ஞாயிறு, 10 மே, 2026

ஜோசப் விஜய் எனும் நான்’ : தமிழ்நாட்டில் 14 வது முதலமைச்சராக பதவியேற்பு !!!

SHARE

 ஜோசப் விஜய் எனும் நான்’ : தமிழ்நாட்டில் 14 வது முதலமைச்சராக பதவியேற்பு !!!

தமிழ்நாட்டின் 14 வது முதலமைச்சராக ச. ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார்; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க, இந்திய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க ஆளுநர் நேற்று தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.

சென்னை நேரு அரங்கத்தில் காலை 10 மணிக்கு சரியான தொடங்கிய நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் 14 வது முதலமைச்சராக ஆளுநர் அர்லேகர் விஜய்க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ”சி.ஜோசப் விஜய் எனும் நான்” என தொடங்கி உறுதிமொழியை படித்து பதவியேற்றுக் கொண்டார்.

பதவிப் பிரமாணத்தில் விஜய் படித்த போது, ”ச.ஜோசப் விஜய் எனும் நான், சட்டப்படி அமைக்கப்பெற்ற இந்திய அரசின் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறா பற்றும் கொண்டு இருப்பேன் என்றும், இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும், தமிழ்நாடு அரசின் அமைச்சராக உண்மையாகவும் உழைச்சான்றின்படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், அரசியல் அமைப்புக்கும் சட்டத்திற்கும் இணங்க அச்சமும் ஒரு தலைசார்பும் இன்றி விருப்பு வெறுப்பை விளக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும், ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்” என அரங்கம் அதிர வாசித்தார்.

மேலும், ”ச.ஜோசப் விஜய் எனும் நான்.. தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்கு உள்ளாவதும், தெரியவருவதுமான எந்த பொருளையும், முதலமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்ற தேவையான அளவுக்கன்றி ஒருவரிடமோ, பலரிடமோ, நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ, அறிவிக்கவோ, வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்”.என உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து, 9 அமைச்சர்களும் ஒவ்வொருவராக பதவியேற்றனர். இந்நிகழ்ச்சியில் எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி கலந்துகொண்டார். மேலும், பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விஜய்யின் குடும்பத்தினர், அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி வந்தே மாதரத்துடன் தொடங்கிய நிலையில், தேசிய கீதமும், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. மேலும், நிகழ்ச்சியின் முடிவிலும் வந்தே மாதரம் பாடலும், தேசிய கீதமும் பாடப்பட்டது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: