வேட்டி, சட்டையுடன் திருச்சி வந்தார் பிரதமர் மோடி !!!
தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகை தந்து உள்ளார்.
கேரள மாநிலத்தில் இன்று பிற்பகல் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கு இருந்து தனி விமானம் மூலம் மாலை 4.45 மணியளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.
திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து உள்ளார்.
விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் பஞ்சப்பூருக்கு இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டரில் பிரதமர் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு முதலில், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ரயில்வே துறைகளின் சாா்பில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, சுமாா் ரூ. 5,650 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமா் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும், கொடியசைத்தும் தொடங்கி வைக்கிறாா்.
இதன் பிறகு, அதே பகுதியின் மறுபக்கத்தில் அமைக்கப்பட்டு உள்ள மேடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
இதற்கு முன்னதாக தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் போதும் பலமுறை வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்: