நிகழ்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 செப்டம்பர், 2026

 "காட்டு அருவி முதல் மும்பை லால்பாக் வரை!" - கோவை, துடியலூர் சுற்றி உள்ள பகுதிகளில் 300+ விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை!

"காட்டு அருவி முதல் மும்பை லால்பாக் வரை!" - கோவை, துடியலூர் சுற்றி உள்ள பகுதிகளில் 300+ விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை!

₹10 லட்சத்தில் பண அலங்காரம், ஆசீர்வதிக்கும் யானை, டிரம்ஸ் இசை: நாளை மறுநாள் வெள்ளக்கிணற்றில் விசர்ஜனம்!

​ விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு, கோவை துடியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் பல்வேறு வினோத வடிவங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, உற்சாகமாக வழிபாடு நடைபெற்று வருகிறது.

​துடியலூர் சுற்றி உள்ள பகுதிகளில் 300+ சிலைகள்:

கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என்.ஜி.ஜி.ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ.பி.எம் நகர் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கம்பீரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.

​பல்வேறு வடிவங்களில் பிரம்மாண்ட செட்டுகள்:

ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்களையும் குழந்தைகளையும் கவரும் வகையில் விதவிதமான தீம்களில் செட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

​துடியலூர்: 

அடர்ந்த வனப்பகுதியில் பாயும் இயற்கை அருவியின் நடுவே விநாயகர் அமர்ந்து இருப்பது போன்ற கமர்ஷியல் செட் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

​ஐடிஐ பகுதி: 

எல்.இ.டி திரையில் தொடர்ச்சியாக மலர்மழை பொழிய, மும்பையின் புகழ்பெற்ற 'லால்பாக்சா விநாயகர்' மாதிரியில் சிலை வைக்கப்பட்டு 3 வேளையும் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

​நரசிம்மநாயக்கன்பாளையம்: 

பிரம்மாண்ட கோவில் வடிவில் செட் அமைக்கப்பட்டு, டிரம்ஸ் இசையுடன், வந்திருக்கும் பக்தர்களைத் தத்ரூபமாக ஆசீர்வதிக்கும் இயந்திர யானை உருவம் அமைக்கப்பட்டு இருந்தது. 

​₹10 லட்சத்தில் பண அலங்காரம்:

 நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சுமார் ₹10 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

​என்.ஜி.ஜி.ஓ காலனி & அரவான் திடல்:

 என்.ஜி.ஜி.ஓ காலனியில் பிரம்மாண்ட கற்சிலை வடிவில் கணபதியும், அரவான் கோவில் திடலில் அழகிய மயில் வாகனத்தில் அமர்ந்து இருக்கும் பிள்ளையாரும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளனர்.

​ரங்கம்மாள் காலனி: 

நீல வண்ணத்தில் அருள்பாலிக்கும் விநாயகருடன், சிறுவர்களைக் கவரும் வகையில் ராட்சச முயல் பொம்மைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

 பிரம்மாண்ட விசர்ஜனம்:

அனைத்துப் பந்தல்களிலும் அதிகாலை முதலே கணபதி ஹோமங்கள், சிறப்பு பூஜைகள், கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாலை வேளைகளில் மேள ஜமாப், செண்ட மேளம் மற்றும் டிரம்ஸ் இசைகளுடன் ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன.

​துடியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டு உள்ள இந்த 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும், நாளை (செப்டம்பர் 17) காவல் துறை பாதுகாப்புடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, வெள்ளக்கிணர் பகுதியில் உள்ள குட்டையில் முறைப்படி விசர்ஜனம் (கரைக்க) செய்யப்பட உள்ளன.

 "மும்பை லால் பாக்சா வடிவில் 'விநாயகர்'" - கோவையில் ஆயிரக் கணக்கானோருக்கு தரிசனம்!

"மும்பை லால் பாக்சா வடிவில் 'விநாயகர்'" - கோவையில் ஆயிரக் கணக்கானோருக்கு தரிசனம்!

வழியெங்கும் மலர் தோரணம், எல்.இ.டி திரையில் மலர்மழை: 3 நாட்களும் முவேளையும் உணவு வழங்கி அசத்தல்!

 விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு, கோவை ஐடிஐ (ITI) பகுதியில் இந்து முன்னணி சார்பில் மும்பையின் புகழ்பெற்ற 'லால்பாக்சா ராஜா' வடிவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குத் தொடர் அன்னதானம் வழங்கி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கோவை ஐடிஐ பகுதியில் ஆண்டுதோறும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, அப்பகுதி முழுவதையும் மலர் தோரணங்களால் அலங்கரித்து, மும்பையின் உலகப் புகழ்பெற்ற 'லால்பாக்சா ராஜா' (Lalbaugcha Raja) விநாயகரின் மாதிரி வடிவில் 'ஐடிஐ-க்கா ராஜா' என்ற பெயரில் கம்பீரமான விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

​விநாயகர் சிலையின் பின்புறம் பிரம்மாண்ட எல்.இ.டி (LED) திரைகள் அமைக்கப்பட்டு, அதில் தொடர்ந்து மலர்கள் தூவுவது போன்ற நவீன ஒளி-ஒலி அமைப்புகள் செய்யப்பட்டு இருந்தது பக்தர்களைப் பெரிதும் கவர்ந்தது.

 கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனையுடன் விழா தொடங்கியது. சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

​தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரைப் பொங்கல் மற்றும் காரப் பணியாரம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன. மேலும் மதிய வேளையில் 1,000-க்கும் மேற்பட்டோருக்குப் பிரம்மாண்ட அன்னதானம் வழங்கப்பட்டது.

 தொடர்ந்து 3 நாட்களும் காலை, மதியம், இரவு என 3 வேளையும் பக்தர்களுக்குத் தடையின்றி அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

மாலை வேளையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் விநாயகர் சிலை எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாகத் திருவீதி உலா நடைபெற்றது. மேலும், விழாவை முன்னிட்டுச் சிறுவர், சிறுமிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

​இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து முன்னணி நிர்வாகிகள் சாச்சு, கிருஷ்ணா, தினேஷ், விகாஷ், சிபி, ஈ.பி. விஸ்வநாதன், வினித், நகுல், கிங்ஸ்லி, தர்னிஷ், கண்ணன், புனித், சுராஜ், கார்த்தி, பிரகாஷ் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் காயத்ரி, மாலதி, ராணி, வசந்தா, அனு, ஜெயமணி, ராஜி, அமுதா, சிவசக்தி, ஸ்ரீவித்யா மற்றும் ஐடிஐ பகுதி ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாகச் செய்து இருந்தனர்.

 "பிரம்மாண்ட செட், மேள ஜமாப், டிரம்ஸ் இசை" ; கோவை, ராக்கிபாளையத்தில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா!

"பிரம்மாண்ட செட், மேள ஜமாப், டிரம்ஸ் இசை" ; கோவை, ராக்கிபாளையத்தில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா!

300-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை: அன்னதானம் மற்றும் எழுச்சிமிகு ஊர்வலத்துடன் கொண்டாட்டம்!

 விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு, கோவை ராக்கிபாளையம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, மிகப்பெரிய விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் மற்றும் மேள தாள ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விதவிதமான வடிவங்களில் பிரம்மாண்ட சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

​குறிப்பாகக் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என்.ஜி.ஜி.ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ.பி.எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோவை ராக்கிபாளையம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் மிக பிரம்மாண்டமான அளவில் கலைநயமிக்க செட் அமைக்கப்பட்டு, அதில் கம்பீரமான மிகப்பெரிய விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

​இன்று அதிகாலையிலேயே கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ராக்கிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் குடும்பத்துடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

மாலை வேளையில் நடைபெற்ற விழாவில், செண்ட மேளம், மாலை ஜமாப் மற்றும் அதிரடி டிரம்ஸ் இசை நிகழ்ச்சிகள் (Drums Performance) உற்சாகமாக நடைபெற்றன. இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இசையின் தாளத்திற்கு ஏற்ப ஆடிப்பாடி விழாவைக் கொண்டாடினர்.

​அதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்குச் சுவையான அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பக்தர்களின் பக்தி முழக்கங்களுடன் விநாயகர் சிலை ஊர்வலமும் எழுச்சியுடன் நடைபெற்றது.

​இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் 'படையப்பா' (எ) முத்துக்குமார், நிர்வாகிகள் தினேஷ், ஞானசேகர், அருண், நவீன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாகச் செய்து இருந்தனர்.

 "தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய அண்ணாவிற்கு அஞ்சலி" ; துடியலூரில் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா கோலாகலம்!

"தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய அண்ணாவிற்கு அஞ்சலி" ; துடியலூரில் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா கோலாகலம்!

தி.மு.க அலுவலகத்தில் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை : நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்பு!

​ தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை துடியலூரில் திமுக சார்பாக அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி நெகிழ்ச்சியுடன் மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழர்களின் அடையாளமாகவும், திராவிட இயக்கத்தின் தூணாகவும் விளங்கிய பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 15) தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினராலும் பொதுமக்களாலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

​1909-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணா, சமூகநீதி, சுயமரியாதை, மாநில உரிமைகள் மற்றும் தமிழ்மொழி உயர்வுக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். 1967-இல் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், 'மதராஸ் மாநிலம்' என்பதற்குப் பெருமையுடன் "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் செய்து வரலாற்றுச் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி, கோவை துடியலூர் கிழக்கு பகுதி 2-வது வட்டக் கழக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துடியலூரில் உள்ள தி.மு.க கட்சி அலுவலகத்தில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

​மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.பி. சுப்ரமணியன் தலைமை தாங்கிய இந்நிகழ்வில், அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் வட்டக் கழகச் செயலாளர்கள் சண்முகம், சி.டி.சி. ராஜா, தமிழ்நிதி, குமார் (எ) சண்முகம், கழக நிர்வாகிகள் கேப்டன் பிரபாகரன், நிதியரசு, ஆறுச்சாமி, ராமசாமி, சீனிவாசன், சேகரன், வாசு, டி.எஸ். ராமசாமி, டி.என்.சி. பழனிச்சாமி, டி.ஆர். ராஜேந்திரன், ரவி, அயூப்கான், பீடா கடை ராஜன், ஜீவரத்தினம், சிவநந்தினி, தனபாக்கியம், கோமதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளான எண்ணிக்கையில் கலந்து கொண்டு அண்ணாவின் புகழுக்கு அஞ்சலி செலுத்தினர்.

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை" ; அனைத்துக் கட்சியினர் திரண்டு மலரஞ்சலி!

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை" ; அனைத்துக் கட்சியினர் திரண்டு மலரஞ்சலி!

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு: காந்தி சிலை பேருந்து நிலையத்தில் அன்னதானம்!

​ கோவை மாவட்டம், வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகியும் சமூக நீதிப் போராட்ட வீரருமான இமானுவேல் சேகரனாரின் 69-ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு, அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு, வால்பாறை தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலைய வளாகத்தில் சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

​விழாவையொட்டி, அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவுருவப் படத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்றத் தொகுதி தி.மு.க உறுப்பினர் குட்டி என்ற ஆ. சுதாகர், அ.தி.மு.க நகரத் துணைச் செயலாளர் பொன் கணேசன், ம.தி.மு.க ஒன்றியச் செயலாளர் கல்யாணி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் செந்தில் முருகன், புதிய தமிழகம் கட்சியின் நகரச் செயலாளர் அமிர்தராஜ், ஒன்றியச் செயலாளர் தனசிங், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநிலத் தலைவர் கோவை பொன்னன், புதிய தமிழகம் தொழிற்சங்கத் தலைவர் பால்ராஜ், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மேத்யூ, வெள்ளியங்கிரி, வால்பாறை நகர்மன்றத் துணைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டப் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த குருபூஜை விழாவில், அஞ்சலி செலுத்த வந்த நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அனைவருக்கும் உணவு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்களும் சமுதாயப் பெரியோர்களும் கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரனாருக்குப் புகழஞ்சலி செலுத்தினர்.

 "10 ஆண்டுகாலக் கோரிக்கைக்கு விடிவு காலம்" ; தமிழக அரசுக்கு அரசுப் போக்குவரத்து ரேவா சங்க ஓய்வூதியதாரர்கள் நெகிழ்ச்சி நன்றி!

"10 ஆண்டுகாலக் கோரிக்கைக்கு விடிவு காலம்" ; தமிழக அரசுக்கு அரசுப் போக்குவரத்து ரேவா சங்க ஓய்வூதியதாரர்கள் நெகிழ்ச்சி நன்றி!

வால்பாறையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்: ஓய்வூதியதாரர்களின் வாழ்வாதாரம் பாதுகாப்பு!

​அரசுப் போக்குவரத்து இயக்கக ஓய்வூதியதாரர்களின் 10 ஆண்டு காலக் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற ரேவா சங்க ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களின் நலன்களுக்காக ரேவா சங்கத்தினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

 இந்நிலையில், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தி ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு (DA Hike) மற்றும் நிலுவைத் தொகையான அரியர்ஸ் (Arrears) வழங்கிட வேண்டும் என ரேவா சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கடந்த ஆட்சி காலத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

​இருப்பினும், முந்தைய ஆட்சியாளர்களால் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இழுபறியாகவே நீடித்து வந்ததால், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரும் பொருளாதார நெருக்கடிக்கும் சிரமத்திற்கும் ஆளாகி வந்தனர்.

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்திற்குப் பின் பொறுப்பேற்று உள்ள புதிய தமிழக அரசின் கவனத்திற்கு ரேவா சங்கத்தின் மாநில நிர்வாகிகள் இக்கோரிக்கைகளை நேரில் கொண்டு சென்று தீவிரமாக வலியுறுத்தினர்.

 ஓய்வூதியதாரர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்த தமிழக அரசு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட சுமார் 10 ஆண்டு கால பணப் பலன்களை வழங்க முன்வந்தது.

​இதன் மூலம் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தனியார் அரங்கில் ரேவா சங்கத்தின் வால்பாறை கிளை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 வால்பாறை கிளைச் சங்கத் தலைவர் நாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், ஓய்வூதியதாரர்களின் 10 ஆண்டு கால நீண்ட காலக் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்த தமிழக அரசுக்கும், இதற்குத் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு தீர்வு காணத் துணை புரிந்த ரேவா சங்க மாநில நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துச் சிறப்பாய்த் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


​இக்கூட்டத்தில் ரேவா சங்கச் செயலாளர் பிரேம்குமார், பொருளாளர் கருணாநிதி, துணைத் தலைவர்கள் சந்திரன், கல்யாணராஜ், ராமன், துணைச் செயலாளர்கள் தங்கராஜ், ஜெபக்கனி, செல்வக்குமார், சின்னச்சாமி, மத்திய சங்க நிர்வாகிகள் சின்னப்பன், மாரியப்பன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

சனி, 5 செப்டம்பர், 2026

 "மாநகர ஆணையருக்கு சல்யூட் அடித்த காவலரின் செல்லக் குழந்தை" ; கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

"மாநகர ஆணையருக்கு சல்யூட் அடித்த காவலரின் செல்லக் குழந்தை" ; கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

ஜி.ஆர்.டி பள்ளி அருகே 'சிங்கப்படை பிங்க் பூத்' திறப்பு விழா: இணையத்தில் வைரலாகும் அழகிய தருணம்!

 கோவை, அவிநாசி சாலையில் உள்ள ஜி.ஆர்.டி பள்ளி அருகே பெண்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட 'சிங்கப்படை பிங்க் பூத்' (Singappadai Pink Booth) திறப்பு விழாவின் போது, கோவை மாநகரக் காவல் ஆணையருக்குக் காவலர் ஒருவரின் பிஞ்சுக் பெண் குழந்தை கம்பீரமாகச் சல்யூட் அடித்த காட்சி அங்கு திரண்டு இருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

கோவை மாநகரில் பெண்கள், மாணவிகள் மற்றும் பணிக்குச் செல்லும் மகளிரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முக்கியப் பகுதிகளில் மாநகரக் காவல் துறை சார்பில் 'சிங்கப்படை பிங்க் பூத்' மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி.ஆர்.டி பள்ளி அருகே புதிதாக அமைக்கப்பட்ட 'சிங்கப்படை பிங்க் பூத்' திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கோவை மாநகரக் காவல் ஆணையர் கலந்து கொண்டு புதிய பிங்க் பூத் மையத்தைத் திறந்து வைத்தார்.

நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பிஞ்சுக் பெண் குழந்தையின் சல்யூட்:

விழா நிகழ்வின் போது, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த பெண் காவலர் ஒருவரின் சிறிய குழந்தை, சீருடையில் இருந்த கோவை மாநகரக் காவல் ஆணையரைக் கண்டதும், சிறிதும் தயக்கமின்றி மிடுக்காக நின்று அவருக்குத் தனது பிஞ்சுக் கரங்களால் கம்பீரமாகச் சல்யூட் (Salute) அடித்தது.

காவலரின் குழந்தையின் இந்த எதிர்பாராத மரியாதையைக் கண்டு நெகிழ்ந்து போன மாநகரக் காவல் ஆணையர், உடனடியாக அக்குழந்தையைப் சல்யூட் (Salute) அடித்தது. புன்னகையோடு மகிழ்ச்சியை கொண்டார்.

இந்த அழகிய மற்றும் உணர்ச்சிப் பூர்வமான தருணம் புகைப்படமாகவும் வீடியோவாகவும் சமூக வலைதளங்களில் பரவி, நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெற்று மிக வேகமாக வைரலாகி வருகிறது.

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

மேட்டூர் அணையை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய் - மனமகிழ காவிரி நீருக்கு மலர் தூவி மரியாதை!

மேட்டூர் அணையை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய் - மனமகிழ காவிரி நீருக்கு மலர் தூவி மரியாதை!

சாலை மார்க்கமாக மேட்டூர் அணைக்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். அணையில் இருந்து வெளியேறிய காவிரி நீரில் பூக்கள், நெல் ஆகியவற்றை தூவி மரியாதை செலுத்தினார்.

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து இன்று (செப்.1) நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்காக காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் சேலம் வந்தடைந்தார். பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்த முதலமைச்சருக்கு அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து, சாலை மார்க்கமாக மேட்டூர் அணைக்கு வந்த முதலமைச்சர் விஜய். வழியெங்கும் திரளாக குவிந்து இருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வாகனத்தின் மேல் இருந்து பொதுமக்களின் வரவேற்பை ஏற்றப்படி முதலமைச்சர் விஜய் மேட்டூருக்கு வருகை தந்தார்.

அதனைய அடுத்து, மேட்டூர் அணை நுழைவாயிலில் அவருக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். அதனை ஏற்றுக் கொண்டு அணைக்கு சென்ற அவர், காவிரியை வணங்கி, மேல தாளங்கள் முழங்க அணையின் மதகுகளை திறந்து வைத்தார். தொடர்ந்து, அணையில் இருந்து வெளியேறிய காவிரி நீரில் பூக்கள், நெல் ஆகியவற்றை தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், அங்கு கூடி இருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட முதலமைச்சர் விஜய்க்கு, காவிரியில் மேட்டூர் அணையின் கட்டுமானம் தொடர்பாக வைக்கப்பட்டு இருந்த புகைப்படங்களை அரசு அதிகாரிகளுடன் பார்வையிட்டார். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியவர்கள் உடன் இருந்தார்.

தற்போது அணையில் இருந்து 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் 12 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். முதலமைச்சரின் வருகையையொட்டி, சேலம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு அணையில் நீர் குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் நீர் வரத்து அதிகரித்தது. அதனை அடுத்து, காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரில் அளவு அதிகரித்து.

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கடந்த 4ஆம் தேதி முதல் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91.15 அடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், டெல்டா பாசனத்திற்கு தேவையான தண்ணீரை முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து திறந்து வைத்து உள்ளார்.

 "எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்" ; தடையோட்டப் பயிற்சியுடன் கோவையில் கோலாகலமாகத் தொடங்கியது SSVM 5-வது ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாடு!

"எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்" ; தடையோட்டப் பயிற்சியுடன் கோவையில் கோலாகலமாகத் தொடங்கியது SSVM 5-வது ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாடு!

விண்வெளி வீரர் பிரசாந்த் நாயர், அபினவ் பிந்த்ரா பங்கேற்பு: மாணவர்களுடன் சவால்களை எதிர்கொள்ளும் அனுபவப் பயணம்!

 எதிர்காலத்தின் சவால்களை மாணவர்கள் மன உறுதியுடன் எதிர்கொள்ளும் வகையில், கோவை SSVM கல்வி நிறுவனங்கள் நடத்தும் 3 நாள் 'ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா' (Transforming India) 5-வது மாநாடு மாணவர்களுக்கான 'தடை ஓட்டப் பயிற்சியுடன்' (Obstacle Course) இன்று உற்சாகமாகத் தொடங்கியது.

உற்சாகமான தடையோட்டப் பயிற்சி:

"எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்" (Adapt to the Future) என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டு உள்ள இம்மாநாட்டின் முதல் நாளில், SSVM வேர்ல்ட் ஸ்கூல் மாணவர்கள் பங்கேற்ற 'ஸ்டூடண்ட் பர்ஸ்ட் ஆப்ஸ்டக்கிள் கோர்ஸ்' எனப்படும் சவாலான தடையோட்டப் பயிற்சி நடத்தப்பட்டது.

வெறும் சொற்பொழிவுகளுடன் தொடங்காமல், மாணவர்கள் தங்களது உடல் மற்றும் மன வலிமையைச் சோதிக்கும் வகையில் வளைந்து கொடுத்தும், கம்பிகளைப் பிடித்துத் தொங்கியும் (Monkey bar), தடைகளைத் தாண்டித் தங்களைச் சமன் செய்தும் இந்தப் பயிற்சியில் அசத்தினர்.

 ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொண்டு மாணவர்கள் முன்னேறிய இந்த நிகழ்வு, தைரியம் மற்றும் தன்னம்பிக்கையின் நேரடிப் பாடமாக அமைந்தது.

நிர்வாகக் குழுவினரும் பங்கேற்பு:

SSVM கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர். மணிமேகலை மோகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்த இந்த நிகழ்வில், அறங்காவலர் எஸ். மோகன்தாஸ், இயக்குனர் ஸ்ரீஷா மோகன்தாஸ், இயக்குனர் நிதின் ஜெய் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து தடையோட்டச் சவால்களில் பங்கேற்று ஊக்கமளித்தனர்.

இது குறித்து டாக்டர். மணிமேகலை மோகன் பேசுகையில் :-

 "குழந்தைகள் தங்களின் எல்லைகளைத் தாண்டிச் செயல்படுவதை அனுபவபூர்வமாக உணர வேண்டும் என்பதே இதன் நோக்கம். இன்று சவால்களை எப்படித் தாண்டுவது என்று குழந்தைகள் கற்றுக்கொண்டால், நாளை வாழ்க்கை தரும் சவால்களை அவர்கள் வெற்றிகரமாக எதிர்கொள்வார்கள்" எனத் தெரிவித்தார்.

கல்வி இயக்குனர் ஸ்ரீஷா மோகன்தாஸ் கூறுகையில் :-

"இது வெறும் தலைப்பு அல்ல; கடினமான சூழ்நிலைகளில் மன உறுதியோடு தொடர்ந்து முன்னேறும் தைரியத்தைக் கண்டறியும் வாய்ப்பு" என்றார்.

சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு:

செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் 1,800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ககன்யான் விண்வெளி வீரர் மற்றும் இந்தியப் படைப்பிரிவு அதிகாரி ஏர் கமாண்டோர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர்

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா

இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்

பிரபல பரதநாட்டியக் கலைஞர் மற்றும் நடன இயக்குநர் ருக்மணி விஜயகுமார்

ஆகிய சாதனையாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். விளையாட்டு, உடல் அசைவுகள், ஒழுக்கம் மற்றும் மன உறுதி ஆகியவற்றை மாணவர்கள் நேரடியாக அனுபவபூர்வமாக உணரும் வகையில் இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

திங்கள், 31 ஆகஸ்ட், 2026

"தொட்டுப் பார்த்தால் காகிதம் ; தொடர்ந்து படித்தால் வெற்றியின் ஆயுதம்" ; கோவையில் சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் 4 புதிய நூல்கள் வெளியீடு!

"தொட்டுப் பார்த்தால் காகிதம் ; தொடர்ந்து படித்தால் வெற்றியின் ஆயுதம்" ; கோவையில் சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் 4 புதிய நூல்கள் வெளியீடு!

இளம் தலைமுறைக்குத் தன்னம்பிக்கை வளர்க்கப் புத்தக வாசிப்பு அவசியம் : காந்திபுரத்தில் கோலாகல விழா!

​ இளம் தலைமுறையினர் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளப் புத்தக வாசிப்பு மிகவும் அவசியம் என ரூட்ஸ் குழும நிறுவனங்களின் இயக்குநரும் சிந்தனைக் கவிஞருமான டாக்டர் கவிதாசன் வலியுறுத்தினார்.

4 புதிய நூல்கள் அறிமுகம்:

கோவையில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் எழுதிய ‘வெற்றிப் படிக்கட்டுகள்’, ‘வெற்றியின் விதைகள் 100’, ‘சிகரம் தொடு’ மற்றும் ‘வெற்றிப்பாதை’ ஆகிய நான்கு புதிய தன்னம்பிக்கை நூல்களின் அறிமுக விழா, கோவை காந்திபுரத்தில் உள்ள ஆர்.வி. ஹோட்டல் வளாகத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

​இவ்விழாவில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் விஸ்வநாதன் வரவேற்புரையாற்றினார். கோவை ஞான சஞ்சீவனம் குருகுலம் நிறுவனர் ஸ்ரீ சசிகுமார் வாழ்த்துரை வழங்கினார்.

நூல் அறிமுக உரைகள்:

நிகழ்ச்சியில், ‘வெற்றிப்பாதை’ நூலை குறித்துக் கோவை பயனீர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சச்சிதானந்தர் மற்றும் இதிகாச மாமணி முனைவர் முருகேசன் ஆகியோர் அறிமுக உரையாற்றினர்.

​மன்னார்குடியைச் சேர்ந்த தமிழ் இலக்கிய ஆய்வறிஞரும் நூலாசிரியருமான பத்மாவதி, ‘வெற்றிப் படிக்கட்டுகள்’ நூல் குறித்தும்; மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி தமிழாசிரியர் முனைவர் கருணாநிதி, ‘வெற்றியின் விதைகள் 100’ நூல் குறித்தும்; அதே பள்ளியின் தமிழாசிரியர் முனைவர் பொன். சங்கர், ‘சிகரம் தொடு’ நூல் குறித்தும் விரிவான அறிமுக உரையாற்றினர்.

புத்தக வாசிப்பின் அவசியம் - கவிதாசன் உரை:

நிகழ்ச்சியில் நூலாசிரியர் சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் பேசுகையில்:

"இன்றைய தனிக்குடும்ப வாழ்க்கை முறையில் இளம் தலைமுறையினர் பல்வேறு உளவியல் சார்ந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் இருந்த அனுபவ வழிகாட்டுதல்களும், எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் தற்போது குறைந்து வருவதால், சில நேரங்களில் இளைஞர்கள் அவசரப்பட்டு ஆபத்தான முடிவுகளை எடுக்கும் நிலை ஏற்படுகிறது.

​எனவே, இளம் தலைமுறையினரிடம் தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். குறிப்பாகத் தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு மற்றும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் திறனை வளர்க்கும் நல்ல புத்தகங்களைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும்" எனக் கூறினார்.

​மேலும், “தொட்டுத் தொட்டுப் பார்த்தால் காகிதம்; தொடர்ந்து படித்தால் வெற்றியின் ஆயுதம்” என்ற கருத்துமிக்க வரிகளை முன்வைத்த கவிதாசன், புத்தக வாசிப்பு அறிவை வளர்ப்பதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் தன்னம்பிக்கையையும் வழங்கும் எனத் தெரிவித்தார்.

​இவ்விழாவில் திரளான இலக்கிய ஆர்வலர்கள், கல்வியாளர்கள், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நூலாசிரியருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

"இளம் பெண்களுக்கு இணையாக மேடையில் ஒய்யார நடை" ; கோவையில் சிந்தி சமூக பெண்களின் 'தீஜ் 2026' ஃபேஷன் ஷோ கலக்கல்!

"இளம் பெண்களுக்கு இணையாக மேடையில் ஒய்யார நடை" ; கோவையில் சிந்தி சமூக பெண்களின் 'தீஜ் 2026' ஃபேஷன் ஷோ கலக்கல்!

ரெட்ரோ டூ மெட்ரோ' தீமில் அசத்திய பாட்டிகள் & இளம் பெண்கள்: ஆர்.எஸ்.புரத்தில் உற்சாகமாகக் கொண்டாட்டம்!

​ கோவையில் நடைபெற்ற 'தீஜ் 2026' விழாவின் முக்கிய நிகழ்வாக அமைந்த ஃபேஷன் ஷோவில், 'ரெட்ரோ டூ மெட்ரோ' (Retro to Metro) எனும் தலைப்பில் இளம் பெண்களுக்கு இணையாக வயதான பெண்களும் மேடையில் ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

​சிந்தி சமூக பெண்களின் 'தீஜ் 2026' விழா:

தமிழகத்தில் பெண்களால் வரலட்சுமி விரதப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுவதைப் போல, சிந்தி சமூகப் பெண்களின் பாரம்பரிய சிறப்பு மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ‘தீஜ் 2026’ (Teej 2026) திருவிழா கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மிகவும் உற்சாகமாக நடைபெற்றது.

​இந்த விழாவில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிந்தி சமூகப் பெண்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

​'ரெட்ரோ டூ மெட்ரோ' ஃபேஷன் ஷோ கலக்கல்:

விழாவின் உச்சகட்ட அம்சமாக, சிந்தி சமூக பாரம்பரிய கலாச்சாரத்தைப் போற்றும் வகையிலும் பெண்களின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையிலும் 'ரெட்ரோ டூ மெட்ரோ' என்ற சிறப்பு ஃபேஷன் ஷோ நடைபெற்றது.

​இதில் பழங்கால ஆடை அலங்காரம், பாரம்பரிய அணிகலன்கள் மற்றும் ரெட்ரோ காலத் தோற்றத்தை வெளிப்படுத்திய ‘ரெட்ரோ சுற்றும்’ (Retro Round), இன்றைய நவீன பெண்களின் ஸ்டைல் மற்றும் தன்னம்பிக்கையை பறைசாற்றிய ‘மெட்ரோ சுற்றும்’ (Metro Round) பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

​வயது தடையில்லை என நிரூபித்த பாட்டிகள்:

இந்த ஆடை வடிவமைப்புக் கண்காட்சிப் போட்டியில், இளம் பெண்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், வயதான பெண்களும் மிகுந்த உற்சாகத்துடன் மேடையில் தோன்றி ஒய்யார நடை (Ramp Walk) நடந்து அசத்தினர்.

​"வயது என்பது தன்னம்பிக்கைக்கும் திறமைக்கும் ஒருபோதும் தடையில்லை" என்பதை உணர்த்தும் வகையில், அனைத்து வயதுப் பெண்களும் ஒரே மேடையில் ஒன்று கூடித் தங்களது திறமையை வெளிப்படுத்தியது இவ்விழாவின் மிக முக்கியச் சிறப்பம்சமாக அமைந்தது.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

கோவையில் ஓணம் வைப்... ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செண்டை மேளத்துடன் 'பகீர்' கொண்டாட்டம்!

கோவையில் ஓணம் வைப்... ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செண்டை மேளத்துடன் 'பகீர்' கொண்டாட்டம்!

 கோவையில் ஓணம் வைப்... ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செண்டை மேளத்துடன்  கொண்டாட்டம்!

நவஇந்தியாவில் அத்தப்பூக்கோலமிட்டு மாஸ் காட்டிய மாணவ-மாணவிகள்: டிஜே இசையில் கலகலத்த வளாகம்!

மலையாள மக்களின் மிக முக்கியப் பண்டிகையான ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்கள் மிகக் கோலாகலமாகவும் உற்சாகத்துடனும் நடைபெற்றது. 

பாரம்பரிய ஆடையில் பிரம்மாண்ட அத்தப்பூக்கோலம்:

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஓணம் பண்டிகை நிகழ்ச்சியில், மாணவ-மாணவிகள் அனைவரும் கேரள பாரம்பரிய உடையான முண்டு, செட் புடவைகளை அணிந்து வந்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர். கல்லூரி முகப்பில் அழகிய வண்ண மலர்களால் பிரம்மாண்ட அத்தப்பூக்கோலமிட்டு மகாபலி சக்கரவர்த்தியைத் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

செண்டை மேளத்துடன் மகாபலி வருகை – கேரள நடனங்கள்:

தொடர்ந்து, செண்டை மேளம் அதிரடியாக முழங்க, மகாபலி மன்னன் வேடமணிந்த நபருடன் இணைந்து மாணவ-மாணவிகள் உற்சாகமாக நடனமாடினர். அத்துடன் கேரளாவின் பாரம்பரிய நடனங்களை ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

டிஜே இசையில் Full Vibe கொண்டாட்டம்:

இதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் சிறப்பு நடன நிகழ்ச்சிகளும், பிரம்மாண்ட டிஜே (DJ) இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. டிஜே இசையின் அதிரடி பீட்ஸிற்கு ஏற்ப அனைத்து மாணவ-மாணவிகளும் ஒன்று கூடி 'Full Vibe'-இல் உற்சாகத்துடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

கல்லூரி வளாகம் முழுவதுமே திருவிழாக் கோலம் பூண்டு, மாணவர்களின் ஆரவாரத்தில் கலகலத்துப் போனது.

"ஓணம் விழாவில் உத்வேக நடனம்" - கோவையில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய வானதி சீனிவாசன்!

"ஓணம் விழாவில் உத்வேக நடனம்" - கோவையில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய வானதி சீனிவாசன்!

 "ஓணம் விழாவில் உத்வேக நடனம்" - கோவையில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய வானதி சீனிவாசன்!

பா.ஜ.க நிர்வாகி இல்லத்தில் களைகட்டிய கொண்டாட்டம்: தொண்டர்களுடன் இணைந்து ஆடி மகிழ்ந்த முன்னாள் எம்.எல்.ஏ!

​ ஓணம் திருநாளை முன்னிட்டு கோவை வடவள்ளியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில், பா.ஜ.க தேசிய மகளிர் அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு, பாரம்பரிய நடனமாடி ஓணம் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

கோவை மாநகர, மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர், வடவள்ளிப் பகுதியில் உள்ள கட்சி நிர்வாகி ராஜ பிந்து இல்லத்தில் ஓணம் பண்டிகை விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

​இந்த விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வருகை தந்தார்.

விழாவில் அமைக்கப்பட்டு இருந்த அழகிய அத்தப்பூக் கோலத்தைப் பார்வையிட்ட அவர், அங்கு இருந்த பெண்களுடனும் பா.ஜ.க தொண்டர்களுடனும் இணைந்து ஓணம் திருநாளின் பாரம்பரிய நடனங்களை ஆடி மகிழ்ந்தார்.

​தொடர்ந்து அங்கு இருந்தவர்களுக்கு ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், தமிழகத்திலும் கோவையிலும் வாழும் மலையாளி மக்களின் சகோதரத்துவத்தையும் பண்பாட்டையும் போற்றும் வகையில் இந்த விழா அமைந்து இருப்பதாகப் பாராட்டு தெரிவித்தார்.

​முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தொண்டர்களுடன் இணைந்து நடனமாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

திங்கள், 17 ஆகஸ்ட், 2026

மழை வேண்டி அசத்தல் ஐதீகம் : மேளதாளம் முழங்க கழுதைகளுக்குப் பிரம்மாண்ட திருமணம் செய்து வைத்த கோவை கிராம மக்கள்!

மழை வேண்டி அசத்தல் ஐதீகம் : மேளதாளம் முழங்க கழுதைகளுக்குப் பிரம்மாண்ட திருமணம் செய்து வைத்த கோவை கிராம மக்கள்!

 மழை வேண்டி அசத்தல் ஐதீகம் : மேளதாளம் முழங்க கழுதைகளுக்குப் பிரம்மாண்ட திருமணம் செய்து வைத்த கோவை கிராம மக்கள்!

மாலையும் கழுத்துமாக வலம் வந்த மணமக்கள்: மொய்ப்பணம் செலுத்தி கம்பங்கூழ் பருகிய பொதுமக்கள்!

​ கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள லக்கேபாளையம் கிராமத்தில் கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், மழை பெய்ய வேண்டி மனிதர்களைப் போலவே கழுதைகளுக்கு மேளதாளம் முழங்கப் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

லக்கேபாளையம் கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மழை பெய்யாததால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், கிராம மக்கள் பழங்கால ஐதீகமான 'பஞ்ச கல்யாணி' முறையிலான கழுதைகள் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான வறட்சி நிலவிய போது, இதே போல் கழுதைகளுக்குத் திருமணம் நடத்தி மழை பெய்ததாகப் பெரியோர்கள் தெரிவித்தனர்.

இன்று அப்பகுதியில் உள்ள சுப்பிரமணியர் கோயிலில் இத்திருமணம் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

 லக்கேபாளையத்தைச் சேர்ந்த பெண் கழுதைக்கு வண்ணப் புடவை கட்டி, வளையல், பாசி, உதட்டுச்சாயம் (Lipstick), நகச்சாயம் (Nail Polish) பூசி மணமகள் அலங்காரம் செய்யப்பட்டது.

பக்கத்து கிராமமான கோவில்பாளையத்தைச் சேர்ந்த ஆண் கழுதைக்கு வேஷ்டி, துண்டு அணிவித்து மணமகன் அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து மணமகன், மணமகள் அழைப்பு ஊர்வலமாக நடைபெற்றது. கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்ட பின், மேளதாளங்கள் முழங்க பெண் கழுதைக்குத் தாலி கட்டப்பட்டுத் திருமணம் பாரம்பரிய முறைப்படி இனிதே நிறைவுற்றது.

​மனித திருமணங்களைப் போலவே, இத்திருமணத்திற்கு வந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் மொய்ப்பணம் வழங்கிச் சென்றனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சுடச்சுட கம்பங்கூழ் வழங்கப்பட்டது.

 திருமணத்தைத் தொடர்ந்து 'மறுவீடு அழைப்பு' நிகழ்வும் நடைபெற்றது. கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்து உள்ளதால், நிச்சயம் இந்த ஆண்டும் இந்த ஐதீகம் பலித்துக் காரி மழை பொழியும் என்ற நம்பிக்கையில் லக்கேபாளையம் கிராம மக்கள் மழையை எதிர்பார்த்துக் காத்து உள்ளனர்.

சனி, 15 ஆகஸ்ட், 2026

தமிழ்நாட்டை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதே மிகப்பெரிய சுதந்திரம் தான்’ - சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் பேச்சு !!!

தமிழ்நாட்டை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதே மிகப்பெரிய சுதந்திரம் தான்’ - சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் பேச்சு !!!

 தமிழ்நாட்டை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதே மிகப்பெரிய சுதந்திரம் தான்’ - சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் பேச்சு !!!

தமிழ்நாட்டை லஞ்சம் ஊழலில் இருந்து காப்பாற்றுவதே மிகப்பெரிய சுதந்திரம் தான் என 80 வது சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் பேசினார்.

இந்திய நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை ஜார்ஜ் கோட்டை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல் முறையாக முதலமைச்சர் விஜய் தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, காலை சுமார் 7:45 மணி அளவில் தனது நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் விஜய், காவல்துறையின் மோட்டார் சைக்கிள் அணிவகுப்புடன் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முதலமைச்சர் விஜய்-யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா, நடிகை த்ரிஷா ஆகியோர் இவ்விழாவில் முதல் வரிசையில் அமர்ந்து இருந்தனர். காவல்துறை அணிவகுப்பு மரியாதையை அடுத்து, முதல் முறையாக கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய முதலமைச்சர் விஜய், அதற்கு ‘சலியூட்’ அடித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், ”நம்மை அடிமையாக வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தாலே மக்கள் மத்தியில் ஒரு ஒற்றுமை ஏற்படும். அனைவரும் ஒன்றாக யோசித்து ஒன்று சேருவார்கள். அவ்வாறு ஒன்று சேரும் இடத்தில் தான் சாதி ஒழியும், மதம் ஒழியும், மொழி இனம் ஆகிய அனைத்தும் உடைந்து நொறுங்கும். இதுதான் உண்மையான சுதந்திரம்.

தமிழ்நாட்டை லஞ்சம் ஊழலில் இருந்து காப்பாற்றுவதே மிகப்பெரிய சுதந்திரம் தான். 80 வது சுதந்திர தின நாளில் நாட்டின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, இன்று இந்த விழாவில் என்னை பேச வைத்து இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். பொதுவாழ்வில் சமரசம் இருக்கக் கூடாது. மக்கள் பணி தான் முக்கியமானது. அதை நோக்கி தான் தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருகிறது. அந்த நோக்கில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை, மத்திய அரசின் நிர்வாக ரீதியான ஒத்துழைப்போடு செயல்படுத்த இருக்கிறோம்.

தமிழ்நாடு, கொள்கைகள் என்று வந்துவிட்டால் மாநிலங்களுக்கு எதிரான கொள்கை முடிவுகளை தமிழக வெற்றிக் கழக அரசு எப்போதும் எதிர்க்கும். இதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. இதற்கு முன்னால் கொண்டு வந்த ’அம்மா உணவகம்’ போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெரியார் பிறந்த நாளன்று ‘காலை உணவு திட்டம்’ விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

அனைவரும் ஓட்டு போட்டு, உங்கள் அண்ணனை, தம்பியை, பிள்ளையை, ஜெயிக்க வைத்து முதலமைச்சராக விட்டீர்கள். அதனால் நம் கடமை எல்லாம் முடிந்து விட்டது என்று யாரும் ஒதுங்கிப் போய் விடாதீர்கள். இனிமேல் தான் நீங்கள் எங்களுடன் கூடவே இருக்க வேண்டும். உறுதியாக அரசுடன் கூடவே இருக்க வேண்டும். வாருங்கள் நாம் அனைவரும் கடமையை சேர்ந்து செய்வோம்” என்று மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் விஜய் தகைசால் தமிழர் விருது எம். கிருஷ்ணசாமிக்கும், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருது டாக்டர் வி. மோகனுக்கும், துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது நௌஷீன் பானு சந்திற்கும் வழங்கி கௌரவித்தார்.

மேலும், காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 15 பேருக்கு பதக்கங்களை வழங்கி முதலமைச்சர் விஜய் கெளரவித்தார். தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பதக்கங்களை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி - தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேச்சு !!!

ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி - தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேச்சு !!!

 ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி - தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேச்சு !!!

நாட்டின் 80 வது சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லி செங்கோட்டையில் 13 வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இந்திய நாட்டின் 80 வது சுதந்திர தின விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சுதந்திர விழா கோலாகலமாக நடைபெற்றது. 

2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தை முன்னெடுத்துச் செல்வதில் இளைஞர்களின் பங்களிப்பை கொண்டாடும் வகையிலும் இந்தாண்டு சுதந்திர தின விழா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

செங்கோட்டைக்கு வருகைத்தந்த பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். அதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றார்.

தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றி மரியாதை செலுத்தினார். முன்னதாக வந்தே மாதரம் பாடத்தில் 150 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக முதன் முறையாக சுதந்திர தின விழாவில் வந்தே மாதரம் பாடம் இசைக்கப்பட்டது.

கொடி ஏற்றத்தைத் தொடர்ந்து தேசியக் கீதம் இசைக்கப்பட்டு, இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் மூலம் தேசியக்கொடி பறக்க மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், 2,500 என்.சி.சி உறுப்பினர்கள், எனது பாரத் தன்னார்வலர்கள் மற்றும் 5,000 மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக வந்தே மாதரம் பாடப்பட்டு, தேசிய கீதம் பாடப்பாட்டது.

சுதந்திர தின விழாவில் உரையில் பிரதமர் மோடி, ஐந்து புதிய அணுமின் உலைகள், ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி, போட்டித் தேர்வு இளைஞர்கள் இலவச ஆன்லைன் பயிற்சி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இன்று, ஒவ்வொரு இதயமும் 'வந்தே மாதரம்' எனும் தாளத்திற்கு ஏற்பத் துடிக்கிறது. இன்று, ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி உள்ளது. ஒவ்வொருவருக்குள்ளும் மூவர்ணக் கொடி உள்ளது. இந்தச் சுதந்திர தினத்தன்று, அனைத்துச் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். சுதந்திரத்திற்குப் பிறகு, செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து 'வந்தே மாதரம்' முழக்கம் எதிரொலித்த தருணம். இன்று இந்த விழாவில் கலந்து கொண்டு உள்ள அனைவருக்கும் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்.

2047-ம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற பெரும் கனவை இந்தியா கொண்டு உள்ளது. அந்த முயற்சியில் நாம் உறுதியுடன் இருக்கும். இது நமது துணிச்சலின் அடையாளமாக வெளிப்படுகிறது.

சமீபத்தில், நாட்டின் சில பகுதிகள் வெள்ளம் மற்றும் நிலச் சரிவுகளால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அவர்களின் துயரத்தில் நாங்கள் ஆழ்ந்த அனுதாபம் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன். நாங்களும் ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்குத் துணையாக நிற்கிறோம்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளில், பாதுகாப்புத் துறை உற்பத்தி நான்கு மடங்காகவும், கதர் மற்றும் கிராமத் தொழில் உற்பத்தி ஐந்து மடங்காகவும், மின்னணு சாதன உற்பத்தி ஏழு மடங்காகவும் அதிகரித்து உள்ளன. அலைபேசி உற்பத்தி 33 சதவீதமும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 100 சதவீதமும் அதிகரித்து உள்ளன. சிறிய கனவுகள் இனி போதுமானதாக இருக்காது. நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும்.

ஏனெனில், பெரிய கனவுகள் நமது சிந்தனையை விரிவுபடுத்துவதோடு, நமது தொலைநோக்குப் பார்வையின் எல்லைகளையும் அகலமாக்குகின்றன. நமது உறுதிப்பாடு அசைக்க முடியாததாக இருக்க வேண்டும். அத்தகைய உறுதியான மனநிலை இருக்கும் போது, இடர்பாடுகள் மற்றும் பேரிடர்களுக்கு மத்தியிலும் கூட முன்னேற்றத்திற்கான பாதையை வகுக்கும் ஆற்றல் இயல்பாகவே உருவாகிறது.

கடந்த 12 ஆண்டுகளில் பலத்தரப்பட்ட மக்கள், நாட்டை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல அசைக்க முடியாத உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் சாத்தியமான அனைத்து வழிகளிலும் பாடுபட்டு உள்ளனர். இத்தகைய முயற்சிகளை நான் மரியாதையுடன் அங்கீகரிக்கிறேன்.

நாம் சுயசார்பு கொண்டவர்களாக மாறி, நமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இன்று, ஒவ்வொரு இந்தியரும் 'மேக் இன் இந்தியா' மற்றும் 'சுதேசி' போன்ற முன்னெடுப்புகளுடன் இணைந்து வருகின்றனர்” எனக் கூறினார்.

மேலும், “ஆற்றல் பாதுகாப்பு என்பது காலத்தின் தேவையாகும். 2047-ம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனை எட்டும் இலக்குடன் நாம் முன்னேறி வருகிறோம். இந்த தசாப்தத்தில் ஐந்து புதிய அணுமின் உலைகளைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர இலக்கு வைத்து உள்ளோம்.

நாடு சுதந்திரம் அடைந்தது, அந்தச் சுதந்திரம் பல கனவுகளுடன் கூடியதாக இருந்தது. இருப்பினும், நம்மால் வேகமெடுக்கவோ அல்லது முன்னேற்றத்திற்கான உத்வேகத்தைப் பெறவோ முடியவில்லை. 'நடப்பது நடக்கட்டும்', 'இப்படியே போகட்டும்', 'எப்படியாவது நடந்துவிடும்', 'அப்போது பார்த்துக்கொள்ளலாம்' என்ற மனப்பான்மையிலேயே நாம் தேங்கி நின்றோம். 2014-ம் ஆண்டு வரை உலகம் நம்மை "பலவீனமான ஐந்து நாடுகள்" என்ற வரிசையில் வைத்துப் பார்க்கும் நிலைக்குத் தள்ளியது.

இத்தகைய சூழலுக்கு மத்தியிலும், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா புதியதொரு உத்வேகத்தைப் பெற்று உள்ளது. நாம் மிக வேகமாக முன்னேறி வருகிறோம். கடந்த 12 ஆண்டுகளில், பாதுகாப்புத் துறை உற்பத்தி கிட்டத்தட்ட நான்கு மடங்காகவும், கதர் மற்றும் கிராமப்புறத் தொழில்களின் உற்பத்தி ஏறக்குறைய ஐந்து மடங்காகவும் அதிகரித்து உள்ளது.

மின்னணு சாதனங்களின் உற்பத்தி கிட்டத்தட்ட ஏழு மடங்கு விரிவடைந்து உள்ளது. நவீன ரயில் பெட்டிகளின் உற்பத்தி 21 மடங்கும், அலைபேசி உற்பத்தி 33 மடங்கும் அதிகரித்து உள்ளன. அதையும் தாண்டி, டிஜிட்டல் தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளிலும் நாம் முத்திரை பதித்து உள்ளோம்.

இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கு மடங்காகவும், காப்புரிமை அங்கீகாரங்கள் நான்கு மடங்காகவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நூறு மடங்காகவும் உயர்ந்து உள்ளன. சாமானிய குடிமக்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதிலும் நாம் அதே தீவிரத்துடன் பணியாற்றி உள்ளோம். முன்பை விட சராசரியாக ஆண்டுக்கு 15 மடங்கு வேகத்தில் குழாய் வழி குடிநீர் இணைப்புகளை வழங்கி உள்ளோம்.

முந்தைய ஆண்டு வேகத்தை விட ஆறு மடங்கு வேகத்தில் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. ஏழைகளுக்கு நான்கு மடங்கு வேகத்தில் கழிப்பறைகளை அமைத்து உள்ளோம். அதே போல், பின் தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு மூன்று மடங்கு வேகத்தில் வீடுகளை வழங்கி உள்ளோம். நிர்வாகத்திலும் நாடு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து உள்ளது.

ஆயிரக் கணக்கான விதிமுறை நடைமுறைகள் நீக்கப்பட்டு உள்ளன. மேலும் காலாவதியான நூற்றுக் கணக்கான சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. கடந்த நூற்றாண்டின் சட்டங்களைச் சார்ந்திருப்பதன் மூலம் 21-ம் நூற்றாண்டில் முன்னேறிச் செல்ல முடியாது. நவீன உள்கட்டமைப்பை உருவாக்க மெட்ரோ ரயில் கட்டமைப்புகளை விரிவுபடுத்தினோம் மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்தினோம். இவை அனைத்தும் கடந்த பத்தாண்டுகளுக்குள் நிகழ்ந்து உள்ளன.

ஆத்மநிர்பர் பாரத் (சுயசார்பு இந்தியா) என்பது மிக அவசியமான ஒன்றாகும். அதனால் தான், இந்தியா இனி பிற நாடுகளைச் சார்ந்து இருக்கக் கூடாது என்றும், நாம் சுயசார்பு கொண்டவர்களாக மாற வேண்டும் என்றும் கடந்த சில ஆண்டுகளாக அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

அதற்காக நமது சொந்தத் திறன்களை நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப உலகில், 'சிப்'களின் முக்கியத்துவத்தை நாம் நன்கு அறிவோம். மின்னணுப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் அல்லது போக்குவரத்து அமைப்புகள் என எதுவாக இருந்தாலும், சிப்கள் இன்றியமையாதவை. அவை இல்லையென்றால் உலகம் ஸ்தம்பித்து விடும்.

இத்துறையில் இந்தியா சுயசார்பை நோக்கி முன்னேறி உள்ளது. ஏற்கனவே, மூன்று பெரிய செமிகண்டக்டர் ஆலைகள் நிறுவப்பட்டு உள்ளன. மேலும், ஏற்றுமதிக்கான உற்பத்திப் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன. வரும் 7 அல்லது 8 ஆண்டுகளில், மேலும் ஐந்து முதல் எட்டு செமிகண்டக்டர் ஆலைகள் மிக விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளன” என்று குறிப்பிட்டார்.

மேலும் பேசுகையில், “கடந்த 12 முதல் 20 ஆண்டுகளில் நாம் பல ஆபத்துகளை எதிர்கொண்டு உள்ளோம். கொரோனா பாதிப்பில் இருந்து நாம் மீண்டு வந்த உடனேயே, உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியப் பகுதிகளில் தாக்குதல் தொடங்கின. ஒரு பதற்றமான சூழல் நிலவியது. எதிர்காலம் குறித்துக் கணிப்பவர்கள் என்னென்னவோ கணிப்புகளைச் சொன்னார்கள். தடுப்பூசிகள் கிடைக்காது என்றும், பெட்ரோல், டீசல் மற்றும் உரங்கள் கிடைக்காது என்றும் வதந்திகளைப் பரப்பி, நாட்டை அச்சத்தில் ஆழ்த்துவதில் சிலர் மகிழ்ச்சி கண்டனர்.

இன்று நம் நாடு கச்சா எண்ணெயைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்குக் காரணம் நமது தவறான சிந்தனைப் போக்கு தான். நமது கடற்கரைப் பகுதியில் 99 சதவீதத்தை அனுமதிக்கப்படாத பகுதியாக நாமே அறிவித்து இருந்தோம் என்பது உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம். ஒரு காலத்தில் அனுமதிக்கப்படாத பகுதிகளாக கருதப்பட்ட இடங்கள், இன்று முன்னேற்றத்திற்கான பகுதிகளாக மாறி உள்ளன.

ஃபாஸ்ட் பிரீடர்' அணு தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றதன் மூலம் இந்தியா இந்த ஆண்டு ஒரு முக்கிய மைல்கல்லை எட்டி உள்ளது. இது அணு எரிபொருள் துறையில் தன்னிறைவை அடைவதற்கான ஒரு பெரும் முன்னேற்றமாகும்.

வரும் நாட்களில் ஒரு துடிப்பான 'குடிமைப் பாதுகாப்பு' கட்டமைப்பை உருவாக்க உள்ளோம் என்பதை இன்று செங்கோட்டையில் இருந்து அறிவிக்கிறேன். நவீன அமைப்புகள் குறித்து அவர்களுக்குப் பயிற்சி அளிப்போம். தற்கால நெருக்கடிகளில் இருந்து குடிமக்களைப் பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? சமகாலச் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட, ஒரு பிரம்மாண்டமான மற்றும் நவீன குடிமைப் பாதுகாப்பு தன்னார்வலர் படையை அரசு உருவாக்க உள்ளது.

இளைஞர்களுக்கான நவீன திறன் வளர்ச்சி குறித்து பேசிய அவர், சமீபத்தில் செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் குறித்த உச்சிமாநாடு நடந்தது. செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டு எல்லை வேகமாக விரிவடைந்து வருகிறது. செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.

வரும் ஆண்டில் ஒரு கோடி இளைஞர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுத் திறன்களில் பயிற்சி அளித்து, அவர்களை இத்துறையில் உலகிற்குத் தலைமை தாங்கும் வகையில் வலுப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது” என அறிவித்தார். மேலும், அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி வழங்கப்படும் என அறிவித்தார்.

வளர்ச்சி அடைந்த இந்தியா எனும் பயணத்தில் இளைஞர்களுக்குப் பெரும் பங்கு உள்ளது. 'விக்சித் பாரத்'-தின் மிகப்பெரிய பயனாளிகள் நாட்டின் இளைஞர்களாகவே இருப்பார்கள். கடந்த 5 முதல் 7 தசாப்தங்களில் சாதிக்க முடியாதவற்றை, வரவிருக்கும் 5 முதல் 7 ஆண்டுகளில் நாம் சாதிக்க வேண்டும். வரும் ஆண்டுகளில், அரசாங்கம் சீர்திருத்தங்களை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

நக்சலிசம் மற்றும் மாவோயிசம் ஆகியவை லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழித்தன. இவை அரசியலமைப்பையே கேலிக்கு உள்ளாக்கின. இன்று, நக்சல்-மாவோயிச வன்முறை தனது வலிமையை இழந்து, இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது என்று கூறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

அதை முழுமையாக ஒழிக்கும் திசையில் நாம் முன்னேறி வருகிறோம். ஒரு காலத்தில் நக்சல்களின் குண்டுகள் பாய்ந்தும், நிலம் ரத்தத்தால் நனைந்தும் கிடந்த அதே பகுதிகளில், இன்று வளர்ச்சி, நம்பிக்கை மற்றும் கூட்டு முயற்சியின் அடையாளமான மூவர்ணக் கொடி உயரே பறக்கிறது.

நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், ஏதோ ஒரு காரணத்தினால், கடந்த 40 ஆண்டுகளாக இந்த கனவு மீண்டும் அரசியல் சூழலுக்குப் பலியாகி வந்து உள்ளது.

இன்று செங்கோட்டையின் கொத்தளத்தில் மூவர்ணக் கொடியின் கீழ் நின்று, நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நான் ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். பெண்களைக் கௌரவிக்கவும், நமது தாய்மார்களும் சகோதரிகளும் சட்டமன்றங்கள் மற்றும் மக்களவையில் 33 சதவீதப் பிரதிநிதித்துவத்தை விரைவில் பெறுவதை உறுதி செய்யவும் முன்வாருங்கள்.

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வெறும் எண்களைச் சேகரிப்பது மட்டுமல்ல; அதன் மூலம் பெறப்படும் நுணுக்கமான விவரங்களே கொள்கைகளையும் திட்டங்களையும் வடிவமைக்கின்றன. நீங்கள் வழங்கும் தகவல்கள் எவ்வளவு துல்லியமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு அது நாடு முன்னேற உதவும். எனவே, நாட்டின் இளைஞர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து துல்லியமான தகவல்களை வழங்க கேட்டுக் கொள்கிறேன்” எனப் பேசினார்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

ஆடி வெள்ளி, சுதந்திர தினம் தேசியக் கொடி, இந்திய வரைபடத்துடன் ஆன்மீக தரிசனம் ; கேரட், பீட்ரூட், தக்காளி எனப் பல வண்ணக் காய் கறிகளால் உருவான தேசியச் சின்னங்கள் - பக்தர்கள் மெய்சிலிர்க்கத் தரிசனம் !!!

ஆடி வெள்ளி, சுதந்திர தினம் தேசியக் கொடி, இந்திய வரைபடத்துடன் ஆன்மீக தரிசனம் ; கேரட், பீட்ரூட், தக்காளி எனப் பல வண்ணக் காய் கறிகளால் உருவான தேசியச் சின்னங்கள் - பக்தர்கள் மெய்சிலிர்க்கத் தரிசனம் !!!

 ஆடி வெள்ளி, சுதந்திர தினம் தேசியக் கொடி, இந்திய வரைபடத்துடன் ஆன்மீக தரிசனம் ; கேரட், பீட்ரூட், தக்காளி எனப் பல வண்ணக் காய் கறிகளால் உருவான தேசியச் சின்னங்கள் - பக்தர்கள் மெய்சிலிர்க்கத் தரிசனம் !!!

நாளை நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டும், ஆடி மாத வெள்ளிக் கிழமையை முன்னிட்டும், கோவையில் உள்ள பிரபல மாகாளியம்மன் கோவில் காய்கறிகளால் தேசியச் சின்னங்கள் வடிவில் அலங்கரிக்கப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

கோவை, பெரிய கடை வீதி பகுதியில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் அமைந்து உள்ளது. ஆடி மாதம் துவங்கியது முதலே இக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் கோவில் வளாகம் முழுவதும் வித்தியாசமான முறையில் அலங்கரிக்கப்பட்டு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று, நாளைய சுதந்திர தினத்தைக் தாங்கும் வகையில் கோவில் முழுவதும் பிரம்மாண்ட காய்கறி அலங்காரம் செய்யப்பட்டது.

​இந்திய நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில், காய்கறிகளைக் கொண்டே தேசியக்கொடி, இந்திய நாட்டின் வரைபடம், தேசியப் பறவையான மயில், தேசிய விலங்கான புலி மற்றும் அன்னப்பறவை ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு கோவில் சுவர் முழுவதும் பிரம்மாண்டமாகப் பொருத்தி அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இந்த அற்புத அலங்காரத்திற்காகக் கேரட், பீட்ரூட், கத்தரிக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, தக்காளி உள்ளிட்ட பல வகையான வண்ணக் காய்கறிகள் பயன்படுத்தப்பட்டன.

​தேசிய உணர்வையும் ஆன்மீகத்தையும் ஒன்றாகக் கலந்து செய்யப்பட்ட இந்த காய்கறி அலங்காரத்தைக் காணக் கோவையின் பல பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தந்து அம்மனைத் தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

 "லுங்கி சேலையில் வந்த நடிகை அம்பிகா" - கைத்தறி நெசவாளர்களை ஓவியர்களுடன் ஒப்பிட்டு நெகிழ்ச்சி பேச்சு !!!

"லுங்கி சேலையில் வந்த நடிகை அம்பிகா" - கைத்தறி நெசவாளர்களை ஓவியர்களுடன் ஒப்பிட்டு நெகிழ்ச்சி பேச்சு !!!

 "லுங்கி சேலையில் வந்த நடிகை அம்பிகா" - கைத்தறி நெசவாளர்களை ஓவியர்களுடன் ஒப்பிட்டு நெகிழ்ச்சி பேச்சு !!!

"கைத்தறி நெசவாளர்களுக்கு நாம் செய்யும் சிறந்த உதவி அவர்களின் பொருட்களை வாங்குவதே!"

​ கோவையில் நடைபெற்ற கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிரபல திரைப்பட நடிகை அம்பிகா, கைத்தறி உடைகளின் முக்கியத்துவம் குறித்துப் சுவாரஸ்யமாகவும் நெகிழ்ச்சியாகவும் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மேடையில் பேசிய நடிகை அம்பிகா பேசும்போது:

​"ஒரு கைத்தறி நெசவு ஆடை அலங்கார நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகிறேன் என்பதால், அதற்குப் பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு லுங்கி மற்றும் ஒரு கேரளா சேலையை (Kerala Saree) புதிதாக வாங்கி, அவற்றை ஒன்றாக இணைத்துத் தைத்து இப்படி ஒரு ஆடையை அணிந்து வந்து உள்ளேன்.

 'லுங்கி டான்ஸ்' ஆடத் தெரிந்த நமக்கு, இப்படி 'லுங்கி சேலை' கட்டுவதில் எந்தத் தவறும் இல்லை கைத்தறி ஆடைகள் மீது இன்றைய கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்க்கும் போது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

​உலகிலேயே மிகச் சிறந்த ஓவியர்கள் யார் ? என்று கேட்டால், அது கைத்தறி நெசவாளர்கள் தான் என்று நான் சொல்வேன். நூல்களால் அவர்கள் நெய்யும் ஒவ்வொரு ஆடையும் ஒரு கலைப்படைப்பு. இன்றைய மக்கள் அனைவரும் கைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என நினைத்தால், அவர்கள் கஷ்டப்பட்டுத் தயாரித்த கைத்தறிப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். அதுவே அவர்களுக்கு நாம் தரும் மிகப்பெரிய சந்தோஷம்," எனத் தெரிவித்தார்.

பா.ஜ.க - தி.மு.க கூட்டணியை பத்திரிகையாளர்களை உருவாக்குகிறார்கள் ; அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் கிடையாது... வானதி சீனிவாசன் கருத்து !!!

பா.ஜ.க - தி.மு.க கூட்டணியை பத்திரிகையாளர்களை உருவாக்குகிறார்கள் ; அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் கிடையாது... வானதி சீனிவாசன் கருத்து !!!

 பா.ஜ.க - தி.மு.க கூட்டணியை பத்திரிகையாளர்களை உருவாக்குகிறார்கள் ; அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் கிடையாது... வானதி சீனிவாசன் கருத்து !!!

தேசிய கைத்தறி தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஐடியா மேக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய 9-வது ஆண்டின் 'கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு' (Handloom Fashion Show) இறுதிப்போட்டி, கோவை, கோவை புதூர் பகுதியில் உள்ள வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் விமரிசையாக நடைபெற்றது.

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் பேசும் போது ;

ஆகஸ்ட் 7ஆம் தேதி மத்திய அரசு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒவ்வொரு வருடமும் தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடுவதற்காக அறிவிப்பு செய்து ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் மிகச் சிறப்பாக தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுவதாக கூறியவர், அந்த வகையிலே கடந்த எட்டு வருடங்களாக கோவை மக்கள் சேவை மையமும், ஐடியா மேக்ஸ் நிறுவனமும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவ - மாணவியர்களுக்கு ஹேண்ட் லூம் பேஷன் ஷோ என்ற நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு உள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் இதில் போட்டியாளர்களாக பங்கேற்று இருப்பதாகவும், கிட்டத்தட்ட 20,000 மேற்பட்ட மாணவர்கள் தொழில் செய்வதாகவும், ஒவ்வொரு வருடமும் இதில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் நாடு முழுவதும் இருக்கின்ற லீப்பை பற்றி பயன்படுத்துவது அதை அழகாக வெளிப்படுத்துவது அதேபோன்று இந்த நிகழ்ச்சி ஒரு ஆடை அலங்கார அணிவகுப்பு மட்டுமல்லாமல் அவர்களிடம் கைத்தறி தொடர்பான கேள்விகளும் கேட்கப்பட்டு அந்த அறிவும் பரிசோதிக்கப்படுவதாகவும், தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஒன்பதாம் ஆண்டு வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு உள்ளதாகவும், இதன் வாயிலாக கைத்தறி பற்றிய விழிப்புணர்வு மட்டுமல்ல இந்தியா முழுவதும் இருக்கின்ற நம்முடைய பல்வேறு நெசவு மற்றும் நெசவாளர்கள் மீதான பெருமை மற்றும் அவர்கள் மீதான மதிப்பு அதிகரித்துக் கொண்டு உள்ளதாக கூறினார்.

நெசவாளர்கள் இன்று நமது நாட்டின் பாரம்பரிய, சிறப்பை அடிப்படை திறனை இவையெல்லாம் வெளிப்படுத்துகின்ற விதத்தில் அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு வேலைகளுமே, அடுத்து வரக்கூடிய சமுதாயம் பாராட்டி, நேசிக்கும் என்றால் அவர்களுடைய தொழிலும் மேம்பட வேண்டும் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் இன்னொரு நோக்கம் என்றார்.

இந்த கல்லூரி மாணவ - மாணவிகள் ஆயிரக்கணக்கான பேர் பங்கேற்று கலந்து கொண்ட போது நம்மளுடைய பகுதி நெசவு மட்டுமல்ல, நாடு முழுவதும் இருக்கின்ற நெசவு தொழிலை பற்றி அந்த அறிவு அவர்களுக்கு கிடைக்கிறது. இதில் கலந்து கொண்ட நிறைய பேர் கைத்தறி தொழிலையும் செய்வதற்கு விருப்பப்படுவதை பார்ப்பதாக கூறியவர், இந்த தொழிலிலும் ஈடுபட்டு வெற்றிகரமாக இருக்கக் கூடிய, பரிசு பெறுபவர்களும் சரி, பங்கேற்பாளர்களும் சரி எங்களிடம் சொல்லும்பொழுது இந்த நிகழ்ச்சியினுடைய வெற்றி என்பது நிரூபணம் ஆகிறது என்றார்.

சட்டமன்றத்தில் நீட் தேர்வு ரத்து குறித்தான தீர்மானம் குறித்த கேள்விக்கு ;

 நீட் தேர்வு என்பது பா.ஜ.க அரசு கொண்டு வரவில்லை, உச்சநீதிமன்ற தீர்ப்பினால் வந்தது. தமிழகத்தில் உண்மையாகவே நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்றால், அதிலும் புதிதாக வந்து இருக்க கூடிய அரசு அவர்கள் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடலாமே தவிர, நீட் தேர்வு ரத்து என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பு மீறுவதாக இருக்கும். அதனால் நீட் தேர்வில் எங்கெங்கெல்லாம் மாணவர்களுக்கு சிரமம் இருக்கிறதோ ? மொழி பிரச்சனை இருக்கிறதோ ? அதை ஒவ்வொன்றாக மத்திய அரசு தீர்த்துக் கொண்டு உள்ளதாக கூறியவர். இந்த முறை கூட நீட் தேர்விற்காக கடந்த ஒரு தேர்வில் அவ்வளவு தூரம் கஷ்டம் என்று வந்தது. அதை புரிந்து கொண்டு இரண்டாவது முறை மிக சிறப்பாகவே தேர்வை நடத்தி உள்ளதாகவும், அதுவும் நல்ல முறையில் மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளதாக தெரிவித்தவர், தமிழ்நாட்டில் இருந்து கூட நீட் தேர்வு எழுதுகின்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும், தேர்வு பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததாக கூறினார்.

 பெற்றோர்களும், மாணவர்களும் ஏற்றுக்கொன்றார்கள் அதிலும், தமிழகம் போன்று அதிகமாக கல்வி அறிவு பெற்று இருக்கின்ற மாநிலத்திலும், கூட அரசாங்கம் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு வந்ததற்கு பின்பு தான் அதிகமாக மருத்துவக் கல்லூரிகளில் நுழைந்து இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

 ஏழைக் குழந்தைகள் நீட் தேர்வு வந்த பிறகு தான் அதிகமாக கல்லூரிகளில் செல்வதாகவும், இதற்கு முன்பு பணம் இருப்பவர்கள் மட்டும் தான் போக முடிந்ததாகவும் தெரிவித்தவர், அதனால் நீட் தேர்விற்கு பின்னால் நிறைய மாற்றங்களை சமுதாயம் ஒத்துக் கொண்டு விட்டதாகவும், அரசியலுக்காக வேண்டி என்ன வேண்டுமானாலும் பேசிக்கலாம் என்றார்.

குறைவான மதிப்பெண் இருந்தாலும், பணம் கொடுத்து மருத்துவக் கல்லூரிக்கு செல்லுகின்றது குறித்து சௌமியா அன்புமணி பேசியது குறித்தான கேள்விக்கு;

அவர்கள் எப்படி ? அதை கூறுகிறார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும், பொதுவான மதிப்பெண்கள் எடுத்தவர்கள் அதை மீறி நீட் தேர்வு பெறாமல் செல்வது வாய்ப்பில்லை. மதிப்பெண்களின் அடிப்படையில் அந்தக் குழந்தைகள் வேறு ஏதாவது வாய்ப்பு கிடைத்து சென்று இருந்தால், அந்த இடத்திற்கு நிரப்புவதற்காக குறைத்த மதிப்பெண் எடுத்தவர்கள் வந்து இருக்கலாம், அதனால் அப்படி ஏதேனும் முறைகேடு இருந்தால், அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரோடு, ஆதாரத்தோடு தெரிவித்தால் அதையும் சரி செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

த.வெ.க அரசு 3 மாத ஆட்சியின் செயல்பாடு குறித்தான கேள்விக்கு;

இந்த அரசு அது பாட்டுக்கு போய்க் கொண்டு உள்ளது. அவ்வளவு தான். ஏனென்றால் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தார்கள், தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு, விவசாயிகளுக்கு கொடுத்தார்கள் எதுவுமே நடக்கவில்லை, பட்ஜெட்டில் ஆவது வருமா ? என்று எதிர்பார்த்ததாகவும், கடைசியில் பட்ஜெட்டிலும் ஒன்றுமில்லை காலி என்று கூறி விட்டார்கள். நடக்கிறதுக்கு என்ன இருக்கிறது அது பாட்டுக்கு நடக்கிறது. அவ்வளவு தான் சொல்ல முடியும் என்றார்.

திருப்பூர் மாவட்டத்தில் தாய் மகள் கொலை செய்யப்பட்டது குறித்தான கேள்விக்கு; 

கடந்த மூன்று மாத காலமாக ஆட்சியில் உள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் எங்கேயும் குறையவில்லை, சட்டம் - ஒழுங்கு என்பது மாறவில்லை, அதனால் மாற்றம் என்பது சேரில் அமர்ந்து இருப்பவர்கள் மாறி இருக்கிறார்கள் தவிர, ஆனால் தமிழ்நாட்டில் எந்த நிலைமையும் மாறவில்லை எனவும் கூறினார்.

கருக்கலைப்பிற்கு எதிரான பேரணியில் தமிழக சபாநாயகர் கலந்து கொண்டு இருப்பது குறித்தான கேள்விக்கு;

அவருடைய கிறிஸ்தவ மத நம்பிக்கை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், அவர் மட்டுமல்ல நேற்று நிதி அமைச்சர் பேசும்போது கூட தமிழ் மொழியை விட எனது கிறிஸ்துவ உயர்ந்தது என்று பேசுவதாகவும், அதனால் கிறிஸ்தவ மத பிடிப்பாளர்கள் அவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு நிலைமை இருக்கிறதா ? என்ற சந்தேகம் இருப்பதாகவும், ஏனென்றால் இப்படி பேசுகிறார்கள் அப்புறம் அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள். நமது தமிழ் மொழியை தாண்டி கூட எனது மதத்தை பற்றி தான் பேசுவேன் என அப்படி என்ற மனப்பான்மையில் உள்ளார்களா ? சபாநாயகர் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறாரா ? 

 கருக்கலைப்பிற்கு அமெரிக்கா நாட்டில் இருக்கின்ற பெண்கள் போராடிக் கொண்டு உள்ளதாகவும், அது அவர்களது அடிப்படை உரிமை, அதில் பார்க்க வேண்டியது அந்தப் பெண்ணினுடைய மனநிலை, அவர்களின் உடல் இதைத் தான் நீதிமன்றத்தில் பார்த்து இருக்கிறோம். அப்படி இருக்கின்ற பொழுது சபாநாயகர் அதில் கலந்து கொள்கிறார். நிதி அமைச்சர் கிறிஸ்தவத்தை பற்றி பேசுகிறார், முதலமைச்சர் ஆதரவு அளிக்கிறார். அப்படி என்றால் அது மற்றவர்கள் மத்தியில் முக்கியமாக வலுவான ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தும் என்றார்.

மத நம்பிக்கை இல்லாமல் எல்லா மதத்தையும் மதிக்கிறோம் என்று சொன்னால் பிரச்சனை இல்லை, ஆனால் தமிழகத்தில் இதுவரைக்கும் இந்து மதத்தை பின்பற்றிய அவர்கள் மட்டுமே பிற்போக்குவாதிகள் அப்படி என்று சொல்லக் கூடிய ஒரு போக்கு இருந்ததாகவும், இப்பொழுது எல்லாம் மத நம்பிக்கையாளர்களும், அவர்கள் மத நம்பிக்கையை பின்பற்றுவதாக தெரிவித்தார்.

கோவை - மதுரை மெட்ரோ திட்டம் ரத்து குறித்தான கேள்விக்கு;

மத்திய அரசு மெட்ரோ கொடுக்கவில்லை என்று சொன்னால் ஏன் கொடுக்கவில்லை ?எதற்காக நிராகரித்தார்கள் ? இந்த முறை போகும்போது சரி செய்தார்களா ? எதுவும் நடக்கவில்லை, இந்த அரசு டி.பி.ஆர்.ஐ சரி செய்து எப்படி நமக்கு மெட்ரோ வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதோ ? அதை உருவாக்க வேண்டும் தவிர, அதற்கான ஆவணங்கள் கொடுக்க வேண்டும் தவிர, திருப்பி, திருப்பி ஒரே மாதிரியான டி.பி.ஆர்.ஐ அனுப்பினால் ஒரே மாதிரியான பதில் தான் திரும்பி வரும்.

அதனால் ஆவணங்களை டி.பி.ஆர்.ஐ சரி செய்வது தான் முக்கியமானது நமது மெட்ரோ திட்டத்தில் இதற்காக ஒரு குழு கமிட்டி கூட அமைத்து மதுரை - கோவை எப்படி ? நேஷனல் பாலிசி ஆப் மெட்ரோவில் நமக்கு அமைவது போன்று தயார் செய்து கொடுத்தால், நிச்சயமாக மத்திய அரசு அது கொடுக்க தயார் என்றார்.

பா.ஜ.க வும் - தி.மு.க வும் நெருங்கி வருவதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு; 

அரசியல் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் கிடையாது

பா.ஜ.க - தி.மு.க கூட்டணி உருவாகிறதா ? என்ற கேள்விக்கு

அது உருவாகும் பொழுது சொல்லுவார்கள் உருவாவதற்கு முன்னால் நீங்களாகவே உருவாக்கி விடுவீர்கள் போல...அதற்கான சூழல் வரும் பொழுது பார்க்கலாம் என கூறினார்.

 'சுயம்’ திட்டம் மூலம் மகளிருக்கு இலவச தையல் பயிற்சி... சான்றிதழ்களை வழங்கி அசத்திய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் : கோவையில் நடந்த நெகிழ்ச்சியான விழா !!!

'சுயம்’ திட்டம் மூலம் மகளிருக்கு இலவச தையல் பயிற்சி... சான்றிதழ்களை வழங்கி அசத்திய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் : கோவையில் நடந்த நெகிழ்ச்சியான விழா !!!

 'சுயம்’ திட்டம் மூலம் மகளிருக்கு இலவச தையல் பயிற்சி... சான்றிதழ்களை வழங்கி அசத்திய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் : கோவையில் நடந்த நெகிழ்ச்சியான விழா !!!

கோவை மக்கள் சேவை மையத்தின் ‘சுயம்’ திட்டத்தின் கீழ் இலவசத் தையல் பயிற்சி பெற்றுப் பயனடைந்த பெண்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் விழாவிற்குத் தலைமை தாங்கிப் பயனாளிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.

 ‘சுயம்’ திட்டம் மூலம் மகளிர் வாழ்வாதாரம் மேம்பாடு:

கோவை மக்கள் சேவை மையம் சார்பில் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளைத் மேம்படுத்தும் நோக்கில் 'சுயம்' (Sayam) என்ற சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஏராளமான பெண்களுக்கு இலவசமாகத் தையல் பயிற்சிகள் மற்றும் கைத்தொழில் பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சமீபத்தில் தையல் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பெண்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா, கோவை ராம்நகர் பகுதியில் உள்ள பிரபல வாணி ஸ்ரீ ஹாலில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் தலைமை தாங்கி, சுயதொழில் கற்றிந்த பெண்களைப் பாராட்டிப் பேசினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக என் டெக்ஸ் அப்பேரல்ஸ் பிரைவேட் லிமிடெட் (N Tex Apparels Pvt Ltd) நிறுவனத்தின் செயலாளரும், சசூரி கல்விக் குழுமத்தின் (Sasurie Group of Institutions) செயலருமான சவிதா மோகன்ராஜ் கலந்து கொண்டார். தையல் பயிற்சி முடித்த ஏராளமான பெண்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி, அவர்கள் வாழ்க்கையில் சுயகாலில் நின்று முன்னேற வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

 சுயதொழில் தொடங்க ஊக்குவிப்பு:

பயிற்சி முடித்த பெண்கள் பேசுகையில்,

 "கோவை மக்கள் சேவை மையத்தின் சுயம் திட்டம் மூலமாக நாங்கள் இலவசமாகத் தையல் தொழிலைக் கற்றுக் கொண்டு உள்ளோம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே சுய தொழில் செய்து எங்களது குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு உறுதுணையாக இருப்போம்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இவ்விழாவில் கோவை மக்கள் சேவை மையத்தின் நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்ற ஏராளமான பெண்கள், அவர்களது குடும்பத்தினருடன் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.