தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 ஜூலை, 2026

இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தடை விதிக்க வேண்டும் - தீர்ப்பை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம் !!!

இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தடை விதிக்க வேண்டும் - தீர்ப்பை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம் !!!

 இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தடை விதிக்க வேண்டும் - தீர்ப்பை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம் !!!

குறிப்பிட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திருச்சி (கிழக்கு), மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்ததால் அந்த தொகுதிகள் காலியானதாக சட்டப் பேரவையின் செயலாளர் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடாசலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த மனுவில், "காலியான தொகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிப்புகள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் என்ற நிலையில் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 151- ஏ-வின் கீழ் காலியானது இல்லை என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வரை குறிப்பிட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என்று கோரி இருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 10) விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் இடைத்தேர்தல் அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளது. அதனால், இடைத்தேர்தல் அறிவிப்புகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என வாதிட்டார்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், "ராஜிநாமா செய்யப்பட்ட தொகுதிக்கு எதிரான தேர்தல் வழக்குகளை பொறுத்தவரை அதன் நிலைபாடுகள் நீதிமன்றத்தில் மாறுபடலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர் ராஜிநாமா செய்வதற்கு முன் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தால் அதை கருத்தில் கொள்ள வேண்டியது இல்லை எனவும் நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டு உள்ளது.

இந்த வழக்கை பொறுத்தவரை, வேட்பாளர்களின் ராஜிநாமாவை உரிய ஆய்வுக்கு பின் சபாநாயகர் ஏற்று அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் உத்தரவிட்டால் அது தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்கும். 10 ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்த பழமையான தேர்தல் வழக்கை தற்போது தான் நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது" என்று வாதிட்டார்.

முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமாணி, "காலியானதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க முடியும். தனி நபர்கள் தேர்தலை நடத்தக் கூடாது என வழக்கு தொடர முடியாது. இந்த வழக்கு விசாரணைக்கே உகந்தது இல்லை. இடைத்தேர்தல் நடத்துவதை எதிர்த்து குறிப்பிட்ட தொகுதி வாக்காளர்கள் மட்டுமே வழக்கு தொடர உரிமை உள்ளது. மனுதாரர் எந்த தொடர்பும் இல்லாமல் வழக்கை தொடர்ந்து உள்ளார்" என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என 2018- ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் போதும் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடக் கூடாது எனவும், நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், அது வேறுவொரு பாதிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பிட்ட வேட்பாளருக்கு எதிராக வழக்கு நிலுவையில் இருந்தால், எப்படி தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியும் ? நிலுவையில் வழக்குகள் இல்லாதபோது ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது கட்டாயம் தான். அதே நேரத்தில் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் அங்கே எப்படி தேர்தல் அறிவிப்பு வெளியிட முடியும் ? இடைத்தேர்தலில் புதிய வேறு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்தால் என்ன செய்வது ? அதனால் சற்று பொறுத்து இருந்துப் பார்க்கலாம்" என்று குறிப்பிட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

செவ்வாய், 9 ஜூன், 2026

சட்டப் பேரவையில் குதிரை பேர புகார் - சி.பி.ஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு !!!

சட்டப் பேரவையில் குதிரை பேர புகார் - சி.பி.ஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு !!!

 சட்டப் பேரவையில் குதிரை பேர புகார் - சி.பி.ஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு !!!

தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அமைவதற்காக 'குதிரை பேரம்' நடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் மற்றும் அ.தி.மு.க எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்து ஆளும் கட்சியில் இணைந்த 4 பேர் மீது சி.பி.ஐ விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

எம். சீனிவாசன் என்பவர் தாக்கல் செய்து உள்ள அந்த மனுவில், த.வெ.க பொதுச் செயலாளர் என். ஆனந்த் (எ) புஸ்ஸி என். ஆனந்த் மற்றும் மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க வில் இணைந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), எஸ். ஜெயக்குமார் (பெருந்துறை), பி. சத்தியபாமா (தாராபுரம்) மற்றும் இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ-க்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

வழக்கறிஞர் அசிந்தியா திவாரி மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், விசாரணையை நிறைவு செய்து, நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ-க்கு உத்தரவிடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது செல்லுபடியாகும் உறுதியான மற்றும் நியாயமான காரணங்கள் ஏதுமின்றி சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தவர்கள், தேர்தலுக்குப் பிறகு 'குதிரை பேரம்' நடத்துவதை தடுப்பதற்கான குறிப்பிட்ட விதிகளை வகுக்க, இந்திய அரசியலமைப் பின் 142-வது பிரிவின் கீழ் உள்ள முழு அதிகாரத்தை பயன்படுத்துமாறும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

மேலும், நீதிமன்றத்தால் இதற்கான விதிகள் வகுக்கப்படும் வரை, அந்த நான்கு முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களும் சுயேட்சையாகளாகவோ அல்லது ஏதேனும் அரசியல் கட்சிகளின் ஆதரவுடனோ இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரி உள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மே 4-ந் தேதி எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க, 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளாக நீடித்த திராவிடக் கட்சிகளின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டப் பேரவையில் த.வெ.க தனித்து பெரும்பான்மையை பெறவில்லை என்றாலும், காங்கிரஸ், வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம் மற்றும் ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் 120 எம்.எல்.ஏ க்களின் ஆதரவுடன் த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைத்தார். அவர் கடந்த 10-ந் தேதி முதலமைச்சராக பதவியேற்றார்.

பின்னர் மே 13 அன்று சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், அ.தி.மு.க வின் அதிருப்தி எம்.எல்.ஏ க்கள் 25 பேரின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றது. அப்போது குதிரை பேரம் நடந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் முன் வைத்த குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் விஜய் மறுத்தார்.

திங்கள், 1 ஜூன், 2026

மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது; சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் !!!

மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது; சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் !!!

 மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது; சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் !!!

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவக்கிய நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வமுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வை சேர்ந்த சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனை அடுத்து, அவர் ஏற்கனவே வகித்து வந்த தனது மாநிலங்களவை எம்.பி பதவியை மே 7-ஆம் தேதி ராஜினாமா செய்தார். இந்த காலியிடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதன் இடையே வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கியது. வரும் 8-ஆம் தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். அதனைத் தொடர்ந்து ஜூன் 9-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளது.

வேட்பு மனுவை திரும்ப பெற ஜூன் 11 கடைசி நாளாகும். போட்டி இருந்தால் ஜூன் 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். மேலும், அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் சுயேட்சை வேட்பாளர்களான தேர்தல் மன்னன் பத்மராஜன் மற்றும் அக்னி ஆழ்வார் ஆகியோர் மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரி தேன்மொழியிடம் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் மன்னன் பத்மராஜன், "255-வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளேன். எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் விஜய் ஆகியோருக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளேன். 1988-இல் மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய தொடங்கியதில் இருந்து தற்போது வரை தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன்.

வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவேன். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இதுபோன்ற முயற்சியை செய்து வருகிறேன். பலர் வேட்பு மனு தாக்கல் செய்ய தயங்குகிறார்கள். அதுபோன்று தயக்கமில்லாமல் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன். தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்து உள்ளேன்" என்றார்.

மற்றொரு சுயேட்சை வேட்பாளரான அக்னி ஆழ்வார், "59-வது முறையாக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளேன். முதல்வர் விஜய் எதிர்த்து பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு உள்ளேன். அதேபோல் உதயநிதியை எதிர்த்து சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு உள்ளேன். முதல் நாளாக இன்றே வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளேன். 2009 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறேன். மக்களுக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன்" என தெரிவித்தார்.

வியாழன், 21 மே, 2026

தி.மு.க எம்.பி கனிமொழியை விமர்சித்து, ஸ்டாலின் மீது சத்தியம்" செய்த நபர் ; த.வெ.க பாணியில் கார் போர்டுடன் வலம் வரும் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட தாஹிர் ஹூசைன் சவால் - வைரலாகும் வீடியோ !!!

தி.மு.க எம்.பி கனிமொழியை விமர்சித்து, ஸ்டாலின் மீது சத்தியம்" செய்த நபர் ; த.வெ.க பாணியில் கார் போர்டுடன் வலம் வரும் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட தாஹிர் ஹூசைன் சவால் - வைரலாகும் வீடியோ !!!

 தி.மு.க எம்.பி கனிமொழியை விமர்சித்து, ஸ்டாலின் மீது சத்தியம்" செய்த நபர் ; த.வெ.க பாணியில் கார் போர்டுடன் வலம் வரும் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட தாஹிர் ஹூசைன் சவால் - வைரலாகும் வீடியோ !!!

பெரிய தலையோ, சின்ன தலையோ.. தட்டித் தூக்குவது நிச்சயம்" - கனிமொழியை வம்புக்கு இழுத்து, ஸ்டாலின் மீது சத்தியம் செய்த நபர் !!!


த.வெ.க பாணியில் கார் போர்டுடன் வலம் வரும் கோவை 'மக்கள் எம்.எல்.ஏ' தாஹிர் ஹூசைன்... திருச்சி கிழக்குக்கு போட்டியிட வருவதாக பேசிய வீடியோ வைரல் !!!

 தமிழக சட்டசபைத் தேர்தல் களம் தற்பொழுது அனல் பறக்கும் அரசியல் நகர்வுகளுடன் உச்சக்கட்ட பரபரப்பை எட்டி உள்ள நிலையில், கோவை சிங்காநல்லூர் தொகுதி சுயேச்சை வேட்பாளராகக் களம் கண்டு, 'மக்களுக்காக... மாற்றத்திற்காக...' எனத் தனது காரில் பிரம்மாண்ட போர்டு மாட்டி வலம் வரும் தாஹிர் ஹூசைனின் புதிய வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளது அரசியல் வட்டாரத்தையும் "நெட்டிசன்"களின் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது.

முன்னாள் காங்கிரஸ் பிரமுகரான இவர், தற்பொழுது தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க) அரசியல் என்ட்ரிக்குப் பிறகு தானும் ஒரு எம்.எல்.ஏ பாணியில் வலம் வரும் வேளையில், திருச்சி கிழக்குத் தொகுதியைக் குறிவைத்து, தி.மு.கவின் முக்கியப் புள்ளிகளைத் தாக்கி சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ள அதிரடியான அரசியல் அறிக்கை, தற்பொழுது "டிரெண்டிங்"கில் டாப் கியரில் சென்று கொண்டு இருக்கிறது.

​அரசியல் ரீதியாகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள திருச்சிக்கு ஒரு பிரம்மாண்ட திருவிழா தயாராக உள்ளதாகத் தனது வீடியோ பதிவில் நாடித் துடிப்பை எகிற வைக்கும் டானில் பேசத் துவங்கி உள்ள தாஹிர் ஹூசைன், அந்தத் திருவிழாவிற்கு வரக்கூடிய சிறப்பு விருந்தினர் யார் ? என்று தெரிந்ததும் தமக்கு ஏற்பட்ட மன நிலையைப் பகிரங்கப்படுத்தி உள்ளார். அவர் வருகையை நினைத்துச் சந்தோஷப்படுவதா ? அல்லது சங்கடப்படுவதா ? என்றே தெரியவில்லை எனக் குறிப்பிட்டவர், 

 தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் மட்டும் முன்னால் நின்று இருந்தால், நான் தாராளமாகச் சீட்டு கேட்டு ஓட்டி இருக்கலாம் என்றும், ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் சுயேச்சையாக நின்றாலே போதும் என்ற நிலைக்குக் களம் வந்து விட்டதாகவும் அனல் பறக்கப் பேசி உள்ளார்.

​தி.மு.க மற்றும் சுயேச்சை ஆகிய இரு தரப்பிற்கு நடுவில் தான் உண்மையான போட்டி நிலவப் போகிறது என்றும், தமிழக வெற்றி கழகம் வராமல் இந்த இரு முனைப் போட்டியில் சுயேச்சை தான் தட்டித் தூக்கி வெற்றி பெறும் என்பது ஒட்டுமொத்த திருச்சிக்கே வெளிச்சம் என்றும் அதிரடி கிளப்பி உள்ளார். மேலும், சமகால சோஷியல் மீடியா ட்ரெண்டுகளைத் தனது அரசியல் சாடலுக்குப் பயன்படுத்திய தாஹிர் ஹூசைன்...

தி.மு.க எம்.பி கனிமொழியை மறைமுகமாகத் தாக்கும் வகையில்,

 'இன்ஸ்டாகிராம் தெரியாத பவள விழா பாப்பாவிற்கும்' கூட இந்த அரசியல் கணக்கு அப்பட்டமாகத் தெரியும் எனச் செம லோக்கல் கலாய் கலாய்த்து உள்ளார்.

 தான் எதிர்பார்த்த களம் வேறாக இருந்தாலும், தற்போதைய தேர்தல் களம் இப்படித் தான் போய்க் கொண்டு உள்ளது என்றும், எதற்கும் தாம் அஞ்சப் போவதில்லை என்றும் மார்தட்டி உள்ளார்.

​வீடியோவின் இறுதிக் கட்டத்தில் உச்சக்கட்ட ஆவேசத்திற்குச் சென்ற தாஹிர் ஹூசைன், இந்தத் தேர்தலில் இறங்கி ரத்தம் சூடேறி அது இன்னும் அடங்காமல் அப்படியே தகித்துக் கொண்டு இருப்பதாகவும் "வர்றேன்... நான் வர்றேன்... திருச்சி கிழக்குக்கு நான் வர்றேன்! அங்கே பெரிய தலையோ, சின்ன தலையோ... பெரிய தலையோ எடுக்கிறது நிச்சயம்! இது தளபதி ஸ்டாலின் மீது சத்தியம்!" என முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் பெயரை இழுத்துச் சத்தியம் செய்து சவால் விடுத்து உள்ள இந்த வீடியோ பதிவு, தற்பொழுது சமூக தளங்களில் வைரலாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஞாயிறு, 17 மே, 2026

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த அமெரிக்க குடியுரிமை பெற்ற முதியவர் கைது !!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த அமெரிக்க குடியுரிமை பெற்ற முதியவர் கைது !!!

 தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த அமெரிக்க குடியுரிமை பெற்ற முதியவர் கைது !!!

தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் சட்ட விரோதமாக வாக்களித்த அமெரிக்க குடியுரிமை பெற்ற முதியவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது வெளிநாடு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் பலர் சட்டவிரோதமாக வாக்களித்ததாக தேர்தல் ஆணையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.

இதை அடுத்து இந்திய தேர்தல் ஆணையம் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விமானங்களில் பயணிக்க வரும் வெளிநாடு குடியுரிமை பெற்ற இந்தியர்களின் கைவிரல்களில் வாக்களித்ததற்கான அடையாள மை இருந்தால் அவர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி சென்னை, மதுரை விமான நிலையங்களில், குடியுரிமை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் இதுவரையில் பத்துக்கும் மேற்பட்ட வெளிநாடு குடியுரிமை பெற்றவர்கள் தமிழக சட்டப் பேரவை தேர்தலில், சட்ட விரோதமாக வாக்களித்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் செல்ல இருந்த பயணிகளிடம் சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னை கே.கே நகரில் இருந்து கிஷோர் (64) என்பவர் இந்த விமானத்தில் துபாய் வழியாக அமெரிக்கா செல்ல வந்து இருந்தார்.

அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதால் அமெரிக்க பாஸ்போர்ட் அவரிடம் இருந்தது. ஆனால் அவருடைய இடது கை ஆள்காட்டி விரலில் தேர்தலில் வாக்களித்ததற்கான அடையாள மை இருந்ததை குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதை அடுத்து அவரிடம் விசாரித்த போது சென்னை விருகம்பாக்கம் பகுதியில் அவர் வாக்களித்தது தெரிய வந்தது. இதை அடுத்து குடியுரிமை அதிகாரிகள் கிஷோரின் விமான பயணத்தை ரத்து செய்தனர். மேலும் அவரை கைது செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு, போலீசில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்ததாக வெளிநாடு வாழ் குடியுரிமை பெற்ற 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சட்டவிரோதமாக வாக்களித்து விட்டு வெளிநாடுகளுக்கு திரும்பிச் செல்லும் போது விமான நிலைய குடியுரிமை சோதனையில் சிக்கி வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொடர்ந்து கைதாகி வருவது சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வியாழன், 14 மே, 2026

 தி.மு.க தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் - மு.க.ஸ்டாலின் !!!

தி.மு.க தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் - மு.க.ஸ்டாலின் !!!

 தி.மு.க தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் - மு.க.ஸ்டாலின் !!!

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தோல்விக்கு கட்சி தலைவர் என்ற முறையில் தானே பொறுப்பேற்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்த இக்கூட்டத்தில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம் குறித்து மு.க ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தத்தினார்.

இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க வின் முதன்மை செயலாளர் கே.என் நேரு, தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஸ்டாலின், “நடந்து முடிந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போது அமைந்து உள்ள அரசும் நமது கூட்டணிக் கட்சியின் தயவால் தான் அமைந்து உள்ளது. தி.மு.க வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லையே தவிர கணிசமான எண்ணிக்கையில் வாக்குகள் கிடைத்து உள்ளது.

வரலாற்றை திரும்பிப் பார்த்தால், 1989-ல் தி.மு.க ஆட்சி அமைத்தது. அடுத்து 1991 தேர்தலில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே ஜெயிச்சோம். 96-ல் மீண்டும் நம்ம ஆட்சி. ஆனால், 2001 தேர்தலில் 37 இடங்களில் மட்டுமே வென்றோம். பிறகு 2006-ல் தி.மு.க ஆட்சி, 2011-ல் வெறும் 31 இடங்கள். இப்படி ஆட்சியில் இருந்து தோற்ற போதெல்லாம், மிகக் குறைந்த இடங்களிலேயே வெற்றி பெற்றோம்.

2021 வெற்றிக்குப் பிறகு, 2026-ல் 59 இடங்களில் வென்று இருக்கிறோம். கூட்டணியோடு சேர்த்து 73 இடங்கள். நமக்கும் த.வெ.க வுக்குமான வாக்கு வேறுபாடு 3.52 விழுக்காடு தான். தற்போது சமூக வலைத்தளத்தில், 'எப்படியும் தி.மு.க தான் ஜெயிக்கும்ன்னு நினைத்தோம். அதனால், என்னுடைய ஒரு ஓட்டுல என்னாகிடும்னு தெரியாம போட்டுவிட்டோம்' என பொதுமக்கள் புலம்புகிறார்கள்.

அதுமட்டுமல்ல, 'இப்படி ஒரு கட்சிக்கு ஓட்டுப் போட்டு, ஆட்சியில் அமர வைத்து விட்டோமே' என பலரும் பதிவிடுவதை பார்க்க முடிகிறது. இதுதான் நம் ஐந்தாண்டுக் கால நல்லாட்சிக்கு கிடைத்த அங்கீகாரம். பொது வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அதைத்தான் அண்ணாவும், கலைஞரும் நமக்கு கத்து தந்து இருக்க பக்குவம்.

என்னைப் பொறுத்தவரை, கடந்த 5 ஆண்டும் என் சக்திக்கு மீறி கடுமையாக உழைத்தோம். உங்களையும் ஓய்வில்லாமல் உழைக்க வைத்தேன். இதுவரை எந்த அரசும் செய்யாத சாதனைகளை நாம் செய்தோம். இருந்தாலும், நம்மால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதற்காக, நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. தோல்விக்கான காரணங்களாக ஒருவர் இன்னொருத்தரைக் குற்றம் சொல்வது, அவர் இன்னொருத்தரை கை காட்டுவது. இப்படி மாற்றி மாற்றி குற்றம் சொல்லிக் கொண்டே இருந்தால், இதற்கு ஒரு முடிவே இருக்காது.

அப்படியானால், தோல்விக்கு யார் தான் பொறுப்பு ? யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டாம். கட்சித் தலைவர் என்ற முறையில், தி.மு.க தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன். இதுதான் நிதர்சனம். வெற்றி கிடைத்தால் பெருமையை ஏற்றுக்கொள்ளும் நான், தோல்விக்கான பொறுப்பையும் ஏற்பதில் தவறில்லை. அதுதான் நியாயம். அதேபோல, தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்வது அவசியம். ஆனால், அது அடுத்தவர் மீதான அவதூறாக இருக்கக் கூடாது.

இத்தேர்தலில் நடந்து இருப்பது, புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி. சுனாமினா சாதனையோ, சாகசமோ கிடையாது. தமிழ்நாட்டின் நலனைப் பாதித்து உள்ள சுனாமி பேரழிவு இது. மக்களை இதில் இருந்து எப்படி மீட்டெடுக்க போகிறோம் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும்.

ஒவ்வொரு தொகுதிக்கும் தனிப்பட்ட பல பிரச்சனைகள் உள்ளது. அனைத்தையும் பரிசீலனை செய்து, ஆய்வு செய்ய வேண்டும். இது ஒரு தேர்தல் சுழல்தாவே தவிர, எந்திரிக்கவே முடியாத தோல்வி இல்லை. இனி கூடுதல் கவனத்தோடு வேலை செய்ய வேண்டும். முக்கியமாக, ஒற்றுமையாக இருந்து வேலை பார்க்க வேண்டும்.

அதற்கு முன், நம்மை நாமே சுய பரிசோதனை செய்ய வேண்டும். முதலில் தோல்விக்கான காரணங்கள் குறித்து தொகுதிவாரியாக, அனைத்து நிர்வாகிகளிடமும் கருத்துக் கேட்க வேண்டும். அதற்காக, கட்சி சார்பில் ஒரு குழு அமைக்க உள்ளேன். அவர்கள் அடுத்த 20 நாட்களில் எனக்கு அறிக்கை கொடுப்பார்கள். மேலும், கட்சி உறுப்பினர்கள் வெளிப்படையாக தகவலை பகிர, தனி ‘வெப்சைட்’ நாளைக்கே அறிவிக்கப்படும்.

அதில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, தி.மு.க அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர உள்ளேன். அது நமது கட்சியை இன்னும் ஒரு நூறாண்டுகளுக்கு உயிர்ப்போடு வைத்து இருக்க போகிறது” என்றார்.

டீக்கடையில் அமைந்து பேசிக் கொண்டு இருந்த நமது அரசியலை, சமூக வலைத்தளத்தில் பேசியாக வேண்டும். கடந்த ஐந்தாண்டில் நாம் உருவாக்கிய திட்டங்கள் எல்லாம் தொடர வேண்டும். சட்டப்பேரவையில் திறமையான கட்சியாக செயல்பட வேண்டும். வெற்றியோ, தோல்வியோ வாக்காளர்களை சந்தித்து நன்றி சொல்ல வேண்டும். நமக்கு உள்ளேயே ஒற்றுமை இல்லையென்றால், வெற்றி என்பது சாத்தியமில்லை.

அதேபோல, மாவட்ட செயலாளர்கள் தான் மாவட்டத்திற்கு முக்கியம். அதற்காக, அவர்கள் மட்டுமே முக்கியம்னு கிடையாது. கட்சியில் உள்ள எல்லா தூணும் முக்கியம். ஒருவேளை யாராவது, என்னால செயல்பட முடியாதுன்னு நினைச்சா, மனப் பூர்வமாக முன்வந்து பொறுப்பில் இருந்து விலகிக்கலாம். அது தவறு இல்லை. உழைக்க தகுதியானவர்கள் எத்தனையோ பேர் உள்ளார்கள். அடுத்த தேர்தலில் கண்டிப்பாக வெற்று பெறவேண்டும். குறி வைத்து களப்பணியாற்றினால், நிச்சயம் வெற்றி பெறுவோம்” என நம்பிக்கை தெரிவித்தார்.

செவ்வாய், 12 மே, 2026

திருப்பத்தூர் எம்.எல்.ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை - உயர்நீதிமன்றம் !!!

திருப்பத்தூர் எம்.எல்.ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை - உயர்நீதிமன்றம் !!!

 திருப்பத்தூர் எம்.எல்.ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை - உயர்நீதிமன்றம் !!!

தபால் வாக்குகள் மாறியதாக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் புகார் அளித்து இருப்பதால் த.வெ.க சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற சீனிவாச சேதுபதி சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்த கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இடைக்கால உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17 ஆவது சட்டமன்ற தேர்தலில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் தோல்வி அடைந்தார். அவர் பெற்ற மொத்த வாக்கு 83,374.

இதை அடுத்து, 'திருப்பத்தூர் தொகுதியில் இருந்த தபால் வாக்கு ஒன்று வேலூர் அருகே உள்ள திருப்பத்தூர் தொகுதி எண் 50-க்கு தவறுதலாக சென்று விட்டது. அந்த வாக்கை சிவகங்கை அருகே உள்ள திருப்பத்தூர் தொகுதி 185 இல் சேர்க்க வேண்டும்' என தி.மு.க வேட்பாளர் பெரியகருப்பன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

வாக்கு மாறி உள்ளதாக புகார் அளித்தும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், தபால் வாக்குகளை மீட்க வேண்டும். வாக்கு எண்ணிக்கைத் தொடர்பான காணொலி காட்சிகளை பாதுகாப்பாக வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும், அதுவரை வெற்றி பெற்றவர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக ஞாயிற்றுக்கிழமை (மே 10) அன்று விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், பெரிய கருப்பனின் புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, பெரியகருப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "தபால் வாக்கு இடம் மாறியது குறித்து தேர்தல் ஆணையம் தெளிவாக பதிலளிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் அலட்சியத்தால் ஒருவரின் வெற்றி பறிக்கப்பட்டு உள்ளது. அதற்கு தேர்தல் ஆணையம் தான் பொறுப்பேற்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "தபால் வாக்கு மாற்றப்பட்டது குறித்து எந்த புகாரும் வரவில்லை. எண்ணிக்கைக்கு முன், தபால் வாக்குகள் கிடைத்தால் மட்டுமே அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய பின் கால தாமதமாக தபால் வாக்கு கிடைத்தால், அது கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது என தேர்தல் விதிகளில் கூறப்பட்டு உள்ளது" என அறிக்கை தாக்கல் செய்தார். இதனை அடுத்து விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் எல். விக்டோரியா கெளரி, என். செந்தில் குமார் அமர்வு இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதில், "பெரியகருப்பன் அளித்த புகாருக்கு போதுமான ஆதாரம் உள்ளது. அதனால், நீதிமன்ற மறு உத்தரவு வரும் வரை சட்டமன்றத்தில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு, நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு உள்ளிட்ட எதிலும் திருப்பத்தூர் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி கலந்து கொள்ள தடை விதிக்கப்படுகிறது. சீனிவாச சேதுபதியின் தேர்தல் வெற்றியை நீதிமன்றம் ரத்து செய்யவில்லை. அதே சமயம், அவரது தேர்தல் வெற்றியை ஏற்றுக் கொள்வதாகவும் கருதக் கூடாது.

வாக்கு எண்ணிக்கை சுற்று விவரங்கள் மற்றும் மின்னனு வாக்குகள், தபால் வாக்குகள், நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகள், அதன் கவர்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக தேர்தல் ஆணையம் வைத்து இருக்க வேண்டும்.

திருப்பத்தூர் தொகுதி எண் 185-க்கு அதே பெயரில் உள்ள திருப்பத்தூர் தொகுதி எண் 50 இல் இருந்து தபால் வாக்குகள் வந்து இருந்தால் அதை திறக்காமல் பாதுகாத்து வைக்க வேண்டும்.

ஆவணங்களை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும் என்ற இந்த உத்தரவால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது மறு வாக்கு எண்ணிக்கைக்கானது எனவும் கருத கூடாது" என கூறப்பட்டு உள்ளது.

மேலும், "திருப்பத்தூர் தொகுதியில் எத்தனை தபால் வாக்குகள் உள்ளன ? அதில் எத்தனை வாக்குகள் பதிவாகின ? வேறு தொகுதிக்கு எத்தனை வாக்குகள் சென்றன ? என்று தேர்தல் ஆணையம் விசாரணை செய்ய வேண்டும். தபால் வாக்குகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது எடுக்கப்பட்ட காணொலி காட்சிகள் அனைத்தையும் பாதுகாப்பாக வைக்க வேண்டும்" என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 19-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

திங்கள், 11 மே, 2026

ஒரு வாக்கில் தோல்வி: தி.மு.க வேட்பாளர் பெரிய கருப்பன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு !!!

ஒரு வாக்கில் தோல்வி: தி.மு.க வேட்பாளர் பெரிய கருப்பன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு !!!

 ஒரு வாக்கில் தோல்வி: தி.மு.க வேட்பாளர் பெரிய கருப்பன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு !!!

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற த.வெ.க வேட்பாளருக்கு எதிராக தி.மு.க முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்து உள்ளது.

நடந்து முடிந்த 17- வது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி, 83,375 வாக்குகளைப் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பெரிய கருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

இந்த நிலையில், திருப்பத்தூர் தொகுதியில் பதிவான தபால் வாக்கு ஒன்று வேலூர் அருகே உள்ள திருப்பத்தூர் தொகுதி எண் 50-க்கு தவறுதலாக சென்று விட்டது. அந்த வாக்கை சிவகங்கை அருகே உள்ள திருப்பத்தூர் மாவட்ட தொகுதி 185-ல் சேர்க்க வேண்டும் என தி.மு.க வேட்பாளர் பெரிய கருப்பன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தார்.

புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததால் தபால் வாக்குகளை மீட்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை தொடர்பான காணொளி காட்சிகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று (மே 10) விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து இருந்தது.

இதை அடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் எல்.விக்டோரியா கெளரி, என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மே 11) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "தபால் வாக்கு மாற்றப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் தெளிவாகப் பதிலளிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் அலட்சியத்தால் ஒருவரின் வெற்றி பறிக்கப்பட்டு உள்ளது. அதற்கு தேர்தல் ஆணையம் தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

ஞாயிறு, 10 மே, 2026

திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த விஜய் !!!

திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த விஜய் !!!

 திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த விஜய் !!!

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்தார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று (மே 10) காலை 10.00 மணிக்கு நடந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாட்டின் 13-வது முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து, என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், சி.டி.நிர்மல்குமார் உள்பட 9 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக, வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம், பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கம், போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுக்க, போதைப்பொருட்கள் தடுப்புப்படை அலகுகள் உருவாக்கம் ஆகிய மூன்று கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.

அதைத் தொடர்ந்து விழா மேடையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், "தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவேன். உடனே எல்லாம் கிடைக்கும் என்று நினைத்துவிட வேண்டாம்; கொஞ்சம் காலம் அவகாசம் கொடுங்கள். பெண்கள் பாதுகாப்புக்கும், போதைப்பொருள் கலாச்சாரத்திற்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுப்பேன்" என்று உறுதிப்பட தெரிவித்து உள்ளார்.

பின்னர் சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதையை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் அறைக்கு சென்று இருக்கையில் அமர்ந்து முறைப்படி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அரசுத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நிலையில் ஏதேனும் ஒரு தொகுதியில் மட்டுமே எம்எல்ஏ இருக்க முடியும் என்பதால் விஜய், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

இதற்கான கடிதத்தை சட்டப்பேரவையின் செயலாளர் சீனிவாசனிடம் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கடரமணன் ஆகியோர் வழங்கினர். இதை அடுத்து, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து ஆறு மாத காலத்திற்குள் அந்த தொகுதியில் இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் இடையே, முதலமைச்சராகப் பொறுப்பேற்று உள்ள விஜய்க்கு இலங்கை அதிபர் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றன.

திருப்பத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !!!

திருப்பத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !!!

 திருப்பத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !!!

தபால் வாக்குகள் மாறி உள்ளதாக தகவல்கள் கிடைத்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? என தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பெரிய கருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி, எம்.எல்.ஏ வாகப் பதவியேற்கத் தடை விதிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், "திருப்பத்தூர் தொகுதிக்கான தபால் வாக்குகள் சிவகங்கை மாவட்டத்தில் பதிவாகி இருப்பதால் அவற்றை மீட்டு பாதுகாக்க வேண்டும். மீட்கப்படும் தபால் வாக்குகளை திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் கணக்கில் சேர்க்க உத்தரவிட வேண்டும்; வாக்குகள் மறுசரிபார்க்கப்பட்ட நிலையில் அது தொடர்பான காணொளி காட்சிகளைப் பாதுகாக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விக்டோரியா கெளரி, செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெரியகருப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, "இது ஒரு விசித்திரமான வழக்காகும். திருப்பத்தூர் தொகுதியில் இருந்த 1 தபால் வாக்குப் பெட்டி சிவகங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கேட்கப்பட்டதற்கும் சரியான பதில் அளிக்கவில்லை. தேர்தல் ஆணையத்துக்கும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த தவறால் தொடர்ந்து வெற்றி பெற்ற பெரியகருப்பனின் எதிர்காலம் மாறி உள்ளது. குறிப்பிட்ட வாக்குப் பெட்டியில் 100 வாக்குகளும் இருந்து இருக்கலாம். 1,000 வாக்குகளும் கூட இருக்கலாம். அதனால், திரும்ப மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டால் நிச்சயம் முடிவு மாறும் என நம்புகிறோம்.

தவறு நடைபெற்று உள்ள இந்த நேரத்தில் த.வெ.க வேட்பாளரை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்போகிறா? என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். தவறான நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தால் கடுமையான அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்யலாம். ஒவ்வொரு வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதும் அதில் யாருக்கு வாக்களிக்கப்பட்டது என தேர்தல் அதிகாரி அறிவிக்க வேண்டும். ஆனால், தேர்தல் அதிகாரி தெரிவிக்கவில்லை. திருப்பத்தூர் தொகுதியில் மொத்தமாக 2,275 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்குகள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. 

மொத்த வாக்குகள் எண்ணிக்கையில் தபால் வாக்குகள் சேர்க்கும் போது மறுபாடு ஏற்படுகிறது" என்று வாதிட்டார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிங்வி, "அவசர வழக்கு என்ற போர்வையில் தேர்தல் வழக்கை பெரிய கருப்பன் தாக்கல் செய்து உள்ளார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. தேர்தல் வழக்குகளை தனி நீதிபதி மட்டுமே விசாரிக்க முடியும் என்ற விதி உள்ளது. தேர்தல் முடிந்து 2 நாட்களுக்கு பின்பு தான் பெரிய கருப்பன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

புகார் குறித்து தேர்தல் ஆணையம் தான் விசாரணை நடத்த வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரி, பெரிய கருப்பன் கோரிக்கை நிராகரித்த நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளதால் வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை" என்று வாதிட்டார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தருண், "ஒரு வாக்கு மாறி இருந்ததாக பெரிய கருப்பன் கூறுவது உண்மையாக இருந்தாலும், தேர்தல் வழக்கு தான் தொடர முடியும். அவசர வழக்கில் நிவாரணம் தேட முடியாது. பெரிய கருப்பனின் கோரிக்கையை ஏற்பதா ? வேண்டாமா ? என்பது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி தான் இறுதி முடிவு செய்வார். அவரது முடிவே இறுதியானது. சுமார் 338 தபால் வாக்குகள் செல்லாத வாக்குகளாக பதிவாகி உள்ளது. ஒரே பெயரில் இரு தொகுதிகள் இருந்தாலும், தொகுதிக்கான எண் அடிப்படையில் வாக்காளர்கள் பிரிக்கப்பட்டு தபால் வாக்குகள் பெறப்படும்.

தொகுதிக்கான எண், தொகுதியின் பெயர், அது எந்த மாவட்டத்தில் உள்ளது என சரி பார்க்கப்பட்ட பின்னரே தபால் வாக்குகள் ஏற்கப்படும் என்பதால் மாறுவதற்கு வாய்ப்பில்லை. சிறு தவறுகள் கூட ஏற்பட வாய்ப்பில்லை. வேறு தொகுதியில் ஒரு வாக்காளர் இருந்தாலும், அவர்களுக்கு உதவி செய்ய சேவை மையம் தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. தபால் மூலம் அனுப்பப்படும் போது, அது எந்த மாவட்டத்தை சேர்ந்தது என பின்கோடு முறை மூலம் தபால் துறையால் பிரித்து அனுப்பப்பட்டது" என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "தேர்தல் ஆணையத்தில் ஒருவர் புகார் அளித்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன் ? தற்போது தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்க முடியாது. ஒரு தொகுதியில் இருந்த வாக்குகள் அதே பெயரில் உள்ள மற்றொரு தொகுதிக்கு சென்று உள்ளது என தகவல் கிடைத்தும் ஏன் ?தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரிக்கவில்லை ?" என்று கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கு தொடர்பாக நாளை (மே 11) தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசார்ணையை ஒத்தி வைத்தனர்.

வெள்ளி, 1 மே, 2026

வாக்கு எண்ணிக்கை நாளில் கூடுதல் கவனம் தேவை; திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் !!!

வாக்கு எண்ணிக்கை நாளில் கூடுதல் கவனம் தேவை; திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் !!!

 வாக்கு எண்ணிக்கை நாளில் கூடுதல் கவனம் தேவை; தி.மு.க நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் !!!

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என தி.மு.க நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப். 23 ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக, தமிழ்நாடு முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் செலுத்திய வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், தமிழ்நாடே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தி.மு.க விற்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட செயலாளருடன் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிடும் தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடையும் வரை கூடுதல் கவனம் செலுத்தி, உன்னிப்பாக கவனிக்க வேண்டும் எனவும் தி.மு.க நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல, எந்த வித குளறுபடியும் நடந்து விடக் கூடாது, நமது பார்வையில் இருந்து எந்த விசயமும் தவறாமல் பார்வையிட வேண்டும் எனவும் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதைத் தொடர்ந்து, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர்கள் பலர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்று உள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ. வேலு, கே.ஆர். பெரியகருப்பன், சு.முத்துசாமி, சி.வீ. மெய்யநாதன், சி.வி. கணேசன், செந்தில் பாலாஜி, அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தி.மு.க துணை அமைப்புச் செயலாளர் எஸ். ஆஸ்டின், டி.ஜெ. கோவிந்தராஜன், சபா. இராஜேந்திரன், நாமக்கல் இராணி, காதர்பாட்சா முத்துராமலிங்கம், கே.எஸ். மூர்த்தி, ரெ. மகேஷ், ஆ. தமிழரசி, எஸ்.ஏ. சத்யா, மு.மணிகண்டன், புதுச்சேரி ஆர். சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் தி.மு.க மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் பூச்சிமுருகன் ஆகியோர் உடன் இருந்தார்.

மே 4-ம் தேதி நாடே வியக்கும் அளவிற்கு விசில் சத்தம் கேட்கும் - செங்கோட்டையன் பேட்டி !!!

மே 4-ம் தேதி நாடே வியக்கும் அளவிற்கு விசில் சத்தம் கேட்கும் - செங்கோட்டையன் பேட்டி !!!

 மே 4-ம் தேதி நாடே வியக்கும் அளவிற்கு விசில் சத்தம் கேட்கும் - செங்கோட்டையன் பேட்டி !!!

மே 4 ஆம் தேதி நாடே வியக்கும் அளவிற்கு விசில் சத்தம் இருக்கும் என்று தவெக உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கடந்த 23 ஆம் தேதி சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் 85.15% வாக்குகள் பதிவாகி உள்ளன. தமிழக தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக அதிகப்படியான வாக்குகள் பதிவாகி இருப்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பானது மிகவும் அதிகமாக இருக்கிறது.

எப்போதும் தேர்தல் நடந்து முடிந்த நாளன்றே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பானது வெளியாகி விடும். ஆனால் இம்முறை மேற்கு வங்க சட்டப் பேரவை தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவானது. நேற்று முன் தினம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது.

பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, தமிழ்நாட்டில் இந்த முறையும் தி.மு.க கூட்டணி தான் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி, ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது. அதே சமயம் ஒரு சில கருத்துக்கணிப்புகள் முதன்முறையாக தேர்தல் களம் கண்ட த.வெ.க அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்று கூறியிருக்கின்றன.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக உயர்மட்ட நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், மே 4 ஆம் தேதி இந்தியாவே வியக்கும் அளவிற்கு விசில் சத்தம் கேட்கும் என்று கூறியிருக்கிறார்.

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை சென்ற அவரிடம், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், தமிழகத்தில் விசில் சத்தம் ஓரளவுக்குத் தான் இருக்கிறது என தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “விசில் சத்தம் இந்தியாவே வியக்கத்தக்க அளவிற்கு இருக்கும். இது ஒரு மிராக்கிள். உலக வரலாற்றில் இது போன்று விசில் சத்தம் கேட்க இருப்பது இதுவே முதல் முறையாகும். விசில் சத்தத்தை 4 ஆம் தேதி பாருங்கள்” என்றார்.

விசில் சத்தம் பாம் சத்தம் போன்று இருப்பதாக சிலர் கூறுகிறார்களே என்று கேட்டதற்கு, “சிலருக்கு பாம் வைத்தே பழக்கம். நக்சைலைட் ஏரியாவில்” என்று சிரித்துக் கொண்டே சென்றார்.

வியாழன், 30 ஏப்ரல், 2026

தமிழகத்தில் மீண்டும் தி.மு.க ஆட்சி; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது !!!

தமிழகத்தில் மீண்டும் தி.மு.க ஆட்சி; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது !!!

 தமிழகத்தில் மீண்டும் தி.மு.க ஆட்சி; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது !!!


தமிழகத்தில் மீண்டும் தி.மு.க கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்து உள்ளன.

தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நிறைவடைந்து உள்ளது. இன்று மேற்கு வங்கத்தில் இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு முடிவு அடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கடந்த 23-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 85.15% வாக்குகள் பதிவாகின. தமிழக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அதிகப்படியான வாக்குகள் பதிவானதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், தி.மு.க கூட்டணி பெரும்பான்மை இடங்களை வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.

பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு உள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, த.வெ.க கைப்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை விவரம்:

NDTV : தி.மு.க கூட்டணி 125-145, அ.தி.மு.க கூட்டணி 65-80, த.வெ.க 18-24

PEOPLE INSIGHT: தி.மு.க 120-140, அ.தி.மு.க 60-70, த.வெ.க 30-40

MATRIZE: தி.மு.க 122-132, அ.தி.மு.க 87-100, த.வெ.க 12-16

AGNI: தி.மு.க 169, அ.தி.மு.க 64, த.வெ.க 1

REPUBLIC: தி.மு.க 125-145, அ.தி.மு.க 65-85, த.வெ.க 16-26

CNN NEWS 18: தி.மு.க 103-113, அ.தி.மு.க 114-124 , த.வெ.க 04-10

TIMES NOW: தி.மு.க 75-95, அ.தி.மு.க 128-147, த.வெ.க 08-15

INDIA TODAY: தி.மு.க 92 -110, அ.தி.மு.க 22-32, த.வெ.க 98 -120

வாக்கு எண்ணும் மையங்களில் குழப்பம் ஏற்படுத்த தி.மு.க திட்டம்: த.வெ.க நிர்மல் குமார் பகிரங்க குற்றச்சாட்டு !!!

வாக்கு எண்ணும் மையங்களில் குழப்பம் ஏற்படுத்த தி.மு.க திட்டம்: த.வெ.க நிர்மல் குமார் பகிரங்க குற்றச்சாட்டு !!!

 வாக்கு எண்ணும் மையங்களில் குழப்பம் ஏற்படுத்த தி.மு.க திட்டம்: த.வெ.க நிர்மல் குமார் பகிரங்க குற்றச்சாட்டு !!!

வாக்கு எண்ணும் மையங்களிலும் தி.மு.க வினர் தகராறு செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக த.வெ.க இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்து உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி சிவஞானம் ஆகியோரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கினார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் மே 4 ம் தேதி நடைபெறுகிறது. வாக்குப் பதிவு நடைபெறும் அனைத்து இடங்களிலும் கூடுதல் பாதுகாப்பு செய்துத் தர வேண்டுமென தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து கோரிக்கை விடுத்து உள்ளோம். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை செலுத்தி உள்ளனர். இந்த தபால் வாக்குகள் முறையாக எண்ணப்பட வேண்டும். அனைத்து தபால் வாக்குகளும் ஸ்கேனிங் செய்யப்பட்டு தபால் வாக்குகளின் ரெக்கார்டுகளை பராமரிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளோம்.

தபால் வாக்குகள் முழுவதுமாக காட்சி பதிவு செய்து எங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை கொடுத்து உள்ளோம். வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் தி.மு.க வினர் தகராறுகளை செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. ஆகையால் வாக்கு என்னும் மையங்களில் மத்திய காவல் படையினர் மூலம் கூடுதல் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளோம்.

தபால் வாக்குகள் முழுவதுமாக ஸ்கேன் செய்து, அவை முழுவதுமாக எண்ணப்பட்ட பிறகே கடைசி இரண்டு சுற்று மின்னணு வாக்குப் பதிவு எண்ணிக்கை நிறைவடைய வேண்டும். இதுகுறித்து அனைத்து ஆர்.ஓ. அதிகாரிகளுக்கும் சர்குலர் அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளோம். பல இடங்களில் தபால் வாக்குகளை இறுதியாக எண்ணுவதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது. சட்டப்படி இதற்கு அனுமதி இல்லை. ஆகையால் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க வினர் எந்த சூழ்ச்சியையும், குளறுபடிகளையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனை தடுப்பதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என கடிதம் வழங்கி உள்ளோம்" என்று நிர்மல் குமார் தெரிவித்தார்.

புதன், 29 ஏப்ரல், 2026

சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்: தமிழிசை நம்பிக்கை !!!

சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்: தமிழிசை நம்பிக்கை !!!

 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்: தமிழிசை நம்பிக்கை !!!

சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்து உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

 "தேர்தல் பணிகள் சிறப்பாக நடந்தது முடிவுக்காக காத்து இருக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. மாற்றத்திற்காக மக்கள் வாக்களித்து உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் சாதனை, சாதனை என ட்வீட் செய்து வருகிறார்.

ஆனால் மக்கள் வேதனை, வேதனை எனக் கூறி வருகின்றனர். இன்று கரூர் அருகே நகைக்காக மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பெண்களின் பாதுகாப்பு அனைத்தும் கேள்விக்குறியாக இருந்து கொண்டு இருக்கிறது. மக்களுக்கு சுதந்திரம்,பாதுகாப்பு கிடைக்க வேண்டும்" என்றார்.

முதல்வர் ஸ்டாலின் பொருளாதார வளர்ச்சி குறித்து ட்வீட் செய்து உள்ளார். ஆனால் இந்த பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசு கொண்டு வந்து உள்ள அடிப்படை வசதிகள் சேர்ந்து தான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் விமான நிலையம், துறைமுகம், சாலைகளை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முதலீடுகளை செய்து உள்ளது.

ஏற்கனவே தி.மு.க ஆட்சி செய்த போது எவ்வளவு இலக்கை இங்கு கொண்டு வந்தீர்களா ? என்பதை சிந்திக்க வேண்டும். தி.மு.க அரசு வாங்கிய கடன் குறித்து ஏன் பேசவில்லை. வருடத்திற்கு 1.5 லட்சம் கோடி கடனை வாங்கி விட்டு பொருளாதார வளர்ச்சியில் தெற்காசியாவுடன் போட்டி போடுகிறேன் என கூறினால் எப்படி ? மற்ற மாநிலங்களும் வளர்ந்து வருகிறது. அதை புறந்தள்ளி விட்டு செல்வது பொய்யான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும்" என்றார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் ஒரு நல்ல நடிகராக இருக்கலாம். ஆனால் குழந்தைகளை அவரின் பெற்றோரிடம் அடம் பிடித்து வாக்களிக்க வேண்டும் என கூறுவதெல்லாம் தவறு. குழந்தைகளை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்பது ஒரு விதியாக இருக்கும் பொழுது அவர் கூறியது குழந்தைகள் மனதில் ஒரு தவறான கருத்தை விதைக்கும். குழந்தைகள் படிக்க வேண்டும், அவர்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும். தனது பேச்சால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை தம்பி விஜய் உணர வேண்டும். இது அனைத்தும் சுயநல அரசியலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறதோ என பயமாக இருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் தேர்தலுக்கு முன்னால் நான் எந்த அடையாளத்தையும் காண்பிக்க மாட்டேன் என்று கூறி இருந்தார். ஆனால், தேர்தலுக்கு பிறகு சில அடையாளங்களை காண்பிக்கிறார். மற்றவர்களை சாமி கும்பிட வைத்து அதன் பலனை அனுபவிக்கலாம் என்று நினைக்காமல், விஜய் நேரடியாக சாமி கும்பிடுகிறார். அதை அந்த வகையில் நான் அவரை பாராட்டுகிறேன். தற்போது விஜய் ஆன்மீக தேடலுக்கு செல்கிறார். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு திரைப்பட சூட்டிங் இருக்கு இடம் தேட போவாரா ? என்பது சந்தேகமாக உள்ளது" என்றார்.

செவ்வாய், 28 ஏப்ரல், 2026

தமிழகம் முழுவதும் உள்ள 62 மையங்களிலும் மே 4 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை !!!

தமிழகம் முழுவதும் உள்ள 62 மையங்களிலும் மே 4 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை !!!

 தமிழகம் முழுவதும் உள்ள 62 மையங்களிலும் மே 4 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை !!!

தமிழகம் முழு​வதும் உள்ள 62 வாக்கு எண்ணும் மையங்​களில் வாக்கு எண்​ணும் பணி மே 4-ம் தேதி காலை 8 மணிக்​குத் தொடங்​கும். தபால் வாக்​கு​கள் எண்ணி முடிக்​கப்​பட்ட பிறகே, மின்​னணு இயந்திரங்​களில் இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இத்​தேர்தலில் மொத்​தம் 8.15 லட்​சம் பேர் தபால் வாக்கு செலுத்​தி​ உள்​ளனர் என்று தலை​மைத் தேர்தல் அதி​காரி அர்ச்சனா பட்​நாயக் தெரிவித்​து உள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்​ட​மாக கடந்த 23-ம் தேதி நடை​பெற்​றது. அரசி​யல் கட்சி வேட்பாளர்​கள், சுயேச்சைகள் என மொத்தம் 4,023 வேட்பாளர்​கள் போட்டியிட்​டு உள்​ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்​கத் தகுதி பெற்​றிருந்த நிலை​யில், 4.88 கோடி வாக்​காளர்​கள் (85.10 சதவீதம்) வாக்களித்​தனர்.

தமிழக தேர்​தல் வரலாற்​றில் கடந்த 2011 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பதிவான 78 சதவீத வாக்குப்​ ப​திவு​ தான் அதிகபட்​ச​மாக இருந்​தது. இந்த நிலை​யில், சிறப்பு தீவிர திருத்த (எஸ்​ஐஆர்) பணி​யின்​ போது, உயிரிழந்​தவர்​கள், முகவரி மாறிய​வர்​கள், இரட்​டைப் பதிவு உள்ளவர்​களின் பெயர்கள் வாக்​காளர் பட்டியலில் இருந்து நீக்கப்​பட்​டதை தொடர்ந்து, தமிழகத்​தில் வாக்​குப்​ப​திவு 85 சதவீதத்தை தாண்டி சாதனை படைத்​தது.

அதி​கபட்​ச​மாக கரூரில் 93.41 சதவீத​மும், வீரபாண்​டி​யில் 93.36 சதவீத​மும் வாக்​கு​கள் பதி​வாகின. 45 தொகுதிகளில் 90 சதவீதத்​துக்கு மேல், 151 தொகு​தி​களில் 80 சதவீதத்​துக்கு மேல், 37 தொகு​தி​களில் 70 சதவீதத்​துக்கு மேல் வாக்கு​கள் பதி​வாகி​ உள்ளன. பாளையங்கோட்டை தொகு​தி​யில் மட்​டுமே வாக்​குப்​ ப​திவு 70 சதவீதத்​தை​ விட குறைவாக (68.97 சதவீதம்) பதி​வானது.

இத்​தேர்​தலில் 75,064 வாக்​குச்​சாவடிகளில் 1.06 லட்​சம் வாக்​குப்​ பதிவு இயந்​திரங்​கள், தலா 75,064 கட்​டுப்​பாட்டு இயந்திரங்​கள் மற்​றும் விவி​பாடி இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. 23-ம் தேதி மாலை 6 மணிக்கு வாக்​குப்​ப​திவு முடிந்​ததும், மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்திரங்​கள் அனைத்தும் சீலிடப்​பட்​டு, தமிழகம் முழு​வதும் வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்ள 62 மையங்​களில் பாதுகாப்பாக வைக்கப்பட்​டு உள்​ளன.

இங்கு 4 அடுக்கு போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டு உள்​ளது. தேர்​தல் நடத்தும் அலு​வலர்​கள் தின​மும் 2 முறை​யும், மாவட்​டத் தேர்​தல் அதிகாரி​கள் ஒரு​முறையும் நேரில் பார்வை​யிட வேண்​டும் என தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டு உள்​ளது. சி.சி.டி.வி மூல​மாக​வும் பாது​காப்பு அறை​கள் 24 மணி நேர​மும் தொடர்ந்து கண்​காணிக்​கப்​படு​கின்​றன. சென்​னை​யில் உள்ள தலை​மைத் தேர்தல் அதி​காரி அலுவல​கத்​தில் இருந்தும் கேமரா காட்​சிப் பதிவு​கள் தொடர்ந்து கண்​காணிக்​கப்​பட்டு வருகின்றன.

இந்​நிலை​யில், மே 4-ம் தேதி நடை​பெற உள்ள வாக்கு எண்​ணும் பணி தொடர்​பாக தமிழக தலைமைத் தேர்​தல் அதிகாரி அர்ச்​சனா பட்​நாயக் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: 

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பணி​யில் ஈடுபடுத்​தப்​பட்ட மொத்தம் 3.60 லட்​சம் அலு​வலர்​களில், வாக்காளர்​களாக பதிவு செய்​து, வாக்​களிக்க விண்​ணப்​பித்த 2.88 லட்சம் அலு​வலர்​கள் (80%) தபால் வாக்குகளைப் பதிவு செய்​து உள்​ளனர்.

தேர்​தல் பணிக்​காக நியமிக்​கப்​பட்ட காவல் துறை சார்ந்த அலுவலர்கள், மற்ற தேர்தல் பிரிவு​களில் பணி புரிந்த அலுவலர்கள், தேர்​தல் கண்​காணிப்பு குழுக்களில் பணியாற்றிய அலுவலர்களும் சேர்த்து மொத்​தம் 3.36 லட்​சம் பேர் தபால் வாக்​கு​களாக​வும், 1.10 லட்​சம் அலு​வலர்​கள் தேர்​தல் பணி சான்​றிதழ் பெற்று நேரடி​யாக வாக்குச்​ சாவடி​யிலும் வாக்​களித்​து உள்​ளனர்.

படிவம் 12 - டி விண்ணப்பத்​தின் அடிப்படை​யில், மாற்​றுத் திற​னாளி​கள், 85 வயதுக்கு மேற்​பட்ட முதிய​வர்​கள் என மொத்தம் 1.73 லட்​சம் வாக்​காளர்​கள் தபால் வாக்கு பெற்று வாக்களித்​து உள்​ளனர். இதுத​விர, ராணுவத்தினர், பாதுகாப்பு படை​யினர் உள்​ளிட்ட சேவைத் துறையில் உள்ள 18 ஆயிரம் பேர் வாக்களித்து உள்​ளனர். இவர்​களது தபால் வாக்குகள் மே 4-ம் தேதி காலை 8 மணி வரை பெறப்​படும். அந்த வகையில், மொத்​தம் 8.15 லட்​சம் பேர் தபால் வாக்​கு​களை பதிவு செய்​து உள்ளனர்.

இந்​நிலை​யில், வாக்கு எண்​ணும் பணி மே 4-ம் தேதி, மாநிலம் முழு​வதும் உள்ள 62 வாக்கு எண்​ணும் மையங்​களில் சரி​யாக காலை 8 மணிக்கு தொடங்​கும்.

ஒவ்​வொரு மையத்​தி​லும் ஒரு பகு​தி​யில் தபால் வாக்​கு​களும், மற்​றொரு பகு​தி​யில், வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் பதிவான வாக்​கு​களும் அதற்​குரிய மேஜைகளில் எண்​ணப்​படும். இதை மேற்​பார்​வை​யிட உதவி தேர்​தல் நடத்​தும் அலுவலர் நிலை​யில் அதி​காரி​கள் தனித்​தனியே நியமிக்கப்படுவார்​கள். ஒரு மேஜைக்கு 500 வாக்கு​கள் என்ற விகிதத்தில் தபால் வாக்கு​கள் எண்​ணப்​படும்.

முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்​ணும் பணி தொடங்​கும். மின்னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் பதிவான வாக்​கு​கள் எண்​ணும் பணி காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடை​பெறும். எனினும், இதன் கடைசி சுற்​று வாக்​கு எண்​ணும்​ பணி, தபால்​ வாக்​கு​கள்​ எண்​ணி முடிக்​கப்​பட்​ட பிறகு​ தான்​ தொடங்​கும்​. இவ்​வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அரசியல் நோக்கங்களுக்கு குழந்தைகள் பயன்படுத்தப்படுவதற்கு கண்டனம்- தேர்தல் ஆணையத்திடம் புகார் !!!

அரசியல் நோக்கங்களுக்கு குழந்தைகள் பயன்படுத்தப்படுவதற்கு கண்டனம்- தேர்தல் ஆணையத்திடம் புகார் !!!

 அரசியல் நோக்கங்களுக்கு குழந்தைகள் பயன்படுத்தப்படுவதற்கு கண்டனம்- தேர்தல் ஆணையத்திடம் புகார் !!!

குழந்தைகளை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவதை கண்டித்து தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் என்ற தன்னா்வ அமைப்பு புகார் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தேர்தல் சூழலில் குழந்தைகள் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவது குறித்து மிகுந்த கவலை மற்றும் கடும் எதிர்ப்பை தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் பதிவு செய்கிறது.

சமீப காலமாக சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோக்களில் குழந்தைகள் தங்கள் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கும், அதன் சின்னத்திற்கும் வாக்களிக்குமாறு வற்புறுத்தும் காட்சிகள் வெளியாகி வருகின்றன.

அந்த வீடியோக்களில், குழந்தைகள் அழுவது, உணவு சாப்பிட மறுப்பது, பிடிவாதமாக நடப்பது, உணர்ச்சி ரீதியான அழுத்தம் கொடுப்பது போன்ற செயல்பாடுகள் தென்படுகின்றன.

அந்த வீடியோக்களில் மிகவும் கவலைக்கிடமான, ஆபத்தான கூறுகள் வெளிப்படுகின்றன. அதாவது, குடும்பத்தினருக்கு தீங்கு விளைவிப்பதாக மிரட்டும் பேச்சுகள், குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும் வகையிலான தூண்டல்கள், குடும்ப அமைதியை சீர்குலைக்கும் அளவிற்கு உணர்ச்சி கட்டுப்பாடின்மை போன்றவை காணப்படுகின்றன. இந்த நிலைமை குழந்தைகளின் மனநலம், பாதுகாப்பு மற்றும் சமூக வளர்ச்சிக்கு நேரடியான அச்சுறுத்தலாகும்.

இது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு குழந்தை உரிமை கண்காணிப்பகம் புகார் அளித்து உள்ளது. அதில், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டு உள்ளது என்றும், குழந்தைகள் மூலம் வாக்காளர்களை பாதிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, இதுதொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் கோரப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது.

மேலும், கட்சித் தலைவர் சி.ஜோசப் விஜய்க்கு கண்டனக் கடிதமும் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், குழந்தைகளை உணர்ச்சி ரீதியாக பயன்படுத்துவதற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

அவருடைய கட்சி நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் குழந்தைகளை பயன்படுத்தி வீடியோக்கள் உருவாக்குவதை நிறுத்த வேண்டும் என்றும், எமோஷனல் பிளாக் மெயில் கொண்ட ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் வீடியோக்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஏற்கனவே உள்ள வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த செயல்பாடுகள் சிறார் நீதி சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு மன அழுத்தும் ஏற்படுத்துதல் மற்றும் குழந்தைகளை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்துதல் ஆகிய குற்றங்களாக கருதப்படக் கூடியவை.

எனவே, ஊடகங்கள், சமூக ஊடகப் பயனர்கள், சமூக அமைப்புகள் தங்கள் சுற்றுப்புறங்களில் நடைபெறும் குழந்தைகள் மீதான தவறான செயல்பாடுகளை கவனமாக கண்காணிக்க வேண்டும்.

குழந்தைகள் உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரியவந்தால் உடனடியாக 1098 என்ற அவசர உதவி எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதன் மூலம், குழந்தைகளுக்கு உடனடி ஆலோசனை வழங்க முடியும். மன ரீதியாக ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்களை அளிக்க முடியும். குடும்ப சூழலில் உருவாகும் பதற்றத்தையும் குறைக்க முடியும்.


குழந்தைகள் அரசியல் கருவிகள் அல்ல. குழந்தைகளின் மனநலம் மற்றும் பாதுகாப்பு எந்த அரசியல் இலக்கிற்கும் மேலானது. சமூகமே இணைந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சியை காப்பது ஒட்டு மொத்த சமூகத்தின் பொறுப்பாகும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வாணியம்பாடியில் தேர்தலின் போது மோதல்: த.வெ.க வேட்பாளர், தி.மு.க வினர் மீது வழக்குப் பதிவு !!!

வாணியம்பாடியில் தேர்தலின் போது மோதல்: த.வெ.க வேட்பாளர், தி.மு.க வினர் மீது வழக்குப் பதிவு !!!

 வாணியம்பாடியில் தேர்தலின் போது மோதல்: த.வெ.க வேட்பாளர், தி.மு.க வினர் மீது வழக்குப் பதிவு !!!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க வினருக்கும் த.வெ.க வினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, த.வெ.க வேட்பாளர் மற்றும் தி.மு.க வினர் மீது வாணியம்பாடி நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒரு சில இடங்களில் சிறுசிறு அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அன்றைய தினம், வாணியம்பாடியில் த.வெ.க வினருக்கும், தி.மு.க வினருக்கும் மோதல் ஏற்பட்டது.

வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட நூருல்லா பேட்டையில் உள்ள இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த 114-வது எண் வாக்குப் பதிவு மையத்திற்கு தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சையத் புரஹானுத்தீன் வந்து இருந்தார். அவருடன் தவெக நிர்வாகிகளும் வந்து இருந்தனர்.

அப்போது, வாக்குப் பதிவு மையத்திற்குள் செல்வது தொடர்பாக, வாக்குப் பதிவு மையத்தின் நுழைவு வாயிலில் இருந்த திமுகவினருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இரு தருப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கலைந்து போகச் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றி கழகத்தின் நகர செயலாளர் ஷேக் அஸ்லம் கொடுத்த புகாரின் பேரில், வாணியம்பாடி தி.மு.க நகர துணை செயலாளர் தென்னரசு உட்பட 10 பேர் மீது வாணியம்பாடி நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

அதேபோல், த.வெ.க வினர் தன்னை சாதி பெயரை சொல்லி திட்டியதாக வாணியம்பாடி தி.மு.க நகர துணை செயலாளர் தென்னரசு, வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சையத் புரஹானுத்தீன், தவெக நகர செயலாளர் ஷேக் அஸ்லம், தவெக மத்திய நகர செயலாளர் அபிஷேக் உட்பட 20 பேர் மீது சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வாணியம்பாடி நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

அரசு அலுவலகமே பாராக மாறிய அவலம்" – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் கோவையில் பரபரப்பு !!!

அரசு அலுவலகமே பாராக மாறிய அவலம்" – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் கோவையில் பரபரப்பு !!!

 கோவையில் அரசு அலுவலகத்தில் 'மது' விருந்து : பறக்கும் படை சோதனையில் மதுபானங்களுடன் சிக்கிய தி.மு.க வினர் - சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகும் வீடியோ !!!

"அரசு அலுவலகமே பாராக மாறிய அவலம்" – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் கோவையில் பரபரப்பு !!!

 கோயம்புத்தூர், துடியலூர் அருகே கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடிகரை பேரூராட்சி அலுவலக வளாகத்திற்குள், தேர்தல் விதிகளை மீறி தி.மு.க-வினர் மது விநியோகம் செய்த போது, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

 அரசு அலுவலகத்திலேயே இத்தகைய அத்துமீறல் நடந்து இருப்பது அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில், இடிகரை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் ஒன்று கூடி, வாக்காளர்களுக்கு கட்சிப் பணியாளர்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பெருமளவில் மதுபானங்களை வைத்து இருந்தனர் மேலும் அங்கு மது அருந்து கொண்டு இருந்து உள்ளனர். தேர்தல் பறக்கும் படைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், பேரூராட்சி அலுவலக வளாகத்திற்குள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மதுபான பாட்டில்களை அதிகாரிகள் கையும், களவுமாகப் பிடித்தனர்.

 அதிகாரிகளைக் கண்டதும் அங்கு இருந்த சிலர் தப்பியோடிய நிலையில், எஞ்சியவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு மதுபானங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தச் சோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. 

அரசு அலுவலக வளாகத்திலேயே மதுபானங்கள் பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டு இருப்பது.

அதிகாரிகள் மதுபானங்களைக் கைப்பற்றியது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.

வெள்ளி, 24 ஏப்ரல், 2026

நிறைமாத கர்ப்பிணியான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது தாக்குதல் - தஞ்சையில் பரபரப்பு !!!

நிறைமாத கர்ப்பிணியான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது தாக்குதல் - தஞ்சையில் பரபரப்பு !!!

 நிறைமாத கர்ப்பிணியான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது தாக்குதல் - தஞ்சையில் பரபரப்பு !!!

வாக்குப் பதிவை பார்வையிட சென்ற போது, நிறைமாத கர்ப்பிணியான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பாபநாசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - 2026 நேற்று (ஏப்ரல் 23) மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் நடந்து முடிந்து உள்ளது. அத்துடன் வாக்குப் பதிவில் தமிழ்நாடு வரலாற்றுச் சாதனையையும் படைத்து உள்ளது. தமிழ்நாட்டில் 85.15% வாக்குகள் பதிவாகி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அனீஸ் பாத்திமா (வயது 25) போட்டியிடுகிறார். நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று காலை முதல் தனது தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சென்று வாக்குப் பதிவு நிலவரத்தை கண்காணித்தும், கேட்டறிந்தும் வந்தார்.

அந்த வகையில், நேற்று மாலையில் அம்மாப்பேட்டை அருகே உக்கடை என்ற கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு நடைபெற்றதை பார்வையிடுவதற்காக நேரில் சென்றிந்தார். அப்போது வாக்குப் பதிவு மையத்தில் இருந்த சிலர் அனீஸ் பாத்திமாவை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அத்துடன் அவரை கீழே தள்ளி விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதில் மயக்கம் அடைந்த வேட்பாளர் அனீஸ் பாத்திமாவை அங்கு இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தகவலை அறிந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனீஸ் பாத்திமாவின் கணவர் ஷேக் அம்சத் அலி கூறுகையில், "பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளருடன் தொகுதி முழுவதும் சென்று வாக்குப் பதிவு நிலவரத்தைப் பார்வையிட்டு வந்தோம். அப்படி உக்கடையில் உள்ள வாக்குப் பதிவை பார்வையிட சென்ற போது, துண்டு அணிந்து வரக் கூடாது என காவல் துறையினர் தெரிவித்தனர்.

அதனால் துண்டுகளைக் கழற்றிவிட்டு உள்ளே சென்றோம். அங்கு தி.மு.க கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் சின்னமான ஏணி சின்னம் பொறித்த பேட்ஜ் அணிந்து கொண்டு வாக்குப் பதிவு மையத்தில் சிலர் அமர்ந்து இருந்தனர்.

அப்போது அங்கு இருந்த போலீசாரிடம் எங்களை மட்டும் துண்டு அணிந்து வரக் கூடாது என்று கூறினீர்கள். ஆனால் இங்கு ஏணி சின்னம் பேட்ஜ் அணிந்து உள்ளனர் எனக் கேட்ட போது, அங்கு இருந்தவர்கள் எங்களை தரக்குறைவாக பேசினர். அப்போது தலையிட்ட போலீசார், இது தொடர்பாக புகார் ஏதும் கொடுப்பதாக இருந்தால் புகார் மனு எழுதித்தாருங்கள் என்று கூறினர்.

அதே நேரத்தில் நாங்கள் புகார் மனு எழுத முயன்ற போது, அங்கு இருந்த பலர் எனது மனைவியை கீழே தள்ளி விட்டு செங்கற்களால் தாக்கினர். இதில் நிலைகுலைந்து போன எனது மனைவி மயக்கம் அடைந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளோம். தற்போது, தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.