கோவையில் கஞ்சா விற்ற பீகார் வாலிபர் கைது : 1 கிலோ கஞ்சா பறிமுதல் - மாவட்ட காவல்துறை நடவடிக்கை !!!
கோவை, பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, இடிகரை முதல் ரயில்வே பாலம் வரையிலான பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற பெரியநாயக்கன்பாளையம் போலீசார் அப்பகுதியில் ரகசிய சோதனையில் ஈடுபட்டனர்.
அந்தச் சோதனையின் போது, சந்தேகத்திற்குரிய வகையில் நின்று இருந்த ஒரு நபரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சர்வ்ஜீத்குமார் (30) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த பையைச் சோதனையிட்ட போது, விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டு இருந்த சுமார் 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்து. அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி கார்த்திகேயன் எச்சரித்து உள்ளார்.

0 கருத்துகள்: