அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து தவறாக வழி நடத்துவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டி உள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களுடன் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசுகையில்,
"இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுலுக்கு எதுவும் தெரியாது. அவர் நாட்டைத் தவறாக வழி நடத்துகிறார்.
நாட்டில் அமைதியின்மையைத் தூண்டவே அவர் முயற்சிக்கிறார். நாட்டில் உள்நாட்டுப் போரை விரும்பும் ராகுல் மீது வழக்கு தொடரப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மூலம் அமெரிக்க அதிபா் டிரப்ம்பிடம் பிரதமா் மோடி சரண் அடைந்து விட்டதாக ராகுல் காந்தி தொடா்ந்து விமா்சனம் செய்து வரும் நிலையில், ராகுல் மீது வழக்கு தொடர வேண்டும் என்று கிரிராஜ் சிங் வலியுறுத்தி உள்ளார்.

0 கருத்துகள்: