாலையில் அடுத்தடுத்து வந்து உள்ளன. அப்போது டைமிங் விவகாரத்தில் இரு பேருந்துகளின் ஊழியர்கள் இடையே வாக்குவாதம் முற்றி உள்ளது. ஆத்திரம் அடைந்த ஓட்டுநர்கள், பொதுமக்களின் நடமாட்டம் மிகுந்த அந்த நடுரோட்டிலேயே இரண்டு பேருந்துகளையும் ஒன்றோடொன்று மோதும் வகையில் ஆபத்தாக முட்டி நிறுத்தி உள்ளனர்.

​வண்டிகள் மோதிக் கொண்ட சத்தத்தில் பேருந்துக்குள் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் அனைவரும் விபத்து ஏற்பட்டுவிட்டதோ ? என்ற மரண பயத்தில் அலறி அடித்துச் கூச்சலிட்டனர்.

 பேருந்துகளை அப்படியே நிறுத்தி விட்டு, இரு பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சாலையில் இறங்கி ஒருவரையொருவர் ஆபாசமாகத் திட்டி, கைகலப்பில் ஈடுபடும் நோக்கில் மோதிக் கொண்டனர்.

 புலியகுளம் - சவுரிப்பாளையம் சாலையில் இரண்டு பேருந்துகள் குறுக்காக மோதி நின்றதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கார்கள் போவதற்கு வழியின்றி கிலோ மீட்டர் கணக்கில் நீண்ட வரிசையில் நின்று கடும் அவதிக்கு உள்ளாயினர்.

​தனியார் பேருந்து ஊழியர்களின் இந்தத் தொடர் ‘ரோட் ரேஜ்’ (Road Rage) அராஜகத்தால் எந்த நேரத்திலும் பெரும் விபத்து ஏற்பட்டுப் பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் நீடிக்கிறது. எனவே, வட்டாரப் போக்குவரத்துத் துறை (RTO) மற்றும் காவல் துறையினர் உடனடியாக இந்தக் குறிப்பிட்ட ‘கோகுலம்’ மற்றும் ‘ஸ்ரீதேவி’ பேருந்து ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், இவர்களின் உரிமத்தை ரத்து செய்து, பேருந்தின் வழித்தட உரிமத்தை முடக்க கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்களின் பேருந்து பயணம் பாதுகாப்பாக அமையும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

புதன், 24 ஜூன், 2026

தூத்துக்குடியில் சிங்கப்பெண் 1091 உதவியால் காப்பாற்றப்பட்ட மாணவி - தந்தை போக்சோவில் கைது !!!

தூத்துக்குடியில் சிங்கப்பெண் 1091 உதவியால் காப்பாற்றப்பட்ட மாணவி - தந்தை போக்சோவில் கைது !!!

 தூத்துக்குடியில் சிங்கப்பெண் 1091 உதவியால் காப்பாற்றப்பட்ட மாணவி - தந்தை போக்சோவில் கைது !!!

தனது தந்தை மது போதையில் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக சிங்கப்பெண் அவசர உதவி எண்ணுக்கு அழைத்து புகார் அளித்த சிறுமியை மகளிர் போலீசார் உடனடியாக மீட்டனர். மேலும் சிறுமியின் தந்தையை போக்சோவில் கைது செய்தனர்.

தூத்துக்குடியை சேர்ந்த காவலர், அங்கு உள்ள ஆயுதப்படையில் பேண்ட் வாத்திய கலைஞராக வேலை பார்த்து வந்து உள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டாவது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

ஆயுதப்படை காவலர் அடிக்கடி மது போதையில் வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. மேலும் மது போதையில் தனது மூத்த மகளான 12 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லையும் கொடுத்து வந்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு மது போதையில் வந்த ஆயுதப்படை காவலர், தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதனை தடுக்க முயன்ற மூத்த மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதில் பாதிக்கப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவி உடனடியாக சிங்கப்பெண் உதவி எண்ணான 1091-க்கு அழைத்து, நடந்த சம்பவம் குறித்து கூறி உள்ளார். மாணவியின் புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் உடனடியாக ஆயுதப்படை காவலரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, புகார் அளித்த மாணவியையும் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆயுதப்படை காவலர் தனது மகளுக்கு மது போதையில் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து, அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் காவலர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

த.வெ.க அரசு பொறுப்பேற்ற உடனே, பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண்’ அதிரடிப் படை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்து இருந்தார். அதன்படி, சிங்கப்பெண் அதிரடிப் படை உருவாக்கப்பட்டு, அவசர அழைப்புக்கு 1091 என்ற பிரத்யேக எண்ணும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு மாணவி அளித்த புகாரின் பேரில் தந்தையை கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளி, 19 ஜூன், 2026

4 மணி நேரம் தொடர் மின்வெட்டு: சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல் !!!

4 மணி நேரம் தொடர் மின்வெட்டு: சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல் !!!

 4 மணி நேரம் தொடர் மின்வெட்டு: சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல் !!!

கிழக்கு கடற்கரை சாலை மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர், நாகூர் மீரான் நகர் பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பகுதியில் தினந்தோறும் 4 மணிநேரம் மட்டுமே மின்சாரம் இருப்பதாகவும், மற்ற நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகவும் மக்கள் வேதனையுடன் குற்றம்சாட்டி வந்தனர். நாகூர் மீரான் நகர் பகுதியில் ஏற்படும் தொடர் மின்வெட்டால் வீட்டில் இருக்கும் கை குழந்தைகள் உறக்கம் இல்லாமலும், குளிர்சாதனை பெட்டியில் வைத்து இருக்கும் உணவுப் பொருட்கள் அனைத்தும் கெட்டுப் போவதாகவும், தொடர் மின்வெட்டால் கடுமையாக அவதிப்படுவதாகவும் கூறினர்.

அதேபோல், மின்வெட்டு ஏற்படும் நேரத்தில் கோவளத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டால், மின்வாரிய ஊழியர்கள் செல்போன் அழைப்பை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சூழலில், நேற்று மாலை 4 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இரவு ஆகியும் மின்சாரம் வராததால் ஆத்திரம் அடைந்த கானத்தூர் நாகூர் மீரான் நகர் பகுதி மக்கள் ஏராளமானோர், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கானத்தூர் ஆய்வாளர் சந்துரு தலைமையிலான போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுனர். போலீசார் மின்சாரம் வருவதற்கு வழிவகை செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

தொடர்ந்து, கானத்தூர் நாகூர் மீரான் நகர் பகுதி மக்களுக்கு தொடர்ந்து ஏற்படும் மின்வெட்டை சரிசெய்ய வேண்டும் எனவும், தங்களுக்கு மின்வெட்டு இல்லாமல் சீரான மின் விநியோகம் நிரந்தரமாக வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தொடர் மின்வெட்டால் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதன் காரணமாக, சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதேபோல், தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம், சாம்ராஜ் நகர், கரகேஸ்வரி நகர், வி.ஜி.பி பொன் நகர், மணவாளன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு தொடர்ந்து 4 மணிநேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும், எந்த விதமான உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அப்பகுதியில் ​மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனால் தாம்பரம், வேளச்சேரி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

மின் வெட்டு குறித்து அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பேசுகையில்,

 ”இந்த பகுதியின் எம்.எல்.ஏவை வரச் சொல்லுங்கள். நாங்கள் 5 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறோம். மின்வாரிய அலுவலத்தை தொடர்பு கொண்டால் முறையாக பதில் இல்லை.

​கடந்த 15 நாட்களாகத் தொடரும் மின்வெட்டுப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். சம்பவ இடத்திற்கு மின்வாரிய அதிகாரிகளும், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நேரில் வந்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.

சாலை மறியல் குறித்து ​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அனுப்பி வைத்தனர்.

புதன், 17 ஜூன், 2026

கொதித்தெழுந்த பொதுமக்கள் : கோவையில் அடிப்படை வசதிகள் கோரி திடீர் சாலை மறியல் - மாநகராட்சிக்கு எதிராகப் போர்க்கொடி !!!

கொதித்தெழுந்த பொதுமக்கள் : கோவையில் அடிப்படை வசதிகள் கோரி திடீர் சாலை மறியல் - மாநகராட்சிக்கு எதிராகப் போர்க்கொடி !!!

 கொதித்தெழுந்த பொதுமக்கள் : கோவையில் அடிப்படை வசதிகள் கோரி திடீர் சாலை மறியல் - மாநகராட்சிக்கு எதிராகப் போர்க்கொடி !!!

​கழிப்பிட வசதி இல்லாமல் அவதிப்படும் மக்கள் ; காவல்துறையுடன் கடுமையான வாக்குவாதம் - பரபரப்பு !!!

 கோவை, புலியகுளம் பகுதியில் உள்ள மீனா எஸ்டேட் அருகே, பாலசுப்ரமணியம் நகர் மக்களுக்குத் தேவையான அடிப்படை மற்றும் பொதுக் கழிப்பிட வசதிகளைச் செய்து தரத் தவறிய கோவை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, நூற்றுக் கணக்கான பொதுமக்கள் திடீரெனச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

கோவை, புலியகுளம் மற்றும் சவுரிபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட நாட்களாகவே போதிய உள்கட்டமைப்பு மற்றும் பொதுக் கழிப்பிட வசதிகள் இன்றி பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையான மனுக்கள் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

​மாநகராட்சி நிர்வாகத்தின் இந்தத் தொடர் அலட்சியப் போக்கால் ஆத்திரம் அடைந்த பாலசுப்ரமணியம் நகர் பகுதி மக்கள், இன்று இரவு திரண்டு வந்து புலியகுளம் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.

 இதனால் அந்தப் பகுதியில் ஒட்டுமொத்தப் போக்குவரத்தும் ஸ்தம்பித்ததுடன், வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்திற்கு அதிவிரைவாக வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திப் போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினர். 

அப்போது, "மாநகராட்சி நிர்வாகம் செய்யத் தவறிய தவறுகளுக்கு எங்களை ஏன் தடுக்கிறீர்கள் ?" என்று கூறி, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினருடன் பொதுமக்கள் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது.

​பொதுமக்களின் இந்தத் திடீர் எழுச்சிப் போராட்டத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானதை அடுத்து, மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்குக் காவல்துறை தரப்பில் இருந்து அவசரத் தகவல் அனுப்பப்பட்டது. உடனே விரைந்து வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாலசுப்ரமணியம் நகர் பகுதியில் போர்க்கால அடிப்படையில் புதிய கழிப்பிட வசதிகள் மற்றும் இதர உள்கட்டமைப்பு பணிகளைத் தொடங்கித் தருவதாகப் பொதுமக்களிடம் உறுதியளித்தனர்.

அதிகாரிகளின் இந்தச் பேச்சுவார்த்தையை ஏற்றுப் பொதுமக்கள் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். 

கோவை மாநகராட்சியின் உள்கட்டமைப்புத் தோல்வியை அம்பலப்படுத்தும் வகையில், மக்கள் திரண்டு வந்து நடத்திய இந்தச் சாலை மறியல் போராட்டம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் 90 அடி ஆழக் கிணற்றில் 3 நாட்களாக அழுகிய வடமாநில இளம்பெண் சடலம்” ; சுற்றிலும் ஹாலோ பிளாக் கற்களைக் கட்டிய கொடூரம் -  “தவறான உறவா? அல்லது சதியா?” மூடிய ஆலையில் படுகொலை !!!

கோவையில் 90 அடி ஆழக் கிணற்றில் 3 நாட்களாக அழுகிய வடமாநில இளம்பெண் சடலம்” ; சுற்றிலும் ஹாலோ பிளாக் கற்களைக் கட்டிய கொடூரம் - “தவறான உறவா? அல்லது சதியா?” மூடிய ஆலையில் படுகொலை !!!

 கோவையில் 90 அடி ஆழக் கிணற்றில் 3 நாட்களாக அழுகிய வடமாநில இளம்பெண் சடலம்” ; சுற்றிலும் ஹாலோ பிளாக் கற்களைக் கட்டிய கொடூரம் -  “தவறான உறவா? அல்லது சதியா?” மூடிய ஆலையில் படுகொலை !!!

​கொலையாளிகளை வேட்டையாட 3 தனிப்படை அமைப்பு ; “பாழடைந்த கிணற்றில் இருந்து வீசிய துர்நாற்றம்” -கயிறு கட்டி இறங்கி பெண்ணின் உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர் !!!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள பொகளூர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் தனியாருக்கு சொந்தமான ஆலை ஒன்று உள்ளது.இந்த ஆலையை தனியார் ஒருவர் குத்தகைக்கு எடுத்து அதனை மண்டபமாக மாற்றும் பணியில் கடந்த மூன்று தினங்களாக ஆட்களை வைத்து ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல பணிக்கு வந்த தொழிலாளர்கள் கிணற்றின் அருகே துர்நாற்றம் வீசுவதை கண்டு சூப்பர்வைசருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சூப்பர்வைசர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் எட்டிப் பார்த்த போது சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வருவது தெரியவந்தது.

உடனடியாக அவர் இதுகுறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பாஸ்கரன், சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் (பொறுப்பு) தலைமையிலான போலீசார் அன்னூர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் சுமார் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்து நீண்ட நேரம் போராடி கயிறு கட்டி அந்த சாக்கு மூட்டையை மேலே கொண்டு வந்தனர்.

தொடர்ந்து சாக்கு முட்டையை திறந்து பார்த்த போது அதில் பெண் சடலம் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் இதுகுறித்து கோவை தடய அறிவியல் துறையினருக்கும், மோப்ப நாய் பிரிவினருக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடய அறிவியல் துறையினர் இளம்பெண் சடலம் மீட்கப்பட்ட கிணறு, அங்கு இருந்த ஹாலோ பிளாக் கற்கள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சாக்கு மூட்டையை திறந்து சடலத்தை வெளியே எடுத்தனர்.

தொடர்ந்து சடலத்தை தடய அறிவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் சுமார் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க வட மாநில இளம்பெண் என்பதும், திருமணமானவர் என்பதும், கொலை செய்யப்பட்ட பின்பு சடலத்தை சுற்றிலும் ஹாலோ பிளாக் கற்களை வைத்து கயிறு கட்டி சடலம் மேலே வராதவாறு கிணற்றில் இறக்கி உள்ளதும், இறந்து மூன்று தினங்களுக்கும் மேல் இருக்கலாம் என்பதும், அழுகிய நிலையில் கிடந்ததும் தெரியவந்து உள்ளது.

இதனை தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய சிறுமுகை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து உள்ள சிறுமுகை போலீசார் இறந்தவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? எப்படி இந்த நிறுவனத்திற்கு வந்தார் ? தவறான உறவு காரணமாக கொலை செய்யப்பட்டாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது தனி நபரா ? அல்லது கும்பலா ? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், டி.எஸ்.பி பாஸ்கரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சுகவனம் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி, மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் இளம்பெண் மாயமான வழக்குகள் ஏதேனும் பதிவாகி உள்ளதா ? எனவும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், சம்பவ இடத்திற்கு கோவை சூலூரில் இருந்து எஸ்.ஐ மாணிக்கராஜ் தலைமையிலான மோப்பநாய் பிரிவினர் விரைந்து வந்து "ஹீரோ" என்ற பெயர் கொண்ட சுமார் மூன்றரை வயது உள்ள மோப்ப நாயை சடலத்தை சுற்றிலும் மோப்பம் பிடிக்க வைத்தனர். தொடர்ந்து அந்த மோப்ப நாய் "ஹீரோ" நிறுவனத்தின் கிணறு, ஹாலோ பிளாக் கற்கள் இருந்த இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றியது. ஆனால்,யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. காவல்துறையினர் தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய வருவது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 14 ஜூன், 2026

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிக்க உதவிய காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது ; பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த 3 காவலர்கள் சஸ்பெண்ட் - கோவை மாநகர காவல் துறை நடவடிக்கை !!!

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிக்க உதவிய காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது ; பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த 3 காவலர்கள் சஸ்பெண்ட் - கோவை மாநகர காவல் துறை நடவடிக்கை !!!

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிக்க உதவிய காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது ; பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த 3 காவலர்கள் சஸ்பெண்ட் - கோவை மாநகர காவல் துறை நடவடிக்கை !!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பிம்முடு அஜித் குமார். (வயது 35) இவர் கார் விற்பனை தொழிலில் ஏமாற்றி பலரை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 30 க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ளது. 

 திருப்பூர் மாவட்டத்திலும் இதே போல கார் விற்பனை செய்வது போல 2 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்து உள்ளார். இந்த வழக்கில் பிம்முடு அஜித் குமாரை திருப்பூர் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். 

அதன் பிறகு அவர் கோவை மத்திய சிறையில் கடந்த வாரம் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் உடல்நிலை சரியில்லை என கூறியதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் , கோவை மத்திய சிறையில் இருந்து கோவை அரசு மருத்துவமனையில் கைதிகள் வாட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

அங்கு அவருக்கு காலில் ஏற்பட்ட காய மற்றும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிம்முடு அஜித்குமார் சிகிச்சை பெற்று வந்த வார்டில் மேலும் 3 கைதிகள் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெரும் கைதிகளுக்கு தலா ஒரு போலீஸ் வீதம் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு கோவை அரசு ஆஸ்பத்திரி வார்டில் இருந்து பிம்முடு அஜித் குமார் தப்பி ஓடினார். கைதிகள் சிகிச்சை பெறும் வார்டுக்கும் மகளிர் சிகிச்சை பிரிவு வார்டுக்கும் இடையில் தடுப்பு வைக்கப்பட்டு இருந்தது. 

அதன் அருகில் கழிப்பறை இருந்தது. அதை பயன்படுத்தி அதில் இருந்த துவாரம் வழியாக பிம்முடு அஜித் குமார் நைசாக நுழைந்து மகளிர் சிகிச்சை பிரிவு வார்டு வழியாக சென்று மருத்துவமனையை விட்டு வெளியேறி உள்ளார்.. அப்போது அவர் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் துணியை கொண்டு மூடி நடந்து சென்று உள்ளார். 

இது அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. பிம்முடு அஜித் குமார் பிடிக்க உடனடியாக மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். 

போலீசார் அவரை வலை வீசி தேடினர். நள்ளிரவில் விடிய விடிய நடந்த தேர்தல் வேட்டையில் பிம்முடு அஜித் குமார் தப்பி ஓடிய 5 மணி நேரத்தில் மீண்டும் போலீசில் சிக்கி விட்டார்.

சேலம் மேச்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் பிம்முடு அஜித்குமாரை மீண்டும் மடக்கி பிடித்து கைது செய்தனர். 

 அதன் பிறகு பிம்முடு அஜித் குமார் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிம்முடு அஜித்குமார் நீண்ட நாட்களாக திட்டம் தீட்டி தப்பிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் அவர் தப்பிக்க உதவியாக இருந்த கார் ஓட்டுநர் விஜயகுமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த இரண்டாம் நிலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும்

 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பிய சம்பவத்தில் போலீசாரின் கவனக்குறைவு குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இது தொடர்பாக கோவை அரசு மருத்துவமனையில் கைதிகள் பாதுகாப்பில் கவன குறைவாக இருந்த காவலர்கள் எஸ்.எஸ்.ஐ பெரியசாமி, பாரதிதாசன், அசோக்குமார் ஆகிய மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 12 ஜூன், 2026

கோவையில் நள்ளிரவு பயங்கரம் : சொகுசு காரில் வந்து முகமூடி ஆசாமிகள் அட்டகாசம் - வீட்டின் முன் நின்ற கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்படும் சி.சி.டி.வி காட்சிகள் !!!

கோவையில் நள்ளிரவு பயங்கரம் : சொகுசு காரில் வந்து முகமூடி ஆசாமிகள் அட்டகாசம் - வீட்டின் முன் நின்ற கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்படும் சி.சி.டி.வி காட்சிகள் !!!

 கோவையில் நள்ளிரவு பயங்கரம் : சொகுசு காரில் வந்து முகமூடி ஆசாமிகள் அட்டகாசம் - வீட்டின் முன் நின்ற கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்படும் சி.சி.டி.வி காட்சிகள் !!!

தொழில் போட்டியா? கொள்ளை முயற்சியியா? சரவணம்பட்டி போலீசார் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் !!!

 கோவை, சரவணம்பட்டி பகுதியில் நள்ளிரவில் சொகுசு காரில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள், வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாடகை காரின் கண்ணாடிகளை கற்களால் அடித்து நொறுக்கி விட்டு தப்பியோடிய துணிகர சம்பவம் உள்ளூர் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

கோவை, சரவணம்பட்டி புரோ ஜோன் மால் (Prozone Mall) பின்புறம் வசித்து வருபவர் பாஸ்கர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கோவையில் வாடகை கார் (Travels Car) ஓட்டி ஏழ்மையான சூழ்நிலையில் குடும்பத்தை நடத்தி வருகிறார்.

 ஆதரவுக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், இந்த வாடகை காரை நம்பியே அவரது ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் இயங்கி வருகிறது.

​வழக்கம் போல் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது சவாரி பணிகளை முடித்து விட்டு வந்த பாஸ்கர், புதன்கிழமை (ஜூன் 10) நள்ளிரவு சுமார் 1:00 மணி அளவில் தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அப்போது அந்தத் தெருவுக்குள் வோல்க்ஸ்வாகன் (Volkswagen) என்ற பல லட்சம் மதிப்பு உள்ள உயர் ரக சொகுசு கார் ஒன்று மிக நிதானமாக நுழைந்து உள்ளது. 

அதில் இருந்து முகமூடி அணிந்தபடி இறங்கிய இரண்டு மர்ம நபர்கள், திடீரென பெரிய கற்களைக் கொண்டு பாஸ்கரின் கார் கண்ணாடிகளை ஓங்கி அடித்து நொறுக்கினர். 

கார் கண்ணாடிகள் சுக்குநூறாக உடையும் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் விழிப்பதற்குள், அந்த முகமூடி ஆசாமிகள் தங்களது காரில் ஏறி அதிவேகமாகத் தப்பியோடினர்.

 சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த பாஸ்கர், தனது வாழ்வாதாரமாக விளங்கிய காரின் முன் மற்றும் பின் பக்க கண்ணாடிகள் முற்றிலும் உடைந்து நொறுங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.

​இதுகுறித்து பாஸ்கர் உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் முறையான புகார் அளித்தார்.

பின்னர் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை (CCTV Footages) பார்த்த போது அதில், சொகுசு காரில் முகமூடி அணிந்து வரும் நபர்கள் மிகத் துணிச்சலாக காரின் கண்ணாடிகளை உடைக்கும் காட்சிகள் அப்படியே பதிவாகி இருந்தது. 

இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வாகன ஓட்டிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இது ஏதேனும் தொழில் போட்டி காரணமாக அரங்கேறிய திட்டமிட்ட சதியா அல்லது காரில் உள்ள பொருட்களைத் திருடுவதற்காக நடத்தப்பட்ட தாக்குதலா ? என்ற கோணத்தில் சரவணம்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வியாழன், 11 ஜூன், 2026

பொள்ளாச்சி பகுதியில் நள்ளிரவில் பட்டாக் கத்தியுடன் சுற்றி தெரியும் ஹெல்மெட் கொள்ளையர்கள் - சிக்கிய சி.சி.டி.வி காட்சி !!!

பொள்ளாச்சி பகுதியில் நள்ளிரவில் பட்டாக் கத்தியுடன் சுற்றி தெரியும் ஹெல்மெட் கொள்ளையர்கள் - சிக்கிய சி.சி.டி.வி காட்சி !!!

 பொள்ளாச்சி பகுதியில் நள்ளிரவில் பட்டாக் கத்தியுடன் சுற்றி தெரியும் ஹெல்மெட் கொள்ளையர்கள் - சிக்கிய சி.சி.டி.வி காட்சி !!!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த கோலார்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சூர்யா (25) இவர் வழக்கம் போல தனது பணிகளை முடித்து விட்டு வீட்டின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நேற்று பூட்டி விட்டு சென்று உள்ளார். இந்நிலையில் காலையில் எழுந்து பார்த்த போது சூர்யாவின் இரு சக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து கோமங்கலம் காவல் நிலையத்தில் சூர்யா புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஹெல்மெட் மற்றும் மாஸ்க் அணிந்த மூன்று நபர்கள் சூர்யாவின் இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் ஹெல்மெட் அணிந்து வந்த கொள்ளையர்கள் கொலை ஆயுதமான பட்டாக் கத்தியை கொலைச் சம்பவத்தில் ஈடுபடும் போது வைத்து இருந்தது அங்கு உள்ள சி.சி.டி.வி ஒன்றில் பதிவாகி உள்ளது. இதனை அடுத்து வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் தீவிரமாக ஹெல்மட் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

ஞாயிறு, 7 ஜூன், 2026

மினி பஸ்ஸில் நள்ளிரவில் ஏறிய ஜோடி 'லீலை' ; கேமராவைத் திருப்பி விட்டுப் பேட்டரி, இருக்கையைத் திருடிச் சென்ற வாலிபர், இளம்பெண் !!!

மினி பஸ்ஸில் நள்ளிரவில் ஏறிய ஜோடி 'லீலை' ; கேமராவைத் திருப்பி விட்டுப் பேட்டரி, இருக்கையைத் திருடிச் சென்ற வாலிபர், இளம்பெண் !!!

 மினி பஸ்ஸில் நள்ளிரவில் ஏறிய ஜோடி 'லீலை' ; கேமராவைத் திருப்பி விட்டுப் பேட்டரி, இருக்கையைத் திருடிச் சென்ற வாலிபர், இளம்பெண் !!!

​துடியலூர் அருகே சிற்றுந்தில் அரங்கேறிய வினோதக் கொள்ளை... சமூக வலைதளங்களில் வைரலாகும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் !!!

​ கோவை, துடியலூர் பகுதியில் நள்ளிரவில் பயண சேவை முடித்து நிறுத்தப்பட்டு இருந்த மினி பஸ்ஸிற்குள் (சிற்றுந்து) புகுந்து, தங்களின் தனிமைத் தேவையைப் பூர்த்தி செய்ததோடு மட்டுமின்றி, பஸ்ஸில் இருந்த பேட்டரி மற்றும் இருக்கைகளை களவாடிச் சென்ற காதல் ஜோடியின் சி.சி.டி.வி காட்சிகள் தற்பொழுது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

​கோவை மாவட்டத்தில் பொதுமக்களின் அத்தியாவசியப் போக்குவரத்துத் தேவைகளுக்காகத் துடியலூர், கஸ்தூரி நாயக்கன்பாளையம், வடவள்ளி, மருதமலை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் ஏராளமான தனியார் சிற்றுந்துகள் (Mini Buses) தினசரி இயக்கப்பட்டு வருகின்றன.

​இந்நிலையில், துடியலூர் அருகே வழக்கம் போலத் தங்களது தினசரி பயண சேவையை முடித்த சிற்றுந்து ஒன்றின் ஓட்டுநரும் நடத்துநரும், அதனைச் சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தி விட்டு வீட்டிற்குச் சென்று உள்ளனர். நள்ளிரவு 12 மணியைத் தாண்டிய வேளையில், அந்தப் பகுதிக்கு ஒரு வாலிபரும், இளம் பெண் ஒருவரும் ஜோடியாக வந்து உள்ளனர். அங்கும், இங்கும் நோட்டமிட்ட அந்த ஜோடி, யாரும் இல்லாததை அறிந்து ஆள் நடமாட்டமில்லாத நேரத்தில் சத்தமில்லாமல் சிற்றுந்திற்குள் புகுந்தது.

​உள்ளே நுழைந்த பின்னர் அக்கம், பக்கம் பார்த்த அந்த ஜோடிக்கு, பஸ்ஸின் உள்ளே சி.சி.டி.வி (CCTV) கேமரா பொருத்தப்பட்டு இருப்பது தெரிந்தது.

 உடனே உஷாரான அந்த வாலிபர், முன் இருக்கைக்கு அருகே வந்து, பேருந்தின் உட்பகுதி நகர்வைப் படம் பிடித்துக் கொண்டு இருந்த சி.சி.டி.வி கேமராவை, யாரும் இல்லாத வெற்றுப் பகுதியை நோக்கிச் சாதுர்யமாகத் திருப்பி விட்டான். கேமராவைத் திருப்புவதற்கு முந்தைய காட்சிகள் அனைத்தும் அதில் பதிவாகி உள்ளது.

​கேமராவைத் திருப்பிய பின்னர், அந்த வாலிபரும் இளம்பெண்ணும் நீண்ட நேரம் அந்தப் பேருந்திற்கு உள்ளேயே தனிமையில் தங்களது தேவையைப் பூர்த்தி செய்து கொண்டு இருந்து உள்ளனர். பின்னர் அங்கு இருந்து புறப்படும் போது, சும்மா செல்ல மனமில்லாமல் சிற்றுந்தின் எஞ்சின் பகுதியில் இருந்த விலை உயர்ந்த பேட்டரி மற்றும் பயணிகள் அமருவதற்காக அமைக்கப்பட்டு இருந்த சொகுசான குஷன் இருக்கை (Cushion Seat) உள்ளிட்டவைகளைத் திருடிக் கொண்டு தப்பியோடினர்.

​மறுநாள் காலை, வழக்கம் போலப் பயண சேவைக்காகச் சிற்றுந்தை இயக்க வந்த ஓட்டுநரும் நடத்துநரும், பஸ்ஸின் பேட்டரி மற்றும் இருக்கைகள் திருடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 பின்னர் பஸ்ஸில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது தான், நள்ளிரவில் புகுந்த காதல் ஜோடி இந்த வினோதக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

​கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாகவும் இதே போன்ற ஒரு மினி பஸ்ஸில் திருட்டுச் சம்பவம் அரங்கேறி உள்ளது. எனவே, நள்ளிரவு நேரங்களில் பேருந்துகளை இலக்கு வைத்துப் புகுந்து, இது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், துடியலூர் மற்றும் வடவள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு நேரக் காவல் துறை ரோந்துப் பணிகளை (Police Patrolling) மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சிற்றுந்து உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தரப்பில் தற்பொழுது கோரிக்கை முன் வைக்கப்பட்டு உள்ளது.

புதன், 27 மே, 2026

அரசியல் காரணங்களுக்காக குண்டர் சட்டம் பயன்படுத்தப்படுகிறதா ? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி ?

அரசியல் காரணங்களுக்காக குண்டர் சட்டம் பயன்படுத்தப்படுகிறதா ? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி ?

 அரசியல் காரணங்களுக்காக குண்டர் சட்டம் பயன்படுத்தப்படுகிறதா ? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி ?

அரசியல் காரணங்களுக்காக இதுவரை யார் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்படவில்லையா ? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை கொளத்தூர் ராமதாஸ் நகரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் சகோதரர் எல்.கே.சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமான 2 ஏக்கர் 10 சென்ட் நிலத்தில் 234 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி, அதில் 78 குடியிருப்புகளை சுதீஷ் மற்றும் பூர்ணஜோதிக்கு ஒதுக்குவதாக தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் ஷர்மா ஒப்பந்தம் செய்து கொண்டார்.

ஒப்பந்தத்தின் அடிப்படையில், சுதீஷ் மற்றும் அவரது மனைவிக்கு ஒதுக்கப்பட்ட 78 குடியிருப்புகளை போலி கையெழுத்திட்டு, 43 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சந்தோஷ் சர்மா ஜாமீனில் விடுதலையான நிலையில், வாங்கிய குடியிருப்புகளை ஒப்படைக்காமல் ஏமாற்றி விட்டதாக, 2025 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இதை அடுத்து அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் 2025 செப்டம்பர் 22 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ் சர்மாவின் மகள் வர்ஷா சர்மா தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தனது மகள் வர்ஷா சர்மாவின் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், மகளை கவனித்துக் கொள்ள தனது கணவருக்கு 4 வாரம் ஜாமீன் வழங்க வேண்டும் என சந்தோஷ் சர்வாவின் மனைவி கல்பனா சர்மா இடைக்கால கோரிக்கை மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி. ஆர்.சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு, குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்த காவல்துறை ஆணையர் அருண் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்தில் ஆஜரான அருணிடம், இந்த வழக்கு தொடர்பாக நேற்று நீதிமன்றத்தின் சம்மனை கொடுக்க வந்த அதிகாரியை பிற்பகல் 3.05 முதல் 5.15 வரை சுமார் 2 மணி நேரம் காத்து இருக்க வைத்தது ஏன் ? நீதிமன்ற உத்தரவின் படி சம்மன் வழங்க வந்த அதிகாரியை ஏன் இவ்வளவு நேரம் காத்திருக்க வைக்க வேண்டும் என கேள்வி எழுப்பினர்.

பின்னர், சம்மன் வழங்கிய அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை நீதிமன்றத்தின் வெளியே அருண் காத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தது. அனைத்து வழக்குகளும் முடிந்த நிலையில் இறுதியாக சுமார் 6 மணி நேரத்திற்கு பின் இந்த வழக்கு மீண்டும் மாலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஜான் சத்யன், எல்லா குண்டர் சட்டமும் உரிய விசாரணைக்கு பிறகே போடப்படுகிறது. குற்றம் சட்டப்பட்டவர் மீது பல வழக்குகள் இருந்ததால் குண்டர் சட்டம் போடப்பட்டது. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இதன் இடையே, தனது 28 ஆண்டுகால காவலர் பணியில் எந்த சூழ்நிலையிலும் குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்தியது இல்லை என அருண் ஐபிஎஸ் தெரிவித்தார். இதை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், குண்டர் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டதா ? இல்லையா ? என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கின் தீர்ப்பை மே 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.