முதலமைச்சரானார் விஜய்; விழாவில் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து !!!
தமிழ்நாடு முதலமைச்சராக த.வெ.க தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு நேரு உள் விளையாட்டரங்கத்தில் பதவியேற்றார்.
தமிழ்நாடு முதலமைச்சராக ச.ஜோசப் விஜய் பதவியேற்கும் நிலையில், அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
த.வெ.க தலைவர் விஜய், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க மே 13ஆம் தேதி வரை தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவகாசம் அளித்து உள்ளார்.
த.வெ.க தலைவர் விஜய், ஆதரவு அளித்து உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், வி.சி.க ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் நேற்று மாலை ஆளுநரை 4-ஆவது முறையாக சந்தித்து, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அரசமைப்பு சட்டத்தின் 164வது பிரிவின் கீழ் த.வெ.க தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இன்றைய பதவியேற்பு நிகழ்வில் த.வெ.க வை சேர்ந்த செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், அருண்ராஜ் உள்ளிட்ட 9 பேரும் அமைச்சர்களாக பதவியேற்று உள்ளனர்.
3 - வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து
விஜய் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும் 3-வதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. த.வெ.க தலைமையிலான ஆட்சியின் முதல் அரசு விழாவான புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற மரபு மீறப்பட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: