சனி, 14 பிப்ரவரி, 2026

5 ஆயிரம் தி.மு.க கொடுத்ததை மத்திய அரசு தடுப்பதாக காதில் பூ சுற்றுகிறார்கள் முதல்வர் மு க ஸ்டாலின் - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆவேசம் !!!

SHARE

நயினார் நாகேந்திரன் பேச்சு குறித்து வருத்தம் ; ஆனால் கண்டனம் தெரிவிக்க தி.மு.க-விற்கு அருகதை இல்லை எம்.எல்.ஏ வானதி சாடல் !!!

நாடக அரசாங்கத்தில் 5 ஆயிரம் திட்டத்தில் மேலும் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள் ; தி.மு.க மீது எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு !!!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை மறைக்கவே 5 ஆயிரம் : தி.மு.க வை பெண்கள் மறக்கவும், மன்னிக்க மாட்டார்கள் - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கருத்து !!!


கோவையில் 28 ஆம் ஆண்டு கோவை தொடர் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு புஸ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கலந்து கோண்ட மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசும்போது :- 

 பெண்களுக்கு உரிமை தொகை 5,000 ரூபாய் கொடுப்பதை மத்திய அரசு தடுக்கிறது என்ன தமிழக முதல்வர் கூறியது குறித்தான கேள்விக்கு பதில் அளித்தவர்,

பி.ஜே.பி பற்றி இந்த அளவிற்கு இது போன்ற முட்டாள்தனமான கருத்துக்களை தி.மு.க வினர் பேசிக்கொண்டு உள்ளார்கள். ஒரு மாநில அரசின் அதிகாரம் என்ன ? இத்தனை நாட்கள் கொடுப்பதை எல்லாம் பி.ஜே.பி தடுத்ததா ? வேண்டுமென்று காதில் பூசுற்ற முயற்சிக்கிறார்கள். 

 பி.ஜே.பி தடுக்க பார்ப்பதாகவும், ஸ்டாலின் பெண்களின் காவலர் போன்றும் நாடகம் ஆடுவதாக இந்த அரசாங்கமே ஒரு நாடக அரசாங்கம் என்று தற்பொழுது இன்னொரு நாடகத்தை பார்த்துக் கொண்டு உள்ளதாக கூறியவர், அதாவது தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலும் முன்பாக அரசாங்க ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் அனைவரும் போராடிக் கொண்டு உள்ளதாகவும், எங்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று, அவர்களுக்கெல்லாம் கொடுக்க பணம் இல்லை, ஆனால் கோடை காலம் சிறப்பு உதவித் தொகை. இதைத்தான் முதல் முறையாக பார்ப்பதாகவும், கடந்த ஐந்தாண்டு காலமாக கோடை காலம் வந்தது. சரியாக தண்ணீர் கூட வழங்கவில்லை, இப்பொழுது மட்டும் புதிதாக 2,000 ரூபாய் தருகிறார்கள் யார் ? காதில் பூ சுத்துற வேலை, தமிழகத்தில் பெண்கள் ஒவ்வொரு நாளும் வீட்டை விட்டு வெளியே சென்றால் பாதுகாப்பாக வீட்டுக்கு வருவார்களா ? என்று கூற முடியாது. பெண் குழந்தைகளை வெளியில் அனுப்பினால் கல்லூரிகள், பள்ளிகள் பாதுகாப்பாக இல்லை எனவும், பேருந்து, நிலையம் ரயில் நிலையம் பாதுகாப்பாக இல்லை எப்பொழுது திரும்பி வருவார்களா ? என்று பதற்றத்தோடு இருப்பதாக தெரிவித்தவர், ஆனால் அதை 5,000 கொடுத்து மறைக்கப் பார்க்கிறார்கள். ஆனால் பெண்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள் நீங்கள் வீட்டுக்கு போவது உறுதி என்றார்.

நயினார் நாகேந்திரன் திரிஷா பற்றி பேசியது குறித்தான கேள்விக்கு

நயினார் நாகேந்திரன் அமைதியாக, அன்பாக பேசக் கூடியவர், சட்டப்பேரவையில் கூட அனைவரும் கூறுவார்கள். நான் ஆவேசமாக பேசினால் கூட அவர் அமைதியாக, நாகரீகமாக பேசக் கூடியவர். எதனால் ? செல்வி திரிஷா அவர்களை பேசினார். என்பது தனக்கு தெரியவில்லை என்றும், அது தனக்கும் அது வருத்தமாக உள்ளது எனவும், நிச்சயமாக தனது கருத்தை நான் அவரிடம் கூறுவேன் என்றார். ஆனால் அதே நேரத்தில் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உங்கள் கட்சிகளுக்குள் உள்ள பெண் நிர்வாகிகளுக்கு உங்கள் கட்சியில் இருக்கிறவர்களே பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள். அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை, சிவாஜி என்ற பேச்சாளர் அதுபோன்ற அசிங்கமாக பேசக் கூடிய ஒருவரை இன்றும் கட்சிக்குள் வைத்துக் கொண்டு, ஊரில் இருக்கின்ற பெண் தலைவர்கள் எல்லாம் ஆபாசமாக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றவர், அதேபோல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாலியல் தொல்லை எந்த ? இடத்தில் இல்லை, ஆனால் என்னவோ ? பெண்களுக்கு அவமானம் நடந்து விட்டது போன்று, சின்ன விஷயத்தை ஊதி, ஊதி பெரிசாக்க பார்க்கிறார்கள். அதனால் இதில் கருத்து தெரிவிப்பதற்கோ ? கண்டனம் தெரிவிப்பதற்கோ ? தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு அருகதை கிடையாது என்றார்.



SHARE

Author: verified_user

0 கருத்துகள்: