கோவை ரயில் நிலையம் அருகில் 2.100 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட வட பீகார் மாநில வாலிபர் : சிவராத்திரி போலீஸ் சோதனையில் சிக்கினார் !!!
கோவையில் சிவராத்திரி விழாவையொட்டி கோவை மாநகர போலீசார் இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் ரயில்வே நிலையம் அருகில் ஓய்வூதியர்கள் அலுவலகம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வட மாநில வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் அவசர, அவசரமாக அங்கு இருந்து ஓட முயன்றார். உடனே போலீசார் அவரை துரத்தி பிடித்தனர். அப்போது அவர் கையில் ஊதா நிற பேக் வைத்து இருந்தார்.
அதை போலீசார் திறந்து சோதனை செய்தனர். அப்போது அதில் 2.100 கிலோ கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வாலிபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவரது மகன் நிதிஷ்குமார் (வயது 22) என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

0 கருத்துகள்: