வியாழன், 19 பிப்ரவரி, 2026

தே.மு.தி.க வருகையால் வலுவானது தி.மு.க கூட்டணி’ - திருமாவளவன் கருத்து

SHARE

தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்து இருப்பது பெருமகிழ்வு அளிக்கிறது. தி.மு.க கூட்டணி உடையும் என்கிற அவர்களின் கனவில் மண் விழுந்தது” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார். 

இது குறித்து வி.சி.க தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்து இருப்பது பெருமகிழ்வு அளிக்கிறது. இக்கூட்டணி மேலும் வலிமை மிக்கதாக மாறி உள்ளது.

எம் உறுதியான வெற்றிக்கு ஏதுவாக அமையும். அரசியல் பகைவர்களின் அடிவயிறு குமையும். தி.மு.க கூட்டணி உடையும் என்கிற அவர்களின் கனவில் மண் விழுந்தது. கலைஞரின் கனவு நனவாகும் வகையில் பழம் நழுவி பாலில் விழுந்தது” எனத் தெரிவித்து உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: