சட்டம் -ஒழுங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சட்டம் -ஒழுங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 செப்டம்பர், 2026

 "நடுரோட்டில் வேனை மறித்துத் துப்பாக்கிச் சுட்டுக் கொல்ல முயன்றதால் பரபரப்பு" ; கோவையில் சினிமா பாணி சேஸிங்!

"நடுரோட்டில் வேனை மறித்துத் துப்பாக்கிச் சுட்டுக் கொல்ல முயன்றதால் பரபரப்பு" ; கோவையில் சினிமா பாணி சேஸிங்!

மதுக்கரை மேம்பாலம் அருகே துப்பாக்கியுடன் துரத்திய மர்ம நபர்கள்: தப்பிய 2 பேரைத் தீவிரமாகத் தேடும் போலீஸ்!

 கோவை, மதுக்கரை பகுதியில் டூரிஸ்ட் வேனை வழி மறித்து ஓட்டுநரைத் துப்பாக்கியால் சுட முயன்று விட்டுத் தப்பியோடிய மர்ம நபர்கள் இருவரைப் பிடிப்பதற்காகக் காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, மதுக்கரை அடுத்த பாலத்துறை பகுதியில் 'அரேபினியா' (Arabenia) என்ற கறுப்பு நிற டூரிஸ்ட் வேன் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள், திடீரென அந்த வேனை வழி மறித்து ஓட்டுநரைத் துப்பாக்கியால் சுட முயற்சித்து உள்ளனர்.

​அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக வேன் ஓட்டுநர் காரை அதிவேகமாகச் செலுத்தி அங்கு இருந்து தப்ப முயன்றார்.

இருப்பினும் விடாமல் துரத்திய அந்த மர்ம நபர்கள், வேனைப் பின்தொடர்ந்து சினிமா பாணியில் விரட்டி வந்தனர். மதுக்கரை மேம்பாலம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதி வரை அந்த நபர்கள் வேனைத் துரத்தி வந்தனர்.

​அப்போது மதுக்கரை மேம்பாலம் அருகே அந்த டூரிஸ்ட் வேன் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வேன் மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்றது. உடனடியாகச் சூழலை உணர்ந்த ஓட்டுநரும் அப்பகுதி மக்களும் இது குறித்துக் காவல் துறையினருக்கு அவசரத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குப் போத்தனூர் மற்றும் மதுக்கரை காவல்துறையினர் விரைந்து வந்தனர். போலிசார் வருவதைக் கண்டதும், துப்பாக்கியால் சுட முயன்ற அந்த இரு நபர்களும் தங்களது இருசக்கர வாகனத்தில் அங்கு இருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடினர்.

​இச்சம்பவம் குறித்து  மதுக்கரை மற்றும் கோவை எல்லைப் பகுதிகளில் தீவிர வாகனத் தணிக்கை மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

​நடுரோட்டில் டூரிஸ்ட் வேனை மறித்துத் துப்பாக்கியால் சுட முயன்ற இந்தச் அதிர்ச்சி சம்பவம், மதுக்கரை மற்றும் கோவை மக்களிடையே பெரும் பரப்பரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண் ரத்த வெள்ளத்தில் மர்மக் கொலை ; ரேஸ்கோர்ஸ் போலிஸார் தீவிர விசாரணை - கொலையாளி யார் ? எனத் தேடுதல் வேட்டை !!!

கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண் ரத்த வெள்ளத்தில் மர்மக் கொலை ; ரேஸ்கோர்ஸ் போலிஸார் தீவிர விசாரணை - கொலையாளி யார் ? எனத் தேடுதல் வேட்டை !!!

 கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண் ரத்த வெள்ளத்தில் மர்மக் கொலை ; ரேஸ்கோர்ஸ் போலிஸார் தீவிர விசாரணை - கொலையாளி யார் ? எனத் தேடுதல் வேட்டை !!!

 கோவை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 58 வயது பெண் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை, பாப்பநாயக்கன்பாளையம், கருப்புக்கால் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (58). இவர் தனது மகனுடன் வீட்டில் வசித்து வந்தார். இவரது மகன் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

வழக்கம் போல நேற்று காலையில் சாந்தியின் மகன் வேலைக்குச் சென்று உள்ளார். பின்னர் இரவு வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய போது, வீட்டின் முன்பக்கக் கதவு பூட்டப்படாமல் சாத்தப்பட்ட நிலையில் இருந்து உள்ளது.

சந்தேகம் அடைந்து கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது, தாய் சாந்தி முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறித் துடித்து உள்ளார்.

இது குறித்து உடனடியாகக் ரேஸ்கோர்ஸ் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சாந்தியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொலைச் சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, முதற்கட்ட விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

 சாந்தியை நகை அல்லது பணத்திற்காக மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்தார்களா ? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா ? என்ற கோணங்களில் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சனி, 18 ஜூலை, 2026

நள்ளிரவில் நடுரோட்டில் ‘ஃபயர்’ சாகசம்... பைக்கில் தீப்பொறி பறக்க வீலிங் செய்த ‘ஜென்சி கிட்ஸ்’: கிணத்துக்கடவில் சென்னை பாணியில் மெகா அராஜகம்; வீடியோ வைரல் !!!

நள்ளிரவில் நடுரோட்டில் ‘ஃபயர்’ சாகசம்... பைக்கில் தீப்பொறி பறக்க வீலிங் செய்த ‘ஜென்சி கிட்ஸ்’: கிணத்துக்கடவில் சென்னை பாணியில் மெகா அராஜகம்; வீடியோ வைரல் !!!

நள்ளிரவில் நடுரோட்டில் ‘ஃபயர்’ சாகசம்... பைக்கில் தீப்பொறி பறக்க வீலிங் செய்த ‘ஜென்சி கிட்ஸ்’: கிணத்துக்கடவில் சென்னை பாணியில் மெகா அராஜகம்; வீடியோ வைரல் !!!

கிராமப்புறச் சாலைகளைப் பந்தயக் களமாக மாற்றிய இளம் வாலிபர்கள்; சக வாகன ஓட்டிகள் மரண பீதி !

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு ஏலூர் பகுதியில் நள்ளிரவில் வாலிபர்கள் சிலர் இருசக்கர வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி உள்ளதாக தெரிகிறது. மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் வாலிபர்கள் வீலிங் செய்தும், சக வாகனங்களை அச்சுறுத்தும் வகையிலும், சாலையில் பயணித்து உள்ளார்கள்.

 வாகனங்களில் இருந்து தீப்பொறி பறக்க மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை இயக்கி உள்ளனர். பொதுவாக சென்னை போன்ற பெரு நகரங்களில் இரு சக்கர வாகனங்களின் மீது மோகம் கொண்ட இளைஞர்கள் நள்ளிரவில், சாலைகளை பந்தயத்திற்கு பயன்படுத்துவது போல பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கிராமப்புறங்களை அதிகம் கொண்ட பகுதியான பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஜென்சி கிட்ஸ் எனப்படும் இளம் வாலிபர்கள் செய்த தீப்பொறி சாகசம் சமூக வலைதளங்களை தற்போது வைரலாகி வருகிறது.

ஞாயிறு, 28 ஜூன், 2026

2 கி.மீ தூரத்து ட்ரோன் ஸ்பீக்கரில் போலீஸ் எச்சரிக்கை ; அலறி அடித்து ஓட்டம் பிடித்த டாஸ்மாக் மதுப்பிரியர்கள் - கோவையில் த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் ஏற்பாட்டில் அதிரடி நடவடிக்கை !!!

2 கி.மீ தூரத்து ட்ரோன் ஸ்பீக்கரில் போலீஸ் எச்சரிக்கை ; அலறி அடித்து ஓட்டம் பிடித்த டாஸ்மாக் மதுப்பிரியர்கள் - கோவையில் த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் ஏற்பாட்டில் அதிரடி நடவடிக்கை !!!

 2 கி.மீ தூரத்து ட்ரோன் ஸ்பீக்கரில் போலீஸ் எச்சரிக்கை ; அலறி அடித்து ஓட்டம் பிடித்த டாஸ்மாக் மதுப்பிரியர்கள் - கோவையில் த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் ஏற்பாட்டில் அதிரடி நடவடிக்கை !!!

“5 கி.மீ பாய்ந்து செல்லும் அதிநவீன ட்ரோன்” மூலம் கண்காணிப்பு !!!

குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும், மறைவான இடங்களில் போதை பொருட்கள் பயன்படுத்துவோரை கண்டறியவும் ட்ரோன் மூலம் கண்காணித்த கோவை பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னுசாமி தலைமையிலான போலீசார் பொது இடங்கள் மற்றும் டாஸ்மாக் பார்களுக்கு வெளியே நின்று மது அருந்திய நபர்களை 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து டிரோனில் இருந்த வாக்கி டாக்கி ஸ்பீக்கர் மூலர் எச்சரித்ததும் மதுப்பிரியர்கள் ஓட்டம் பிடித்த சம்பவம் குறித்து பார்ப்போம். 

கோவை, பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும், மறைவான இடங்களில் போதை பொருட்கள் பயன்படுத்துவோரை கண்டறியவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் ஏற்பாட்டில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னுச்சாமி தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் முன்னிலையில் ஒரு இடத்தில் இருந்தே ட்ரோன் மூலம் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் குற்றச் சம்பவங்கள் நடக்கும் பகுதிகளாக சில பகுதிகள் கண்டறியப்பட்டு டிரோன்களை ஏவி கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் பெரியநாயக்கன் பாளையம் வளம் மீட்பு பூங்கா, ஹவுசிங் யூனிட், சாமநாயக்கன்பாளையம், ஜே.ஜே.நகர் மலை அடிவார பகுதிகள் மற்றும் கோட்டைப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று போலீசார் ட்ரோன் கேமரா மூலம் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். 

அப்போது பெரியநாயக்கன்பாளையம் அருகே கோட்டைப் பிரிவு பகுதியில் டாஸ்மாக் கடை முன்பாக பொது இடங்களில் மது அருந்திய நபர்களை ட்ரோன் கேமராவில் பொருத்தப்பட்டு இருந்த வாக்கி டாக்கி ஸ்பீக்கர் மூலம் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தவாறு கண்காணித்து எச்சரித்தார். அதை கேட்டததும் அங்கு மது அருந்திக் கொண்டிருந்த மதுப்பிரியர்கள் ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை அழைத்து போதிய அறிவுறுத்தல்களை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.  

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னுச்சாமி கூறுகையில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையில் முதன்முறையாக கோவை மாவட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட அளவில் ட்ரோன் கேமரா மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் குற்றச்சம்பவங்கள் நிகழும் பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ள இடங்களை கண்காணிக்க இருக்கும் இடத்திலிருந்து 5 கிமீ சுற்றளவிற்கு செல்லும் அதிநவீன ட்ரோன் கேமரா பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஸ்பீக்கர் வசதியும் இணைக்கப்பட்டு உள்ளது. 

இதனால் குற்றச்சம்பவங்கள் ஏதும் நிகழும் பட்சத்தில் உடனடியாக செல்ல ட்ரோன் கேமரா பேருதவியாக இருக்கும். அதேபோல் போலீசார் மற்றும் அவர்களது வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில் தடைகளை கண்டறிந்து அதனை தவிர்த்து சம்பவ பகுதிக்கு செல்லும் வகையிலான நவீன ட்ரோன்களும் இந்த கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் குற்றச்சம்பவங்கள் தவிர்க்கப்படும். காவல் துறையினரின் இந்த நடவடிக்கை தொடரும் என தெரிவித்து உள்ளார்.

வெள்ளி, 26 ஜூன், 2026

எல்லையே இல்லாத அத்துமீறல் ; கோவையில் முதியவரிடம் ரூ.2,000 வழிப்பறி - நியாயம் கேட்ட உறவினர்களை நடுரோட்டில் ஆடை அவிழ்த்து மிரட்டிய திருநங்கைகளின் வீடியோ வைரல் !!!

எல்லையே இல்லாத அத்துமீறல் ; கோவையில் முதியவரிடம் ரூ.2,000 வழிப்பறி - நியாயம் கேட்ட உறவினர்களை நடுரோட்டில் ஆடை அவிழ்த்து மிரட்டிய திருநங்கைகளின் வீடியோ வைரல் !!!

 எல்லையே இல்லாத அத்துமீறல் ; கோவையில் முதியவரிடம் ரூ.2,000 வழிப்பறி - நியாயம் கேட்ட உறவினர்களை நடுரோட்டில் ஆடை அவிழ்த்து மிரட்டிய திருநங்கைகளின் வீடியோ வைரல் !!!

 கோவை, அன்னூர் பகுதியில் ஏழை முதியவர் ஒருவரை மிரட்டிப் பணத்தைப் பறித்ததோடு, அதனைத் தட்டிக்கேட்ட உறவினர்களை நடுரோட்டில் ஆபாசமான முறையில் மிரட்டிய திருநங்கைகளின் அதிரவைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை, அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியில் வந்து கொண்டு இருந்த வயதான முதியவர் ஒருவரை, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு திருநங்கைகள் திடீரென வளைத்துப் பிடித்து உள்ளனர். அவரிடம் இருந்த 2,000 ரூபாய் பணத்தைக் கட்டாயப்படுத்திப் பறித்துக் கொண்டு தப்பியோட முயன்று உள்ளனர்.

 கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தை இழந்து முதியவர் தவித்ததைக் கண்ட அவரது உறவினர்கள், உடனடியாக அந்தத் திருநங்கைகளைச் சாலையிலேயே மடக்கிப் பிடித்து, “பெரியவர் வச்சிருந்த காசை ஏன் பறிச்சீங்க ?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பி உள்ளனர்.

​அப்போது, தாங்கள் செய்த குற்றத்திற்காகப் பயந்து பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்குப் பதிலாக, இருசக்கர வாகனத்தில் அமர்ந்து இருந்த அந்த இரண்டு திருநங்கைகளில் ஒருவர், பொதுமக்களுக்கு முன்பாகத் தனது ஆடைகளைத் தூக்கி அநாகரிகமான முறையில் கூச்சலிடத் தொடங்கி உள்ளார்.

 “உன்னால என்ன பண்ண முடியும் ? தைரியம் இருந்தா வா... போலீஸ் ஸ்டேஷனுக்கே போலாம்!” எனப் படுபயங்கரமான கெட்ட வார்த்தைகளால் பேசி, அநாகரிகத்தின் உச்சத்திற்கே சென்று மிரட்டல் விடுத்து உள்ளார்.

 திருநங்கைகளின் இந்த அத்துமீறலையும், ஆபாச மிரட்டலையும் அங்கு இருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ’ எடுத்து சமூக வலைதளங்களில் தட்டி விட்டு உள்ளனர். 

இந்த காட்சிகள் தற்போது வாட்ஸ்அப் பக்கங்களில் காட்டுத் தீயாய் பரவி, நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஏழை முதியவர்களைக் குறிவைத்து அரங்கேறும் இதுபோன்ற பகல் கொள்ளைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அன்னூர் போலீஸார் இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து, விதியை மீறிய அந்தத் திருநங்கைகள் மீது உடனடியாக ‘எஃப்.ஐ.ஆர்’ பதிவு செய்து, இரும்புத் திரைக்குப் பின்னால் தள்ள வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

டைமிங்’ பிரச்சனை ; நடுரோட்டில் இரு தனியார் பேருந்துகள் ரகளை - “நீ ஆம்பளையா... நான் ஆம்பளையா?” என மோதிக்கொண்ட ஊழியர்களால் பயணிகள் அதிர்ச்சி !!!

டைமிங்’ பிரச்சனை ; நடுரோட்டில் இரு தனியார் பேருந்துகள் ரகளை - “நீ ஆம்பளையா... நான் ஆம்பளையா?” என மோதிக்கொண்ட ஊழியர்களால் பயணிகள் அதிர்ச்சி !!!

 டைமிங்’ பிரச்சனை ; நடுரோட்டில் இரு தனியார் பேருந்துகள் ரகளை - “நீ ஆம்பளையா... நான் ஆம்பளையா?” என மோதிக்கொண்ட ஊழியர்களால் பயணிகள் அதிர்ச்சி !!!

கருமத்தம்பட்டியில் அரங்கேறிய அநாகரிக கூத்து – மேம்பாலத்தில் செல்லும் வாகனங்களால் மக்கள் அவதி !!!


கோவை, சூலூர் அருகே கருமத்தம்பட்டி கொச்சின் - சேலம் நெடுஞ்சாலையில், இரு தனியார் பேருந்து ஊழியர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட ‘டைமிங்’ பிரச்சினை காரணமாக நடுரோட்டிலேயே ‘நீயா நானா’ என மல்லுக்கட்டிய சம்பவம் கோவையின் புறநகர்ப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 கோவையில் இருந்து புறப்பட்ட ஏஎம்எஸ் (AMS) மற்றும் டிடிஎஸ் (DTS) ஆகிய இரு தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு இடையே வண்டியை இயக்குவதில் நேரப் பிரச்சினை வெடித்து உள்ளது. 

இதனால் ஆத்திரம் அடைந்த இருதரப்பும், பேருந்துகளைச் சாலையின் நடுவே குறுக்காக நிறுத்தி விட்டு, பயணிகளைப் பணையம் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

ஒருகட்டத்தில் பொறுமையிழந்த ஊழியர்கள், “நீ ஆம்பளையா இருந்தா வாடா... நான் ஆம்பளதான் பாத்துக்கடா!” எனப் பொதுமக்களுக்கு முன்பாக அநாகரிகமான முறையில் கெட்ட வார்த்தைகளால் பேசி சண்டையிட்டுக் கொண்டது அங்கு இருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.

இந்த வட்டாரத்தில் தனியார் பேருந்துகள் தங்களின் ‘கலெக்ஷன்’ மற்றும் ‘டைமிங்’ லாபத்திற்காக, நடுரோட்டில் பேருந்துகளைச் சண்டைக்கோழிகள் போல நிறுத்தி மோதிக் கொள்வது தற்போது வாடிக்கையாகி விட்டது. 

இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது ஒருபுறமிருக்க, பேருந்துக்குள் இருக்கும் பயணிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்த விவகாரத்தில் சூலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் கருமத்தம்பட்டி சட்டம் - ஒழுங்கு பிரிவு போலீஸார் இணைந்து, சம்மந்தப்பட்ட பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதற்கு இடையே, கோவையில் இருந்து திருப்பூர் செல்லும் சில பேருந்துகள் திட்டமிட்ட ‘ரூட்’டான கருமத்தம்பட்டிக்குள் வராமல், உயர் மட்ட மேம்பாலம் வழியாக நைசாக ‘எஸ்கேப்’ ஆகிவிடுவதாகப் பொதுமக்கள் தரப்பில் மற்றொரு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு உள்ளது. 

பேருந்துகள் தங்களது ஊருக்குள் வராமல் பைபாஸ் வழியாகப் பறப்பதால், கருமத்தம்பட்டி, சோமனூர், மங்கலம், செகுடந்தாளி உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் தினசரி பொதுப் போக்குவரத்து கிடைக்காமல் மணிக்கணக்கில் தவித்து வருகின்றனர்.

புதன், 17 ஜூன், 2026

வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டு இருந்த போதை ஆசாமி ; இரு மகள்களுடன் தவித்த தாய் - 1 மணி நேரமாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தவித்த பெண்களின் செல்போன் வீடியோ வைரல் !!!

வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டு இருந்த போதை ஆசாமி ; இரு மகள்களுடன் தவித்த தாய் - 1 மணி நேரமாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தவித்த பெண்களின் செல்போன் வீடியோ வைரல் !!!

 வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டு இருந்த போதை ஆசாமி ; இரு மகள்களுடன் தவித்த தாய் - 1 மணி நேரமாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தவித்த பெண்களின் செல்போன் வீடியோ வைரல் !!!

 "கோவையின் மையப் பகுதியான நியூ சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் அருகே, இரு மகள்களுடன் வசித்து வரும் பெண்ணின் வீட்டு வாசலிலேயே அடையாளம் தெரியாத போதை ஆசாமி ஒருவன் அசுரத்தனமாக உறங்கிக் கிடந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காவலர் வந்து அந்த ஆசாமியை எழுப்பி அனுப்பிய செல்போன் வீடியோ வைரல்...

கோவையின் குடியிருப்பு உள்கட்டமைப்பிற்குள் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி உள்ள இந்த விபரீதச் சம்பவம் ஒட்டுமொத்தப் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

​கோவை, நியூ சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் அருகே உள்ள குடியிருப்பில் சிவசங்கரி என்ற பெண்மணி தனது இரண்டு இளம் மகள்களுடன் வசித்து வருகிறார். இவர்கள் வழக்கம் போலத் வேலைகளுக்குச் சென்று விட்டு, இன்று இரவு 7.30 மணி அளவில் வீட்டிற்குத் திரும்பி உள்ளனர்.

சிவசங்கரி தனது மகள்களுடன் வீட்டின் காம்பவுண்ட் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்ற போது, அவர்களது வீட்டின் பிரதான கதவின் முன்பாக முற்றிலும் அடையாளம் தெரியாத போதை ஆசாமி ஒருவன் அசைவற்று போதையில் சுருண்டு உறங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

​ போதை ஆசாமியைத் திடீரென எழுப்பினால் எங்கே ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது அத்துமீறல்கள் நடந்து விடுமோ ? என்ற பயத்தில், அந்த மூன்று பெண்களும் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வீட்டின் உள்கட்டமைப்பிற்குள் நுழைய முடியாமல் வெளியிலேயே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தவித்து உள்ளனர்.

​தங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடிய அந்தப் பெண்கள், உடனடியாகத் தமிழக காவல் துறையின் அவசர உதவி எண்ணான 100-க்கு அடுக்கடுக்காகப் பலமுறை அழைத்து உள்ளனர்; ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தப் பக்கம் இருந்து எவ்விதப் பதிலும் வரவில்லை.

​இதனைத் தொடர்ந்து அவர்கள் வேறு வழியின்றி முதலமைச்சரின் தனிப் பிரிவு அவசர உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது, அங்கு இருந்த அதிகாரிகள், 'நீங்களே அந்த ஆசாமியின் முகத்தில் தண்ணீரை ஊற்றி எழுப்பிப் பாருங்கள்' என அலாதிப் பொறுப்பற்ற அறிவுரையை வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான பிரத்யேகப் பாதுகாப்பு உதவி எண்ணான 181 எண்ணிற்குத் தகவல் தெரிவித்தும் அங்கு இருந்தும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

​பெண்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, இறுதியாகக் காட்டூர் காவல் நிலையத்திற்குத் தகவலறிந்த அங்கு வந்த காட்டூர் காவல் நிலைய காவலர் ஒருவர் ​அங்கு உறங்கிக் கொண்டு இருந்த போதை ஆசாமியைத் தட்டி எழுப்பிய காவலர், அவரிடம் விசாரணை நடத்தினார். ஆனால், அசுரப் போதையில் இருந்த அந்த ஆசாமியால் ஒழுங்காக நிற்கக் கூட முடியாமல் தள்ளாடியபடி, வீட்டின் மதில் சுவரைப் பிடித்துக் கொண்டு நின்றான். 

அவனிடம் பெயர் விபரங்களைக் கேட்ட போது தனக்கு ஒன்றும் தெரியவில்லை என்றும், வீடு எங்கு உள்ளது எனக் கேட்டதற்குப் பக்கத்திலுள்ள ‘பாலகிருஷ்ணா ரோடு’ என்றும் உளறி உள்ளான்.

​இதையடுத்து, அந்தப் போதை ஆசாமியை அங்கு இருந்து மெதுவாக நடந்து செல்லுமாறு காவலர் எச்சரித்து வழி அனுப்பி வைத்தார். 

அங்கு இருந்த ஒருவர் இந்த பரபரப்பு நாடகத்தையும் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 16 ஜூன், 2026

போதையில் போக்குவரத்து பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆசாமி கைது !!!

போதையில் போக்குவரத்து பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆசாமி கைது !!!

 போதையில் போக்குவரத்து பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆசாமி கைது !!!

கோவை, போத்தனூர் போக்குவரத்துப் பிரிவில் பெண் காவலராகப் பணி புரிந்து வருபவர் பொன்னுதாய் (வயது 34). இவர் நேற்று  சுந்தராபுரம் - பொள்ளாச்சி ரோடு, காந்தி நகர் சந்திப்பில் வாகனப் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அந்த வழியே  போதையில் நடந்து வந்த மர்ம நபர் ஒருவர், போக்குவரத்துப் பணியில் இருந்த பெண் காவலர் பொன்னுதாயிடம் சென்று தகராறு செய்தார். சாலையில் நின்று கொண்டு வாகனங்களை ஒழுங்குபடுத்தியவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, கைகளை நீட்டி அடிக்கப் பாய்ந்தார். மேலும் அவமரியாதையாகப் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து பொன்னுதாய் அளித்த புகாரின் பேரில் சுந்தராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பெண் போலீசிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட அந்த போதை ஆசாமியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாழன், 28 மே, 2026

இன்ஸ்ட்டா காதலை கைவிட்ட இளம் பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பல் ; சி.சி.டி.வி யில் சிக்கிய நபர்களின் முகங்கள் : சென்னைக்கு விரைந்து தீவிர தேடுதல் வேட்டையில் தனிப்படை !!!

இன்ஸ்ட்டா காதலை கைவிட்ட இளம் பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பல் ; சி.சி.டி.வி யில் சிக்கிய நபர்களின் முகங்கள் : சென்னைக்கு விரைந்து தீவிர தேடுதல் வேட்டையில் தனிப்படை !!!

 இன்ஸ்ட்டா காதலை கைவிட்ட இளம் பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பல் ; சி.சி.டி.வி யில் சிக்கிய நபர்களின் முகங்கள் : சென்னைக்கு விரைந்து தீவிர தேடுதல் வேட்டையில் தனிப்படை !!!

 கோவை, தொண்டாமுத்தூர் அருகே காதலை கைவிட்ட இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி, மர்ம கும்பலின் சிசிடிவி (CCTV) காட்சிகள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதில் பதிவான குற்றவாளிகளின் முகங்களை அடையாளம் கண்ட தனிப்படை போலீசார் அவர்களை பிடிக்க தற்போது சென்னையில் முகாமிட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டையில் களம் இறங்கி உள்ளனர்.

​கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த கள்ளிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு, சென்னையைச் சேர்ந்த கார்த்தி என்கிற மாரியப்பன் (30) என்ற வாலிபருடன் ‘இன்ஸ்டாகிராம்’ (Instagram) சமூக வலைத்தளம் வழியாகத் தீவிரக் காதல் உருவாகி உள்ளது. இவர்களின் லவ் டிராக் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்குத் தெரியவரவே, அவர்கள் வாலிபர் கார்த்தி குறித்துத் விசாரித்து உள்ளனர். அப்போது கார்த்தியின் பின்னணி குறித்துச் சரியான மற்றும் திருப்திகரமான தகவல்கள் கிடைக்காததாலும், குற்றவிளக்கில் தொடர்புடையவர் என அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்களது மகளின் காதலுக்குக் கடுமையான ‘ரெட் சிக்னல்’ காட்டி எதிர்த்து உள்ளனர். பெற்றோரின் பாசத்திற்கும் அறிவுரைக்கும் மதிப்பு அளித்த அந்தப் பெண்ணும், ரவுடி கார்த்தியுடனான அனைத்து தொடர்புகளையும் முற்றிலுமாகக் கட் செய்து, ‘பிரேக் அப்’ செய்து ஒதுங்கி உள்ளார்.

​இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற காதலன் கார்த்தி, இரண்டு தினங்களுக்கு முன்பு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இருசக்கர வாகனங்களில் கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள காதலியின் வீட்டிற்குப் பயங்கர ஆயுதங்களுடன் வந்து உள்ளார். அவர்கள் முன்னரே ஸ்கெட்ச் போட்டுத் தயார் செய்து கொண்டு வந்து இருந்த, எரியக் கூடிய ஆயில் மற்றும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டில்களைத் தீப்பற்ற வைத்து, வீட்டின் நுழைவாயிலை நோக்கி ‘டமால், டமால்’ என வீசி எறிந்து ‘பெட்ரோல் குண்டு’ தாக்குதல் நடத்தி உள்ளனர். 

இந்த அதிர்ச்சித் தாக்குதலில் வீட்டின் வாசலில் வைக்கப்பட்டு இருந்த காலணி வைக்கும் ஸ்டாண்ட் (Footwear Stand) மற்றும் போர்டிகோ பகுதி திடீரெனப் பற்றிக் கொண்டு அசுர வேகத்தில் எரியத் தொடங்கியது.

​வீட்டின் போர்டிகோவில் பயங்கரச் சத்தத்துடன் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு, அலறி அடித்துக் கொண்டு வெளியில் வந்த குடும்பத்தினர், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த தங்களது சொகுசு மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களைத் துரிதமாகச் செயல்பட்டுத் தீயின் அருகில் இருந்து அப்புறப்படுத்தினர். 

பின்னர், அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் தண்ணீரை வாரி இறைத்துத் தீயை உடனடியாக அணைத்ததால், நல்வாய்ப்பாக இந்த விபரீத சம்பவத்தில் யாருக்கும் எந்தவித உடல் காயமும், உயிராபத்தும் ஏற்படவில்லை.

​இதற்கு இடையே, இந்த தாக்குதல் அரங்கேறிய போது அங்கு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான பதைபதைக்க காட்சிகள் வெளியாகி பரவி வருகிறது.

 அந்த வீடியோவில், வீட்டின் வாசல் அருகில் இரு மோட்டார் சைக்கிளில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்து நிற்கிறது. அதில் பின்னால் இருந்த ஆசாமி முதலில் ஒரு பெட்ரோல் பாட்டிலைப் பற்ற வைத்துக் வீசுகிறான். அடுத்த சில நொடிகளிலேயே மற்றொரு பாட்டிலையும் வீசி எறிய, போர்டிகோ பகுதி ஒட்டுமொத்தமாகத் தீப்பற்றி எரிகிறது. காரியத்தை முடித்த அடுத்த விநாடியே, அந்தப் கும்பல் பைக்கை முறுக்கிக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கு இருந்து தப்பிச் சென்றது.

​இந்தக் சம்பவம் தொடர்பாகத் தொண்டாமுத்தூர் போலீசார் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது கண்காணிப்பு கேமரா காட்சிகளின் ஆய்வின் அடிப்படையில், காதலி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய அத்தனை ஆசாமிகளின் அடையாளங்களையும் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இருசக்கர வாகனங்களில் வந்து இந்த வெறிச்செயலை அரங்கேற்றிய அந்த சென்னையைச் சேர்ந்த ரவுடிகளை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பவன் குமார் ரெட்டி குற்றவாளிகளைச் 3 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டு உள்ளார். 

எஸ்.பி-யின் உத்தரவின் பேரில் சென்னைக்கு விரைந்த தனிப்படை போலீசார், தற்போது சென்னையின் பதுங்கி இருக்கும் ரவுடி கார்த்தி மற்றும் அவனது கூட்டாளிகளைப் பிடிப்பதற்காகத் தீவிர தேடுதல் ‘வேட்டையில்’ இறங்கி உள்ளனர்.

வெள்ளி, 22 மே, 2026

கோவையில் பட்டப் பகலில் பயங்கரம் ; பூட்டிய வீட்டை இரும்பு ஆயுதத்தால் உடைத்த மர்ம நபர் - செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் !!!

கோவையில் பட்டப் பகலில் பயங்கரம் ; பூட்டிய வீட்டை இரும்பு ஆயுதத்தால் உடைத்த மர்ம நபர் - செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் !!!

 கோவையில் பட்டப் பகலில் பயங்கரம் ; பூட்டிய வீட்டை இரும்பு ஆயுதத்தால் உடைத்த மர்ம நபர் - செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் !!!

கோவை, உக்கடம் புல்லுக்காடு பகுதியில் அமைந்து உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 26 கட்டிடங்களில் சுமார் 2000 குடியிருப்புகள் உள்ளன. அதில் பல வீடுகளில் ஆட்கள் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அங்கு அவ்வப் போது இளைஞர்கள் சிலர் வந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி வருவதாகவும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 18 வது பிளாக் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் ஆறு மாதத்திற்கும் மேலாக பூட்டி இருந்த வீட்டின் பூட்டை மர்ம நபர் ஒருவர் ஏற்கனவே தான் கொண்டு வந்து இருந்த இரும்பு ஆயுதங்களால் உடைத்துக் கொண்டு இருந்தார். அப்போது அதனை கண்ட அருகில் வசித்து வரும் பொதுமக்கள் நீங்கள் யார் எதற்காக வீட்டின் பூட்டை உடைக்கிறீர்கள் என்று கேட்கவே அந்த நபர் தட்டிக்கேட்ட அக்கம், பக்கத்தினரையும் கடுமையாக பேசி தாக்க முற்பட்டு உள்ளார். இதற்கு இடையே அந்த நபர் வீட்டின் பூட்டை உடைப்பதை அங்கு இருந்தவர்கள் தங்களது கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்த நிலையில் தற்பொழுது அந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் பல வீடுகள் கேரள மாநிலத்தில் வசித்து வருபவர்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்டு உள்ளதாகவும் பல்வேறு சமூக விரோத செயல்களுக்கான புகலிடமாக விளங்குவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்......

சனி, 16 மே, 2026

த.வெ.க ஆட்சியில் கோவையில் இளைஞர்கள் அட்டூழியம் : நடுரோட்டில் போதை ஆட்டம், பைக் ரேஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் !!!

த.வெ.க ஆட்சியில் கோவையில் இளைஞர்கள் அட்டூழியம் : நடுரோட்டில் போதை ஆட்டம், பைக் ரேஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் !!!

த.வெ.க ஆட்சியில் கோவையில் இளைஞர்கள் அட்டூழியம் : நடுரோட்டில் போதை ஆட்டம், பைக் ரேஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் !!!

​சிட்ரா மருத்துவமனை அருகே நடுரோட்டில் ஆட்டம்; கவுண்டம்பாளையத்தில் பைக் ‘வீலிங்’ - வீடியோக்கள் வெளியாகிச் சமூக வலைதளங்களில் பரபரப்பு !!!

 தமிழகத்தில் புதியதாகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, கோவையில் நள்ளிரவு நேரங்களில் போதை இளைஞர்களின் அத்துமீறல்களும், பைக் ரேஸர்களின் அட்டகாசங்களும் நாளுக்கு, நாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியையும் கிளப்பி உள்ளது.

​கோவையில் அண்மைக் காலமாக நள்ளிரவு நேரச் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு சிட்ரா பகுதியிலும், கவுண்டம்பாளையத்திலும் அரங்கேறிய போதை வாலிபர்களின் அட்டகாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பி உள்ளது.

கோவை சிட்ரா பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்குச் சரியாக எதிரே நேற்று நள்ளிரவு வாலிபர்கள் சிலர் மது போதையில் வாகனங்களை நடுரோட்டிலேயே கண்டபடி நிறுத்தி விட்டு, அநாகரீகமான முறையில் கூச்சலிட்டு ஆட்டம் போட்டு உள்ளனர். 

மருத்துவமனைக்கு அவசரமாக வரும் அவசரச் சிகிச்சை வாகனங்கள் மற்றும் நோயாளிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது. 

போதை வாலிபர்களின் இந்த ரகளையைக் கண்டு அந்தப் பகுதி வழியே சென்ற வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் தங்களது வாகனங்களை இயக்கிச் சென்றனர்.

இதேபோல், கோவையின் மற்றொரு முக்கியப் பகுதியான கவுண்டம்பாளையத்தில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்கள் சிலர் தங்களது பைக்குகளின் சைலன்சர்களை மாற்றி, காதைப்பிளக்கும் சத்தத்துடன் ஆபத்தான முறையில் ‘பைக் ரேஸ்’ (Bike Race) மற்றும் வீலிங் (Wheeling) போன்ற சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

​சாலையில் செல்பவர்களின் உயிருக்கு உலை வைக்கும் வகையில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடும் ‘திக் திக்’ செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. 

கோவையில் நள்ளிரவு நேர ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தி, இத்தகைய சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திங்கள், 20 ஏப்ரல், 2026

கோவை ராமநாதபுரம் காவல் நிலையம் முன்பு முற்றுகையில் ஈடுபட்ட தி.மு.க , அ.தி.மு.க கட்சியினர் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர் !!!

கோவை ராமநாதபுரம் காவல் நிலையம் முன்பு முற்றுகையில் ஈடுபட்ட தி.மு.க , அ.தி.மு.க கட்சியினர் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர் !!!

கோவை ராமநாதபுரம் காவல் நிலையம் முன்பு முற்றுகையில் ஈடுபட்ட தி.மு.க , அ.தி.மு.க கட்சியினர் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர் !!!

கோவை, ராமநாதபுரம் 80 அடி சாலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக தி.மு.க வினரை பிடித்து அ.தி.மு.க வினர் தாக்கினர். மேலும் தி.மு.க வினர் வந்த கார் கண்ணாடியையும் அடித்து உடைத்தனர். சம்பவ இடத்திற்கு அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் வந்த நிலையில், கரூரை சேர்ந்த தி.மு.க வினர் வந்த வாகனத்தில் இருந்து சுமார் ஒரு லட்ச ரூபாய் வரையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 இதனை அடுத்து பணத்துடன் தி.மு.க வினர் 6 பேரை போலீசார் விசாரணைக்காக இராமநாதபுரம் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இரவு நேரத்தில் இராமநாதபுரம் காவல் நிலையத்தை அ.தி.மு.க வினர் முற்றுகையிட்ட நிலையில் , தி.மு.க வை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரும் காவல் நிலையம் முன்பாக குவிந்தனர்.

இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் வாக்கு வாதம் செய்த நிலையில் காவல் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

காவல் நிலைய வாயிலில் இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்படவே போலீசார் லேசான தடியடி நடந்தி இரு தரப்பினரையும் கலைத்தனர். 


தொடர்ந்து இராமநாதபுரம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாழன், 2 ஏப்ரல், 2026

கோவையில் RTO அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் :  மர்ம கும்பல் இமெயில் - வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை !!!

கோவையில் RTO அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : மர்ம கும்பல் இமெயில் - வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை !!!

 கோவையில் RTO அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் :  மர்ம கும்பல் இமெயில் - வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை !!!

13 இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என மிரட்டல்; ஒரு மணி நேரச் சோதனைக்குப் பின் புரளி என உறுதி !!!


கோவை, துடியலூரில் உள்ள வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) இன்று காலை இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் தீவிர சோதனைக்குப் பிறகு இது வெறும் புரளி என்பது தெரியவந்தது.
துடியலூர் RTO அலுவலகத்திற்கு வந்த மிரட்டல் இமெயிலில், "நாடு கடந்த திராவிட அரசு" (Exiled Dravidian Government) என்று தங்களைக் குறிப்பிட்டுள்ள மர்ம கும்பல், மெட்ராஸ் டைகர்ஸ், தமிழ் விடுதலைப் படை உள்ளிட்ட பல்வேறு தடை செய்யப்பட்ட மற்றும் புதிய அமைப்புகளின் பெயர்களைப் பயன்படுத்தி உள்ளது.
​ நேற்று மதியம் 1.15 மணி அளவில் அலுவலகத்தில் 13 குண்டுகள் வெடிக்கும் என்றும், உள்ளே இருப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறும் அந்த இமெயிலில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
 மார்ச் 31 முதல் "நேரடி நடவடிக்கை வாரமாக" (Direct Action Week) அறிவித்து, தமிழக அரசுக்கு எதிராகப் போர் பிரகடனம் செய்வதாக அந்த மர்ம கும்பல் தெரிவித்து உள்ளது. அந்த மிரட்டல் கடிதத்தில் ஆளும் தி.மு.க அரசு மற்றும் முதலமைச்சர் மீது அடுக்கடுக்கான அரசியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு உள்ளன.
​முஸ்லிம்கள் மீது உபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்துதல்.
​முறைகேடாகப் பெற்ற நிதியைக் காக்க ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வுடன் ரகசியக் கூட்டணி வைத்து இருப்பதாகக் குற்றச்சாட்டு.
​என்கவுண்டர்கள், காவல்துறை அராஜகம் மற்றும் ஊடகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்து இருத்தல்.

​போதைப்பொருள் வர்த்தகத்தில் முதலமைச்சர் குடும்பத்திற்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி, அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டு உள்ளனர்.

போலீசார் அதிரடி சோதனை:

மிரட்டல் குறித்துத் தகவல் அறிந்தவுடன் துடியலூர் RTO அலுவலக அதிகாரிகள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் வருகை: 

கோவை மாவட்ட வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றுதல் பிரிவு (BDDS) நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சோதனை

அலுவலகத்தின் அனைத்து அறைகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் வளாகம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரம் நவீனக் கருவிகளைக் கொண்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.

​ இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டுகள் அல்லது வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால், இது மர்ம நபர்களால் பரப்பப்பட்ட வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. இதே போன்ற மிரட்டல் கடிதங்கள் கோவையில் உள்ள மற்ற RTO அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
​தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் காரணங்களை முன்னிறுத்தி விடுக்கப்பட்டுள்ள இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இமெயில் அனுப்பிய நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்

திங்கள், 30 மார்ச், 2026

கோவை டூ பொள்ளாச்சி சாலையில் போதையில் இளைஞர்கள் ஓட்டிய கார்: பைக் மீது மோதி தூக்கி வீசப்பட்ட கோர விபத்து - அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் !!!

கோவை டூ பொள்ளாச்சி சாலையில் போதையில் இளைஞர்கள் ஓட்டிய கார்: பைக் மீது மோதி தூக்கி வீசப்பட்ட கோர விபத்து - அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் !!!

கோவை டூ பொள்ளாச்சி சாலையில் போதையில் இளைஞர்கள் ஓட்டிய கார்: பைக் மீது மோதி தூக்கி வீசப்பட்ட கோர விபத்து - அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் !!!

கோவை - பொள்ளாச்சி சாலையில் போதையில் இளைஞர்கள் ஓட்டி சென்ற கார், இருசக்கர வாகனங்கள் மீது மோதும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கோவை, ஒத்தக்கால் மண்டபம் அருகே போதையில் மூன்று இளைஞர்கள் ஓட்டி வந்த 'TN 38 DE 5037' என்ற எண் கொண்ட கார் அதிவேகமாக சென்று கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதினர். இந்த விபத்தில், பைக்கில் சென்றவர்கள் பந்து போல அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டு, சாலையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தனர்.

​இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 காரில் இருந்த மூன்று இளைஞர்களையும் மடக்கிப் பிடித்த பொதுமக்கள் அதில் வந்த மூன்று பேரும் போதையில் காரை இயக்கியதாக கூறப்படுகிறது.

 இந்த விபத்து அங்கு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் அந்த 'பகீர்' காட்சிகள், பார்ப்போரின் நெஞ்சைப் பதற வைப்பதாக உள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்தை விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளி, 27 மார்ச், 2026

கோவை மத்திய சிறை கைதிகளுக்கு ஏற்பட்ட மோதல் : தடுக்கச் சென்ற காவலருக்கு மிரட்டல் - கைதி மீது வழக்கு !!!

கோவை மத்திய சிறை கைதிகளுக்கு ஏற்பட்ட மோதல் : தடுக்கச் சென்ற காவலருக்கு மிரட்டல் - கைதி மீது வழக்கு !!!

 கோவை மத்திய சிறை கைதிகளுக்கு ஏற்பட்ட மோதல் : தடுக்கச் சென்ற காவலருக்கு மிரட்டல் - கைதி மீது வழக்கு !!!

கோவை மத்திய சிறையில் 2,000 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அதில் நசீர் என்பவர் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு உள்ளார்.

அவர் கழிவறையை பயன்பாட்டுக்காக தண்ணீர் எடுத்துக் கொண்டு இருந்தார். அப்பொழுது அவருக்கும், மற்றொரு விசாரணை கைதியான முத்துப்பாண்டி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்பொழுது அவர் முத்துப்பாண்டியை கீழே தள்ளி விட்டதாக தெரிகிறது. இதனை கவனித்த காவலர் மகேந்திரன் என்பவர் ஓடிச் சென்று ஏன் ? இப்படி செய்கிறாய் என்று கேட்டு உள்ளார்.

அதற்கு நசீர் காவலரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரில் நசீர் மீது ரேஸ் கோர்ஸ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதன், 25 மார்ச், 2026

கோவையில் மருத்துவரின் தாயாரை கொண்டு நகை - பணம் கொள்ளை அடித்த சம்பவம் : நேபாள தம்பதியைத் தேடி தனிப்படை மும்பைக்கு விரைந்தது !!!

கோவையில் மருத்துவரின் தாயாரை கொண்டு நகை - பணம் கொள்ளை அடித்த சம்பவம் : நேபாள தம்பதியைத் தேடி தனிப்படை மும்பைக்கு விரைந்தது !!!

கோவையில் மருத்துவரின் தாயாரை கொண்டு நகை - பணம் கொள்ளை அடித்த சம்பவம் : நேபாள தம்பதியைத் தேடி தனிப்படை மும்பைக்கு விரைந்தது !!!


கோவையில் மருத்துவரின் தாயாரை கொன்று விட்டு நகை - பணத்தை கொள்ளை அடித்த நேபாள தம்பதியை தேடி தனிப்படை போலீசார் மும்பை விரைந்தனர்.

கோவை, நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் ராம்குமார் குட்டி. இவருடைய தாயார் 82 வயதான கஸ்தூரி, இவரது வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு உதவியாக நேபாள நாட்டைச் சேர்ந்த சுர்ஜா என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தினர். அந்த வீட்டில் ஏராளமான நகை மற்றும் பணம் இருந்ததை பார்த்ததும் சுர்ஜாவுக்கு கொள்ளை அடிக்க ஆசை ஏற்பட்டது.

உடனே அவர் நேபாளத்தில் இருக்கும் தனது கணவர் ராஜூ மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கடந்த 6 ம் தேதி சுர்ஜாவின் கணவர் ராஜூ அவரது உறவினர்களான ராகேஷ் சவுத், திலீப் சாகி, தாமூர் புக்தா ஆகியோருடன் கோவை வந்து கஸ்தூரி கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த நகை - பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.

இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி பெங்களூரில் வைத்து ராஜூவின் உறவினர்களான ராகேஷ் சவுத், திலீப் சாகி, தாமூர் புப்தா ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். தலைமறைவான நேபாள நாட்டு தம்பதி ராஜூ - சுர்ஜாவை வலை வீசி தேடி வந்தனர். இதற்கு இடையே அவர்கள் நேபாளத்துக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்பட்டது. அதன் பெயரின் நேபாளத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த தம்பதி அங்கு செல்லவில்லை என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும் போது :

கோவையில் மூதாட்டியை கொன்று நகை - பணத்துடன் தப்பிய தம்பதி காரில் பெங்களூரு சென்றனர். பின்னர் மும்பைக்கு தப்பி சென்று தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. எனவே தனிப்படையினர் மும்பை விரைந்து உள்ளனர். அவர்கள் மும்பை மற்றும் புனே பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமுறைவான தம்பதியின் மகள் மற்றும் உறவினர்கள் நேபாளத்தில் வசித்து வருகின்றனர். அவர்களின் செல்போனில் அந்த தம்பதி தொடர்பு கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே அவருடைய மகள் மற்றும் உறவினர்களின் செல்போன் எங்களுக்கு யார் ? தொடர்பு கொள்கிறார்கள் என்பதை கண்காணித்து வருவதாகவும், விரைவில் அந்த தம்பதியை பிடித்து விடுவோம் என்றும் அவர்கள் கூறினர்.

திங்கள், 23 மார்ச், 2026

கோவையில் விற்பனைக்காகப் பதுக்கி வைத்து இருந்த 2.4 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு - காவல்துறை நடவடிக்கை !!!

கோவையில் விற்பனைக்காகப் பதுக்கி வைத்து இருந்த 2.4 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு - காவல்துறை நடவடிக்கை !!!

 கோவையில் விற்பனைக்காகப் பதுக்கி வைத்து இருந்த 2.4 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு - காவல்துறை நடவடிக்கை !!!

கோவை, பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராமசெட்டிபாளையம் பகுதியில், விற்பனைக்காகக் கஞ்சாவைப் பதுக்கி வைத்து இருந்த மூன்று வாலிபர்களைப் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இடம் இருந்து 2.400 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

​கோவை மாவட்டம், பேரூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினோத் மற்றும் காவலர்கள், ராமசெட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர், ஆறுமுககவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் குற்றத் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் சதாசிவம் என்பவருக்குச் சொந்தமான வாடகை வீட்டிற்கு அருகில் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

​போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்ற மூன்று நபர்களைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் விற்பனைக்காகத் தடை செய்யப்பட்ட கஞ்சாவைப் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவர்களிடம் நடத்திய விசாரணையில் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன், சுண்டக்கா முத்தூர் பகுதியைச் சேர்ந்த ​விக்னேஷ் (22), ஹரி ராகவேந்திரன் (22) என்பது தெரிய வந்தது. அவர்கள் பதுக்கி வைத்து இருந்த 2.400 கிலோ கஞ்சா, மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து போதை பொருள் தடுப்புப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு  செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஞாயிறு, 22 மார்ச், 2026

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.23 லட்ச பணம், நகை பறிமுதல் : வருமான வரி அலுவலகத்தில் ஒப்படைப்பு - ரயில்வே காவல்துறையினர் !!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.23 லட்ச பணம், நகை பறிமுதல் : வருமான வரி அலுவலகத்தில் ஒப்படைப்பு - ரயில்வே காவல்துறையினர் !!!

 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.23 லட்ச பணம், நகை பறிமுதல் : வருமான வரி அலுவலகத்தில் ஒப்படைப்பு - ரயில்வே காவல்துறையினர் !!!

எக்ஸ்பிரஸ் ரயிலில் முறையான ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.23 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளன. எனவே, பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்து மேல் பணத்தோ, அதற்கு அதிகமான மதிப்புடைய நகையையோ எடுத்துச் சென்றால் அதற்குரிய ஆவணங்களை வைத்து இருக்க வேண்டும். இல்லையெனில் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும்.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கழுகு பார்வை வைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், நேற்று வரை மட்டும் ரூ.75 கோடியே 3 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் 2,160 பறக்கும் படைகள், 2,160 நிலை கண்காணிப்புக் குழுக்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் யாரேனும் பணம் எடுத்து வருகிறார்களா ? என ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பொதுப் பெட்டியில் வந்த சென்னையை சேர்ந்த தணிகைவேல் என்பவர் ரூ.4 லட்சத்து 98 ஆயிரத்து 400 பணம் மற்றும் ரூ.13 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள 94 கிராம் நகை எடுத்து வந்தது தெரியவந்தது.

அந்த பணம் மற்றும் நகையின் விவரம் குறித்து அவரிடம் கேட்ட போது, உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது. அதனால், ரூ.18 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகையை பறிமுதல் செய்த போலீசார், அதனை வருமான வரி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

அதேபோல, மும்பையில் இருந்து சென்னை வந்த மும்பை - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த சென்னையை சேர்ந்த நந்தகுமார் என்பவர், முறையான ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.5 லட்சத்து 9 ஆயிரத்து 170 பணத்தை பறிமுதல் செய்த பெரம்பூர் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார், அதனை வருமான வரி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

வியாழன், 19 மார்ச், 2026

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் முனீஸ்வரன் கைதானது எப்படி? - எஸ்.பி. மதன் விளக்கம் !!!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் முனீஸ்வரன் கைதானது எப்படி? - எஸ்.பி. மதன் விளக்கம் !!!

 விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் முனீஸ்வரன் கைதானது எப்படி? - எஸ்.பி. மதன் விளக்கம் !!!

மாணவி கொலை வழக்கில் 98 சி.சி.டி.வி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், செல்ஃபோன் சிக்னல் உள்ளிட்ட அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடப்பதாகவும் தூத்துக்குடி எஸ்.பி மதன் தெரிவித்தார்.

விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை வழக்கில், முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டது குறித்து மாவட்ட எஸ்.பி மதன் விளக்கம் அளித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 17 வயதான பிளஸ் 2 மாணவி, மார்ச் 11-ம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

 தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று மாணவியின் பெற்றோர், உறவினர் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சம்பவத்தை நிகழ்த்தியவர்களை கண்டறிய 10 தனிப்படைகளை அமைத்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை உத்தரவிட்டு இருந்தது. தனிப்படை போலீசார், இந்த குற்றம் இழைத்தவர்களை தீவிரமாக தேடி வந்தனர். போலீசாருக்கு கடும் சவாலாக அமைந்த இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக, சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (30) என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

 இவ்வழக்கின் நிலை உள்ளிட்டவை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினார். அப்போது அவர் கூறும்போது :

 "விளாத்திகுளம் அருகே 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த உடனே 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 6 டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த வழக்கைத் தொடக்கம் முதலே டி.ஜி.பி தொடர்ந்து கண்காணித்து வந்தார்.

மாணவி கொலை செய்யப்பட்ட இடம் காட்டுப் பகுதி என்பதால், அங்கு சி.சி.டி.வி கேமரா வசதி எதுவும் இல்லை. எனவே, சுற்று வட்டாரத்தில் இருந்த 98 சி.சி.டி.வி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

 அதுமட்டுமின்றி, செல்ஃபோன் கால் பதிவுகள், அப்பகுதி மக்கள் அளித்த தகவல்கள் மற்றும் பிற அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

குறிப்பாக, வேடநத்தம் கிராமத்தில் உள்ள சுமார் 800 ஆண்கள், சம்பவம் நடந்த சமயத்தில் எங்கு இருந்தனர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டோம். 461 குற்றப் பின்னணி கொண்ட நபர்களையும் விசாரணை செய்து, சம்பவத்தில் தொடர்பு இல்லை என உறுதி செய்யப்பட்டவர்களை விடுவித்தோம். அதில், ஆரம்பத்தில் பிடிக்கப்பட்ட 5 நபர்கள் மீது மட்டுமே சந்தேகம் இருந்தது. உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லாத காரணத்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதுபோன்ற சூழலில் தான் சி.சி.டி.வி காட்சிகள், செல்ஃபோன் சிக்னல் ஆய்வு மற்றும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த கைது நடவடிக்கை எந்தவொரு அழுத்தத்தினாலும் எடுக்கப்படவில்லை. முழுக்க, முழுக்க அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது” என்று எஸ்.பி மதன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

 “இந்த வழக்கில் போலீஸ் கான்ஸ்டபிள் முதல் ஆய்வாளர் வரை என அனைவரும் மிக கடினமாக உழைத்து உள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள், டி.என்.ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளன. அதன் முடிவுகள் வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த 6 பேருக்கு எதிராக போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது" என்றார். மேலும், "வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில், அனைத்து கிராமங்களிலும் சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன" என்றார்.

என் மகளை கொன்றவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் - கண்ணீர் மல்க தந்தை கோரிக்கை !!!

என் மகளை கொன்றவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் - கண்ணீர் மல்க தந்தை கோரிக்கை !!!

 என் மகளை கொன்றவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் - கண்ணீர் மல்க தந்தை கோரிக்கை !!!

என் மகளை கொன்றவர்களுக்கு மரண தண்டனை தான் வழங்க வேண்டும். இனிமேல் அவர் வெளியே வரக் கூடாது என கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை ஆதங்கத்துடன் தெரிவித்து உள்ளார்.

எனது மகளின் உடலை நாளை வாங்க முடிவுச் செய்து உள்ளதாக விளாத்திக்குளம் மாணவியின் தந்தை தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே மார்ச் 10- ஆம் தேதி காணாமல் போன 12-ஆம் வகுப்பு மாணவி, மறுநாள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.

எனினும், ஒன்பது நாட்களைக் கடந்த போதும் மாணவியின் கொலை வழக்கில் தொடர்புடையவர்களைக் காவல் துறையினரால் கண்டறிய முடியவில்லை. இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேரிடம் விசாரணை நடத்திய காவல் துறையினர், அவர்களது டி.என்.ஏ வை மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என ஒரு வாரத்திற்கு மேலாக மாணவியின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

அதனால், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் நியமனம் செய்யப்பட்டு, விசாரணை தீவிரம் அடைந்தது. அந்த வகையில் வேடநத்தம் கிராமம், காட்டு பகுதியில் அமைந்து உள்ள ஒரு காற்றாலையின் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில், சம்பவத்தன்று அந்த பகுதியில் ஒரு இருசக்கர வாகனம் இருப்பதை காவல் துறையினர் கண்டு அறிந்து உள்ளனர்.

அந்த இருசக்கர வாகனத்தின் நம்பரை சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் சோதனை செய்ததில், அது ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் பகுதியில் இருந்து மர்ம நபரால் திருடி கொண்டு வரப்பட்டதும், அது தொடர்பாக ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. 

அதை அடுத்து, ராமநாதபுரம் சென்ற காவல் துறையினர், பைக் திருட்டு தொடர்பாக சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், பைக் திருட்டில் ஈடுபட்டது அடையாளம் தெரியாத நபர் என்பது தெரியவந்தது. இதனால், ராமநாதபுரத்தில் பைக்கை திருடிய நபர், மாணவி கொலை செய்யப்பட்ட காட்டுப்பகுதிக்கு எதற்காக சென்றார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

இதுபோன்ற சூழலில், பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் மாவீரன் (எ) தர்ம முனீஸ்வரன் (வயது 30) என்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். 

இவர் சாயல்குடியைச் சேர்ந்தவர் என்பதும், இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை செய்தியாளர்களிடம் கூறுகையில், 

"கடந்த மார்ச் 10- ஆம் தேதி எனது மகள் காணாமல் போனார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் தவறாகப் பேசி அலைக்கழித்தனர். நாங்களே தேடிப் பார்த்து தான் உடலை எடுத்தோம். தற்போது குற்றவாளி கண்டுபிடித்து விட்டதாகக் கூறுகின்றனர். இனிமேல் இதுப்போன்ற சம்பவம் நடக்கக் கூடாது. அனைத்து காவல்துறை அதிகாரிகளும் உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே கடைசியாக இருக்கட்டும். குற்றவாளிக்கு மரண தண்டனை தான் வழங்க வேண்டும். இனிமேல் வெளியே வரக் கூடாது. நாளை எனது மகள் உடலை வாங்க நானும் எங்களது கிராமத்தினரும் முடிவு செய்து உள்ளோம்" எனத் தெரிவித்து உள்ளார்.