விவசாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவசாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 செப்டம்பர், 2026

"நள்ளிரவில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கிய தகரக் கொட்டகையை நொறுக்கிய ஒற்றை யானை" ; அலறி அடித்து ஓடி உயிர் தப்பிய தொழிலாளர்கள் - கோவையில் பரபரப்பு!

"நள்ளிரவில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கிய தகரக் கொட்டகையை நொறுக்கிய ஒற்றை யானை" ; அலறி அடித்து ஓடி உயிர் தப்பிய தொழிலாளர்கள் - கோவையில் பரபரப்பு!

2 மணி நேரம் போராடி வனத்துறையினர் விரட்டினர்: தொடரும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அச்சம்!

 கோவை, துடியலூர் அருகே நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை உடைத்துச் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை, வனக்கோட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது.

​கதிர் நாயக்கன்பாளையம் மற்றும் லட்சுமி நகர் (பேஸ் 3) ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த அந்த யானை, அங்கு இருந்த ஒரு விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு மாடுகளுக்காகச் சேமித்து வைக்கப்பட்டு இருந்த பசுந்தீவனங்களைச் சாப்பிட்டதுடன், அங்கே குரைத்த நாய்களையும் ஆக்ரோஷமாகத் துரத்தியது.

இதனைத் தொடர்ந்து, நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் அருகில் உள்ள கட்டிடக் கட்டுமானப் பணிக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை நோக்கி அந்த ஒற்றை யானை நகர்ந்தது. கொட்டகையின் தகரங்களை உடைத்து நொறுக்கிய யானை, உள்ளே வைக்கப்பட்டு இருந்த அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுச் சேதப்படுத்தியது.

​யானை கொட்டகையைத் தாக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த வடமாநிலத் தொழிலாளர்கள், உயிருக்குப் பயந்து அலறி அடித்தபடி ஓடிச் சென்று அருகில் இருந்த மற்றொரு கட்டிடத்திற்குள் தஞ்சம் புகுந்து உயிர் தப்பினர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாகப் பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள், குடியிருப்புப் பகுதியில் நின்று இருந்த ஒற்றை யானையைக் பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அதிகாலை வேளையில் யானை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.

கதிர் நாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான மணி நகர், கணபதி நகர், கணபதி கார்டன், போஸ்டல் காலனி, ஆர்.வி.நகர், பூச்சியூர், வெற்றிவேலவா நகர், ரேணுகாபுரம் மற்றும் லட்சுமி நகர் ஆகிய இடங்களில் இந்த ஒற்றை யானையின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவில் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

​அதேவேளையில், இரவில் இப்பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டு ஏற்படுவதால், இருளில் யானை வருகையைக் கண்காணிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த பீதியில் உறைந்து உள்ளனர். எனவே, மின்வாரியமும் வனத்துறையும் இணைந்து தகுந்த நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் தெருவிளக்குகள் தடையில்லாமல் எரிய வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

மேட்டூர் அணையை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய் - மனமகிழ காவிரி நீருக்கு மலர் தூவி மரியாதை!

மேட்டூர் அணையை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய் - மனமகிழ காவிரி நீருக்கு மலர் தூவி மரியாதை!

சாலை மார்க்கமாக மேட்டூர் அணைக்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். அணையில் இருந்து வெளியேறிய காவிரி நீரில் பூக்கள், நெல் ஆகியவற்றை தூவி மரியாதை செலுத்தினார்.

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து இன்று (செப்.1) நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்காக காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் சேலம் வந்தடைந்தார். பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்த முதலமைச்சருக்கு அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து, சாலை மார்க்கமாக மேட்டூர் அணைக்கு வந்த முதலமைச்சர் விஜய். வழியெங்கும் திரளாக குவிந்து இருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வாகனத்தின் மேல் இருந்து பொதுமக்களின் வரவேற்பை ஏற்றப்படி முதலமைச்சர் விஜய் மேட்டூருக்கு வருகை தந்தார்.

அதனைய அடுத்து, மேட்டூர் அணை நுழைவாயிலில் அவருக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். அதனை ஏற்றுக் கொண்டு அணைக்கு சென்ற அவர், காவிரியை வணங்கி, மேல தாளங்கள் முழங்க அணையின் மதகுகளை திறந்து வைத்தார். தொடர்ந்து, அணையில் இருந்து வெளியேறிய காவிரி நீரில் பூக்கள், நெல் ஆகியவற்றை தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், அங்கு கூடி இருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட முதலமைச்சர் விஜய்க்கு, காவிரியில் மேட்டூர் அணையின் கட்டுமானம் தொடர்பாக வைக்கப்பட்டு இருந்த புகைப்படங்களை அரசு அதிகாரிகளுடன் பார்வையிட்டார். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியவர்கள் உடன் இருந்தார்.

தற்போது அணையில் இருந்து 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் 12 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். முதலமைச்சரின் வருகையையொட்டி, சேலம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு அணையில் நீர் குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் நீர் வரத்து அதிகரித்தது. அதனை அடுத்து, காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரில் அளவு அதிகரித்து.

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கடந்த 4ஆம் தேதி முதல் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91.15 அடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், டெல்டா பாசனத்திற்கு தேவையான தண்ணீரை முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து திறந்து வைத்து உள்ளார்.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

 "நாய்கள் குரைத்த சத்தம்" - துடியலூர் அருகே நள்ளிரவில் உலா வந்த ஒற்றை யானை!

"நாய்கள் குரைத்த சத்தம்" - துடியலூர் அருகே நள்ளிரவில் உலா வந்த ஒற்றை யானை!

 "நாய்கள் குரைத்த சத்தம்" - துடியலூர் அருகே நள்ளிரவில் உலா வந்த ஒற்றை யானை!

உணவு தேடி குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தல்!

 கோவை, துடியலூர் அருகே உள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, வனச்சரகத்திற்கு உட்பட்ட துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வனப் பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது.

​இந்நிலையில், நேற்று அதிகாலை வேளையில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று கதிர் நாயக்கன்பாளையம் குடியிருப்புப் பகுதிக்குள் மெதுவாக நுழைந்தது.

யானை தெருவுக்குள் வருவதைக் கண்ட அப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் கூட்டமாகச் சேர்ந்து பலத்த சத்தத்துடன் குரைக்கத் தொடங்கின. 

இதனை அடுத்து ஒற்றை யானை ​சிறிது நேரம் அங்கு இருந்த மரங்கள் மற்றும் வீடுகளின் அருகே உணவைத் தேடி நின்று கொண்டு இருந்த அந்த யானை, பின்னர் மெதுவாக அங்கு இருந்து நகர்ந்து அருகில் உள்ள வனப்பகுதியை நோக்கிச் சென்றது.

கதிர் நாயக்கன்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து காணப்படுவதால், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பொதுமக்கள் தேவையற்ற முறையில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வனத்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரித்து வருகின்றனர்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

நடப்பாண்டில் முதன் முறையாக நிரம்பிய பில்லூர் அணை - பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !!!

நடப்பாண்டில் முதன் முறையாக நிரம்பிய பில்லூர் அணை - பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !!!

 நடப்பாண்டில் முதன் முறையாக நிரம்பிய பில்லூர் அணை - பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !!!

கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி.தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலங்களில் பில்லூர் அணை நான்கு முறை நிரம்பியது.ஆனால்,இந்த ஆண்டில் முதன்முறையாக பில்லூர் அணை தனது முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அடைந்தது. 

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீரின் அளவான 8 ஆயிரம் கன அடி நீர் அப்படியே நான்கு மதகுகளின் வழியாக வினாடிக்கு 2060 கன அடி நீர் மற்றும் மின் உற்பத்திக்காக 6 ஆயிரம் கன அடி நீர் என மொத்தமாக 8060 கன அடி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் தேக்கம்பட்டி,நெல்லித்துறை, ஓடந்துறை,பாலப்பட்டி, ஊம்ப்பாளையம்,வச்சினம்பாளையம்,சிறுமுகை,லிங்காபுரம் உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

திங்கள், 20 ஜூலை, 2026

ஏண்டா உனக்கு இதே வேலையா போச்சு ? பைப்பை ஏண்டா போட்ட!" - ஓடையில் தண்ணீரைத் திருடிய நபரைக் கிழித்தெறிந்த விவசாயி - அதிர்ச்சி வீடியோ !!!

ஏண்டா உனக்கு இதே வேலையா போச்சு ? பைப்பை ஏண்டா போட்ட!" - ஓடையில் தண்ணீரைத் திருடிய நபரைக் கிழித்தெறிந்த விவசாயி - அதிர்ச்சி வீடியோ !!!

 ஏண்டா உனக்கு இதே வேலையா போச்சு ? பைப்பை ஏண்டா போட்ட!" - ஓடையில் தண்ணீரைத் திருடிய நபரைக் கிழித்தெறிந்த விவசாயி - அதிர்ச்சி வீடியோ !!!

பாலத்துறை தடுப்பணையில் ரகசிய மோட்டார் மூலம் பகிரங்கத் திருட்டு: ஆவேசத்தில் விவசாயிகள் – மாவட்ட நிர்வாகத்திற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் !!!

 கோவை, மதுக்கரை அருகே உள்ள சீராபாளையம் கிராமத்தின் பாலத்துறை பகுதியில், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக ஓடைத் தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டு இருந்த தண்ணீரை, திருட்டுத்தனமாகப் பைப் போட்டு மோட்டார் மூலம் எடுத்த நபரை உள்ளூர் விவசாயி ஒருவர் நேருக்கு, நேராக மடக்கிப் பிடித்து, "ஏண்டா உனக்கு இதே வேலையா போச்சு? பைப்பை ஏண்டா போட்ட!" என ஆவேசத்தின் உச்சத்தில் ஓங்கிச் சத்தம் போட்ட வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி, விவசாயிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 தென்மேற்கு பருவமழை நிலவரம் ஒருபுறமிருக்க, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் விவசாயத் தேவைகளுக்காகவும் மிகுந்த சிரமத்திற்கு இடையே சேமித்து வைக்கப்படும் பொதுச் சொத்தான தண்ணீரை, தனி நபர் ஒருவர் தடுப்புச் சுவரின் மீதே பிரம்மாண்ட பைப்பைப் போட்டுத் திருடி வந்த அராஜகம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

தோட்டத்திற்கு வந்த உள்ளூர் விவசாயி ஒருவர், தடுப்பணையில் தண்ணீர் சட்டவிரோதமாக உறிஞ்சப்படுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அந்த நபரைக் கையும், களவுமாகப் பிடித்துத் தன் செல்போனில் வீடியோ பதிவு செய்தபடியே வெளுத்து வாங்கி உள்ளார்.

 ஜாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயச் சங்கம் இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு, “பொது நீர்நிலைகளில் திருட்டுத்தனமாக மோட்டார் வைத்துத் தண்ணீரைக் கடத்தும் நபர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அந்த மோட்டார் மற்றும் பைப் உபகரணங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்” என மாவட்ட நிர்வாகத்திற்கும் மதுக்கரை வட்டாட்சியருக்கும் அவசரக் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த வீடியோவால், மதுக்கரை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் விவாதமும் வெடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 9 ஜூலை, 2026

விவசாயிகள் சத்குரு, நம்மாழ்வார் வழியில் காந்திய எளிமையையும் பின்பற்ற வேண்டும் - ஐநா அங்கீகாரம் பெற்ற விவசாயிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேச்சு !!!

விவசாயிகள் சத்குரு, நம்மாழ்வார் வழியில் காந்திய எளிமையையும் பின்பற்ற வேண்டும் - ஐநா அங்கீகாரம் பெற்ற விவசாயிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேச்சு !!!

 விவசாயிகள் சத்குரு, நம்மாழ்வார் வழியில் காந்திய எளிமையையும் பின்பற்ற வேண்டும் - ஐநா அங்கீகாரம் பெற்ற விவசாயிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேச்சு !!!

விவசாயிகள் சத்குரு, நம்மாழ்வார் வழியில் காந்திய எளிமையையும் பின்பற்ற வேண்டும் என ஐநா அங்கீகாரம் பெற்ற பொள்ளாச்சி விவசாயி வள்ளுவனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் தொழிலதிபர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசினார். 

விவசாய நிலத்தின் அங்கக கரிம அளவை அதிகப்படுத்தி, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நடத்திய உலகளாவிய போட்டியில் விருது வென்ற இந்தியாவின் ஒரே இயற்கை விவசாயியான தமிழகத்தைச் சேர்ந்த வி.டி. வள்ளுவன் அவர்களுக்கு, கோவையில் இன்று (08/07/2026) பாராட்டு விழா நடைபெற்றது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஜி.வி. அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், கல்வியாளர் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை தாங்கினார். கே.பி.ஆர் குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி முன்னிலை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் ம. கிருஷ்ணன், விவசாயி வள்ளுவனுக்குச் சிறப்புச் செய்தார்.

இவ்விழாவில் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசுகையில், “வள்ளுவன் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு பொறியாளர் ஆவார். சத்குருவின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு, பொள்ளாச்சி அருகிலுள்ள வேட்டைக்காரன்புதூர் பகுதிக்கு வந்து, 7 ஏக்கர் நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்யத் துவங்கி உள்ளார். உற்பத்திச் செலவைக் குறைத்து, உற்பத்தித் திறனை அதிகரித்து, லாபத்தைப் பெருக்கினார். 

அந்த 7 ஏக்கரில் கிடைத்த லாபத்தைக் கொண்டு, சிறிது சிறிதாக சேர்த்து இன்று கிட்டத்தட்ட 30 ஏக்கர் நிலம் வைத்துள்ளார். இவருக்கு இப்போது என்ன லாபம் கிடைக்கிறது என்பதை நான் சொல்லமாட்டேன், ஏனென்றால் அது பெரிய விஷயம். "முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை" என்ற விவேகானந்தரின் சிந்தனைக்கு இவர்களது வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம்.

இவருடைய இந்த மாபெரும் வெற்றிக்கு பின்னால் இரண்டு முக்கியத் தாக்கங்கள் இருப்பதாக அவர் கூறினார். முதல் தாக்கம் சத்குரு, இரண்டாவது தாக்கம் நம்மாழ்வார். விவசாயிகளுக்கு இன்னொரு தாக்கமும் வர வேண்டும், அது மகாத்மா காந்தியினுடைய தாக்கமும் வர வேண்டும் என்று அவரிடம் நான் கூறினேன். 

இவ்விழாவை ஏற்பாடு செய்த 'நமது நம்பிக்கை' மற்றும் 'சிபா' அமைப்புகளுக்குப் பாராட்டுகள். இன்று அரங்கம் நிறைந்து மக்கள் திரண்டுள்ளதைப் பார்க்கும்போது, நல்ல காலம் பிறந்துவிட்டது என்பதும், மக்கள் விவசாயத்தை நோக்கித் திரும்பத் தொடங்கியுள்ளனர் என்பதும் தெளிவாகிறது. 'இந்தியாவின் கலாச்சாரமே விவசாயம்தான்' என்றார் சர்தார் வல்லபாய் பட்டேல். 'மற்ற அனைத்தும் காத்திருக்கலாம், ஆனால் விவசாயம் காத்திருக்க முடியாது' என்றார் ஜவஹர்லால் நேரு. ஆகவே, விவசாயத்திற்கு எப்போதுமே அழிவில்லை” எனக் கூறினார். 

கே.பி. ராமசாமி பேசுகையில், “நமது நாட்டில் எம்.எஸ். சுவாமிநாதன் போன்ற விஞ்ஞானிகளும், ஐயா நம்மாழ்வார் போன்றோரும் பாரம்பரிய விவசாயம் குறித்து எத்தனையோ புத்தகங்களை எழுதினார்கள், எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். ஆனாலும், நம் நாட்டு விவசாயிகள் இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேறவில்லை. அந்த இடைவெளியை நிரப்புவதற்கு வள்ளுவன் முயற்சி எடுக்க வேண்டும்.” எனக் கூறினார். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள தனது நிலத்தில், 'மண் காப்போம் - காவேரி கூக்குரல்' இயக்கத்தின் வழிகாட்டுதலில், மரம் சார்ந்த பலபயிர் பல அடுக்கு சாகுபடி முறையில் வள்ளுவன் விவசாயம் செய்து வருகிறார். நிலத்தை அதிகமாக உழாமல் இருப்பது, மூடாக்கு போடுவது மற்றும் உரப்பயிர்களை வளர்ப்பது போன்ற இயற்கை முறைகளால் இவரது நிலத்தில் மண் வளம் (கரிம கார்பன்) வியக்கத்தக்க வகையில் உயர்ந்துள்ளது.

தென்னை மட்டுமே பயிரிடப்பட்ட ஒற்றைப் பயிர் சாகுபடி நிலமாக இருந்த தனது தோட்டத்தை, பல வகை மரங்கள், மிளகு, பழச்செடிகள் நிறைந்த ‘உணவுக் காடாக’ இவர் மாற்றியுள்ளார். இதன் விளைவாக, மண்ணின் கரிமக் கார்பன் அளவு 0.52 சதவீதத்தில் இருந்து 3.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. இத்தகைய இயற்கை விவசாய முறையால் உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் செலவு குறைந்ததுடன், வறட்சி மற்றும் வெள்ளக் காலங்களைத் தாங்கும் வலிமையும் நிலத்திற்குக் கிடைத்துள்ளது. இதன் மூலம், இவரது பண்ணை வருமானமும் ஆறு மடங்கு அதிகமானது குறிப்பிடத்தக்கது.

இவரது இந்தச் சாதனையைப் பாராட்டி, கடந்த 2024 ஆம் ஆண்டு ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நடத்திய “மண் ஆரோக்கிய பாதுகாவலர்கள்” என்ற விவசாயிகளுக்கான போட்டியில் இவருக்கு உலகளாவிய உயரிய அங்கீகாரம் கிடைத்தது.

இவ்விழாவில் சாந்தி ஆஷ்ரம் தலைவர் டாக்டர் கேசவினோ அறம், சுழற்சங்க ஆளுநர் மாருதி, சிபாகா அமைப்பின் சுகுமார் மற்றும் ‘நமது நம்பிக்கை’ இதழின் நிறுவனர் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா மற்றும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இவ்விழாவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ஞாயிறு, 5 ஜூலை, 2026

விவசாயிகளுக்குச் சொந்தமான யூரியா ‘கேரளாவுக்கு’ கடத்தல் ? ; மதுக்கரையில் உர மூட்டைகளுடன் 2 லாரிகளை மடக்கிப் பிடித்த விவசாயிகள் - குடோனில் லிக்யூடாக மாற்றி மெகா மோசடி என விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் பரபரப்பு !!!

விவசாயிகளுக்குச் சொந்தமான யூரியா ‘கேரளாவுக்கு’ கடத்தல் ? ; மதுக்கரையில் உர மூட்டைகளுடன் 2 லாரிகளை மடக்கிப் பிடித்த விவசாயிகள் - குடோனில் லிக்யூடாக மாற்றி மெகா மோசடி என விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் பரபரப்பு !!!

 விவசாயிகளுக்குச் சொந்தமான யூரியா ‘கேரளாவுக்கு’ கடத்தல் ? ; மதுக்கரையில் உர மூட்டைகளுடன் 2 லாரிகளை மடக்கிப் பிடித்த விவசாயிகள் - குடோனில் லிக்யூடாக மாற்றி மெகா மோசடி என விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் பரபரப்பு !!!

 கோவையில் விவசாயிகளுக்கு மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் யூரியா உரத்தை டன் கணக்கில் கடத்தி, ரகசியக் குடோனில் திரவமாக (Liquid) மாற்றி கேரளாவுக்குக் கடத்த முயன்ற மெகா விவகாரத்தை, மதுக்கரை பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் அதிரடியாக மடக்கிப் பிடித்துப் அம்பலப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் இன்று தலா ஒரு லாரி வீதம் இரண்டு பிரம்மாண்ட லாரிகள் வேகமாகச் சென்று கொண்டு இருந்தன. அப்போது, அந்த லாரிகளில் இருந்து யூரியா உரம் ஆங்காங்கே சாலையில் சிதறியபடி சென்று உள்ளது. இதைக் கவனித்த அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் உடனடியாக லாரிகளை விரட்டிச் சென்று மடக்கி நிறுத்தினர்.

லாரி ஓட்டுநர்களிடம், “உரம் எங்கே கொண்டு செல்லப்படுகிறது ?” என்று தட்டிக் கேட்ட போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதோடு, அருகில் உள்ள ஒரு தனியார் குடோனுக்கு யூரியா கொண்டு செல்வதாகக் கூறி உள்ளனர். 

இதனால் சந்தேகம் அடைந்த விவசாயிகள், லாரியின் தார்பாயை ஏறித் திறந்து பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்தனர்.

 அதில் இருந்தது முழுவதும் மத்திய அரசு ஏழை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் ‘அரசு யூரியா உரம்’ என்பது தெரியவந்தது.

இதை அடுத்து, அந்த உரம் எங்குப் போகிறது என்று ஓட்டுநர்களை மிரட்டிய போது, திருமலையம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட வழுக்குப்பாறை (தமனாபாறை) பகுதியில் உள்ள ஒரு குடோனுக்குக் கொண்டு செல்வதாக ஒப்புக்கொண்டனர்.

விவசாயிகளும் பொதுமக்களும் நேரடியாக அந்த ரகசியக் குடோனுக்குச் சென்று அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது அந்த குடோன், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும், அந்த குடோனுக்குள் சட்டவிரோதமாகச் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட அரசு யூரியா உர மூட்டைகள் மலை போலப் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு விவசாயிகள் கொதித்தெழுந்தனர்.

அங்கு நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், விவசாயத்திற்குப் பயன்படும் இந்த யூரியாவைத் தண்ணீரில் கரைத்து, ரசாயனங்கள் கலந்து ‘லிக்யூட் யூரியா’ (Liquid Urea) மற்றும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படும் மூலப்பொருளாக மாற்றி, இங்கு இருந்து கேரளாவுக்குக் கடத்திப் பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்று வரும் மோசடி அம்பலமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த நூற்றுக் கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், அந்த குடோனை முற்றுகையிட்டுப் போர்க்குரல் எழுப்பினர். “ஏழை விவசாயிகள் ஒரு மூட்டை உரத்திற்குப் பல கிலோ மீட்டர் அலைந்து திரியும் நிலையில், டன் கணக்கில் அரசு உரத்தை இப்படித் தனியார் ஆலைகளுக்குக் கடத்துவது எப்படி?” என்று கேள்வி எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை மற்றும் மதுக்கரை போலீஸார் இந்த விவகாரம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

ஞாயிறு, 21 ஜூன், 2026

பேரூர் பட்டீசுவரர் ஆலயத்தில் ‘ஆனி உற்சவம்’: உலக நன்மைக்காக குலவையிட்டு வயலில் இறங்கிய மக்கள் !!!

பேரூர் பட்டீசுவரர் ஆலயத்தில் ‘ஆனி உற்சவம்’: உலக நன்மைக்காக குலவையிட்டு வயலில் இறங்கிய மக்கள் !!!

 பேரூர் பட்டீசுவரர் ஆலயத்தில் ‘ஆனி உற்சவம்’: உலக நன்மைக்காக குலவையிட்டு வயலில் இறங்கிய மக்கள் !!!

கொளுத்தும் வெயிலிலும் அனல் பறந்த நாற்று நடவு திருவிழா: வெள்ளி ரிஷப வாகனத்தில் கேதாரீஸ்வரர் எழுந்தருளி ‘பொருள வேண்டுதல்’ வைபவம் !!!

உலக மக்கள் நலன் வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைமேழி ஆனி உற்சவ நாற்று நடவு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விழா, கடந்த 13-ந்தேதி தேவேந்திரகுல வேளாளர் மடத்தில் கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த 7 நாட்களாகக் காலை மற்றும் மாலை வேளைகளில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் ஸ்ரீ கேதாரீஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, கோவிலைச் சுற்றி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதை தொடர்ந்து இன்று(21-ந்தேதி) மதியம் கோவில் வளாகத்தில் பொன்னேர் பூஜையும், ஸ்ரீ கேதாரீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் தேவேந்திரகுல வேளாளர் மடத்திற்கு எழுந்தருளும் நிகழ்வும் நடைப்பெற்றது.

அங்கு செந்நெல் நாற்று எடுத்து வரப்பட்டு, கோவில் வயலில் இறங்கி நாற்று நடவு செய்யும் ஆனி உற்சவ நாற்று நடவு திருவிழா நடந்தது.

தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் வயலில் இறங்கி குலவையிட்டு நாற்று நடுவது செய்தனர். 

இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் சப்பரத்தில் நாற்று நடவு வயலுக்கு எழுந்தருளி, பொருள் வேண்டுதல் நிகழ்ச்சியும், கோவிலைச் சுற்றி திருவீதி உலாவும் நடந்தது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகமும், தேவேந்திர குல வேளாளர் சமூக மண்டப அறக்கட்டளையும் இணைந்து செய்து இருந்தனர். இதில் திரளான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டர்‌.


வெள்ளி, 19 ஜூன், 2026

தமிழ்நாடு அரசை கண்டித்து சாட்டையால் அடித்துக் கொண்ட சேலம் விவசாயிகள் !!!

தமிழ்நாடு அரசை கண்டித்து சாட்டையால் அடித்துக் கொண்ட சேலம் விவசாயிகள் !!!

 தமிழ்நாடு அரசை கண்டித்து சாட்டையால் அடித்துக் கொண்ட சேலம் விவசாயிகள் !!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து, விவசாயிகள் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில், இன்று மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது வழக்கம்.

அதன்படி இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வருகை தந்தனர். அதனைத்தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், வேளாண் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திடீரென கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், மாநில அளவில் உள்ள விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக ரத்து செய்ய முன்வர வேண்டும், பகுதி பகுதியாக ரத்து என்று அறிவித்து உள்ளது விவசாயிகளுக்கு வேதனை ஏற்படுத்தி உள்ளது என்று கூறி, 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பி வெளியேறினர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், முழங்காலிட்டு சாட்டையால் அடித்துக் கொண்டு தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சேலம் மாவட்ட செயலாளர் வேலன் கூறுகையில், 

"அனைவருக்கும் சோறு போடும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வஞ்சனை செய்கிறது. ரூபாய் 75 ஆயிரம் வரையிலான கடன் மட்டும் முழுமையாக தள்ளுபடி என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பு ஏற்புடையதல்ல.

தேர்தல் காலத்தில் விஜய் கூறியபடி கடன் தள்ளுபடியை முழுமையாக வழங்க வேண்டும். எங்களது இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம், மேலும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்து உள்ளோம். மாற்றம் வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியில் அமர வைத்ததற்கு கிடைத்த பரிசு தான் இந்த விவசாயிகள் புறக்கணிப்பு. எங்களின் நிலையை எண்ணி நாங்களே எங்களை சாட்டையால் அடித்துக் கொள்கிறோம். இதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை” என்று தெரிவித்தார்.

மேகதாது அணை விவகாரத்தில் அரசியல் வேண்டாம் - காங்கிரஸுக்கு பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல் !!!

மேகதாது அணை விவகாரத்தில் அரசியல் வேண்டாம் - காங்கிரஸுக்கு பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல் !!!

 மேகதாது அணை விவகாரத்தில் அரசியல் வேண்டாம் - காங்கிரஸுக்கு பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல் !!!


மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்யக் கூடாது என பி .ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை தியாகராய நகரில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

”காவிரி பிரச்சனை அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்கிறது. டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரங்கநாதன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், பிரதமராக வி.பி.சிங் இருந்த போது, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் வாக்களிப்புடன் உச்சநீதிமன்றத்திற்கு இணையான அங்கீகாரம் கொண்ட காவேரி நடுவர் மன்றம் உருவாக்கப்பட்டது.

2007-ல் வெளியான அதன் இறுதி தீர்ப்பில் காவிரியின் குறுக்கே கர்நாடகா, தமிழ்நாடு அணை கட்டுவதற்கு உரிமை இல்லை என்றும், தமிழ்நாட்டில் அனுமதி இல்லாமல் எந்த அணையும் கட்டக் கூடாது என உத்தரவிட்டு உள்ளது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

மேலும் உச்ச நீதிமன்றத்தில் நேரடி கட்டுப்பாட்டில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. 2020-ம் ஆண்டு கர்நாடகாவின் அன்றைய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரித்து காவிரி மேலாண்மை ஆணையத்திலும், மத்திய நீர்வள ஆணையத்திலும் சமர்ப்பித்தார்.

ஆனால் புதிதாக அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு உரிமை இல்லை என விவாதிக்க மறுத்து, நிராகரித்து உள்ளது. ஆனால் மத்திய நீர்வள ஆணையம் தள்ளுபடி செய்யாமல் நிலுவையில் வைத்து, தமிழ்நாட்டை அச்சுறுத்துவதை அனுமதிக்க முடியாது.

இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில், மக்களின் குரலாக மேகதாது அணை கட்டுவதை நிராகரிக்க வேண்டும், அணை கட்டப்பட்டால், 5 கோடிக்கு மேற்பட்ட மக்களின் குடிநீர் ஆதாரங்கள் பறிபோகும். விவசாய தொழிலாளர்களும் அகதிகளாக வெளியேறுவார்கள், உணவு உற்பத்தி அடியோடு அழியும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு தமிழ்நாடு மக்களின் நலன் காக்கும் விதமாக, மேகதாது அணை கட்டும் வரைவு திட்ட அறிக்கையை முழுமையாக நிராகரிக்க உத்தரவிட வேண்டும்.

மேலும், வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜூலை மாதத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு பெற்று உள்ளது. கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தனது சுயநலத்திற்காக அங்கு அணை கட்ட முயற்சிக்கிறார். ஆனால் கர்நாடகாவில் இருக்கும் விவசாயிகள் அதனை எதிர்க்கின்றனர். எனவே மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாடு இல்லாமல், அரசியல் செய்யாமல் இருக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்: சட்டமன்றத்தில் உதயநிதி பேச்சு !!!

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்: சட்டமன்றத்தில் உதயநிதி பேச்சு !!!

 காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்: சட்டமன்றத்தில் உதயநிதி பேச்சு !!!

காவிரி விவகாரத்தில் நாம் அனைவரும் இணைந்து தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் சிறப்பு தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். இந்த சிறப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.அவர் பேசுகையில், 

"நமது தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயலும் மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்பது தி.மு.க வின் உறுதியான நிலைப்பாடு. காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமை பறிபோக நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு, மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட அனைத்துக்கும், மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு எடுத்த ஆக்கப் பூர்வமான நடவடிக்கை தான் முழு காரணம்.

ஒரு நீண்ட நெடிய சட்டப்போராட்டம், அரசியல் போராட்டம் எல்லாவற்றையும் நடத்தி தான், காவிரி மீதான உரிமையை போராடி தான் பெற்று இருக்கிறோம். ஆனால், அதனை நிர்மூலமாக்கும் வகையில், இன்றைக்கு கர்நாடகா அரசு, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அந்த முயற்சியை எடுத்தபோது அந்த சமயத்தில் எங்கள் கூட்டணியில் இருக்கக் கூடிய கட்சி, கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் மேகதாது அணை திட்டத்தை எங்களுடைய தலைவர் அப்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார்கள்.

இன்றைக்கு முதலமைச்சர் அவர்கள், மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடகா அரசின் முயற்சிக்கு எதிராக இந்த தீர்மானத்தை இன்றைக்கு கொண்டு வந்து உள்ளார். இதனை தி.மு.க சார்பில் நாங்கள் மனதார வரவேற்கிறோம். மேகதாது அணைக் கட்ட நினைக்கின்ற கர்நாடகா அரசுக்கு எதிராக எங்களுடைய தலைவர்கள், எங்கள் அரசு நடவடிக்கைகள் சிலவற்றை ஆளுங்கட்சிக்கும், முதலமைச்சருக்கும், அவைக்கும் நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

2021- ஆம் ஆண்டு மே மாதம் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே ஜூன் மாதமே மேகதாது அணைக் கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

பிறகு அதே கருத்தை வலியுறுத்தி ஜூலை மாதத்தில் ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சருக்கும் எங்களுடைய தலைவர் அன்றைக்கு கடிதம் எழுதினார்கள். இதை அடுத்து, அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களைக் கூட்டி, எந்த காலத்திலும் அணையைக் கட்டக் கூடாது; அனுமதி அளிக்கக் கூடாது என்ற தீர்மானத்தையும் நாங்கள் நிறைவேற்றினோம்.

இப்படி, நம்முடைய தொடர் எதிர்ப்பின் காரணமாக தான், மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கையை, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய நீள்வள ஆணையத்திற்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது. தி.மு.க அரசின் தொடர் எதிர்ப்பின் காரணமாக திட்டப் பட்டியலில் இருந்து ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் நீக்கினார்கள்.

மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு, விரிவான திட்ட அறிக்கை சமர்பிக்கப்படவில்லை என்பது தான் எங்களுடைய தி.மு.க அரசு இருந்த வரையிலான நிலைமை. தி.மு.க அரசும், அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தைரியமாக தமிழ்நாட்டின் எதிர்ப்பை பதிவுச் செய்ததால் தான் இது சாத்தியமானது என்பதை இந்த மாமன்றத்தில் மீண்டும் பதிய வைக்க விரும்புகிறேன்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், மத்திய நீர்வள ஆணையம், 2018- ஆம் ஆண்டு நவம்பர் 22 தேதியிட்ட கடிதம் மூலமாக கர்நாடகா அரசுக்கு சில முக்கியமான நிபந்தனைகளை அறிவித்து இருக்கிறார்கள்.

இதில் முதலாவது நிபந்தனை என்னவென்றால், மேகதாது அணை கட்ட மத்திய நீர்வள ஆணையம் நிபந்தனையற்ற அனுமதி எதுவும் கொடுக்கப்படவில்லை. இரண்டாவதாக அணை கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகா அரசு தயாரிப்பதற்கு முன்பாக தமிழ்நாடு அரசு தெரிவிக்கின்ற பல்வேறு ஆட்சேபனைகளை அவர்கள் பரிசீலனை செய்ய வேண்டும், மூன்றாவதாக மத்திய மின்வாரிய ஆணையத்திடமும், சம்மந்தப்பட்ட மாநிலத்தில் இருக்கக் கூடிய மத்திய நீர்வள ஆணையக் குழுவுடன் இணைந்து ஆலோசனை செய்ய வேண்டும்.

இது எல்லாவற்றுக்கும் மேலாக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முன் அனுமதியையும் பெற வேண்டும் என்று கடிதத்தில் தெளிவாக எழுதி இருந்தனர். இந்த அரசு இதையெல்லாம் ஒன்றிய அரசிடம் எடுத்துக் கூறி காவிரியில் நமது தமிழ்நாட்டின் உரிமையை நாம் அனைவரும் சேர்த்து நிலைநாட்ட வேண்டும்.

மேகதாது பிரச்சனை தொடர்பாக கடந்த 2025- ஆம் ஆண்டு நவம்பர் 13- ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான பிறகு 2026- ஆம் ஆண்டு மார்ச் 04- ஆம் தேதி அன்று அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி, தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர், ஒன்றிய ஜல்சக்தி துறையின் செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

கர்நாடகா அரசு, மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க சட்ட ரீதியாக இந்த அரசு எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் திமுக நிச்சயமாக துணைக்கு நிற்கும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தடுத்து நிறுத்துவோம் என்று கூறி இந்த தீர்மானத்திற்கு எங்களது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு கடிதம் மூலம் அனுப்பி வைப்பதற்கு பதிலாக, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து ஒரு குழுவாகச் சென்று ஒன்றிய அரசிடம் வழங்கி நமது ஒற்றுமையை நாள் வெளிப்படுத்த வேண்டும். அதற்கு திமுக தயாராக உள்ளது" எனத் தெரிவித்து உள்ளார்.

பதில் அளித்து பேசிய முதலமைச்சர் விஜய்

"எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது அரசின் தனித் தீர்மானத்தில் ஒரு கருத்தை சேர்க்க கோரி உள்ளார். அதுகுறித்து கீழ்க்கண்ட கருத்தினை பேரவைக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

மேகதாது பிரச்சனை சம்மந்தமாக எனது தலைமையில் 26/05/2026 அன்று பிரத்யேகமாக தனிநடுவர் மன்றம் அமைப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து தனி நடுவர் மன்றம் அமைக்க ஏற்கனவே தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே எதிர்க்கட்சித் தலைவரால் அளிக்கப்பட்ட கருத்தினை நான்காவது பத்திக்கு அடுத்து கூடுதலாக சேர்க்கலாம் என்று பேரவைத் தலைவரைக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

சட்டப் பேரவை 2 ஆம் நாள் கூட்டத் தொடர்: மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் !!!

சட்டப் பேரவை 2 ஆம் நாள் கூட்டத் தொடர்: மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் !!!

 சட்டப் பேரவை 2 ஆம் நாள் கூட்டத் தொடர்: மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் !!!

த.வெ.க அரசு பொறுப்பேற்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 18) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முதலில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது உரையை ஆங்கிலத்தில் வாசிக்க, அவரைத் தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் உரையை தமிழில் வாசித்தார். அத்துடன் நேற்றைய கூட்டத்தொடர் நிறைவு அடைந்தது.

இரண்டாவது நாள் கூட்டத்தொடரான இன்று சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களின் மறைவு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட, அடுத்து மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து அரசினர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், இன்றைய கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வாக முதலமைச்சர் விஜய், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித் தீர்மானத்தை முன்மொழிகிறார்.

ஒருமனதான நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த சிறப்பு தனி தீர்மானம், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஒற்றுமையாக நின்று அணை கட்டுவதை தடுப்போம் - உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றுகையில், 

“மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பது தான் தி.மு.க வின் உறுதியான நிலைபாடு. தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோக நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சி, கர்நாடகாவில் ஆட்சி புரிந்தாலும் அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அணை கட்டுவதை கடுமையாக எதிர்த்தார். நீண்ட நெடிய சட்டப் போராட்டங்கள் மூலம் காவிரி நீரை பெற்று வருகிறோம். முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை தி.மு.க சார்பில் மனதார வரவேற்கிறோம்.

தி.மு.க ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்ற கருத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன் வைத்தார். இது தொடர்பாக ஒன்றிய ஜல்சக்தித் துறை அமைச்சருக்கு கடிதத்தையும் அனுப்பினார். தி.மு.க அரசின் தொடர் எதிர்ப்பின் காரணமாகத் தான் மேகதாதுவின் திட்ட அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. தி.மு.க அரசும் எங்கள் தலைவரும் தைரியமாக எதிர்ப்பை பதிவு செய்ததால் தான் இது சாத்தியமானது.

கர்நாடகாவில் அணை கட்ட சட்ட ரீதியாக எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தி.மு.க ஆதரவு தருகிறது. ஒற்றுமையாக இருந்து தடுத்து நிறுத்துவோம். முதலமைச்சரின் தீர்மானத்திற்கு முழு ஆதரவை தருகிறோம். அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக சேர்ந்து, ஒற்றுமையாக நின்று நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும். இதற்கு தி.மு.க தயாராக உள்ளது. ஒருமனதாக மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம்.

மேட்டூர் அணை திறக்காததால் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு நியாயத்தை எடுத்து வைத்து நமக்குரிய நீரை பெற்றுதர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது ஆதரவை வழங்கினார்.

போராடி போராடியே காவிரி நீரை பெற்று வருகிறோம் - ஈ.பி.எஸ் உரை

மேகதாது அணை திட்ட தனித் தீர்மானம் மீதான விவாத்ததில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, 

“மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த அ.தி.மு.க பலமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. 24.4.2015 இல், மேகதாது திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என கர்நாடக அரசை வலியுறுத்தக் கோரி மத்திய அரசிடம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் வழங்கினார். பிறகு அதே ஆண்டில் பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்தக் கூடாது என மீண்டும் வலியுறுத்தினார்.

மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரமும் உரிமையும் கடுமையாக பாதிக்கப்படும். அணை கட்டினால் நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் கர்நாடகா மாநிலம் நீரை முழுவதுமாக பயன்படுத்திவிடும். எனவே நாம் முதலமைச்சராக இருந்த போதும் மேகதாது அணையை கட்டக் கூடாது என பிரதமரை வலியுறுத்தினேன். நாம் எப்போதும் போராடி போராடியே காவிரி நீரை பெற்று வருகிறோம். காவிரி ஆற்றின் மீது நமக்குரிய உரிமையை பேணி காப்பது நம் அனைவரது உரிமையாகும். அ.தி.மு.க சார்பில் முதலமைச்சர் கொண்டு வந்த அரசின் தனி தீர்மானத்தை ஒருமனதாக ஆதரிக்கிறோம்” என்று ஆதரவு தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய்யின் தீர்மானத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு

மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான சிறப்பு தீர்மானத்திற்கு, காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து இருக்கிறது. காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார், கர்நாடகா அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது எனவும், மேகதாது அணைக்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.

மேலும், தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட, விவசாயிகள் நலனை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசு எடுத்துவரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சி முழு ஆதரவை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான சிறப்பு தீர்மானம் - முன்மொழிந்தார் முதல்வர்

கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக அரசின் சிறப்புத் தீர்மானத்தை பேரவையில் முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். அவர் பேசுகையில், 

மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான தனி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேரவையில் முன்மொழிவதாக கூறி, “மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தொழில் உள்ளிட்ட எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசுக்கு இந்த பேரவை கேட்டுக்கொள்கிறது.

கர்நாடகா அரசு நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முயற்சிக்கிறது. கர்நாடகா அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு பரிசீலிக்கக் கூடாது. அதற்கான திட்ட அனுமதியையும் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்” என்று தீர்மானத்தை முன்மொழிந்தார்.

முன்னாள் எம்.எல்.ஏக்கள், பிரபலங்கள் மறைவுக்கு இரங்கல்

சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்களான சி. ராமசுவாமி, தா. வீராசாமி, சி. சுவாமிநாதன், அ.க ஆறுமுகம், பெ. கண்ணன் மற்றும் அ. நாஞ்சில் முருகேசன் ஆகியோருக்கு இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் வாசிக்க, அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் செயலாளர் சி.கே.ராமசாமி, பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்.பி. சௌத்ரி மற்றும் கே.ராஜன், இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆகியோரின் மறைவுக்கு சபாநாயகர் இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாற்றுத் தலைவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை ஒத்திவைத்து, அரசின் சிறப்புத் தீர்மானத்தை இன்று எடுத்துக்கொள்ள வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன் முன்மொழிந்தார்.

சனி, 30 மே, 2026

மேகதாது அணைக்கு எதிர்ப்பு - முற்றுகை போராட்டம் நடத்த தயாராகும் விவசாயிகள் !!!

மேகதாது அணைக்கு எதிர்ப்பு - முற்றுகை போராட்டம் நடத்த தயாராகும் விவசாயிகள் !!!

 மேகதாது அணைக்கு எதிர்ப்பு - முற்றுகை போராட்டம் நடத்த தயாராகும் விவசாயிகள் !!!

மேகதாது அணை வரைவு திட்ட அறிக்கையை சட்ட விரோதம் என மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

கர்நாடகா அரசின் மேகதாது அணை வரைவு திட்ட அறிக்கையை சட்ட விரோதம் என மத்திய அரசு நிராகரிக்க வேண்டும், மாதாந்திர அடிப்படையில் தமிழகத்திற்கான தண்ணீரை கர்நாடகாவிடம் இருந்து காவிரி மேலாண்மை ஆணையம் பெற்று தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கர்நாடகா அரசை கண்டித்தும் வாகன பேரணியாக சென்று மேகதாதுவில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் அறிவித்து இருந்தது.

அதன்படி, இன்று (மே 30) தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் தஞ்சாவூர் ராஜராஜசோழன் சிலை முன்பு திரண்டனர். பின்னர் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதை அடுத்து கர்நாடகா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தொடர்ந்து, தஞ்சையில் இருந்து வாகன பேரணியாக விவசாயிகள் புறப்பட்டனர். இவர்கள் நாளை காலை ஜூஜூவாடி வழியாக கர்நாடகா மாநிலத்திற்குள் நுழைந்து மேகதாது பகுதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்தித்து பேசிய 

தமிழக காவேரி விவசாயி சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், “உச்ச நீதிமன்றத்திற்கு சமமான அமைப்பாக காவேரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 2007-இல் வழங்கப்பட்ட தீர்ப்பில் கீழ் பாசன விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் எந்தவொரு அணையும் கட்டமுடியாது என உறுதிப்பட தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனை உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மேகதாது அணை அமைக்கப்படும் என்றும், அதற்கான வரைவு திட்ட அறிக்கை தயாரித்து விரைவில் பூமி பூஜை போட உள்ளதாக கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பது சட்ட விரோதமாகும்.

இதுகுறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடங்க வேண்டும். அரசியல் லாபத்திற்காக காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க வும் இணைந்து சட்டவிரோதமாக கர்நாடகாவில் அணை கட்ட நினைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

அப்படி அவர்கள் அணை கட்ட அனுமதி கொடுத்தால், தமிழ்நாடு சுடுக்காடாக ஆகிவிடும். குடிநீர் ஆதாரம் பறிபோகும், 25 ஏக்கர் நிலம் பாலைவனமாக மாறும், விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் அகதிகளாக வெளியேறக் கூடிய பேராபத்து ஏற்பட்டு இருக்கிறது” என வேதனையுடம் பேசினார்.

மேலும், “இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும், அனுமதியை திரும்ப பெற வேண்டும், வரைவு திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

தொடர்ந்து, “தி.மு.க ஆட்சியில் முறையாக நடவடிக்கை எடுக்காத விளைவுதான், இன்று வரைவு அறிக்கை தயாரிக்க கர்நாடகா அரசு முன்வந்து உள்ளது. கடந்த 5 ஆண்டு காலமாக கவேரி குறித்து வாய் திறக்காததால், மேகதாது அணை குறித்து பேசாததால் தான் இந்த நிலைமை.

தற்போதையை முதலமைச்சர் விஜய் அரசு, இதனை அனுமதிக்கக் கூடாது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசரக்கால வழக்கு தொடர வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

புதன், 27 மே, 2026

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது: பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல் !!!

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது: பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல் !!!

 மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது: பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல் !!!

மேகதாது அணை விவகாரம், தமிழ்தாய் வாழ்த்து விவகாரம் என பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்த கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் விஜய் முன்வைத்து உள்ளார்.

தமிழக முதல்வர் விஜய் கடந்த 10 ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்ற நிலையில், இன்று முதல் முறையாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதில், கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த சந்திப்பின் போது பிரமரிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,

பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், புதுதில்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று (27.05.2026) மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது, [மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் தனது நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின் போது, ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், மாநில வாழ்த்துப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே எப்போதும் பாடப்பட்டு வருகிறது. ஆனால் உள்துறை அமைச்சகத்தால் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட குறிப்பாணையைத் தொடர்ந்து, சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் பாடல் முதலாவதாகப் பாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப்பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையினை வழங்க வேண்டும்.

மேம்பட்ட நடுத்தர போர் விமான (AMCA) வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் வான்வழி அமைப்பு மையம் (CABS) ஆகியவற்றை தமிழ்நாட்டில் அமைப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (DRDO) ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், வான்வழி அமைப்பு மையத்தினை (CABS) தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்திற்கான பூமி பூஜையை நடத்த உள்ளதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அறிவித்து இருப்பது காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதித் தீர்ப்பிற்கும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் முற்றிலும் முரணானது. இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு விவசாயிகள் இடையே பெருங்கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்காணும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் மிகக் கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்து உள்ளது. 2026 ஆம் ஆண்டில் மட்டும் 12 கைது சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. தற்போது 58 மீனவர்கள் இலங்கையில் காவலில் உள்ளனர். 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. எனவே மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்' என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

பயிர்க்கடன் தள்ளுபடி; த.வெ.க அரசை கடுமையாக சாடிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் !!!

பயிர்க்கடன் தள்ளுபடி; த.வெ.க அரசை கடுமையாக சாடிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் !!!

 பயிர்க்கடன் தள்ளுபடி; த.வெ.க அரசை கடுமையாக சாடிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் !!!

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் அரசின் நடவடிக்கை உள்ளது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்து உள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூபாய் 50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அதிகாரப் பூர்வமாக அறிவித்து இருந்தார்.

5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்து உள்ள விவசாயிகள் பெற்ற கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ரூபாய் 50,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர். இதற்கு அ.தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களது அறிக்கை வாயிலாக அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் இன்று (மே 27) சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிட்டு வெளியே வந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் தொகுதியின் எம்.எல்.ஏ வுமான ஓ.எஸ்.மணியன், "தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் அரசின் நடவடிக்கை உள்ளது. த.வெ.க வின் தேர்தல் அறிக்கையில் விவசாயக் கடன்கள் முழுமையாக ரத்துச் செய்யப்படும் என்று அறிவித்து இருந்தார். ஆனால் தற்போதைய விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை அனைத்து அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும், பொதுமக்களும் கண்டித்து உள்ளனர்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை இல்லாத ஒரு மோசமான அறிவிப்பு இது. தேர்தல் வாக்குறுதியில் கூறியதை சொன்னபடி நிறைவேற்ற வேண்டாமா ? அதைத் தான் விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. வரும் ஜூன் 30- ஆம் தேதி விவசாயக் கடன்கள் செலுத்தப்பட வேண்டும். அப்போது தான் புதிய கடன் பெற முடியும். அனைவருடைய கண்டனத்தையும், எதிர்ப்பையும் இவர்கள் பெற்றிருக்கின்றனர். இந்த பயிர்க்கடன் தள்ளுபடியை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.

இதன் இடையே, தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ள பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்து உள்ள நிலையில், வரும் ஜூன் 01- ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தி உள்ளது.

செவ்வாய், 26 மே, 2026

கொடுத்த வாக்குறுதி என்னாச்சு?’ கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு உர மூட்டைகளுடன் விவசாயிகள் போராட்டம் !!!

கொடுத்த வாக்குறுதி என்னாச்சு?’ கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு உர மூட்டைகளுடன் விவசாயிகள் போராட்டம் !!!

 கொடுத்த வாக்குறுதி என்னாச்சு?’ கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு உர மூட்டைகளுடன் விவசாயிகள் போராட்டம் !!!

​ரசாயன உரங்களின் விலை உயர்வை ரத்து செய்யக் கோரி முழக்கம் : கேரள விவசாயிகளுடன் இணைந்து தமிழக விவசாயிகள் பறந்த ஆர்ப்பாட்டம் !!!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு விவசாயிகள் மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

 அப்போது மத்திய பா.ஜ.க அரசு 2014 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தது. இதில் வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சாமிநாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்தி செலவுகளோடு 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து வழங்கப்படும் என்றும் குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் என்று கூறினார்கள். 

ஆனால் வேளாண் உற்பத்தி செலவுகள் உயர்ந்து கொண்டே செல்கிறது. மறுபுறம் விவசாயிகள் உற்பத்தி செய்திடும் விலைப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள் 

ரசாயன உரங்களின் நிலையை கடுமையாக உயர்த்தி உளளார்கள். இந்த விலையேற்றம் மேலும் கூடும் என கூறப்படுகிறது. எனவே விலை உயர்வை ரத்து செய்ய மத்திய அரசின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு பழனிச்சாமி, செயலாளர் வி. ஆர். பழனிச்சாமி மற்றும் கேரள மாநில விவசாயிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். 

அப்போது பாக் ட்டம் பாஸ், பொட்டாஸ் காம்ப்ளக்ஸ், அம்மோனியா சல்பேட் உள்ளிட்ட உரங்களை பாக்கெட்டுகளாக எடுத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திங்கள், 25 மே, 2026

மேகதாது அணை விவகாரம் : தொடர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல் !!!

மேகதாது அணை விவகாரம் : தொடர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல் !!!

 மேகதாது அணை விவகாரம் : தொடர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல் !!!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இன்று முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டிடம் அனுமதி கேட்க தேவையில்லை என்றும், மேகதாதுவில் புதிய அணைக்கட்டும் விரிவான திட்டத்தை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அண்மையில் தெரிவித்து இருந்தார்.

மேலும் மத்திய அரசிடம் அனுமதி கிடைத்த பிறகு திட்டத்திற்கான பூமி பூஜை போடப்படும். மேகதாதுவில் அணைக்கட்டும் விஷயத்தில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழ்நாடு முழுவதும் தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி உள்ள அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

மேகதாது அணைப் பிரச்சினை குறித்து தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்து உள்ளது. இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ”காவிரி நடுவர் மன்ற தீர்ப்பிற்கு எதிராக கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக கடந்த ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் 24.05.2026 (நேற்று) தள்ளுபடி செய்து உள்ளது.

எனவே, தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமை பறிபோகும் பேராபத்து ஏற்பட்டு உள்ள நிலையில், மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக, உடனடியாக தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, அடுத்த கட்ட அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்க வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு அரசை கேட்டுக் கொள்கிறது” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது அணையானது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது என்பதால், இத்திட்டத்தை எதிர்த்து 30.11.2018 மற்றும் 7.6.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், மேகதாது அணையுடன் தொடர்புடைய இவ்வழக்கில் 13.11.2025 அன்று விசாரித்த உச்சநீதிமன்றம் மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித அனுமதியையும் அளிக்கவில்லை. இத்திட்டம் தொடக்க நிலையில் தான் உள்ளது. மேலும் உச்சநீதிமன்ற முந்தைய தீர்ப்பிற்கு உட்பட்டதா, இல்லையா என்பதை நிபுணர்கள் அடங்கிய மத்திய நீர்வளக் குழுமம் தான் தீர்மானிக்க முடியும் என்று தெரிவித்து, இவ்வழக்குகளை முடித்து வைப்பதாக உத்தரவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் 13.11.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து, தமிழ்நாடு அரசால் சீராய்வு மனு 11.12.2025 தேதியில் தாக்கல் செய்யப்பட்டது. அச்சீராய்வு மனுவானது முந்தைய ஆட்சிக் காலத்தில் உச்சநீதிமன்றத்தில் உள்விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு தற்சமயம் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

மேற்கண்ட தீர்ப்பு விவரங்களைக் கருத்தில் கொண்டு விரிவான சட்ட ஆலோசனைக்குப்பின் உடனடியாக எடுக்க வேண்டிய தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சனி, 23 மே, 2026

150 ஆண்டுகள் பழமையான துடியலூர் வாரச்சந்தை ; குப்பை கிடங்கு அமைக்க மாநகராட்சி முடிவு - விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு !!!

150 ஆண்டுகள் பழமையான துடியலூர் வாரச்சந்தை ; குப்பை கிடங்கு அமைக்க மாநகராட்சி முடிவு - விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு !!!

 150 ஆண்டுகள் பழமையான துடியலூர் வாரச்சந்தை ; குப்பை கிடங்கு அமைக்க மாநகராட்சி முடிவு - விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு !!!

கோவை துடியலூரில் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. திங்கட்கிழமை தோறும் கூடும் இச்சந்தையில் சுற்றுப் பகுதியில் உள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த 1000 த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அவர்கள் விளைவிக்கும் பொருட்கள் மற்றும் ஆடு மாடு உள்ளிட்டவைகளை கொண்டு வந்து விற்று வருகின்றனர். மேலும் 10 ஆயிரத்திற்கு மேற்பட பொதுமக்கள் வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்த நிலையில் இச்சந்தையில் ஒரு பகுதியை காலி செய்து அங்கு குப்பைகளை தரம்பிரிக்கும் குப்பை கிடங்கு அமைக்க மாநகராட்சி முடிவு செய்து அங்கு பணிகளை தொடங்கினர். இதையறிந்த சுற்றுவட்டார பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து சந்தை பகுதியில் ஒன்று கூடிய விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதித்து வந்தனர். இதையறிந்த துடியலூர் காவல்துறையினர் அங்கு அவர்களை மாநகராட்சி அதிகாரிகளிடம் சென்று பேச்சு வார்த்தை நடத்த அறிவுறுத்தினர்.

தொடர்ந்து துடியலூரில் உள்ள மாநகராட்சி பிரிவு அலுவலகத்தில் தலைமை பொறியாளர் விஜயகுமாரை சந்தித்து முறையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். ஏற்கனவே இவர்கள் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷை சந்தித்து மனு அளித்திருந்தனர்.

வெள்ளி, 27 மார்ச், 2026

வேலியில் மின்சாரம் பாய்ச்சி காட்டு யானை கொன்ற விவசாயிக்கு ஐந்தாண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு !!!

வேலியில் மின்சாரம் பாய்ச்சி காட்டு யானை கொன்ற விவசாயிக்கு ஐந்தாண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு !!!

 வேலியில் மின்சாரம் பாய்ச்சி காட்டு யானை கொன்ற விவசாயிக்கு ஐந்தாண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு !!!

வேலியில் மின்சாரம் பாய்ச்சி காட்டு யானையை கொன்ற விவசாயிக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கிரிமலாம் வனப்பகுதியை ஒட்டி ரங்கராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அதில் அவர் மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தார். அதற்குள் வன விலங்குகள் புகுந்து விடாமல் இருக்க இரும்பு வேலி அமைத்து இருந்தார். மேலும் தோட்டத்துக்குள் காட்டு யானை புகுவதை தடுக்க இரும்பு வேளையில் அவர் உயர் மின் அழுத்த மின்சாரம் இணைப்பு கொடுத்து உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு காட்டு யானை ஒன்று இரும்பு வேலையை துதிக்கையால் தொட்ட போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தது.

இது குறித்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து ரங்கராஜை கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்று விசாரணை நடத்தியது. இந்த வழக்கு விசாரணை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார் வேலியில் மின்சாரம் பாய்ச்சி காட்டு யானையை கொன்ற ரங்கராஜுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும், ரூபாய் 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் சி.பி.ஐ தரப்பில் வழக்கறிஞர் சுரேந்திர மோகன் ஆஜராகி வாதாடினார்.

வியாழன், 19 மார்ச், 2026

சிறுவாணி அணையின் நீர்மட்டம் சரிவு - குடிநீர் எடுக்கும் அளவு குறைப்பு !!!

சிறுவாணி அணையின் நீர்மட்டம் சரிவு - குடிநீர் எடுக்கும் அளவு குறைப்பு !!!

 சிறுவாணி அணையின் நீர்மட்டம் சரிவு - குடிநீர் எடுக்கும் அளவு குறைப்பு !!!

கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் அணையில் எடுக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.

கோவை மாநகராட்சியில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிறுவாணி, பில்லூர் 1,2 மற்றும் 3 உள்ளிட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சிறுவாணி அணை நீரானது மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 23 வார்டுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர வழியோரங்களில் உள்ள கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் பருவமழை நன்றாக பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீர் நிரம்பி காணப்பட்டன. கோவை சிறுவாணி அணையும் தண்ணீர் நிரம்பியது. இந்த அணை 49.5 அடி உயரம் கொண்டது. இருப்பினும் பாதுகாப்புக் கருதி இந்த அணையில் 44 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க கேரளா அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் கோவையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தற்பொழுது அணையின் நீர்மட்டம் 19.7 அடியாக உள்ளது. அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்தால், அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. இதன்படி தற்போது ஒரு நாளைக்கு 5 கோடி லிட்டர் மட்டுமே குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இது குறித்து குடிநீர் வடிகால் துறை அலுவலர்கள் கூறும் போது 

சிறுவாணி அணையானது கேரளா அரசின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்து உள்ளது. இந்த அணையில் இருந்து நாள்தோறும் 10 கோடி லிட்டர் தண்ணீர் குடிநீருக்காக எடுக்க முடியும், தற்பொழுது அணையின் நீர்மட்டம் 19.7 அடியாக சரிந்ததால் அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் அளவை 5 கோடி லிட்டராக குறைக்கப்பட்டு உள்ளது. நேற்று அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 20 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்தது. கோடை மழை தொடர்ந்து பெய்தால் மட்டுமே அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. அடுத்த மாதம் மே இறுதி அல்லது ஜூன் மாதம் தொடக்கத்தில் பருவமழை பெய்யும் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றனர்.