தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் 'எம்.ஜி.ஆர் அ.தி.மு.க' என்ற புதிய கட்சியைத் தொடங்கி உள்ளார் ...
பின்னர் 1977ல் அ.தி.மு.க வில் இணைந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அங்கு இருந்து பா.ம.க வுக்குச் சென்றார். பின்னர் மக்கள் நலவுரிமைக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய நிலையில் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது தனது கட்சியை கலைத்து விட்டு தே.மு.தி.க வில் இணைந்தார்.
தொடர்ந்து மீண்டும் அ.தி.மு.க வில் இணைந்த அவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஆதரவாளராகவும் பின்னர் ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராகவும் இருந்து உள்ளார். தற்போது தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்து ஓ.பி.எஸ் முடிவெடுக்காததாலும் ஓ.பி.எஸ் அணியின் செயல்பாடுகளில் கருத்து வேறுபாடு உள்ளதாலும் புதிய கட்சி தொடங்க உள்ளதாக பண்ருட்டி ராமச்சந்திரன் ஏற்கெனவே அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது அவரது 88 வயதில் 'எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கி உள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், தனது கட்சி தேர்தலில் போட்டியிடாது என்றும் ஒத்த கருத்துடையவர்களுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிப்போம் என்றும் கூறி உள்ளார்.
வரும் 23 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் கட்சியின் அறிமுக விழா நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளார்.
மேலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அத்தியாயம் முடிந்தது எனவும் ஓ.பி.எஸ்ஸுடன் பழகியதற்காக வாழ் நாளை வீணாக்க முடியாது எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

0 கருத்துகள்: