க்ரைம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
க்ரைம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 மார்ச், 2026

வியட்நாமில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் : வடமாநில இளைஞர் கைது !!!

வியட்நாமில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் : வடமாநில இளைஞர் கைது !!!

 வியட்நாமில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் : வடமாநில இளைஞர் கைது !!!

வியட்நாமில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாட்டில் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. சென்னை விமான நிலையத்திலும் சுங்கத் துறையினருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது. அதன் பேரில், கூடுதலாக சுங்கத்துறை அதிகாரிகளை நியமித்து சென்னைக்கு வரும் அனைத்து விமான பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், புரூனே நாட்டில் இருந்து ராயல் புரூனே ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த விமானத்தில் வந்த பயணி ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். இதில், அந்த பயணி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து உள்ளார்.

இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுக்கவே, அந்த பயணியை தனியாக அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியதில், அவர் வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் என்பதும், அவர் டெல்லியில் இருந்து வியட்நாம் நாட்டிற்கு சுற்றுலா சென்று விட்டு, அங்கிருந்து புரூனே நாடு வழியாக சென்னைக்கு வந்ததும் தெரியவந்தது. அவருடைய உடைமைகளை அதிகாரிகள் சோதித்த போது, சூட்கேஸில் 10 பார்சல்கள் இருந்தன.

அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பிரித்துப் பார்த்து சோதித்தனர். அதனுள் மிகவும் விலை உயர்ந்த பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். 10 பார்சல்களிலும் மொத்தம் 4.938 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை அடுத்து, அதன் சர்வதேச மதிப்பு ரூ. 5 கோடி என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இதை அடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் வட மாநில பயணியை கைது செய்து, ரூ. 5 கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அந்த நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர் கடத்தல் குருவியாக செயல்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து, அவர் போதைப் பொருளை யாருக்காக சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்தார் என்று அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ரூ. 5 கோடி மதிப்பிலான சுமார் 5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை கடத்தி வந்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்ட தகவலை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

வியாழன், 19 மார்ச், 2026

டிஜிட்டல் கைது என்று கூறி ஓய்வு பெற்ற தாசில்தார் இடம் ரூபாய் 40 லட்சம் மோசடி !!!

டிஜிட்டல் கைது என்று கூறி ஓய்வு பெற்ற தாசில்தார் இடம் ரூபாய் 40 லட்சம் மோசடி !!!

 டிஜிட்டல் கைது என்று கூறி ஓய்வு பெற்ற தாசில்தார் இடம் ரூபாய் 40 லட்சம் மோசடி !!!

கோவையில் டிஜிட்டல் கைது செய்து இருப்பதாக கூறி ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் ரூபாய் 40 லட்சம் மோசடி நடந்து உள்ளது. இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்றதாசில்தார் 70 வயதான இவரது செல்போனுக்கு கடந்த 7 ஆம் தேதி ஒரு வீடியோ அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் மும்பையில் இருந்து போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறினார். தொடர்ந்து அந்த நபர் முதியவரிடம் வங்கி கணக்கு மூலம் சட்டவிரோதமாக ரூபாய் 2 கோடி 50 லட்சம் பணத்தை பரிமாற்றம் செய்து உள்ளதாகவும், அதனால் டிஜிட்டல் கைது செய்து உள்ளதாக கூறி மிரட்டி உள்ளார்.

இதைத்தொடர்ந்து முதியவரின் வங்கி கணக்கில் தற்பொழுது எவ்வளவு ? தொகை இருப்பில் உள்ளது என விசாரித்து உள்ளார். மர்ம நபரின் மிரட்டலுக்கு பயந்த முதியவர் தனது வங்கிக் கணக்கின் ரூபாய் 40 லட்சம் பணம் இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

அந்தப் பணத்தை வங்கியில் இருந்து எடுத்து தான் கூறும் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யுமாறு மர்ம நபர் கூறி உள்ளார். இதை அடுத்து அந்த முதியவர் தனது வங்கிக்கு சென்று தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 40 லட்சம் பணத்தை எடுத்தார். தொடர்ந்து மர்ம நபர்கள் கூறிய கணக்கிற்கு அனுப்பி வைத்தார். இதை தொடர்ந்து மர்ம நபர்கள் அவரை விடுவித்து விட்டதாக கூறி உள்ளனர். அதை தொடர்ந்து நடந்த சம்பவம் தொடர்பாக தனக்கு தெரிந்தவர்களிடம் கூறி அந்த முதியவர் விசாரித்து உள்ளார். அப்பொழுது தான் மோசடி செய்யப்பட்டது அவருக்கு தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்து உள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கள், 16 மார்ச், 2026

உயரதிகாரியின் பாலியல் கொடூரம்: உடந்தையாக இருந்த பெண் எஸ்.ஐ-யும் சிக்கினார் - கோவையில் அதிர வைக்கும் விசாரணை !!!

உயரதிகாரியின் பாலியல் கொடூரம்: உடந்தையாக இருந்த பெண் எஸ்.ஐ-யும் சிக்கினார் - கோவையில் அதிர வைக்கும் விசாரணை !!!

 உயரதிகாரியின் பாலியல் கொடூரம்: உடந்தையாக இருந்த பெண் எஸ்.ஐ-யும் சிக்கினார் - கோவையில் அதிர வைக்கும் விசாரணை !!!

​கமாண்டன்ட் செந்தில்குமார் கைதைத் தொடர்ந்து புஷ்பகுமாரி மீது வழக்கு; 10 பிரிவுகளின் கீழ் நடவடிக்கை - அதிரும் போலீஸ் வட்டாரம் !!!


கோவை பட்டாலின் கமாண்டன்ட் கைதை தொடர்ந்து அவருக்கு உடந்தையாக இருந்த பெண் எஸ்.ஐ மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவைபுதூர் பகுதியில் தமிழ்நாடு நான்காவது பட்டாலியன் படைப் பிரிவு உள்ளது. இதில் கமாண்டன்ட் ஆக (எஸ்.பி) அந்தஸ்தில் உள்ள செந்தில்குமார் பணியாற்றி வந்தார். 

இவர் அங்கு பயிற்சிக்கு சேர்ந்த பெண் போலீசுக்கு பல்வேறு பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் கடந்த மாதம் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

அவர் நிபந்தனையின் பேரில், பணியிடை காலத்தில் தங்கி இருக்க வேண்டும். அரசின் அனுமதியின்றி தலைமையிடம் கடந்து செல்ல கூடாது என எச்சரிக்கப்பட்டார்.  

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இந்த வழக்கின் அடிப்படையில் செந்தில்குமார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக கோவை மாநகர போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் கமாண்டன்ட் செந்தில்குமாருக்கு உடந்தையாக இருந்த தமிழ்நாடு நான்காவது பட்டாலியன் படைப் பிரிவு எஸ்.ஐ புஷ்பகுமாரி (47) மீதும் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த வழக்கில் பெண் எஸ்.ஐ மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஞாயிறு, 8 மார்ச், 2026

கோவை கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் வழக்கு : சம்பவம் முதல் தீர்ப்பு வரை - ஒரு முழுமையான பார்வை ....

கோவை கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் வழக்கு : சம்பவம் முதல் தீர்ப்பு வரை - ஒரு முழுமையான பார்வை ....

4 மாதத்தில் விசாரணை முடிந்தது : கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மூன்று பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை - கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !!!

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மூன்று பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. சம்பவம் நடந்து 4 மாதத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மதுரை சேர்ந்த 21 வயது மாணவி கோவையில் விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி இரவு 10:30 மணி அளவில் தனது ஆண் நண்பருடன், கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகரில் காலி இடத்தில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்.

பின்னர் அவர் சிறுநீர் கழிக்க மறைவான பகுதிக்கு சென்றார். அங்கு இருளில் பதுங்கி இருந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான சதீஷ் என்ற கருப்பசாமி, கார்த்திக் என்ற காளீஸ்வரன், அவர்களின் உறவினரான மதுரையைச் சேர்ந்த குணா என்ற தவசி ஆகியோர் அரிவாளை காட்டி மாணவியை மிரட்டினர்.

அதை தூரத்தில் இருந்து பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆண் நண்பர் மூன்று வாலிபர்களையும் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அரிவாளால் காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, ஆண் நண்பரை வெளியே இழுத்து தலையில் வெட்டினர். பின்னர் மாணவியை அரை கிலோ மீட்டர் தூரம் கடத்திச் சென்று மூன்று பேரும் கூட்டுச் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதற்கு இடையே ரத்தக் காயத்துடன் சாலைக்கு ஓடி வந்த ஆண் நண்பர் எதிரே வந்த ஒருவரிடம் செல்போனை வாங்கி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இரவு 10:45 மணி அளவில் போலீசார் விரைந்து வந்து மாணவியை தேடினர். இதை அறிந்தவர்கள், மூன்று பேரும் மாணவியை அருகில் இருந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரி பின்புறப் பகுதிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு இருந்து சுவரைத் தாண்டிச் சென்று மோட்டர் பம்ப் அறையில் வைத்து மாணவியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

சுவரின் மறுபக்கத்தில் போலீசார் தேடிய போதும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமையை அரங்கேற்றினர். அப்பொழுது கூச்சல் போட்டால், கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் எதுவும் செய்ய முடியாமல் மாணவி தவித்தார். இதனால் போலீசார் அதிகாலை 4:00 மணி வரை மாணவியை மீட்க முடியவில்லை.

இந்நிலையில் பாலியல் பலாத்கார ஆசாமிகள் அதிகாலை 4 மணி அளவில் வாலிபர்கள் மூன்று பேரும் அங்கு இருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்தக் கொடூர சம்பவத்தால் அதிர்ச்சியில் இருந்து மீளாத அந்த மாணவி அருகில் இருந்த வீடுகளை நோக்கிச் சென்று கதவை தட்டி தனக்கு நேர்ந்த கதி குறித்து மாணவி கூறி அழுதார்.

மேலும் அவர்களிடம் போன் வாங்கி தனது தாயாருக்கும் தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் காவல் துறையினர் மாணவியை மீட்டனர். மேலும் தப்பிய மூன்று பேரையும் பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தினார்.

இதில் அந்த மூன்று பேரும் பஸ் ஏறி தப்பிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து கோவை காவல் ஆணையராக பதவி வகித்த சரவண சுந்தர் உத்தரவின் பேரில் துணை ஆணையர்கள் தேவநாதன், கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் செல்போன் நம்பர் மற்றும் 200 கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்து, குற்றவாளிகள் குறித்து விவரங்களை சேகரித்தனர். மேலும் விசாரணையில் கூட்டு பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட கருப்புசாமி, அவருடைய தம்பி காளீஸ்வரன், உறவினர் தவசி என்பதும் அவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

மறுநாள் 3 ம் தேதி துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் ஒரு இடத்தில் அந்த மூன்று பேரும் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது காவல்து றையினர் அங்கு விரைந்து சென்ற போது அவர்களை தாக்கி விட்டு மூன்று பேரும் தப்பி ஓட முயன்றனர். போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டு 3 பேரையும் பிடித்தனர். கூட்டு பாலியல் பலாத்காரம், ஆயுதங்களை பயன்படுத்துதல், பெண்களை ஆடைகளை வலுக்கட்டாயமாக கலைந்து பெண்ணுக்கு இழிவு படுத்துதல், பலவந்தமாக அடைதல் உள்ளிட்ட 8 கடும் சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிந்து மூன்று பேரையும் கைது செய்தனர்.

இதை அடுத்து இந்த வழக்கில் பீளமேடு இன்ஸ்பெக்டர் அர்ஜுன், சிறப்பு இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டனர்.

கைதான மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு கோவில்பாளையம் அருகே ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த தேவராஜ் என்பவரை கொலை செய்து விட்டு இரு சக்கர வாகனத்தை திருடிக் கொண்டு வரும் போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் தெரிவித்தனர். இதில் கருப்பசாமி, காளீஸ்வரன் மீது கிணத்துக்கடவில் ஒரு கொலை வழக்கும், சூலூரில் கஞ்சா கடத்தல் வழக்கும், சத்தியமங்கலத்தில் சந்தன மரங்களை வெட்டிய வழக்கும் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் ஒரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததும், அது தொடர்பான புகார் செய்யாததால் காவல் துறையினர் பிடியில் இருந்து தப்பியதும் தெரிய வந்தது.

தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு சம்பவம் நடைபெற்ற ஒரு மாதத்திற்குள் அதாவது கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8 ம் தேதி இரண்டாவது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு குற்றப்பத்திரிகைகளும் மொத்தம் 350 பக்கங்கள் கொண்டது. இது தவிர குற்றம் நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட ரத்தம், அரிவாள் உள்ளிட்ட தடயங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. மரபணு பரிசோதனை அறிக்கையும் சென்னை தடையவியல் பரிசோதனை மையம் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. 

கோவை அனைத்து மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜன் இந்த வழக்கை துரிதமாக விசாரணை நடத்தினார். பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி சாட்சிகள் விசாரணை தொடங்கி 23 ஆம் தேதி சாட்சிகள் விசாரணை முடிந்தது. மொத்தம் 112 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். இதில் 72 பேர் நீதிமன்றத்தில் நேரடியாக வந்து சாட்சியம் அளித்தனர். கல்லூரி மாணவி, மாணவியரின் ஆண் நண்பர், மாணவியின் தாய், விசாரணை போலீஸ் அதிகாரிகள் உட்பட பலரும் அளித்த சாட்சியம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலு சேர்த்தது.

இதைத்தொடர்ந்து அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் 27ஆம் தேதி முடிவு அடைந்தது. இதனால் தீர்ப்பு 7 ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி சுந்தரராஜன் தெரிவித்தார்.

அதன்படி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படுவதை ஒட்டி கோவை நீதிமன்றம் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட காளீஸ்வரன் காலில் காயம் ஆறாததால், அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

கருப்பசாமி, தவசி ஆகியோர் கோவை சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிற்பகல் ஒரு மணி அளவில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆஜர் படுத்தப்பட்டனர். நீதிமன்ற கதவுகள் மூடப்பட்டன. பிற்பகல் 2.10 மணி அளவில் இந்த வழக்கில் கைதான மூன்று பேரும் குற்றவாளிகள் என நீதிபதி சுந்தரராஜன் அறிவித்தார்.


அப்பொழுது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மாலை 3:30 மணிக்கு கூட்டு பாலியல் பலாத்கார சட்ட பிரிவு 70(1) பிரிவில் சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூபாய் 500 அபராதமும் விதித்து நீதிபதி சுந்தரராஜன் தீர்ப்பு கூறினார்.

இதில் 309(4) வழிப்பறி சட்டப் பிரிவில் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 500 அபராதம், 324(4) சேதம் ஏற்படுத்துதல் சட்டப் பிரிவில் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 500 அபராதமும், ஆயுதங்களை காட்டி கொள்ளை அடித்தல் சட்டப் பிரிவுக்கு இரண்டு வருட தண்டனையும், தாக்கி காயப்படுத்துதல், பலாத்காரம் செய்தல் பிரிவில் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 500 அபராதமும், 76 வது சட்டப்பிரிவில் பெண்ணுக்கு களங்கம் ஏற்படுத்துதலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 500 அபராதமும், அடைத்து வைத்தல் சட்டப் பிரிவில் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூபாய் ஏழு லட்சமும், குற்றவாளிகளால் காயம் அடைந்த ஆண் நண்பருக்கு ரூபாய் 2 லட்சம் நிவாரண நிதி வழங்க நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர் ஜிஷா இந்த வழக்கில் சிறப்பாக வாதிட்டதாக நீதிபதி பாராட்டினார்.

இதை அடுத்து அவர்கள் மூன்று பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு கொண்டு செல்ல வாகனத்தில் ஏற்றிய போது 

அதில் ஒரு குற்றவாளி கேமரா முன்பு மீசையை முறுக்கிக் கொண்டு கையினால் சைகை காண்பித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சம்பவம் நடைபெற்று 126 நாட்களுக்குள் துரிதமாக விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

4 மாதத்தில் தீர்ப்பு 

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலில் பலாத்கர் சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி நடைபெற்றது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கருப்புசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு கடந்த மாதம் இரண்டாம் தேதி முதல் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. குற்றவாளிகள் மூன்று பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சுந்தரராஜன் தீர்ப்பு கூறினார். குற்ற சம்பவம் நடைபெற்று 126 நாட்களுக்குள் அதாவது நான்கு மாதங்களுக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் பூர்வ ஆதாரங்களை திரட்டி தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டு உள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் ஜிஷா பேட்டி


கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் அரசு தரப்பில் வாதம் செய்த வழக்கறிஞர் ஜிஷா கூறும் போது

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட தடயங்கள், தடையைவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குற்றவாளிகளிடம் கைப்பற்றப்பட்ட அரிவாளில் படிந்த ரத்தமும், ஆண் நண்பர் தலையில் ஏற்பட்ட ரத்தமும் பரிசோதனை செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டது. டி.என்.ஏ பரிசோதனை, 200 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் உட்பட பல்வேறு ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக திரட்டி நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது. அதன் மூலம் குற்றவாளிகள் அவர்கள் தான் என்று நிரூபிக்கப்பட்டது. 8 கடும் சட்டப் பிரிவுகளில் சேர்க்கப்பட்டன. இதில் 7 சட்டப் பிரிவுகளுக்கு கடும் தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தடையவியல் சான்றுகளை ஆய்வு செய்து சமர்ப்பித்த கிருஷ்ணராஜ் பங்களிப்பு முக்கியமானது. காவல் துறையினரும் சிறப்பாக செயல்பட்டு 30 நாட்களுக்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர். மகளிர் தினத்திற்கு முந்தைய நாளில் இந்த வழக்கில் கடும் தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.

 தண்டனை பெற்றவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சசிகுமார் கூறும் போது 7 சட்ட பிரிவுகளில் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இதில் கூட்டாக சேர்ந்து குற்றங்களில் ஈடுபடுதல், என்ற சட்டப் பிரிவில் மட்டும் விடுவிக்கப்பட்டு உள்ளனர், வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 90 நாட்கள் கால அவகாசம் உள்ளது. அதற்குள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்றார்.

செவ்வாய், 3 மார்ச், 2026

கோவை, மதுக்கரை அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு !!!

கோவை, மதுக்கரை அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு !!!

 கோவை, மதுக்கரை அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு !!!

கோவை, மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள ஜே.ஜே நகர் மலைச்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் சிவசங்கரன் (வயது 15). நேற்று சிவசங்கரன் மற்றும் அவனது நண்பர்கள் 3 பேர் குளிப்பதற்காக மதுக்கரை உப்பு பாறையில் உள்ள கல்லுக்குழிக்கு சென்றனர்.

அங்கே சென்றதும் 2 பேர் நீச்சல் தெரியாது என்பதால் கரையிலேயே அமர்ந்து இருந்தனர்.

 சிவசங்கரனும் அவனது நண்பரும், கல்லுக் குழிக்குள் இறங்கி குளித்தனர்.

அப்போது ஆழமான அந்தப் பகுதியில் இருந்த பாறையை தொட்டு விட்டு யார் முதலில் திரும்பி வருவது என்று போட்டி ஏற்பட்டு உள்ளது. 

இதில் சிவசங்கரன் தொலைவில் உள்ள பாறையை தொட்டு விட்டு மீண்டும் கரைக்கு திரும்பிய போது திடீரென்று தண்ணீரில் மூழ்கி விட்டான். 

இதைப் பார்த்த அவனது நண்பர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக மதுக்கரை போலீசார் மற்றும் கோவை புதூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

நேற்று பிற்பகல் நடந்த இந்த சம்பவத்தில் இரவு வரை சிவசங்கரன் உடலை தேடியும் கிடைக்காததால் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். 


இன்று 2 வது நாளாக சிவசங்கரன் உடலை தேடும் பணி நடைபெற்றது. ஆழமான பகுதி என்பதால் உடலை மீட்டிக் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர்.


தற்பொழுது சிறுவன் உடல் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

ஈரானின் இதயத்தைத் துளைத்த ஏவுகணைகள்.. அமெரிக்கா வெளியிட்ட புதிய விடியோ !!!

ஈரானின் இதயத்தைத் துளைத்த ஏவுகணைகள்.. அமெரிக்கா வெளியிட்ட புதிய விடியோ !!!

 ஈரானின் இதயத்தைத் துளைத்த ஏவுகணைகள்.. அமெரிக்கா வெளியிட்ட புதிய விடியோ !!!

ஈரானில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் தொடர்பான விடியோவை அமெரிக்கா வெளியிட்டு உள்ளது.

ஈரானின் அணுஆயுத கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் சேர்த்து கடந்த சனிக்கிழமை நடத்திய அதிரடி தாக்குதலில் ஈரானின் மதகுரு அலி அயத்துல்லா கமேனி உள்பட ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

 ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சௌதி, குவைத், துபை உள்ளிட்ட நகர்கள் மீதும் ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் ஏவி கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. மேலும், அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை ஈரான் குறிவைத்துத் தாக்கி வருகிறது.

ஈரானின் மிகவும் பாதுகாப்பான வான்பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி, ‘ஈரானின் இதயம்’ என்றழைக்கப்படும் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பாஸ்டர் தெரு அந்த நாட்டின் மிக முக்கியமான அரசியல் மற்றும் நிர்வாக மையமாகும்.

அந்த பகுதியின் மிகவும் பரபரப்பான நேரத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரு நாடுகளும் நடத்திய கொடூரத் தாக்குதலில்தான் ஈரானின் உச்சத்தலைவர் மதகுரு அலி அயத்துல்லா கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர்.

 இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்பான புதிய விடியோ ஒன்றை அமெரிக்கா வெளியிட்டு உள்ளது.

அந்த விடியோவில், “அமெரிக்க படைகள் ஈரானை மன்னிப்புக் கேட்க முடியாத அளவுக்கு தாக்குகின்றன. ஆபரேஷன் எபிக் ஃபியூரியில் ஈரானின் ஏவுகணைத் தாக்கி அழிப்பதில் லேசர்கள் கவனம் செலுத்துகின்றன” எனக் குறிப்பிட்டு உள்ளது.

திங்கள், 2 மார்ச், 2026

கோவை வாலாங்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் : கொலையா? தற்கொலையா? - போலீஸ் தீவிர விசாரணை !!!

கோவை வாலாங்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் : கொலையா? தற்கொலையா? - போலீஸ் தீவிர விசாரணை !!!

 கோவை வாலாங்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் : கொலையா? தற்கொலையா? - போலீஸ் தீவிர விசாரணை !!!

கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான உக்கடம் வாலாங்குளம் பகுதியில் இன்று காலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, உக்கடம் வாலாங்குளத்தின் ஒரு பகுதியில் ஆண் ஒருவரின் உடல் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாக உக்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 உயிரிழந்த நபருக்கு சுமார் 40 முதல் 45 வயது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

காணாமல் போனவர்கள் குறித்த புகார்களை வைத்து அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

 குடும்பப் பிரச்சனை அல்லது மன உளைச்சல் காரணமாக அவர் ஏரியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டாரா ? யாரேனும் மர்ம நபர்கள் அவரை அடித்துக் கொலை செய்து ஏரியில் வீசிச் சென்றனரா ? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா ?

​சம்பவம் நடந்த குளக்கரையைச் சுற்றி உள்ள சி.சி.டி.வி (CCTV) கேமரா காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இது கொலையா ? அல்லது தற்கொலையா ? என்பது தெரியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோவையில் போதைப்பொருள் வேட்டை : 120 இடங்களில் அதிரடி சோதனை - கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது !!!

கோவையில் போதைப்பொருள் வேட்டை : 120 இடங்களில் அதிரடி சோதனை - கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது !!!

 கோவை அருகே 120 இடங்களில் காவல்துறை அதிரடி சோதனை : கல்லூரி மாணவர்கள் உட்பட 26 பேர் கைது - உயர்ரக போதைப்பொருள், இருசக்கர வாகனங்கள் பறிமுதல் !!!

கோவை அருகே 120 இடங்களில் காவல் துறையினர் அதிரடி சோதனை, நடத்தி கல்லூரி மாணவர்கள் உட்பட 26 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து உயரக போதைப் பொருள்கள், 22 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை அடுத்த கருமத்தம்பட்டி, பேரூர் உட்கோட்டம் பகுதிகளில் மாணவர்கள் தனியாக அறை எடுத்து தங்கி இருக்கும், இடங்களில் போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் கரிக்கோல் பாரி சங்கர், சுரேஷ் மற்றும் ஒன்பது காவல் ஆய்வாளர்கள் 300 போலீசார் நேற்று காலை 6 மணி முதல் ஒன்பது மணி வரை செட்டிபாளையம், மதுக்கரை, க.க.சாவடி உள்ளிட்ட இடங்களில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகள் மற்றும் விடுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது மாணவர்கள் தங்கி இருக்கும் சில அறைகளில் போதைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அது போல் பத்துக்கு மேற்பட்ட செல்போன்கள், இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவற்றை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது

கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் இடங்கள் உள்பட 120 இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை செய்ததாகவும், அப்பொழுது எவ்வித ஆவணங்கள் இல்லாமல் போலியான வாகன பதிவு உடன் இருந்த 22 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தவிர மாணவர்களின் அறைகளில் இருந்து உயர் ரகத்தைச் சேர்ந்த 4.5 கிலோ கஞ்சா, 50 மில்லி கஞ்சா ஆயில், 2 கிலோ கஞ்சா சாக்லேட், மெத்தபெட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அவை மாணவர்களுக்கு எப்படி ? கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக ஐந்து கல்லூரி மாணவர்கள் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர், அதில் இரண்டு பேர் ஏற்கனவே கல்லூரி படிப்பை முடித்தவர்கள், அவர்கள் மீது திருட்டு கொலை முயற்சி போதைப் பொருள்கள் விற்றது தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள்களை பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கத்தில், சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளியில் அறை எடுத்து தங்கும் மாணவர்கள் தங்களுடன் தங்கி வருபவர்களின் பின்னணி குறித்து தெரிந்து கொண்ட பிறகு அறைகளுக்கு அனுமதிக்க வேண்டும், சிலர் சொந்த ஊர்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு விட்டு மாணவர்களின் அறைகளை அடைக்கலம் ஆகின்றனர். மேலும் வாடகைக்கு குடியிருக்கும் நபர்களின் நடவடிக்கைகள் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், அத்துடன் கல்லூரி நிர்வாகமும் மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும், போதைப் பொருள்கள் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும், கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 670 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

சனி, 28 பிப்ரவரி, 2026

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு சீனா அழைப்பு !!!

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு சீனா அழைப்பு !!!

 பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு சீனா அழைப்பு !!!

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான போரை நிறுத்துமாறு இரு நாடுகளையும் சீனா அழைப்பு விடுத்து உள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் நட்பு நாடாக விளங்கும் சீனா, இவ்விரு நாடுகளுக்கு இடையேயான போரை நிறுத்த வேண்டும் என்று கோரி உள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான வன்முறை மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் சீனா கூறி உள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சர் மாவோ நிங் கூறுகையில்,

 இரு தரப்பினரும் அமைதியுடன் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். விரைவில் போரை நிறுத்த வேண்டும். வன்முறையைத் தவிர்க்க வேண்டும்.

பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான மோதலை சீனா தொடர்ந்து மத்தியஸ்தம் செய்து வருகிறது. மேலும், பதற்றங்களைத் தணிப்பதில் தொடர்ந்து ஆக்க்கப் பூர்வமான பங்களிக்கவும் சீனா தயாராக உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

ஈரானில் பள்ளி மீது தாக்குதல் : 40 மாணவிகள் பலி !!!

ஈரானில் பள்ளி மீது தாக்குதல் : 40 மாணவிகள் பலி !!!

 ஈரானில் பள்ளி மீது தாக்குதல் : 40 மாணவிகள் பலி !!!

ஈரானில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் 40 மாணவிகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரானில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 மாணவிகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரானில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் பெண்கள் தொடக்கப் பள்ளி மீது இஸ்ரேல் - அமெரிக்கா வான் வழித் தாக்குதல் நடத்தியது.

இந்த சம்பவத்தில் 40 மாணவிகள் பலியானதாக அந்நாட்டு அரசு நடத்தும் செய்தி நிறுவனமான 'இர்னா' தெரிவித்து உள்ளது.

மேலும் 45 பேர் காயமடைந்து உள்ளனர். மினாப் நகரில் ஈரானின் புரட்சிகர காவல் படையின் தளம் அமைந்து உள்ளது. இந்தத் தாக்குதல் நடவடிக்கை குறித்து அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து சனிக்கிழமை வான் வழித் தாக்குதல்களை நடத்தின.

இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் அமைந்து உள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானும் தாக்குதல் நடத்தி உள்ளது.

இஸ்ரேல் - ஈரான் போர்: செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீது ஹௌதிகள் மீண்டும் தாக்குதல் !!!

இஸ்ரேல் - ஈரான் போர்: செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீது ஹௌதிகள் மீண்டும் தாக்குதல் !!!

 இஸ்ரேல் - ஈரான் போர்: செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீது ஹௌதிகள் மீண்டும் தாக்குதல் !!!

ஈரான் ஆதரவு யேமனின் ஹௌவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீது மீண்டும் தாக்குதல்.

இஸ்ரேலின் தாக்குதலால் செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தொடங்கி உள்ளனர்.

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், செங்கடல் வழித் தடத்தில் கப்பல் போக்குவரத்து மீது மீண்டும் ஈரான் ஆதரவு யேமனின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலைத் தொடங்க உள்ளனர்.

முன்னதாக, இஸ்ரேல் - காஸா போரின்போது செங்கடலில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, காஸாவுடன் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டதால், செங்கடலில் தாக்குதலை நிறுத்தியது.


இந்த நிலையில், தற்போது மீண்டும் செங்கடல் வழித் தடத்தில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலைத் தொடங்கி உள்ளனர்.


இதனிடையே, போரில் ஈரான் சரணடைய வேண்டும் அல்லது மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

கள்ளக்காதல் விவகாரம் : மனைவியைக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு !!!

கள்ளக்காதல் விவகாரம் : மனைவியைக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு !!!

கள்ளக் காதல் விவகாரத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது...

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் குமார் என்ற மாரிமுத்து கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி கற்பகவள்ளி குமாரின் நண்பரான மற்றொரு கட்டிட தொழிலாளி கணேசன் என்பவருக்கும் குமாரின் மனைவி கற்பகவள்ளிக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த குமார் தகராறு செய்து மனைவியை கண்டித்தார். இதனால் கற்பகவள்ளி தனது இரண்டு குழந்தைகளையும் கணவரிடம் விட்டு விட்டு கள்ளக் காதலனுடன் சென்றார். 

பின்னர் அவர் தனது கள்ளக் காதலுடன் கோவை கருமத்தம்பட்டி அருகே சோளக்காட்டு பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். இதை அறிந்த குமார் கடந்த 2014 ம் ஆண்டு மனைவியை தேடி கருமத்தம்பட்டிக்கு சென்றார். அவர் தங்கி இருந்த வீட்டின் கதவை தட்டி உள்ளார். கதவை திறந்த கற்பகவள்ளி வெளியே வந்தார். அவரைப் பார்த்ததும் ஆத்திரத்தில் இருந்த குமார் அவர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் குத்தினார். இதில் அவர் அலறி துடித்தார். அந்த சத்தம் கேட்டு தடுக்க வந்த கணேசையும் குமார் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த கற்பகவள்ளி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கணேசன் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார்.

இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை 5 வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி சிவகுமார் குற்றம் சாட்டப்பட்ட குமாருக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 15,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

RTO அபராதம்’ என ஏமாற்றிய கும்பல் ; 16 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த கோவை சைபர் கிரைம் காவல்துறை - குஜராத் கொள்ளையர்களுக்கு 46 நாட்களில் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பு !!!

RTO அபராதம்’ என ஏமாற்றிய கும்பல் ; 16 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த கோவை சைபர் கிரைம் காவல்துறை - குஜராத் கொள்ளையர்களுக்கு 46 நாட்களில் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பு !!!

RTO அபராதம்’ என ஏமாற்றிய கும்பல் ; 16 நாட்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த கோவை சைபர் கிரைம் காவல்துறை - குஜராத் கொள்ளையர்களுக்கு 46 நாட்களில் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பு !!!

சைபர் குற்றங்களுக்கு எதிராகக் கோவை மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் முதியவரிடம் ரூ.16.5 லட்சம் மோசடி செய்த குஜராத்தைச் சேர்ந்த 10 சைபர் குற்றவாளிகளுக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.3 லட்சம் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்ப அளித்து உள்ளது. வழக்கு பதியப்பட்ட வெறும் 46 நாட்களில் இந்தத் தண்டனை பெற்றுத் தரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் சந்திரபோஸ் (71) என்ற முதியவரின் வாட்ஸ் அப்பிற்கு கடந்த 08.09.2025 அன்று 'RTO Challan' அபராதம் செலுத்துவது போன்ற ஒரு தகவல் வந்து உள்ளது. அதை உண்மை என நம்பி அவர் அனுப்பப்பட்ட .apk செயலியை பதிவிறக்கம் செய்து உள்ளார். அடுத்த கணமே அவரது மொபைல் ஹேக் செய்யப்பட்டது.

 அடுத்த நாள் அவரது வங்கிக் கணக்கில் இருந்து 12 தவணைகளாக மொத்தம் ரூ.16,49,961/- கொள்ளை அடிக்கப்பட்டது. இது குறித்து பாதிக்கப்பட்ட முதியவர் சாமுவேல் சந்திரபோஸ் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடனடியாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் துணை ஆணையர் திவ்யா வழிகாட்டுதலின் படி, ஆய்வாளர் K.அழகுராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை குஜராத் மாநிலம் சூரத் பகுதிக்குச் சென்றது. 

அங்கு பதுங்கி இருந்த பத்லியா ரஜ்னி பாய், தல்ஷி பாய் உட்பட 10 பேரை கைது செய்து கோவைக்குக் கொண்டு வந்தனர்.

 அவர்களிடம் இருந்து 311 டெபிட் கார்டுகள், POS இயந்திரம் மற்றும் பணம் பறிமுதல் செய்து, கைது செய்யப்பட்ட 16 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் குற்ற இறுதி அறிக்கையைத் (Charge Sheet) தாக்கல் செய்தது.

அடுத்த 30 நாட்களில் சாட்சிகளை ஆஜர்படுத்தி விசாரணையை முடித்தது.

 கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (JM IV), குற்றம் சாட்டப்பட்ட 10 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.3 லட்சம் அபராதமும் (மொத்தம் ரூ.30 லட்சம்) விதித்துத் தீர்ப்பு அளித்தது.

துரிதமாகச் செயல்பட்ட சைபர் கிரைம் குழுவினரை மாநகர காவல் ஆணையர் கண்ணன் பாராட்டினார்.


 முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் .apk ஃபைல்களை (Applications) ஒருபோதும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம். அது உங்கள் வங்கி கணக்கை காலி செய்துவிடும் என பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

வியாழன், 26 பிப்ரவரி, 2026

கோவை லாரியின் பின்பக்கம் இருசக்கர வாகனம் மோதி விபத்து - பதபதைக்க வைக்கும் சி.சி.டி.வி  காட்சிகள்...

கோவை லாரியின் பின்பக்கம் இருசக்கர வாகனம் மோதி விபத்து - பதபதைக்க வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்...

 கோவை லாரியின் பின்பக்கம் இருசக்கர வாகனம் மோதி விபத்து - பதபதைக்க வைக்கும் சி.சி.டி.வி  காட்சிகள்...


கோவை எல்.என்.டி பைபாஸ் சாலை சிந்தாமணி புதூர் அருகே லாரியின் பின்பக்கம் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்படும் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது......


சேலம் பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையான கோவை சிந்தாமணிபுதூர் எல்.என்.டி பைபாஸ் சாலையில் இன்று காலை இருசக்கர வாகனம் ஒன்று லாரியின் பின் பக்கமாக மோதி ஏற்பட்ட விபத்தில் பலத்த காயம் அடைந்த வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அந்த விபத்து தொடர்பான பதபதைக்க வைக்கும் சி.சி.டி.வி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. அதில் அதிவேகமாக வரும் இருசக்கர வாகனம் ஒன்று வேகமாக சென்று கொண்டு இருக்கும் லாரியை இடது புறமாக முந்த முற்படும்பொழுது லாரியின் பின்பக்கத்தில் மோதி கண் இமைக்கும் நேரத்தில் சாலையோரத்தில் நடப்பட்டு இருந்த தி.மு.க கொடி கம்பம் மற்றும் நெடுஞ்சாலை கல்லில் மோதி விபத்து ஏற்படுவதும் அந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்து சுமார் 10 மீட்டர் தூரத்திற்கு வாகனத்தை ஓட்டி செல்லும் நபர் தூக்கி வீசப்பட்டு சாலையிலேயே கிடப்பதுமான காட்சிகள் பதிவாகி உள்ளது. இதன் இடையே இந்த சி.சி.டி.வி காட்சியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.....

பொள்ளாச்சி அருகே சிறுமி மூதாட்டியை குத்தி கொன்ற வாலிபர் விஷம் குடித்து விட்டு போலீசில் சரண் - விசாரணையின் போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு !!!

பொள்ளாச்சி அருகே சிறுமி மூதாட்டியை குத்தி கொன்ற வாலிபர் விஷம் குடித்து விட்டு போலீசில் சரண் - விசாரணையின் போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு !!!

 பொள்ளாச்சி அருகே சிறுமி மூதாட்டியை குத்தி கொன்ற வாலிபர் விஷம் குடித்து விட்டு போலீசில் சரண் - விசாரணையின் போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு !!!

பொள்ளாச்சி அருகே சிறுமி மூதாட்டியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர் விஷம் குடித்து விட்டு காவல்துறையிடம் சரண் அடைந்தார். அவர் விசாரணையின் போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்து உள்ள நெகமம் அருகே கொண்டே கவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் பூபதி, இவருடைய மனைவி கலையரசி, இவர்களுக்கு ஹரிதா , கௌசி என்ற மகள்கள் இருந்தனர். அவர்களுடன் பூபதியின் தாய் மயிலாத்தாளும் வசித்து வந்தார். ஹரிதா ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

கௌசி பள்ளிப் படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவர் பள்ளியில் படித்த போது கப்பளாங்கரையைச் சேர்ந்த அபிஷேக் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. அவர் அபிஷேக்கிடம் சகஜமாக பேசி வந்தார். ஆனால் அபிஷேக், கவுசியை ஒரு தலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அவர் கௌசி வீட்டிற்கு சென்று பெண் கேட்டார். அதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை, இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அபிஷேக் கௌசி வீட்டுக்கு சென்றார். அங்கு கௌசியை தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து சாரா மாறியாக குத்தினார். அவருடைய சத்தம் கேட்டு வீட்டில் இருந்த வெளியே வந்த பாட்டி மயிலாத்தாள் அக்காள் ஹரிதா ஆகியோரையும் அபிஷேக் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். இதில் கவுசி, மயிலாத்தாள் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து நெகமம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அபிஷேக்கை தேடி வந்தனர்.

 இந்நிலையில் அபிஷேக் விஷம் குடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு 12:30 மணி அளவில் நெகமம் போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணையின் போது தான் விஷம் குடித்ததாக போலீசாரிடம் கூறினார். முதலில் போலீசார் அதை நம்பவில்லை, சிறிது நேரத்தில் திடீரென அபிஷேக் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார். அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவல்துறையிடம் அபிஷேக் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறும் போது :

தான் கடந்த மூன்று ஆண்டுகளாக கவுசியை ஒருதலைபட்சமாக காதலித்து வருவதாகவும், அவரும் அவரிடம் நன்றாக பேசுவார். இதனால் அவர் அவரை காதலிப்பதாக நினைத்ததாகவும், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு பெற்றோருடன் கௌசி வீட்டுக்குச் சென்று அவரை திருமணம் செய்து வைக்கும்படி பெண் கேட்டு உள்ளதாகவும், அதற்கு அவரின் பெற்றோர் கவுசி இன்னும் திருமணம் வயதிற்கான சட்டபூர்வ வயதை எட்டவில்லை என்று கூறி பெண் கொடுக்க மறுத்து விட்டனர் என்றும், அதன் பிறகு கவரியின் செல்போனுக்கு அவர் பலமுறை தொடர்பு கொண்டு, பேசவில்லை இது இதனால் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டதாகவும், இதனால் அவரை கொலை செய்ய கத்தியுடன் கவுசி வீட்டிற்கு சென்றதாகவும், அங்கு கவுசியிடம் பேச ஏன் ? மறுக்கிறாய் தன்னை திருமணம் செய்ய ஏன் ? சம்மதிக்கவில்லை என்று கேட்டதற்கு அவர் பதில் எதுவும் கூறவில்லை, எனவே தான் அவர் ஆத்திரம் அடைந்து அவரை கத்தியால் குத்தியதாகவும், இதனால் அவர் அலறியபடி கீழே விரிந்து உள்ளார். அவருடைய அலாரம் சத்தம் கேட்டு அவருடைய பாட்டி மயிலாத்தாள் அக்காள் ஹரிதாவும் வெளியே வந்து அவரை பிடிக்க முயன்றனர். இதனால் அவர் அவர்களை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றதாக அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். ஒரு தலை காதலால் சிறுமி அவருடைய பாட்டியை வாலிபர் கத்தியால் குத்தி கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வழக்கில் இறுதி கட்ட வாதம் - விரைவில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படுகிறது !!!

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வழக்கில் இறுதி கட்ட வாதம் - விரைவில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படுகிறது !!!

 கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வழக்கில் இறுதி கட்ட வாதம் - விரைவில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படுகிறது !!!

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் நேற்று இறுதிக்கட்ட வாதம் நடைபெற்றது. இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு கூறப்பட உள்ளது.

கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி ஆண் நண்பருடன் பேசிக் கொண்டு இருந்த கல்லூரி மாணவி அங்கு வந்த மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மூன்று பேரும் அரிவாளை காட்டி மிரட்டி கல்லூரி மாணவியையும், ஆண் நண்பரையும் தாக்கி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பீளமேடு போலீசா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய, நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கருப்புசாமி, அவருடைய தம்பி காலீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி சுந்தரராஜன் முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி, அவருடைய ஆண் நண்பர் உறவினர்கள் விசாரணை அதிகாரி என 112 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். 72 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

இந்த வழக்கில் இறுதி கட்ட வாதம் நேற்று தொடங்கியது. இதை ஒட்டி கருப்பசாமி, காளீஸ்வரன், தவசியம் மூன்று பேரும் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நேற்று பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். துப்பாக்கி குண்டு பாய்ந்த காளீஸ்வரன் காலில் புண் ஆறாததால் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ஊன்றுகோல் உதவியுடன் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார். தவசிக்கும் குண்டு பாய்ந்து பாதிப்பு இருந்ததால் அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். நீதிபதி சுந்தரராஜன் குற்றச்சாட்டுகள் குறித்து மூன்று பேரிடமும் கேள்வி எழுப்பினார். குற்ற சம்பவங்கள் சேகரிக்கப்பட்ட தடயங்கள், குற்றப்பத்திரிகை, சாட்சிகள் அளித்த விவரங்கள் குறித்து நீதிபதி அவர்களிடம் கேள்வி எழுப்பினார். 1 1/2 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் நடைபெற்றது. அரசு தரப்பு வழக்கறிஞர் ஜிஷா ஆஜராகி மூன்று பேர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கூறினார். இந்த வாதம் மூன்று மணி நேரம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை 27 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். எதிர் தரப்பு வழக்கறிஞர் வாதம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; மோப்ப நாய் உடன் போலீசார் சோதனை !!!

கோவை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; மோப்ப நாய் உடன் போலீசார் சோதனை !!!

 கோவை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; மோப்ப நாய் உடன் போலீசார் சோதனை !!!

 

கோவை ரேஸ்கோர்சில்  வழக்கறிஞர்கள் பயிற்சி மைய அலுவலகம் உள்ளது. இங்கு இன்று காலை வழக்கம் போல் இ-மெயில் தகவல்களை ஊழியர்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர். 

அப்போது ஒரு இ-மெயிலில்  கோவை நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது, அது வெடித்து சிதற உள்ளது என கூறப்பட்டு இருந்தது. 

 உடனே இதுகுறித்து ஊழியர்கள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் கோவை கோர்ட் வளாகத்திற்கு சென்றனர். அங்கு அனைத்து இடங்களிலும் போலீசார்  தீவிர சோதனை செய்தனர். நீண்ட நேரம் சோதனைக்கு பிறகு வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. எனவே இந்த மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர். 

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம், விமான நிலையம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய அதே வாலிபர் தான் கோவை கோர்ட்டுக்கும் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்..

கோவையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை : இருவர் கைது - காவல்துறை நடவடிக்கை !!!

கோவையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை : இருவர் கைது - காவல்துறை நடவடிக்கை !!!

 கோவையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை : இருவர் கைது - காவல்துறை நடவடிக்கை !!!

கோவை, போத்தனூர், கருப்பராயன் கோயில் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போத்தனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சலாபி நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சகுபார் சாதிக் (44) மற்றும் கரும்புக்கடை பகுதியை சேர்ந்த லதிப் (46) என்பவரை விசாரனை செய்ததில், அவர்கள் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதை அடுத்து அவரிடம் இருந்து 4 செல்போன்கள், பணம் ரூ. 246700 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

200 ஆண்டு சிறை : சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு - ஜோதிடருக்கு அதிரடி தண்டனை !!!

200 ஆண்டு சிறை : சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு - ஜோதிடருக்கு அதிரடி தண்டனை !!!

 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஜோதிடர்க்கு 200 ஆண்டு சிறை தண்டனையும் இரண்டு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானகிரியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 52 ஜோதிடம் மற்றும் தோஷம் கழிப்பது போன்ற பரிகார பூஜைகள் செய்து வந்தார். இவரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு நவ. மாதம் ஒரு தாய் தன்னுடைய 18 வயது மற்றும் 14 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஜோதிடம் கேட்க வந்தார். அவர் தன்னுடைய குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்றும் அதற்கு பரிகாரம் செய்யும்படியும் கூறி உள்ளார். 

இதைத்தொடர்ந்து தாய் தனது இரண்டு குழந்தைகளையும் மானகிரியில் உள்ள ஜோதிடர் ராமகிருஷ்ணன் வீட்டிற்கு பரிகார பூஜை செய்வதற்காக அழைத்து வரும்படி கூறி உள்ளார். 

இதைத் நம்பிய அந்த தாயார் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்துச் சென்று உள்ளார். அப்பொழுது தாயாரை ஒரு அறையில் தனியாக இருக்கும்படி கூறி விட்டு அந்த இரண்டு குழந்தைகளையும் தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பின்னர் இந்த தகவலை யாருக்கும் சொல்லக் கூடாது என்றும், மீறி கூறினால் அவர்களின் தாய் மற்றும் தந்தை இறந்து விடுவார்கள் என்றும் கூறி உள்ளார். இதை கேட்டு பயந்து போனா இரண்டு குழந்தைகளும் யாரிடமும் சொல்லாமல் இருந்து விட்டனர். 

இரண்டு வருடங்கள் கழித்த நிலையில் இரண்டு குழந்தைகளுக்கும் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அவர்களை மருத்துவமனையில் அழைத்துச் சென்ற பரிசோதித்த போது அவர்களுக்கு பால்வினை நோய் இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரித்த பொழுது இந்த சம்பவம் தெரிந்தது. இது குறித்து அவர்களின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து ஜோதிடர் ராமகிருஷ்ணனை கைது செய்து அவர் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட ஜோதிடர் ராமகிருஷ்ணனுக்கு 200 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2 இரண்டு லட்சம் அபராதமும் விதித்து, பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்க உத்தரவிட்டார்.

மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து... கால்களை இழந்த இளைஞர்கள்...

மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து... கால்களை இழந்த இளைஞர்கள்...

 மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து... கால்களை இழந்த இளைஞர்கள்...


ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி, விபத்து ஏற்படுத்திய போதை ஆசாமியை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி - குண்டாறு கரையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய மூவர், காரில் அங்கு இருந்து புறப்பட்டு உள்ளனர். போகும் வழியில் கமுதி பேருந்து நிலையம் அருகே போதையில் மூவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, காரை பாதியில் நிறுத்தியவர்கள், போதையில் வாய் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

அதில் பின்னால் அமர்ந்து இருந்த இருவர், காரை விட்டு கீழிறங்கி அங்கு இருந்து பெட்டிக் கடைக்குச் சென்று உள்ளனர். அப்போது காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்த போதை ஆசாமி, சண்டை போட்டு சென்ற கூட்டாளிகள் மீது காரை ஏற்றி கொடூரச் செயலில் ஈடுபட்டு உள்ளார். அதில் இருவரில் ஒருவருக்குக் கால் உடைந்து துண்டானது. தொடர்ந்து போதை வெறியில் காரை நிறுத்தாமல் தாறுமாறாக ஓட்டி அங்கு இருந்த கடைகளில் மோதி ஆக்ரோஷத்தில் ஈடுபட்டு உள்ளார். சாலையோரம் நின்ற பொதுமக்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள அங்கு இருந்து தலைதெறிக்க ஓடினர்.

பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணிக்காக நின்று இருந்த ஒரே ஒரு காவலர் எவ்வளவோ முயற்சி செய்தும், குடிபோதையில் காரை இயக்கிய நபரை தடுக்க முடியாமல் போராடினார். ஒரு கட்டத்தில் பழக்கடையின் கூடாரத்தில் மோதி நின்ற காரின் கண்ணாடிகளை சுக்குநூறாக உடைத்து காரை ஓட்டியவரை கீழே இழுத்துப் போட்டு அடித்து உடைத்து வெளுத்தெடுத்தனர்.

பின்னர், தகவல் அறிந்து வந்த போலீசார் போதை ஆசாமி மீது காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். கால்களை இழந்து, வலியால் தவிக்கும் இருவரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து உள்ளனர். இப்பெரும் கோர சம்பவம் கமுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.