உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 செப்டம்பர், 2026

லண்டனில் அஜித் குமாரின் கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய் !

லண்டனில் அஜித் குமாரின் கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய் !

 போட்டி நடக்கும் இடத்திற்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய் அங்கு பந்தயத்திற்கு தயாராக இருந்த அஜித் குமாரை நோக்கி ஓடிச் சென்று கட்டித் தழுவினார். இருவரும் பரஸ்பரம் முத்தமிட்டு தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

இங்கிலாந்தில் நடைபெறும் லீ மான்ஸ் கோப்பை தொடரில், நடிகரும் ரேசருமான அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கொடி அசைத்து இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலகளாவிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், செப்டம்பர் 10-ஆம் தேதி, இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தின் நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள உலகப் புகழ் பெற்ற சில்வர்ஸ்டோன் ஓடுதளத்திற்கு (Silverstone Circuit) சென்ற முதலமைச்சர் விஜய், உலகப்புகழ் பெற்ற லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார். லீ மான்ஸ் கோப்பை நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று இந்த சர்வதேச நிகழ்வில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

போட்டி நடக்கும் இடத்திற்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய் அங்கு பந்தயத்திற்கு தயாராக இருந்த அஜித் குமாரை நோக்கி ஓடிச்சென்று கட்டித் தழுவினார். இருவரும் பரஸ்பரம் முத்தமிட்டு தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர். பின்னர் போட்டியில் பங்கேற்கும் சக வீரர்கள் ஒவ்வொருவரையும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, அஜித் குமார் அறிமுகம் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவருடயை காரில் அமர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் இந்திய நேரப்படி, இரவு 9.40 மணிக்கு லீமான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த லீ மான்ஸ் கோப்பை தொடரில் அஜித் குமார் தவிர்த்து, இந்தியாவின் முன்னணி ஃபார்முலா 1 வீரர்களான நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா பட்டேல் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

மேலும் முன்னதாக சில்வர்ஸ்டோன் மைதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அஜித் குமார், தமது அழைப்பை ஏற்று இங்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ்த் திரைத்துறையில் பல ஆண்டுகளாக தல - தளபதி என்று கொண்டாடப்பட்ட, கோடிக் கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஜோசப் விஜய்யும், அஜித் குமாரும் லண்டனில் சந்தித்துக் கொண்டது, ஒட்டுமொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சனி, 5 செப்டம்பர், 2026

சுற்றுலா பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் ; கூலிப்படையை ஏவி தந்தை மகனை கொல்ல முயற்சி - தப்பி ஓடிய கும்பலை பிடிக்க ஆறு தனிப்படை !

சுற்றுலா பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் ; கூலிப்படையை ஏவி தந்தை மகனை கொல்ல முயற்சி - தப்பி ஓடிய கும்பலை பிடிக்க ஆறு தனிப்படை !

சுற்றுலா பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவத்தில் கூலிப்படையை ஏவி தந்தை, மகனை கொல்ல முயன்றது தெரியவந்து உள்ளது. தப்பி ஓடிய கும்பலை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

மலேசியாவில் இருந்து 10 பேர் கொண்ட சுற்றுலா பயணிகள் தமிழகம் வந்தனர். அவர்கள் ஒரு சொகுசு வேனில் தமிழகம் முழுவதும் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு சென்று பார்வையிட்டனர். அவர்கள் ஆலப்புழா சென்று விட்டு, கோவை வழியாக அந்த வேனில் சென்னைக்கு புறப்பட்டனர்.

கோவை க.க.சாவடி அருகே டீசல் நிரப்புவதற்காக ஒரு பெட்ரோல் பங்கில் வேலை நிறுத்தினர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் மற்றும் காரிலும் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வந்தது. அந்த கும்பல் திடீரென வேணுக்குள் ஏறி சுற்றுலா பயணிகளை தாக்கியது. இதில் லோகநாதன், அவருடைய மகன் யுகேந்திரன் ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டி விட்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்து புகாரின் பேரில் க.க.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மிரட்டி வழிப்பறி செய்ய முயற்சி நடந்ததாக கருதப்பட்டது. ஆனால் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் லோகநாதன் மற்றும் அவருடைய மகனை மட்டும் தாக்கியதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை தீவிரப்படுத்தினர்.

மேலும் தப்பி ஓடிய மர்ம கும்பலை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உத்தரவின் பெயரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறும் பொழுது;

தென் மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன், மலேசியாவில் குடும்பத்துடன் தங்கி தொழில் செய்து வருகிறார். அங்கு அவருக்கு தொழில் போட்டி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கூலிப்படையை ஏவி லோகநாதன், அவருடைய மகனையும் கொலை செய்ய முயன்றது தெரியவந்து உள்ளது.

இதில் கூலிப்படையைச் சேர்ந்த இரண்டு பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்து உள்ளது. அவர்களை பிடித்தால் தான் கூலிப்படையில் மொத்தம் எத்தனை பேர் வந்தார்கள் ? எதற்காக கொலை செய்ய முயற்சித்தார்கள் ? என்ற முழு விவரம் தெரிய வரும், இது தொடர்பாக தனி படை போலீசார் மதுரை, ஆலப்புழா ஆகிய பகுதிகளில் முகாமிட்டு விசாரணையை நடத்தி வருகின்றனர் என்றும், காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

 "இறைவன் அருளால் தப்பினோம்" ; நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கிய சூலூர் விவசாயி லோகநாதன் நெகிழ்ச்சி வீடியோ!

"இறைவன் அருளால் தப்பினோம்" ; நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கிய சூலூர் விவசாயி லோகநாதன் நெகிழ்ச்சி வீடியோ!

 "இறைவன் அருளால் தப்பினோம்" ; நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கிய சூலூர் விவசாயி லோகநாதன் நெகிழ்ச்சி வீடியோ!

39 பேர் கொண்ட குழுவுடன் காத்மாண்டு திரும்புகிறார் : நாளை ஆகஸ்ட் 31 கோவை வருகை; குடும்பத்தினர் நிம்மதி!

​ நேபாளத்தில் நிலச் சரிவு மற்றும் ஏரி உடைப்பால் ஏற்பட்ட பேரழிவில் சிக்கி மாயமானதாகக் கருதப்பட்ட கோவையைச் சேர்ந்த 12 பேரில், சூலூரைச் சேர்ந்த விவசாயி லோகநாதன் உள்ளிட்ட 4 பேர் தங்களது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசிப் பாதுகாப்பாக இருப்பதாக வீடியோ வெளியிட்டு உள்ளது பெரும் நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள செங்கடம்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி லோகநாதன் (65), அவிநாசியில் இயங்கி வரும் 'அவிநாசி லிங்கேஸ்வரர் யாத்திரைக் குழு' மூலமாக நேபாளத்திற்கு கைலாச யாத்திரை மேற்கொண்டு இருந்தார்.

​கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கைலாஸ் மான்சரோவர் பாதையில் ஏற்பட்ட பயங்கர ஏரி உடைப்பு மற்றும் பெருவெள்ளப் பெருக்கின் போது, இவர்கள் குழுவில் சென்ற 39 பேரும் கைலாயம் மலைப் பகுதியில் பாதுகாப்பாக இருந்து உள்ளனர். இதனால் பேரழிவில் சிக்காமல் எந்தவிதப் பாதிப்புமின்றி அனைவரும் நலமுடன் தப்பி உள்ளனர்.

தற்போது லோகநாதன் உள்ளிட்ட 39 பேருக்கும் சீன அரசாங்கம் உதவி செய்து, மாற்றுப் பாதையின் வழியாக நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிற்கு அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.

​தான் பாதுகாப்பாக இருப்பதை லோகநாதன் தனது குடும்பத்தினருக்கு நேரடித் தொலைபேசி அழைப்பு மற்றும் வீடியோ மூலம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.

 மாயமானதாக அறிவிக்கப்பட்டவர் நலமுடன் உயிர் தப்பி மீண்டும் வருவது குறித்து அவரது குடும்பத்தினரும், செங்கடம்பாளையம் புதூர் கிராம மக்களும் மிகுந்த மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் இறைவனுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ள அவிநாசி யாத்திரைக் குழுவினர், நாளை ஆகஸ்ட் 31-ஆம் தேதி (திங்கள்கிழமை) விமானம் மூலமாகச் சொந்த ஊரான கோவைக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 26 ஆகஸ்ட், 2026

நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

 நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இருந்த 3 வேன்களில் நேபாளம் சென்ற 37 பேர் நிலைமை என்னவென்று தற்போது தெரியவில்லை என்று அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 நேபாளத்திற்கு சுற்றுலா சென்று, அங்கு ஏற்பட்டு உள்ள பெருவெள்ளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்து உள்ளார்.

திபெத் பகுதியில் இருந்து போட்டே கோஷி ஆறு, நேபாளத்தில் உள்ள ராசுவா, தாடிங், நுவாகோட் ஆகிய மாவட்டங்கள் வழியாக பாய்கிறது. அந்த ஆற்றில், உள்ளூர் நேரப்படி இன்று காலை 9 மணிக்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளத்தால் கரையோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், பல நீர்மின் உற்பத்தி நிலையங்கள் சேதம் அடைந்து உள்ளன.

இதை அடுத்து, நேபாள பிரதமர் பாலேந்திர ஷா அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டு உள்ளார். அவருடைய உத்தரவுப்படி, நேபாள ராணுவம், ஆயுத காவல் படை, நேபாள காவல் துறை ஆகியவை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் களமிறங்கி உள்ளன. ராசுவா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, 5 மருத்துவர்கள் உள்பட 16 பேர் கொண்ட மருத்துவக் குழுவினரும் விரைந்து உள்ளனர்.

இந்த திடீர் வெள்ளத்தால் நேபாளத்திற்கு சுற்றுலா வந்த பலர் மாயமாகி இருப்பதாக அந்நாட்டு சுற்றுலா வாரியம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "291 வெளிநாட்டினர், 93 நேபாள நாட்டினர் என மொத்தம் 384 பேர் மாயமாகி உள்ளனர்.

வெளிநாடுகளை சேர்ந்தவர்களில், 105 பேர் இந்தியர்கள், 37 பேர் வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆவர். மற்றவர்கள், அமெரிக்கா, மலேசியா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள்

இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 57 பேர் இந்த பெருவெள்ளத்தில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இவர்கள் அனைவரும், கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் 'சூப்பர் யாத்திரை ஏஜென்சி' மூலம் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் திருச்சி, சென்னை, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், பாண்டிச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர், ஓசூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று ஏஜென்சி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 23 ஆம் தேதி மூன்று வேன்கள் மூலம் அவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். நேபாளம் - சீனா எல்லை அருகே சென்று கொண்டு இருந்த போது வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வேன்களும் சிக்கி உள்ளன.

அதில் ஒரு வேனில் பயணம் செய்த 20 பேர் தப்பித்து கரை ஒதுங்கி உள்ளனர். மீதமுள்ள இரண்டு வேன்களில் பயணம் செய்த 37 பேர் நிலைமை என்னவென்று தற்போது வரை தெரியவில்லை. 15 பேர், அங்கு உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறனர் என்று நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

20 பேர் பத்திரமாக உள்ளனர்

இந்நிலையில், நேபாளத்திற்கு சென்றவர்களில் 20 பேர் பத்திரமாக இருப்பதாகவும், மற்றவர்களை தேடி வருவதாகவும் அங்கு இருந்து தகவல் வந்து இருப்பதாக டிராவல்ஸ் உரிமையாளர் சாதிக் அலி தெரிவித்தார்.

இதேபோல், நேபாளத்திற்கு சென்றவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருவதாக வட்டாட்சியர் பூங்கொடி தெரிவித்து உள்ளார்.

கட்டணமில்லா உதவி எண்கள் அறிவிப்பு

இதைத்தொடர்ந்து, நேபாள சுற்றுலா வாரியம், கட்டணமில்லா உதவி எண்களை அறிவித்து உள்ளது. உதவிக்கு 1234 அல்லது ஹாட்லைன் தொலைபேசி எண் 1144 அல்லது சுற்றுலா காவல் துறை எண் 98512 89445 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு உதவி எண்கள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நல ஆணையரகமும் 24 மணி நேர உதவி எண்களை அறிவித்து உள்ளது.

கட்டணமில்லா தொலைபேசி எண்கள்

இந்தியா: 1800 309 3793

வெளிநாட்டில் இருந்து தொடர்புகொள்ள:

+91 8069009901 / 08069009901, மிஸ்டு கால் : +91 8069009900 / 08069009900, தமிழ்நாடு இல்லம் புதுடெல்லி- 92895 16712 (கட்டுப்பாட்டு அறை) ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளன.

மத்திய அரசு அளித்து உள்ள உதவி எண்கள்

+977 985 131 6807, +977 970 910 7500

தமிழர்களை மீட்க நடவடிக்கை- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

இந்நிலையில் நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், 

"நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.


மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டு உள்ளார்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2026

கூகுள் AI உலக அளவிலான ஆராய்ச்சி போட்டியில் ரூ.24 லட்சம் வென்று சாதித்த மாணவர்கள் ; நேரில் அழைத்து வாழ்த்திய அண்ணாமலை !!!

கூகுள் AI உலக அளவிலான ஆராய்ச்சி போட்டியில் ரூ.24 லட்சம் வென்று சாதித்த மாணவர்கள் ; நேரில் அழைத்து வாழ்த்திய அண்ணாமலை !!!

 கூகுள் AI உலக அளவிலான ஆராய்ச்சி போட்டியில் ரூ.24 லட்சம் வென்று சாதித்த மாணவர்கள் ; நேரில் அழைத்து வாழ்த்திய அண்ணாமலை !!!

அமெரிக்காவில் உள்ள கூகுள் டீப்மைண்ட் – கேகிள் உலகளாவிய போட்டியில் முதலிடம் பெற்று 24 லட்சம் பரிசு வென்ற கோவையைச் சேர்ந்த ஏ ஐ ஆராய்ச்சியாளர் சென்னை ஐ ஐ டி மாணவர் அர்ஜுன் திலக் மற்றும் இணை ஆசிரியர் ராம்குமார் ஆகியோரை வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனரும் முன்னாள் ஐ பி எஸ் அதிகாரியுமான அண்ணாமலை தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவிற்கு ஏஐ துறையில் மேலும் பல உலகத் தரமான பெருமைகளை கொண்டு வர வேண்டும் என்று ஊக்கமளித்து, மதிப்புமிக்க ஆலோசனைகளையும் வழங்கினார்.   

லண்டனை தலைமையிடமாகக் கொண்ட, சென்னையில் இயங்கி வரும் ஈராஸ் இன்னோவேஷன் நிறுவனத்தின் ஏஐ ஆராய்ச்சியாளரும், ஐஐடி சென்னை மாணவருமான அர்ஜுன் திலக் மற்றும் ஈராஸ் இன்னோவேஷன் ஏஐ ஆராய்ச்சியாளர் ராம்குமார் ஆகியோர் உருவாக்கிய கேஜ் என்ற செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மதிப்பீட்டு கருவி, கூகுள் டீப் மைண்ட் ஏஐ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் காகுள் இணைந்து நடத்திய உலகளாவிய ஏஐ ஆராய்ச்சி ஹேக்கத்தானில், உலகம் முழுவதும் வழங்கப்பட்ட நான்கு கிராண்ட் பிரைஸ் விருதுகளில் ஒன்றைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்காக அவர்களுக்கு அமெரிக்க டாலர் 25,000 (சுமார் ரூ.24 லட்சம்) பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

ஏஜிஐ-ஐ நோக்கிய முன்னேற்றத்தை அளவிடுதல் : அறிவாற்றல் திறன்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ஹேக்கத்தானை உலகின் மிகப்பெரிய ஏஐ ஆராய்ச்சி நிறுவனமான கூகுல் டீப் மைண்ட், மற்றும் போட்டித் தளமான காகிள் மூலம் நடத்தியது. இதில் உலகம் முழுவதும் இருந்து 192 நாடுகளைச் சேர்ந்த 7,654 போட்டியாளர்கள் மற்றும் 1,063 அணிகளும் பங்கேற்றன. மொத்தம் 2 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1.9 கோடி) பரிசுத் தொகைக்காக போட்டியிட்டனர். இதனை 20 நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

மாணவர் அர்ஜின் திலக்கின் கண்டுபிடிப்பான கேஜ் என்ற இந்த மதிப்பீட்டு முறை, ஒரு ஏஐ மாடலுக்கு "தனக்குத் தெரியாததைத் தெரிந்துகொள்ளும் திறன் உள்ளதா? அதற்கேற்ப மனித உதவியை நாடுகிறதா?" என்பதை சோதிக்கிறது.

இந்த நிலையில் மாணவரின் சாதனைகளைக் கேள்விப்பட்டு வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனரும் முன்னாள் ஐ பி எஸ் அதிகாரியுமான அண்ணாமலை தனது இல்லத்தில் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். சுமார் ஒரு மணி நேரம், அவர்கள் உருவாக்கிய ஏஐ பென்ச்மார்க் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் கேட்டறிந்து, மடிக்கணினியில் அதன் தொழில்நுட்ப செயல்முறைகளையும் பொறுமையாகக் கேட்டு புரிந்துகொண்டார். இளைஞர்களின் சாதனையை மனதாரப் பாராட்டிய அண்ணாமலை, இந்தியாவிற்கு ஏஐ துறையில் மேலும் பல உலகத் தரமான பெருமைகளை கொண்டு வர வேண்டும் என்று ஊக்கமளித்து, மதிப்புமிக்க ஆலோசனைகளையும் வழங்கினார்.   


இந்த ஆராய்ச்சி ஐஐடி பாட்னாவில் நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாட்டிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

 "லுங்கி சேலையில் வந்த நடிகை அம்பிகா" - கைத்தறி நெசவாளர்களை ஓவியர்களுடன் ஒப்பிட்டு நெகிழ்ச்சி பேச்சு !!!

"லுங்கி சேலையில் வந்த நடிகை அம்பிகா" - கைத்தறி நெசவாளர்களை ஓவியர்களுடன் ஒப்பிட்டு நெகிழ்ச்சி பேச்சு !!!

 "லுங்கி சேலையில் வந்த நடிகை அம்பிகா" - கைத்தறி நெசவாளர்களை ஓவியர்களுடன் ஒப்பிட்டு நெகிழ்ச்சி பேச்சு !!!

"கைத்தறி நெசவாளர்களுக்கு நாம் செய்யும் சிறந்த உதவி அவர்களின் பொருட்களை வாங்குவதே!"

​ கோவையில் நடைபெற்ற கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிரபல திரைப்பட நடிகை அம்பிகா, கைத்தறி உடைகளின் முக்கியத்துவம் குறித்துப் சுவாரஸ்யமாகவும் நெகிழ்ச்சியாகவும் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மேடையில் பேசிய நடிகை அம்பிகா பேசும்போது:

​"ஒரு கைத்தறி நெசவு ஆடை அலங்கார நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகிறேன் என்பதால், அதற்குப் பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு லுங்கி மற்றும் ஒரு கேரளா சேலையை (Kerala Saree) புதிதாக வாங்கி, அவற்றை ஒன்றாக இணைத்துத் தைத்து இப்படி ஒரு ஆடையை அணிந்து வந்து உள்ளேன்.

 'லுங்கி டான்ஸ்' ஆடத் தெரிந்த நமக்கு, இப்படி 'லுங்கி சேலை' கட்டுவதில் எந்தத் தவறும் இல்லை கைத்தறி ஆடைகள் மீது இன்றைய கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்க்கும் போது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

​உலகிலேயே மிகச் சிறந்த ஓவியர்கள் யார் ? என்று கேட்டால், அது கைத்தறி நெசவாளர்கள் தான் என்று நான் சொல்வேன். நூல்களால் அவர்கள் நெய்யும் ஒவ்வொரு ஆடையும் ஒரு கலைப்படைப்பு. இன்றைய மக்கள் அனைவரும் கைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என நினைத்தால், அவர்கள் கஷ்டப்பட்டுத் தயாரித்த கைத்தறிப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். அதுவே அவர்களுக்கு நாம் தரும் மிகப்பெரிய சந்தோஷம்," எனத் தெரிவித்தார்.

சனி, 1 ஆகஸ்ட், 2026

 ஏர் அரேபியா விமானத்தில் கோவை வந்த பயணி ; ஜீன்ஸ் பேண்ட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 93 கிராம் தங்கப் பேஸ்ட், ரூ.8.76 லட்சம் மதிப்பிலான மின்னணு சிகரெட் பறிமுதல் -   மடக்கிப் பிடித்த சுங்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை !!!

ஏர் அரேபியா விமானத்தில் கோவை வந்த பயணி ; ஜீன்ஸ் பேண்ட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 93 கிராம் தங்கப் பேஸ்ட், ரூ.8.76 லட்சம் மதிப்பிலான மின்னணு சிகரெட் பறிமுதல் - மடக்கிப் பிடித்த சுங்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை !!!

ஏர் அரேபியா விமானத்தில் கோவை வந்த பயணி ; ஜீன்ஸ் பேண்ட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 93 கிராம் தங்கப் பேஸ்ட், ரூ.8.76 லட்சம் மதிப்பிலான மின்னணு சிகரெட் பறிமுதல் -   மடக்கிப் பிடித்த சுங்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை !!!

 கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து வந்த ஆண் பயணியிடம் இருந்து ரூ.8.76 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுச் சிகரெட்டுகள், மின்னணு சிகரெட்டுகள் மற்றும் ஜீன்ஸ் பேண்ட்டில் பதுக்கி எடுத்து வரப்பட்ட தங்கப் பேஸ்ட் ஆகியவற்றை மத்திய புலனாய்வுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகக் கைப்பற்றினர்.

 ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளைப் மத்திய புலனாய்வுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி ஒருவரை நிறுத்தி, அவரது சோதனையிடப்பட்ட போது லக்கேஜ் பைகளில் சட்ட விரோதமாகக் கடத்தி வரப்பட்ட 50,000 ‘எஸ்ஸி சேஞ்ச்’ (Esse Change) பிராண்ட் வெளிநாட்டுச் சிகரெட்டுகள் மற்றும் 80 ‘எல்ஃப்பார்’ (Elfbar) மின்னணு சிகரெட்டுகள் (Vapes) இருப்பது கண்டறியப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் மதிப்பு ரூ.8.76 லட்சம் ஆகும்.

​மேலும், அந்தப் பயணியை தீவிரமாகச் சோதனையிட்டதில், அவர் அணிந்து இருந்த ஜீன்ஸ் பேண்ட்டின் உட்பகுதியில் சாதுர்யமாகப் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 93 கிராம் எடை உள்ள தங்கப் பேஸ்ட்டையும் அதிகாரிகள் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட அந்தப் பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாழன், 30 ஜூலை, 2026

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் ; நிதி வசூல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள 5 பேரின் இல்லங்களிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை..!

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் ; நிதி வசூல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள 5 பேரின் இல்லங்களிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை..!

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் ; நிதி வசூல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள 5 பேரின் இல்லங்களிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை..!

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு நிதி வசூல் செய்யப்பட்டது தொடர்பாக இந்த  வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரின் இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில்  ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக  NIA கைது செய்துள்ள பெரோஸ்,  நவாஸ் , அப்பாஸ் , யூசுப் ஆகியோரது வீடுகளிலும் ,  கேரள சிறையில் இருந்தபடி இவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியதாக கைது செய்யப்பட்ட அசாருதீன் இல்லத்திலும் அமலாக்க துறை சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.

அசாருதீன் ஏற்கனவே 2019ம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு இருந்ததாக NIA வால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அசாருதீன் சிறையில் இருந்தபடி , கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த சூழலில் இந்த ஐந்து பேரின்  இல்லங்களிலும் இன்று காலை 8 மணி முதல் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐந்து குழுக்களாக பிரிந்த கேரளாவில் இருந்து வந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் , இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது நிதி வசூல் செய்தது தொடர்பாக இந்த விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது.

புதன், 15 ஜூலை, 2026

சென்னை விமான நிலையத்தில் ரூ. 4.70 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் - கேரள இளைஞர் கைது !!!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 4.70 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் - கேரள இளைஞர் கைது !!!

 சென்னை விமான நிலையத்தில் ரூ. 4.70 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் - கேரள இளைஞர் கைது !!!

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு ரூ. 4.70 கோடி மதிப்பு உள்ள உயர்ரக கஞ்சா கடத்தி வந்த கேரள இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தாய்லாந்து நாட்டில் இருந்து பெருமளவில் போதைப்பொருள் கடத்திக் கொண்டு வருவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. அந்த தகவலின் பேரில், சுங்கத்துறை அதிகாரிகள் தாய்லாந்தில் இருந்து சென்னை வரும் அனைத்து விமான பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து, தீவிர சோதனை செய்தனர்.

அந்த வகையில், நேற்று இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரையும், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த விமானத்தில் வந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 25 வயது பயணி ஒருவர் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா விசாவில் சென்று விட்டு, கோலாலம்பூர் வழியாக சென்னை வந்திருப்பது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரணை செய்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து உள்ளார்.

இதனால் மேலும் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரின் உடைமைகளை பிரித்து பார்த்து சோதனை செய்தனர். அப்போது அவரது உடைமையில் சுமார் 49 பிளாஸ்டிக் பார்சல்களில், போதைப்பொருட்களை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

அதனை பிரித்து பார்த்து சோதனை செய்த போது அது ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர்ரக கஞ்சா என்பது தெரியவந்து உள்ளது. இதனையடுத்து அந்த இளைஞரிடம் இருந்து சுமார் 4 கிலோ 700 கிராம் மதிப்பிலான ஹைட்ரோபோனி கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். அதன் சர்வதேச மதிப்பு 4 கோடியே 70 லட்சம் என தெரிவித்து உள்ளனர்

இதனைத் தொடர்ந்து, அந்தப் பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், விசாரணை நடத்தியதில் இளைஞர் படித்த பட்டதாரி என்பதும், வேலை எதுவும் இல்லாததால் பணத்திற்காக கடத்தல் கும்பலுக்கு குருவியாக செயல்பட்டதும் தெரியவந்து உள்ளது. இவரை கஞ்சா கடத்தி வர பயன்படுத்திய கும்பல் யார் ? இதன் பின்னணியில் சர்வதேச போதை போல் கடத்தல் கும்பல் இருக்கிறதா ? என பல்வேறு கோணங்களில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செவ்வாய், 14 ஜூலை, 2026

கடல் கடந்த சோகம்... வியட்நாம் படகு விபத்தில் பலியான தமிழக வாலிபர்கள்: கோவை கொண்டு வரப்பட்ட 3 பேரின் உடல்கள் - கண்ணீர் மல்க சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு !!!

கடல் கடந்த சோகம்... வியட்நாம் படகு விபத்தில் பலியான தமிழக வாலிபர்கள்: கோவை கொண்டு வரப்பட்ட 3 பேரின் உடல்கள் - கண்ணீர் மல்க சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு !!!

கடல் கடந்த சோகம்... வியட்நாம் படகு விபத்தில் பலியான தமிழக வாலிபர்கள்: கோவை கொண்டு வரப்பட்ட 3 பேரின் உடல்கள் - கண்ணீர் மல்க சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு !!!

"வறுமையில் வாடும் குடும்பத்திற்கு அரசு வேலை தரணும்" - லாவா மொபைல் நிறுவன டூர் சென்ற போது நேர்ந்த விபரீதம் - உடல்களைப் பெற்றுக்கொண்டு நண்பர்கள் கண்ணீர் பேட்டி!

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில் 3 பேரின் உடல்கள் விமானம் மூலம் கோவை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வியட்நாமில் ஏற்பட்ட படகு கவிழ்ந்த விபத்தில் 6 தமிழர்கள் உயிரிழந்தனர்.முதற்கட்டமாக வியட்நாமிலிருந்து விமானத்தின் மூலம் மூன்று பேரின் உடல்கள் கொண்டு வரப்பட்டது. 

இதில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா, பாலாஜி மற்றும் அழகுராஜன் ஆகியோர் உடல் மாவட்ட நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தி ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மற்றொரு விமானத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஜெயவேல், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருக பிரபு ஆருமுகம், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் சுந்தரராஜன் ஆகிய மூன்று பேரில் உடல்கள் கோவை விமான நிலையம் கொண்டு வரப்பட உள்ளது.

தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் அந்தந்த மாவட்ட நிர்வாகம், வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். உடல்கள் வந்தடைந்ததும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, உறவினர்களின் முன்னிலையில் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன.

திருச்சியைச் சேர்ந்த அழகுராஜன், வியட்நாமில் ஏற்பட்ட படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவரது உடலைப் பெற கோவை விமான நிலைய சரக்ககத்திற்கு வந்த நண்பர் வேல்முருகன், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கை திருப்திகரமாக இருந்ததாக தெரிவித்தார்.

மேலும், வறுமையில் உள்ள அழகுராஜனின் குடும்பத்திற்கு நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். லாவா நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜராக பணியாற்றிய அழகுராஜன், அந்நிறுவனத்தின் சார்பில் வியட்நாம் சுற்றுலா சென்றபோது இந்த விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 9 ஜூலை, 2026

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 'நம்பிக்கைக்குரிய நண்பர்கள்' - பிரதமர் மோடி பெருமிதம் !!!

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 'நம்பிக்கைக்குரிய நண்பர்கள்' - பிரதமர் மோடி பெருமிதம் !!!

 இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 'நம்பிக்கைக்குரிய நண்பர்கள்' - பிரதமர் மோடி பெருமிதம் !!!

இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நம்பிக்கைக்குரிய நண்பர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

இந்தோனேசியா சுற்றுப் பயணத்தை முடித்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது 3 நாடுகள் பயணத்தின் அடுத்த கட்டமாக நேற்று ஆஸ்திரேலியா வந்தடைந்தார். அவருக்கு ஆஸ்திரேலிய அரசு மற்றும் புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்தியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸை சந்தித்துப் பேசினார்.

இந்த உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மெல்போர்னில் நடைபெற்ற 'இந்தியா-ஆஸ்திரேலியா சிஇஓ மன்றம்' மற்றும் பொருளாதார மன்ற கூட்டத்தில் இரு தலைவர்களும் இணைந்து பங்கேற்றனர்.

சி.இ.ஓ என அழைக்கப்படும் தொழிலதிபர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "தற்போது உலகம் ஒரு இக்கட்டான காலக்கட்டத்தை எதிர் கொண்டு வருகிறது. உலகெங்கும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழல் நிலவுவதுடன், விநியோகத் தொடர் பாதிப்புகள் மற்றும் கடுமையான எரிசக்தி நெருக்கடிகள் ஏற்பட்டு உள்ளன. இத்தகைய சூழலில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தங்களின் பலத்தை ஒன்றிணைத்து, நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளாக இணைந்து முன்னோக்கி செல்வது இயற்கையானதும், காலத்தின் கட்டாயமுமாகும்" என்றார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் வெற்றியை பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஆஸ்திரேலியாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி இரு மடங்காக அதிகரித்து உள்ளதுடன் இரு நாட்டு நிறுவனங்களும் பெரும் பயன் அடைந்து உள்ளன என்றும் அவர் கூறினார்.

இதன் அடுத்த கட்டமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை மேலும் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்ல ‘விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்’ நோக்கிய பேச்சுவார்த்தைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கு ஆஸ்திரேலியாவின் நவீன தொழில்நுட்பங்கள் பெருமளவில் உதவும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். குறிப்பாக, 2030-க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனையும், 2047-க்குள் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனையும் எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்து உள்ளது.

இந்த அணுசக்தித் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த ஆஸ்திரேலியாவின் யுரேனியம் இந்தியாவுக்கு மிகவும் இன்றியமையாதது என்பதை வலியுறுத்தி, ஆஸ்திரேலிய முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இரு நாட்டு பிரதமர்களின் சந்திப்பில் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், கல்வி மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டுவதில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான விரிவான ஒத்துழைப்பு முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உறுதி அளித்தார்.

இந்தோனேசிய பயணத்தை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா வந்துள்ள பிரதமர் மோடிக்கு, மெல்போர்னில் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு உள்ள விக்டோரியா அரசு மாளிகையில் ஆஸ்திரேலிய கவர்னர் ஜெனரல் சாம் மோஸ்டினையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

இதற்கு இடையே மெல்போர்னில் உள்ள இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்து இருந்த பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார். அங்கு ஆஸ்திரேலியக் கலைஞர்கள் ஆடிய கதக் உள்ளிட்ட இந்தியப் பாரம்பரிய நடனங்களை ரசித்த பிரதமர் மோடி, "இந்திய நடனக் கலைகள் ஆஸ்திரேலியா முழுவதும் பிரபலம் அடைந்து வருவதைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது" எனத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

ஆஸ்திரேலியப் பயணத்தை நிறைவு செய்த பிறகு பிரதமர் மோடி நியூசிலாந்து நாட்டிற்குச் செல்ல உள்ளார்.
மாறி, மாறி தாக்குதல் நடத்தும் அமெரிக்கா - ஈரான் !!!

மாறி, மாறி தாக்குதல் நடத்தும் அமெரிக்கா - ஈரான் !!!

 மாறி, மாறி தாக்குதல் நடத்தும் அமெரிக்கா - ஈரான் !!!

போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக டிரம்ப் அறிவித்த சில மணிநேரங்களிலேயே ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்து இருக்கிறது. அதற்கு பதிலடியாக 3 வளைகுடா நாடுகளின் மீது இன்று அதிகாலை முதல் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த பிப்ரவரி 28 ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே தொடங்கிய போரானது, 110 நாட்களுக்கு பிறகு முடிவுக்கு வந்தது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தக் கூடாது என்றும், அதேபோல் ஈரான் மற்றும் லெபனான் உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மொத்தம் 14 அம்சங்கள் அடங்கிய அந்த ஒப்பந்தத்தின்படி, 60 நாட்களுக்குள் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி இறுதிகட்ட முடிவை எடுக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த போர் நிறுத்தத்திற்கு பிறகு, உலகின் முக்கிய நீர்வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை வர்த்தக கப்பல்கள் செல்வதற்கு திறப்பதாக ஈரான் அறிவித்தது. ஆனால், போருக்கு முந்தைய நிலையை போன்று இனிமேல் இருக்காது என்றும் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், ஜூலை 7 அன்று ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற மார்ஷல் தீவு, சவுதி அரேபியா மற்றும் லைபீரியா நாடுகளின் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானின் 80 முக்கிய இடங்களை குறிவைத்து அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் இரு நாடுகளிடையே மீண்டும் போர் மூண்டது.

ஈரானை அமெரிக்கா முதலில் தாக்கிய போது, அந்நாட்டின் உச்சத்தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். அவரின், இறுதிச்சங்குகள் ஜூலை 4 முதல் ஈரானில் நடைபெற்று வரும் நிலையில், இன்று வியாழக்கிழமை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நேரத்தில் இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க துருக்கி சென்று இருந்த டிரம்ப், இரு நாடுகள் இடையே ஏற்படுத்தப்பட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்தானதாக புதன்கிழமை (ஜூலை 8) அறிவித்தார். மேலும், ஈரானின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இன்று இரவே மிக கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

குறிப்பாக, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கடல் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளிட்ட முக்கிய தலங்களை தாக்க திட்டமிட்டு இருப்பதாகவும், எண்ணெய் உற்பத்தி மையமான கார்க் தீவை கைப்பற்ற உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். என்ன நடவடிக்கை மேற்கொண்டாலும் அது மிக துரிதமாக நடவடிக்கையாக இருக்கும் என்றும், தாக்குதல் மிகவும் மோசமாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்து இருந்தார்.

இதனிடையே, அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்நாட்டின் ராணுவ முகாம்கள் உள்ள பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளின் மீது ஈரான் நேற்றே தாக்குதல்களை நடத்தியது. இதில் 2 ஏவுகணைகள் மற்றும் 13 ட்ரோன்களை நடுவானில் சுட்டு வீழ்த்தியதாக குவைத் தெரிவித்து இருந்தது.

அதேபோல், டிரம்ப் ஏற்கனவே அறிவித்து இருந்தபடி, புதன்கிழமை (ஜூலை 8) இரவு ஈரான் மீது அடுத்தக்கட்ட தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்து இருக்கிறது. ஆனால், அந்த தாக்குதல் நடைபெற்ற ஒரு சில மணி நேரங்களிலேயே, அதாவது இன்று அதிகாலை குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை நடத்தியது.

இதனால், இந்த மூன்று வளைகுடா நாடுகளிலும் இன்று அதிகாலை சைரன்கள் ஒலித்தன. தங்களை நோக்கி ஏவப்படும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தீவிரமாக இடைமறித்து அழித்து வருவதாக குவைத் ராணுவம் தெரிவித்து இருக்கிறது.

வியாழன், 2 ஜூலை, 2026

இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த புதிய முதலீடுகள்: ஜப்பான் பிரதமர் டகாய்ச்சி உறுதி !!!

இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த புதிய முதலீடுகள்: ஜப்பான் பிரதமர் டகாய்ச்சி உறுதி !!!

 இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த புதிய முதலீடுகள்: ஜப்பான் பிரதமர் டகாய்ச்சி உறுதி !!!

டகாய்ச்சி இந்தியாவிற்கு வருகை புரிந்து உள்ள புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உள்ள பிரதமர் மோடி, “முதன் முறையாக இந்தியாவிற்கு வந்திருக்கும் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்தியா - ஜப்பான் இடையேயான உலகளாவிய நட்புறவை மேலும் வலுப்படுத்தும் உரையாடல்கள் நடத்த ஆவலாக இருக்கிறேன். நம் இருநாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் இந்தோ - பசிபிக் மற்றும் அதனை தாண்டிய பகுதிகளில் செழிப்பும் அமைதியும் நிலவுகிறது” என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஜப்பான் பிரதமர் டகாய்ச்சியை வரவேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறது. அந்த பதிவில், “இரு நாடுகள் இடையேயான கூட்டுறவை முன்னெடுத்து செல்வதில் இந்த சந்திப்பு முக்கியமானதாக அமையும்” என்று தெரிவித்து இருக்கிறது.

இந்தியா வருவதற்கு முன்பு புதன்கிழமை (ஜூலை 1) டோக்கியோ விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சானோ டகாய்ச்சி, இந்த பயணமானது மூன்று முக்கிய துறைகளில் இந்திய பிரதமர் மோடியின் ஒத்துழைப்பை பெற்றுத்தரும் என நம்புவதாக கூறி இருந்தார்.

அதுகுறித்து விளக்குகையில், தற்போது நிலவிவரும் உலகளாவிய சூழ்நிலையை கருத்தில்கொண்டு, “இந்தியா-ஜப்பான் இடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்துதல், பொருளாதார பாதுகாப்பு மீதான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் புதிய முதலீடுகளில் இரு நாடுகள் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை எங்கள் பேச்சுவார்த்தையில் முக்கிய அம்சங்களாக இடம்பெறும்” என்று கூறி இருந்தார்.

தொடர்ந்து, 150-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் மற்றும் வணிக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஜப்பான் - இந்தியா கூட்டு பொருளாதார கூட்டம் நடைபெறும் என்றும், தனியார் துறையுடன் இணைந்து பணியாற்றினால் இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்தி வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என்றும் கூறி இருந்தார்.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்து உள்ள டகாய்ச்சி, வர்த்தக கருத்தரங்கு ஒன்றிலும் பங்கேற்க உள்ளார். ஜப்பானின் பிரதமராக சானே டகாய்ச்சி பதவியேற்ற பிறகு அவர் முதன்முறையாக இந்தியா வந்திருக்கிறார்.

வெள்ளி, 26 ஜூன், 2026

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கரிப்பூர் விமானநிலையத்தில் எமர்ஜென்சி லைட்டில் கடத்தி எடுத்துவந்த 146பவுன் தங்ககட்டிகள் சிக்கியது மலப்புறம் பகுதியை சேர்ந்த இளைஞர் கைது !!!

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கரிப்பூர் விமானநிலையத்தில் எமர்ஜென்சி லைட்டில் கடத்தி எடுத்துவந்த 146பவுன் தங்ககட்டிகள் சிக்கியது மலப்புறம் பகுதியை சேர்ந்த இளைஞர் கைது !!!

 கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கரிப்பூர் விமான நிலையத்தில் எமர்ஜென்சி லைட்டில் கடத்தி எடுத்துவந்த 146 பவுன் தங்ககட்டிகள் சிக்கியது மலப்புறம் பகுதியை சேர்ந்த இளைஞர் கைது !!!

கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் கரிப்பூர் விமான நிலையத்தின் வாயிலாக தங்கம் கடத்தி வருவதாக மலப்புறம் மாவட்ட காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து விமானநிலையத்தில் காவல் துறையினர் சிறப்பு சோதனையில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது மலப்புறம் கிழங்காடி பகுதிரை சேர்ந்த அஸ்லாம் என்ற இளைஞர் சுங்கத் துறை சோதனைகளை கடந்து வெளியே வந்தார். தொடர்ந்து சந்தேகத்தின் பெயரில் காவல் துறையினர் அஸ்லாமிடம் நடத்திய சோதனையில் எமர்ஜென்சி லைட்டில் 1165 கிராம் எடையிலான 10 தங்க கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதை அடுத்து கடத்தல் தங்கம் மற்றும் தங்கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் அஸ்லாம் ஆகியோரை காவல் துறையினர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் விமான நிலையத்தில் எமர்ஜென்சி லைட்டில் தங்ககட்டிகள் கடத்திவந்த விவகாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

ஞாயிறு, 21 ஜூன், 2026

சர்வதேச யோகா தினம்: ஈஷா சார்பில் நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச யோக வகுப்புகள் !!!

சர்வதேச யோகா தினம்: ஈஷா சார்பில் நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச யோக வகுப்புகள் !!!

 சர்வதேச யோகா தினம்: ஈஷா சார்பில் நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச யோக வகுப்புகள் !!!

ராணுவ வீரர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட 50,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு !!!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஈஷா அறக்கட்டளை சார்பில் நாடு முழுவதும் சுமார் 1,000 இடங்களிலும், தமிழகத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட இடங்களிலும் இலவச யோக வகுப்புகள் நடத்தப்பட்டன. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு யோகா வகுப்புகளில், நாடு முழுவதும் 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள், முப்படையினர் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்த வகுப்புகளில், ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ தியானம் மற்றும் ‘சூர்ய சக்தி’ உள்ளிட்ட சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகள் கற்றுத்தரப்பட்டன.


சத்குருவின் யோக தின வாழ்த்து செய்தியில், "சர்வதேச யோகா தினம் என்பது, நாம் "யோகா" என்று அழைப்பது ஒரு தத்துவமோ, சித்தாந்தமோ, நம்பிக்கை முறையோ அல்லது மதமோ அல்ல என்பதை நினைவூட்டும் நாளாகும். இது உள்நிலை நல்வாழ்விற்கான ஒரு அறிவியலும் தொழில்நுட்பமும் ஆகும். உங்கள் மதம், இனம், சாதி, வகுப்பு, பாலினம் எதுவாக இருந்தாலும், இந்தத் தொழில்நுட்பங்கள் உங்களை ஒரு உன்னதமான நிலைக்கும் உடல், மனம், உணர்ச்சி, புத்திசாலித்தனம் மற்றும் ஆற்றல்களில் உச்சகட்ட செயல்பாட்டிற்கும் கொண்டு சேர்க்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, இது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் தனித்துவமிக்க அறிவுத்திறனின் ஆற்றலை வெளிக்கொணரும்." என்று தெரிவித்து உள்ளார். 

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, 'மிராக்கிள் ஆப் மைண்ட்' தியானம் புதியதாக 6 மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் 35 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தும் இந்த தியான செயலி இதுவரை ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, ஸ்பானிஷ் மற்றும் ரஷ்யன் ஆகிய 6 மொழிகளில் வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கூடுதலாக கன்னடம், மலையாளம், குஜராத்தி, பங்களா, இத்தாலியன் மற்றும் நேபாளி ஆகிய மேலும் 6 மொழிகள் இந்த செயலியில் இணைக்கப்பட்டு உள்ளன. 

இதன் மூலம் மக்கள் தங்கள் சொந்த மொழியிலேயே தியானத்தை எளிதாகக் கற்க முடியும். இந்தச் செயலியை isha.sadhguru.org/in/en/miracle-of-mind என்ற இணையதளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற யோகா தினக் கொண்டாட்டத்தில், விரைவு அதிரடிப்படை மற்றும் மத்திய ரிசர்வ் காவல்துறையைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் யோகப் பயிற்சிகளை மேற்கொண்டனர். மேலும் கோவையில் உள்ள ஐ.என்.எஸ் அக்ரானி, 43 விங் ஏர் ஃபோர்ஸ் ஸ்டேஷன் மற்றும் ஏர் வாரியர் ஆகிய கடற்படை மற்றும் விமானப்படை தளங்களில் யோகா வகுப்புகள் நடைபெற்றன. மேலும், மதுக்கரை 195 ஃபீல்ட் ரெஜிமென்ட் ராணுவ முகாமிலும் யோகா வகுப்புகள் நடத்தப்பட்டது. இதுதவிர, உதகை வெலிங்டன் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ராணுவப் பயிற்சி கல்லூரி வளாகத்திலும் ராணுவ அதிகாரிகளுக்கான சிறப்பு யோகா வகுப்புகள் நடைபெற்றன.

பெங்களூருவில் உள்ள ஈஷா மையமான ‘சத்குரு சந்நிதி’-யில் உள்ள ஆதியோகி திருவுருவச் சிலைக்கு முன்பாக பிரம்மாண்ட யோகா வகுப்பு நடைபெற்றது. இதில் என்.சி.சி மாணவர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் எனப் பலரும் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

சென்னையில் எல் அண்ட் டி, முருகப்பா மேனேஜ்மென்ட் சர்வீசஸ், ஹனிவெல் ஆட்டோமேஷன், டிபிஎஸ் வங்கி, ஐடிஎஃப்சி வங்கி , டெக் மஹிந்திரா மற்றும் லெக்ரான்ட் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் ஐஐடி மெட்ராஸ் (IIT Madras) வளாகத்தில் உள்ள மாணவர்களுக்கும், வனவாணி பள்ளியிலும் சிறப்பு யோகா வகுப்புகள் நடைபெற்றன. மேலும், பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த இந்திய கடற்படை மற்றும் ஆவடியில் உள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்திலும் சிறப்பு யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன. 

கடந்த ஓராண்டில் மட்டும் கோவை ஈஷா யோக மையத்தில் வழங்கப்பட்ட இலவச யோகா மற்றும் தியான வகுப்புகள் மூலம் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயனடைந்து உள்ளனர்.

யோகா தின கொண்டாட்டத்தோடு நின்றுவிடாமல், இந்த இலவச யோகா வகுப்புகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாதந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளன. இனிவரும் மாதங்களிலும் ‘சூர்ய சக்தி’ மற்றும் ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ தியான இலவச யோகா வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. இந்த இலவச வகுப்புகளில் பங்கேற்க விரும்புபவர்கள் Isha.co/Suryashakti என்ற இணைப்பில் பதிவு செய்து கொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் தகவல்களைப் பெற 83000 99555 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

வெள்ளி, 19 ஜூன், 2026

கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்பு உள்ளதா ? இலங்கை எம்.பி ரவூப் ஹக்கீம் விளக்கம் !!!

கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்பு உள்ளதா ? இலங்கை எம்.பி ரவூப் ஹக்கீம் விளக்கம் !!!

 கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்பு உள்ளதா ? இலங்கை எம்.பி ரவூப் ஹக்கீம் விளக்கம் !!!

கச்சத்தீவை இந்தியாவிடம் இலங்கை ஒப்படைக்க வாய்ப்பு உள்ளதா ? என்கிற கேள்விக்கு அந்நாட்டைச் சேர்ந்த எம்பி ரவூப் ஹக்கிம் விளக்கம் அளித்து உள்ளார்.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் ரவூப் ஹக்கீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகானை சென்னை தஸைமைச் செயலகத்தில் இன்று நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,

 "அமைச்சர் ஏ.எம். ஷாஜகானை சந்திக்கும் பொருட்டு தலைமை செயலகம் வந்து உள்ளேன். அடுத்ததாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை சந்திக்க இலங்கையில் உள்ள தமிழ் எம்.பி-க்கள் குழுவாக வர திட்டமிட்டு உள்ளோம்.

இன்றைய சந்திப்பில் மீனவர் பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு பல்வேறு விதமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், குறிப்பாக தமிழக மீனவர்களையும், இலங்கை மீனவர்களையும் கூட்டாக செயல்பட வைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

மீனவர்கள் பிரச்சனை தொடர்ந்துக் கொண்டு இருக்கிறது. இது கவலைக்குரிய விஷயமாகும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு இரண்டு நாடு அரசுகளுக்கு இடையேயும், மீனவ சமூகங்களுக்கு இடையேயும் தீவிரமான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதால் தான் பிரச்சனை எழுகிறது. அது போன்ற வலைகளை மீனவர்கள் பயன்படுத்தாமல் இருக்க மாற்று ஏற்பாடுகளை அரசு முன்னெடுக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து அவரிடம் கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்பு உள்ளதா ? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், 

"கச்சத்தீவை மீண்டும் ஒப்படைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தால், அதற்கு ஐக்கிய நாடுகள் (ஐநா) சபைக்கு தான் செல்ல வேண்டும். இனிமேல் இந்தியா - இலங்கை இடையே பேச்சுவார்த்தை நடத்தி அதனைத் திரும்ப பெற முடியாது. இல்லாவிட்டால் படையடுப்பு நடத்தி தான் நிலத்தை எடுக்க முடியும்" என கூறினார்.

இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த 285 ஏக்கர் பரப்பளவு கொண்ட கச்சத்தீவு, 1974 ஆம் ஆண்டில் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கையுடனான நட்புறவை மேம்படுத்தும் விதமாக வழங்கினார். இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையை தீர்மானிக்கும் பொருட்டு இந்த தாரைவார்ப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலும், கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டு இருந்தாலும், அங்கு இந்திய மீனவர்கள் ஓய்வெடுக்க, வலைகளை உலர்த்த மற்றும் அங்கு உள்ள அந்தோணியார் கோயிலுக்கு சென்று வரவும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

புதன், 17 ஜூன், 2026

திரிபுரா எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவிய வங்கதேச நபரைச் சுட்டு வீழ்த்தியது எல்லை பாதுகாப்பு படை.....

திரிபுரா எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவிய வங்கதேச நபரைச் சுட்டு வீழ்த்தியது எல்லை பாதுகாப்பு படை.....

 திரிபுரா எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவிய வங்கதேச நபரைச் சுட்டு வீழ்த்தியது எல்லை பாதுகாப்பு படை.....

கடந்த வெள்ளிக்கிழமை மாலை, திரிபுரா எல்லையில் உள்ள உனகோடி மாவட்டம், கைலாஷஹர் பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற வங்கதேசத்தைச் சேர்ந்த ஊடுருவல்காரர் ஒருவரை எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) சுட்டுக் கொன்றது. 

பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தத் துணிந்த ஊடுருவல்காரர்கள் குழுவை நோக்கி, தற்காப்புக்காக பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

கொல்லப்பட்ட நபர் வங்கதேசத்தைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் (26) என அடையாளம் காணப்பட்டு உள்ளார். இவர்களிடம் இருந்து கடத்தல் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை எல்லை பாதுகாப்பு படை கைப்பற்றி உள்ளது.

செவ்வாய், 2 ஜூன், 2026

கோவையில் மருத்துவர் தாயாரை கொலை செய்த வழக்கு ; தலைமறைவான தம்பதி குறித்து நேபாள அரசுக்கு கடிதம் - மத்திய வெளியுறவுத்துறை மூலம் அனுப்பப்பட்டது !!!

கோவையில் மருத்துவர் தாயாரை கொலை செய்த வழக்கு ; தலைமறைவான தம்பதி குறித்து நேபாள அரசுக்கு கடிதம் - மத்திய வெளியுறவுத்துறை மூலம் அனுப்பப்பட்டது !!!

 கோவையில் மருத்துவர் தாயாரை கொலை செய்த வழக்கு ; தலைமறைவான தம்பதி குறித்து நேபாள அரசுக்கு கடிதம் - மத்திய வெளியுறவுத்துறை மூலம் அனுப்பப்பட்டது !!!

கோவையில் மருத்துவர் தாயாரை கொலை செய்த வழக்கில் தலைமறைவான தம்பதி குறித்து நேபாள அரசுக்கு மத்திய வெளியுறவு துறை மூலம் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

கோவை, நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் ராம்குமார். இவருடைய தாயார் கஸ்தூரி வயது 82 வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு உதவுவதற்காக, நேபாளத்தைச் சேர்ந்த சுர்ஜா 42 வயதுடைய பெண்ணை வேலைக்கு அமர்த்தினர். அந்த வீட்டில் ஏராளமான நகை மற்றும் பணம் இருந்தது. அதை பார்த்ததும் சுர்ஜா நேபாளத்தில் உள்ள தனது கணவர் ராஜீவிற்கும் தகவல் தெரிவித்தார்.

இதை அடுத்து கடந்த மார்ச் மாதம் 6 ம் தேதி ராஜுவ் - சுர்ஜா மற்றும் உறவினர்கள் ராகேஷ் சவுத், திலீப் சாகி, தாமுர் புக்தா ஆகியோர் கஸ்தூரி கொலை செய்து விட்டு பணம் - நகை கொள்ளை அடித்து தப்பி சென்றனர். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ராகேஷ் சவுத், திலீப் சாகி, தாமு புக்தா ஆகியோரை கைது செய்தனர். ராஜு - சுர்ஜா தம்பதியினர் தலைமறைவானார்கள்.

இதைத் தொடர்ந்து தனிப் படையினர் பெங்களூர், மும்பையில் முகாமிட்டு தம்பதியை தேடி வந்தனர். ஆனால் அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை இதற்கு இடையே அந்த தம்பதியினர் நேபாள நாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் ஏற்பட்டது.

 இதனால் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

அத்துடன் தலைமறைவான தம்பதியின் உறவினர்களின் செல்போன் எண்களை பெற்ற போலீசார் தம்பதியினர் உறவினர்களின் செல்போனுக்கு தொடர்பு கொள்கிறார்களா ? என்பது குறித்து கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும் போது ; இந்த வழக்கில் தலைமறைவான தம்பதி நேபாளத்திற்கு தப்பி சென்று இருக்கலாம், அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அந்த தம்பதி மீது இருக்கும் வழக்கு மற்றும் அவர்களின் புகைப்படத்துடன் மத்திய வெளியுறவுத் துறை மூலம் நேபாள அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அத்துடன் நேபாள நாட்டு காவல் துறை அதிகாரிகளிடமும் பேசி வருவதாகவும், எனவே நேபாள நாட்டில் தம்பதி பதுங்கி இருந்தால், கண்டிப்பாக தகவல் கிடைக்கும் என்றும் எதிர்பார்த்து உள்ளதாக தெரிவித்தனர்.

 8 கோடி பேரின் வாழ்வாதாரம் காக்கப்பட்டது ” ; பருத்திக்கு 11% இறக்குமதி வரி தற்காலிக விலக்கு - பிரதமர் மோடி மற்றும் முதல்வருக்குக் கோவையில் ‘சைமா’ நன்றி அறிவிப்பு !!!

8 கோடி பேரின் வாழ்வாதாரம் காக்கப்பட்டது ” ; பருத்திக்கு 11% இறக்குமதி வரி தற்காலிக விலக்கு - பிரதமர் மோடி மற்றும் முதல்வருக்குக் கோவையில் ‘சைமா’ நன்றி அறிவிப்பு !!!

 8 கோடி பேரின் வாழ்வாதாரம் காக்கப்பட்டது ” ; பருத்திக்கு 11% இறக்குமதி வரி தற்காலிக விலக்கு - பிரதமர் மோடி மற்றும் முதல்வருக்குக் கோவையில் ‘சைமா’ நன்றி அறிவிப்பு !!!

​“பங்களாதேஷ், வியட்நாம் நாடுகளின் போட்டியைச் சமாளிக்க சிக்னல்”: ஜூன் 1 முதல் அமுலாகி உள்ள அரசாணையால் ஜவுளித் தொழில் புத்துயிர் !!!

11 % இறக்குமதி வரியிலிருந்து பருத்திக்கு தற்காலிக விலக்கு அறிவிப்புக்காக, மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

கோவையில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (SIMA - South Indian Mills Association) சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சைமா அலுவலகத்தில் இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

பத்திரிக்கையாளர் கூட்டத்தில் இந்திய ஜவுளி சம்மேளனத் தலைவர் அஸ்வின் சந்திரன், பருத்தி ஜவுளி ஏற்றுமதி கழக துணை தலைவர் ரவி சாம், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் துரை பழனிசாமி, துணை தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் சைமா பொது செயலாலர் செல்வராஜூ ஆகியோர் ஒட்டுமொத்த ஜவுளி துறையின் சார்பாக பருத்தி இறக்குமதி தற்காலிக வரி விலக்கிற்கு மத்திய அரசிற்கும் அதற்கு பரிந்துரை செய்த தமிழக அரசிற்கும் தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

குறிப்பாக, பாரத பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஜவுளி துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோருக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்தனர்.

மேலும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்றதுடன் தாமாக முன்வந்து முதல் கோரிக்கையாக பாரத பிரதமர் அவர்களுக்கு 11 சதவீத வரி நீக்கத்தை வலியுறுத்தி பரிந்துரை செய்து உடனடியாக நிவாரணம் கிடைக்க பெரிதும் உதவியமைக்காக நன்றிகளை தெரிவித்தனர்.

செய்தியாளர் சந்திப்பில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் துரை பழனிசாமி பேசியதாவது, 

'பருத்தி ஜவுளி ஏற்றுமதிக்கு வரியில்லா ஒப்பந்தம், சாதகமான உலக சந்தை நிலவரம் மற்றும் அரசின் பல்வேறு ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கைகளினால் சிறந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் பருத்தி விலை நிலவி வந்ததால் இந்திய ஜவுளி துறை இந்த சாதகமான சூழ்நிலையை பயன்படுத்த முடியவில்லை.

ஜூன் 1, 2026 முதல் அக்டோபர் 31, 2026 வரை 11 சதவீத வரி விலக்கு அளித்து அறிவிக்கப்பட்டுள்ள அரசு ஆணையின் மூலம் சாதகமான சூழ்நிலை, பருத்தி பருவமில்லாத காலத்தில் பஞ்சு பற்றாக்குறையையும், தரமான பஞ்சு தேவையையும் பூர்த்தி செய்ய பெரிதும் உதவும்.

இந்த வரி நீக்கம் ஒரு நிலையான போட்டித்திறனை கொண்டுவந்து விரைவில் அமலாக உள்ள பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இதர வரியில்லா ஒப்பந்தங்களின் பயனை அடைய உதவும்.

சுமார் 8 கோடி கிராமப்புற மக்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வரும் ஜவுளி தொழிலுக்கு தரமான பஞ்சு உரிய விலையில் எப்போதும் கிடைத்திட வேண்டும் என்பது அவசியமாகும்.

பருத்தி ஜவுளி ஏற்றுமதியில் நமது போட்டி நாடுகளான பங்களாதேஷ், வியட்நாம், பாக்கிஸ்தான், இந்தோனேஷியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் இறக்குமதி வரி இல்லாத காரணத்தினால் இந்திய விற்கு கிடைக்க வேண்டிய ஏற்றுமதி வாய்ப்பை தட்டிச்செல்வத்தினாலும், சுமார் 30 முதல் 40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படுகிறது. இந்த ஆண்டு அறிவித்த இந்த தற்காலிக வரி நீக்கத்தால் இந்த சூழ்நிலை தவிர்க்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

திங்கள், 1 ஜூன், 2026

பெட்ரோல், டீசல் மீதான ஏற்றுமதி வரியைக் குறைத்தது மத்திய அரசு !!!

பெட்ரோல், டீசல் மீதான ஏற்றுமதி வரியைக் குறைத்தது மத்திய அரசு !!!

 பெட்ரோல், டீசல் மீதான ஏற்றுமதி வரியைக் குறைத்தது மத்திய அரசு !!!

பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியைக் குறைத்து மத்திய அரசு அறிவித்து உள்ளது.

மேற்காசிய போர் காரணமாக உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் வகையிலும், அதன் விலை உயர்வைத் தடுக்கும் வகையிலும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு மத்திய அரசு ஏற்றுமதி வரியை விதித்து உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை 15 நாட்களுக்கு ஒருமுறை மத்திய அரசு திருத்தம் செய்கிறது.

அந்த வகையில், பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூபாய் 1.5 ஆகவும், டீசல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூபாய் 13.5 ஆகவும், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூபாய் 9.5 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த விலையானது ஜூன் 01- ஆம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. எனினும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் எவ்வித மாற்றமும் இல்லை. எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியில் மாற்றம் செய்யப்படுவதால் உள்நாட்டில் நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

இதன் இடையே, ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப வீட்டு உபயோகக் கேஸ் சிலிண்டர் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையை இந்தியாவில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்து உள்ள நிலையில், மேற்காசியாவில் போர் சூழல் தணியாததால் மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறையுமா ? அதிகரிக்குமா ? என்பது நாளை (ஜூன் 01) காலை தெரிய வரும்.

இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பைச் சந்தித்து உள்ளனர்.