விபத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விபத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 செப்டம்பர், 2026

பாதாள சாக்கடை குழியில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த இளம் பெண்!" - ஜே.சி.பி இயந்திரம் மூலம் அதிரடி மீட்பு: கோவையில் பரபரப்பு வீடியோ!

பாதாள சாக்கடை குழியில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த இளம் பெண்!" - ஜே.சி.பி இயந்திரம் மூலம் அதிரடி மீட்பு: கோவையில் பரபரப்பு வீடியோ!

வடவள்ளி மருதமலை சாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: உயிர்த்தப்பிய அதிர்ஷ்டசாலி!

 கோவை, வடவள்ளி, மருதமலை சாலையில் பாதாள சாக்கடை பணிக்காகத் தோண்டப்பட்ட பெரிய குழிக்குள் இருசக்கர வாகனத்துடன் இளம் பெண் ஒருவர் தவறி விழுந்த நிலையில், ஜேசிபி (JCB) இயந்திர உதவியுடன் மீட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடவள்ளி மருதமலை சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காகப் பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

 இந்நிலையில், அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளம் பெண் ஒருவர் சென்று கொண்டு இருந்தார்.

​போதுமான பாதுகாப்பு எச்சரிக்கைக் பலகைகளோ அல்லது தடுப்புகளோ முறையாக அமைக்கப்படாததால், எதிர்பாராத விதமாக அந்த இளம் பெண் தனது இருசக்கர வாகனத்துடன் சாலையில் தோண்டப்பட்டு இருந்த ஆழமான பாதாள சாக்கடை குழிக்குள் தலைகுப்புற விழுந்தார்.

 திடீரென நடந்த இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குழிக்குள் விழுந்த இளம் பெண் வெளியே வர முடியாமல் தவித்ததைக் கண்ட அப்பகுதி பொதுமக்களும், மீட்புப் பணியாளர்களும் உடனடியாக அங்குத் திரண்டனர்.

​தொடர்ந்து, அருகில் அந்தப் பணிக்காக நின்று இருந்த ஜேசிபி (JCB) இயந்திரத்தின் உதவியுடன் அப்பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். 

 நல்வாய்ப்பாகப் பெரிய காயங்கள் ஏதுமின்றி அப்பெண் உயிர் தப்பினார்.

நகரின் முக்கியப் பகுதியான மருதமலை சாலையில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளோ, ஒளிரும் பட்டைகளோ இன்றி ஆபத்தான முறையில் தோண்டப்பட்டு உள்ள குழிகளால் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.


​இரவு நேரங்களில் இதுபோன்று குழிகள் தெரிவதில்லை எனவும், மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு முக்கியக் காரணம் எனவும் கூறி அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் ஆத்திரம் வெளிப்படுத்தி உள்ளனர். மேலும், இது தொடர்பான செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

"ரயிலில் இருந்து கீழே விழுந்து பயணி படுகாயம்" ; கோவையில் தொடரும் விபத்துக்கள்!

"ரயிலில் இருந்து கீழே விழுந்து பயணி படுகாயம்" ; கோவையில் தொடரும் விபத்துக்கள்!

 "ரயிலில் இருந்து கீழே விழுந்து பயணி படுகாயம்" ; கோவையில் தொடரும் விபத்துக்கள்!

படிக்கட்டில் அமர்ந்து பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை!

 கோவை அருகே உள்ள எட்டிமடை பகுதியில் ரயிலில் பயணித்துக் கொண்டு இருந்த நபர் ஒருவர் திடீரென கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் இருந்து திருச்சி நோக்கிச் சென்று கொண்டு இருந்த பயணிகள் ரயிலில் நபர் ஒருவர் பயணித்து உள்ளார். ரயில் கோவை அருகே உள்ள எட்டிமடை பகுதிக்கு வந்த போது, எதிர்பாராத விதமாக அந்த நபர் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து உள்ளார்.

​இதில் அவருக்கு தலை மற்றும் கை, கால்களில் காயம் ஏற்பட்டு இருந்தது. 

ரயில் பாதையின் அருகே நபர் ஒருவர் காயங்களுடன் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் தெரிவித்தனர்.

​தகவல் அறிந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், படுகாயம் அடைந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இதே இருகூர் பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து பயணி ஒருவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

​ரயிலின் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் அமர்ந்து கொண்டு பயணிப்பதே இதுபோன்ற தொடர் விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, ரயில்வே நிர்வாகத்தினரும் ரயில்வே காவல் துறையினரும் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்யும் பயணிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சனி, 29 ஆகஸ்ட், 2026

"நவ இந்தியாவில் அடுத்தடுத்து  7 சிலிண்டர்கள்" வெடித்து சிதறிய காட்சிகள் - 40 தகரக் கொட்டகைகள் தீக்கிரை: கோவையில் பயங்கர விபத்து!

"நவ இந்தியாவில் அடுத்தடுத்து 7 சிலிண்டர்கள்" வெடித்து சிதறிய காட்சிகள் - 40 தகரக் கொட்டகைகள் தீக்கிரை: கோவையில் பயங்கர விபத்து!

 "நவ இந்தியாவில் அடுத்தடுத்து  7 சிலிண்டர்கள்" வெடித்து சிதறிய காட்சிகள் - 40 தகரக் கொட்டகைகள் தீக்கிரை: கோவையில் பயங்கர விபத்து!

500 வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி இருந்த பகுதியில் கொழுந்து விட்டு எரிந்த தீ: நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்ப்பு!

 கோவை, நவ இந்தியா பகுதியில் வடமாநிலக் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கி இருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கோவை, நவ இந்தியா பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றின் சார்பில் 40-க்கும் மேற்பட்ட தகரக் கொட்டகைகள் அமைக்கப்பட்டு, அதில் 500-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்குச் சென்று இருந்த நேரத்தில், ஒரு கொட்டகையில் வைக்கப்பட்டு இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்துச் சிதறியது.

 இந்தத் தீ கணநேரத்தில் அடுத்தடுத்த கொட்டகைகளுக்கும் பரவியதால், அங்கு வைக்கப்பட்டு இருந்த மேலும் 6 சிலிண்டர்கள் வரிசையாக வெடித்துச் சிதறின.

மொத்தம் 7 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்துத் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதி முழுதும் அடர்ந்த புக மண்டலமாகக் காட்சி அளித்தது.

தகவல் அறிந்தவுடன் பீளமேடு மற்றும் கோவை தெற்கு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 4 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

தகரக் கொட்டகைகளை உடைத்து, பல மணி நேரம் போராட்டத்திற்குப் பின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விபத்து நடந்த நேரத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று இருந்ததாலும், அங்கு இருந்த சிலர் உடனடியாக வெளியேறியதாலும் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித உயிர்ச்சேதமும் அல்லது காயமும் ஏற்படவில்லை என காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

ஒரே நேரத்தில் 7 சிலிண்டர்கள் வெடித்துத் தகரக் கொட்டகைகள் முற்றிலும் தீக்கிரையான இந்தச் சம்பவம் கோவை நகர்ப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

புதன், 26 ஆகஸ்ட், 2026

நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

 நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இருந்த 3 வேன்களில் நேபாளம் சென்ற 37 பேர் நிலைமை என்னவென்று தற்போது தெரியவில்லை என்று அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 நேபாளத்திற்கு சுற்றுலா சென்று, அங்கு ஏற்பட்டு உள்ள பெருவெள்ளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்து உள்ளார்.

திபெத் பகுதியில் இருந்து போட்டே கோஷி ஆறு, நேபாளத்தில் உள்ள ராசுவா, தாடிங், நுவாகோட் ஆகிய மாவட்டங்கள் வழியாக பாய்கிறது. அந்த ஆற்றில், உள்ளூர் நேரப்படி இன்று காலை 9 மணிக்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளத்தால் கரையோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், பல நீர்மின் உற்பத்தி நிலையங்கள் சேதம் அடைந்து உள்ளன.

இதை அடுத்து, நேபாள பிரதமர் பாலேந்திர ஷா அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டு உள்ளார். அவருடைய உத்தரவுப்படி, நேபாள ராணுவம், ஆயுத காவல் படை, நேபாள காவல் துறை ஆகியவை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் களமிறங்கி உள்ளன. ராசுவா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, 5 மருத்துவர்கள் உள்பட 16 பேர் கொண்ட மருத்துவக் குழுவினரும் விரைந்து உள்ளனர்.

இந்த திடீர் வெள்ளத்தால் நேபாளத்திற்கு சுற்றுலா வந்த பலர் மாயமாகி இருப்பதாக அந்நாட்டு சுற்றுலா வாரியம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "291 வெளிநாட்டினர், 93 நேபாள நாட்டினர் என மொத்தம் 384 பேர் மாயமாகி உள்ளனர்.

வெளிநாடுகளை சேர்ந்தவர்களில், 105 பேர் இந்தியர்கள், 37 பேர் வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆவர். மற்றவர்கள், அமெரிக்கா, மலேசியா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள்

இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 57 பேர் இந்த பெருவெள்ளத்தில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இவர்கள் அனைவரும், கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் 'சூப்பர் யாத்திரை ஏஜென்சி' மூலம் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் திருச்சி, சென்னை, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், பாண்டிச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர், ஓசூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று ஏஜென்சி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 23 ஆம் தேதி மூன்று வேன்கள் மூலம் அவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். நேபாளம் - சீனா எல்லை அருகே சென்று கொண்டு இருந்த போது வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வேன்களும் சிக்கி உள்ளன.

அதில் ஒரு வேனில் பயணம் செய்த 20 பேர் தப்பித்து கரை ஒதுங்கி உள்ளனர். மீதமுள்ள இரண்டு வேன்களில் பயணம் செய்த 37 பேர் நிலைமை என்னவென்று தற்போது வரை தெரியவில்லை. 15 பேர், அங்கு உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறனர் என்று நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

20 பேர் பத்திரமாக உள்ளனர்

இந்நிலையில், நேபாளத்திற்கு சென்றவர்களில் 20 பேர் பத்திரமாக இருப்பதாகவும், மற்றவர்களை தேடி வருவதாகவும் அங்கு இருந்து தகவல் வந்து இருப்பதாக டிராவல்ஸ் உரிமையாளர் சாதிக் அலி தெரிவித்தார்.

இதேபோல், நேபாளத்திற்கு சென்றவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருவதாக வட்டாட்சியர் பூங்கொடி தெரிவித்து உள்ளார்.

கட்டணமில்லா உதவி எண்கள் அறிவிப்பு

இதைத்தொடர்ந்து, நேபாள சுற்றுலா வாரியம், கட்டணமில்லா உதவி எண்களை அறிவித்து உள்ளது. உதவிக்கு 1234 அல்லது ஹாட்லைன் தொலைபேசி எண் 1144 அல்லது சுற்றுலா காவல் துறை எண் 98512 89445 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு உதவி எண்கள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நல ஆணையரகமும் 24 மணி நேர உதவி எண்களை அறிவித்து உள்ளது.

கட்டணமில்லா தொலைபேசி எண்கள்

இந்தியா: 1800 309 3793

வெளிநாட்டில் இருந்து தொடர்புகொள்ள:

+91 8069009901 / 08069009901, மிஸ்டு கால் : +91 8069009900 / 08069009900, தமிழ்நாடு இல்லம் புதுடெல்லி- 92895 16712 (கட்டுப்பாட்டு அறை) ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளன.

மத்திய அரசு அளித்து உள்ள உதவி எண்கள்

+977 985 131 6807, +977 970 910 7500

தமிழர்களை மீட்க நடவடிக்கை- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

இந்நிலையில் நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், 

"நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.


மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டு உள்ளார்.

"நிறுத்தி வைக்கப்பட்ட பைக் மீது பாய்ந்த கார்" ; கோவையில் மனிதாபிமானமின்றிச் சென்ற ஓட்டுநர் - வைரலாகும் வீடியோ!

"நிறுத்தி வைக்கப்பட்ட பைக் மீது பாய்ந்த கார்" ; கோவையில் மனிதாபிமானமின்றிச் சென்ற ஓட்டுநர் - வைரலாகும் வீடியோ!

 "நிறுத்தி வைக்கப்பட்ட பைக் மீது பாய்ந்த கார்" ; கோவையில் மனிதாபிமானமின்றிச் சென்ற ஓட்டுநர் - வைரலாகும் வீடியோ!

"குழந்தைகளோ முதியவர்களோ இருந்து இருந்தால்?" - நெட்டிசன்களின் கொந்தளிப்பும் சமூக வலைதளக் கண்டனமும்!

 கோவை, சரவணம்பட்டி பகுதியில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த கார் மோதித் தள்ளி விட்டு, நிற்காமல் கடந்து சென்ற சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, சரவணம்பட்டி பகுதியில் மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில், இருசக்கர வாகனம் ஒன்று வழக்கம்போல் ஓரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்று, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, ஓரமாக நின்ற இருசக்கர வாகனத்தின் மீது பலமாக இடித்துத் தள்ளியது. விபத்து நடந்த பிறகும், காரை நிறுத்தாமல் எதுவும் நடக்காதது போல ஓட்டுநர் அங்கு இருந்து வாகனத்தை வேகமாக இயக்கிச் சென்று உள்ளார்.

இந்த விபத்து தொடர்பான சி.சி.டி.வி அல்லது வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

"ஒருவேளை அந்தச் சமயத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் அருகில் குழந்தைகளோ ? அல்லது முதியவர்களோ ? நின்று இருந்தால் அவர்களின் நிலை என்னவாகி இருக்கும் ? மனிதாபிமானமே இல்லாமல் விபத்தை ஏற்படுத்தி விட்டுப் தப்பிச் செல்லும் இதுபோன்ற வாகன ஓட்டிகளால் தான் சாலையில் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகின்றன" என அப்பகுதி மக்கள் ஆத்திரத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதேபோன்று விபத்து ஏற்படுத்தி விட்டுத் தப்பியோடும் அலட்சியப் போக்கு கொண்ட வாகன ஓட்டிகளைக் காவல் துறையினர் சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் உடனடியாகக் கண்டறிந்து, அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதுடன் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

முன்னால் சென்ற லாரி மீது பாய்ந்த சொகுசு கார்" - கோவை எல் & டி பைபாஸில் நள்ளிரவில் கொடூர விபத்து: அதிர்ச்சி தரும் சி.சி.டி.வி காட்சி!

முன்னால் சென்ற லாரி மீது பாய்ந்த சொகுசு கார்" - கோவை எல் & டி பைபாஸில் நள்ளிரவில் கொடூர விபத்து: அதிர்ச்சி தரும் சி.சி.டி.வி காட்சி!

 "முன்னால் சென்ற லாரி மீது பாய்ந்த சொகுசு கார்" - கோவை எல் & டி பைபாஸில் நள்ளிரவில் கொடூர விபத்து: அதிர்ச்சி தரும் சி.சி.டி.வி காட்சி!

கார் நொறுங்கிப் பயணிகள் படுகாயம்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!

​ கோவை, எல் அண்ட் டி பைபாஸ் சாலை பட்டணம் பகுதியில் நேற்று நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார், முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதிய விபத்தின் அதிர்ச்சி தரும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

கோவை எல் & டி பைபாஸ் சாலையின் பட்டணம் பகுதியில் நேற்று நள்ளிரவு வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்த நேரத்தில், லாரி ஒன்று வழக்கமான வேகத்தில் சென்று கொண்டு இருந்தது.

​அப்போது, அதே திசையில் பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறத்தில் பலமாக மோதி விபத்துக்கு உள்ளானது.

மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்து முற்றிலும் உருக்குலைந்தது. இந்தச் சம்பவத்தில் காரில் பயணித்தவர்கள் படுகாயம் அடைந்தனர்.

​அங்கு இருந்தவர்கள் உடனடியாகப் படுகாயமடைந்தவர்களை மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லாரியின் பின்புறத்தில் கார் பயங்கரமாக மோதும் அதிர்ச்சியூட்டும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன.

​இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணமா ? அல்லது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் காரை இயக்கியதால் இந்த அசம்பாவிதம் நடந்ததா ? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

மின் கம்பத்தில் மோதி காரில் கொழுந்து விட்டு எறிந்த தீ!" - கோவையில் அவினாசிலிங்கம் - GCT சாலையில் அதிர்ச்சி விபத்து!

மின் கம்பத்தில் மோதி காரில் கொழுந்து விட்டு எறிந்த தீ!" - கோவையில் அவினாசிலிங்கம் - GCT சாலையில் அதிர்ச்சி விபத்து!

 "மின் கம்பத்தில் மோதி காரில் கொழுந்து விட்டு எறிந்த தீ!" - கோவையில் அவினாசிலிங்கம் - GCT சாலையில் அதிர்ச்சி விபத்து!

கார் முற்றிலும் எரிந்து சாம்பல்: பெண் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!

 கோவை, அவினாசிலிங்கம் கல்லூரியில் இருந்து GCT கல்லூரி செல்லும் சாலையில் பெண் ஓட்டிச் சென்ற சொகுசு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. காரை ஓட்டிச் சென்ற பெண் அதிர்ஷ்டவசமாக எவ்விதக் காயமுமின்றி உயிர் தப்பினார்.

கோவை வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தா (50). இவர் இன்று பிற்பகல் நேரத்தில் அவினாசிலிங்கம் கல்லூரியில் சாலையில் இருந்து GCT கல்லூரி நோக்கித் தனது காரில் சென்று கொண்டு இருந்தார். ​அப்போது, வெங்கடாபுரம் அருகே கார் வந்த போது எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் காரின் முன்பகுதியில் இருந்து திடீரெனப் புகை வெளியேறி, நொடிப் பொழுதில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தா, உடனடியாகச் சமயோசிதமாக காரில் இருந்து வெளியே குதித்துத் தப்பினார்.

​தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்துவதற்குள் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

விபத்து நடந்த நேரம் பிற்பகல் வேளை என்பதால், அந்தச் சாலையில் ஆள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து குறைவாகவே இருந்தது. இதனால் மிகப்பெரிய உயிர்ச்சேதமும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது.

​இச்சம்பவம் குறித்து போக்குவரத்து பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

கோவையில் டயர் வெடித்துக் கவிழ்ந்த லாரி" ; அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபிய ஓட்டுனர் -  சாலையில் நடுரோட்டில் கொட்டிய தேங்காய்கள்!

கோவையில் டயர் வெடித்துக் கவிழ்ந்த லாரி" ; அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபிய ஓட்டுனர் - சாலையில் நடுரோட்டில் கொட்டிய தேங்காய்கள்!

 கோவையில் டயர் வெடித்துக் கவிழ்ந்த லாரி" ; அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபிய ஓட்டுனர் -  சாலையில் நடுரோட்டில் கொட்டிய தேங்காய்கள்!

 கோவை, உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கிச் சென்ற தேங்காய் லோடு ஏற்றி வந்த ஈச்சர் லாரி, திடீரென டயர் வெடித்துச் சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

 லாரியில் இருந்த தேங்காய்கள் சாலை முழுவதும் கொட்டிக் கிடந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கோவை, உக்கடம் பகுதியில் இருந்து கரும்புக்கடை செல்லும் பிரதான சாலையில், நேற்று இரவு பாரம் ஏற்றிய ஈச்சர்  லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. லாரியில் முழுவதும் தேங்காய்கள் ஏற்றிச் செல்லப்பட்டன.

​கரும்புக்கடை அருகே லாரி வந்த போது, எதிர்பாராத விதமாக லாரியின் டயர் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் நிலைகுலைந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

லாரி கவிழ்ந்து அதில் ஏற்றி வரப்பட்ட தேங்காய்கள் சிதறிச் சாலை முழுவதும் கொட்டிக் கிடந்தன. நல்லவேளையாக, லாரி கவிழ்ந்த நேரத்தில் அருகில் பிற வாகனங்கள் எதுவும் நெருக்கமாக வராததால் மிகப்பெரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. 

லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

உடனடியாக அங்கு இருந்தவர்கள் சாலையில் சிதறிக் கிடந்த தேங்காய்களை அப்புறப்படுத்தி போக்குவரத்திற்கு சாலையை சரி செய்தனர்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2026

வால்பாறை மலைச் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து : 12 பேர் காயங்களுடன் தப்பினர்!

வால்பாறை மலைச் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து : 12 பேர் காயங்களுடன் தப்பினர்!

 வால்பாறை மலைச் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து : 12 பேர் காயங்களுடன் தப்பினர்!

1-வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த வேன் : பாம்பன் சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி!

  வால்பாறை மலைச் சாலையில், ராமநாதபுரம் மாவட்டம் பம்பன் பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பயணித்த மேக்ஸி கேப் வேன் பிரேக் பிடிக்காமல் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியில் இருந்து 19 பேர் கொண்ட குழுவினர் 4 நாள் பயணமாக வால்பாறைக்குச் சுற்றுலா வந்து இருந்தனர். சுற்றுலா முடிந்து மீண்டும் பொள்ளாச்சி வழியாகச் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டு இருந்த போது, மாலை 5.45 மணி அளவில் கடம்பாறை காவல் எல்லைக்கு உட்பட்ட 1-வது கொண்டை ஊசி வளைவில் (SH-78) வேன் வந்து கொண்டு இருந்தது.

அப்போது, வாகனத்தை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஷேக் அகமது (28) என்பவரது கட்டுப்பாட்டை இழந்து, பிரேக் பிடிக்காததால் வேன் சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆழியார் மற்றும் கடம்பாறை போலீஸார், வனத்துறையினருடன் இணைந்து காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைவரும் சிகிச்சைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது:

 ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன், பகுதியைச் சேர்ந்த சாமினி (36), கெம்சிலின் (29), எகித் ராணி (58), சூசை வியாகுலம் (62), சந்தியா மேரி (70), ஜான் மேக்லோவின் (45),

கெவின் (51), 9 வயது குழந்தைகள் இரண்டு, 13, 14 வயது குழந்தை ஆகிய நான்கு குழந்தைகள் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த அசோக் குமார்,

நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. விபத்து காரணமாக மலைச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 வால்பாறை உட்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் (DSP) மற்றும் காவல் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 இச்சம்பவம் குறித்துக் கடம்பாறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

கோவையில் ரயிலில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் பலி ; மேற்பார்வையாளர், பாதுகாப்புக் கருவிகள் இன்றி பணியில் அமர்த்திய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் !!!

கோவையில் ரயிலில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் பலி ; மேற்பார்வையாளர், பாதுகாப்புக் கருவிகள் இன்றி பணியில் அமர்த்திய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் !!!

 கோவையில் ரயிலில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் பலி ; மேற்பார்வையாளர், பாதுகாப்புக் கருவிகள் இன்றி பணியில் அமர்த்திய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் !!!

​ கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த இரண்டு பெண் பணியாளர்கள், ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியில் துப்புரவுப் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் துடியலூர் பகுதியைச் சேர்ந்த யசோதா (24) மற்றும் ஊட்டியைச் சேர்ந்த கவிதா (43) ஆகிய இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

​அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியே வந்த ரயில் மோதியதில், தூக்கி வீசப்பட்ட யசோதா மற்றும் கவிதா ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களது உடல் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ரயில்வே தண்டவாளங்கள் போன்ற அதிக ஆபத்தான பகுதிகளில் தூய்மைப் பணி மேற்காள்ளும் போது, ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ​எச்சரிக்கை அளிக்கத் தகுந்த மேற்பார்வையாளர்கள் (Supervisor) நியமிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

​தூரத்தில் இருந்தே ரயில்களை எச்சரிக்க மற்றும் பணியாளர்களை அடையாளம் காண சிவப்புக் கொடி மற்றும் பாதுகாப்புச் சட்டைகள் (Safety Coats) வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.

​ஆனால், எந்தவித அடிப்படைப் பாதுகாப்புக் கருவிகளுமின்றி, மேற்பார்வையாளரையும் நியமிக்காமல் இரு பெண்களையும் பணியில் அமர்த்தியதே இந்த கொடூர விபத்திற்குக் காரணம் எனக் சமூக ஆர்வலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உயிர்ப்பலிக்குக் காரணமான சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், பலியான பணியாளர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கி, அலட்சியமாகச் செயல்பட்ட ஒப்பந்ததாரர் மீது கடுமையான சட்டப் பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

கோவையில் பரபரப்பு : டவுன்ஹால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மரம் முறிந்து விழுந்து ஆட்டோ சேதம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள் !!!

கோவையில் பரபரப்பு : டவுன்ஹால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மரம் முறிந்து விழுந்து ஆட்டோ சேதம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள் !!!

 கோவையில் பரபரப்பு : டவுன்ஹால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மரம் முறிந்து விழுந்து ஆட்டோ சேதம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள் !!!

 கோவை, டவுன்ஹால் பகுதியில் அமைந்து உள்ள மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் இருந்த பழமையான மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்ததில், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ பலத்த சேதமடைந்தது.

கோவை டவுன்ஹால் பகுதியில் மாநகராட்சி பிரதான அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகள் பழமையான மரங்கள் உள்ளன. இந்நிலையில், இன்று பிற்பகல் வேளையில் வளாகத்திற்குள் இருந்த பெரிய மரம் ஒன்றின் ராட்சதக் கிளைகள் திடீரென வேரோடு முறிந்து வெளியே சாலையில் விழுந்தது.

​அப்போது அந்த வழியே சென்று கொண்டு இருந்த மற்றும் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ ஒன்று, மரத்தின் அடியில் சிக்கி பலத்த சேதம் அடைந்தது.

காலை நேரம் என்பதால் மாநகராட்சி அலுவலகத்திற்குச் பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் நடமாட்டம் தொடங்கத் தொடங்கிய நேரத்தில் இச்சம்பவம் நடைபெற்றது.

 இருப்பினும், நல்ல வேளையாக மரம் விழும் சத்தம் கேட்டு ஆட்டோ ஓட்டுநரும், அருகில் இருந்த பொதுமக்களும் உடனடியாகச் விலகி ஓடியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், மரம் அறுக்கும் எந்திரங்கள் மூலம் மரக்கிளைகளை வெட்டி அகற்றினர்.

​மழை மற்றும் காற்று காரணமாக மரங்கள் முறிய வாய்ப்பு உள்ளதால், மாநகராட்சி அலுவலக வளாகம் மற்றும் நகரின் பிரதான பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ள காய்ந்த மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 "காரை இழுத்துச் சென்ற லாரி" - தமிழக-கேரளா தேசிய நெடுஞ்சாலையில் திகிலூட்டும் விபத்து !!!

"காரை இழுத்துச் சென்ற லாரி" - தமிழக-கேரளா தேசிய நெடுஞ்சாலையில் திகிலூட்டும் விபத்து !!!

 "காரை இழுத்துச் சென்ற லாரி" - தமிழக-கேரளா தேசிய நெடுஞ்சாலையில் திகிலூட்டும் விபத்து !!!

லாரியின் பின்புறம் சிக்கிய கார்: கண்டுகொள்ளாமல் இயக்கிய ஓட்டுநர் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ !!!

​ தமிழக - கேரளா தேசிய நெடுஞ்சாலையில், லாரியின் பின்புறம் கார் ஒன்று சிக்கிக் கொண்ட நிலையிலும், அதனை கவனிக்காமல் லாரி ஓட்டுநர் வாகனத்தைத் தொடர்ந்து இயக்கிச் சென்ற அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக - கேரளா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கனரக லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, லாரியின் பின்புறம் அதிவேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பகுதியில் பலமாக மோதிச் சிக்கிக் கொண்டது.

​ஆனால், காரின் மோதிய சத்தத்தையோ ? அல்லது பின்னால் கார் சிக்கி இருந்ததையோ ? லாரி ஓட்டுநர் கண்டுகொள்ளாமல் லாரியைத் தொடர்ந்து இயக்கிச் சென்று உள்ளார். 

இதனால் விபத்துக்கு உள்ளான கார், லாரியின் பின்புறம் இழுத்துச் செல்லப்பட்டது.

இந்தத் திகிலூட்டும் காட்சியை, அந்த லாரிக்கு பின்னால் வந்த மற்றொரு காரில் இருந்த பயணிகள் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து உள்ளனர்.

 தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சாலையில் வாகனங்களை இயக்கும் போது பின்னால் என்ன நடக்கிறது ? என்பதைக் கூட கவனிக்காமல் அஜாக்கிரதையாக லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநரின் மெத்தனப் போக்கையும், அதே வேளையில் சாலையில் லாரிக்கு பின்னால் பாதுகாப்பான இடைவெளி விட்டு கவனமாக காரை இயக்காத கார் ஓட்டுநரின் தவறை சுட்டிக்காட்டியும் வாகன ஓட்டிகளும், இணையவாசிகளும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தமிழக - கேரளா எல்லையான வாளையார் அருகே கொடூரம் : ரயிலில் மோதி தாய், குட்டி யானையும் பரிதாப பலி - மங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து வனத்துறையினர் தீவிர விசாரணை !!!

தமிழக - கேரளா எல்லையான வாளையார் அருகே கொடூரம் : ரயிலில் மோதி தாய், குட்டி யானையும் பரிதாப பலி - மங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து வனத்துறையினர் தீவிர விசாரணை !!!

 தமிழக - கேரளா எல்லையான வாளையார் அருகே கொடூரம் : ரயிலில் மோதி தாய், குட்டி யானையும் பரிதாப பலி - மங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து வனத்துறையினர் தீவிர விசாரணை !!!

 கேரளா எல்லைப் பகுதியான வாளையார் அருகே மங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், தாய் யானையும் அதன் குட்டி யானையும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியான சோக சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

இன்று காலை சுமார் 11:40 மணி அளவில், தமிழக எல்லையில் இருந்து வெறும் 300 முதல் 400 மீட்டர் தொலைவில் உள்ள கேரளா மாநில எல்லைக்கு உட்பட்ட வாளையார் - சாவடிப்பாரா புதுப்பதி ரயில்வே தண்டவாளப் பகுதியில் காட்டு யானைகள் கடக்க முயன்று உள்ளன.

​அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த 'மங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ்' ரயில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தாய் யானை மற்றும் குட்டி யானை மீது பலமாக மோதியது.

 இதில் தூக்கி வீசப்பட்ட இரண்டு யானைகளும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

சம்பவம் கேரளா எல்லைக்குள் நடந்து உள்ள போதிலும், தமிழக எல்லையை ஒட்டிய பகுதி என்பதால் வாளையார் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

​ரயில் மோதி யானைகள் பலியான சம்பவம் குறித்து வாளையார் வனத்துறையினர் மற்றும் கேரளா வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய ரயில்வே தண்டவாளங்களில் ரயில்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வரும் நிலையில், மீண்டும் ஒரு சோக சம்பவம் நடந்து உள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

கோவையில் காருக்குள் விளையாடிய சிறுவன் - கதவு தானாக மூடிக் கொண்டதால் மூச்சுத்திணறி உயிரிழப்பு !!!

கோவையில் காருக்குள் விளையாடிய சிறுவன் - கதவு தானாக மூடிக் கொண்டதால் மூச்சுத்திணறி உயிரிழப்பு !!!

 கோவையில் காருக்குள் விளையாடிய சிறுவன் - கதவு தானாக மூடிக் கொண்டதால் மூச்சுத்திணறி உயிரிழப்பு !!!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், சிறுமுகையை அடுத்து உள்ள பெத்திக்குட்டை - இரும்பறை சாலையில் தோட்டத்துடன் கூடிய வீட்டில் வசித்து வருபவர் வேலுமணி(38). இவருக்கு சுமதி (35) என்ற மனைவியும், 14 வயதில் ஒரு மகளும், 9 வயதில் முகுந்த் என்ற மகனும் உள்ளனர். மகள் 9 ஆம் வகுப்பும், மகன் முகுந்த் 4 ஆம் வகுப்பும் பெத்திக்குட்டை அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.

வேலுமணி இரும்பறை ஊராட்சியில் குடிநீர் ஆபரேட்டராக பணி புரிந்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல வேலுமணி பணிக்கு சென்று விட்ட நிலையில் அவரது மனைவி சுமதி அருகில் இருந்த உறவினர் இல்லத்திற்கு சென்று உள்ளார். மகளும் பள்ளிக்கு சென்று உள்ளார்.

வீட்டில் பாட்டியும் சிறுவனும் மட்டுமே தனியே இருந்து உள்ளனர். பாட்டி வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கி விட்ட நிலையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த காரில் சிறுவன் முகுந்த் உள்ளே ஏறி விளையாடி கொண்டு இருந்து உள்ளார். 

அப்போது, எதிர்பாராத விதமாக காரின் கதவு தானாக மூடிக் கொண்டு உள்ளது. பாட்டியும் உறங்கி கொண்டு இருந்ததால் சிறுவன் காரில் சிக்கியது தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.

சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்த சுமதி பார்த்த போது காருக்குள் சிறுவன் முகுந்த் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு உடனடியாக அவரை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிறுமுகையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

உடனடியாக மாணவன் முகுந்த் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இச்சம்பவம் குறித்து சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரின் கதவு தானாக மூடிக்கொண்டதால் உள்ளே விளையாடிய சிறுவன் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

பொள்ளாச்சி அருகே நடுரோட்டில் நின்று கொண்டு இருந்த லாரி மீது கார் மோதி கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி - போலிசார் தீவிர விசாரணை !!!

பொள்ளாச்சி அருகே நடுரோட்டில் நின்று கொண்டு இருந்த லாரி மீது கார் மோதி கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி - போலிசார் தீவிர விசாரணை !!!

 பொள்ளாச்சி அருகே நடுரோட்டில் நின்று கொண்டு இருந்த லாரி மீது கார் மோதி கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி - போலிசார் தீவிர விசாரணை !!!

 பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், நெடுஞ்சாலைச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்காக நின்று கொண்டு இருந்த லாரியின் பின்புறம் கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (45). இவரது மனைவி பூரணி என்ற உமாமகேஸ்வரி (39), இவர்களது மகள்கள் நர்மதா (20), ஆர்த்தி (19) மற்றும் உறவினரான ராமன் ஆகிய 5 பேரும் இன்று காரில் பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலை வழியே பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

கார், பொள்ளாச்சி அருகே நல்லாம்பள்ளி என்ற பகுதி வழியே சென்று கொண்டு இருந்த போது, அங்குச் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் (Medians) வைக்கப்பட்டு உள்ள செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்காக லாரி ஒன்று நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக, அதிவேகமாக வந்த கார் நின்று கொண்டு இருந்த லாரியின் பின்புறம் பலமாக மோதியது.

இந்தக் கோர விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியதில், காரில் இருந்த கனகராஜ், உமாமகேஸ்வரி, நர்மதா, ஆர்த்தி மற்றும் ராமன் ஆகிய 5 பேரும் உடல் நசுங்கிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோமங்கலம் காவல் நிலையப் போலீசார், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 5 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கோமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளி, 31 ஜூலை, 2026

கோவையில் பந்தல் அலங்கார குடோனில் பயங்கர தீ விபத்து ; பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து சாம்பல் – 3 மணி நேரம் போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள் !!!

கோவையில் பந்தல் அலங்கார குடோனில் பயங்கர தீ விபத்து ; பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து சாம்பல் – 3 மணி நேரம் போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள் !!!

 கோவையில் பந்தல் அலங்கார குடோனில் பயங்கர தீ விபத்து ; பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து சாம்பல் – 3 மணி நேரம் போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள் !!!

30 ஆண்டுகளாக இயங்கி வந்த குடோனில் நள்ளிரவு விபத்து : சரவணம்பட்டி போலீசார் தீவிர விசாரணை !!!

 கோவை, சரவணம்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பந்தல் அலங்காரப் பொருட்கள் குடோனில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் தீவிரமாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

​கோவை, கணபதி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த ஓ. செல்வம் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் சேர்ந்து, கடந்த 30 ஆண்டுகளாகச் சரவணம்பட்டி கெளமார மடாலயம் அருகே பந்தல் அலங்காரப் பொருட்கள் வைக்கும் குடோனை நடத்தி வருகின்றனர்.

 இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் குடோனைப் பூட்டி விட்டுச் சென்ற நிலையில், இரவில் திடீரெனக் குடோனுக்குள் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

​பந்தல் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டு இருந்த மூங்கில் மரங்கள், துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மரப் சாமான்களில் தீ வேகத்தில் பரவி, குடோன் முழுவதையும் சூழ்ந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

​தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கணபதி மற்றும் தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள், தண்ணீரைப் பாய்ச்சி அடித்துச் சுமார் 3 மணி நேரம் தீவிரமாகப் போராடித் தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

 இருப்பினும், இந்த விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அலங்காரப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

 அதிர்ஷ்டவசமாக இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்துச் சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சனி, 25 ஜூலை, 2026

நள்ளிரவில் சோகம்... பிக்கப் வாகனத்தில் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் துடிதுடித்துப் பலி: கோவை கொடூர விபத்து - மற்றொரு இளைஞர் உயிருக்குப் போராட்டம் !!!

நள்ளிரவில் சோகம்... பிக்கப் வாகனத்தில் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் துடிதுடித்துப் பலி: கோவை கொடூர விபத்து - மற்றொரு இளைஞர் உயிருக்குப் போராட்டம் !!!

நள்ளிரவில் சோகம்... பிக்கப் வாகனத்தில் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் துடிதுடித்துப் பலி: கோவை கொடூர விபத்து - மற்றொரு இளைஞர் உயிருக்குப் போராட்டம் !!!

கோவை பங்கஜா மில் சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மற்றொரு இளைஞர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை பங்கஜா மில் சாலையில் நேற்று இரவு இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே சாலையில் வந்த பிக்கப் வாகனம் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மற்றொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உயிரிழந்த இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவரது அடையாளம் மற்றும் சொந்த ஊர் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிக்கப் வாகன ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வியாழன், 23 ஜூலை, 2026

பலியான செவிலியர் கல்லூரி மாணவி ; எல்&டி பைபாஸில் ராங் ரூட்டில் சீறிப்பாய்ந்த டிப்பர் லாரி - கோவையில் சோகம் !!!

பலியான செவிலியர் கல்லூரி மாணவி ; எல்&டி பைபாஸில் ராங் ரூட்டில் சீறிப்பாய்ந்த டிப்பர் லாரி - கோவையில் சோகம் !!!

 பலியான செவிலியர் கல்லூரி மாணவி ; எல்&டி பைபாஸில் ராங் ரூட்டில் சீறிப்பாய்ந்த டிப்பர் லாரி - கோவையில் சோகம் !!!

மதிய உணவு முடித்து திரும்பிய போது நேர்ந்த கோர விபத்து : தப்பிய டிரைவர் பிடிபட்டார் – 2 மாணவிகள் படுகாயத்துடன் சிகிச்சை !!!

 கோவை, மதுக்கரை காவல் எல்லைக்கு உட்பட்ட எல் & டி பைபாஸ் சாலையில், அபிராமி செவிலியர் கல்லூரி அருகே தவறான பாதையில் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதியதில், இரண்டாம் ஆண்டு செவிலியர் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவருடன் வந்த இரண்டு மாணவிகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அனுஸ்ரீ (21) என்ற மாணவி, சுந்தராபுரத்தில் உள்ள அபிராமி செவிலியர் கல்லூரியில் பி.எஸ்சி (நர்சிங்) இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இன்று மதியம் சுமார் 1.30 மணி அளவில், மதிய உணவு உண்பதற்காக விடுதிக்குச் சென்று விட்டு, சக மாணவிகளான தேவிகா (21) மற்றும் ஸ்ரீதரணி (21) ஆகியோருடன் கல்லூரிக்குத் திரும்பிக் கொண்டு இருந்தார்.

 அவர்கள் கல்லூரி எதிரே உள்ள எல் & டி பைபாஸ் சாலையைக் கடக்க முயன்ற போது, கொச்சினில் இருந்து சேலம் நோக்கித் தவறான பாதையில் அசாத்திய வேகத்திலும் அலட்சியமாகவும் வந்த டிப்பர் லாரி ஒன்று மாணவிகள் மீது சடாரென மோதியது.

இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே அனுஸ்ரீ இரத்த வெள்ளத்தில் பலியானார். வலது தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்ட தேவிகாவும், லேசான காயம் அடைந்து அதிர்ச்சியில் உறைந்த ஸ்ரீதரணியும் மீட்கப்பட்டுச் சுந்தராபுரத்தில் உள்ள அபிராமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பியோட முயன்ற கோவை மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பால்ராஜ் (40) என்பவரைக் கீழே விழுந்து காயம் அடைந்த நிலையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் சுற்றி வளைத்துப் பிடித்தனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மதுக்கரை காவல் துறையினர், லாரியைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சனி, 18 ஜூலை, 2026

நள்ளிரவில் பயங்கரம்... அடுத்தடுத்து வெடித்துச் சிதறிய 2 கேஸ் சிலிண்டர்கள்; 4 ஓட்டு வீடுகள் சாம்பலாகி விபத்து: கோவையில் பணம், நகை பொருள்கள் தீக்கிரை !!!

நள்ளிரவில் பயங்கரம்... அடுத்தடுத்து வெடித்துச் சிதறிய 2 கேஸ் சிலிண்டர்கள்; 4 ஓட்டு வீடுகள் சாம்பலாகி விபத்து: கோவையில் பணம், நகை பொருள்கள் தீக்கிரை !!!

 நள்ளிரவில் பயங்கரம்... அடுத்தடுத்து வெடித்துச் சிதறிய 2 கேஸ் சிலிண்டர்கள்; 4 ஓட்டு வீடுகள் சாம்பலாகி விபத்து: கோவையில் பணம், நகை பொருள்கள் தீக்கிரை !!!

சமைக்கும் போது ஏற்பட்ட கேஸ் கசிவால் நேர்ந்த விபரீதம்; தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்; போலீஸ் விசாரணை !!!

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் நேற்று இரவு 2 வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த கவுண்டம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் அடுத்தடுத்து இருந்த 4 ஓட்டு வீடுகள் எரிந்து தீக்கிரையாயின. இதில் ஒரு வீட்டில் இருந்த 50 ஆயிரம் பணம் மற்றும் 4 சவரன் தங்க நகைகள் தீயில் எரிந்தாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்து தொடர்பாக துடியலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் 4 லைன் ஓட்டு வீடுகள் உள்ளன. இதில் தமிழர்கள் மற்றும் வட மாநிலத்தவர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் அங்கு குடியிருக்கும் நாகராஜ் என்பவரது வீட்டில் சமைத்துக் கொண்டிருக்கும் போது கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாக கவுண்டம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ மல மல பரவி அருகில் இருந்த மற்ற வீடுகளிலும் பற்றி எறிய தொடங்கியது.

அப்போது அருகில் இருந்த மற்றொரு வீட்டின் எரிவாயு சிலிண்டரும் வெடித்து சிதறியது. சுமார் 2 மணி நேரம் போராடிய தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதில் நான்கு ஓட்டு வீடுகளும் எரிந்து நாசமாயின. தீ விபத்து ஏற்பட்டதும் அருகில் இருந்த வீட்டார் வெளியில் ஓடி வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. 

இதில் ஒரு வீட்டில் இருந்த 50,000 பணம் மற்றும் நான்கு சவரன் தங்க நகை எரிந்ததாக கூறப்படுகிறது.  இந்த தீ விபத்து தொடர்பாக விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா என துடியலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.

புதன், 15 ஜூலை, 2026

மதுரையில் கோர விபத்து: ஆம்னி - அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதல்; 6 பேர் உயிரிழப்பு !!!

மதுரையில் கோர விபத்து: ஆம்னி - அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதல்; 6 பேர் உயிரிழப்பு !!!

 மதுரையில் கோர விபத்து: ஆம்னி - அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதல்; 6 பேர் உயிரிழப்பு !!!

கொட்டாம்பட்டி அருகே தனியார் ஆம்னி பேருந்து, தமிழ்நாடு அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுத்தியதில், சம்பவ இடத்திலேயே பெண் உள்பட 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரம் நான்கு வழிச்சாலையில், இன்று திங்கட்கிழமை (ஜூலை 13) அதிகாலை சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி கே.எம்.ஆர் டிரான்ஸ் (KMR Tranz) எனும் தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டு இருந்தது. கீழ் மற்றும் மேல்தள படுக்கை வசதி கொண்ட இந்த பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பை மீறி, எதிர் திசையில் சாலையில் நுழைந்து உள்ளது.

அப்போது, திருச்சிராப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது, தனியார் ஆம்னி பேருந்து வேகமாக மோதி, பயங்கர விபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில், 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 5 பேர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்ததாக நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் உறுதி செய்தனர்.

அரசு பேருந்து மீது மோதிய வேகத்தில், தனியார் ஆம்னி பேருந்து மீண்டும் இடது புறம் வஞ்சிநகரம் கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடையில் பயங்கரமாக மோதி உள்ளது.

அதில், அங்கு உறங்கிக்கொண்டிருந்த ஒருவர் மீதும் பேருந்து மோதியதால், அவரும் உயிரிழந்ததாக காவல்துறை உறுதி செய்துள்ளது. இந்த விபத்தில் காயம் அடைந்த 41 பேர் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பயணிகள் சிலர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால், அவர்கள் மட்டும் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக மாநகர காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) அபினவ் குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், விபத்தில் அரசுப் பேருந்து பயணம் செய்தவர்கள் 3 பேரும், ஆம்னி பேருந்தில் சென்றவர்கள் 2 பேரும், பேருந்து நிறுத்தத்தில் உறங்கியவர் ஒருவர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்து இருப்பதாக கொண்டாம்பட்டி காவல்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.

அவர்கள், திருநெல்வேலி மாவட்டம், சமாதானபுரத்தைச் சேர்ந்த சிரியபுஷ்பம் (56), திசையன்விளை பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் (40), இடையமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (46), திருச்சிராப் பள்ளியைச் சேர்ந்த சூர்யா (29), திருவாரூர் கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த முகமது யாசின் (60), ஆகியோர் விபத்து நடந்த இடத்திலும், மதுரை, வஞ்சி நகரத்தைச் சேர்ந்த பெருமாள் (71) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றியும் உயிரிழந்தனர் என்று கண்டறியப்பட்டு உள்ளது.

விபத்து தொடர்பாக தகவல் கிடைத்தவுடன், மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்நிலையில், உயிரிழந்தவர்கள் 6 பேரின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்து இருக்கும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.

மேலும், இவ்விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 7 நபர்களுக்கும், லேசான காயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வரும் 15 நபர்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு உள்ளேன் எனவும் தனது அறிவிப்பில் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டு உள்ளார்.