கட்சி நிர்வாகிகளுடன் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
கட்சித் தலைவர்கள் சிலர் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் கருத்து கூறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அத்தகைய கருத்துகள் கட்சியின் நலனைப் பாதிப்பதாகவும் சென்னையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே நேரத்தில், தேர்தல் தொகுதிப் பங்கீடு குழு அமைப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். தொகுதிப் பங்கீட்டுக் குழு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

0 கருத்துகள்: