விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

 "நமது குளம், நமது பொறுப்பு, நமது பெருமை!" ; கோவை குறிச்சி குளத்தை அள்ளித் தூய்மைப்படுத்திய 'வீ தி லீடர்ஸ்' தன்னார்வலர்கள்!

"நமது குளம், நமது பொறுப்பு, நமது பெருமை!" ; கோவை குறிச்சி குளத்தை அள்ளித் தூய்மைப்படுத்திய 'வீ தி லீடர்ஸ்' தன்னார்வலர்கள்!

சுற்றுச்சூழல் காக்கக் களமிறங்கிய அண்ணாமலையின் இயக்கத்தினர் : குவிந்த பொதுமக்கள் பாராட்டு!  

 "நமது குளம், நமது பொறுப்பு, நமது பெருமை" என்ற முழக்கத்துடன், கோவை குறிச்சி குளத்தில் 'வீ தி லீடர்ஸ்' (We The Leaders Foundation) அமைப்பின் தன்னார்வலர்கள் இன்று காலை முதல் தீவிரத் தூய்மைப் பணியில் ஈடுபட்டு, பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஆகாயத் தாமரைகளை அகற்றினர்.

​குறிச்சி குளத்தில் திரண்ட தன்னார்வலர்கள்:

கோவை மாநகரின் முக்கிய நீர் நிலைகளில் ஒன்றான குறிச்சி குளத்தைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும் இந்தத் தூய்மைப் பணி முன்னெடுக்கப்பட்டது. 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தூய்மை இயக்கத்தின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.  

​இன்று காலை முதலே குளத்தின் கரைப் பகுதிகள் மற்றும் நீர் தேங்கும் இடங்களில் தேங்கிக் கிடந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், கழிவுப் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் ஆகாயத் தாமரைகளைச் சேகரித்து அகற்றும் பணியில் தன்னார்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

​"நமது நீர் நிலைகளைப் பாதுகாப்பது நமது கடமை" - தன்னார்வலர்கள் நெகிழ்ச்சி:

இத்தூய்மைப் பணியில் ஆர்வத்துடன் பங்கேற்ற தன்னார்வலர்கள் பேசுகையில்:

​"இயற்கை வளம் நிறைந்த கோவையின் நீர் நிலைகளைப் பேணிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும். 'நமது குளம், நமது பொறுப்பு, நமது பெருமை' என்ற நோக்கில் இந்த முயற்சியை எடுத்து உள்ளோம். அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டு இருக்காமல், சமூகப் பொறுப்போடு இளைஞர்கள் களத்திற்கு வரும் போது தான் மாற்றங்கள் சாத்தியமாகும்.

​பொதுமக்கள் நீர் நிலைகளில் குப்பைகளையோ ? பிளாஸ்டிக் கழிவுகளையோ ? கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும். நமது எதிர்காலச் சந்ததியினருக்குத் தூய்மையான சுற்றுச்சூழலை விட்டுச் செல்வதே நாம் செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்" எனத் தெரிவித்தனர்.

​பொதுமக்கள் பாராட்டு:

இளைஞர்களும் தன்னார்வலர்களும் ஒன்றிணைந்து காலை முதலே குறிச்சி குளத்தைச் சீரமைத்துத் தூய்மைப்படுத்திய இந்த முயற்சியைப் பார்த்த அப்பகுதி மக்களும், நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களும் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பினருக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

 "எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்" ; தடையோட்டப் பயிற்சியுடன் கோவையில் கோலாகலமாகத் தொடங்கியது SSVM 5-வது ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாடு!

"எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்" ; தடையோட்டப் பயிற்சியுடன் கோவையில் கோலாகலமாகத் தொடங்கியது SSVM 5-வது ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாடு!

விண்வெளி வீரர் பிரசாந்த் நாயர், அபினவ் பிந்த்ரா பங்கேற்பு: மாணவர்களுடன் சவால்களை எதிர்கொள்ளும் அனுபவப் பயணம்!

 எதிர்காலத்தின் சவால்களை மாணவர்கள் மன உறுதியுடன் எதிர்கொள்ளும் வகையில், கோவை SSVM கல்வி நிறுவனங்கள் நடத்தும் 3 நாள் 'ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா' (Transforming India) 5-வது மாநாடு மாணவர்களுக்கான 'தடை ஓட்டப் பயிற்சியுடன்' (Obstacle Course) இன்று உற்சாகமாகத் தொடங்கியது.

உற்சாகமான தடையோட்டப் பயிற்சி:

"எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்" (Adapt to the Future) என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டு உள்ள இம்மாநாட்டின் முதல் நாளில், SSVM வேர்ல்ட் ஸ்கூல் மாணவர்கள் பங்கேற்ற 'ஸ்டூடண்ட் பர்ஸ்ட் ஆப்ஸ்டக்கிள் கோர்ஸ்' எனப்படும் சவாலான தடையோட்டப் பயிற்சி நடத்தப்பட்டது.

வெறும் சொற்பொழிவுகளுடன் தொடங்காமல், மாணவர்கள் தங்களது உடல் மற்றும் மன வலிமையைச் சோதிக்கும் வகையில் வளைந்து கொடுத்தும், கம்பிகளைப் பிடித்துத் தொங்கியும் (Monkey bar), தடைகளைத் தாண்டித் தங்களைச் சமன் செய்தும் இந்தப் பயிற்சியில் அசத்தினர்.

 ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொண்டு மாணவர்கள் முன்னேறிய இந்த நிகழ்வு, தைரியம் மற்றும் தன்னம்பிக்கையின் நேரடிப் பாடமாக அமைந்தது.

நிர்வாகக் குழுவினரும் பங்கேற்பு:

SSVM கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர். மணிமேகலை மோகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்த இந்த நிகழ்வில், அறங்காவலர் எஸ். மோகன்தாஸ், இயக்குனர் ஸ்ரீஷா மோகன்தாஸ், இயக்குனர் நிதின் ஜெய் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து தடையோட்டச் சவால்களில் பங்கேற்று ஊக்கமளித்தனர்.

இது குறித்து டாக்டர். மணிமேகலை மோகன் பேசுகையில் :-

 "குழந்தைகள் தங்களின் எல்லைகளைத் தாண்டிச் செயல்படுவதை அனுபவபூர்வமாக உணர வேண்டும் என்பதே இதன் நோக்கம். இன்று சவால்களை எப்படித் தாண்டுவது என்று குழந்தைகள் கற்றுக்கொண்டால், நாளை வாழ்க்கை தரும் சவால்களை அவர்கள் வெற்றிகரமாக எதிர்கொள்வார்கள்" எனத் தெரிவித்தார்.

கல்வி இயக்குனர் ஸ்ரீஷா மோகன்தாஸ் கூறுகையில் :-

"இது வெறும் தலைப்பு அல்ல; கடினமான சூழ்நிலைகளில் மன உறுதியோடு தொடர்ந்து முன்னேறும் தைரியத்தைக் கண்டறியும் வாய்ப்பு" என்றார்.

சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு:

செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் 1,800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ககன்யான் விண்வெளி வீரர் மற்றும் இந்தியப் படைப்பிரிவு அதிகாரி ஏர் கமாண்டோர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர்

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா

இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்

பிரபல பரதநாட்டியக் கலைஞர் மற்றும் நடன இயக்குநர் ருக்மணி விஜயகுமார்

ஆகிய சாதனையாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். விளையாட்டு, உடல் அசைவுகள், ஒழுக்கம் மற்றும் மன உறுதி ஆகியவற்றை மாணவர்கள் நேரடியாக அனுபவபூர்வமாக உணரும் வகையில் இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

"தமிழ்நாட்டுப் பெண்கள் என்றாலே அழகு ; ஆல்கஹால், புகையிலையைக் காட்டிலும் மொபைல் போன்கள் ஆபத்தானவை" - கோவையில் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் எச்சரிக்கை!

"தமிழ்நாட்டுப் பெண்கள் என்றாலே அழகு ; ஆல்கஹால், புகையிலையைக் காட்டிலும் மொபைல் போன்கள் ஆபத்தானவை" - கோவையில் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் எச்சரிக்கை!

"தமிழ்நாட்டுப் பெண்கள் என்றாலே அழகு ; ஆல்கஹால், புகையிலையைக் காட்டிலும் மொபைல் போன்கள் ஆபத்தானவை" - கோவையில் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் எச்சரிக்கை!

18-வது ஈஷா கிராமோத்சவம் மண்டல அளவிலான போட்டிகள் தொடக்கம் : கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் உற்சாகம்!

​ மது மற்றும் புகையிலையைக் காட்டிலும் தற்காலக் குழந்தைகளுக்கு மொபைல் போன்களின் பயன்பாடே மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்து உள்ளது என ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்து கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்து உள்ளார்.

18-வது ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்:

கிராமப்புற மக்கள் மற்றும் இளைஞர்கள் இடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில், ஈஷா சார்பில் 18-வது ஆண்டாக 'ஈஷா கிராமோத்சவம்' விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் 10 மாநிலங்களில் நடைபெறும் இப்போட்டிகளில் ஆண்களுக்கு வாலிபால் மற்றும் பெண்களுக்குத் த்ரோபால் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

​இதன் ஒரு பகுதியாக, மண்டல அளவிலான போட்டிகள் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்து உள்ள கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன.

எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் பேச்சு:

இப்போட்டிகளைக் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் முறைப்படி தொடங்கி வைத்துப் போட்டிகளில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

பெண்களின் பெருமை:

 "தமிழ்நாட்டுப் பெண்கள் என்றாலே பேரழகு மற்றும் திறமைமிக்கவர்கள் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்."

கிராமப்புறத் திறமைகள்:

 கிராமப்புறங்களுக்கு நேரடியாகச் சென்று, அங்குள்ள இளைஞர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை விளையாட்டுத் துறையில் ஊக்குவிப்பதில் அரசு உறுதியாக உள்ளது.

மொபைல் போன் ஆபத்து:

 தொழில்நுட்பமும் அறிவியலும் எந்த அளவிற்கு அதிவேகமாக வளர்ந்து வருகிறதோ, அந்த அளவிற்கு மக்களின் உடல்நலக் குறைபாடுகளும் அதிகரித்து வருகின்றன. தற்போதைய குழந்தைகள் காலையில் எழுந்ததில் இருந்து இரவு வரை மொபைல் போன்களிலேயே மூழ்கி இருக்கின்றனர்.

 ஆல்கஹால் மற்றும் புகையிலையைக் காட்டிலும் இந்த மொபைல் போன் அடிமைத்தனம் மிகவும் ஆபத்தானது.

விளையாட்டின் அவசியம்: 

நவீன உலகில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தைகளுக்கு உடற்பயிற்சியோ விளையாட்டோ கிடைப்பதில்லை. ஈஷா போன்ற அமைப்புகள் இது போன்ற போட்டிகளை ஒருங்கிணைக்கும் போது இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும். பள்ளிகளில் தினமும் கட்டாயம் ஒரு மணி நேரம் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனச் சட்டமன்றத்திலும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

​10 மாநிலங்களில் முதற்கட்டப் போட்டிகள் நிறைவடைந்த பின், இதன் பிரம்மாண்ட இறுதிப் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் ஈஷாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

பா.ஜ.க - தி.மு.க கூட்டணியை பத்திரிகையாளர்களை உருவாக்குகிறார்கள் ; அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் கிடையாது... வானதி சீனிவாசன் கருத்து !!!

பா.ஜ.க - தி.மு.க கூட்டணியை பத்திரிகையாளர்களை உருவாக்குகிறார்கள் ; அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் கிடையாது... வானதி சீனிவாசன் கருத்து !!!

 பா.ஜ.க - தி.மு.க கூட்டணியை பத்திரிகையாளர்களை உருவாக்குகிறார்கள் ; அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் கிடையாது... வானதி சீனிவாசன் கருத்து !!!

தேசிய கைத்தறி தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஐடியா மேக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய 9-வது ஆண்டின் 'கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு' (Handloom Fashion Show) இறுதிப்போட்டி, கோவை, கோவை புதூர் பகுதியில் உள்ள வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் விமரிசையாக நடைபெற்றது.

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் பேசும் போது ;

ஆகஸ்ட் 7ஆம் தேதி மத்திய அரசு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒவ்வொரு வருடமும் தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடுவதற்காக அறிவிப்பு செய்து ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் மிகச் சிறப்பாக தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுவதாக கூறியவர், அந்த வகையிலே கடந்த எட்டு வருடங்களாக கோவை மக்கள் சேவை மையமும், ஐடியா மேக்ஸ் நிறுவனமும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவ - மாணவியர்களுக்கு ஹேண்ட் லூம் பேஷன் ஷோ என்ற நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு உள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் இதில் போட்டியாளர்களாக பங்கேற்று இருப்பதாகவும், கிட்டத்தட்ட 20,000 மேற்பட்ட மாணவர்கள் தொழில் செய்வதாகவும், ஒவ்வொரு வருடமும் இதில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் நாடு முழுவதும் இருக்கின்ற லீப்பை பற்றி பயன்படுத்துவது அதை அழகாக வெளிப்படுத்துவது அதேபோன்று இந்த நிகழ்ச்சி ஒரு ஆடை அலங்கார அணிவகுப்பு மட்டுமல்லாமல் அவர்களிடம் கைத்தறி தொடர்பான கேள்விகளும் கேட்கப்பட்டு அந்த அறிவும் பரிசோதிக்கப்படுவதாகவும், தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஒன்பதாம் ஆண்டு வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு உள்ளதாகவும், இதன் வாயிலாக கைத்தறி பற்றிய விழிப்புணர்வு மட்டுமல்ல இந்தியா முழுவதும் இருக்கின்ற நம்முடைய பல்வேறு நெசவு மற்றும் நெசவாளர்கள் மீதான பெருமை மற்றும் அவர்கள் மீதான மதிப்பு அதிகரித்துக் கொண்டு உள்ளதாக கூறினார்.

நெசவாளர்கள் இன்று நமது நாட்டின் பாரம்பரிய, சிறப்பை அடிப்படை திறனை இவையெல்லாம் வெளிப்படுத்துகின்ற விதத்தில் அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு வேலைகளுமே, அடுத்து வரக்கூடிய சமுதாயம் பாராட்டி, நேசிக்கும் என்றால் அவர்களுடைய தொழிலும் மேம்பட வேண்டும் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் இன்னொரு நோக்கம் என்றார்.

இந்த கல்லூரி மாணவ - மாணவிகள் ஆயிரக்கணக்கான பேர் பங்கேற்று கலந்து கொண்ட போது நம்மளுடைய பகுதி நெசவு மட்டுமல்ல, நாடு முழுவதும் இருக்கின்ற நெசவு தொழிலை பற்றி அந்த அறிவு அவர்களுக்கு கிடைக்கிறது. இதில் கலந்து கொண்ட நிறைய பேர் கைத்தறி தொழிலையும் செய்வதற்கு விருப்பப்படுவதை பார்ப்பதாக கூறியவர், இந்த தொழிலிலும் ஈடுபட்டு வெற்றிகரமாக இருக்கக் கூடிய, பரிசு பெறுபவர்களும் சரி, பங்கேற்பாளர்களும் சரி எங்களிடம் சொல்லும்பொழுது இந்த நிகழ்ச்சியினுடைய வெற்றி என்பது நிரூபணம் ஆகிறது என்றார்.

சட்டமன்றத்தில் நீட் தேர்வு ரத்து குறித்தான தீர்மானம் குறித்த கேள்விக்கு ;

 நீட் தேர்வு என்பது பா.ஜ.க அரசு கொண்டு வரவில்லை, உச்சநீதிமன்ற தீர்ப்பினால் வந்தது. தமிழகத்தில் உண்மையாகவே நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்றால், அதிலும் புதிதாக வந்து இருக்க கூடிய அரசு அவர்கள் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடலாமே தவிர, நீட் தேர்வு ரத்து என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பு மீறுவதாக இருக்கும். அதனால் நீட் தேர்வில் எங்கெங்கெல்லாம் மாணவர்களுக்கு சிரமம் இருக்கிறதோ ? மொழி பிரச்சனை இருக்கிறதோ ? அதை ஒவ்வொன்றாக மத்திய அரசு தீர்த்துக் கொண்டு உள்ளதாக கூறியவர். இந்த முறை கூட நீட் தேர்விற்காக கடந்த ஒரு தேர்வில் அவ்வளவு தூரம் கஷ்டம் என்று வந்தது. அதை புரிந்து கொண்டு இரண்டாவது முறை மிக சிறப்பாகவே தேர்வை நடத்தி உள்ளதாகவும், அதுவும் நல்ல முறையில் மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளதாக தெரிவித்தவர், தமிழ்நாட்டில் இருந்து கூட நீட் தேர்வு எழுதுகின்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும், தேர்வு பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததாக கூறினார்.

 பெற்றோர்களும், மாணவர்களும் ஏற்றுக்கொன்றார்கள் அதிலும், தமிழகம் போன்று அதிகமாக கல்வி அறிவு பெற்று இருக்கின்ற மாநிலத்திலும், கூட அரசாங்கம் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு வந்ததற்கு பின்பு தான் அதிகமாக மருத்துவக் கல்லூரிகளில் நுழைந்து இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

 ஏழைக் குழந்தைகள் நீட் தேர்வு வந்த பிறகு தான் அதிகமாக கல்லூரிகளில் செல்வதாகவும், இதற்கு முன்பு பணம் இருப்பவர்கள் மட்டும் தான் போக முடிந்ததாகவும் தெரிவித்தவர், அதனால் நீட் தேர்விற்கு பின்னால் நிறைய மாற்றங்களை சமுதாயம் ஒத்துக் கொண்டு விட்டதாகவும், அரசியலுக்காக வேண்டி என்ன வேண்டுமானாலும் பேசிக்கலாம் என்றார்.

குறைவான மதிப்பெண் இருந்தாலும், பணம் கொடுத்து மருத்துவக் கல்லூரிக்கு செல்லுகின்றது குறித்து சௌமியா அன்புமணி பேசியது குறித்தான கேள்விக்கு;

அவர்கள் எப்படி ? அதை கூறுகிறார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும், பொதுவான மதிப்பெண்கள் எடுத்தவர்கள் அதை மீறி நீட் தேர்வு பெறாமல் செல்வது வாய்ப்பில்லை. மதிப்பெண்களின் அடிப்படையில் அந்தக் குழந்தைகள் வேறு ஏதாவது வாய்ப்பு கிடைத்து சென்று இருந்தால், அந்த இடத்திற்கு நிரப்புவதற்காக குறைத்த மதிப்பெண் எடுத்தவர்கள் வந்து இருக்கலாம், அதனால் அப்படி ஏதேனும் முறைகேடு இருந்தால், அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரோடு, ஆதாரத்தோடு தெரிவித்தால் அதையும் சரி செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

த.வெ.க அரசு 3 மாத ஆட்சியின் செயல்பாடு குறித்தான கேள்விக்கு;

இந்த அரசு அது பாட்டுக்கு போய்க் கொண்டு உள்ளது. அவ்வளவு தான். ஏனென்றால் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தார்கள், தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு, விவசாயிகளுக்கு கொடுத்தார்கள் எதுவுமே நடக்கவில்லை, பட்ஜெட்டில் ஆவது வருமா ? என்று எதிர்பார்த்ததாகவும், கடைசியில் பட்ஜெட்டிலும் ஒன்றுமில்லை காலி என்று கூறி விட்டார்கள். நடக்கிறதுக்கு என்ன இருக்கிறது அது பாட்டுக்கு நடக்கிறது. அவ்வளவு தான் சொல்ல முடியும் என்றார்.

திருப்பூர் மாவட்டத்தில் தாய் மகள் கொலை செய்யப்பட்டது குறித்தான கேள்விக்கு; 

கடந்த மூன்று மாத காலமாக ஆட்சியில் உள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் எங்கேயும் குறையவில்லை, சட்டம் - ஒழுங்கு என்பது மாறவில்லை, அதனால் மாற்றம் என்பது சேரில் அமர்ந்து இருப்பவர்கள் மாறி இருக்கிறார்கள் தவிர, ஆனால் தமிழ்நாட்டில் எந்த நிலைமையும் மாறவில்லை எனவும் கூறினார்.

கருக்கலைப்பிற்கு எதிரான பேரணியில் தமிழக சபாநாயகர் கலந்து கொண்டு இருப்பது குறித்தான கேள்விக்கு;

அவருடைய கிறிஸ்தவ மத நம்பிக்கை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், அவர் மட்டுமல்ல நேற்று நிதி அமைச்சர் பேசும்போது கூட தமிழ் மொழியை விட எனது கிறிஸ்துவ உயர்ந்தது என்று பேசுவதாகவும், அதனால் கிறிஸ்தவ மத பிடிப்பாளர்கள் அவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு நிலைமை இருக்கிறதா ? என்ற சந்தேகம் இருப்பதாகவும், ஏனென்றால் இப்படி பேசுகிறார்கள் அப்புறம் அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள். நமது தமிழ் மொழியை தாண்டி கூட எனது மதத்தை பற்றி தான் பேசுவேன் என அப்படி என்ற மனப்பான்மையில் உள்ளார்களா ? சபாநாயகர் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறாரா ? 

 கருக்கலைப்பிற்கு அமெரிக்கா நாட்டில் இருக்கின்ற பெண்கள் போராடிக் கொண்டு உள்ளதாகவும், அது அவர்களது அடிப்படை உரிமை, அதில் பார்க்க வேண்டியது அந்தப் பெண்ணினுடைய மனநிலை, அவர்களின் உடல் இதைத் தான் நீதிமன்றத்தில் பார்த்து இருக்கிறோம். அப்படி இருக்கின்ற பொழுது சபாநாயகர் அதில் கலந்து கொள்கிறார். நிதி அமைச்சர் கிறிஸ்தவத்தை பற்றி பேசுகிறார், முதலமைச்சர் ஆதரவு அளிக்கிறார். அப்படி என்றால் அது மற்றவர்கள் மத்தியில் முக்கியமாக வலுவான ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தும் என்றார்.

மத நம்பிக்கை இல்லாமல் எல்லா மதத்தையும் மதிக்கிறோம் என்று சொன்னால் பிரச்சனை இல்லை, ஆனால் தமிழகத்தில் இதுவரைக்கும் இந்து மதத்தை பின்பற்றிய அவர்கள் மட்டுமே பிற்போக்குவாதிகள் அப்படி என்று சொல்லக் கூடிய ஒரு போக்கு இருந்ததாகவும், இப்பொழுது எல்லாம் மத நம்பிக்கையாளர்களும், அவர்கள் மத நம்பிக்கையை பின்பற்றுவதாக தெரிவித்தார்.

கோவை - மதுரை மெட்ரோ திட்டம் ரத்து குறித்தான கேள்விக்கு;

மத்திய அரசு மெட்ரோ கொடுக்கவில்லை என்று சொன்னால் ஏன் கொடுக்கவில்லை ?எதற்காக நிராகரித்தார்கள் ? இந்த முறை போகும்போது சரி செய்தார்களா ? எதுவும் நடக்கவில்லை, இந்த அரசு டி.பி.ஆர்.ஐ சரி செய்து எப்படி நமக்கு மெட்ரோ வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதோ ? அதை உருவாக்க வேண்டும் தவிர, அதற்கான ஆவணங்கள் கொடுக்க வேண்டும் தவிர, திருப்பி, திருப்பி ஒரே மாதிரியான டி.பி.ஆர்.ஐ அனுப்பினால் ஒரே மாதிரியான பதில் தான் திரும்பி வரும்.

அதனால் ஆவணங்களை டி.பி.ஆர்.ஐ சரி செய்வது தான் முக்கியமானது நமது மெட்ரோ திட்டத்தில் இதற்காக ஒரு குழு கமிட்டி கூட அமைத்து மதுரை - கோவை எப்படி ? நேஷனல் பாலிசி ஆப் மெட்ரோவில் நமக்கு அமைவது போன்று தயார் செய்து கொடுத்தால், நிச்சயமாக மத்திய அரசு அது கொடுக்க தயார் என்றார்.

பா.ஜ.க வும் - தி.மு.க வும் நெருங்கி வருவதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு; 

அரசியல் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் கிடையாது

பா.ஜ.க - தி.மு.க கூட்டணி உருவாகிறதா ? என்ற கேள்விக்கு

அது உருவாகும் பொழுது சொல்லுவார்கள் உருவாவதற்கு முன்னால் நீங்களாகவே உருவாக்கி விடுவீர்கள் போல...அதற்கான சூழல் வரும் பொழுது பார்க்கலாம் என கூறினார்.

 'சுயம்’ திட்டம் மூலம் மகளிருக்கு இலவச தையல் பயிற்சி... சான்றிதழ்களை வழங்கி அசத்திய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் : கோவையில் நடந்த நெகிழ்ச்சியான விழா !!!

'சுயம்’ திட்டம் மூலம் மகளிருக்கு இலவச தையல் பயிற்சி... சான்றிதழ்களை வழங்கி அசத்திய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் : கோவையில் நடந்த நெகிழ்ச்சியான விழா !!!

 'சுயம்’ திட்டம் மூலம் மகளிருக்கு இலவச தையல் பயிற்சி... சான்றிதழ்களை வழங்கி அசத்திய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் : கோவையில் நடந்த நெகிழ்ச்சியான விழா !!!

கோவை மக்கள் சேவை மையத்தின் ‘சுயம்’ திட்டத்தின் கீழ் இலவசத் தையல் பயிற்சி பெற்றுப் பயனடைந்த பெண்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் விழாவிற்குத் தலைமை தாங்கிப் பயனாளிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.

 ‘சுயம்’ திட்டம் மூலம் மகளிர் வாழ்வாதாரம் மேம்பாடு:

கோவை மக்கள் சேவை மையம் சார்பில் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளைத் மேம்படுத்தும் நோக்கில் 'சுயம்' (Sayam) என்ற சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஏராளமான பெண்களுக்கு இலவசமாகத் தையல் பயிற்சிகள் மற்றும் கைத்தொழில் பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சமீபத்தில் தையல் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பெண்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா, கோவை ராம்நகர் பகுதியில் உள்ள பிரபல வாணி ஸ்ரீ ஹாலில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் தலைமை தாங்கி, சுயதொழில் கற்றிந்த பெண்களைப் பாராட்டிப் பேசினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக என் டெக்ஸ் அப்பேரல்ஸ் பிரைவேட் லிமிடெட் (N Tex Apparels Pvt Ltd) நிறுவனத்தின் செயலாளரும், சசூரி கல்விக் குழுமத்தின் (Sasurie Group of Institutions) செயலருமான சவிதா மோகன்ராஜ் கலந்து கொண்டார். தையல் பயிற்சி முடித்த ஏராளமான பெண்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி, அவர்கள் வாழ்க்கையில் சுயகாலில் நின்று முன்னேற வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

 சுயதொழில் தொடங்க ஊக்குவிப்பு:

பயிற்சி முடித்த பெண்கள் பேசுகையில்,

 "கோவை மக்கள் சேவை மையத்தின் சுயம் திட்டம் மூலமாக நாங்கள் இலவசமாகத் தையல் தொழிலைக் கற்றுக் கொண்டு உள்ளோம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே சுய தொழில் செய்து எங்களது குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு உறுதுணையாக இருப்போம்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இவ்விழாவில் கோவை மக்கள் சேவை மையத்தின் நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்ற ஏராளமான பெண்கள், அவர்களது குடும்பத்தினருடன் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

சனி, 8 ஆகஸ்ட், 2026

போதைப்பொருள் இல்லா கோவைக்காக ஓடுவோம்" ; கோவை மாவட்ட காவல்துறை மாரத்தான் 2026 பிரம்மாண்ட தொடக்கம் - 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு !!!

போதைப்பொருள் இல்லா கோவைக்காக ஓடுவோம்" ; கோவை மாவட்ட காவல்துறை மாரத்தான் 2026 பிரம்மாண்ட தொடக்கம் - 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு !!!

 போதைப்பொருள் இல்லா கோவைக்காக ஓடுவோம்" ; கோவை மாவட்ட காவல்துறை மாரத்தான் 2026 பிரம்மாண்ட தொடக்கம் - 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு !!!

​ கோவை மாவட்ட காவல் துறை சார்பில் "போதைப்பொருள் இல்லா கோவை" என்ற உயரிய இலக்கை வலியுறுத்தி நடத்தப்பட்ட "கோவை மாவட்ட காவல்துறை மாரத்தான் – 2026" இன்று (08.08.2026) காலை மிகக் கோலாகலமாகத் தொடங்கியது.

​பொதுமக்கள் இடையே போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் செய்யப்பட்ட இம்மாரத்தான் ஓட்டம், கோவை மதுக்கரை – மாதம்பட்டி மேற்கு புறவழிச்சாலையில் இன்று காலை 5.00 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

​மாரத்தான் ஓட்டத்தின் தொடக்கமாக, போதைப்பொருள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் அமைச்சர் விக்னேஷ் தொடங்கி வைத்தார்.

"ஒரு நோக்கத்திற்காக ஓடுவோம்! போதைப் பொருள் இல்லா கோவைக்காக ஓடுவோம்!" என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த மாரத்தானில், பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் உட்பட 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓடினர்.

​"ஒரு முடிவின் தொடக்கம் – Run Until – Every Finish is a New Beginning" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்வு, கோவை மக்கள் இடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஆழமாகப் விதைக்கும் வகையில் அமைந்தது.

திங்கள், 13 ஜூலை, 2026

இனி குற்றவாளிகளுக்குப் பயம் காட்டும் நிழல்” ; கோவையில் கியூஆர் கோடு (QR Code) அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டம் தொடக்கம் - உங்கள் அடையாளம் 100% ரகசியம் கோவை மாவட்ட எஸ்.பி உறுதி !!!

இனி குற்றவாளிகளுக்குப் பயம் காட்டும் நிழல்” ; கோவையில் கியூஆர் கோடு (QR Code) அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டம் தொடக்கம் - உங்கள் அடையாளம் 100% ரகசியம் கோவை மாவட்ட எஸ்.பி உறுதி !!!

 இனி குற்றவாளிகளுக்குப் பயம் காட்டும் நிழல்” ; கோவையில் கியூஆர் கோடு (QR Code) அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டம் தொடக்கம் - உங்கள் அடையாளம் 100% ரகசியம் கோவை மாவட்ட எஸ்.பி உறுதி !!!

 கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத் தொழில்நுட்பப் பொதுப் பாதுகாப்புத் திட்டம் நேற்று அதிகாரப் பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தின் பாதுகாப்புக்கான புதிய உத்தி:

தமிழகத்தின் மிக வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்றான கோவையில் சுமார் 40.11 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 2,272-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளதால், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கப் புதிய தொழில்நுட்ப அணுகுமுறை அவசியமாகி உள்ளது.

​இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், அவசர காலங்களில் காவல் துறையின் சேவையை விரைவாகக் கொண்டு சேர்க்கவும் “நிழல் (Nizhal) - பாதுகாப்பான சமூகத்திற்காக ஒன்றிணைவோம்” என்ற QR குறியீடு அடிப்படையிலான நவீனப் பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

​கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பவனார் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கூடுதல் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், கல்லூரி மாணவர்கள், மாவட்ட கலால் அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஸ்கேன் செய்தால் போதும்... அடையாளம் 100% ரகசியம்!

​இந்த “நிழல்” திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களது கைப்பேசியின் (Mobile Phone) கேமரா வழியாக ஆங்காங்கே ஒட்டப்பட்டு இருக்கும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, காவல் துறையுடன் உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியும்.

​இத்திட்டத்தின் மிக முக்கியச் சிறப்பம்சம் என்னவெனில், தகவல் அளிப்பவர்களின் அடையாளம் (Identity) முழுமையாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.

பொதுமக்கள் எந்தெந்த குற்றங்கள் குறித்துத் தகவல் தெரிவிக்கலாம் ?

​பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்.

​கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல், விற்பனை.

​சந்தேகத்திற்கு இடமான நபர்கள் அல்லது சட்டவிரோதச் செயல்பாடுகள்.

​பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்.

24 மணி நேரமும் கண்காணிக்கும் ‘மாஸ்டர் கட்டுப்பாட்டு மையம்’:

​இந்தத் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் அனைத்தும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாஸ்டர் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (Master Command and Control Centre - MCCC) மூலம் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

​அங்குப் பணியாற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற காவல் அதிகாரிகள், கியூஆர் கோடு மூலம் வரும் தகவல்களை உடனுக்குடன் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பித் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

மாவட்டம் முழுவதும் கியூஆர் கோடுகள்:

​பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தளங்கள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் இந்த QR குறியீடுகள் படிப்படியாக நிறுவப்பட உள்ளன.

​இத்திட்டம் காவல்துறையின் அணுகலை மேலும் எளிமையாக்கி, அவசர கால பதில் நடவடிக்கைகளின் வேகத்தை அதிகரிப்பதுடன், குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் மற்றும் முதியவர்களுக்குப் பாதுகாப்பான சமூகச் சூழலை உருவாக்குவதில் ஒரு மைல்கல்லாக அமையும் என்று கோவை மாவட்ட காவல்துறை நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

சனி, 11 ஜூலை, 2026

போதைப் பொருள் தடுப்பு மாரத்தான் போட்டி; கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் 1500 க்கும் மேற்பட்ட பங்கேற்று ஓடினர் !!!

போதைப் பொருள் தடுப்பு மாரத்தான் போட்டி; கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் 1500 க்கும் மேற்பட்ட பங்கேற்று ஓடினர் !!!

 போதைப் பொருள் தடுப்பு மாரத்தான் போட்டி; கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் 1500 க்கும் மேற்பட்ட பங்கேற்று ஓடினர் !!!

கோவை, துடியலூர் அருகே ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் கோவை மாநகர காவல் துறையுடன் இணைந்து "ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான மாரத்தான்" என்ற தலைப்பில் போதைப் பொருள் தடுப்பு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு 3 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் தூரம் ஓடினர்.

கோவை, துடியலூர் அடுத்து உள்ள வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் மாநகரக் காவல் துறையின் துடியலூர் காவல் நிலையத்துடன் இணைந்து "ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான மாரத்தான் நல்ல வாழ்விற்காக அனைவரும் ஓடுவோம்" என்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை நடத்தினர்.

கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டிகளை துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் விவேகானந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தலைமைச் செயல் அதிகாரி சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி டி. மகேஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மாணவர்களை ஊக்குவித்தனர். கல்லூரி முதல்வர் செளந்தரராஜன் முன்னிலை வகித்தார். 

இந்த மாரத்தானில் எஸ். என். ஆர். சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்டின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள், முன்னாள் மாணவர்கள் என மொத்தம் 1,500-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர்.

பங்கேற்பாளர்களுக்காக 3 கிலோமீட்டர் மற்றும் 5 கிலோமீட்டர் என இரண்டு பிரிவுகளில் மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. உடல் நலம், உடற்பயிற்சியின் அவசியம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.

முன்னதாக மாரத்தானில் பங்கேற்ற அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற உறுதிமொழியை ஏற்று உற்சாகத்துடன் ஓடி, நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினர், கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் நித்தியானந்தன் உள்ளிட்டவர்கள் செய்து இருந்தனர்.

வியாழன், 9 ஜூலை, 2026

கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி !!!

கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி !!!

 கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி !!!

கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பாக "பெண்களும் தொழில் முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பில் புத்தாக்க பயிற்சி இன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் எம். ஆர்.எழிலி அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பிரபல் தொழில் நிறுவனத்தின் பெரு நிறுவன சமூக பொறுப்பு (CSR) பிரிவின் தலைவரான வித்யா செந்தில் குமார் கலந்து கொண்டார்.

 பெண்கள் தங்கள் வாழ்வில் முன்னேறுவதற்கு வரலாறு காணாத வாய்ப்புகள் தற்பொழுது உள்ளன என்று சிறப்பு விருந்தினர் வித்யா செந்தில் குமார் கூறினார்.

 மாணவிகள் வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் பார்க்க வேண்டும் சவால்களையும் இன்னல்களையும் நேர்மறை சிந்தனை உடன் சந்திக்க வேண்டும் மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் வருங்காலத்தில் தொழில் முனைவரானால் வாழ்க்கையில் ஜெயித்து விடலாம். தற்பொழுது உலகம் முழுவதும் பெண் தொழில் முனைவோர் எண்ணிக்கையிலும் தாக்கத்திலும் வரலாறு காணாத வகையில் உருவாகி உள்ளனர். தொழில் முனைவராக மாணவிகள் வெற்றி பெற்றால் சமூகத்தில் மற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். எந்த துறையை சேர்ந்தாலும் பேச்சாற்றலையும் தகவல் தொடர்பு திறன்களையும் வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் நாம் வெற்றி பெற்று விடலாம். பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பேச்சாற்றல் மிக மிக இன்றியமையாதது ஆகும்.

 பெண்களுக்கு என்று சவால்கள் அதிகமாக உள்ளன. பெண்களுக்கே உரிய சிறப்பு குணங்களையும் நாம் பயன்படுத்த வேண்டும். இன்னல் நம்மை சூழும் பொழுது நாம் கோபப்படாமல் பயப்படாமல் சமயோகித புத்திக்கூர்மையுடன் செயல்பட்டால் வெற்றி பெற்று விடலாம். தொழில்துறையில் வெற்றி பெற வேண்டும் என்றால் புதிய கருத்துகளும் புதுப்பிக்கும் குணாதிசயமும் தேவையாக உள்ளது. வெற்றி பெற்றவுடன் நாம் நமது சமூக முன்னேற்றத்திற்குபங்களிக்க வேண்டும். வாழ்வில் நன்றி உணர்வு மிக மிக முக்கியமானது. நாம் செய் நன்றி மறவாமல் இருக்க வேண்டும். நமது கருத்துக்களை மற்றவர்கள் மீது திணிக்க முயல்வது தவறு. மற்றவர்களில் கருத்துக்களையும் அறிந்து நாம் செயல்பட வேண்டும் என்று சிறப்பு விருந்தினர் வித்யா செந்தில்குமார் அவர்கள் கூறினார். 

இந்நிகழ்ச்சியை அரசு கலைக் கல்லூரி அரசியல் அறிவியல் துறையின் தலைவர் ஆன முனைவர் கனகராஜ் ஏற்பாடு செய்து இருந்தார். மாணவிகளுக்கு தற்பொழுது பல்வேறு துறைகளில் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற உயர்ந்த பதவிகளுக்கு அதிக அளவில் இளம் பெண்கள் தற்பொழுது வருகிறார்கள். கணினி புரட்சி தோன்றிய பிறகு ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகள் மறைந்து வருகின்றன. தொழில் முனைவோர் ஆவதன் மூலம் மாணவிகள் வருங்காலத்தில் தங்கள் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் செல்வத்தையும் சேவையையும் சேர்க்க முடியும் என்று முனைவர் கனகராஜ் கூறினார் இந்த நிகழ்வில் அரசு கலைக் கல்லூரியின் பெண்கள் மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர்களான கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் முனைவர் மாலதி முனைவர் சித்ரா மற்றும் அரசு கலைக் கல்லூரியில் தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் முனைவர் ஷீலா பிரியதர்ஷினி ஆகியோர் பேசினார் இந்த நிகழ்வில் ஏராளமான முதலாம் ஆண்டு மாணவிகள் பங்கேற்றனர்.

விவசாயிகள் சத்குரு, நம்மாழ்வார் வழியில் காந்திய எளிமையையும் பின்பற்ற வேண்டும் - ஐநா அங்கீகாரம் பெற்ற விவசாயிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேச்சு !!!

விவசாயிகள் சத்குரு, நம்மாழ்வார் வழியில் காந்திய எளிமையையும் பின்பற்ற வேண்டும் - ஐநா அங்கீகாரம் பெற்ற விவசாயிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேச்சு !!!

 விவசாயிகள் சத்குரு, நம்மாழ்வார் வழியில் காந்திய எளிமையையும் பின்பற்ற வேண்டும் - ஐநா அங்கீகாரம் பெற்ற விவசாயிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேச்சு !!!

விவசாயிகள் சத்குரு, நம்மாழ்வார் வழியில் காந்திய எளிமையையும் பின்பற்ற வேண்டும் என ஐநா அங்கீகாரம் பெற்ற பொள்ளாச்சி விவசாயி வள்ளுவனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் தொழிலதிபர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசினார். 

விவசாய நிலத்தின் அங்கக கரிம அளவை அதிகப்படுத்தி, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நடத்திய உலகளாவிய போட்டியில் விருது வென்ற இந்தியாவின் ஒரே இயற்கை விவசாயியான தமிழகத்தைச் சேர்ந்த வி.டி. வள்ளுவன் அவர்களுக்கு, கோவையில் இன்று (08/07/2026) பாராட்டு விழா நடைபெற்றது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஜி.வி. அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், கல்வியாளர் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை தாங்கினார். கே.பி.ஆர் குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி முன்னிலை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் ம. கிருஷ்ணன், விவசாயி வள்ளுவனுக்குச் சிறப்புச் செய்தார்.

இவ்விழாவில் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசுகையில், “வள்ளுவன் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு பொறியாளர் ஆவார். சத்குருவின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு, பொள்ளாச்சி அருகிலுள்ள வேட்டைக்காரன்புதூர் பகுதிக்கு வந்து, 7 ஏக்கர் நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்யத் துவங்கி உள்ளார். உற்பத்திச் செலவைக் குறைத்து, உற்பத்தித் திறனை அதிகரித்து, லாபத்தைப் பெருக்கினார். 

அந்த 7 ஏக்கரில் கிடைத்த லாபத்தைக் கொண்டு, சிறிது சிறிதாக சேர்த்து இன்று கிட்டத்தட்ட 30 ஏக்கர் நிலம் வைத்துள்ளார். இவருக்கு இப்போது என்ன லாபம் கிடைக்கிறது என்பதை நான் சொல்லமாட்டேன், ஏனென்றால் அது பெரிய விஷயம். "முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை" என்ற விவேகானந்தரின் சிந்தனைக்கு இவர்களது வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம்.

இவருடைய இந்த மாபெரும் வெற்றிக்கு பின்னால் இரண்டு முக்கியத் தாக்கங்கள் இருப்பதாக அவர் கூறினார். முதல் தாக்கம் சத்குரு, இரண்டாவது தாக்கம் நம்மாழ்வார். விவசாயிகளுக்கு இன்னொரு தாக்கமும் வர வேண்டும், அது மகாத்மா காந்தியினுடைய தாக்கமும் வர வேண்டும் என்று அவரிடம் நான் கூறினேன். 

இவ்விழாவை ஏற்பாடு செய்த 'நமது நம்பிக்கை' மற்றும் 'சிபா' அமைப்புகளுக்குப் பாராட்டுகள். இன்று அரங்கம் நிறைந்து மக்கள் திரண்டுள்ளதைப் பார்க்கும்போது, நல்ல காலம் பிறந்துவிட்டது என்பதும், மக்கள் விவசாயத்தை நோக்கித் திரும்பத் தொடங்கியுள்ளனர் என்பதும் தெளிவாகிறது. 'இந்தியாவின் கலாச்சாரமே விவசாயம்தான்' என்றார் சர்தார் வல்லபாய் பட்டேல். 'மற்ற அனைத்தும் காத்திருக்கலாம், ஆனால் விவசாயம் காத்திருக்க முடியாது' என்றார் ஜவஹர்லால் நேரு. ஆகவே, விவசாயத்திற்கு எப்போதுமே அழிவில்லை” எனக் கூறினார். 

கே.பி. ராமசாமி பேசுகையில், “நமது நாட்டில் எம்.எஸ். சுவாமிநாதன் போன்ற விஞ்ஞானிகளும், ஐயா நம்மாழ்வார் போன்றோரும் பாரம்பரிய விவசாயம் குறித்து எத்தனையோ புத்தகங்களை எழுதினார்கள், எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். ஆனாலும், நம் நாட்டு விவசாயிகள் இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேறவில்லை. அந்த இடைவெளியை நிரப்புவதற்கு வள்ளுவன் முயற்சி எடுக்க வேண்டும்.” எனக் கூறினார். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள தனது நிலத்தில், 'மண் காப்போம் - காவேரி கூக்குரல்' இயக்கத்தின் வழிகாட்டுதலில், மரம் சார்ந்த பலபயிர் பல அடுக்கு சாகுபடி முறையில் வள்ளுவன் விவசாயம் செய்து வருகிறார். நிலத்தை அதிகமாக உழாமல் இருப்பது, மூடாக்கு போடுவது மற்றும் உரப்பயிர்களை வளர்ப்பது போன்ற இயற்கை முறைகளால் இவரது நிலத்தில் மண் வளம் (கரிம கார்பன்) வியக்கத்தக்க வகையில் உயர்ந்துள்ளது.

தென்னை மட்டுமே பயிரிடப்பட்ட ஒற்றைப் பயிர் சாகுபடி நிலமாக இருந்த தனது தோட்டத்தை, பல வகை மரங்கள், மிளகு, பழச்செடிகள் நிறைந்த ‘உணவுக் காடாக’ இவர் மாற்றியுள்ளார். இதன் விளைவாக, மண்ணின் கரிமக் கார்பன் அளவு 0.52 சதவீதத்தில் இருந்து 3.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. இத்தகைய இயற்கை விவசாய முறையால் உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் செலவு குறைந்ததுடன், வறட்சி மற்றும் வெள்ளக் காலங்களைத் தாங்கும் வலிமையும் நிலத்திற்குக் கிடைத்துள்ளது. இதன் மூலம், இவரது பண்ணை வருமானமும் ஆறு மடங்கு அதிகமானது குறிப்பிடத்தக்கது.

இவரது இந்தச் சாதனையைப் பாராட்டி, கடந்த 2024 ஆம் ஆண்டு ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நடத்திய “மண் ஆரோக்கிய பாதுகாவலர்கள்” என்ற விவசாயிகளுக்கான போட்டியில் இவருக்கு உலகளாவிய உயரிய அங்கீகாரம் கிடைத்தது.

இவ்விழாவில் சாந்தி ஆஷ்ரம் தலைவர் டாக்டர் கேசவினோ அறம், சுழற்சங்க ஆளுநர் மாருதி, சிபாகா அமைப்பின் சுகுமார் மற்றும் ‘நமது நம்பிக்கை’ இதழின் நிறுவனர் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா மற்றும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இவ்விழாவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

செவ்வாய், 7 ஜூலை, 2026

மாசு இல்லாத எதிர்காலத்திற்கு ‘புதிய கண்டுபிடிப்புகள்’ அவசியம்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி அதிரடி முழக்கம் !!!

மாசு இல்லாத எதிர்காலத்திற்கு ‘புதிய கண்டுபிடிப்புகள்’ அவசியம்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி அதிரடி முழக்கம் !!!

 மாசு இல்லாத எதிர்காலத்திற்கு ‘புதிய கண்டுபிடிப்புகள்’ அவசியம்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி அதிரடி முழக்கம் !!!

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் 'தூய்மைப் பருவம்' விழா; 1000 மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு!

தற்போதைய உலகளாவிய சூழலில் பல்வேறு மாசுகளின் காரணமாக அதிகளவில் கார்பன் வாயு வெளியேற்றப்பட்டு, சுற்றுச்சூழல் மிக வேகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத புதிய கண்டுபிடிப்புகள் தற்போதைய சூழலில் மிகவும் அவசியத் தேவையாக உருவெடுத்துள்ளது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகத்தின் சார்பில், கோவை நவஇந்தியா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அரங்கில் 'தூய்மைப் பருவம்' (Swachhata Pakhwada) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சரும் பிரபல நடிகருமான சுரேஷ் கோபி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, மத்திய இணை அமைச்சர் முன்னிலையில் கல்லூரியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தூய்மை பாரத உறுதிமொழியினை முழுமனதாக ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் 'தாயின் பெயரில் ஒரு மரம்' (Ek Ped Maa Ke Naam) இயக்கத்தின் ஒரு பகுதியாக, கல்லூரி மைதானத்தில் அமைச்சர் சுரேஷ் கோபி தனது தாயின் நினைவாக மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். மேலும், கல்லூரிப் பணியாளர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு இலவச மரக்கன்றுகளையும் அவர் வழங்கினார்.

விழாவில் அமைச்சர் மேலும் பேசுகையில், "இந்த தூய்மை விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நம்முடைய வருங்கால தலைமுறையினரின் நலனுக்காக மேற்கொள்ளப்படுபவை ஆகும். மாணவர்கள் தூய்மைப் பணிகளையும் விழிப்புணர்வையும் இன்றைய ஒரு நாளுடன் மட்டும் சுருக்கிக் கொள்ளக் கூடாது. இதனை ஒரு கடமையாகக் கொண்டு, ஆண்டு முழுவதும் தங்களது அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் திரளான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

சனி, 27 ஜூன், 2026

“இனி ஒரு விதி செய்வோம், போதை அரக்கனை ஒழிப்போம்”: உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தில் பேரணி சென்ற அர்-ரஹ்மான் அகாடமி மாணவர்கள் - கொடியாசைத்து துவக்கி வைத்த காவல்துறை !!!

“இனி ஒரு விதி செய்வோம், போதை அரக்கனை ஒழிப்போம்”: உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தில் பேரணி சென்ற அர்-ரஹ்மான் அகாடமி மாணவர்கள் - கொடியாசைத்து துவக்கி வைத்த காவல்துறை !!!

“இனி ஒரு விதி செய்வோம், போதை அரக்கனை ஒழிப்போம்”: உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தில் பேரணி சென்ற அர்-ரஹ்மான் அகாடமி மாணவர்கள் - கொடியாசைத்து துவக்கி வைத்த காவல்துறை !!!

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கோவை மாநகர காவல் துறை மற்றும் அர்-ரஹ்மான் அகாடமி கட்டணமில்லா கல்வியகம் இணைந்து நடத்திய போதைப்பொருளுக்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் பேரணி கோவை கரும்புக்கடை பகுதியில் நடைபெற்றது.

​இந்த விழிப்புணர்வு பேரணியை கரும்புக்கடை (D6) காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்துரு, கோவை மாநகராட்சியின் 86-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அகமது கபீர் கொடியசைத்து முறைப்படி துவங்கி வைத்தனர்.

​ இந்த நிகழ்வில் அர்-ரஹ்மான் அகாடமி நிர்வாகிகள் அப்துல் ஹக்கீம், ஜுனைது உசேன், சிராஜ்தீன், அப்துல் சத்தார், ஜுபைர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் முன்னிலை வகித்து பேரணியை வழி நடத்தினர்.

​இந்த விழிப்புணர்வு பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

 மாணவர்கள் போதைப்பொருட்களின் தீமைகளை விளக்கும் மற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு சென்று பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

வெள்ளி, 19 ஜூன், 2026

அண்டை மாநிலத்தில் அதிரடி கிளப்பும் 6-ஆம் வகுப்பு சிறுமி: ‘பள்ளிகளில் கட்டாய நீச்சல் பயிற்சி’ – ரனா பாத்திமாவின்  போராட்டம் வெல்லுமா?

அண்டை மாநிலத்தில் அதிரடி கிளப்பும் 6-ஆம் வகுப்பு சிறுமி: ‘பள்ளிகளில் கட்டாய நீச்சல் பயிற்சி’ – ரனா பாத்திமாவின் போராட்டம் வெல்லுமா?

 அண்டை மாநிலத்தில் அதிரடி கிளப்பும் 6-ஆம் வகுப்பு சிறுமி: ‘பள்ளிகளில் கட்டாய நீச்சல் பயிற்சி’ – ரனா பாத்திமாவின்  போராட்டம் வெல்லுமா?

3 வயதில் ஆற்றில் நீந்தி வைரல்; ராகுல் காந்தி முதல் பினராயி விஜயன் வரை திரும்பிப் பார்க்க வைத்த கேரளச் சிறுமியின் !!!

பள்ளிகளில் கட்டாய நீச்சல் பயிற்சி : ரனா பாத்திமாவின் தொடர் முயற்சி வெற்றி பெறுமா?

நீர்நிலைகளில் குழந்தைகள் மூழ்கி உயிரழக்கும் சம்பவங்களை தடுக்கும் வகையில் கேரள மாநில பள்ளிகளில் கட்டாய நீச்சல் பயிற்சி வழங்கவேண்டும் என்ற மாணவி ரனா பாத்திமாவின் கோரிக்கை மீண்டும் கவனம் பெற்றுள்ளது. 

யார் இந்த ரனா பாத்திமா?

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் அருகே தோட்டுமுக்கம் அரசு யு.பி. பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் ரனா ஃபாத்திமா. ரபீக் தோட்டுமுக்கம் மற்றும் ரிபானா ரபீக் தம்பதியின் மகளான இவர் தனது ஐந்து வயது முதலே பள்ளிகளில் கட்டாய நீச்சல் பயிற்சியை வழங்கவேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறார். 

கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய முதல்வர் பின்ராயி விஜயனை சந்தித்து அனைத்து மாணவ, மாணவிகளும் நீச்சல் பயிற்சி பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது தேசிய அளவில் கவனம் ஈர்த்திருந்தது.

தற்போது புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், பள்ளி மாணவர்களின் உயிர் பாதுகாப்பை மையமாகக் கொண்ட இந்த முயற்சி மீண்டும் மாநிலம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

ஐந்து வயதில் தொடங்கிய கோரிக்கை இது ரனாவின் முதல் முயற்சி அல்ல.

2023 நவம்பரில் நடைபெற்ற நவகேரள சதஸ் நிகழ்ச்சியின்போது, அப்போதைய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து, "குழந்தைகள் நீந்தக் கற்றுக்கொள்ள முக்கம் பகுதியில் ஒரு நீச்சல் குளம் அமைக்க வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

அந்த நிகழ்வில் பங்கேற்ற மிகவும் இளம் வயது விருந்தினராக ரனா கவனம் பெற்றார். தனது நீச்சல் பயிற்சி குருவும் பாட்டியுமான ரம்லா மனாஃபுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், முதலமைச்சரிடம் மனு அளித்ததோடு மட்டுமல்லாமல், அமைச்சர்களின் சிறப்பு நவகேரள பேருந்தின் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர்களான வி. அப்துரஹ்மான், பி. பிரசாத் மற்றும் வீணா ஜார்ஜ் ஆகியோர் ரனாவை அழைத்துச் சென்று பேருந்தை சுற்றிக்காட்டிய சம்பவம் அப்போது ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.

எனினும், அவரது கோரிக்கையின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குடும்பத்தினர் கூறுகின்றனர்.

மூன்றாவது வயதிலேயே வைரலான நீச்சல் திறமை

தோட்டுமுக்கத்தைச் சேர்ந்த ரனா ஃபாத்திமா, மூன்றாவது வயதிலேயே அப்பகுதியில் உள்ள சிறுபுழா ஆற்றில் நீந்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதன் மூலம் மாநிலம் முழுவதும் அறியப்பட்டார்.

மற்ற குழந்தைகள் நீருக்கருகே செல்லத் தயங்கும் வயதில், ஆற்றைக் கடந்து நீந்திய அவரது திறமை பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அந்தக் காணொளிகள் வெளியான பிறகு, பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் அரசு அதிகாரிகளின் கவனமும் அவர்மீது திரும்பியது.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பாராட்டு

ரனாவின் திறமையைப் பாராட்டியவர்களில் முக்கியமானவர் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி. அவர் நேரில் சந்தித்து ரனாவை வாழ்த்தியதுடன், அவரது தன்னம்பிக்கையையும் திறமையையும் பாராட்டியதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

முக்கம் நகராட்சி, குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுத்தருவதற்காக முன்னெடுத்த "நீந்தி வா குழந்தைகளே" திட்டத்தின் பிராண்ட் அம்பாசிடராக ரனாவை நியமித்தது.

அந்த நேரத்தில் நகராட்சி நிர்வாகமும் பல்வேறு மக்கள் பிரதிநிதிகளும், நீச்சல் திறனை ஒரு உயிர்காக்கும் திறனாக மாற்றிய சிறுமியின் முயற்சியை பாராட்டியிருந்தனர்.

நவகேரள சதஸ் நிகழ்வில் முதலமைச்சர் பினராயி விஜயனும், அமைச்சர்களான வி. அப்துரஹ்மான், பி. பிரசாத் மற்றும் வீணா ஜார்ஜும் ரனாவுடன் உரையாடிய சம்பவம் செய்திகளில் இடம்பிடித்தது.

"ஒவ்வொரு பள்ளியிலும் நீச்சல் பயிற்சி தேவை"

ஆரம்பத்தில் முக்கம் பகுதியில் ஒரு நீச்சல் குளம் வேண்டும் என்பதே ரனாவின் கோரிக்கையாக இருந்தது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் கேரளாவின் பல பகுதிகளில் குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்ததைத் தொடர்ந்து, தனது கோரிக்கையை மாநில அளவிற்கு விரிவுபடுத்தி உள்ளார்.

"ஒவ்வொரு குழந்தைக்கும் நீந்தத் தெரிய வேண்டும். பள்ளிகளில் நீச்சல் பயிற்சி கட்டாயமாக்கப்பட வேண்டும்" என்பதே தற்போது அவர் முன்வைக்கும் முக்கிய கோரிக்கையாகும்.

பள்ளியிலேயே பயிற்சி அளிக்கத் தயாராகும் சிறுமி மனு கொடுத்து விட்டு காத்து இருப்பதில் மட்டும் ரனா நின்று விடவில்லை.

தனது பள்ளியில் நீச்சல் தெரியாத சக மாணவர்களுக்கு நீச்சல் கற்றுத்தருவதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். பள்ளி மாணவர்களிடையே நீச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவரது குடும்பம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

 நீரில் மூழ்கி உயிரிழப்பது அதிகரிக்கிறது

கேரளாவில் ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் கோடை விடுமுறை மற்றும் பருவமழைக் காலங்களில் குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.

பொது சுகாதார மற்றும் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள், நீச்சல் பயிற்சி மற்றும் அடிப்படை நீர் பாதுகாப்பு கல்வி பள்ளி மட்டத்திலேயே வழங்கப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

பல நாடுகளில் பள்ளி மாணவர்களுக்கு கட்டாய நீச்சல் பயிற்சி வழங்கப்படுவது போல, கேரளாவிலும் அதுபோன்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்ற விவாதம் சமீப ஆண்டுகளில் வலுப்பெற்றுள்ளது.

அதேபோல், ரனா பாத்திமா, சிறுவயதிலேயே சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் குழந்தையாக பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஒரு நீச்சல் குளம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடங்கிய அவரது முயற்சி, இன்று பள்ளிகளில் கட்டாய நீச்சல் பயிற்சி வேண்டும் என்ற மாநில அளவிலான விவாதமாக மாறியுள்ளது.

 தற்போதைய முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சரை சந்தித்து, மீண்டும் தனது கோரிக்கை தொடர்பாக பேச முயற்சித்து வருகிறார்.

குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றும் ஒரு கொள்கை மாற்றத்திற்கான விவாதத்தை, எட்டு வயது சிறுமி ஒருவரின் விடாமுயற்சி மீண்டும் முன்னிலைப்படுத்தி உள்ளது.

செவ்வாய், 2 ஜூன், 2026

உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு, பெண்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி !!!

உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு, பெண்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி !!!

உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு, பெண்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி !!!

சமூகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் ஆண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் !!!

உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு, கோவையில் போதைப்பொருட்களுக்கு எதிராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியும் குழந்தைகள், சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மேற்கொண்டனர். ஆண்டுதோறும் ஜூன் 3-ஆம் தேதி உலக சைக்கிள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சைக்கிள் தினத்தை முன்னிட்டு கோவையில் சமூக ஆர்வலர்கள், சிறார்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டியும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த சைக்கிள் பேரணியை துணை ஆட்சியர் ஹரிப்பிரியா, காவல் துணைக் கண்காணிப்பாளர் காயத்ரி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்து, சைக்கிள் பேரணியிலும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பேசிய சைக்கிள் பந்தய வீரரும் சமூக ஆர்வலருமான ஜி.டி. விஷ்ணு ராம், "போதைப்பொருள் சமூகத்தில் ஒழிக்க வேண்டிய ஒன்று. இதனை பயன்படுத்துவோருக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது அவர்களைக் கடந்து, சமூகத்திற்கும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் பெண்களுக்கும் மற்றும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிறது. எனவே போதைப்பொருள் கலாச்சாரத்தை தடுக்கும் விதமாகவும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியும் இன்று நாங்கள் சைக்கிள் பேரணி மேற்கொண்டோம். இந்த சமூகத்தில் பெண்களுக்கு ஆண்கள் பாதுகாப்பாக இருக்கவும், போதை பொருள் தடுப்பில் ஈடுபட்டு, ஒழுக்கத்தை கட்டமைக்கின்ற விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். கோவை நவஇந்தியா பகுதியில் தொடங்கிய எங்கள் சைக்கிள் பேரணி கருமத்தம்பட்டி வரை சென்று மீண்டும் இதே பகுதியில் நிறைவடைந்தது. 50 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த பேரணியில் பங்கேற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது." இவ்வாறு விஷ்ணு ராம் கூறினார்.

ஞாயிறு, 31 மே, 2026

சண்டே மார்னிங் ‘ஃபுல் எனர்ஜி’ வைப் ; கோவை ஆர்.எஸ்.புரத்தில் அனல் பறந்த ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ திருவிழா - வீதியில் இறங்கி ஆடிப் பாடி அசத்திய இளைஞர்கள் !!!

சண்டே மார்னிங் ‘ஃபுல் எனர்ஜி’ வைப் ; கோவை ஆர்.எஸ்.புரத்தில் அனல் பறந்த ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ திருவிழா - வீதியில் இறங்கி ஆடிப் பாடி அசத்திய இளைஞர்கள் !!!

 சண்டே மார்னிங் ‘ஃபுல் எனர்ஜி’ வைப் ; கோவை ஆர்.எஸ்.புரத்தில் அனல் பறந்த ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ திருவிழா - வீதியில் இறங்கி ஆடிப் பாடி அசத்திய இளைஞர்கள் !!!


டி.ஜே இசையில் ‘மாஸ்’ குத்தாட்டம் ; செல்போன்களை ஓரம் தள்ளி விட்டுப் பாரம்பரிய விளையாட்டுகளுடன் கொண்டாடிய மக்கள் !!!

 ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதை அசாத்திய உற்சாகத்துடனும், எல்லையற்ற மகிழ்ச்சியடனும் கொண்டாடும் நோக்கில், கோவையின் ஆர்.எஸ்.புரம் (R.S. Puram) டி.பி. ரோட்டில் இன்று காலை ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ (Happy Street) நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக அரங்கேறியது. 

கோவையின் ஒட்டுமொத்த இளசுகளும் ஒரே வீதியில் ஒன்று திரண்டு ஆடிப் பாடி மகிழ்ந்த ‘லைவ்’ காட்சிகள் ஒட்டுமொத்த கோவை மாநகரையும் ‘வைப்’ செய்ய வைத்து உள்ளது.

வாராந்திர வேலைப் பளு, மன அழுத்தம் மற்றும் செல்போன் உலகிற்குள் மூழ்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறையினரை அதில் இருந்து மீட்டெடுத்து, ‘நெருக்கமான நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும், தனியாக வாழாதீர்கள்’ என்ற நடிகர் சிவகுமாரின் சமீபத்திய கோவை மேடை தத்துவத்திற்கு அசல் அச்சான்றாக இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு போடப்பட்டு இருந்தது. 

இதற்காக இன்று அதிகாலை முதலே ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் போக்குவரத்து முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டு, அந்த வீதியே பொதுமக்களின் அசாத்திய விளையாட்டு மைதானமாக மாற்றப்பட்டது.

அதிகாலை 6 மணிக்கே ‘ஃபுல் எனர்ஜி’யோடு புத்தாடை அணிந்து திரண்ட ஆயிரக் கணக்கான இளம் பெண்கள், வாலிபர்கள் மற்றும் பிஞ்சுச் சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரும் இந்த ‘மாஸ்’ கொண்டாட்டத்தில் களம் இறங்கினர். சாலையின் நடுவே அமைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட மேடையில் டி.ஜே (DJ) பாப் இசையின் அதிரடி ‘பீட்ஸ்’ ஒலிக்கத் தொடங்கியதும், கோவையின் துள்ளல் இளைஞர்கள் அனைவரும் கைகளை உயர்த்தி, அனல் பறக்க ஆடிப் பாடித் தங்களது மகிழ்ச்சியை வெளிக் கொணர்ந்தனர்.

 சினிமா பாடல்களுக்குப் போட்டிப் போட்டுக் கொண்டு இளைஞர்கள் போட்ட ‘குத்தாட்டம்’ ஒட்டுமொத்த சாலையையும் அதிரவைத்தது.

ஆடல், பாடல் மட்டுமின்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் வகையில் பல்வேறு யோகா மற்றும் உடற்பயிற்சி (Fitness) நிகழ்வுகளும் வீதியின் மறுபுறம் ‘லைவ்’ ஆக நடத்தப்பட்டன.


  கயிறு இழுத்தல் மற்றும் பாரம்பரியக் கபடி, நொண்டி போன்ற அசல் தெருவோர விளையாட்டுகளில் இளைஞர்கள் தங்களின் நரம்புகளை முறுக்கேற்றி விளையாடினர்.

செவ்வாய், 24 மார்ச், 2026

100% வாக்குப்பதிவே இலக்கு! கோவையில் மாணவர்களின் பிரம்மாண்ட ரங்கோலி விழிப்புணர்வு!

100% வாக்குப்பதிவே இலக்கு! கோவையில் மாணவர்களின் பிரம்மாண்ட ரங்கோலி விழிப்புணர்வு!

100% வாக்குப்பதிவே இலக்கு! கோவையில் மாணவர்களின் பிரம்மாண்ட ரங்கோலி விழிப்புணர்வு !!!

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, நவ இந்தியா பகுதியில் அமைந்துள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பிரம்மாண்ட ரங்கோலி கோலங்கள் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், வண்ணமயமான தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் சின்னங்களுடன் மாணவர்கள் உருவாக்கிய இந்த ரங்கோலி கோலங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

இந்த நிகழ்வை, கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான பவன்குமார் க.கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இந்திய தேர்தல் ஆணையம் நியமித்த தேர்தல் பார்வையாளர்களும் இதில் பங்கேற்றனர்.

மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் தேர்தல் விழிப்புணர்விற்கான அவர்களின் ஆர்வத்தை ஆட்சியரும் பார்வையாளர்களும் பாராட்டினர். வரும் தேர்தலில் கோவை மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.