சுற்றுலாப் படகு கவிழ்ந்து ஒருவர் பலி ; 10 பேர் மீட்பு - புதுச்சேரியில் பயங்கரம் !!!
படகில் இருந்த பயணிகள் அனைவரும் போதுமான பாதுகாப்பு கவசம் (Life Jacket) அணியாததால், தண்ணீரில் மூழ்கித் தத்தளித்தனர். இதைப் பார்த்த அங்கு இருந்த மீனவர்கள் உடனடியாகக் கடலுக்குள் குதித்து அவர்களைக் காப்பாற்ற முயன்றனர்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரு பெரும் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீராம்பட்டினம் கடற்கரைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று காலை, 10-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வீராம்பட்டினம் கடற்கரையின் அழகை ரசிப்பதற்காக ஒரு படகில் கடலுக்குள் சென்றனர். கடலின் அழகைச் சுற்றிப் பார்த்து விட்டு அவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டு இருந்த போது, எதிர்பாராதவிதமாக படகு திடீரென்று தலைகுப்புறக் கவிழ்ந்தது.
படகில் இருந்த பயணிகள் அனைவரும் போதுமான பாதுகாப்பு கவசம் (Life Jacket) அணியாததால், தண்ணீரில் மூழ்கித் தத்தளித்தனர். இதைப் பார்த்த அங்கிருந்த மீனவர்கள் உடனடியாகக் கடலுக்குள் குதித்து அவர்களைக் காப்பாற்ற முயன்றனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த கடலோரக் காவல் படை போலீசார், தண்ணீரில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தவர்களை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வீராம்பட்டினம் மற்றும் அரியாங்குப்பம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்தப் படகு அனுமதி இன்றி (Illegal) இயக்கப்பட்டது தெரியவந்து உள்ளது. படகின் உரிமையாளர் யார்? படகை ஓட்டிச் சென்றது யார் ? என்பது குறித்து போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவர, எவ்வித அனுமதியுமின்றி மூவாயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் சட்டவிரோதமாக இயக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் படகுகள் இயக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க, அனுமதி இல்லாத படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

0 கருத்துகள்: