Tuesday, February 10, 2026

ஆந்​திராவில் பூட்டிய வீடுகளில் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ஐடி ஊழியர் கைது

SHARE

 விசாகப்பட்டினம்: சொகுசு ​வாழ்க்கை வாழ பூட்​டிய வீடு​களில் திருடிய ஐடி ஊழியரை ஆந்​திர போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.


ஆந்​திர மாநிலம், காக்​கி​நாடா பகு​தியை சேர்ந்​தவர் மகேஷ் ரெட்டி என்​கிற சன்னி (27). விசாகப்​பட்​டினத்​தில் ஐ.டி மேற்​படிப்பை முடித்த மகேஷ் ரெட்​டிக்கு ஹைத​ரா​பாத்​தில் ஒரு பிரபல ஐடி நிறு​வனத்​தில் வேலை கிடைத்​தது. கை நிறைய சம்​பளம். ஆனாலும் அது அவரின் ஆசைகளை நிறைவேற்ற உதவ​வில்​லை. மகேஷ் ரெட்​டிக்கு சிறு வயதிலிருந்தே திருடும் பழக்​கம் இருந்துள்ளது.


இதனால் அவர் தனது 15 வயதில் திருடி மாட்​டிக்​கொண்​டார். அதன் பிறகு, அவர் சிறு​வர் சீர்​திருத்த பள்​ளி​யில் படித்​தார். தற்போது ஐடி துறை​யில் பட்ட மேற்​படிப்பு படித்த பிறகு, தனது ‘கை’த்​தொழிலில் மீண்​டும் கவனம் செலுத்த ஆரம்​பித்​தார். இதற்காக ஒரு பைக் வாங்​கி​னார்.


அதில் நம்​பர் பிளேட் போடா​மல், முகக்​கவசம், கையுறை அணிந்து இரவு நேரங்​களில் பூட்​டிய வீடு​களில் பூட்டை உடைத்​து, பீரோ​வில் உள்​ளதை அள்​ளிச் செல்​வதை வழக்​க​மாக்கி கொண்டார். இதற்​காக கட்​டிங் பிளேயர், ஸ்க்ரூ டிரைவர், ட்ரில்​லிங் இயந்​திரம் போன்​றவற்​றை​யும் வாங்கி வைத்து உள்​ளார்.


பல முறை ராமசந்​தி​ராபுரம், இந்​திர பாளை​யம், ராஜ​முந்​திரி சிறை​களுக்கு சென்​றுள்​ளார். இது வரை அவர் 60 வீடு​களில் திருடி உள்​ளார். 26 வழக்​கு​கள் இவர் மீது நிலு​வை​யில் உள்​ளன. சமீபத்தில் 14 மாதங்​கள் வரை இவர் சிறை தண்​டனை அனுபவித்து உள்​ளார். ஆயினும் இவர் திருடு​வதை கைவிடவில்லை. ஏனெனில், இவருக்கு ஆடம்​பர​மாக வாழ்​வது மிகவும் பிடிக்​கு​மாம்.


அதாவது, பிஎம்​டபிள்யூ சொகுசு கார், அடிக்​கடி வெளி​நாட்டு சுற்றுலா, கழுத்​தி​லும், கையிலும் தங்க செயின்​கள், பிரேஸ்​லெட். 4 விரல்​களில் தங்க மோதிரம் அணிந்​திருப்​பார். இந்த வாழ்க்கை மிக​வும் பிடித்து போன​தால், போலீ​ஸார் கைது செய்​தா​லும், மீண்டும் திருட்டு தொழிலையே செய்​து, சொகுசு வாழ்க்​கையை வாழ்ந்து வரு​கிறார் மகேஷ் ரெட்​டி.


இந்​நிலை​யில் கடந்த 8-ம் தேதி விசாகப்​பட்​டினத்​தில் மகேஷ் ரெட்டியை போலீ​ஸார் கைது செய்​தனர். அப்​போது அவரிட​மிருந்த 699 கிராம் தங்க நகைகள், 3.8 கிலோ வெள்ளி பொருட்​கள் மற்​றும் பிஎம்​டபிள்யூ சொகுசு கார் போன்​றவற்றை போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர்.


இது த​விர ரூ.15.63 லட்​சம் மதிப்​புள்ள பொருட்​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டன. மகேஷ் ரெட்டி விசாகப்பட்​டினம் மட்​டுமின்​றி, ஹைத​ரா​பாத், காக்​கி​ நாடா ஆகிய பகு​தி​களி​லும் தனது கை வரிசையை காட்​டி உள்​ளார்​ என்பது குறிப்​பிடத்​தக்​கது.

SHARE

Author: verified_user

0 comments: