ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

கோவை, பெரிய கடை வீதியில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக நடித்து 45 ஆயிரம் மோசடி செய்த வாலிபர் !!!

SHARE

கோவை, பேரூர் அருகே உள்ள சின்ன கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் ( 53). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.. 

சம்பவத்தன்று வீட்டு செலவிற்கு பணம் தேவைப்பட்டது. எனவே சிவக்குமார் அவரது தாயாரின் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுப்பதற்காக டவுன்ஹால் பிபி தெருவில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். 

அங்கே உள்ளே சென்று கார்டை எந்திரத்தில் சொருகி விட்டு பணத்தை எடுக்க முயற்சி செய்தார். அப்போது பணம் வரவில்லை. இதை அருகில் நின்ற வாலிபர் பார்த்துக் கொண்டு இருந்தார். சிவகுமாரிடம் கார்டை கொடுங்கள் நான் பணம் எடுத்து தருகிறேன் என்று கூறி வாங்கி உள்ளார். அப்போது சிவக்குமார் அந்த கார்டுக்கு உரிய "பின்" நம்பரையும் அவரிடம் தெரிவித்து உள்ளார். 

உடனே அந்த வாலிபர் சிவகுமாரிடம் இருந்து கார்டை பெற்றுக் கொண்டு அவருக்கு பணத்தை எடுக்க உதவுவது போல் நடித்தார். பிறகு ஏதோ ? பிரச்சனை என்று கூறி பணம் வரவில்லை என்று சிவகுமாரிடம் ஏ.டி.எம். கார்டு திருப்பி கொடுத்து உள்ளார்.

சிவகுமாரும் அதைப் பெற்றுக் கொண்டு சென்று விட்டார். இந்த நிலையில் அவரது தாயார் வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 45 ஆயிரம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு தகவல் வந்தது. அப்போது தான் சிவகுமார் அந்த வாலிபர் தன்னிடம் வேறு ஒரு கார்டை கொடுத்து விட்டு தனது தாயாரின் ஏ.டி.எம். காலை நைசாக திருடி சென்றதை உணர்ந்தார். 

உடனடியாக இதுகுறித்து பெரிய கடை வீதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஏ.டி.எம். மையத்தில் சிவகுமாரிடம் உதவுவது போல் நடித்து பணத்தை திருடிய வாலிபர் யார் ? என விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள வாலிபரின் உருவத்தை பார்த்து அவரை வலை வீசி தேடி வருகிறார்கள்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: