முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு - செல்வப்பெருந்தகை பதில் !!!
தி.மு.க வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூட்டணியில் முறிவு இல்லை என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.
தி.மு.க - காங்கிரஸ் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் இன்று சென்னையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, டி.ஆர். பாலு ஆகியோர் உடன் இருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதன் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய செல்வப்பெருந்தகை :-
தி.மு.க வுடன் நாங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறோம். பேசி முடித்ததும் உங்களுக்குச் சொல்வோம். தி.மு.க வுடன் கூட்டணி உறுதி.
பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. தி.மு.க எங்களுக்கு கெடு விதிக்கவில்லை.
கூட்டணியில் எந்த முறிவும் இல்லை. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை" என்று தெரிவித்தார்.
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் தர விருப்பதாகவும், ஆனால் காங்கிரஸ் 40 தொகுதிகள் வரை கேட்ட நிலையில் தி.மு.க - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருப்பதாகவும் இரு கட்சிகளுமே சமரசத்திற்கு இறங்கி வந்து இருப்பதாகவும் அது சமூகமாகவே முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 கருத்துகள்: