நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு !!!
முதுபெரும் அரசியல் தலைவா் நல்லகண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் இன்று (பிப். 24) தெரிவித்து உள்ளார்.
வயோதிகம் மற்றும் கீழே விழுந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக அவ்வப் போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நல்லகண்ணுவின் உடல்நிலையில் கடந்த சில நாள்களாக பின்னடைவு ஏற்பட்டது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்துறை மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சை அளித்து வருகின்றனா்.
அவரின் உடல்நிலை கடந்த இரண்டு நாள்களாக பின்னடைவை சந்தித்து வருவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை இரவு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தார்.
இந்த நிலையில், மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மு.வீரபாண்டியன், நல்லகண்ணு உடல்நிலை தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருவதாக தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:
”மருத்துவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், நல்லகண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருகின்றது. மருத்துவர்கள் அருகில் இருந்து ஒவ்வொரு நொடியும் கவனித்து வருகிறார்கள்.
மருத்துவர்களின் அதிகாரப் பூர்வ அறிக்கைக்காக காத்து இருக்கிறோம். இயற்கை அவரிடம் மன்றாடிக் கொண்டு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

0 கருத்துகள்: