கோவை, போத்தனூர் குப்பைமேட்டில் பயங்கர தீ விபத்து : கரும்புகையால் வாகன ஓட்டிகள் திணறல் - அணைக்கப் போராடும் தீயணைப்பு வீரர்கள் !!!
நச்சுப் புகையால் குடியிருப்புவாசிகள் அவதி !!!
இதில் இருந்து வெளியேறிய அடர் கரும்புகை அப்பகுதி முழுவதையும் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், குப்பைமேட்டில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் உலர்ந்த கழிவுகளில் ஏற்பட்ட தீ, காற்றின் வேகத்தால் மளமளவெனப் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாகவும் காட்சி அளித்தது.
செட்டிபாளையம் சாலை முக்கிய போக்குவரத்துப் பாதையாக இருப்பதால், புகையால் கண்பார்வை மறைக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். பல மணி நேரமாகத் தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வருகின்றனர்.
குப்பைகள் எரிவதால் ஏற்படும் நச்சுப் புகை அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு உள்ளது.
கோடை காலத் தொடக்கத்திலேயே இது போன்ற தீ விபத்துகள் நிகழ்வது அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: