புதன், 18 பிப்ரவரி, 2026

கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல் – ஆட்சியர் அலுவலகம் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

SHARE

கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல் – ஆட்சியர் அலுவலகம் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியர் அந்தஸ்து வழங்குதல், மாத ஊதிய உயர்வு, ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் சில நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் மறியல் தொடர்ந்ததால், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் காவல் துறை வாகனங்களில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பு நிலவியது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: