சனி, 21 பிப்ரவரி, 2026

கோயம்புத்தூர் விமான நிலையம் : பல்வேறு புதிய வசதிகளை - துவக்கி வைத்த மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் !!!

SHARE

 கோயம்புத்தூர் விமான நிலையத்தில் Udan Yatra Cafe உள்ளிட்ட பல்வேறு புதிய வசதிகளை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் துவக்கி வைத்தார் ....


கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நாள்தோறும் 30 விமானங்கள் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து டெல்லி சென்னை பெங்களூர் சார்ஜா சிங்கப்பூர் ஆகிய பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயனிலுக்கான வசதிகளை மேம்படுத்தும் விதமாக விமான நிலைய வளாகத்தில் புதிய வசதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. 

https://www.youtube.com/live/g7PINMeyz4Y?si=2UbClgObN-i8QEG6

.அதன் ஒரு பகுதியாக, Udan Yatra Cafe எனும் குறைந்த விலையிலான சிற்றுண்டி உணவகம், மகளிர் சுய உதவி குழுவின் சார்பில் புவிசார் குறியீடு பெற்ற கோவை கோரா காட்டன் ஆடை விற்பனை அங்காடி, பயணிகளின் குழந்தைகள் விளையாடுவதற்கான சிறிய விளையாட்டு பகுதி மற்றும் பயணிகளுக்கான லைப்ரரி வசதி ஆகியவற்றை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, மத்திய இணை அமைச்சர் முரளிதர் மோகல், மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மற்றும் விமான போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். 

முன்னதாக கோவை விமான நிலையம் வந்தடைந்த மத்திய அமைச்சரை கோவையைச் சேர்ந்த தொழில்துறையினர் நேரடியாக சந்தித்து விமான விரிவாக்க பணிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற துவக்க விழாவில் பேசிய வானதி சீனிவாசன் :

கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கு விமான நிலைய விரிவாக்க பணிகள் முக்கியமானது எனவும், இதனை தொழில் துறையினர் தொடர்ந்து மத்திய அமைச்சருக்கும் தெரிவித்து வந்ததாக குறிப்பிட்டார். இதனை ஏற்று விமான விரிவாக்க பணிகளை சிறப்பாக முன்னெடுத்து வரும் மத்திய அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், பிரதமரின் எண்ணங்களை விமான போக்குவரத்து துறையில் சிறப்பாக செயல்படுத்துவதற்காக இரண்டு இளைஞர்களை மத்திய அமைச்சர்களாக நியமித்து, இத்துறையை சிறப்பாக வழிநடத்திச் செல்வதாகவும், கோயம்புத்தூரின் வளர்ச்சியில் மிக முக்கியமானதாக விமான விரிவாக்கம் இருக்கும் எனவும், மேலும் பல சர்வதேச நாடுகளுக்கு கோவையிலிருந்து விமான சேவை வழங்குவது தொழில் துறையினருக்கும் பயணிகளுக்கும் பெரிதும் உதவும் என பேசினார்.

இதனை அடுத்து மத்தியில் இணை அமைச்சர் முரளிதர் மோகல் சிறப்புரை ஆற்றினார். (ஹிந்தி) :-

இதனைத் தொடர்ந்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, கோவை விமான நிலையம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள விமான நிலையங்களில் உருவாக்கப்பட்டு உள்ள புதிய வசதிகளை துவக்கி வைத்தார்.

பின்னர் சிறப்புரையாற்றிய மத்திய அமைச்சர் ராமோகன் நாயுடு, பிரதமர் மோதி தலைமையில் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், அதிக எண்ணிக்கையில் புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் விமான சேவையை அதிகரிக்கும் வகையில் மத்திய விமான போக்குவரத்து துறை சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார். 

தொடர்ந்து பேசியவர், கோயம்புத்தூர் விமான நிலையம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள விமான நிலையங்களில் குறைந்த விலையில் சிற்றுண்டி உணவகம், சிறுவர்களுக்கான விளையாட்டு பகுதி, சுய உதவி குழுக்களின் விற்பனை அங்காடி, லைப்ரரி வசதி ஆகியவை துவங்கப்பட்டு உள்ளது. பயணிகளுக்கு சிறந்த சேவைகளை உறுதி செய்யும் எனவும், சர்வதேச நாடுகளுக்கு கூடுதல் விமான சேவைகள் இயக்க எல்லா விமான நிலையங்களிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு :

கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் சுமார் 2,100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், 2028 ஆம் ஆண்டு இறுதிக்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு, பிரதமர் அவர்களால் கோவையில் விரிவாக்கப்பட்ட விமான நிலையம் திறக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: