வியாழன், 19 பிப்ரவரி, 2026

கோவையில் இரவில் உணவு தேடி வீட்டிற்குள் நுழைய முயன்ற ஒற்றை காட்டு யானை : குரைத்து எச்சரித்த நாய் - சி.சி.டி.வி காட்சிகள் வைரல் !!!

SHARE

 கோவையில் இரவில் உணவு தேடி வீட்டிற்குள் நுழைய முயன்ற ஒற்றை காட்டு யானை : குரைத்து எச்சரித்த நாய் - சி.சி.டி.வி காட்சிகள் வைரல் !!!

கோவை, துடியலூர் அருகே பன்னீர்மடை, வரப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள கார்த்திகேயன் என்பவரது தோட்டத்தில் உள்ள வீட்டில் நள்ளிரவு 1 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த ஒற்றை காட்டு யானை வீட்டில் ஏதாவது உணவு கிடைக்குமா ? என உள்ளே நுழைய முயன்று உள்ளது.



 அப்போது நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர் விளக்கை போட்டதும் காட்டு யானை விளக்கு வெளிச்சத்திற்கு பயந்து அப்படியே பின்னால் சென்று அருகில் இருந்த செடிகளை சாப்பிட்டு விட்டு சென்று உள்ளது. இவை அனைத்தும் அவரது வீட்டில் பொருத்தி இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. 

காட்டு யானைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுவது தொடர்ந்து வருவதாகவும், கோடை காலம் வர உள்ளதால் வனவிலங்குகளுக்கு வனப் பகுதிகளிலேயே உணவு மற்றும் தண்ணீர் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: