போர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 ஜூலை, 2026

மாறி, மாறி தாக்குதல் நடத்தும் அமெரிக்கா - ஈரான் !!!

மாறி, மாறி தாக்குதல் நடத்தும் அமெரிக்கா - ஈரான் !!!

 மாறி, மாறி தாக்குதல் நடத்தும் அமெரிக்கா - ஈரான் !!!

போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக டிரம்ப் அறிவித்த சில மணிநேரங்களிலேயே ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்து இருக்கிறது. அதற்கு பதிலடியாக 3 வளைகுடா நாடுகளின் மீது இன்று அதிகாலை முதல் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த பிப்ரவரி 28 ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே தொடங்கிய போரானது, 110 நாட்களுக்கு பிறகு முடிவுக்கு வந்தது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தக் கூடாது என்றும், அதேபோல் ஈரான் மற்றும் லெபனான் உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மொத்தம் 14 அம்சங்கள் அடங்கிய அந்த ஒப்பந்தத்தின்படி, 60 நாட்களுக்குள் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி இறுதிகட்ட முடிவை எடுக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த போர் நிறுத்தத்திற்கு பிறகு, உலகின் முக்கிய நீர்வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை வர்த்தக கப்பல்கள் செல்வதற்கு திறப்பதாக ஈரான் அறிவித்தது. ஆனால், போருக்கு முந்தைய நிலையை போன்று இனிமேல் இருக்காது என்றும் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், ஜூலை 7 அன்று ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற மார்ஷல் தீவு, சவுதி அரேபியா மற்றும் லைபீரியா நாடுகளின் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானின் 80 முக்கிய இடங்களை குறிவைத்து அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் இரு நாடுகளிடையே மீண்டும் போர் மூண்டது.

ஈரானை அமெரிக்கா முதலில் தாக்கிய போது, அந்நாட்டின் உச்சத்தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். அவரின், இறுதிச்சங்குகள் ஜூலை 4 முதல் ஈரானில் நடைபெற்று வரும் நிலையில், இன்று வியாழக்கிழமை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நேரத்தில் இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க துருக்கி சென்று இருந்த டிரம்ப், இரு நாடுகள் இடையே ஏற்படுத்தப்பட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்தானதாக புதன்கிழமை (ஜூலை 8) அறிவித்தார். மேலும், ஈரானின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இன்று இரவே மிக கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

குறிப்பாக, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கடல் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளிட்ட முக்கிய தலங்களை தாக்க திட்டமிட்டு இருப்பதாகவும், எண்ணெய் உற்பத்தி மையமான கார்க் தீவை கைப்பற்ற உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். என்ன நடவடிக்கை மேற்கொண்டாலும் அது மிக துரிதமாக நடவடிக்கையாக இருக்கும் என்றும், தாக்குதல் மிகவும் மோசமாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்து இருந்தார்.

இதனிடையே, அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்நாட்டின் ராணுவ முகாம்கள் உள்ள பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளின் மீது ஈரான் நேற்றே தாக்குதல்களை நடத்தியது. இதில் 2 ஏவுகணைகள் மற்றும் 13 ட்ரோன்களை நடுவானில் சுட்டு வீழ்த்தியதாக குவைத் தெரிவித்து இருந்தது.

அதேபோல், டிரம்ப் ஏற்கனவே அறிவித்து இருந்தபடி, புதன்கிழமை (ஜூலை 8) இரவு ஈரான் மீது அடுத்தக்கட்ட தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்து இருக்கிறது. ஆனால், அந்த தாக்குதல் நடைபெற்ற ஒரு சில மணி நேரங்களிலேயே, அதாவது இன்று அதிகாலை குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை நடத்தியது.

இதனால், இந்த மூன்று வளைகுடா நாடுகளிலும் இன்று அதிகாலை சைரன்கள் ஒலித்தன. தங்களை நோக்கி ஏவப்படும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தீவிரமாக இடைமறித்து அழித்து வருவதாக குவைத் ராணுவம் தெரிவித்து இருக்கிறது.

செவ்வாய், 19 மே, 2026

இலங்கை இறுதிக்கட்ட போரும், தமிழ்நாடு முதல்வர்களின் தமிழீழ மக்கள் ஆதரவும் !!!

இலங்கை இறுதிக்கட்ட போரும், தமிழ்நாடு முதல்வர்களின் தமிழீழ மக்கள் ஆதரவும் !!!

 இலங்கை இறுதிக்கட்ட போரும், தமிழ்நாடு முதல்வர்களின் தமிழீழ மக்கள் ஆதரவும் !!!

கடந்த காலங்களில் தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்கள் யாராக இருந்தாலும் இலங்கை விவகாரத்தில் ஈழத் தமிழர்களை ஆதரித்தவர்களாகவே இருந்து உள்ளனர். அவர்களின் வரிசையில் தற்போது விஜய் இணைந்து உள்ளார்.

கடந்த 2009- ஆம் ஆண்டு இலங்கையில் இறுதிக்கட்ட உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்றது. இதில் இலங்கை தமிழீழ மக்களை இலங்கை ராணுவம் கொடூரமாக கொன்றது. சுமார் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இந்த இனப் படுகொலையை நினைவு கூரும் விதமாக ஆண்டுதோறும் மே 18-ஆம் தேதி முள்ளிவாய்க்கால் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனுசரித்து வருகின்றனர்.

இந்த நாளிலும் ஈழத்தில் உள்ள தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்றும், இலங்கை அரசமைப்பில் தமிழர்களுக்கு முழுமையான உரிமைகள் இல்லை எனவும், தமிழீழ ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இலங்கை போரைக் கண்டித்தும், தமிழீழ மக்களுக்கு ஆதரவாகவும் தமிழ்நாடு எப்போதும் ஒரே குரலாகவே இருந்து இருக்கிறது. கடந்த காலத்தில் தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்கள் யாராக இருந்தாலும் இலங்கை விவகாரத்தில் ஈழத் தமிழர்களை ஆதரித்தவர்களாகவே இருந்து உள்ளனர்.

கடந்த காலத்தைப் பார்க்கும் போது 2009-இல் இலங்கை போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில் போரை நிறுத்த கோரி அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவரது போராட்டம் பேசும்பொருளாக இருந்தது. அதை அடுத்து இலங்கை அரசு மத்திய அரசிடம் போரை நிறுத்துவதாக உறுதி அளித்ததை அடுத்து கருணாநிதி உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

அதேபோல் கடந்த 2015- ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, இலங்கையில் நடைபெற்ற ஈழப் போரில் இனப்படுகொலைக்கு காரணமான அனைவர் மீதும் சர்வதேச விசாரணை நடத்தும் வகையிலான தீர்மானத்தை இந்தியா ஐநா சபையில் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த 2021- ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசுகையில், 

"இலங்கை தமிழர்கள் அகதிகள், அனாதை அல்ல, நாங்கள் இருக்கிறோம். இனி இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாம் என்று கூறாமல், அவற்றை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என கூற வேண்டும்" என சட்டமன்றத்தில் அறிவித்து இருந்தார்.

இதேபோல் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

தமிழீழ இனப்படு கொலையைக் கண்டித்து 17-ஆம் ஆண்டாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று முள்ளிவாய்க்கால் தினத்தை அனுசரித்து வருகின்றனர். இந்நாளில் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முள்ளிவாய்க்கால் நினைவுத் தினம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் 'முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்!' என குறிப்பிட்டு உள்ளார்.

ஏற்கனவே 2008-ஆம் ஆண்டு விஜய், இலங்கை இனப்படுகொலைக் கண்டித்து சென்னையில் தனது ரசிகர்களுடன் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தரும் அடிப்படையில் எந்த பொறுப்பிற்கும் வராத போதே விஜய் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாட்டை ஆள்பவர்கள் யாராக இருந்தாலும், ஈழத் தமிழர்களின் ஆதரவாகவே செயல்படுவர். தமிழ்நாட்டு மக்களும், ஈழத்தமிழர்களும் தொப்புள்கொடி உறவுகள் போல் இருப்பதன் காரணமாக ஈழத்தமிழருக்கு எதிரான விவகாரம் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை மாற்றிவிடும் என்பதால் அதற்கு இடம் தராமல் தமிழ்நாட்டை ஆண்ட அனைத்து முதலமைச்சரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவே இந்நாள் வரை செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழருக்காக தமிழர் குரல் கொடுக்கவில்லை என்றால், வேறு யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள் - மே 17 திருமுருகன் காந்தி !!!

தமிழருக்காக தமிழர் குரல் கொடுக்கவில்லை என்றால், வேறு யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள் - மே 17 திருமுருகன் காந்தி !!!

 தமிழருக்காக தமிழர் குரல் கொடுக்கவில்லை என்றால், வேறு யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள் - மே 17 திருமுருகன் காந்தி !!!

தமிழருக்காக தமிழர் குரல் கொடுக்கவில்லை என்றால், வேறு யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள் என 'மே 17 இயக்கம்' ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறி உள்ளார்.

சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில், இலங்கை முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களின் நினைவாக, மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையின் நினைவாக, ஆண்டுதோறும் இந்த நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில், தமிழ் ஆர்வலர்கள் பொதுமக்கள் மற்றும் மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு தமிழீழ மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய 'மே 17 இயக்க' ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, "மே 17, 2009 இது மறக்கக் கூடாத நாள். இனப்படுகொலை தீவிரப்படுத்தப்பட்டு, மூன்று நாட்களில் மட்டும் சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட நாள். 1948 தொடங்கி இன்று வரை இனப்படுகொலை தொடர்ந்து வருகிறது.

ஈழத்தில் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. நாமும் இங்கு பல பிரச்சினைகளுடன் வாழ்கிறோம். ஆனால், நம்மை விட மோசமான சூழலில் ஈழ தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையை மாற்றவே அறவழியில் விடுதலைப் போராட்டம் நடத்தப்பட்டது.

அண்ணன் பிரபாகரன் தமிழர்களின் பல்வேறு பகுதிகளை மீட்டார். அவர் சிங்கள மக்களின் நிலங்களை கைப்பற்றவில்லை. சிங்கள மக்கள் மீது தாக்குதலும் நடத்தவில்லை. ‘எங்கள் பூர்வீக நிலத்தில், உங்கள் ஆட்சி வேண்டாம். நாங்களே எங்கள் பகுதிகளை ஆட்சி செய்து கொள்கிறோம்’ என்பதையே அவர் வலியுறுத்தினார். இதுவே விடுதலைப் புலிகள் போராட்டத்தின் அடிப்படை.

இதன் பின்னர் 2002 ஆம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. தமிழர்கள் தங்கள் பகுதிகளை தாங்களே நிர்வகிக்கலாம் என அதன் மூலம் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை முறியடிக்க சிங்கள ராணுவம் மீண்டும் போரைத் தொடங்கியது.

அந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 1 லட்சத்து 67 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்கள் நம்மை கூப்பிடும் தூரத்தில் இருந்தார்கள். ஆனால், அவர்களை நம்மால் காப்பாற்ற முடியவில்லை. இந்த இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்.

எந்தவொரு சரியான விசாரணையும் இல்லாமல் 17 ஆண்டுகள் கடந்து விட்டன. இலங்கையில் தமிழர்கள் அந்த நாட்டோடு சேர்ந்து வாழ விரும்புகிறார்களா ? அல்லது அவர்கள் வாழும் நிலத்தை அவர்களே ஆட்சி செய்ய விரும்புகிறார்களா ? என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா., கூறியுள்ளது. இதற்காக தமிழ்நாடு சட்டசபையிலும் அனைத்து கட்சிகளும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. இது நமது போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி.

இங்கு நாம் ஒன்று கூடி மெழுகுவர்த்தி ஏந்தினால், ஒன்றரை லட்சம் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றால், அதைவிட நமக்கு வேறு என்ன பெருமை வேண்டும். மக்கள் ஒன்றிணைந்தால் தான் உலகம் நம்மை திரும்பிப் பார்க்கும். தமிழருக்காக தமிழர் குரல் கொடுக்கவில்லை என்றால், வேறு யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள்" என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் ஜாதி ஒழியவில்லை. ஜாதி அடிப்படையிலான கொலைகளும் நிற்கவில்லை. தொடர்ந்து ஆணவப் படுகொலைகள் நடைபெற்று வருகின்றன" என தெரிவித்தார்.

 ஐ.நா நினைத்தால் மட்டுமே இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் தீர்வு காண முடியும் - திருமாவளவன் !!!

ஐ.நா நினைத்தால் மட்டுமே இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் தீர்வு காண முடியும் - திருமாவளவன் !!!

 ஐ.நா நினைத்தால் மட்டுமே இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் தீர்வு காண முடியும் - திருமாவளவன் !!!

இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் ஐ.நா சபை நினைத்தால் மட்டுமே தீர்வு காணவும்; குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர முடியும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மே 17 தமிழீழ இனப்படுகொலை நாள் மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வி.சி.க தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன், சட்டப்பேரவை உறுப்பினர் வன்னி அரசு, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

அப்போது மேடையில் பேசிய திருமாவளவன், "நான் பெரிதும் நேசிக்கும் தேசிய தலைவன் பிரபாகரன். அவர் உயிரோடு உள்ளார் எனும் நம்பிக்கை ஒருபுறமும், இல்லை என்ற எண்ணம் மற்றொரு புறமும் உள்ளது. அவருடன் இரண்டு முறை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்து உள்ளது. அவர் எனக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார். குறிப்பாக, திருமணம் செய்து கொள்ள சொன்னார். இதேபோல், கோழிக்கறி சாப்பிடவும் சொன்னார். ஆனால், நான் அசைவ உணவு சாப்பிட மாட்டேன் என மறுத்து விட்டேன்.

இலங்கையில் நடந்த இனப்படு கொலைக்கு காரணமான ராஜபக்சே உட்பட அவருடைய குடும்பத்தில் யாரும் தண்டிக்கப்படவில்லை. இலங்கை இனப்படு கொலைக்கு எதிராக வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்றால், அது ஐ.நா சபையால் மட்டுமே முடியும். ஐ.நா சபை நினைத்தால் மட்டுமே இதில் தீர்வு காண முடியும். தமிழீழம் என்பது எங்களுடைய கனவு. அ.தி.மு.க தமிழீழ விடுதலை இயக்கங்களை புறக்கணித்து விட்டார்கள். ஆனால், சட்டமன்றத்தில் தன்னுடைய முதல் கன்னி பேச்சிலேயே வன்னியரசு, ஈழம் குறித்து பேசி உள்ளார்" என்றார்.

இதேபோல், கூட்டத்தில் கலந்துக் கொண்ட வி.சி.க துணை பொது செயலாளர் வன்னியரசு பேசுகையில், "சட்டமன்றத்தில் ஈழம் குறித்த முழக்கம் இருக்க வேண்டும் என வி.சி.க தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தி உள்ளார். இதன்படி ஈழம் குறித்து பேசினேன். அது நானாக பேசியது கிடையாது. அனைத்து புகழும் திருமா-வையே சேரும்.

இலங்கையில் விடுதலை புலிகள் தடை செய்யப்பட்டு உள்ளது போல், இங்கேயும் தடை செய்யப்பட்டு உள்ளது. இருந்தாலும் எங்கள் தமிழ் உறவுகளுக்கு மரியாதை செலுத்துவோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து பேசினால், அவர்கள் மீது தடா சட்டம் பாயும் என கூறினார். இருப்பினும் பிரபாகரனை பற்றி பேசுவேன் என திருமா கூறினார். திருமா எதை பேசினாலும் அதை அவதூறாக சித்தரிக்கும் பல்வேறு தற்குறிகள் உள்ளனர்" என்று கூறினார்.

முன்னதாக கூட்டத்தில் கலந்துக் கொண்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனா பேசுகையில், "இங்கும் புலி வாழ்கிறது என்றால் அது திருமாவளவனால் தான். திருமா உங்களுக்கு தலைவர். ஆனால், எனக்கு அவர் தேசிய தலைவர். இலங்கையை பொருத்தவரை தடை செய்யப்பட்ட இயக்கத்தினரின் புகைப்படம் முன் நின்று பேசுவது குற்றம். எனவே, இலங்கையில் நான் நாளை கைது செய்யப்படலாம். ஆனால் நான் பூனை அல்ல புலி. புலிகள் ஒருபோதும் தடம் மாறாது" என தெரிவித்தார்.

ஞாயிறு, 17 மே, 2026

இலங்கை தமிழர் இனப்படுகொலை நினைவேந்தலை தமிழக அரசே நடத்த வேண்டும் - திருமுருகன் காந்தி !!!

இலங்கை தமிழர் இனப்படுகொலை நினைவேந்தலை தமிழக அரசே நடத்த வேண்டும் - திருமுருகன் காந்தி !!!

 இலங்கை தமிழர் இனப்படுகொலை நினைவேந்தலை தமிழக அரசே நடத்த வேண்டும் - திருமுருகன் காந்தி !!!

இலங்கைத் தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வை தமிழக அரசே நடத்த வேண்டும் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "புதிதாக பொறுப்பேற்று உள்ள தமிழக முதலமைச்சர் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றும் அமைச்சரவை உறுப்பினர்களிடம் எங்கள் முதற்கட்ட கோரிக்கைகளை முன் வைப்பதற்காக இந்த ஊடக சந்திப்பு நடத்தப்படுகிறது.

முழுமையான அமைச்சரவை அமைந்த பிறகு மக்கள் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் முன் வைக்க இருக்கிறோம். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு எங்கள் ஆதரவு தொடரும். 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழர் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தொகுத்து வெளிக்கொணருவதில் மே 17 இயக்கம் முக்கிய பங்கு வகித்தது.

கடந்த 17 ஆண்டுகளாக, ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேச அரங்குகளில் மே 17 இயக்கம் தொடர்ந்து முன் வைத்து வருகிறது. ஆனால், இதுவரை தமிழகத்தில் இருந்து இந்திய அரசுக்கோ அல்லது சர்வதேச அமைப்புகளை நோக்கியோ போதிய அரசியல் அழுத்தம் தரப்படவில்லை.

மேலும், 2009-ஆம் ஆண்டு இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சியை தமிழக அரசே அதிகாரப் பூர்வமாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். இலங்கையில் உயிரிழந்த தமிழர்களுக்காக தமிழக அரசு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறோம்.

இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட தினத்தை தமிழ்நாடு அரசு அதிகாரப் பூர்வமாக இனப்படு கொலை நாள் என அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இதுகுறித்து குரல் எழுப்பவில்லை எனில் வேறு யார் பேசுவார்கள் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வி.சி.க சட்டமன்றக் குழுத் தலைவர் வன்னி அரசு, ஈழத் தமிழர்களுக்காக இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் மற்றும் இனப்படு கொலை நாளை அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மேலும், மத்தியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆட்சியில் இருந்த போதும் தமிழர்களுக்கு ஆதரவான உறுதியான நிலைப்பாடு எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக, தேவைப்பட்டால் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்த தயாராக இருக்கிறேன்.

இலங்கை இனப்படு கொலையின் போது உயிரிழந்த ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கான 17-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நாளை (இன்று) மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது" என்று தெரிவித்தார்.

புதன், 8 ஏப்ரல், 2026

சமரசம் செய்து வைத்த பாகிஸ்தான் ; 14 நாட்கள் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய டிரம்ப் !!!

சமரசம் செய்து வைத்த பாகிஸ்தான் ; 14 நாட்கள் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய டிரம்ப் !!!

 சமரசம் செய்து வைத்த பாகிஸ்தான் ; 14 நாட்கள் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய டிரம்ப் !!!

பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான தாக்குதல் இரண்டு வாரம் நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.

இஸ்ரேல் - அமெரிக்க கூட்டுப்படைகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக, ஈரானின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்க - இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்துகின்றன. இந்த தாக்குதலில் எண்ணெய் கிணறுகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், மின் நிலையங்கள் என ஈரானின் முக்கிய பகுதிகள் குறிவைக்கப்படுகின்றன.

அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஈரான் தரப்பிலும் கடுமையான பதிலடி தாக்குதல் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்கியது. இந்த தாக்குதல் ஒரு மாதத்தை தாண்டியும் நீடித்து வருகிறது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கிய இடமாக உள்ள ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது. உலகின் 20% கச்சா எண்ணெய் போக்குவரத்து இந்த பகுதி வழியாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென ஹார்மூஸ் நீரணையை ஈரான் மூடியதால் மத்திய கிழக்கில் இருந்து தெற்காசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் முழுமையாக தடைபட்டது.

இதன் இடையே, ஹார்மூஸ் நீரிணையை 10 நாட்களுக்குள் திறக்கா விட்டால் ஈரான் மீது கடுமையான தாக்குதலை முன்னெடுப்போம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில், அந்த காலக்கெடு நேற்றுடன் நிறைவு அடைந்தது.

இந்நிலையில், காலக்கெடு நிறைவடைய சில மணி நேரங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் போர் தொடர்பாக வெளியிட்ட பதிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், "ஹார்மூஸ் நீரணையை உடனே திறக்கா விட்டால், ஈரான் முற்றிலும் அழிக்கப்படும். ஒரு நகரம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் ஈரான் துடைத்தெறியப்படும்" என தெரிவித்து இருந்தார்.

இதனால், மத்திய கிழக்கில் கடும் பதற்றம் நிலவி வந்தது. ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் போன்று கடுமையான தாக்குதலை அமெரிக்கா முன்னெடுக்குமோ ? என்ற அச்சம் உலகம் முழுவதும் நிலவியது.

இந்த சூழலில், போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபரிடம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று இரண்டு வாரத்திற்கு போர் நிறுத்தம் செய்வதாக டிரம்ப் தெரிவித்தார். இதை தனது சமூக வலைதளப்பக்கத்திலும் டிரம்ப் உறுதி செய்து உள்ளார்.

அதில், "பாகிஸ்தான் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு வார காலம் போர் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஹார்மூஸ் நீரணை முழுவதும் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டு உள்ளதால் இந்த போர் நிறுத்தம் தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது ஒரு இருதரப்பு போர் நிறுத்தமாகவே இருக்கும்" என தெரிவித்து உள்ளார்.

மேலும், போர் நிறுத்தம் தொடர்பாக ஈரானின் 10 கோரிக்கைகளை நாங்கள் பெற்று உள்ளோம். இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் போது அதுகுறித்து பேசி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், போர் நிறுத்தத்திற்கு உதவியதற்காக பாகிஸ்தானுக்கு ஈரான் நன்றி தெரிவித்து உள்ளது. இதன் இடையே, ஈரான்-அமெரிக்கா இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் ஏற்பாடு செய்து உள்ளது. நாளை மறுநாள் (ஏப்ரல் 10) இஸ்லாமாபாத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய கிழக்கில் கடந்த 24 மணிநேரமாக நிலவி வந்த பதற்றம் தற்போது தணிந்து உள்ளது. இதன் இடையே, போர் நிறுத்தம் காரணமாக கச்சா எண்ணெய் விலை கணிசமான குறைந்து உள்ளது.

சனி, 28 மார்ச், 2026

ஈரானை தாக்க மாட்டோம் : போர் நிறுத்தத்தை மேலும் 10 நாட்கள் நீட்டித்த டிரம்ப் !!!

ஈரானை தாக்க மாட்டோம் : போர் நிறுத்தத்தை மேலும் 10 நாட்கள் நீட்டித்த டிரம்ப் !!!

 ஈரானை தாக்க மாட்டோம் : போர் நிறுத்தத்தை மேலும் 10 நாட்கள் நீட்டித்த டிரம்ப் !!!

ஈரான் மீதான தாக்குதலை மேலும் 10 நாள்கள் நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கி, சர்வதேச பொருளாதாரத்தில் மிகப்பெரிய மந்த நிலையை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, ஈரான் மீது 5 நாள்கள் தாக்குதல் நடத்தப்போவதில்லை என டிரம்ப் முன்பு அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், அதை மேலும் 10 நாள்கள் நீட்டித்து, ஈரான் மீது எந்தவொரு தாக்குதல் நடவடிக்கையையும் அமெரிக்கா மேற்கொள்ளாது என உறுதி அளித்து உள்ளார். போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருப்பதால், ஏப்ரல் 6 ஆம் தேதி வரை தாக்குதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.

ஹார்முஸ் நீரிணையை அனைத்து நாடுகளும் அணுக ஈரான் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அதற்கு 2 நாள்கள் மட்டுமே அவர்களுக்கு அவகாசம் உள்ளது எனவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த சூழலில், போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடந்து வருவதால், ஈரான் மீது சில தினங்களுக்கு தாக்குதல் நடத்தபோவதில்லை என டிரம்ப்பின் திடீர் பின்வாங்கல் நடவடிக்கை உலக நாடுகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஈரான் தங்களிடம் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு கெஞ்சி வருவதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து உள்ளார்.

ஆனால், இவை அனைத்தையும் முற்றிலுமாக மறுத்து இருக்கும் ஈரான், தாங்கள் அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தைக்கும் தயாராக இல்லை என கறாராக மறுத்து வருகிறது. மேலும், இந்தியா, சீனா போன்ற தங்களின் நட்பு நாடு கப்பல்களுக்கு மட்டுமே ‘ஹார்முஸ் நீரிணை’ திறந்து இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

இதற்கு இடையில், ஈரானின் உச்சத் தலைவராக தான் வர வேண்டும் என அந்நாட்டு மக்கள் விரும்பியதாகவும், அதனை ஏற்க தனக்கு மனமில்லை என்றும் நேற்றைய தினத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் பகிரங்கமாக பேசினார். இதற்கு ஈரானிய தலைவர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

சுமார் 28 நாள்களாக நடந்து வரும் ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் படைகளின் தாக்குதலில், குறைந்தது 1,900 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக ஈரானின் துணை சுகாதார அமைச்சர் அலி ஜஃபாரியன் அல் ஜசீரா ஊடகத்திடம் தெரிவித்து உள்ளார்.

மேலும், ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹெஸ்புல்லா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 1,100 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். சர்வதேச அளவில் பரபரப்பான காணப்படும் இந்த சூழலை சமாளிக்க ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 26 மார்ச், 2026

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை !!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை !!!

 டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை !!!

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும், ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாக கூறி வருகிறார். இன்று கூட அமெரிக்கா ஈரானின் நம்பகத்தன்மை வாய்ந்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என அறிவித்தார்.

டிரம்பின் இந்த அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை சரிந்து பங்குச் சந்தை உயர தொடங்கி விட்டன, தங்கம் , வெள்ளி விலைகளும் உயர்ந்தன. ஒருவழியாக ஈரான் போர் முடிவை நோக்கி செல்கிறது என பல்வேறு நாடுகளின் மக்களும் சற்றே நிம்மதி அடைந்தனர். ஆனால் ஈரான் நாட்டு ராணுவம் இதில் குண்டை தூக்கி போட்டு உள்ளது.

டிரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறும் நிலையில் அப்படி எதுவும் நடக்கவே இல்லை என ஈரான் ராணுவம் திட்ட வட்டமாக மறுத்து உள்ளது. இது உலக அளவில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டிரம்ப் கூறுவது உண்மையா அல்லது ஈரான் சொல்வது உண்மையா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்து இருக்கிறது.

திங்கட்கிழமை அன்று ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் பேச்சுவார்த்தை நடந்தது, இதன்படி ஈரான் மீது ஐந்து நாட்கள் தாக்குதலை நிறுத்தப் போகிறோம் என டிரம்ப் கூறியிருந்தார் உடனடியாக ஈரான் அப்படி எந்த ஒரு பேச்சுவார்த்தையையும் நடக்கவில்லை என அறிவிப்பு வெளியிட்டது. இத்தகைய சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது ஈரானும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன, ஈரான் மேற்கொண்ட அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய மாட்டோம் என வாக்குறுதி தந்திருக்கிறது என கூறினார்.

எல்.பி.ஜி வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை - கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிப்பு !!!

எல்.பி.ஜி வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை - கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிப்பு !!!

 எல்.பி.ஜி வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை - கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிப்பு !!!

ஈரான் போர் காரணமாக இந்தியாவில் கடுமையான எல்.பி.ஜி தட்டுப்பாடு நிலவுகிறது. முதலில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்திய அரசு தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான ஒரு எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

ஈரானில் கிட்டதட்ட ஒரு மாத காலமாக போர் நீடிப்பதால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு எல்.பி.ஜி மற்றும் கச்சா எண்ணெய் கொண்டு வரப்படவில்லை. இது இந்தியாவில் கடுமையான எல்.பி.ஜி தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது. ஆங்காங்கே எல்.பி.ஜி கிடைக்காமல் உணவகங்கள் மூடப்பட்டு விட்டன. பல்வேறு உணவு வகைகள் மற்றும் டீ , காபி உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்து இருக்கிறது.

ஆட்டோக்கள், உற்பத்தி நிறுவனங்கள் என பல்வேறு இடங்களிலும் எல்.பி.ஜி கிடைக்காமல் ஏராளமானவர்கள் திண்டாடுகிறார்கள். இதற்கு இடையே மத்திய அரசு வீட்டு உபயோக பயன்பாட்டு சிலிண்டர் டெலிவரிக்கு தான் முன்னுரிமை கொடுத்து வருவதாக தெரிவித்து வருகிறது. பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் நம் நாட்டில் போதுமான அளவு சிலிண்டர் இருப்பு இருக்கிறது என தெரிவித்து வருகிறது.

இந்த சூழலில் மிக முக்கியமான ஒரு அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. அதாவது இந்தியாவில் குழாய் வழி இயற்கை எரிவாயு எனப்படும் பி.என்.ஜி (piped natural gas - PNG) இணைப்புக்கு மாறுவதற்கான வசதி உள்ள இடங்களில் இருக்கக் கூடிய குடும்பங்கள் தங்களுடைய எல்.பி.ஜி இணைப்பை பி.என்.ஜி இணைப்புக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில் எங்கெல்லாம் பி.என்.ஜி இணைப்புக்கு மாறுவதற்கான வசதி இருக்கிறதோ அவர்கள் எல்லாம் அதற்கு கட்டாயம் மாற வேண்டும். அவ்வாறு மாறாமல் மறுக்கும் குடும்பங்களின் எல்.பி.ஜி இணைப்பை துண்டித்து விடுவோம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஒரே விதமான எரிபொருளை சார்ந்து இருப்பதை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

இதன்படி குழாய் வழி இயற்கை எரிவாயு அதாவது பி.என்.ஜி இணைப்புக்கு மாறுவதற்கான சாத்தியமும் வசதியும் உங்களுடைய வீட்டில் இருக்கிறது எனும் போது நீங்கள் அதற்கு கட்டாயம் மாற வேண்டும் . இல்லை எனக்கு எல்.பி.ஜி தான் வேண்டும் எனக் கூறினால் உங்களுடைய எல்பிஜி இணைப்பை நிறுத்தி விடுவார்கள். எல்.பி.ஜி தட்டுப்பாடு நீடிப்பதால் மத்திய அரசு இயன்ற அளவு வீட்டு பயன்பாட்டிற்கும் குழாய் வழி இயற்கை எரிவாயு விநியோகத்தை வழங்குவதற்கு முடிவு செய்து இருக்கிறது.

செவ்வாய், 24 மார்ச், 2026

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு : கோவை அருகே தவித்த பொதுமக்கள் -எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த லாரியைச் சிறைபிடித்ததால் பரபரப்பு !!!

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு : கோவை அருகே தவித்த பொதுமக்கள் -எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த லாரியைச் சிறைபிடித்ததால் பரபரப்பு !!!

 கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு : கோவை அருகே தவித்த பொதுமக்கள் -எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த லாரியைச் சிறைபிடித்ததால் பரபரப்பு !!!

ஒரு மாதமாக விநியோகம் செய்யப்படாததால் ஆவேசம் ; காவல் துறையின் தலையீட்டால் சுமூகத் தீர்வு !!!

​ கோவை மாவட்டம், ஆலாந்துறை பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகச் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரியைச் சிறை பிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், ஆலாந்துறை பகுதியில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் பொதுமக்கள் கேஸ் சிலிண்டருக்காக முன்பதிவு (Booking) செய்து இருந்தும், விநியோகம் செய்யப்படாமல் இருந்து உள்ளது. இதனால் குடும்பத் தலைவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

​இன்று அப்பகுதி வழியாகச் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்து உள்ளது. 

இதைக் கண்ட அப்பகுதி மக்கள், லாரியை வழிமறித்துச் சிறைபிடித்தனர். "ஒரு மாதமாகச் சிலிண்டர் தராமல் ஏமாற்றி வருகிறீர்கள், தற்போது லாரி வந்தும் எங்களுக்கு ஏன் தர மறுக்கிறீர்கள் ?" என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலாந்துறை போலீசார், லாரியைச் சிறைபிடித்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனத்திடம் பேசி பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிலிண்டர்களை மாற்றி கொடுத்து விநியோகிக்க செய்தனர்.

​இது போன்ற தட்டுப்பாடுகள் ஏற்படாமல் தடுக்கவும், முன்பதிவு செய்த சிலிண்டரைச் சரியான நேரத்தில் பெறவும் பொதுமக்கள் சமையல் எரிவாயு நிறுவனங்களின் அதிகாரப் பூர்வ மொபைல் செயலிகள் (Apps) அல்லது இணையதளம் மூலம் உங்கள் சிலிண்டர் விநியோக நிலையை (Delivery Status) உடனுக்குடன் கண்காணிக்கலாம். நீண்ட நாட்களாக சிலிண்டர் கிடைக்கவில்லை என்றால், உங்கள் கேஸ் ஏஜென்சியின் மேலாளரிடம் எழுத்துப் பூர்வமான புகார் அளிக்கலாம்.

 தீர்வு கிடைக்காத பட்சத்தில், எண்ணெய் நிறுவனங்களின் கட்டணமில்லா உதவி எண்களை (Toll-free Numbers) அணுகிப் புகார் தெரிவிக்கலாம்.


​இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, இருப்பினும் போலீசாரின் நடவடிக்கையால் நிலைமை சீரடைந்தது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 23 மார்ச், 2026

மேற்காசிய போர் நிலைமை கவலை அளிக்கிறது - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை !!!

மேற்காசிய போர் நிலைமை கவலை அளிக்கிறது - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை !!!

 மேற்காசிய போர் நிலைமை கவலை அளிக்கிறது - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை !!!

மேற்காசிய போர் நிலவரம் கவலை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற மக்களவையில் தெரிவித்தார்.

இஸ்ரேல், அமெரிக்கா- ஈரான் இடையே 3 வாரங்களுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இதனால் இந்தியாவில் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு, மத்திய அரசின் துரித நடவடிக்கையால் சரி செய்யப்பட்டது.

இந்நிலையில், மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று (மார்ச் 22) ஆலோசனை நடத்தினார். அப்போது, பெட்ரோலியம், எரிவாயு, கச்சா எண்ணெய், உரங்கள் ஆகியவற்றின் கையிருப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, இன்று நாடாளுமன்ற மக்களவையில், மேற்காசிய போர் நிலவரம் குறித்து உரையாற்றினார்.

அப்போது, "மேற்காசிய போர் நிலவரம் கவலை அளிக்கிறது. போர் நடைபெறும் பகுதி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. அந்த பகுதியில், 1 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கிறார்கள். எனவே, இந்த விவகாரத்தில் இந்திய நாடாளுமன்றம் ஒற்றுமையுடன் குரல் கொடுத்தாக வேண்டும்.

மேற்காசிய போர், இதுவரை இல்லாத அளவில் இந்தியாவுக்கு சவாலாக உருவெடுத்து உள்ளது. இந்தப் போரில் இந்தியர்கள் சிலர் உயிரிழந்து உள்ளனர். சிலர் காயம் அடைந்து உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறோம். போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதே நம் நோக்கம். அவர்களைத் தொடர்பு கொள்வதற்காக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து, வளைகுடா நாடுகளில் இருந்து 3.75 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பி உள்ளனர். போர் நடக்கும் ஈரானில் இருந்து 1,000 பேர் இந்தியா திரும்பினர். அவர்களில் 700 பேர் மருத்துவ மாணவர்கள்.

இந்தியா 60 சதவீத எல்ஜிபி எரிவாயுவை இறக்குமதி செய்கிறது. போர்ச்சூழலுக்கு இடையேயும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்து உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் முன்னுரிமை அளித்து சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது.

விவசாயிகளுக்கு உதவுவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 6 உரத் தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. அதேசமயம், இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளையும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. விவசாயிகளின் நலனை காப்பதில் மத்திய பா.ஜ.க அரசு உறுதியாக உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மரபுசாரா எரிசக்தி துறையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் சூரிய மின்உற்பத்தி 3 ஜிகாவாட் அதிகரித்து உள்ளது. பிரதமரின் சூரியமின் சக்தி திட்டத்தின் கீழ் ஏராளமானோர் பயன்பெற்று உள்ளனர்.

மேற்காசிய போர் விவகாரத்தில் இந்தியா ஒற்றுமையுடன் எதிர்வினையாற்ற வேண்டும். நாம் மிகவும் எச்சரிக்கையாவும் கவனமாகவும் இருக்க வேண்டும்.

மேலும், அத்தியாவசிய பொருட்களை கள்ளச் சந்தையில் பதுக்கி வைப்பதாக புகார்கள் வந்தால், மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி பேசினார்.

கேஸ் தட்டுப்பாட்டால் கோவையில் கல்லூரி விடுமுறை !!!

கேஸ் தட்டுப்பாட்டால் கோவையில் கல்லூரி விடுமுறை !!!

 கேஸ் தட்டுப்பாட்டால் கோவையில் கல்லூரி விடுமுறை !!!

கேஸ் தட்டுப்பாடு காரணமாக கோவையில் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில உணவகங்கள் மூடப்பட்ட நிலையில், பல்வேறு உணவகங்களில் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

இதன் இடையே கோவையில் குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கல்லூரி தரப்பில் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

எல்.பி.ஜி (LPG) தட்டுப்பாடு காரணமாக விடுதி வசதி தற்காலிகமாக செயல்படாது. இதனால், விடுதியில் தங்கும் மாணவர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஹாஸ்டலுக்கு வர தேவையில்லை.

மேலும், மார்ச் 23 ம் தேதி முதல் 27 ம் தேதி வரை நடைபெற உள்ள CIA-II தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், இணையவழியில் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. விடுதி மாணவர்கள் மற்றும் டே ஸ்காலர் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே விதிமுறைகள் பின்பற்றப்படும் என கூறப்பட்டு உள்ளது.

எல்.பி.ஜி தட்டுப்பாடு காரணமாக உணவுத்துறை பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது கல்வித் துறையிலும் பாதிப்பு ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சனி, 21 மார்ச், 2026

ஈரான் போர் எதிரொலி : 9 நாடுகளின் வான்வழியை தவிர்க்க இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் !!!

ஈரான் போர் எதிரொலி : 9 நாடுகளின் வான்வழியை தவிர்க்க இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் !!!

 ஈரான் போர் எதிரொலி : 9 நாடுகளின் வான்வழியை தவிர்க்க இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் !!!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட 9 நாடுகளின் வான்வெளியில் செல்வதை தவிர்க்குமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில், மத்திய கிழக்கு மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது. இதன் காரணமாகவே ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், குவைத், லெபனான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பெஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளின் வான்வெளியில் பறப்பதை இந்திய விமான நிறுவனங்கள் தவிர்க்குமாறு இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

டி.ஜி.சி.ஏ-வின் அறிவிப்பில், ஓமன் மற்றும் சவுதி அரேபியா வான்வெளிகளில் விமானங்கள் பறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனினும், குறிப்பிட்ட வான்வெளிகளில் விமானங்கள் செல்லும் போது, அவை 32,000 அடிக்கு கீழே பறக்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவுறுத்தல் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் டி.ஜி.சி.ஏ தெரிவித்து உள்ளது. மார்ச் 28-ஆம் தேதி வரை அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை இது நடைமுறையில் இருக்கும் எனவும் காலக்கெடு வழங்கப்பட்டு உள்ளது.

ஒருவேளை பிரச்சினைக்குரிய விமான நிலையங்களுக்குச் செல்ல வேண்டி இருந்தால், முறையான பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் அவசர காலத் திட்டங்களை விமான நிறுவனங்கள் வைத்து இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. விமானிகள் மற்றும் ஊழியர்களுக்கு அவ்வப் போது வழங்கப்படும் நோட்டீஸ் டூ ஏர்மென் தகவல்களையும் தொடர்ந்து கண்காணிக்குமாறு விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேற்கூறிய 9 நாடுகளின் வான்பரப்பைத் தவிர்த்து விட்டு, மாற்றுப் பாதையில் செல்ல வேண்டி இருப்பதால், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா செல்லும் விமானங்களின் பயண நேரம் 1 முதல் 2 மணி நேரம் வரை அதிகரிக்கக் கூடும். இதனால் எரிபொருள் செலவு கூடி, விமானக் கட்டணங்கள் உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ஏர் இந்தியா போன்ற நிறுவனங்கள் அதிகளவில் இந்த வான்பரப்பைப் பயன்படுத்துகின்றன. குறிப்பாக டெல் அவிவ் போன்ற நகரங்களுக்கான விமானச் சேவைகள் ஏற்கனவே தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன. தற்போது இந்திய விமானங்கள் பெரும்பாலும் சவுதி அரேபியா மற்றும் ஓமன் வான்பரப்பைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

ஆனால், அங்கேயும் 32,000 அடிக்குக் கீழே பறக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளதால், பாதுகாப்பு கருதி மிக உயரமான பாதைகளையே விமானங்கள் தேர்ந்தெடுக்கும் நிலை உள்ளது. பயணிகள் விமானங்கள் மட்டுமல்லாது, இந்த வழியாகச் செல்லும் சரக்கு விமானங்களும் ஈரான் போரால் பாதிக்கப்பட்டு உள்ளது.

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு : அண்ணாமலையார் கோவிலில் இலவச லட்டு பிரசாதம் முற்றிலும் விநியோகம் நிறுத்தம்...

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு : அண்ணாமலையார் கோவிலில் இலவச லட்டு பிரசாதம் முற்றிலும் விநியோகம் நிறுத்தம்...

 வணிக சிலிண்டர் தட்டுப்பாடு : அண்ணாமலையார் கோவிலில் இலவச லட்டு பிரசாதம் முற்றிலும் விநியோகம் நிறுத்தம்...

விற்பனைக்காக தயார் செய்யப்படக் கூடிய லட்டு, முறுக்கு, அதிரசம், எள்ளு வடை ஏற்கனவே விற்பனை நிறுத்தப்பட்டு உள்ள நிலையில் இன்று மாலையுடன் புளியோதரை, சக்கரை பொங்கல் ஆகிய அனைத்து பிரசாதம் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படும்....

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினம்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்களும், பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக் கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபாடு செய்கின்றனர். 

இந்நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் போர் காரணமாக நாடு முழுவதும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை மிகவும் குறைக்கப்பட்டு மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசியங்களுக்கு மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

வீட்டு உபயோக சிலிண்டர் மட்டும் ஒரு குடும்பத்திற்கு 21 நாட்களுக்கு ஒரு முறை ஒரு சிலிண்டர் என விநியோகம் செய்யப்படும் என நிர்வாகம் அறிவிக்கப்பட்டு உள்ளது,

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருவண்ணாமலை நகரில் ஏற்கனவே சிறு குறு உணவகங்கள் மற்றும் மெஸ் போன்ற உணவகங்கள் மூடப்பட்டு உள்ளது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பொருத்தவரை பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக லட்டு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. 

அதுமட்டும் இன்றி வருகின்ற பக்தர்களுக்கு முறுக்கு, எள்ளு வடை, அதிரசம், லட்டு உள்ளிட்டவைகள் 50 ரூபாய்க்கு பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் புளிசாதம் மற்றும் சக்கரை பொங்கல் போன்றவை 10 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் கிடைக்காததால் கடந்த சில நாட்களாகவே எண்ணெயில் தயார் செய்யக் கூடிய விற்பனை பிரசாதங்களான முறுக்கு, எள்ளு வடை, லட்டு, அதிரசம் போன்றவை முற்றிலும் விற்பனை நிறுத்தப்பட்டது. 

புளி சாதம் மற்றும் சக்கரை பொங்கல் உள்ளிட்டவை மட்டும் விற்பனைக்காக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

பக்தர்களுக்கு இலவசமாக வழங்கக்கூடிய லட்டு பிரசாதம் கடந்த இரு தினங்களாகவே நிறுத்தப்பட்டு உள்ளது. 

அண்ணாமலையார் கோவிலில் கடந்த மூன்று ஆண்டு காலமாக சாமி தரிசனம் முடித்து திருமஞ்சனம் கோபுர வீதி வழியாக வெளியே வரக்கூடிய பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. 

வணிகப் பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக முற்றிலும் சிலிண்டர்கள் ஏதும் கோவில் நிர்வாகத்திற்கு கேஸ் ஏஜென்சிகள் வழங்கப்படாததால் முன்பதிவு செய்யப்பட முடியாததால் இரண்டு நாட்களாகவே இலவச லட்டு பிரசாதம் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. 

கோவிலுக்கு தரிசனம் பக்தர்கள் இலவச லட்டு பிரசாதம் நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்து உள்ளனர். 

ஆகவே வருகின்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக விநாயகம் செய்யக்கூடிய லட்டு பிரசாதத்தை எந்த விதமான தடையும் இன்றி வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் விசாரித்த போது...,

வணிகப் பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக இரு தினங்களுக்கு முன்பே இலவச லட்டு பிரசாதம் விநியோகம் நிறுத்தப்பட்டதாகவும், அதுமட்டுமின்றி எண்ணெயில் தயார் செய்யக் கூடிய முறுக்கு, அதிரசம், லட்டு, எள்ளுவடை என விற்பனை செய்யக் கூடிய பிரசாதங்களும் ஏற்கனவே விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாகவும், இன்று பிற்பகல் வரை மட்டுமே புளியோதரை மற்றும் சக்கரை பொங்கல் விநியோகம் செய்ய முடியும் எனவும், சிலிண்டர் இல்லாததால் முற்றிலுமாக அண்ணாமலையார் கோவிலில் இன்று மாலைக்குள் அனைத்து விதமான விற்பனை மற்றும் இலவச பிரசாதங்கள் எதுவுமே விற்பனை செய்ய முடியாது என தெரிவித்தனர். 

மேலும் விறகு அடுப்புகளை பயன்படுத்தி சமைப்பதற்கு இந்து சமய அறநிலைத் துறை நிர்வாகத்திடம் கோவில் ஊழியர்கள் ஒப்புதல் கேட்டு உள்ளதாகவும், உயர் அதிகாரிகளிடமிருந்து ன உத்தரவு வந்தால் விறகு அடுப்புகளை பயன்படுத்தி சமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

டிரம்ப் சொல்லி விட்டார் ; இனி ஈரான் எரிசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் - இஸ்ரேல் உறுதி !!!

டிரம்ப் சொல்லி விட்டார் ; இனி ஈரான் எரிசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் - இஸ்ரேல் உறுதி !!!

 டிரம்ப் சொல்லி விட்டார் ; இனி ஈரான் எரிசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் - இஸ்ரேல் உறுதி !!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கோரிக்கைக்கு இணங்க ‘இனி ஈரானின் எரிசக்தித் தளங்கள் மீது தாக்குதல் நடத்தபோவதில்லை’ என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.

மேற்காசியாவில் நிலவும் போரால், கத்தார், குவைத், பெஹ்ரைன் போன்ற மத்திய கிழக்கு நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. உலகின் முக்கிய எரிசக்தி விநியோகஸ்தர்களாக இருக்கும் இந்நாடுகளின் எண்ணெய் வயல்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள் முடக்கப்பட்டு உள்ளன.

இதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து, உலக பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இதன் இடையே, கடந்த மார்ச் 18 அன்று, ஈரானின் எரிசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது. இதற்கு நாங்கள் பொறுப்பில்லை என்று அமெரிக்கா பின்வாங்கிய நிலையில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்டது.

இதற்கு பதில் அடியாக உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) நிலையங்களில் ஒன்றான கத்தாரின் ராஸ் லஃபானை ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கியது. பெரும் சேதத்தை ஏற்படுத்திய இந்த தாக்குதலால், உலகளவில் பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை சுமார் 120 டாலர்களை தொட்டு வர்த்தகமானது.

மேலும், இந்த தாக்குதலால், சுமார் 17 விழுக்காடு எரிவாயு உற்பத்தி தடைபட்டு உள்ளதாக கத்தார் தெரிவித்து உள்ளது. சுமார் 90 விழுக்காடு இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அந்த வகையில், உலக நாடுகளின் பொருளாதாரத்தை அச்சுறுத்திய இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஈரானின் எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று பெஞ்சமின் நெதன்யாகுவிடம், டிரம்ப் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பெஞ்சமின் நெதன்யாகு, 

“அதிபர் டொனால்டு டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க, கடலோரத்தில் இருக்கும் ஈரானிய எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தி வைக்கிறது” என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், யுரேனியத்தை செறிவூட்டும் அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரிக்கும் திறன் ஈரானிடம் இனி இல்லை என்றும் நெதன்யாகு தொலைக்காட்சி உரையில் குறிப்பிட்டு உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சற்று குறைந்து 102.35 டாலராக வர்த்தகமாகிறது. இந்திய கமாடிட்டி சந்தையிலும், கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு ரூ.8,792 ஆக சுமார் 200 ரூபாய் சரிந்து வர்த்தகமாகிறது.

எனினும், ஈரான் மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலுக்கும், மத்திய கிழக்கு நாடுகள் கடுமையான சேதத்தை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் ராணுவ தளங்கள் இங்கு இருந்து செயல்படுவது தான், ஈரானின் இந்த தாக்குதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்து உள்ளது.

எனவே, கச்சா எண்ணெய் விலை சீராக ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் எளிதாக கடக்க வேண்டும். அது, போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தால் மட்டுமே சாத்தியம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வியாழன், 19 மார்ச், 2026

மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி !!!

மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி !!!

 மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி !!!

குவைத் இளவரசர் ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமத் அல்-முபாரக் அல் சபா உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்.

புனித ரமலான் பண்டிகையையொட்டி வாழ்த்து தெரிவித்த மோடி, மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல் குறித்தும் கேட்டு அறிந்தார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவில்  கூறும்போது:

''மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழல் குறித்து நாங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். மேலும், சமீபத்திய நிகழ்வுகள் குறித்த கவலைகளையும் பகிர்ந்து கொண்டோம்.

குவைத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனத்தைப் பதிவு செய்து உள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வது எங்களின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது.

பிராந்திய அமைதி மற்றும் நிலைத் தன்மைக்கு, நீடித்த ராஜதந்திர ஈடுபாடு இன்றியமையாதது என்பதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் அவரின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நான் நன்றி தெரிவித்தேன்'' என பிரதமர் பதிவிட்டு உள்ளார்.

உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் ; கத்தார் கண்டனம் !!!

உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் ; கத்தார் கண்டனம் !!!

 உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் ; கத்தார் கண்டனம் !!!

ஈரானின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தெற்கு ஈரானின் புஷேர் மாகாணத்தில் உள்ள அசலூர் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயலாகக் கருதப்படும் சௌத் பார்ஸ் எரிவாயு வயலின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இஸ்ரேலிய போர் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், சௌத் பார்ஸ் எரிவாயு வயலில் அமைந்து இருந்த ஒரு எரிவாயு கிடங்கு மற்றும் சுத்தகரிப்பு நிலையம் ஆகியவைச் சேதம் அடைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரானின் எரிவாயு வயலின் மீதான இந்தத் தாக்குதல், மிகவும் ஆபத்தானது எனவும், உலகின் எரிசக்தி பாதுகாப்பிற்குக் கடும் அச்சுறுத்தல் எனவும் குறிப்பிட்டு கத்தார் அரசு கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலின் தாக்குதலில் அங்கு பரவிய தீயை ஈரானின் தீயணைப்புப் படையினர் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து உள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலில் நல்வாய்ப்பாக இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டு உள்ளது.

முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் அந்நாட்டின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

லெபனானின் குடியிருப்புப் பகுதியில் இஸ்ரேல் திடீர் தாக்குதல் : 12 பேர் பலி - 41 பேர் படுகாயம் !!!

லெபனானின் குடியிருப்புப் பகுதியில் இஸ்ரேல் திடீர் தாக்குதல் : 12 பேர் பலி - 41 பேர் படுகாயம் !!!

 லெபனானின் குடியிருப்புப் பகுதியில் இஸ்ரேல் திடீர் தாக்குதல் : 12 பேர் பலி - 41 பேர் படுகாயம் !!!

லெபனானின் குடியிருப்புப் பகுதியின் மீது இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள குடியிருப்புப் பகுதியின் மீது இஸ்ரேல் ராணுவம் அதிகாலை வான்வழித் தாக்குதல்களை நடத்தி உள்ளது.

மக்கள் குடியிருப்புகள் நிரம்பிய சுகாக் அல்-பலாட் பகுதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 41 பேர் படுகாயம் அடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், அங்கு கைப்பற்றப்பட்ட உடல் பாகங்களின் மூலம் டிஎன்ஏ பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகே கொல்லப்பட்டவர்களின் அடையாளங்கள் கண்டறியப்படும் என லெபனானின் சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது.

ஏற்கெனவே, தெற்கு லெபனானில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் அறிவித்து இருந்தது. ஆனால், பெய்ரூட்டின் மத்திய பகுதியில் இன்று நடைபெற்ற தாக்குதல் முன் அறிவிப்பின்றி நடத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார். இதை அடுத்து, ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

புதன், 18 மார்ச், 2026

2,200 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள்... ஹோர்முஸ் நீரிணை அருகே வீசி ஈரானை மிரட்டிய அமெரிக்கா !!!

2,200 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள்... ஹோர்முஸ் நீரிணை அருகே வீசி ஈரானை மிரட்டிய அமெரிக்கா !!!

 2,200 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள்... ஹோர்முஸ் நீரிணை அருகே வீசி ஈரானை மிரட்டிய அமெரிக்கா !!!

ஈரானின் ராணுவத்தை அச்சுறுத்தும் விதமாக ஹோர்முஸ் நீரிணை அருகே சுமார் 2,200 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகளைப் போட்டு அமெரிக்கா புதன்கிழமை தாக்குதல் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அணுஆயுதக் கொள்கையைக் கைவிடக் கோரி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு ராணுவங்களும் சேர்ந்து கடந்த பிப். 28 ஆம் தேதி நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் மதகுரு உச்சத் தலைவர் அலி அயத்துல்லா கமேனி கொல்லப்பட்ட பின்னர், அமெரிக்கா - ஈரான் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தப் போர் இரண்டு வாரங்களைக் கடந்த நிலையிலும், அமெரிக்கா ராணுவத்தினர் ஈரானின் கட்டமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், உலக அளவிலான வர்த்தகத்தை இணைக்கும் கடல்வழிப் பாதையான ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதியில் ஹோர்முஸ் நீரிணை அருகே சுமார் 5,000 பவுண்ட் (2,200 கிலோ) பங்கர் பஸ்டர் குண்டுகள் போடப்பட்டதாகவும், இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும் அமெரிக்க ராணுவத் தலைமையகம் தெரிவித்து உள்ளது.

இந்தத் தாக்குதல்கள், ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த ஈரானின் கப்பல் எதிர்ப்பு க்ரூஸ் கப்பல் மீது ஏவுகணைகளைக் குறிவைத்ததாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்து உள்ளது.

ஈரானில் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகளில் எங்களுக்கு விருப்பமில்லை என பெரும்பாலான நேட்டோ நட்பு நாடுகள் தெரிவித்து இருந்த நிலையில், சில மணி நேரங்களிலேயே இந்தத் தாக்குதல்கள் நடைபெற்று உள்ளது உலக அளவில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

சனி, 14 மார்ச், 2026

கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு !!!

கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு !!!

 கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு !!!

கச்சா எண்ணெய் விலை கடந்த 15 நாள்களில் 40 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்து உள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப். 28 வான்வழித் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து, உலகின் மிக முக்கியக் கடல்வழிப் பாதையான ஹோா்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது. மாற்றுப் பாதைகள் இல்லாத சூழலில், இராக், கத்தாா், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா போன்ற நாடுகள் தங்களின் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கவோ அல்லது முழுமையாக நிறுத்தவோ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு உள்ளன.

இதன் தாக்கம் எதிரொலியாக, சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 120 டாலா் வரை உயா்ந்த நிலையில், இன்று சுமாா் 103 டாலருக்கு வா்த்தகமாகி வருகிறது.

கச்சா எண்ணெய் விலை கடந்த 15 நாள்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்து உள்ளது. கச்சா எண்ணெய் விலை கடந்த பிப். 27-இல், ஒரு பேரல் 73 டாலர் ஆக இருந்தது. இந்நிலையில் (மார்ச் 14) ஒரு பேரல் சுமாா் 103 டாலருக்கு வா்த்தகமாகி வருகிறது.

கடந்த இரு வாரத்தில் கச்சா எண்ணெய் விலையேற்றம் 30 டாலர் அதிகரித்து உள்ளதையும், மிகக் குறைந்த காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை 41.1 சதவீதம் உயர்ந்து இருப்பதைக் காட்டுகிறது.

ஹோா்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்து முடக்கம் நீடித்தால், இனி வரும் நாள்களில் அதிலும் குறிப்பாக வரும் வாரத்தில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர். ஆசியா எங்கிலும் எண்ணெய் விநியோகம் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளதால் விலையேற்றத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.