வியாழன், 19 பிப்ரவரி, 2026

பழம் நழுவி பாலில் விழுந்தது : 10 ஆண்டுகளுக்குப் பின் தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க !!!

SHARE

 பழம் நழுவி பாலில் விழுந்தது : 10 ஆண்டுகளுக்குப் பின் தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க !!!

கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போதே, தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணையும் என்று உறுதியாக நம்பிய முன்னாள் முதல்வர் கருணாநிதி பழம் நழுவி பாலில் விழும் என்று கூறி இருந்தார். அவர் அவ்வாறு கூறி 10 ஆண்டுகளுக்குப் பின் தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்து உள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் தே.மு.தி.க பொதுச் செயலர் பிரேமலதா. இந்த சந்திப்பின் போது தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், எம்.பி. பதவி வழங்கப்படுமா ? என்ற கேள்விக்கு அண்ணன் ஸ்டாலின் இது குறித்து அறிவிப்பார் என்றும் பிரேமலதா கூறியிருந்தார்.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் தே.மு.தி.க வுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படலாம் என்றும், தே.மு.தி.க பொருளாளர் எல்.கே. சுதீஷூடன் ஸ்டாலின் மருமகன் சபரீசனும், அமைச்சர் எ.வ. வேலுவும் பேச்சுவார்த்தை நடத்தி, தே.மு.தி.க வை தி.மு.க கூட்டணிக்குள் கொண்டு வந்து இருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு வந்த தே.மு.தி.க, முதல் முறையாக தி.மு.க கூட்டணியில் இணைந்து உள்ளது. தே.மு.தி.க வுக்கு ஒரு எம்.பி. பதவியும், 7 பேரவைத் தொகுதிகளும் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2005 ஆம் ஆண்டு தே.மு.தி.க கட்சியைத் தொடங்கிய விஜயகாந்த், 2006-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 8 சதவீத வாக்குகளை பெற்று இருந்தார்.

தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், எம்.பி. பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அண்ணன் ஸ்டாலின் இது குறித்து அறிவிப்பார் என்றும் பிரேமலதா கூறியிருந்தார்.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் தே.மு.தி.க வுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படலாம் என்றும், தே.மு.தி.க பொருளாளர் எல்.கே. சுதீஷூடன் ஸ்டாலின் மருமகன் சபரீசனும், அமைச்சர் எ.வ. வேலுவும் பேச்சுவார்த்தை நடத்தி, தே.மு.தி.க வை தி.மு.க கூட்டணிக்குள் கொண்டு வந்து இருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டுவந்த தே.மு.தி.க, முதல் முறையாக தி.மு.க கூட்டணியில் இணைந்து உள்ளது. தே.மு.தி.க வுக்கு ஒரு எம்.பி. பதவியும், 7 பேரவைத் தொகுதிகளும் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2005ஆம் ஆண்டு தே.மு.தி.க கட்சியைத் தொடங்கிய விஜயகாந்த், 2006-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 8 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார்.

பிறகு, 2011-ஆம் ஆண்டு அ.தி.மு.க வின் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றார். பிறகு, 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாமல் போனது தே.மு.தி.க. 2021 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு இருந்தது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலிலும் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து வந்த தே.மு.தி.க, தற்போது 2026 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் முதல் முறையாக, தி.மு.க கூட்டணியில் இணைந்து உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க வை இணைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதாவது, 2016 ஆம் ஆண்டு தி.மு.க வுடன் தே.மு.தி.க இணையுமா ? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதி, பழம் நழுவி பாலில் விழும் என்று பதில் அளித்து இருந்தார்.

ஆனால், தி.மு.க வுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டி என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவித்த போது, அது பேசுபொருளாகி இருந்தது.

பிறகும் கூட, தி.மு.க வுடன் தே.மு.தி.க கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து தோல்வி அடைந்து, தள்ளிப்போய்க் கொண்டே இருந்த நிலையில் தான். தற்போது 2026 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் கருணாநிதியின் கூற்று உண்மையாகி இருக்கிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: