ஞாயிறு, 10 மே, 2026

கீர்த்தனா ? சிவகாசி எம்.எல்.ஏ - தமிழக அமைச்சர்… விஜய் கேபினட்டில் இளைய முகம் !!!

SHARE

 கீர்த்தனா ? சிவகாசி எம்.எல்.ஏ - தமிழக அமைச்சர்… விஜய் கேபினட்டில் இளைய முகம்  !!!

த.வெ.க தலைவர் விஜய் இன்று காலை பதவியேற்ற நிலையில், அமைச்சரவை அதில் கீர்த்தனா  பதவியேற்றார். 

இவரது பின்னணி பற்றி தெரிந்து கொள்ளலாம்....

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில்  தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். இவருக்கு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் முதலமைச்சர் உடன் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.  அதில் 8 பேர் ஆண்கள், ஒருவர் பெண். அந்த பெண் எஸ்.கீர்த்தனா. 

யார் இந்த கீர்த்தனா ?

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிட்டவர். இவருடைய வயது 30. மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் இளங்கலை கணிதம் படித்தவர். புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் முதுகலை புள்ளியியல் படித்து இருக்கிறார். இன்னும் திருமணம் ஆகாதவர். மிகவும் எளிமையான வாழ்க்கை நடத்தி வருபவர். இவரது ஆண்டு வருமானம் என்பது 2025-26 ஆம் நிதியாண்டின் படி 6.3 லட்ச ரூபாய் ஆகும். சமீபத்தில் கூட தேசிய ஊடகத்திற்கு பேட்டி அளிக்கும் போது ஹிந்தியில் பேசி ஆச்சரியப்படுத்தினார்.

அதில், இந்தியில் பேசுவதை பலர் சர்ச்சையாக பார்க்கின்றனர். ஆனால் த.வெ.க தொண்டராக, ஒரு தலைவராக தமிழகத்தில் இப்படி ஒரு கட்சி இருக்கிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே ஹிந்தியில் பேசுகிறேன். குறிப்பாக மற்ற மாநில மக்களுக்கு அவர்களது மொழியில் பேசும் போது உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கும்.

என்னுடைய கட்சி பிரதிநிதித்துவத்தை இந்தியா மட்டுமின்றி மற்ற நாடுகளில் இருப்பவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கீர்த்தனா தெரிவித்து இருந்தார். மேலும் பேசுகையில், அரசியலை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். இதில் சாதி இருக்கிறது, பணம் இருக்கிறது என நினைக்க வேண்டாம். அனைவரும் அரசியலில் பங்கெடுக்க வேண்டும். அதற்கு நான் ஓர் உதாரணமாக இருக்கப் போகிறேன் என்று தெரிவித்தார்.

இந்த தொகுதியை பொறுத்தவரை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிட்ட தொகுதி. இதனால் கவனம் முழுவதும் அவர் மீதே இருந்தது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதை அடுத்து த.வெ.க வில் மிக இளம் தலைவர் கீர்த்தனா போட்டியிட்டதால் இவர் வெற்றி பெறுவாரா ? இல்லையா ? என்பது கேள்விக்குறியாக பேசினர். ஆனால் இரண்டு மூத்த தலைவர்களை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

கீர்த்தனா இன்று காலை பதவியேற்றதை அடுத்து, எந்த துறையை கையாளப் போகிறார் என அடுத்த சில மணி நேரங்களில் அறிவிக்கப்படும். பதவியேற்பு விழா முடிவடைந்ததை அடுத்து, தலைமை செயலகத்திற்கு சென்று பொறுப்பேற்று கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதையொட்டி அதிகாரிகள் உரிய ஏற்பாடுகளை செய்து காத்து இருக்கின்றனர். அங்கு சில கோப்புகளும் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே முதலமைச்சர் மட்டுமின்றி ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சர்களும் எதற்கு முதல் கையெழுத்தை போடப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: