சிவராத்திரியை முன்னிட்டு 100 பெண்கள் ஒன்றிணைந்து 1மணி நேரம் இடைவிடாமல் சிவதாண்டவம் – மெய்சிலிர்க்க வைத்த நடனம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தல்
கோவையில் மஹா சிவராத்திரியையொட்டி குழந்தைகள் உட்பட 100 பெண்கள் இடைவிடாமல் ஒரு மணி நேரம் தொடர்ந்து சிவதாண்டவ நடனம் ஆடி உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.
கோவை சிந்தாமணிபுதூர் பகுதியில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு “சிவத்தாண்டவம் 2026” என்ற தலைப்பில் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ ரத்னலட்சுமி கலாஷேத்ரா நாட்டியப் பள்ளி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் புகழ்பெற்ற நாட்டிய குரு தேவார நாட்டிய ரத்னா கோமதி கலந்து கொண்டார்.
ஒரே நேரத்தில் 3 வயது முதல் 45 வயது வரை உள்ள 100 பெண் கலைஞர்கள் அணிவகுத்து நின்று தேவாரத் திருமுறைகளின் பாடல்களுக்கு ஒரு மணி நேரம் இடைவிடாமல் (Non-stop) மிகச் சிக்கலான நடன அசைவுகளை நேர்த்தியுடன் ஆடினர்.
சிவபெருமானின் பெருமைகளைப் போற்றும் விதமாக நடைபெற்ற இந்த நடனம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இவர்களின் இந்த நிகழ்வு “ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்” எனும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.தொடர்ந்து சாதனை நிகழ்வில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

0 கருத்துகள்: