கோவை: 10 தொகுதிகளுக்கும் இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம்; 100 மீட்டர் சுற்றளவில் பலத்த பாதுகாப்பு !!!
ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு; தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் கண்காணிப்பு தீவிரம் !!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் சுயேட்சை வேட்பாளர்களும் இன்று முதல் வேட்பு மனுவை தாக்கல் செய்வார்கள். இதனையொட்டி தேர்தல் நடத்தும் அலுவலகம் முன்பு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி கோவை மாவட்டத்திலும் 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் முன்னேற்பாட்டு பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அலுவலகம் முன்பு காவல்துறையினர் பேரிகேடுகளை அமைத்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை.
வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களும் 100 மீட்டர் வரை மட்டுமே பேரணியாக வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதனைத் தாண்டி அதிகபட்சமாக மூன்று அல்லது ஐந்து பேர் வரை மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
அதேபோன்று அந்தந்த அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களும் உரிய சோதனைகளுக்குப் பிறகே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

0 கருத்துகள்: