சனி, 4 ஏப்ரல், 2026

இவ்வளவு நாள் எங்கப்பா இருந்தா? கோவையில் அசர வைத்த சுயேட்சை !!!

SHARE

இவ்வளவு நாள் எங்கப்பா இருந்தா? கோவையில் அசர வைத்த சுயேட்சை !!!

அனைத்துக்கட்சி தலைவர்களும், தங்களது வேட்பாளர்களை வாபஸ் பெறச்செய்து, தன்னை வெற்றி பெறச்செய்ய வேண்டுமென, வேண்டுகோள் விடுத்த சுயேட்சை வேட்பாளர்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் தெற்கு தொகுதிகளில் அதிகளவிலான விஸ்வகர்மா மக்கள் வசித்து வருகின்றனர். எந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் விஸ்வகர்மா மக்களுக்கு ஒன்றும் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. தங்க நகை தயாரிப்பு தொழிலில் போதியளவு வேலைகள் இல்லாததால், , அவர்களது குடும்பங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் விஸ்வஜன முன்னேற்ற கழகத்தின் தலைவர் வேல்முருகன் தொண்டாமுத்தூர் மற்றும் கோவை தெற்கில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தஙகளது வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை , வாபஸ் பெறச்செய்து தன்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அப்போதுதான் விஸ்வகர்மா மக்களின் பிரநிதியாக இருந்து சமூக மக்களின் குறைகளை எடுத்துக்கூறவும், அவர்களுக்கு தேவையானவற்றை செய்வதற்கு, வாய்ப்பாக இருக்கும் என்றார்.

 மக்களிடம் ஓட்டு கேட்கும் வேட்பாளர்களிடையே, வேட்பாளர்களையே வாபஸ் பெற வேண்டுகோள் வைத்த சுயேட்சையால் அரசியலில் சிரிப்பலை ஏற்பட்டிருக்கிறது. இவ்வளவு நாள் எங்கப்பா நீ இருந்த என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: