வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

சர்ச்சையை கிளப்பும் 'தி கேரளா ஸ்டோரி' 2-ஆம் பாக டிரெய்லர் - பினராயி விஜயன் கடும் கண்டனம்

SHARE

 சர்ச்சையை கிளப்பும் 'தி கேரளா ஸ்டோரி' 2-ஆம் பாக டிரெய்லர் - பினராயி விஜயன் கடும் கண்டனம்

பெண்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவதும், கட்டாயப்படுத்தி மாட்டுக்கறி சாப்பிட வைப்பதும் இதில் சித்தரிக்கப்பட்டு உள்ளது. 

சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி'. கேரளாவில் 32,000 இந்துப் பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்பட்டு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக இந்த படம் சித்தரித்தது. வெளியான சமயத்தில் நாடு முழுவதும் இப்படம் பெரும் பதற்றத்தை இப்படம் ஏற்படுத்தியது.

தொடர்ந்து மத்திய அரசு வழங்கும் 2023 ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் 2 தேசிய விருதுகள் இப்படத்துக்கு வழங்கப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் 2 ஆம் பாகம் உருவாகி உள்ளது. இதன் டிரெய்லர் நேற்று வெளியானது. விபுல் அம்ருத்லால் ஷா தயாரிக்க, கமக்யா நாராயண் சிங் இந்த இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார்.

முதல் பாகத்தினைப் போலவே டிரெய்லரில் சர்ச்சை வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இந்து பெண்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவதும், கட்டாயப்படுத்தி மாட்டுக்கறி சாப்பிட வைப்பதும் இதில் சித்தரிக்கப்பட்டு உள்ளது. பலரும் இதற்கு கண்டன்ம் தெரிவித்து வருகின்றனர். அதிலும் மத வெறுப்பை தூண்டு வகையிலான உள்ளது என கண்டித்து வருகின்றனர். 

ஜன நாயகன் போன்ற மற்ற படங்களை நிராகிரிக்கும் தணிக்கை வாரியம் இந்த படத்திற்கு மட்டும் முந்திக் கொண்டு சான்றிதழ் கொடுக்கும் என்றும் தேசிய விருதுகள் கிடைக்கும் என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: