தென்கைலாயத்தில் ஓம் நமச்சிவாய முழக்கம் ” ; வெள்ளியங்கிரி மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம் - மகா சிவராத்திரி கோலாகலம் !!!
மகா சிவராத்திரியை முன்னிட்டு, தமிழகத்தின் ‘தென்கயிலாயம்’ என்று போற்றப்படும் பூண்டி வெள்ளியங்கிரி மலையில் லட்சக் கணக்கான சிவபக்தர்கள் குவிந்து உள்ளனர்.
விடிய, விடிய ‘ஓம் நமச்சிவாய’ மந்திரம் விண்ணதிர முழங்க, வெள்ளியங்கிரி ஆண்டவரைத் தரிசித்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கூட்டம்.
உலகெங்கிலும் உள்ள சிவபக்தர்கள் சிவராத்திரியைக் கொண்டாடி வரும் நிலையில், தென் கைலாயம் ஆன்மீகத் தலமான வெள்ளியங்கிரி மலையில் எழுந்தருளி உள்ள சுயம்பு லிங்கத்தைத் தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.
வழக்கமான நாட்களை விட இன்று பக்தர்களின் வருகை பல மடங்கு அதிகரித்து இருந்தது. ஏழு மலைகளைக் கடந்து சென்று, மலை உச்சியில் வீற்றிருக்கும் ஈசனைத் தரிசிக்க முதியவர்கள் முதல் இளைஞர்கள் வரை கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மலையேறினர்.
இன்று அதிகாலையில் சூரியன் உதித்த வேளையில், வெள்ளியங்கிரி ஆண்டவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அப்போது அங்குத் திரண்டு இருந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் ‘அரோகரா அரோகரா’ மற்றும் ‘ஓம் நமச்சிவாய’ என முழக்கமிட்டு உருகி வழிபட்டனர். மலையடிவாரம் முதல் உச்சி வரை ஆன்மீக விழாக்கோலம் பூண்டு இருந்தது.


0 கருத்துகள்: