வியாழன், 26 பிப்ரவரி, 2026

எஸ்.ஐ.ஆர் : மே.வங்கத்தில் 1.2 கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம் - முதல்வர் மமதா வேதனை !!!

SHARE

 எஸ்.ஐ.ஆர் : மே.வங்கத்தில் 1.2 கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம் - முதல்வர் மமதா வேதனை !!!

மேற்கு வங்கத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் மூலம் சுமார் 1.20 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படக் கூடும் என முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்) நடைபெற்று வருகின்றன. இதற்கு, ஏராளமான எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன

இந்த நிலையில், தெற்கு கொல்கத்தாவில் உள்ள தனது சட்டப் பேரவைத் தொகுதியான பவானிபூரில் புதன்கிழமை (பிப்ரவரி 25) நடைபெற்ற கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கலந்து கொண்டார்.

அப்போது, தேர்தல் ஆணையம் தர்க்க ரீதியான முரண்பாடுகள் எனும் பெயரில் அடையாளம் கண்டு வரும் ஏராளமான வாக்காளர்களை நீக்குவதற்குத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்து உள்ளார். தொடர்ந்து, அவர் பேசியதாவது:

“இந்திய தேர்தல் ஆணையம் தர்க்கரீதியான முரண்பாடுகள் எனும் பெயரில் அடையாளம் காணும் மிகப் பெரிய எண்ணிக்கையிலான வாக்காளர்களை நீக்க திட்டமிட்டு உள்ளது. இதனால், நான் மிகவும் வேதனையாக இருக்கிறேன். முதலில், கடந்த டிசம்பரில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 58 லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டன.

பின்னர், தர்க்கரீதியான முரண்பாடுகள் என அடையாளம் காணப்பட்ட பெயர்களை நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளில் முடிவில் சுமார் 1.20 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இறுதியாக நீக்கப்படும் என்று நான் கருதுகிறேன். இந்த விவகாரம் குறித்து நான் உச்ச நீதிமன்றம் வரை போராடி உள்ளேன். இந்தப் போராட்டம் இன்னும் தொடர்கின்றது” என்று கூறி உள்ளார்.

இத்துடன், மேற்கு வங்கம் மாநிலத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 28 அன்று அதிகாரப் பூர்வமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: