இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 செப்டம்பர், 2026

லண்டனில் அஜித் குமாரின் கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய் !

லண்டனில் அஜித் குமாரின் கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய் !

 போட்டி நடக்கும் இடத்திற்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய் அங்கு பந்தயத்திற்கு தயாராக இருந்த அஜித் குமாரை நோக்கி ஓடிச் சென்று கட்டித் தழுவினார். இருவரும் பரஸ்பரம் முத்தமிட்டு தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

இங்கிலாந்தில் நடைபெறும் லீ மான்ஸ் கோப்பை தொடரில், நடிகரும் ரேசருமான அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கொடி அசைத்து இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலகளாவிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், செப்டம்பர் 10-ஆம் தேதி, இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தின் நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள உலகப் புகழ் பெற்ற சில்வர்ஸ்டோன் ஓடுதளத்திற்கு (Silverstone Circuit) சென்ற முதலமைச்சர் விஜய், உலகப்புகழ் பெற்ற லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார். லீ மான்ஸ் கோப்பை நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று இந்த சர்வதேச நிகழ்வில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

போட்டி நடக்கும் இடத்திற்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய் அங்கு பந்தயத்திற்கு தயாராக இருந்த அஜித் குமாரை நோக்கி ஓடிச்சென்று கட்டித் தழுவினார். இருவரும் பரஸ்பரம் முத்தமிட்டு தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர். பின்னர் போட்டியில் பங்கேற்கும் சக வீரர்கள் ஒவ்வொருவரையும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, அஜித் குமார் அறிமுகம் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவருடயை காரில் அமர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் இந்திய நேரப்படி, இரவு 9.40 மணிக்கு லீமான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த லீ மான்ஸ் கோப்பை தொடரில் அஜித் குமார் தவிர்த்து, இந்தியாவின் முன்னணி ஃபார்முலா 1 வீரர்களான நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா பட்டேல் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

மேலும் முன்னதாக சில்வர்ஸ்டோன் மைதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அஜித் குமார், தமது அழைப்பை ஏற்று இங்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ்த் திரைத்துறையில் பல ஆண்டுகளாக தல - தளபதி என்று கொண்டாடப்பட்ட, கோடிக் கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஜோசப் விஜய்யும், அஜித் குமாரும் லண்டனில் சந்தித்துக் கொண்டது, ஒட்டுமொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சனி, 5 செப்டம்பர், 2026

சுற்றுலா பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் ; கூலிப்படையை ஏவி தந்தை மகனை கொல்ல முயற்சி - தப்பி ஓடிய கும்பலை பிடிக்க ஆறு தனிப்படை !

சுற்றுலா பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் ; கூலிப்படையை ஏவி தந்தை மகனை கொல்ல முயற்சி - தப்பி ஓடிய கும்பலை பிடிக்க ஆறு தனிப்படை !

சுற்றுலா பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவத்தில் கூலிப்படையை ஏவி தந்தை, மகனை கொல்ல முயன்றது தெரியவந்து உள்ளது. தப்பி ஓடிய கும்பலை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

மலேசியாவில் இருந்து 10 பேர் கொண்ட சுற்றுலா பயணிகள் தமிழகம் வந்தனர். அவர்கள் ஒரு சொகுசு வேனில் தமிழகம் முழுவதும் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு சென்று பார்வையிட்டனர். அவர்கள் ஆலப்புழா சென்று விட்டு, கோவை வழியாக அந்த வேனில் சென்னைக்கு புறப்பட்டனர்.

கோவை க.க.சாவடி அருகே டீசல் நிரப்புவதற்காக ஒரு பெட்ரோல் பங்கில் வேலை நிறுத்தினர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் மற்றும் காரிலும் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வந்தது. அந்த கும்பல் திடீரென வேணுக்குள் ஏறி சுற்றுலா பயணிகளை தாக்கியது. இதில் லோகநாதன், அவருடைய மகன் யுகேந்திரன் ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டி விட்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்து புகாரின் பேரில் க.க.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மிரட்டி வழிப்பறி செய்ய முயற்சி நடந்ததாக கருதப்பட்டது. ஆனால் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் லோகநாதன் மற்றும் அவருடைய மகனை மட்டும் தாக்கியதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை தீவிரப்படுத்தினர்.

மேலும் தப்பி ஓடிய மர்ம கும்பலை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உத்தரவின் பெயரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறும் பொழுது;

தென் மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன், மலேசியாவில் குடும்பத்துடன் தங்கி தொழில் செய்து வருகிறார். அங்கு அவருக்கு தொழில் போட்டி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கூலிப்படையை ஏவி லோகநாதன், அவருடைய மகனையும் கொலை செய்ய முயன்றது தெரியவந்து உள்ளது.

இதில் கூலிப்படையைச் சேர்ந்த இரண்டு பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்து உள்ளது. அவர்களை பிடித்தால் தான் கூலிப்படையில் மொத்தம் எத்தனை பேர் வந்தார்கள் ? எதற்காக கொலை செய்ய முயற்சித்தார்கள் ? என்ற முழு விவரம் தெரிய வரும், இது தொடர்பாக தனி படை போலீசார் மதுரை, ஆலப்புழா ஆகிய பகுதிகளில் முகாமிட்டு விசாரணையை நடத்தி வருகின்றனர் என்றும், காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதன், 2 செப்டம்பர், 2026

"2029-ல் பிரதமர் வேட்பாளராக உருவெடுப்பார் த.வெ.க தலைவர் முதல்வர் விஜய்" ; கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ்!

"2029-ல் பிரதமர் வேட்பாளராக உருவெடுப்பார் த.வெ.க தலைவர் முதல்வர் விஜய்" ; கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ்!

தேசிய அரசியலில் கவனம் ஈர்க்கும் தமிழக வெற்றிக் கழகம் :  த.வெ.க நிர்வாகி பேச்சால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!  

வரும் 2029-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் அவர்கள் நாட்டின் பாரதப் பிரதமர் வேட்பாளராக உருவெடுப்பார் எனத் த.வெ.க வின் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்து உள்ளார்.

​தேசிய அரசியலை நோக்கிய த.வெ.க:

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற த.வெ.க எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் இக்கருத்தைப் பதிவு செய்தார்.  

​தமிழக அளவில் மாபெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி சட்டமன்றத்திற்குள் தடம் பதித்து உள்ள தமிழக வெற்றிக் கழகம், அடுத்து வரும் 2029 மக்களவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு இயங்கத் தொடங்கி உள்ளது.

​"இந்தியாவின் முதன்மைத் தலைவராக முதல்வர் விஜய்":

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கு ஏற்க சென்ற எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் பேசும்போது;

பிரதமர் வேட்பாளர் நமது தலைவர் தளபதி தான் என்றும், இரண்டு நாட்களாக இதைப் பற்றி தான் பேசப்படுவதாகவும், ஏனென்றால் 2025-யில் இதேபோன்று நிகழ்வு தான் ஆனது. இதே போன்று தான் என்னிடம் வந்து கேட்டார்கள், கண்டிப்பாக 2026 என்ன ? நடந்தது என்று இந்த நாடே பார்த்து இருக்கும், 2029 ஆம் ஆண்டு முக்கியமான விஷயம் பிரதமர் யார் ? என்பதை முடிவு பண்ணுவது டெல்லியில் இருந்து கிடையாது. அது வந்து தமிழ்நாட்டில் இருந்து தான் முடிவு பண்ணி போவதாகவும், ஒரு அதிர்ச்சியான விஷயம் இந்திய அரசியல் பெரிய மாற்றத்தை 2029 இல் கண்டிப்பாக பார்ப்போம் என்றார். 

காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்றும், இல்லையென்றால் த.வெ.க இருந்து வெளியேறுவதாக கூறியது குறித்தான கேள்விக்கு;

2029 ல் நீங்கள் அந்த விஷயத்தை பார்ப்பீர்கள், அதற்குப் பிறகு அவர்கள் வெளியில் இருப்பார்களா ? அல்லது உள்ளே போவார்களா ? அப்படி என்பதை தளபதி விஜயை முதல்வர் இருக்கையில் அமர வைத்ததே காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி சார் தான் என்றும், அவரே தான் நமது தளபதியின் கையைப் பிடித்து 2029 ல் கூட்டிப் போய் உட்கார வைக்கப் போகிறார் என்றார்.

2025 ஆம் ஆண்டு கணித்ததை அப்பொழுது 2029 ல் இதுதான் நடக்கும் இதை நான் ஆணித்தனமாக சொல்கிறேன் என்றும் கண்டிப்பாக பிரதமர் ஆவார் என்றார்.

தமிழகத்தில் யார் ? முதல்வர் என்று கேள்விக்கு;

அதை அடுத்ததாக பார்க்கலாம் என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

 "எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்" ; தடையோட்டப் பயிற்சியுடன் கோவையில் கோலாகலமாகத் தொடங்கியது SSVM 5-வது ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாடு!

"எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்" ; தடையோட்டப் பயிற்சியுடன் கோவையில் கோலாகலமாகத் தொடங்கியது SSVM 5-வது ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாடு!

விண்வெளி வீரர் பிரசாந்த் நாயர், அபினவ் பிந்த்ரா பங்கேற்பு: மாணவர்களுடன் சவால்களை எதிர்கொள்ளும் அனுபவப் பயணம்!

 எதிர்காலத்தின் சவால்களை மாணவர்கள் மன உறுதியுடன் எதிர்கொள்ளும் வகையில், கோவை SSVM கல்வி நிறுவனங்கள் நடத்தும் 3 நாள் 'ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா' (Transforming India) 5-வது மாநாடு மாணவர்களுக்கான 'தடை ஓட்டப் பயிற்சியுடன்' (Obstacle Course) இன்று உற்சாகமாகத் தொடங்கியது.

உற்சாகமான தடையோட்டப் பயிற்சி:

"எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்" (Adapt to the Future) என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டு உள்ள இம்மாநாட்டின் முதல் நாளில், SSVM வேர்ல்ட் ஸ்கூல் மாணவர்கள் பங்கேற்ற 'ஸ்டூடண்ட் பர்ஸ்ட் ஆப்ஸ்டக்கிள் கோர்ஸ்' எனப்படும் சவாலான தடையோட்டப் பயிற்சி நடத்தப்பட்டது.

வெறும் சொற்பொழிவுகளுடன் தொடங்காமல், மாணவர்கள் தங்களது உடல் மற்றும் மன வலிமையைச் சோதிக்கும் வகையில் வளைந்து கொடுத்தும், கம்பிகளைப் பிடித்துத் தொங்கியும் (Monkey bar), தடைகளைத் தாண்டித் தங்களைச் சமன் செய்தும் இந்தப் பயிற்சியில் அசத்தினர்.

 ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொண்டு மாணவர்கள் முன்னேறிய இந்த நிகழ்வு, தைரியம் மற்றும் தன்னம்பிக்கையின் நேரடிப் பாடமாக அமைந்தது.

நிர்வாகக் குழுவினரும் பங்கேற்பு:

SSVM கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர். மணிமேகலை மோகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்த இந்த நிகழ்வில், அறங்காவலர் எஸ். மோகன்தாஸ், இயக்குனர் ஸ்ரீஷா மோகன்தாஸ், இயக்குனர் நிதின் ஜெய் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து தடையோட்டச் சவால்களில் பங்கேற்று ஊக்கமளித்தனர்.

இது குறித்து டாக்டர். மணிமேகலை மோகன் பேசுகையில் :-

 "குழந்தைகள் தங்களின் எல்லைகளைத் தாண்டிச் செயல்படுவதை அனுபவபூர்வமாக உணர வேண்டும் என்பதே இதன் நோக்கம். இன்று சவால்களை எப்படித் தாண்டுவது என்று குழந்தைகள் கற்றுக்கொண்டால், நாளை வாழ்க்கை தரும் சவால்களை அவர்கள் வெற்றிகரமாக எதிர்கொள்வார்கள்" எனத் தெரிவித்தார்.

கல்வி இயக்குனர் ஸ்ரீஷா மோகன்தாஸ் கூறுகையில் :-

"இது வெறும் தலைப்பு அல்ல; கடினமான சூழ்நிலைகளில் மன உறுதியோடு தொடர்ந்து முன்னேறும் தைரியத்தைக் கண்டறியும் வாய்ப்பு" என்றார்.

சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு:

செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் 1,800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ககன்யான் விண்வெளி வீரர் மற்றும் இந்தியப் படைப்பிரிவு அதிகாரி ஏர் கமாண்டோர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர்

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா

இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்

பிரபல பரதநாட்டியக் கலைஞர் மற்றும் நடன இயக்குநர் ருக்மணி விஜயகுமார்

ஆகிய சாதனையாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். விளையாட்டு, உடல் அசைவுகள், ஒழுக்கம் மற்றும் மன உறுதி ஆகியவற்றை மாணவர்கள் நேரடியாக அனுபவபூர்வமாக உணரும் வகையில் இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

திங்கள், 31 ஆகஸ்ட், 2026

கோவையில் ரூ.10 கோடி மதிப்பிலான 12.80 கிலோ போதைப்பொருள் அதிரடி பறிமுதல்: கேரளாவைச் சேர்ந்த 3 பேர் கைது!

கோவையில் ரூ.10 கோடி மதிப்பிலான 12.80 கிலோ போதைப்பொருள் அதிரடி பறிமுதல்: கேரளாவைச் சேர்ந்த 3 பேர் கைது!

காரின் கதவுகளில் பிரத்யேக ரகசிய அறை அமைத்து கடத்தல்: கேரள போலீசாரின் வரலாற்றுச் சாதனை மெகா வேட்டை

தமிழக எல்லைப் பகுதியான கோவையில் முகாமிட்டு, காரின் கதவுகளுக்குள் ரகசிய அறை அமைத்து கடத்த முயன்ற சுமார் ரூ.10 கோடி சர்வதேச சந்தை மதிப்புடைய 12.80 கிலோ ‘எம்.டி.எம்.ஏ.’  வீரிய ரக போதைப்பொருளைக் கேரள மாநில தனிப்படை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாகக் கேரளாவைச் சேர்ந்த முக்கிய கடத்தல் புள்ளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கேரள காவல் துறையின் வரலாற்றிலேயே ஒரே ஒரு சோதனையில் இவ்வளவு பெரிய அளவில் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் பிடிபட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது 97 கிராம் அளவிலான எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளுடன் சந்தேகத்திற்குரிய நபர்கள் பிடிபட்டனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரிலிருந்து பெரும் அளவில் வீரிய ரக போதைப்பொருள் கடத்தி வரப்பட்டு, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து விநியோகிக்கப்பட்டு வரும் அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து, கடத்தல் நெட்வொர்க்கின் வேர்களை அறுத்தெறிய ‘ஆபரேஷன் டூபான்’  மாநில நோடல் அதிகாரி பூட்டா விமலாதித்யா., திருச்சூர் சரக டி.ஐ.ஜி. டி.நாராயணன் மற்றும் மலப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆர்.விஸ்வநாத், உதவி காவல் கண்காணிப்பாளர் சைத்ரா தெரசா ஜான் ஆகிய உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் பிரிவான ‘டான்சாப்’  மற்றும் மஞ்சேரி காவல் நிலைய தனிப்படையினர் தீவிர ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, இந்த சர்வதேச கடத்தல் கும்பலின் முக்கிய நபர்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்து, அங்கிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கி வருவது உறுதி செய்யப்பட்டது.

தகவலறிந்த மஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.ஜி.திலீப் தலைமையிலான தனிப்படை போலீசார் கோவைக்கு விரைந்தனர். கோவையில் குறிப்பிட்ட தங்குமிடத்தை ரகசியமாக முற்றுகையிட்ட போலீசார், அங்கிருந்த 3 பேரை அதிரடியாக மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பந்தல்லூர், மாம்பாவளப்பில் பகுதியைச் சேர்ந்த ஜாபிர் அலி (வயது 32) மஞ்சேரி ஆனைக்கயம், கடவத்துவூட்டைச் சேர்ந்த ஷயீம் அக்பர் (வயது 21), வயநாடு மாவட்டம் மேப்பாடி, கரிம்பயில் பகுதியைச் சேர்ந்த முகம்மது சாஹில் (வயது 34) என்பது தெரியவந்தது.

அவர்கள் பயன்படுத்திய சொகுசு காரை போலீசார் மெட்டல் டிடெக்டர் மற்றும் பிரத்யேக கருவிகள் கொண்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது காரின் நான்கு கதவுகளின் உட்புற பேனல்களிலும்  மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட ரகசிய அறைகள் இருப்பது அம்பலமானது.

அந்த அறைகளுக்குள் 100 கிராம் முதல் 500 கிராம் வரை எடையுள்ள காற்றுப்புகாத பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நிலையில் மொத்தம் 12.80 கிலோ கிராம் எடை கொண்ட எம்.டி.எம்.ஏ. படிகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச கள்ளச்சந்தையில் ரூ.10 கோடிக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

நாக்பூரில் இவர்களுக்கு போதைப்பொருளை சப்ளை செய்த முக்கிய ஏஜெண்டுகள் யார்? கோவையிலும் கேரளாவிலும் இதனை வாங்கி விநியோகம் செய்யவிருந்த இடைத்தரகர்கள் மற்றும் நெட்வொர்க் தொடர்புகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேச போதைப் பொருட்களை  கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்யும் கும்பலை கேரள மாநில போலீசார் கோவையில் வந்து கைது செய்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

"இளம் பெண்களுக்கு இணையாக மேடையில் ஒய்யார நடை" ; கோவையில் சிந்தி சமூக பெண்களின் 'தீஜ் 2026' ஃபேஷன் ஷோ கலக்கல்!

"இளம் பெண்களுக்கு இணையாக மேடையில் ஒய்யார நடை" ; கோவையில் சிந்தி சமூக பெண்களின் 'தீஜ் 2026' ஃபேஷன் ஷோ கலக்கல்!

ரெட்ரோ டூ மெட்ரோ' தீமில் அசத்திய பாட்டிகள் & இளம் பெண்கள்: ஆர்.எஸ்.புரத்தில் உற்சாகமாகக் கொண்டாட்டம்!

​ கோவையில் நடைபெற்ற 'தீஜ் 2026' விழாவின் முக்கிய நிகழ்வாக அமைந்த ஃபேஷன் ஷோவில், 'ரெட்ரோ டூ மெட்ரோ' (Retro to Metro) எனும் தலைப்பில் இளம் பெண்களுக்கு இணையாக வயதான பெண்களும் மேடையில் ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

​சிந்தி சமூக பெண்களின் 'தீஜ் 2026' விழா:

தமிழகத்தில் பெண்களால் வரலட்சுமி விரதப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுவதைப் போல, சிந்தி சமூகப் பெண்களின் பாரம்பரிய சிறப்பு மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ‘தீஜ் 2026’ (Teej 2026) திருவிழா கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மிகவும் உற்சாகமாக நடைபெற்றது.

​இந்த விழாவில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிந்தி சமூகப் பெண்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

​'ரெட்ரோ டூ மெட்ரோ' ஃபேஷன் ஷோ கலக்கல்:

விழாவின் உச்சகட்ட அம்சமாக, சிந்தி சமூக பாரம்பரிய கலாச்சாரத்தைப் போற்றும் வகையிலும் பெண்களின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையிலும் 'ரெட்ரோ டூ மெட்ரோ' என்ற சிறப்பு ஃபேஷன் ஷோ நடைபெற்றது.

​இதில் பழங்கால ஆடை அலங்காரம், பாரம்பரிய அணிகலன்கள் மற்றும் ரெட்ரோ காலத் தோற்றத்தை வெளிப்படுத்திய ‘ரெட்ரோ சுற்றும்’ (Retro Round), இன்றைய நவீன பெண்களின் ஸ்டைல் மற்றும் தன்னம்பிக்கையை பறைசாற்றிய ‘மெட்ரோ சுற்றும்’ (Metro Round) பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

​வயது தடையில்லை என நிரூபித்த பாட்டிகள்:

இந்த ஆடை வடிவமைப்புக் கண்காட்சிப் போட்டியில், இளம் பெண்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், வயதான பெண்களும் மிகுந்த உற்சாகத்துடன் மேடையில் தோன்றி ஒய்யார நடை (Ramp Walk) நடந்து அசத்தினர்.

​"வயது என்பது தன்னம்பிக்கைக்கும் திறமைக்கும் ஒருபோதும் தடையில்லை" என்பதை உணர்த்தும் வகையில், அனைத்து வயதுப் பெண்களும் ஒரே மேடையில் ஒன்று கூடித் தங்களது திறமையை வெளிப்படுத்தியது இவ்விழாவின் மிக முக்கியச் சிறப்பம்சமாக அமைந்தது.

 "இறைவன் அருளால் தப்பினோம்" ; நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கிய சூலூர் விவசாயி லோகநாதன் நெகிழ்ச்சி வீடியோ!

"இறைவன் அருளால் தப்பினோம்" ; நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கிய சூலூர் விவசாயி லோகநாதன் நெகிழ்ச்சி வீடியோ!

 "இறைவன் அருளால் தப்பினோம்" ; நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கிய சூலூர் விவசாயி லோகநாதன் நெகிழ்ச்சி வீடியோ!

39 பேர் கொண்ட குழுவுடன் காத்மாண்டு திரும்புகிறார் : நாளை ஆகஸ்ட் 31 கோவை வருகை; குடும்பத்தினர் நிம்மதி!

​ நேபாளத்தில் நிலச் சரிவு மற்றும் ஏரி உடைப்பால் ஏற்பட்ட பேரழிவில் சிக்கி மாயமானதாகக் கருதப்பட்ட கோவையைச் சேர்ந்த 12 பேரில், சூலூரைச் சேர்ந்த விவசாயி லோகநாதன் உள்ளிட்ட 4 பேர் தங்களது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசிப் பாதுகாப்பாக இருப்பதாக வீடியோ வெளியிட்டு உள்ளது பெரும் நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள செங்கடம்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி லோகநாதன் (65), அவிநாசியில் இயங்கி வரும் 'அவிநாசி லிங்கேஸ்வரர் யாத்திரைக் குழு' மூலமாக நேபாளத்திற்கு கைலாச யாத்திரை மேற்கொண்டு இருந்தார்.

​கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கைலாஸ் மான்சரோவர் பாதையில் ஏற்பட்ட பயங்கர ஏரி உடைப்பு மற்றும் பெருவெள்ளப் பெருக்கின் போது, இவர்கள் குழுவில் சென்ற 39 பேரும் கைலாயம் மலைப் பகுதியில் பாதுகாப்பாக இருந்து உள்ளனர். இதனால் பேரழிவில் சிக்காமல் எந்தவிதப் பாதிப்புமின்றி அனைவரும் நலமுடன் தப்பி உள்ளனர்.

தற்போது லோகநாதன் உள்ளிட்ட 39 பேருக்கும் சீன அரசாங்கம் உதவி செய்து, மாற்றுப் பாதையின் வழியாக நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிற்கு அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.

​தான் பாதுகாப்பாக இருப்பதை லோகநாதன் தனது குடும்பத்தினருக்கு நேரடித் தொலைபேசி அழைப்பு மற்றும் வீடியோ மூலம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.

 மாயமானதாக அறிவிக்கப்பட்டவர் நலமுடன் உயிர் தப்பி மீண்டும் வருவது குறித்து அவரது குடும்பத்தினரும், செங்கடம்பாளையம் புதூர் கிராம மக்களும் மிகுந்த மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் இறைவனுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ள அவிநாசி யாத்திரைக் குழுவினர், நாளை ஆகஸ்ட் 31-ஆம் தேதி (திங்கள்கிழமை) விமானம் மூலமாகச் சொந்த ஊரான கோவைக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 "கிரியேட்டின் டப்பாவில் ரூ.லட்ச மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன்" ;  ஓணம் ஸ்பெஷல் 'ஆபரேஷன் தண்டர்' வேட்டையில் வளைத்துப்பிடித்த கலால் துறை!

"கிரியேட்டின் டப்பாவில் ரூ.லட்ச மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன்" ; ஓணம் ஸ்பெஷல் 'ஆபரேஷன் தண்டர்' வேட்டையில் வளைத்துப்பிடித்த கலால் துறை!

 "கிரியேட்டின் டப்பாவில் ரூ.லட்ச மதிப்பு உள்ள மெத்தம்பெட்டமைன்" ;  ஓணம் ஸ்பெஷல் 'ஆபரேஷன் தண்டர்' வேட்டையில் வளைத்துப்பிடித்த கலால் துறை!

பெங்களூரு-எர்ணாகுளம் ஏர்பஸ் பேருந்தில் அதிரடி சோதனை : திருச்சூர் வாலிபர் கோவை வாளையார் சோதனைச் சாவடியில் கைது!

​ பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட 'ஆபரேஷன் தண்டர்' (Operation Thunder) என்ற சிறப்பு கலால் வரி அதிரடி சோதனையின் போது, தமிழக-கேரள எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில் பல லட்ச ரூபாய் மதிப்பு உள்ள மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடத்தலில் ஈடுபட்ட வாலிபரும் கைது செய்யப்பட்டார்.

 ஓணம் பண்டிகைக் முன்னிட்டு தமிழக - கேரளா எல்லைப் பகுதிகளில் இரு மாநில காவல்துறையினர் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தலைத் தடுப்பதற்காகக் கலால் துறை சார்பில் 'ஆபரேஷன் தண்டர்' எனும் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனை நடத்தப்பட்டது.

​இதன் ஒரு பகுதியாக, கேரள எல்லைப் பகுதியான வாளையார் கலால் சோதனைச் சாவடியில் கலால் ஆய்வாளர் ஜிது கிரண் தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் நோக்கி வந்த ஏர் பஸ் தனியார் சொகுசுப் பேருந்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

 அப்பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவரின் உடமைகளைச் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட போது, அவர் உடற்பயிற்சி செய்பவர்கள் பயன்படுத்தும் 'கிரியேட்டின்' (Creatine) டப்பாவிற்குள் பல லட்ச ரூபாய் மதிப்பு உள்ள போதைப் பொருட்களைப் புத்திசாலித்தனமாக மறைத்து வைத்து இருந்தது அம்பலமானது.

​அவரிடம் இருந்து சுமார் 142 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 1 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

இதை அடுத்து, போதைப்பொருளைப் பார்சலாகக் கடத்தி வந்த திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் கடங்கோடு வெள்ளார்க்காடு அம்பலவட்டம் கரையைச் சேர்ந்த அய்யால கட்டில் தமாலு என்பவரின் மகன் ஜிதின் (35) என்பவரைக் கலால் துறையினர் உடனடியாகக் கைது செய்தனர்.

​கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து இந்த போதைப்பொருளை வாங்கி வந்து கேரளா மற்றும் எல்லை மாவட்டங்களில் விற்பனை செய்யத் திட்டமிட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் உள்ள முக்கிய நெட்வொர்க் குறித்துக் கலால் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதன், 26 ஆகஸ்ட், 2026

நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

 நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இருந்த 3 வேன்களில் நேபாளம் சென்ற 37 பேர் நிலைமை என்னவென்று தற்போது தெரியவில்லை என்று அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 நேபாளத்திற்கு சுற்றுலா சென்று, அங்கு ஏற்பட்டு உள்ள பெருவெள்ளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்து உள்ளார்.

திபெத் பகுதியில் இருந்து போட்டே கோஷி ஆறு, நேபாளத்தில் உள்ள ராசுவா, தாடிங், நுவாகோட் ஆகிய மாவட்டங்கள் வழியாக பாய்கிறது. அந்த ஆற்றில், உள்ளூர் நேரப்படி இன்று காலை 9 மணிக்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளத்தால் கரையோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், பல நீர்மின் உற்பத்தி நிலையங்கள் சேதம் அடைந்து உள்ளன.

இதை அடுத்து, நேபாள பிரதமர் பாலேந்திர ஷா அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டு உள்ளார். அவருடைய உத்தரவுப்படி, நேபாள ராணுவம், ஆயுத காவல் படை, நேபாள காவல் துறை ஆகியவை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் களமிறங்கி உள்ளன. ராசுவா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, 5 மருத்துவர்கள் உள்பட 16 பேர் கொண்ட மருத்துவக் குழுவினரும் விரைந்து உள்ளனர்.

இந்த திடீர் வெள்ளத்தால் நேபாளத்திற்கு சுற்றுலா வந்த பலர் மாயமாகி இருப்பதாக அந்நாட்டு சுற்றுலா வாரியம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "291 வெளிநாட்டினர், 93 நேபாள நாட்டினர் என மொத்தம் 384 பேர் மாயமாகி உள்ளனர்.

வெளிநாடுகளை சேர்ந்தவர்களில், 105 பேர் இந்தியர்கள், 37 பேர் வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆவர். மற்றவர்கள், அமெரிக்கா, மலேசியா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள்

இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 57 பேர் இந்த பெருவெள்ளத்தில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இவர்கள் அனைவரும், கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் 'சூப்பர் யாத்திரை ஏஜென்சி' மூலம் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் திருச்சி, சென்னை, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், பாண்டிச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர், ஓசூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று ஏஜென்சி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 23 ஆம் தேதி மூன்று வேன்கள் மூலம் அவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். நேபாளம் - சீனா எல்லை அருகே சென்று கொண்டு இருந்த போது வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வேன்களும் சிக்கி உள்ளன.

அதில் ஒரு வேனில் பயணம் செய்த 20 பேர் தப்பித்து கரை ஒதுங்கி உள்ளனர். மீதமுள்ள இரண்டு வேன்களில் பயணம் செய்த 37 பேர் நிலைமை என்னவென்று தற்போது வரை தெரியவில்லை. 15 பேர், அங்கு உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறனர் என்று நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

20 பேர் பத்திரமாக உள்ளனர்

இந்நிலையில், நேபாளத்திற்கு சென்றவர்களில் 20 பேர் பத்திரமாக இருப்பதாகவும், மற்றவர்களை தேடி வருவதாகவும் அங்கு இருந்து தகவல் வந்து இருப்பதாக டிராவல்ஸ் உரிமையாளர் சாதிக் அலி தெரிவித்தார்.

இதேபோல், நேபாளத்திற்கு சென்றவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருவதாக வட்டாட்சியர் பூங்கொடி தெரிவித்து உள்ளார்.

கட்டணமில்லா உதவி எண்கள் அறிவிப்பு

இதைத்தொடர்ந்து, நேபாள சுற்றுலா வாரியம், கட்டணமில்லா உதவி எண்களை அறிவித்து உள்ளது. உதவிக்கு 1234 அல்லது ஹாட்லைன் தொலைபேசி எண் 1144 அல்லது சுற்றுலா காவல் துறை எண் 98512 89445 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு உதவி எண்கள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நல ஆணையரகமும் 24 மணி நேர உதவி எண்களை அறிவித்து உள்ளது.

கட்டணமில்லா தொலைபேசி எண்கள்

இந்தியா: 1800 309 3793

வெளிநாட்டில் இருந்து தொடர்புகொள்ள:

+91 8069009901 / 08069009901, மிஸ்டு கால் : +91 8069009900 / 08069009900, தமிழ்நாடு இல்லம் புதுடெல்லி- 92895 16712 (கட்டுப்பாட்டு அறை) ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளன.

மத்திய அரசு அளித்து உள்ள உதவி எண்கள்

+977 985 131 6807, +977 970 910 7500

தமிழர்களை மீட்க நடவடிக்கை- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

இந்நிலையில் நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், 

"நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.


மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டு உள்ளார்.

 "தமிழர்களும் சேர்ந்து கொண்டாடுவது நெகிழ்ச்சி அளிக்கிறது" ; கோவை, சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் விமரிசையான ஓணம் வழிபாடு!

"தமிழர்களும் சேர்ந்து கொண்டாடுவது நெகிழ்ச்சி அளிக்கிறது" ; கோவை, சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் விமரிசையான ஓணம் வழிபாடு!

 "தமிழர்களும் சேர்ந்து கொண்டாடுவது நெகிழ்ச்சி அளிக்கிறது" ; கோவை, சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் விமரிசையான ஓணம் வழிபாடு!

அத்தப்பூக் கோலமிட்டு சிறப்புப் பூஜை: ஓண சத்யா விருந்துடன் கோவையில் களைகட்டிய ஓணம் பண்டிகை!

  கேரளாவின் பாரம்பரிய மற்றும் முதன்மைப் பண்டிகையான ஓணம் திருநாள் இன்று நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை சித்தாபுதூர் அருள்மிகு ஐயப்பன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தமிழக - கேரளா எல்லையான கோவையில் ஏராளமான மலையாள மொழியைப் பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். ஓணம் திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலையிலேயே வீடுகளின் முன்பு வண்ணமயமான அத்தப்பூக் கோலமிட்ட மக்கள், புத்தாடை அணிந்து குடும்பத்துடன் சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலுக்கு வருகை தந்தனர்.

கோயிலில் ஓணம் பண்டிகையை ஒட்டி சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகங்களும் அலங்கார பூஜைகளும் நடைபெற்றன. அலங்கார தோரணங்களால் மிளிர்ந்த கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சாமி தரிசனம் செய்த பெண் பக்தர் ஒருவர் கூறுகையில்,

 "ஓணம் பண்டிகை நாளில் காலையிலேயே பூக்கோலமிட்டு ஐயப்பன் கோயிலுக்கு வந்து விடுவோம். இங்கு உள்ள மக்களைக் காணும் போது அளவற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. பிற்பகலில் அனைத்து வகையான இனிப்புகள், கார வகைகள் மற்றும் காய்கறி பொரியல்களுடன் 'ஓண சத்யா' விருந்து தயார் செய்து, உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் பகிர்ந்து உண்போம். தொடர்ந்து முன்னோர்களின் வீடுகளுக்குச் சென்று வாழ்த்துப் பெறுவோம்" என்றார்.

கேரளாவில் இருந்து கோவைக்கு முதன் முறையாக வந்து உள்ள குடும்பத்தினர் கூறுகையில்,

 "கேரளாவில் அனைவரும் மலையாள மக்கள் மட்டுமே கொண்டாடுவோம். ஆனால் கோவையில் தமிழர்களும் இணைந்து இந்த ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவதும், கோயிலில் இவ்வளவு திரளான பக்தர்கள் கூடியிருப்பதும் எங்களுக்கு மிகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இங்கு அளிக்கப்படும் ஆதரவு மிகவும் சிறப்பாக உள்ளது" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

கோயிலில் சாமி தரிசனம் செய்த பின், மாலையில் குடும்பத்துடன் ஒன்று கூடிப் பாட்டு பாடி, பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி ஓணம் பண்டிகையைக் கோவையில் உள்ள மலையாள மக்கள் வெகுசிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

கோவையில் ஓணம் வைப்... ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செண்டை மேளத்துடன் 'பகீர்' கொண்டாட்டம்!

கோவையில் ஓணம் வைப்... ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செண்டை மேளத்துடன் 'பகீர்' கொண்டாட்டம்!

 கோவையில் ஓணம் வைப்... ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செண்டை மேளத்துடன்  கொண்டாட்டம்!

நவஇந்தியாவில் அத்தப்பூக்கோலமிட்டு மாஸ் காட்டிய மாணவ-மாணவிகள்: டிஜே இசையில் கலகலத்த வளாகம்!

மலையாள மக்களின் மிக முக்கியப் பண்டிகையான ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்கள் மிகக் கோலாகலமாகவும் உற்சாகத்துடனும் நடைபெற்றது. 

பாரம்பரிய ஆடையில் பிரம்மாண்ட அத்தப்பூக்கோலம்:

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஓணம் பண்டிகை நிகழ்ச்சியில், மாணவ-மாணவிகள் அனைவரும் கேரள பாரம்பரிய உடையான முண்டு, செட் புடவைகளை அணிந்து வந்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர். கல்லூரி முகப்பில் அழகிய வண்ண மலர்களால் பிரம்மாண்ட அத்தப்பூக்கோலமிட்டு மகாபலி சக்கரவர்த்தியைத் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

செண்டை மேளத்துடன் மகாபலி வருகை – கேரள நடனங்கள்:

தொடர்ந்து, செண்டை மேளம் அதிரடியாக முழங்க, மகாபலி மன்னன் வேடமணிந்த நபருடன் இணைந்து மாணவ-மாணவிகள் உற்சாகமாக நடனமாடினர். அத்துடன் கேரளாவின் பாரம்பரிய நடனங்களை ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

டிஜே இசையில் Full Vibe கொண்டாட்டம்:

இதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் சிறப்பு நடன நிகழ்ச்சிகளும், பிரம்மாண்ட டிஜே (DJ) இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. டிஜே இசையின் அதிரடி பீட்ஸிற்கு ஏற்ப அனைத்து மாணவ-மாணவிகளும் ஒன்று கூடி 'Full Vibe'-இல் உற்சாகத்துடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

கல்லூரி வளாகம் முழுவதுமே திருவிழாக் கோலம் பூண்டு, மாணவர்களின் ஆரவாரத்தில் கலகலத்துப் போனது.

"ஓணம் விழாவில் உத்வேக நடனம்" - கோவையில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய வானதி சீனிவாசன்!

"ஓணம் விழாவில் உத்வேக நடனம்" - கோவையில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய வானதி சீனிவாசன்!

 "ஓணம் விழாவில் உத்வேக நடனம்" - கோவையில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய வானதி சீனிவாசன்!

பா.ஜ.க நிர்வாகி இல்லத்தில் களைகட்டிய கொண்டாட்டம்: தொண்டர்களுடன் இணைந்து ஆடி மகிழ்ந்த முன்னாள் எம்.எல்.ஏ!

​ ஓணம் திருநாளை முன்னிட்டு கோவை வடவள்ளியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில், பா.ஜ.க தேசிய மகளிர் அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு, பாரம்பரிய நடனமாடி ஓணம் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

கோவை மாநகர, மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர், வடவள்ளிப் பகுதியில் உள்ள கட்சி நிர்வாகி ராஜ பிந்து இல்லத்தில் ஓணம் பண்டிகை விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

​இந்த விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வருகை தந்தார்.

விழாவில் அமைக்கப்பட்டு இருந்த அழகிய அத்தப்பூக் கோலத்தைப் பார்வையிட்ட அவர், அங்கு இருந்த பெண்களுடனும் பா.ஜ.க தொண்டர்களுடனும் இணைந்து ஓணம் திருநாளின் பாரம்பரிய நடனங்களை ஆடி மகிழ்ந்தார்.

​தொடர்ந்து அங்கு இருந்தவர்களுக்கு ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், தமிழகத்திலும் கோவையிலும் வாழும் மலையாளி மக்களின் சகோதரத்துவத்தையும் பண்பாட்டையும் போற்றும் வகையில் இந்த விழா அமைந்து இருப்பதாகப் பாராட்டு தெரிவித்தார்.

​முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தொண்டர்களுடன் இணைந்து நடனமாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

 "பேரல் பேரலாக தார், டீசல் கொள்ளை" ; ஆயக்குடி போலீஸாரின் அலட்சியத்தால் திண்டுக்கல்லில் துணிச்சலாக நடக்கும் பகல் கொள்ளை!

"பேரல் பேரலாக தார், டீசல் கொள்ளை" ; ஆயக்குடி போலீஸாரின் அலட்சியத்தால் திண்டுக்கல்லில் துணிச்சலாக நடக்கும் பகல் கொள்ளை!

 "பேரல் பேரலாக தார், டீசல் கொள்ளை" ; ஆயக்குடி போலீஸாரின் அலட்சியத்தால் திண்டுக்கல்லில் துணிச்சலாக நடக்கும் பகல் கொள்ளை!

லாரி டிரைவர்களுடன் கைகோர்த்து ரூ.12,500-க்கு விற்பனை: முதல்வர் & மத்திய அரசுக்கு விடுக்கப்படும் புகார் எச்சரிக்கை!

 திண்டுக்கல் மாவட்டம், பழனி மற்றும் ஆயக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளை மையமாக வைத்து, லாரிகளில் கொண்டு செல்லப்படும் தார் மற்றும் டீசலைப் பேரல் பேரலாகத் திருடும் கும்பலின் சட்டவிரோத நெட்வொர்க் அம்பலமாகி உள்ளது.

குடோன் அமைத்து நூதன திருட்டு:

கொச்சியில் இருந்து மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களின் தார் மற்றும் டீசல் கொண்டு செல்லப்படுகின்றன.

இவற்றைக் குறிவைத்து, ஆயக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த மாபெரும் கடத்தல் நெட்வொர்க்கை நடத்தி வருகின்றனர்.

இதற்காகக் கலிக்க நாயக்கன்பட்டி வேல்ஸ் கார்டன், அமரபூண்டி ரோடு ஹயக்ரீவர் மெட்ரிக் பள்ளி அருகே தனி இடம் வாங்கி, குடோன் செட்டப் அமைத்து பிக்கப் வேன்கள் மூலம் திருட்டுப் பொருட்களைப் பதுக்கி வைத்து விநியோகிக்கின்றனர்.

ரூ.8,500-க்கு வாங்கி ரூ.12,500-க்கு விற்பனை:

நெடுஞ்சாலையில் லாரிகள் எந்த நேரத்தில் வரும் என்ற தகவல்களை முன்கூட்டியே அறிந்து, சில லாரி ஓட்டுநர்களின் உதவியுடன் தார் மற்றும் டீசலைப் பேரல்களில் உறிஞ்சி எடுக்கின்றனர்.

ஒரு பேரல் தாரை ஓட்டுநர்களிடம் ₹8,500-க்கு கமிஷன் கொடுத்து வாங்கி, வெளிச்சந்தையில் ₹12,500-க்கு விற்று நாள்தோறும் பல லட்சம் ரூபாய் முறைகேடான லாபம் ஈட்டி வருகின்றனர். தினமும் 30 முதல் 40 லாரிகளில் இந்தத் திருட்டு நடப்பதாகத் தெரியவந்து உள்ளது.

ஆயக்குடி போலீஸ் மீது குற்றச்சாட்டு:

பொதுமக்களும் தன்னார்வலர்களும் இது குறித்துப் புகாரளித்தால், "இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது ? உங்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?" என்று ஆயக்குடி போலீஸார் சாக்குப்போக்கு சொல்லி வழக்குகளைத் தட்டிக்கழிப்பதாக அப்பகுதி மக்கள் கொந்தளிக்கின்றனர். மாதாந்திர 'மாமூல்' பேரம் காரணமாகவே போலீஸார் கண்மூடி அமைதி காப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

முதலமைச்சருக்குப் புகார் அனுப்ப எச்சரிக்கை:

தேசிய அளவில் விநியோகிக்கப்படும் அரசுக்குச் சொந்தமான தார் மற்றும் டீசலைக் கொள்ளை அடிக்கும் இந்தச் சட்டவிரோத கும்பல் மீது மாவட்டக் காவல்துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், இச்சம்பவம் குறித்துத் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு நேரடியாகப் புகார் அனுப்பப்படும் எனத் தன்னார்வலர்களும் சமூக ஆர்வலர்களும் எச்சரித்து உள்ளனர்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

 "கேரளா பேருந்தின் ஏணியில் தொங்கியபடி ஆபத்தான பயணம்!" - கோவை - பாலக்காடு சாலையில் இளைஞரின் சாகசம் : வீடியோ வைரல்!

"கேரளா பேருந்தின் ஏணியில் தொங்கியபடி ஆபத்தான பயணம்!" - கோவை - பாலக்காடு சாலையில் இளைஞரின் சாகசம் : வீடியோ வைரல்!

 "கேரளா பேருந்தின் ஏணியில் தொங்கியபடி ஆபத்தான பயணம்!" - கோவை - பாலக்காடு சாலையில் இளைஞரின் சாகசம் : வீடியோ வைரல்!

​ தமிழக - கேரளா எல்லையான கோவை - பாலக்காடு சாலை கக்கசாவடி பகுதியில், கேரளா மாநில அரசுப் பேருந்தின் பின்புற ஏணியில் இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் நூற்றுக் கணக்கான பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், க.க.சாவடி சோதனைச் சாவடி எல்லைப் பகுதியில் கேரளா மாநில அரசுப் பேருந்து (KSRTC) ஒன்று வந்து கொண்டு இருந்தது. ​அப்போது, அந்தப் பேருந்தின் பின்புறம் ஊழியர்கள் ஏறுவதற்காக அமைக்கப்பட்டு இருக்கும் ஏணியில், இளைஞர் ஒருவர் பிடிமானம் இல்லாமல் நின்று கொண்டு மிகவும் ஆபத்தான முறையில் பயணித்து உள்ளார்.

பேருந்தின் பின்னால் வந்த வாகன ஓட்டிகள், இந்த ஆபத்தான பயணத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அதனைத் தங்கள் செல்போனில் படம் பிடித்து உள்ளனர்.

 தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

​சற்று நிலை தடுமாறினாலும் அந்த இளைஞரின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால், ஓடும் பேருந்துகளில் இதுபோன்ற ஆபத்தான சாகசப் பயணங்களில் ஈடுபடும் நபர்கள் மீது போலீஸார் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எல்லைக் காவல் சாவடியில் ஆய்வுப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

 "ஒடிசாவில் இருந்து பேருந்தில் வந்த கஞ்சா சாக்லேட்டுகள்" ; கோவையில் வடமாநில ஆசாமிகள் கைது : போலீஸ் அதிரடி!

"ஒடிசாவில் இருந்து பேருந்தில் வந்த கஞ்சா சாக்லேட்டுகள்" ; கோவையில் வடமாநில ஆசாமிகள் கைது : போலீஸ் அதிரடி!

 "ஒடிசாவில் இருந்து பேருந்தில் வந்த கஞ்சா சாக்லேட்டுகள்" ; கோவையில் வடமாநில ஆசாமிகள் கைது : போலீஸ் அதிரடி!

3.170 கிலோ கஞ்சா மற்றும் 1 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்!

 கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்களின் பயன்பாடு மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில், கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளைப் பறிமுதல் செய்த கருமத்தம்பட்டி போலீஸார், ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் உட்பட 3 பேரைக் கைது செய்தனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் K. ரெட்டி, உத்தரவின் பேரில், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

​தன் தொடர்ச்சியாக, கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரிச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா பயன்படுத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது ராகேஷ் (22) என்பவரிடம் நடத்திய சோதனையில் 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ராகேஷிடம் நடத்திய விசாரணையில், கரிச்சிபாளையம் பகுதியில் பாதுகாவலராகப் பணியாற்றிய போது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முன்னா சௌத்ரி என்பவரிடம் கஞ்சா வாங்கியது தெரியவந்தது.

​இதனைத் தொடர்ந்து, முன்னா சௌத்ரியுடன் ஒரே அறையில் தங்கி இருந்த ஒடிசாவைச் சேர்ந்த லிபுன் நாக் (29) என்பவரைப் பிடித்துச் சோதனையிட்டதில், அவரிடம் இருந்து 1.150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சொந்த ஊரான ஒடிசாவிற்குச் சென்று திரும்பிய முன்னா சௌத்ரி, இக்கஞ்சாவைத் தன்னிடம் கொடுத்துச் சென்றதாக லிபுன் நாக் தெரிவித்தார்.

உடனடியாகச் சைபர் கிரைம் தொழில்நுட்ப உதவியுடன் முன்னா சௌத்ரியின் இருப்பிடத்தைக் போலீஸார் கண்காணித்தனர். ஒடிசாவில் இருந்து கோவை வழியாகத் திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டு இருந்த தனியார் பேருந்தை மடக்கிச் சோதனையிட்டனர்.

​அப்போது பேருந்தில் பயணித்த முன்னா சௌத்ரியைப் (27) பிடித்துச் சோதனையிட்ட போது, அவரது பையில் இருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் 1 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் மொத்தம் 3.170 கிலோ கஞ்சா மற்றும் 1 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கில் தொடர்புடைய 3 நபர்களும் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என மாவட்ட காவல்துறை எச்சரித்து உள்ளது.

சனி, 22 ஆகஸ்ட், 2026

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் உற்சாகத்துடன் ஓணம் விழா : அத்தப்பூகோலம், செண்டை மேளத்துடன் புல்லட்டில் வந்த மகாபலி!

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் உற்சாகத்துடன் ஓணம் விழா : அத்தப்பூகோலம், செண்டை மேளத்துடன் புல்லட்டில் வந்த மகாபலி!

 கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் உற்சாகத்துடன் ஓணம் விழா : அத்தப்பூகோலம், செண்டை மேளத்துடன் புல்லட்டில் வந்த மகாபலி!

கேரள பாரம்பரிய ஆடையில் மாணவ-மாணவிகள் கலக்கல்; சிலம்பம், சுருள்வாள் வீசித் வீரக்கலை சாகசங்கள்!

கோவை, துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா கல்லூரி வளாகத்தையே அதிரவைக்கும் வகையில் விமரிசையாகவும் கொண்டாடப்பட்டது. 

ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த ஓணம் விழாவிற்குற்றக் கல்லூரி முதல்வர் முனைவர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கி, விழாவினை முறைப்படி தொடங்கி வைத்தார் [cite: கல்லூரி முதல்வர் முனைவர் சவுந்தர்ராஜன் தலைமை வகித்த விழா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். விழாவை முன்னிட்டு, கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் கேரள பாரம்பரிய முறையிலான ஆடை அணிகலன்களை அணிந்து வந்து கல்லூரி வளாகத்திற்கு ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பொலிவூட்டினர்.

​கல்லூரி முன்றிலில் வண்ணமயமான பூக்களால் பிரம்மாண்ட அத்தப்பூகோலம் வரைந்து அசத்தினர். 

இதைதொடர்ந்து, அதிரடி செண்டை மேள முழங்க, மகாபலி சக்கரவர்த்தி வேடமணிந்த நபரைப் கம்பீரமாக புல்லட் வாகனத்தில் கல்லூரி வளாகத்திற்குள் அழைத்து வந்த காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகளின் அதிரடி இசை நிகழ்ச்சியும், கண்கள் கவரும் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மேலும், கேரள பாரம்பரியத்திற்கு மத்தியில் தமிழர்களின் வீரம் செறிந்த பாரம்பரிய தற்காப்புக் கலைகளான வேல், ஈட்டி, சிலம்பக்கம்பு, வாள், கத்தி, சுருள் வாள் மற்றும் மான் கொம்பு வீச்சு உள்ளிட்ட சாகசங்களை மாணவ-மாணவிகள் தத்ரூபமாகச் செய்து காட்டி பார்வையாளர்களைச் சிலிர்க்க வைத்தனர்.

​கல்லூரி வளாகமே ஆட்டம் பாட்டத்துடன் கலகலத்துப் போக, ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்கள் மிகக் கோலாகலமாக நிறைவடைந்தன.

வியாழன், 20 ஆகஸ்ட், 2026

கூகுள் AI உலக அளவிலான ஆராய்ச்சி போட்டியில் ரூ.24 லட்சம் வென்று சாதித்த மாணவர்கள் ; நேரில் அழைத்து வாழ்த்திய அண்ணாமலை !!!

கூகுள் AI உலக அளவிலான ஆராய்ச்சி போட்டியில் ரூ.24 லட்சம் வென்று சாதித்த மாணவர்கள் ; நேரில் அழைத்து வாழ்த்திய அண்ணாமலை !!!

 கூகுள் AI உலக அளவிலான ஆராய்ச்சி போட்டியில் ரூ.24 லட்சம் வென்று சாதித்த மாணவர்கள் ; நேரில் அழைத்து வாழ்த்திய அண்ணாமலை !!!

அமெரிக்காவில் உள்ள கூகுள் டீப்மைண்ட் – கேகிள் உலகளாவிய போட்டியில் முதலிடம் பெற்று 24 லட்சம் பரிசு வென்ற கோவையைச் சேர்ந்த ஏ ஐ ஆராய்ச்சியாளர் சென்னை ஐ ஐ டி மாணவர் அர்ஜுன் திலக் மற்றும் இணை ஆசிரியர் ராம்குமார் ஆகியோரை வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனரும் முன்னாள் ஐ பி எஸ் அதிகாரியுமான அண்ணாமலை தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவிற்கு ஏஐ துறையில் மேலும் பல உலகத் தரமான பெருமைகளை கொண்டு வர வேண்டும் என்று ஊக்கமளித்து, மதிப்புமிக்க ஆலோசனைகளையும் வழங்கினார்.   

லண்டனை தலைமையிடமாகக் கொண்ட, சென்னையில் இயங்கி வரும் ஈராஸ் இன்னோவேஷன் நிறுவனத்தின் ஏஐ ஆராய்ச்சியாளரும், ஐஐடி சென்னை மாணவருமான அர்ஜுன் திலக் மற்றும் ஈராஸ் இன்னோவேஷன் ஏஐ ஆராய்ச்சியாளர் ராம்குமார் ஆகியோர் உருவாக்கிய கேஜ் என்ற செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மதிப்பீட்டு கருவி, கூகுள் டீப் மைண்ட் ஏஐ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் காகுள் இணைந்து நடத்திய உலகளாவிய ஏஐ ஆராய்ச்சி ஹேக்கத்தானில், உலகம் முழுவதும் வழங்கப்பட்ட நான்கு கிராண்ட் பிரைஸ் விருதுகளில் ஒன்றைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்காக அவர்களுக்கு அமெரிக்க டாலர் 25,000 (சுமார் ரூ.24 லட்சம்) பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

ஏஜிஐ-ஐ நோக்கிய முன்னேற்றத்தை அளவிடுதல் : அறிவாற்றல் திறன்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ஹேக்கத்தானை உலகின் மிகப்பெரிய ஏஐ ஆராய்ச்சி நிறுவனமான கூகுல் டீப் மைண்ட், மற்றும் போட்டித் தளமான காகிள் மூலம் நடத்தியது. இதில் உலகம் முழுவதும் இருந்து 192 நாடுகளைச் சேர்ந்த 7,654 போட்டியாளர்கள் மற்றும் 1,063 அணிகளும் பங்கேற்றன. மொத்தம் 2 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1.9 கோடி) பரிசுத் தொகைக்காக போட்டியிட்டனர். இதனை 20 நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

மாணவர் அர்ஜின் திலக்கின் கண்டுபிடிப்பான கேஜ் என்ற இந்த மதிப்பீட்டு முறை, ஒரு ஏஐ மாடலுக்கு "தனக்குத் தெரியாததைத் தெரிந்துகொள்ளும் திறன் உள்ளதா? அதற்கேற்ப மனித உதவியை நாடுகிறதா?" என்பதை சோதிக்கிறது.

இந்த நிலையில் மாணவரின் சாதனைகளைக் கேள்விப்பட்டு வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனரும் முன்னாள் ஐ பி எஸ் அதிகாரியுமான அண்ணாமலை தனது இல்லத்தில் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். சுமார் ஒரு மணி நேரம், அவர்கள் உருவாக்கிய ஏஐ பென்ச்மார்க் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் கேட்டறிந்து, மடிக்கணினியில் அதன் தொழில்நுட்ப செயல்முறைகளையும் பொறுமையாகக் கேட்டு புரிந்துகொண்டார். இளைஞர்களின் சாதனையை மனதாரப் பாராட்டிய அண்ணாமலை, இந்தியாவிற்கு ஏஐ துறையில் மேலும் பல உலகத் தரமான பெருமைகளை கொண்டு வர வேண்டும் என்று ஊக்கமளித்து, மதிப்புமிக்க ஆலோசனைகளையும் வழங்கினார்.   


இந்த ஆராய்ச்சி ஐஐடி பாட்னாவில் நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாட்டிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

கோவையில் 160 அடி நீளத் தேசியக் கொடியுடன் பா.ஜ.க பேரணி: 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆரவாரம்!

கோவையில் 160 அடி நீளத் தேசியக் கொடியுடன் பா.ஜ.க பேரணி: 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆரவாரம்!

 கோவையில் 160 அடி நீளத் தேசியக் கொடியுடன் பா.ஜ.க பேரணி: 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆரவாரம்!

நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோவை சாய்பாபா காலனி பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் 160 அடி நீளமுள்ள பிரம்மாண்ட தேசியக் கொடியை ஏந்தி 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற  பேரணி நடைபெற்றது. 

நீதிமன்ற அனுமதியுடன் நடந்த பிரம்மாண்ட பேரணி:

நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேசப்பற்றையும் தேசியக் கொடியின் பெருமையையும் வலியுறுத்தும் வகையில் பா.ஜ.க சார்பில் இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக இந்தப் பேரணிக்குக் கோவை மாநகரக் காவல் துறை தடை விதித்து இருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி சட்டப் போராட்டம் நடத்தி அனுமதி உத்தரவைப் பெற்ற பின்னரே பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

160 அடி தேசியக் கொடியுடன் அணிவகுத்த தொண்டர்கள்:

சாய்பாபா காலனி பகுதியில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியில், சுமார் 160 அடி நீளமுள்ள பிரம்மாண்டமான தேசியக் கொடியைக் கைகளில் ஏந்தியபடி, பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்துகொண்டனர்.

பேரணியில் பங்கேற்ற அனைவரும் 'பாரத் மாதா கி ஜே' போன்ற உணர்ச்சிமிக்க நாட்டுப்பற்று முழக்கங்களை அதிரடியாக எழுப்பியவாறு  பேரணியில் பங்கேற்றவர்கள் நீண்ட தேசியக் கொடியை கைகளில் பிடித்தபடி, நாட்டுப்பற்று முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர், கண்ணைக் கவரும் வகையில் அணிவகுத்துச் சென்றனர்.

சிந்தாமணியில் நிறைவு - பலத்த போலிஸ் பாதுகாப்பு:

சாய்பாபா காலனியில் துவங்கிய இந்த  பேரணி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வடகோவை சிந்தாமணி பகுதியில் நிறைவடைந்தது. சாலை முழுவதும் 160 அடி நீளக் கொடியுடன் ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்ற காட்சி அப்பகுதி பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் பெரிதும் கவர்ந்தது.

பேரணி நடைபெற்ற சாய்பாபா காலனி முதல் வடகோவை சிந்தாமணி வரையிலான வழிநெடுகிலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

சனி, 15 ஆகஸ்ட், 2026

ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி - தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேச்சு !!!

ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி - தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேச்சு !!!

 ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி - தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேச்சு !!!

நாட்டின் 80 வது சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லி செங்கோட்டையில் 13 வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இந்திய நாட்டின் 80 வது சுதந்திர தின விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சுதந்திர விழா கோலாகலமாக நடைபெற்றது. 

2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தை முன்னெடுத்துச் செல்வதில் இளைஞர்களின் பங்களிப்பை கொண்டாடும் வகையிலும் இந்தாண்டு சுதந்திர தின விழா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

செங்கோட்டைக்கு வருகைத்தந்த பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். அதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றார்.

தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றி மரியாதை செலுத்தினார். முன்னதாக வந்தே மாதரம் பாடத்தில் 150 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக முதன் முறையாக சுதந்திர தின விழாவில் வந்தே மாதரம் பாடம் இசைக்கப்பட்டது.

கொடி ஏற்றத்தைத் தொடர்ந்து தேசியக் கீதம் இசைக்கப்பட்டு, இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் மூலம் தேசியக்கொடி பறக்க மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், 2,500 என்.சி.சி உறுப்பினர்கள், எனது பாரத் தன்னார்வலர்கள் மற்றும் 5,000 மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக வந்தே மாதரம் பாடப்பட்டு, தேசிய கீதம் பாடப்பாட்டது.

சுதந்திர தின விழாவில் உரையில் பிரதமர் மோடி, ஐந்து புதிய அணுமின் உலைகள், ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி, போட்டித் தேர்வு இளைஞர்கள் இலவச ஆன்லைன் பயிற்சி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இன்று, ஒவ்வொரு இதயமும் 'வந்தே மாதரம்' எனும் தாளத்திற்கு ஏற்பத் துடிக்கிறது. இன்று, ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி உள்ளது. ஒவ்வொருவருக்குள்ளும் மூவர்ணக் கொடி உள்ளது. இந்தச் சுதந்திர தினத்தன்று, அனைத்துச் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். சுதந்திரத்திற்குப் பிறகு, செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து 'வந்தே மாதரம்' முழக்கம் எதிரொலித்த தருணம். இன்று இந்த விழாவில் கலந்து கொண்டு உள்ள அனைவருக்கும் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்.

2047-ம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற பெரும் கனவை இந்தியா கொண்டு உள்ளது. அந்த முயற்சியில் நாம் உறுதியுடன் இருக்கும். இது நமது துணிச்சலின் அடையாளமாக வெளிப்படுகிறது.

சமீபத்தில், நாட்டின் சில பகுதிகள் வெள்ளம் மற்றும் நிலச் சரிவுகளால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அவர்களின் துயரத்தில் நாங்கள் ஆழ்ந்த அனுதாபம் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன். நாங்களும் ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்குத் துணையாக நிற்கிறோம்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளில், பாதுகாப்புத் துறை உற்பத்தி நான்கு மடங்காகவும், கதர் மற்றும் கிராமத் தொழில் உற்பத்தி ஐந்து மடங்காகவும், மின்னணு சாதன உற்பத்தி ஏழு மடங்காகவும் அதிகரித்து உள்ளன. அலைபேசி உற்பத்தி 33 சதவீதமும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 100 சதவீதமும் அதிகரித்து உள்ளன. சிறிய கனவுகள் இனி போதுமானதாக இருக்காது. நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும்.

ஏனெனில், பெரிய கனவுகள் நமது சிந்தனையை விரிவுபடுத்துவதோடு, நமது தொலைநோக்குப் பார்வையின் எல்லைகளையும் அகலமாக்குகின்றன. நமது உறுதிப்பாடு அசைக்க முடியாததாக இருக்க வேண்டும். அத்தகைய உறுதியான மனநிலை இருக்கும் போது, இடர்பாடுகள் மற்றும் பேரிடர்களுக்கு மத்தியிலும் கூட முன்னேற்றத்திற்கான பாதையை வகுக்கும் ஆற்றல் இயல்பாகவே உருவாகிறது.

கடந்த 12 ஆண்டுகளில் பலத்தரப்பட்ட மக்கள், நாட்டை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல அசைக்க முடியாத உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் சாத்தியமான அனைத்து வழிகளிலும் பாடுபட்டு உள்ளனர். இத்தகைய முயற்சிகளை நான் மரியாதையுடன் அங்கீகரிக்கிறேன்.

நாம் சுயசார்பு கொண்டவர்களாக மாறி, நமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இன்று, ஒவ்வொரு இந்தியரும் 'மேக் இன் இந்தியா' மற்றும் 'சுதேசி' போன்ற முன்னெடுப்புகளுடன் இணைந்து வருகின்றனர்” எனக் கூறினார்.

மேலும், “ஆற்றல் பாதுகாப்பு என்பது காலத்தின் தேவையாகும். 2047-ம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனை எட்டும் இலக்குடன் நாம் முன்னேறி வருகிறோம். இந்த தசாப்தத்தில் ஐந்து புதிய அணுமின் உலைகளைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர இலக்கு வைத்து உள்ளோம்.

நாடு சுதந்திரம் அடைந்தது, அந்தச் சுதந்திரம் பல கனவுகளுடன் கூடியதாக இருந்தது. இருப்பினும், நம்மால் வேகமெடுக்கவோ அல்லது முன்னேற்றத்திற்கான உத்வேகத்தைப் பெறவோ முடியவில்லை. 'நடப்பது நடக்கட்டும்', 'இப்படியே போகட்டும்', 'எப்படியாவது நடந்துவிடும்', 'அப்போது பார்த்துக்கொள்ளலாம்' என்ற மனப்பான்மையிலேயே நாம் தேங்கி நின்றோம். 2014-ம் ஆண்டு வரை உலகம் நம்மை "பலவீனமான ஐந்து நாடுகள்" என்ற வரிசையில் வைத்துப் பார்க்கும் நிலைக்குத் தள்ளியது.

இத்தகைய சூழலுக்கு மத்தியிலும், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா புதியதொரு உத்வேகத்தைப் பெற்று உள்ளது. நாம் மிக வேகமாக முன்னேறி வருகிறோம். கடந்த 12 ஆண்டுகளில், பாதுகாப்புத் துறை உற்பத்தி கிட்டத்தட்ட நான்கு மடங்காகவும், கதர் மற்றும் கிராமப்புறத் தொழில்களின் உற்பத்தி ஏறக்குறைய ஐந்து மடங்காகவும் அதிகரித்து உள்ளது.

மின்னணு சாதனங்களின் உற்பத்தி கிட்டத்தட்ட ஏழு மடங்கு விரிவடைந்து உள்ளது. நவீன ரயில் பெட்டிகளின் உற்பத்தி 21 மடங்கும், அலைபேசி உற்பத்தி 33 மடங்கும் அதிகரித்து உள்ளன. அதையும் தாண்டி, டிஜிட்டல் தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளிலும் நாம் முத்திரை பதித்து உள்ளோம்.

இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கு மடங்காகவும், காப்புரிமை அங்கீகாரங்கள் நான்கு மடங்காகவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நூறு மடங்காகவும் உயர்ந்து உள்ளன. சாமானிய குடிமக்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதிலும் நாம் அதே தீவிரத்துடன் பணியாற்றி உள்ளோம். முன்பை விட சராசரியாக ஆண்டுக்கு 15 மடங்கு வேகத்தில் குழாய் வழி குடிநீர் இணைப்புகளை வழங்கி உள்ளோம்.

முந்தைய ஆண்டு வேகத்தை விட ஆறு மடங்கு வேகத்தில் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. ஏழைகளுக்கு நான்கு மடங்கு வேகத்தில் கழிப்பறைகளை அமைத்து உள்ளோம். அதே போல், பின் தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு மூன்று மடங்கு வேகத்தில் வீடுகளை வழங்கி உள்ளோம். நிர்வாகத்திலும் நாடு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து உள்ளது.

ஆயிரக் கணக்கான விதிமுறை நடைமுறைகள் நீக்கப்பட்டு உள்ளன. மேலும் காலாவதியான நூற்றுக் கணக்கான சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. கடந்த நூற்றாண்டின் சட்டங்களைச் சார்ந்திருப்பதன் மூலம் 21-ம் நூற்றாண்டில் முன்னேறிச் செல்ல முடியாது. நவீன உள்கட்டமைப்பை உருவாக்க மெட்ரோ ரயில் கட்டமைப்புகளை விரிவுபடுத்தினோம் மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்தினோம். இவை அனைத்தும் கடந்த பத்தாண்டுகளுக்குள் நிகழ்ந்து உள்ளன.

ஆத்மநிர்பர் பாரத் (சுயசார்பு இந்தியா) என்பது மிக அவசியமான ஒன்றாகும். அதனால் தான், இந்தியா இனி பிற நாடுகளைச் சார்ந்து இருக்கக் கூடாது என்றும், நாம் சுயசார்பு கொண்டவர்களாக மாற வேண்டும் என்றும் கடந்த சில ஆண்டுகளாக அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

அதற்காக நமது சொந்தத் திறன்களை நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப உலகில், 'சிப்'களின் முக்கியத்துவத்தை நாம் நன்கு அறிவோம். மின்னணுப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் அல்லது போக்குவரத்து அமைப்புகள் என எதுவாக இருந்தாலும், சிப்கள் இன்றியமையாதவை. அவை இல்லையென்றால் உலகம் ஸ்தம்பித்து விடும்.

இத்துறையில் இந்தியா சுயசார்பை நோக்கி முன்னேறி உள்ளது. ஏற்கனவே, மூன்று பெரிய செமிகண்டக்டர் ஆலைகள் நிறுவப்பட்டு உள்ளன. மேலும், ஏற்றுமதிக்கான உற்பத்திப் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன. வரும் 7 அல்லது 8 ஆண்டுகளில், மேலும் ஐந்து முதல் எட்டு செமிகண்டக்டர் ஆலைகள் மிக விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளன” என்று குறிப்பிட்டார்.

மேலும் பேசுகையில், “கடந்த 12 முதல் 20 ஆண்டுகளில் நாம் பல ஆபத்துகளை எதிர்கொண்டு உள்ளோம். கொரோனா பாதிப்பில் இருந்து நாம் மீண்டு வந்த உடனேயே, உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியப் பகுதிகளில் தாக்குதல் தொடங்கின. ஒரு பதற்றமான சூழல் நிலவியது. எதிர்காலம் குறித்துக் கணிப்பவர்கள் என்னென்னவோ கணிப்புகளைச் சொன்னார்கள். தடுப்பூசிகள் கிடைக்காது என்றும், பெட்ரோல், டீசல் மற்றும் உரங்கள் கிடைக்காது என்றும் வதந்திகளைப் பரப்பி, நாட்டை அச்சத்தில் ஆழ்த்துவதில் சிலர் மகிழ்ச்சி கண்டனர்.

இன்று நம் நாடு கச்சா எண்ணெயைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்குக் காரணம் நமது தவறான சிந்தனைப் போக்கு தான். நமது கடற்கரைப் பகுதியில் 99 சதவீதத்தை அனுமதிக்கப்படாத பகுதியாக நாமே அறிவித்து இருந்தோம் என்பது உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம். ஒரு காலத்தில் அனுமதிக்கப்படாத பகுதிகளாக கருதப்பட்ட இடங்கள், இன்று முன்னேற்றத்திற்கான பகுதிகளாக மாறி உள்ளன.

ஃபாஸ்ட் பிரீடர்' அணு தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றதன் மூலம் இந்தியா இந்த ஆண்டு ஒரு முக்கிய மைல்கல்லை எட்டி உள்ளது. இது அணு எரிபொருள் துறையில் தன்னிறைவை அடைவதற்கான ஒரு பெரும் முன்னேற்றமாகும்.

வரும் நாட்களில் ஒரு துடிப்பான 'குடிமைப் பாதுகாப்பு' கட்டமைப்பை உருவாக்க உள்ளோம் என்பதை இன்று செங்கோட்டையில் இருந்து அறிவிக்கிறேன். நவீன அமைப்புகள் குறித்து அவர்களுக்குப் பயிற்சி அளிப்போம். தற்கால நெருக்கடிகளில் இருந்து குடிமக்களைப் பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? சமகாலச் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட, ஒரு பிரம்மாண்டமான மற்றும் நவீன குடிமைப் பாதுகாப்பு தன்னார்வலர் படையை அரசு உருவாக்க உள்ளது.

இளைஞர்களுக்கான நவீன திறன் வளர்ச்சி குறித்து பேசிய அவர், சமீபத்தில் செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் குறித்த உச்சிமாநாடு நடந்தது. செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டு எல்லை வேகமாக விரிவடைந்து வருகிறது. செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.

வரும் ஆண்டில் ஒரு கோடி இளைஞர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுத் திறன்களில் பயிற்சி அளித்து, அவர்களை இத்துறையில் உலகிற்குத் தலைமை தாங்கும் வகையில் வலுப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது” என அறிவித்தார். மேலும், அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி வழங்கப்படும் என அறிவித்தார்.

வளர்ச்சி அடைந்த இந்தியா எனும் பயணத்தில் இளைஞர்களுக்குப் பெரும் பங்கு உள்ளது. 'விக்சித் பாரத்'-தின் மிகப்பெரிய பயனாளிகள் நாட்டின் இளைஞர்களாகவே இருப்பார்கள். கடந்த 5 முதல் 7 தசாப்தங்களில் சாதிக்க முடியாதவற்றை, வரவிருக்கும் 5 முதல் 7 ஆண்டுகளில் நாம் சாதிக்க வேண்டும். வரும் ஆண்டுகளில், அரசாங்கம் சீர்திருத்தங்களை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

நக்சலிசம் மற்றும் மாவோயிசம் ஆகியவை லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழித்தன. இவை அரசியலமைப்பையே கேலிக்கு உள்ளாக்கின. இன்று, நக்சல்-மாவோயிச வன்முறை தனது வலிமையை இழந்து, இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது என்று கூறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

அதை முழுமையாக ஒழிக்கும் திசையில் நாம் முன்னேறி வருகிறோம். ஒரு காலத்தில் நக்சல்களின் குண்டுகள் பாய்ந்தும், நிலம் ரத்தத்தால் நனைந்தும் கிடந்த அதே பகுதிகளில், இன்று வளர்ச்சி, நம்பிக்கை மற்றும் கூட்டு முயற்சியின் அடையாளமான மூவர்ணக் கொடி உயரே பறக்கிறது.

நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், ஏதோ ஒரு காரணத்தினால், கடந்த 40 ஆண்டுகளாக இந்த கனவு மீண்டும் அரசியல் சூழலுக்குப் பலியாகி வந்து உள்ளது.

இன்று செங்கோட்டையின் கொத்தளத்தில் மூவர்ணக் கொடியின் கீழ் நின்று, நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நான் ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். பெண்களைக் கௌரவிக்கவும், நமது தாய்மார்களும் சகோதரிகளும் சட்டமன்றங்கள் மற்றும் மக்களவையில் 33 சதவீதப் பிரதிநிதித்துவத்தை விரைவில் பெறுவதை உறுதி செய்யவும் முன்வாருங்கள்.

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வெறும் எண்களைச் சேகரிப்பது மட்டுமல்ல; அதன் மூலம் பெறப்படும் நுணுக்கமான விவரங்களே கொள்கைகளையும் திட்டங்களையும் வடிவமைக்கின்றன. நீங்கள் வழங்கும் தகவல்கள் எவ்வளவு துல்லியமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு அது நாடு முன்னேற உதவும். எனவே, நாட்டின் இளைஞர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து துல்லியமான தகவல்களை வழங்க கேட்டுக் கொள்கிறேன்” எனப் பேசினார்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

ஆடி வெள்ளி, சுதந்திர தினம் தேசியக் கொடி, இந்திய வரைபடத்துடன் ஆன்மீக தரிசனம் ; கேரட், பீட்ரூட், தக்காளி எனப் பல வண்ணக் காய் கறிகளால் உருவான தேசியச் சின்னங்கள் - பக்தர்கள் மெய்சிலிர்க்கத் தரிசனம் !!!

ஆடி வெள்ளி, சுதந்திர தினம் தேசியக் கொடி, இந்திய வரைபடத்துடன் ஆன்மீக தரிசனம் ; கேரட், பீட்ரூட், தக்காளி எனப் பல வண்ணக் காய் கறிகளால் உருவான தேசியச் சின்னங்கள் - பக்தர்கள் மெய்சிலிர்க்கத் தரிசனம் !!!

 ஆடி வெள்ளி, சுதந்திர தினம் தேசியக் கொடி, இந்திய வரைபடத்துடன் ஆன்மீக தரிசனம் ; கேரட், பீட்ரூட், தக்காளி எனப் பல வண்ணக் காய் கறிகளால் உருவான தேசியச் சின்னங்கள் - பக்தர்கள் மெய்சிலிர்க்கத் தரிசனம் !!!

நாளை நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டும், ஆடி மாத வெள்ளிக் கிழமையை முன்னிட்டும், கோவையில் உள்ள பிரபல மாகாளியம்மன் கோவில் காய்கறிகளால் தேசியச் சின்னங்கள் வடிவில் அலங்கரிக்கப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

கோவை, பெரிய கடை வீதி பகுதியில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் அமைந்து உள்ளது. ஆடி மாதம் துவங்கியது முதலே இக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் கோவில் வளாகம் முழுவதும் வித்தியாசமான முறையில் அலங்கரிக்கப்பட்டு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று, நாளைய சுதந்திர தினத்தைக் தாங்கும் வகையில் கோவில் முழுவதும் பிரம்மாண்ட காய்கறி அலங்காரம் செய்யப்பட்டது.

​இந்திய நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில், காய்கறிகளைக் கொண்டே தேசியக்கொடி, இந்திய நாட்டின் வரைபடம், தேசியப் பறவையான மயில், தேசிய விலங்கான புலி மற்றும் அன்னப்பறவை ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு கோவில் சுவர் முழுவதும் பிரம்மாண்டமாகப் பொருத்தி அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இந்த அற்புத அலங்காரத்திற்காகக் கேரட், பீட்ரூட், கத்தரிக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, தக்காளி உள்ளிட்ட பல வகையான வண்ணக் காய்கறிகள் பயன்படுத்தப்பட்டன.

​தேசிய உணர்வையும் ஆன்மீகத்தையும் ஒன்றாகக் கலந்து செய்யப்பட்ட இந்த காய்கறி அலங்காரத்தைக் காணக் கோவையின் பல பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தந்து அம்மனைத் தரிசனம் செய்து வழிப்பட்டனர்.