மலைப்பாதை சர்வதேச சைக்கிள் போட்டி : தங்கம் உட்பட ஆறு பதக்கங்களை வென்று சாதனை - கோவை திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு !!!
மலைப்பாதை சைக்கிள் போட்டியில் தேசிய மற்றும் சர்வதேச அளவுகளில் நடைபெற்ற போட்டியில் தங்கம் உட்பட ஆறு பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அண்மையில் அருணாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மலைப்பிரதேச சைக்கிள் போட்டியில் , கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் அபினவ், பிரனேஷ் மற்றும் சச்சின் தேவ் ஆகிய மூன்று மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் அபினவ் இரண்டு தங்கமும், பிரனேஷ் ஒரு தங்கமும்,சச்சின் தேவ் வெண்கலம் பதக்கம் வென்று அசத்தினர்..
இதனை தொடர்ந்து,பிப்ரவரி 26 முதல் 28 ஆம் தேதி வரை ,ஹிமாச்சல் பிரதேசத்தின் பீரில் (Bir) நடைபெற்ற சர்வதேச அளவிலான (Asia Mountain bike Series) ஆசிய மலைப்பாதை சைக்கிள் தொடரில் மூவரும் கலந்து கொண்டனர்..
சர்வதேச மிதிவண்டி சங்கத்தின் அங்கீகாரத்துடன் நடைபெற்ற இதில் ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கு பெற்றனர்..
இதில்,அபினவ் வெள்ளி பதக்கமும்,இதே போல பிரனேஷ் ஒரு வெள்ளியும்,ஐந்தாவது இடத்தில் சச்சினும் இடம் பிடித்தனர்.
இந்நிலையில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பதக்கங்களுடன் கோவை விமான நிலையம் வந்தடைந்த வீரர்களுக்கு அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு சைக்கிளிங் சங்க நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்..
மாணவர்களுக்கு சால்வைகள் அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
இமாச்சல் பீர் நகரில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் ,இமயமலையின் மிகக் கடினமான மலைப்பாதைகளில் கோவையை சேர்ந்த மாணவர்கள் அபினவ்,பிரனேஷ்,சச்சின் ஆகிய மூவரும் தங்கள் அபாரமான திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை பெற்று தமிழகத்திற்கும் கோவைக்கும் பெருமை சேர்த்துள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

0 கருத்துகள்: