கோவை, காட்டூர் ராம்நகர் விவேகானந்தா ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சத்யநாராயணன். இவர் எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் ஸ்ரீ கௌரி ( வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வந்தார். மேலும் ஐ.ஏ.எஸ் . தேர்வுக்கும் தயாராகி வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னல் கம்பியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்று இருந்த குடும்பத்தினர் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்த நிலையில் மாணவி தற்கொலை செய்ததை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு காட்டூர் போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று மாணவி உடலை மீட்டனர். பிறகு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
ஸ்ரீ கௌரி தற்கொலை செய்தது ஏன் ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: